Pages

Monday, August 31, 2015

4.71 - மனைவிதாய் தந்தை - திருநாகைக்காரோணம் - (திருநேரிசை)

12) padhigam 4.71 - திருநாகைக்காரோணம் - (திருநேரிசை)

Verses - PDF: 4.71 - மனைவிதாய் தந்தை - manaivi thAy thandhai

***
On YouTube:
Tamil discussion: https://youtu.be/VRMD9xMN7C0

***
English translation of this padhigam: V.M. Subramanya Ayyar: 
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS4_071.HTM

திருநாகைக்காரோணம் - காயாரோகணேஸ்வரர் நீலாயதாட்சி கோயில் - நாகப்பட்டினம் - Neelayadakshi Temple, Nagapattinam: http://temple.dinamalar.com/New.php?id=205

V. Subramanian
======================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.71 - திருநாகைக்காரோணம் ( திருநேரிசை )

Background:

திருமறைக்காட்டிலே திருஞானசம்பந்த சுவாமிகளுடன் ஈசனை வழிபட்டிருந்த வாகீசர் திருவீழிமிழலைப் பரமன் திருக்கழலை மீண்டும் சார நினைத்து, அம்மறைக்காட்டில் அமர்ந்தருளுஞ் சோதியருள் பெற்று அகன்று செல்லும்போது, திருநாகைக்காரோணம் பணிந்து பாடிய வண்டமிழ் இத்திருப்பதிகம்.

திருநாகைக்காரோணம்: தலக்குறிப்பு:

நாகைக்காரோணம் - இது நாகப்பட்டினம் என வழங்கப்படும். ஆதிசேடன் பூசித்தமையால் நாகை எனவும், புண்டரீக மகா முனிவரை இறைவர் தமது திருமேனியினுள் ஏற்றுக்கொண் டருளியமையால் காயாரோகணம் (காயம் - உடம்பு; ஆரோகணம் - ஏற்றுக்கொள்ளுதல்) எனவும் பெற்று, நாகைக் காயாரோகணம் எனப்பட்டு, அது நாகைக்காரோணம் என மருவி வழங்குவதாயிற்று. மூவர் பாடலும் பெற்ற பெருமையுடையது. முசுகுந்தர் கொண்டுவந்து தாபித்த ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. ஆளுடைய நம்பிகள் திருப்பதிகம் பாடிப் பொன் முதலியவை பெற்றனர். பரதவர் குலத்தில் அதிபத்த நாயனார் இங்கு அவதரித்து அன்பு பூண்டு நாடோறும் வலைவீசிப் படுத்த மீன்களில் முதலில் படும் மீனைச் சிவனுக்கு எனக் கடலில் விட்டுவரப், பலநாளும் ஒரு மீனே பட விட்டுவந்து, ஒருநாள் நவமணிகளால் உறுப்பமைந்த ஒரு அரிய மீன்பட, அதனையும் சிவனுக்கென விடுக்க, இறைவர் வெளிப்பட்டு ஆட்கொண்டருளினர். அவர்தம் புராணம் பார்க்க.

சுவாமி - காயாரோகணேசுவரர்; அம்மை - நீலாயதாட்சியம்மை; தியாகர் - சுந்தரவிடங்கர்; நடனம் - தரங்க நடனம்;

--------------

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.71 - திருநாகைக்காரோணம் ( திருநேரிசை )

(அறுசீர் விருத்தம் - meter)

பாடல் எண் : 1

மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்

வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே

கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை

நினையுமா வல்லீ ராகி லுய்யலா நெஞ்சி னீரே.


பாடல் எண் : 2

வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட

செய்யனைச் செய்ய போதிற் றிசைமுகன் சிரமொன் றேந்தும்

கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட

ஐயனை நினைந்த நெஞ்சே யம்மநா முய்ந்த வாறே.


பாடல் எண் : 3

நிருத்தனை நிமலன் றன்னை நீணிலம் விண்ணின் மிக்க

விருத்தனை வேத வித்தை விளைபொருண் மூல மான

கருத்தனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட

ஒருத்தனை யுணர்த லானா முய்ந்தவா நெஞ்சி னீரே.


பாடல் எண் : 4

மண்டனை யிரந்து கொண்ட மாயனோ டசுரர் வானோர்

தெண்டிரை கடைய வந்த தீவிடந் தன்னை யுண்ட

கண்டனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட

அண்டனை நினைந்த நெஞ்சே யம்மநா முய்ந்த வாறே.


பாடல் எண் : 5

நிறைபுன லணிந்த சென்னி நீணிலா வரவஞ் சூடி

மறையொலி பாடி யாடன் மயானத்து மகிழ்ந்த மைந்தன்

கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட

இறைவனை நாளு மேத்த விடும்பைபோ யின்ப மாமே.


பாடல் எண் : 6

வெம்பனைக் கருங்கை யானை வெருவவன் றுரிவை போர்த்த

கம்பனைக் காலற் காய்ந்த காலனை ஞால மேத்தும்

உம்பனை யும்பர் கோனை நாகைக்கா ரோண மேய

செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணநா முய்ந்த வாறே.


பாடல் எண் : 7

வெங்கடுங் கானத் தேழை தன்னொடும் வேட னாய்ச்சென்

றங்கமர் மலைந்து பார்த்தற் கடுசர மருளி னானை

மங்கைமா ராட லோவா மன்னுகா ரோணத் தானைக்

கங்குலும் பகலுங் காணப் பெற்றுநாங் களித்த வாறே.


பாடல் எண் : 8

தெற்றினர் புரங்கண் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால்

செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார்

கற்றவர் பயிலு நாகைக் காரோணங் கருதி யேத்தப்

பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே.


பாடல் எண் : 9

****** ******* (இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.)


பாடல் எண் : 10

கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்

தொருவிர னுதிக்கு நில்லா தொண்டிற லரக்க னுக்கான்

இருதிற மங்கை மாரோ டெம்பிரான் செம்பொ னாகம்

திருவடி தரித்து நிற்கத் திண்ணநா முய்ந்த வாறே.

============================= ============================

Word separated version:


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.71 - திருநாகைக்காரோணம் ( திருநேரிசை )

(அறுசீர் விருத்தம் - meter)

பாடல் எண் : 1

மனைவி, தாய், தந்தை, மக்கள், மற்று உள சுற்றம் என்னும்

வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே,

கனையும் மா கடல்-சூழ் நாகை மன்னு காரோணத்தானை

நினையுமா வல்லீர் ஆகில் உய்யலாம் நெஞ்சினீரே.


பாடல் எண் : 2

வையனை, வையம் உண்ட மால் அங்கம் தோள்மேல் கொண்ட

செய்யனைச், செய்ய போதில் திசைமுகன் சிரம் ஒன்று ஏந்தும்

கையனைக், கடல்-சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட

ஐயனை நினைந்த நெஞ்சே, அம்ம, நாம் உய்ந்தவாறே.


பாடல் எண் : 3

நிருத்தனை, நிமலன் தன்னை, நீள் நிலம் விண்ணின் மிக்க

விருத்தனை, வேத வித்தை, விளை-பொருள் மூலம் ஆன

கருத்தனைக், கடல்-சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட

ஒருத்தனை உணர்தலால், நாம் உய்ந்தவா நெஞ்சினீரே.


பாடல் எண் : 4

மண்-தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர்

தெண்-திரை கடைய வந்த தீ-விடம் தன்னை உண்ட

கண்டனைக், கடல்-சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட

அண்டனை நினைந்த நெஞ்சே, அம்ம நாம் உய்ந்தவாறே.


பாடல் எண் : 5

நிறை-புனல் அணிந்த சென்னி நீள்-நிலா அரவம் சூடி,

மறை-ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்,

கறை-மலி கடல்-சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட

இறைவனை நாளும் ஏத்த, இடும்பை போய், இன்பம் ஆமே.


பாடல் எண் : 6

வெம்பனைக் கருங்கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த

கம்பனைக், காலற் காய்ந்த காலனை, ஞாலம் ஏத்தும்

உம்பனை, உம்பர் கோனை, நாகைக் காரோணம் மேய

செம்பொனை நினைந்த நெஞ்சே, திண்ணம் நாம் உய்ந்தவாறே.

(வெம்-பனைக்-கரும்-கை யானை)


பாடல் எண் : 7

வெங்கடும் கானத்து ஏழை தன்னொடும் வேடனாய்ச் சென்று,

அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு-சரம் அருளினானை,

மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானைக்,

கங்குலும் பகலும் காணப் பெற்று நாம் களித்தவாறே.

(வெம்-கடும்)


பாடல் எண் : 8

தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால்

செற்ற வெஞ்சிலையர், வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார்,

கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்

பெற்றவர் பிறந்தார், மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே.


பாடல் எண் : 9

****** ******* (9th verse of this padhigam is lost)


பாடல் எண் : 10

கரு-மலி கடல்-சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்து

ஒரு-விரல் நுதிக்கு நில்லாது ஒண்-திறல் அரக்கன் உக்கான்;

இரு-திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம்

திருவடி தரித்து நிற்கத், திண்ணம் நாம் உய்ந்தவாறே.

============================= ============================


Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tirunāvukkarasar tēvāram - padigam 4.71 - tirunāgaikkārōṇam ( tirunērisai )

(aṟusīr viruttam - meter)

pāḍal eṇ : 1

manaivi, tāy, tandai, makkaḷ, maṭru uḷa suṭram ennum

vinaiyuḷē viḻundu aḻundi vēdanaikku iḍam āgādē,

kanaiyum mā kaḍal-sūḻ nāgai mannu kārōṇattānai

ninaiyumā vallīr āgil uyyalām neñjinīrē.


pāḍal eṇ : 2

vaiyanai, vaiyam uṇḍa māl aṅgam tōḷmēl koṇḍa

seyyanaic, ceyya pōdil tisaimugan siram oṇḍru ēndum

kaiyanaik, kaḍal-sūḻ nāgaik kārōṇam kōyil koṇḍa

aiyanai ninainda neñjē, amma, nām uyndavāṟē.


pāḍal eṇ : 3

niruttanai, nimalan tannai, nīḷ nilam viṇṇin mikka

viruttanai, vēda vittai, viḷai-poruḷ mūlam āna

karuttanaik, kaḍal-sūḻ nāgaik kārōṇam kōyil koṇḍa

oruttanai uṇardalāl, nām uyndavā neñjinīrē.


pāḍal eṇ : 4

maṇ-tanai irandu koṇḍa māyanōḍu asurar vānōr

teṇ-tirai kaḍaiya vanda tī-viḍam tannai uṇḍa

kaṇḍanaik, kaḍal-sūḻ nāgaik kārōṇam kōyil koṇḍa

aṇḍanai ninainda neñjē, amma nām uyndavāṟē.


pāḍal eṇ : 5

niṟai-punal aṇinda senni nīḷ-nilā aravam sūḍi,

maṟai-oli pāḍi āḍal mayānattu magiḻnda maindan,

kaṟai-mali kaḍal-sūḻ nāgaik kārōṇam kōyil koṇḍa

iṟaivanai nāḷum ētta, iḍumbai pōy, inbam āmē.


pāḍal eṇ : 6

vembanaik karuṅgai yānai veruva aṇḍru urivai pōrtta

kambanaik, kālaṟ kāynda kālanai, ñālam ēttum

umbanai, umbar kōnai, nāgaik kārōṇam mēya

sembonai ninainda neñjē, tiṇṇam nām uyndavāṟē.

(vem-panaik-karum-kai yānai)


pāḍal eṇ : 7

veṅgaḍum kānattu ēḻai tannoḍum vēḍanāyc ceṇḍru,

aṅgu amar malaindu pārttaṟku aḍu-saram aruḷinānai,

maṅgaimār āḍal ōvā mannu kārōṇattānaik,

kaṅgulum pagalum kāṇap peṭru nām kaḷittavāṟē.

(vem-kaḍum)


pāḍal eṇ : 8

teṭrinar puraṅgaḷ mūṇḍrum tīyinil viḻa ōr ambāl

seṭra veñjilaiyar, vañjar sindaiyuḷ sērvu ilādār,

kaṭravar payilum nāgaik kārōṇam karudi ēttap

peṭravar piṟandār, maṭrup piṟandavar piṟandilārē.


pāḍal eṇ : 9

****** ******* (9th verse of this padhigam is lost)


pāḍal eṇ : 10

karu-mali kaḍal-sūḻ nāgaik kārōṇar kamala pādattu

oru-viral nudikku nillādu oṇ-tiṟal arakkan ukkān;

iru-tiṟa maṅgaimārōḍu embirān sembon āgam

tiruvaḍi tarittu niṟkat, tiṇṇam nām uyndavāṟē.

============================= ============================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )

तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.71 - तिरुनागैक्कारोणम् ( तिरुनेरिसै )

(अऱुसीर् विरुत्तम् - meter)

पाडल् ऎण् : 1

मनैवि, ताय्, तन्दै, मक्कळ्, मट्रु उळ सुट्रम् ऎन्नुम्

विनैयुळे विऴुन्दु अऴुन्दि वेदनैक्कु इडम् आगादे,

कनैयुम् मा कडल्-सूऴ् नागै मन्नु कारोणत्तानै

निनैयुमा वल्लीर् आगिल् उय्यलाम् नॆञ्जिनीरे.


पाडल् ऎण् : 2

वैयनै, वैयम् उण्ड माल् अङ्गम् तोळ्मेल् कॊण्ड

सॆय्यनैच्, चॆय्य पोदिल् तिसैमुगन् सिरम् ऒण्ड्रु एन्दुम्

कैयनैक्, कडल्-सूऴ् नागैक् कारोणम् कोयिल् कॊण्ड

ऐयनै निनैन्द नॆञ्जे, अम्म, नाम् उय्न्दवाऱे.


पाडल् ऎण् : 3

निरुत्तनै, निमलन् तन्नै, नीळ् निलम् विण्णिन् मिक्क

विरुत्तनै, वेद वित्तै, विळै-पॊरुळ् मूलम् आन

करुत्तनैक्, कडल्-सूऴ् नागैक् कारोणम् कोयिल् कॊण्ड

ऒरुत्तनै उणर्दलाल्, नाम् उय्न्दवा नॆञ्जिनीरे.


पाडल् ऎण् : 4

मण्-तनै इरन्दु कॊण्ड मायनोडु असुरर् वानोर्

तॆण्-तिरै कडैय वन्द ती-विडम् तन्नै उण्ड

कण्डनैक्, कडल्-सूऴ् नागैक् कारोणम् कोयिल् कॊण्ड

अण्डनै निनैन्द नॆञ्जे, अम्म नाम् उय्न्दवाऱे.


पाडल् ऎण् : 5

निऱै-पुनल् अणिन्द सॆन्नि नीळ्-निला अरवम् सूडि,

मऱै-ऒलि पाडि आडल् मयानत्तु मगिऴ्न्द मैन्दन्,

कऱै-मलि कडल्-सूऴ् नागैक् कारोणम् कोयिल् कॊण्ड

इऱैवनै नाळुम् एत्त, इडुम्बै पोय्, इन्बम् आमे.


पाडल् ऎण् : 6

वॆम्बनैक् करुङ्गै यानै वॆरुव अण्ड्रु उरिवै पोर्त्त

कम्बनैक्, कालऱ्‌ काय्न्द कालनै, ञालम् एत्तुम्

उम्बनै, उम्बर् कोनै, नागैक् कारोणम् मेय

सॆम्बॊनै निनैन्द नॆञ्जे, तिण्णम् नाम् उय्न्दवाऱे.

(वॆम्-पनैक्-करुम्-कै यानै)


पाडल् ऎण् : 7

वॆङ्गडुम् कानत्तु एऴै तन्नॊडुम् वेडनाय्च् चॆण्ड्रु,

अङ्गु अमर् मलैन्दु पार्त्तऱ्‌कु अडु-सरम् अरुळिनानै,

मङ्गैमार् आडल् ओवा मन्नु कारोणत्तानैक्,

कङ्गुलुम् पगलुम् काणप् पॆट्रु नाम् कळित्तवाऱे.

(वॆम्-कडुम्)


पाडल् ऎण् : 8

तॆट्रिनर् पुरङ्गळ् मूण्ड्रुम् तीयिनिल् विऴ ओर् अम्बाल्

सॆट्र वॆञ्जिलैयर्, वञ्जर् सिन्दैयुळ् सेर्वु इलादार्,

कट्रवर् पयिलुम् नागैक् कारोणम् करुदि एत्तप्

पॆट्रवर् पिऱन्दार्, मट्रुप् पिऱन्दवर् पिऱन्दिलारे.


पाडल् ऎण् : 9

****** ******* (9th verse of this padhigam is lost)


पाडल् ऎण् : 10

करु-मलि कडल्-सूऴ् नागैक् कारोणर् कमल पादत्तु

ऒरु-विरल् नुदिक्कु निल्लादु ऒण्-तिऱल् अरक्कन् उक्कान्;

इरु-तिऱ मङ्गैमारोडु ऎम्बिरान् सॆम्बॊन् आगम्

तिरुवडि तरित्तु निऱ्‌कत्, तिण्णम् नाम् उय्न्दवाऱे.

============================= ============================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.71 - తిరునాగైక్కారోణం ( తిరునేరిసై )

(అఱుసీర్ విరుత్తం - meter)

పాడల్ ఎణ్ : 1

మనైవి, తాయ్, తందై, మక్కళ్, మట్రు ఉళ సుట్రం ఎన్నుం

వినైయుళే విఴుందు అఴుంది వేదనైక్కు ఇడం ఆగాదే,

కనైయుం మా కడల్-సూఴ్ నాగై మన్ను కారోణత్తానై

నినైయుమా వల్లీర్ ఆగిల్ ఉయ్యలాం నెంజినీరే.


పాడల్ ఎణ్ : 2

వైయనై, వైయం ఉండ మాల్ అంగం తోళ్మేల్ కొండ

సెయ్యనైచ్, చెయ్య పోదిల్ తిసైముగన్ సిరం ఒండ్రు ఏందుం

కైయనైక్, కడల్-సూఴ్ నాగైక్ కారోణం కోయిల్ కొండ

ఐయనై నినైంద నెంజే, అమ్మ, నాం ఉయ్న్దవాఱే.


పాడల్ ఎణ్ : 3

నిరుత్తనై, నిమలన్ తన్నై, నీళ్ నిలం విణ్ణిన్ మిక్క

విరుత్తనై, వేద విత్తై, విళై-పొరుళ్ మూలం ఆన

కరుత్తనైక్, కడల్-సూఴ్ నాగైక్ కారోణం కోయిల్ కొండ

ఒరుత్తనై ఉణర్దలాల్, నాం ఉయ్న్దవా నెంజినీరే.


పాడల్ ఎణ్ : 4

మణ్-తనై ఇరందు కొండ మాయనోడు అసురర్ వానోర్

తెణ్-తిరై కడైయ వంద తీ-విడం తన్నై ఉండ

కండనైక్, కడల్-సూఴ్ నాగైక్ కారోణం కోయిల్ కొండ

అండనై నినైంద నెంజే, అమ్మ నాం ఉయ్న్దవాఱే.


పాడల్ ఎణ్ : 5

నిఱై-పునల్ అణింద సెన్ని నీళ్-నిలా అరవం సూడి,

మఱై-ఒలి పాడి ఆడల్ మయానత్తు మగిఴ్న్ద మైందన్,

కఱై-మలి కడల్-సూఴ్ నాగైక్ కారోణం కోయిల్ కొండ

ఇఱైవనై నాళుం ఏత్త, ఇడుంబై పోయ్, ఇన్బం ఆమే.


పాడల్ ఎణ్ : 6

వెంబనైక్ కరుంగై యానై వెరువ అండ్రు ఉరివై పోర్త్త

కంబనైక్, కాలఱ్ కాయ్న్ద కాలనై, ఞాలం ఏత్తుం

ఉంబనై, ఉంబర్ కోనై, నాగైక్ కారోణం మేయ

సెంబొనై నినైంద నెంజే, తిణ్ణం నాం ఉయ్న్దవాఱే.

(వెం-పనైక్-కరుం-కై యానై)


పాడల్ ఎణ్ : 7

వెంగడుం కానత్తు ఏఴై తన్నొడుం వేడనాయ్చ్ చెండ్రు,

అంగు అమర్ మలైందు పార్త్తఱ్కు అడు-సరం అరుళినానై,

మంగైమార్ ఆడల్ ఓవా మన్ను కారోణత్తానైక్,

కంగులుం పగలుం కాణప్ పెట్రు నాం కళిత్తవాఱే.

(వెం-కడుం)


పాడల్ ఎణ్ : 8

తెట్రినర్ పురంగళ్ మూండ్రుం తీయినిల్ విఴ ఓర్ అంబాల్

సెట్ర వెంజిలైయర్, వంజర్ సిందైయుళ్ సేర్వు ఇలాదార్,

కట్రవర్ పయిలుం నాగైక్ కారోణం కరుది ఏత్తప్

పెట్రవర్ పిఱందార్, మట్రుప్ పిఱందవర్ పిఱందిలారే.


పాడల్ ఎణ్ : 9

****** ******* (9th verse of this padhigam is lost)


పాడల్ ఎణ్ : 10

కరు-మలి కడల్-సూఴ్ నాగైక్ కారోణర్ కమల పాదత్తు

ఒరు-విరల్ నుదిక్కు నిల్లాదు ఒణ్-తిఱల్ అరక్కన్ ఉక్కాన్;

ఇరు-తిఱ మంగైమారోడు ఎంబిరాన్ సెంబొన్ ఆగం

తిరువడి తరిత్తు నిఱ్కత్, తిణ్ణం నాం ఉయ్న్దవాఱే.

============================= ============================