Monday, August 10, 2015

4.2 - சுண்ணவெண் சந்தன - திருவதிகை வீரட்டானம் - thiruvadhigai

Discussion audio: If you need the discussion audio, please use the contact form shown on the right.

You can find the audio of this padhigam by Thiruththani Swaminathan here: http://www.shaivam.org/gallery/audio/tis-tns-nalamiku-padhikangal.htm


On YouTube:
Tamil discussion:
English discussion:

Part-1: https://youtu.be/uvjh6JZ4Lbo

Part-2: https://youtu.be/OIyNhXO79D4

Part-3: https://youtu.be/4Q3XOHJeUDM

Part-4: https://youtu.be/Muz5hQ3mZ5A

======================

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.2 - திருவதிகை வீரட்டானம் (பண் : காந்தாரம்)

Background:

சமண சமயத்திலிருந்து திருநாவுக்கரசர் மீண்டும் சைவ சமயம் சார்ந்ததை அறிந்த பல்லவ மன்னன், சமண குருமார்களின் ஏவலால் திருநாவுக்கரசரை அழைத்துவரச்செய்தான். அவர்களின் தூண்டுகோலால் அவரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) இடுமாறு ஆணையிட்டான். நீற்றறையில் 7 நாள்கள் காலம் இடப்பட்டும் ஓர் ஊனமும் இல்லாமல் திருநாவுக்கரசர் இருந்ததைக் கண்ட சமணர்கள் அவருக்கு நஞ்சு கலந்த சோற்றை ஊட்டினர். அதுவும் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவரை எப்படியாவது கொன்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தால் பட்டத்து யானையை ஏவி அவரை மிதிக்கச் செய்யுமாறு சமணர்கள் அரசனிடம் சொன்னார்கள். அரசனும் அப்படியே ஆணையிட்டான். தம்மைக் கொல்வதற்காக யானை வந்த சமயத்தில் அதனைப் பார்த்துத் திருநாவுக்கரசர் பாடியருளிய பதிகம் இது.

அப்படிப் பதிகம் பாடிய அவரை அந்த யானை வலமாகச் சுற்றி வந்து எதிரில் தாழ்ந்து நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்தது.

--------

#1374 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 109

மாபாவிக் கடையமணர் வாகீசத் திருவடியாங்

காபாலி யடியவர்பாற் "கடக்களிற்றை விடு" கென்னப்,

பூபாலர் செயன்மேற்கொள் புலைத்தொழிலோ னவர்தம்மேற்

கோபாதி சயமான கொலைக்களிற்றை விடச்சொன்னான்.


#1381 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 116

வஞ்சகர் விட்ட சினப்போர் மதவெங் களிற்றினை நோக்கிச்

"செஞ்சடை நீண்முடிக் கூத்தர் தேவர்க்குந் தேவர் பிரானார்

வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம்மடி யோநாம்!

அஞ்சுவ தில்லை"யென் றென்றே யருந்தமிழ் பாடி யறைந்தார்.

--------------

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.2 - திருவதிகை வீரட்டானம் (பண் : காந்தாரம்)

(அறுசீர் விருத்தம் - meter)

பாடல் எண் : 1

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்

வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்

அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்

திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

.. அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.


பாடல் எண் : 2

பூண்டதொர் கேழ லெயிறும் பொன்றிக ழாமை புரள

நீண்டதிண் டோள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்

காண்டகு புள்ளின் சிறகுங் கலந்த கட்டங்கக் கொடியும்

ஈண்டு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

.. அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.


பாடல் எண் : 3

ஒத்த வடத்திள நாக முருத்திர பட்ட மிரண்டும்

முத்து வடக்கண் டிகையு முளைத்தெழு மூவிலை வேலும்

சித்த வடமு மதிகைச் சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து

தத்துங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

.. அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.


பாடல் எண் : 4

மடமான் மறிபொற் கலையு மழுப்பாம் பொருகையில் வீணை

குடமால் வரையதிண் டோளுங் குனிசிலைக் கூத்தின் பயில்வும்

இடமால் தழுவிய பாக மிருநில னேற்ற சுவடும்

தடமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

.. அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.


பாடல் எண் : 5

பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே

கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்

வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்

நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

.. அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.


பாடல் எண் : 6

கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்

பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும்

அரங்கிடை நூலறி வாள ரறியப் படாததொர் கூத்தும்

நிரந்த கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

.. அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.


பாடல் எண் : 7

கொலைவரி வேங்கை யதளுங் குவவோ டிலங்குபொற் றோடும்

விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்

மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணியார்ந் திலங்கு மிடறும்

உலவு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

.. அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.


பாடல் எண் : 8

ஆடல் புரிந்த நிலையும் அரையி லசைத்த அரவும்

பாடல் பயின்றபல் பூதம் பல்லா யிரங்கொள் கருவி

நாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து

ஓடுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

.. அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.


பாடல் எண் : 9

சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும்

யாழின் மொழியவ ளஞ்ச அஞ்சா தருவரை போன்ற

வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து

தாழுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

.. அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.


பாடல் எண் : 10

நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை

உரங்களெல் லாங்கொண் டெடுத்தா னொன்பது மொன்று மலற

வரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து

நிரம்பு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

.. அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.


============================= ============================


Word separated version:


#1374 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 109

மா-பாவிக் கடை-மணர் வாகீசத் திருவடி ஆம்

காபாலி அடியவர்பால் கடக்-களிற்றை விடுகென்னப்,

பூபாலர் செயல் மேற்கொள் புலைத்-தொழிலோன் அவர்தம்மேல்

கோபாதிசயமான கொலைக்-களிற்றை விடச்சொன்னான்.


#1381 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 116

வஞ்சகர் விட்ட சினப்-போர் மத-வெங் களிற்றினை நோக்கிச்

"செஞ்சடை நீள்-முடிக் கூத்தர், தேவர்க்கும் தேவர் பிரானார்,

வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம் அடியோம் நாம்!

அஞ்சுவது இல்லை" ன்றென்றே ரும்-தமிழ் பாடி றைந்தார்.

--------------

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.2 - திருவதிகை வீரட்டானம் (பண் : காந்தாரம்)

(அறுசீர் விருத்தம் - meter)


பாடல் எண் : 1

சுண்ண-வெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கட் சூளாமணியும்,

வண்ண உரிவை உடையும், வளரும் பவள நிறமும்,

அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,

திண்-நன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்!

.. அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!


பாடல் எண் : 2

பூண்டதொர் கேழல் எயிறும், பொன் திகழ் ஆமை புரள

நீண்ட திண்-தோள் வலம் சூழ்ந்து நிலாக்-கதிர் போல வெண்ணூலும்,

காண்-தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும்,

ஈண்டு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்!

.. அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!


பாடல் எண் : 3

ஒத்த வடத்து இள-நாகம், உருத்திர பட்டம் இரண்டும்,

முத்துவடக் கண்டிகையும், முளைத்து எழு மூவிலை வேலும்,

சித்த வடமும், அதிகைச் சேண்-உயர் வீரட்டம் சூழ்ந்து

தத்தும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்!

.. அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!


பாடல் எண் : 4

மட-மான் மறி, பொற்கலையும், மழுப் பாம்பு ஒரு கையில் வீணை,

குட-மால்-வரைய திண்-தோளும், குனி-சிலைக் கூத்தின் பயில்வும்,

இடம் மால் தழுவிய பாகம் இருநிலன் ஏற்ற சுவடும்,

தடம் ஆர் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்!

.. அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!


பாடல் எண் : 5

பல-பல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார் மனத்து உள்ளே

கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்,

வலம் ஏந்து இரண்டு சுடரும், வான் கயிலாய மலையும்,

நலம் ஆர் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்!

.. அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!


பாடல் எண் : 6

கரந்தன கொள்ளி விளக்கும், கறங்கு துடியின் முழக்கும்,

பரந்த பதினெண் கணமும், பயின்று அறியாதன பாட்டும்,

அரங்கிடை நூலறிவாளர் அறியப் படாததொர் கூத்தும்,

நிரந்த கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்!

.. அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!


பாடல் எண் : 7

கொலைவரி வேங்கை அதளும், குவவோடு இலங்கு பொற்றோடும்,,

விலைபெறு சங்கக் குழையும், விலை-இல் கபாலக் கலனும்,

மலைமகள் கைக்கொண்ட மார்பும், மணி ஆர்ந்து இலங்கு மிடறும்,

உலவு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்!

.. அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!


பாடல் எண் : 8

ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும்,

பாடல் பயின்ற பல்-பூதம் பல்லாயிரங்கொள் கருவி

நாடற்கு அரியதொர் கூத்தும், நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து

ஓடும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்!

.. அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!


பாடல் எண் : 9

சூழும் அரவத் துகிலும், துகில்-கிழி கோவணக் கீளும்,

யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு-வரை போன்ற

வேழம் உரித்த நிலையும், விரி-பொழில் வீரட்டம் சூழ்ந்து

தாழும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்!

.. அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!


பாடல் எண் : 10

நரம்பு எழு கைகள் பிடித்து, நங்கை நடுங்க மலையை

உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற,

வரங்கள் கொடுத்து அருள் செய்வான், வளர்-பொழில் வீரட்டம் சூழ்ந்து

நிரம்பு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்!

.. அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!

============================= ============================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


#1374 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 109

mā-pāvik kaḍai-amaṇar vāgīsat tiruvaḍi ām

kābāli aḍiyavarbāl kaḍak-kaḷiṭrai viḍugennap,

būbālar seyal mēṟkoḷ pulait-toḻilōn avardammēl

kōbādisayamāna kolaik-kaḷiṭrai viḍacconnān.


#1381 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 116

vañjagar viṭṭa sinap-pōr mada-veṅ gaḷiṭrinai nōkkic

"ceñjaḍai nīḷ-muḍik kūttar, tēvarkkum tēvar pirānār,

veñjuḍar mūvilaic cūla vīraṭṭar tam aḍiyōm nām!

añjuvadu illai" eṇḍreṇḍrē arum-tamiḻ pāḍi aṟaindār.

--------------

tirunāvukkarasar tēvāram - padigam 4.2 - tiruvadigai vīraṭṭānam (paṇ : kāndāram)

(aṟusīr viruttam - meter)


pāḍal eṇ : 1

suṇṇa-veṇ sandanac cāndum, suḍart tiṅgaṭ cūḷāmaṇiyum,

vaṇṇa urivai uḍaiyum, vaḷarum pavaḷa niṟamum,

aṇṇal araṇ muraṇ ēṟum, agalam vaḷāya aravum,

tiṇ-nan keḍilap punalum uḍaiyār oruvar tamar nām!

.. añjuvadu yādu oṇḍrum illai; añja varuvadum illai!


pāḍal eṇ : 2

pūṇḍador kēḻal eyiṟum, pon tigaḻ āmai puraḷa

nīṇḍa tiṇ-tōḷ valam sūḻndu nilāk-kadir pōla veṇṇūlum,

kāṇ-tagu puḷḷin siṟagum, kalanda kaṭṭaṅgak koḍiyum,

īṇḍu keḍilap punalum uḍaiyār oruvar tamar nām!

.. añjuvadu yādu oṇḍrum illai; añja varuvadum illai!


pāḍal eṇ : 3

otta vaḍattu iḷa-nāgam, uruttira paṭṭam iraṇḍum,

muttuvaḍak kaṇḍigaiyum, muḷaittu eḻu mūvilai vēlum,

sitta vaḍamum, adigaic cēṇ-uyar vīraṭṭam sūḻndu

tattum keḍilap punalum uḍaiyār oruvar tamar nām!

.. añjuvadu yādu oṇḍrum illai; añja varuvadum illai!


pāḍal eṇ : 4

maḍa-mān maṟi, poṟkalaiyum, maḻup pāmbu oru kaiyil vīṇai,

kuḍa-māl-varaiya tiṇ-tōḷum, kuni-silaik kūttin payilvum,

iḍam māl taḻuviya bāgam irunilan ēṭra suvaḍum,

taḍam ār keḍilap punalum uḍaiyār oruvar tamar nām!

.. añjuvadu yādu oṇḍrum illai; añja varuvadum illai!


pāḍal eṇ : 5

pala-pala kāmattar āgip padaittu eḻuvār manattu uḷḷē

kalamalakkiṭṭut tiriyum gaṇabadi ennum kaḷiṟum,

valam ēndu iraṇḍu suḍarum, vān kayilāya malaiyum,

nalam ār keḍilap punalum uḍaiyār oruvar tamar nām!

.. añjuvadu yādu oṇḍrum illai; añja varuvadum illai!


pāḍal eṇ : 6

karandana koḷḷi viḷakkum, kaṟaṅgu tuḍiyin muḻakkum,

paranda padineṇ gaṇamum, payiṇḍru aṟiyādana pāṭṭum,

araṅgiḍai nūlaṟivāḷar aṟiyap paḍādador kūttum,

niranda keḍilap punalum uḍaiyār oruvar tamar nām!

.. añjuvadu yādu oṇḍrum illai; añja varuvadum illai!


pāḍal eṇ : 7

kolaivari vēṅgai adaḷum, kuvavōḍu ilaṅgu poṭrōḍum,,

vilaibeṟu saṅgak kuḻaiyum, vilai-il kabālak kalanum,

malaimagaḷ kaikkoṇḍa mārbum, maṇi ārndu ilaṅgu miḍaṟum,

ulavu keḍilap punalum uḍaiyār oruvar tamar nām!

.. añjuvadu yādu oṇḍrum illai; añja varuvadum illai!


pāḍal eṇ : 8

āḍal purinda nilaiyum, araiyil asaitta aravum,

pāḍal payiṇḍra pal-būdam pallāyiraṅgoḷ karuvi

nāḍaṟku ariyador kūttum, nangu uyar vīraṭṭam sūḻndu

ōḍum keḍilap punalum uḍaiyār oruvar tamar nām!

.. añjuvadu yādu oṇḍrum illai; añja varuvadum illai!


pāḍal eṇ : 9

sūḻum aravat tugilum, tugil-kiḻi kōvaṇak kīḷum,

yāḻin moḻiyavaḷ añja añjādu aru-varai pōṇḍra

vēḻam uritta nilaiyum, viri-poḻil vīraṭṭam sūḻndu

tāḻum keḍilap punalum uḍaiyār oruvar tamar nām!

.. añjuvadu yādu oṇḍrum illai; añja varuvadum illai!


pāḍal eṇ : 10

narambu eḻu kaigaḷ piḍittu, naṅgai naḍuṅga malaiyai

uraṅgaḷ ellām koṇḍu eḍuttān onbadum oṇḍrum alaṟa,

varaṅgaḷ koḍuttu aruḷ seyvān, vaḷar-poḻil vīraṭṭam sūḻndu

nirambu keḍilap punalum uḍaiyār oruvar tamar nām!

.. añjuvadu yādu oṇḍrum illai; añja varuvadum illai!

============================= ============================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )

#1374 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 109

मा-पाविक् कडै-अमणर् वागीसत् तिरुवडि आम्

काबालि अडियवर्बाल् कडक्-कळिट्रै विडुगॆन्नप्,

बूबालर् सॆयल् मेऱ्‌कॊळ् पुलैत्-तॊऴिलोन् अवर्दम्मेल्

कोबादिसयमान कॊलैक्-कळिट्रै विडच्चॊन्नान्.


#1381 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 116

वञ्जगर् विट्ट सिनप्-पोर् मद-वॆङ् गळिट्रिनै नोक्किच्

"चॆञ्जडै नीळ्-मुडिक् कूत्तर्, तेवर्क्कुम् तेवर् पिरानार्,

वॆञ्जुडर् मूविलैच् चूल वीरट्टर् तम् अडियोम् नाम्!

अञ्जुवदु इल्लै" ऎण्ड्रॆण्ड्रे अरुम्-तमिऴ् पाडि अऱैन्दार्.

--------------

तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.2 - तिरुवदिगै वीरट्टानम् (पण् : कान्दारम्)

(अऱुसीर् विरुत्तम् - meter)


पाडल् ऎण् : 1

सुण्ण-वॆण् सन्दनच् चान्दुम्, सुडर्त् तिङ्गट् चूळामणियुम्,

वण्ण उरिवै उडैयुम्, वळरुम् पवळ निऱमुम्,

अण्णल् अरण् मुरण् एऱुम्, अगलम् वळाय अरवुम्,

तिण्-नन् कॆडिलप् पुनलुम् उडैयार् ऒरुवर् तमर् नाम्!

.. अञ्जुवदु यादु ऒण्ड्रुम् इल्लै; अञ्ज वरुवदुम् इल्लै!


पाडल् ऎण् : 2

पूण्डदॊर् केऴल् ऎयिऱुम्, पॊन् तिगऴ् आमै पुरळ

नीण्ड तिण्-तोळ् वलम् सूऴ्न्दु निलाक्-कदिर् पोल वॆण्णूलुम्,

काण्-तगु पुळ्ळिन् सिऱगुम्, कलन्द कट्टङ्गक् कॊडियुम्,

ईण्डु कॆडिलप् पुनलुम् उडैयार् ऒरुवर् तमर् नाम्!

.. अञ्जुवदु यादु ऒण्ड्रुम् इल्लै; अञ्ज वरुवदुम् इल्लै!


पाडल् ऎण् : 3

ऒत्त वडत्तु इळ-नागम्, उरुत्तिर पट्टम् इरण्डुम्,

मुत्तुवडक् कण्डिगैयुम्, मुळैत्तु ऎऴु मूविलै वेलुम्,

सित्त वडमुम्, अदिगैच् चेण्-उयर् वीरट्टम् सूऴ्न्दु

तत्तुम् कॆडिलप् पुनलुम् उडैयार् ऒरुवर् तमर् नाम्!

.. अञ्जुवदु यादु ऒण्ड्रुम् इल्लै; अञ्ज वरुवदुम् इल्लै!


पाडल् ऎण् : 4

मड-मान् मऱि, पॊऱ्‌कलैयुम्, मऴुप् पाम्बु ऒरु कैयिल् वीणै,

कुड-माल्-वरैय तिण्-तोळुम्, कुनि-सिलैक् कूत्तिन् पयिल्वुम्,

इडम् माल् तऴुविय बागम् इरुनिलन् एट्र सुवडुम्,

तडम् आर् कॆडिलप् पुनलुम् उडैयार् ऒरुवर् तमर् नाम्!

.. अञ्जुवदु यादु ऒण्ड्रुम् इल्लै; अञ्ज वरुवदुम् इल्लै!


पाडल् ऎण् : 5

पल-पल कामत्तर् आगिप् पदैत्तु ऎऴुवार् मनत्तु उळ्ळे

कलमलक्किट्टुत् तिरियुम् गणबदि ऎन्नुम् कळिऱुम्,

वलम् एन्दु इरण्डु सुडरुम्, वान् कयिलाय मलैयुम्,

नलम् आर् कॆडिलप् पुनलुम् उडैयार् ऒरुवर् तमर् नाम्!

.. अञ्जुवदु यादु ऒण्ड्रुम् इल्लै; अञ्ज वरुवदुम् इल्लै!


पाडल् ऎण् : 6

करन्दन कॊळ्ळि विळक्कुम्, कऱङ्गु तुडियिन् मुऴक्कुम्,

परन्द पदिनॆण् गणमुम्, पयिण्ड्रु अऱियादन पाट्टुम्,

अरङ्गिडै नूलऱिवाळर् अऱियप् पडाददॊर् कूत्तुम्,

निरन्द कॆडिलप् पुनलुम् उडैयार् ऒरुवर् तमर् नाम्!

.. अञ्जुवदु यादु ऒण्ड्रुम् इल्लै; अञ्ज वरुवदुम् इल्लै!


पाडल् ऎण् : 7

कॊलैवरि वेङ्गै अदळुम्, कुववोडु इलङ्गु पॊट्रोडुम्,,

विलैबॆऱु सङ्गक् कुऴैयुम्, विलै-इल् कबालक् कलनुम्,

मलैमगळ् कैक्कॊण्ड मार्बुम्, मणि आर्न्दु इलङ्गु मिडऱुम्,

उलवु कॆडिलप् पुनलुम् उडैयार् ऒरुवर् तमर् नाम्!

.. अञ्जुवदु यादु ऒण्ड्रुम् इल्लै; अञ्ज वरुवदुम् इल्लै!


पाडल् ऎण् : 8

आडल् पुरिन्द निलैयुम्, अरैयिल् असैत्त अरवुम्,

पाडल् पयिण्ड्र पल्-बूदम् पल्लायिरङ्गॊळ् करुवि

नाडऱ्‌कु अरियदॊर् कूत्तुम्, नन्गु उयर् वीरट्टम् सूऴ्न्दु

ओडुम् कॆडिलप् पुनलुम् उडैयार् ऒरुवर् तमर् नाम्!

.. अञ्जुवदु यादु ऒण्ड्रुम् इल्लै; अञ्ज वरुवदुम् इल्लै!


पाडल् ऎण् : 9

सूऴुम् अरवत् तुगिलुम्, तुगिल्-किऴि कोवणक् कीळुम्,

याऴिन् मॊऴियवळ् अञ्ज अञ्जादु अरु-वरै पोण्ड्र

वेऴम् उरित्त निलैयुम्, विरि-पॊऴिल् वीरट्टम् सूऴ्न्दु

ताऴुम् कॆडिलप् पुनलुम् उडैयार् ऒरुवर् तमर् नाम्!

.. अञ्जुवदु यादु ऒण्ड्रुम् इल्लै; अञ्ज वरुवदुम् इल्लै!


पाडल् ऎण् : 10

नरम्बु ऎऴु कैगळ् पिडित्तु, नङ्गै नडुङ्ग मलैयै

उरङ्गळ् ऎल्लाम् कॊण्डु ऎडुत्तान् ऒन्बदुम् ऒण्ड्रुम् अलऱ,

वरङ्गळ् कॊडुत्तु अरुळ् सॆय्वान्, वळर्-पॊऴिल् वीरट्टम् सूऴ्न्दु

निरम्बु कॆडिलप् पुनलुम् उडैयार् ऒरुवर् तमर् नाम्!

.. अञ्जुवदु यादु ऒण्ड्रुम् इल्लै; अञ्ज वरुवदुम् इल्लै!

============================= ============================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


#1374 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 109

మా-పావిక్ కడై-అమణర్ వాగీసత్ తిరువడి ఆం

కాబాలి అడియవర్బాల్ కడక్-కళిట్రై విడుగెన్నప్,

బూబాలర్ సెయల్ మేఱ్కొళ్ పులైత్-తొఴిలోన్ అవర్దమ్మేల్

కోబాదిసయమాన కొలైక్-కళిట్రై విడచ్చొన్నాన్.


#1381 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 116

వంజగర్ విట్ట సినప్-పోర్ మద-వెఙ్ గళిట్రినై నోక్కిచ్

"చెంజడై నీళ్-ముడిక్ కూత్తర్, తేవర్క్కుం తేవర్ పిరానార్,

వెంజుడర్ మూవిలైచ్ చూల వీరట్టర్ తం అడియోం నాం!

అంజువదు ఇల్లై" ఎండ్రెండ్రే అరుం-తమిఴ్ పాడి అఱైందార్.

--------------

తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.2 - తిరువదిగై వీరట్టానం (పణ్ : కాందారం)

(అఱుసీర్ విరుత్తం - meter)


పాడల్ ఎణ్ : 1

సుణ్ణ-వెణ్ సందనచ్ చాందుం, సుడర్త్ తింగట్ చూళామణియుం,

వణ్ణ ఉరివై ఉడైయుం, వళరుం పవళ నిఱముం,

అణ్ణల్ అరణ్ మురణ్ ఏఱుం, అగలం వళాయ అరవుం,

తిణ్-నన్ కెడిలప్ పునలుం ఉడైయార్ ఒరువర్ తమర్ నాం!

.. అంజువదు యాదు ఒండ్రుం ఇల్లై; అంజ వరువదుం ఇల్లై!


పాడల్ ఎణ్ : 2

పూండదొర్ కేఴల్ ఎయిఱుం, పొన్ తిగఴ్ ఆమై పురళ

నీండ తిణ్-తోళ్ వలం సూఴ్న్దు నిలాక్-కదిర్ పోల వెణ్ణూలుం,

కాణ్-తగు పుళ్ళిన్ సిఱగుం, కలంద కట్టంగక్ కొడియుం,

ఈండు కెడిలప్ పునలుం ఉడైయార్ ఒరువర్ తమర్ నాం!

.. అంజువదు యాదు ఒండ్రుం ఇల్లై; అంజ వరువదుం ఇల్లై!


పాడల్ ఎణ్ : 3

ఒత్త వడత్తు ఇళ-నాగం, ఉరుత్తిర పట్టం ఇరండుం,

ముత్తువడక్ కండిగైయుం, ముళైత్తు ఎఴు మూవిలై వేలుం,

సిత్త వడముం, అదిగైచ్ చేణ్-ఉయర్ వీరట్టం సూఴ్న్దు

తత్తుం కెడిలప్ పునలుం ఉడైయార్ ఒరువర్ తమర్ నాం!

.. అంజువదు యాదు ఒండ్రుం ఇల్లై; అంజ వరువదుం ఇల్లై!


పాడల్ ఎణ్ : 4

మడ-మాన్ మఱి, పొఱ్కలైయుం, మఴుప్ పాంబు ఒరు కైయిల్ వీణై,

కుడ-మాల్-వరైయ తిణ్-తోళుం, కుని-సిలైక్ కూత్తిన్ పయిల్వుం,

ఇడం మాల్ తఴువియ బాగం ఇరునిలన్ ఏట్ర సువడుం,

తడం ఆర్ కెడిలప్ పునలుం ఉడైయార్ ఒరువర్ తమర్ నాం!

.. అంజువదు యాదు ఒండ్రుం ఇల్లై; అంజ వరువదుం ఇల్లై!


పాడల్ ఎణ్ : 5

పల-పల కామత్తర్ ఆగిప్ పదైత్తు ఎఴువార్ మనత్తు ఉళ్ళే

కలమలక్కిట్టుత్ తిరియుం గణబది ఎన్నుం కళిఱుం,

వలం ఏందు ఇరండు సుడరుం, వాన్ కయిలాయ మలైయుం,

నలం ఆర్ కెడిలప్ పునలుం ఉడైయార్ ఒరువర్ తమర్ నాం!

.. అంజువదు యాదు ఒండ్రుం ఇల్లై; అంజ వరువదుం ఇల్లై!


పాడల్ ఎణ్ : 6

కరందన కొళ్ళి విళక్కుం, కఱంగు తుడియిన్ ముఴక్కుం,

పరంద పదినెణ్ గణముం, పయిండ్రు అఱియాదన పాట్టుం,

అరంగిడై నూలఱివాళర్ అఱియప్ పడాదదొర్ కూత్తుం,

నిరంద కెడిలప్ పునలుం ఉడైయార్ ఒరువర్ తమర్ నాం!

.. అంజువదు యాదు ఒండ్రుం ఇల్లై; అంజ వరువదుం ఇల్లై!


పాడల్ ఎణ్ : 7

కొలైవరి వేంగై అదళుం, కువవోడు ఇలంగు పొట్రోడుం,,

విలైబెఱు సంగక్ కుఴైయుం, విలై-ఇల్ కబాలక్ కలనుం,

మలైమగళ్ కైక్కొండ మార్బుం, మణి ఆర్న్దు ఇలంగు మిడఱుం,

ఉలవు కెడిలప్ పునలుం ఉడైయార్ ఒరువర్ తమర్ నాం!

.. అంజువదు యాదు ఒండ్రుం ఇల్లై; అంజ వరువదుం ఇల్లై!


పాడల్ ఎణ్ : 8

ఆడల్ పురింద నిలైయుం, అరైయిల్ అసైత్త అరవుం,

పాడల్ పయిండ్ర పల్-బూదం పల్లాయిరంగొళ్ కరువి

నాడఱ్కు అరియదొర్ కూత్తుం, నన్గు ఉయర్ వీరట్టం సూఴ్న్దు

ఓడుం కెడిలప్ పునలుం ఉడైయార్ ఒరువర్ తమర్ నాం!

.. అంజువదు యాదు ఒండ్రుం ఇల్లై; అంజ వరువదుం ఇల్లై!


పాడల్ ఎణ్ : 9

సూఴుం అరవత్ తుగిలుం, తుగిల్-కిఴి కోవణక్ కీళుం,

యాఴిన్ మొఴియవళ్ అంజ అంజాదు అరు-వరై పోండ్ర

వేఴం ఉరిత్త నిలైయుం, విరి-పొఴిల్ వీరట్టం సూఴ్న్దు

తాఴుం కెడిలప్ పునలుం ఉడైయార్ ఒరువర్ తమర్ నాం!

.. అంజువదు యాదు ఒండ్రుం ఇల్లై; అంజ వరువదుం ఇల్లై!


పాడల్ ఎణ్ : 10

నరంబు ఎఴు కైగళ్ పిడిత్తు, నంగై నడుంగ మలైయై

ఉరంగళ్ ఎల్లాం కొండు ఎడుత్తాన్ ఒన్బదుం ఒండ్రుం అలఱ,

వరంగళ్ కొడుత్తు అరుళ్ సెయ్వాన్, వళర్-పొఴిల్ వీరట్టం సూఴ్న్దు

నిరంబు కెడిలప్ పునలుం ఉడైయార్ ఒరువర్ తమర్ నాం!

.. అంజువదు యాదు ఒండ్రుం ఇల్లై; అంజ వరువదుం ఇల్లై!

============================= ============================

No comments:

Post a Comment