Pages

Wednesday, September 7, 2022

1.50 - ஒல்லையாறி - ollaiyARi

115) 1.50 - ஒல்லையாறி - ollaiyARi

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.50 – ஒல்லையாறி - திருவலிவலம் - (பண் - பழந்தக்கராகம்)

sambandar tēvāram - padigam 1.50 – ollaiyāṟi - tiruvalivalam - (paṇ - paḻandakkarāgam)



Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses: PDF: 1.50 - ஒல்லையாறி - ollaiyARi

English translation – by V.M.Subramanya Ayyar:

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_050.HTM

***

On YouTube:

Tamil discussion: 

Part-1: https://youtu.be/J7q_iEwstA0

Part-2: https://youtu.be/KxCiUrXJlmI

English discussion:

Part-1:

Part-2:

***

V. Subramanian

===================== ================

 This has verses in Tamil, English, Nagari, and Telugu scripts. Please print the pages you need.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.50 – திருவலிவலம் - (பண் - பழந்தக்கராகம்)


திருவலிவலம் -

இத்தலம் திருவாரூரிலிருந்து தென்கிழக்கே சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது. கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. சுவாமி சந்நிதி கட்டுமலைமேல் இருக்கின்றது

இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. வலியன் என்பது கரிக்குருவி. கோயிலைச் சுற்றிக் கிழக்குப்பக்கம் தவிர அகழி சூழ்ந்திருக்கிறது.

No special notes in Periyapuranam about the context of this padhigam.


பதிகக் குறிப்பு: முதல் ஒன்பது பாடல்களின் திரண்ட கருத்து: இயன்ற அளவு நம் உள்ளத்தைத் தூய்மைசெய்து, நாம் அன்போடு துதித்தால், சிவபெருமான் நம் குறைகளைப் பொருட்படுத்தாது இரங்கி அருள்புரிவான்;

இப்பதிகத்தை ஓதுபவர்கள் சிவலோகத்தில் நிலைத்து வாழ்வர்;


My interpretation of this padhigam:

In several songs of this padhigam, Sambandar expresses anguish, fear, worry, etc. - that are typically experienced by ordinary people. Sambandar, having received Siva's grace at the age of 3, was free of all such things! He was still a child when he sang this padhigam - and thus things like wife and children that are mentioned in one of the songs are obviously not applicable to him.

My surmise: He may have come across some people on that particular day who were experiencing such problems. They would have narrated their their problems to him and sought his guidance. So, Sambandar may have sung this padhigam expressing such anguish vicariously (as if he was experiencing them). Thus, when an ordinary devotee sings this padhigam - the devotee can feel the songs reflecting his own personal situation!

----------

# 2413 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 515

மல்ல னீடிய வலிவலங் கோளிலி முதலாந்

தொல்லை நான்மறை முதல்வர்தம் பதிபல தொழுதே,

யெல்லை யில்திருப் பதிகங்க ளாற்பணிந் தேத்தி

யல்ல றீர்ப்பவர் மீண்டுமா ரூர்தொழ வணைந்தார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.50 – திருவலிவலம் - (பண் - பழந்தக்கராகம்)

(தனன தானா - தனன தானா - தனதன தானதனா - என்ற சந்தம்)

பாடல் எண் : 1

ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ளமொழிந் துவெய்ய

சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி

நல்லவாறே யுன்றனாமம் நாவில்நவின் றேத்த

வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.


பாடல் எண் : 2

இயங்குகின்ற விரவிதிங்கண் மற்றுநற் றேவரெல்லாம்

பயங்களாலே பற்றிநின்பாற் சித்தந்தெளி கின்றிலர்

தயங்குசோதீ சாமவேதா காமனைக்காய்ந் தவனே

மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவலமே யவனே.


பாடல் எண் : 3

பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை

விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனைநோய் நலியக்

கண்டுகண்டே யுன்றனாமங் காதலிக்கின்ற துள்ளம்

வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவலமே யவனே.


பாடல் எண் : 4

மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனையைத் துறந்து

செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே

நைவனாயே னுன்றனாமம் நாளும்நவிற் றுகின்றேன்

வையமுன்னே வந்துநல்காய் வலிவலமே யவனே.


பாடல் எண் : 5

துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவனுன் றிறமே

தஞ்சமில்லாத் தேவர்வந்துன் றாளிணைக்கீழ்ப் பணிய

நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும்நினைந் தடியேன்

வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.


பாடல் எண் : 6

புரிசடையாய் புண்ணியனே நண்ணலார்மூ வெயிலும்

எரியவெய்தா யெம்பெருமா னென்றிமையோர் பரவும்

கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று

வரியரவா வந்துநல்காய் வலிவலமே யவனே.


பாடல் எண் : 7

தாயும்நீயே தந்தைநீயே சங்கரனே யடியேன்

ஆயும்நின்பா லன்புசெய்வா னாதரிக்கின் றதுள்ளம்

ஆயமாய காயந்தன்னு ளைவர்நின்றொன் றலொட்டார்

மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.


பாடல் எண் : 8

நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடையபொன் மலையை

வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனிரா வணனைத்

தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிரலா லடர்த்த

வாரொடுங்குங் கொங்கைபங்கா வலிவலமே யவனே.


பாடல் எண் : 9

ஆதியாய நான்முகனும் மாலுமறி வரிய

சோதியானே நீதியில்லேன் சொல்லுவனின் றிறமே

ஓதிநாளு முன்னையேத்து மென்னைவினை யவலம்

வாதியாமே வந்துநல்காய் வலிவலமே யவனே.


பாடல் எண் : 10

பொதியிலானே பூவணத்தாய் பொன்றிகழுங் கயிலைப்

பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவிடா தவனே

விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள்

மதியிலாதா ரென்செய்வாரோ வலிவலமே யவனே.


பாடல் எண் : 11

வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவலமே யவனைப்

பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன

பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்

மன்னுசோதி யீசனோடே மன்னியிருப் பாரே.

==================== ===============


Word separated version:


# 2413 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 515

மல்லல் நீடிய வலிவலம் கோளிலி முதலாம்

தொல்லை நான்மறை முதல்வர்தம் பதி பல தொழுதே,

ல்லை-ல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி,

அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.50 – திருவலிவலம் - (பண் - பழந்தக்கராகம்)

(தனன தானா - தனன தானா - தனதன தானதனா - என்ற சந்தம்)

பாடல் எண் : 1

ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றிக், கள்ளம் ஒழிந்து, வெய்ய

சொல்லை ஆறித், தூய்மை செய்து காம-வினை அகற்றி,

நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்று-ஏத்த

வல்லவாறே, வந்து நல்காய் வலிவலம் மேயவனே.


பாடல் எண் : 2

இயங்குகின்ற இரவி திங்கள் மற்று(ம்) நல் தேவர்-எல்லாம்

பயங்களாலே பற்றி நின்பால் சித்தம் தெளிகின்றிலர்;

தயங்கு சோதீ; சாமவேதா; காமனைக் காய்ந்தவனே;

மயங்குகின்றேன்; வந்து நல்காய் வலிவலம் மேயவனே.


பாடல் எண் : 3

பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதைப் பெருங்கடலை

விண்டு பண்டே வாழ-மாட்டேன்; வேதனை நோய் நலியக்

கண்டு-கண்டே உன்றன் நாமம் காதலிக்கின்றது உள்ளம்;

வண்டு கிண்டிப் பாடும் சோலை வலிவலம் மேயவனே.


பாடல் எண் : 4

மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து,

செய்யர் ஆனார் சிந்தையானே; தேவர்-குலக் கொழுந்தே;

நைவன் நாயேன், உன்றன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்;

வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே.


பாடல் எண் : 5

துஞ்சும்போதும் துற்றும்போதும் சொல்லுவன் உன் திறமே;

தஞ்சம் இல்லாத் தேவர் வந்துன் தாளிணைக்கீழ்ப் பணிய,

நஞ்சைண்டாய்க்கு என் செய்கேனோ? நாளும் நினைந்து, டியேன்

வஞ்சம் உண்டு என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே.


பாடல் எண் : 6

"புரி-சடையாய்; புண்ணியனே; நண்ணலார் மூவெயிலும்

எரிய எய்தாய்; எம்பெருமான்" என்று இமையோர் பரவும்

கரியுரியாய்; கால-காலா; நீல-மணி மிடற்று

வரியரவா; வந்து நல்காய் வலிவலம் மேயவனே.


பாடல் எண் : 7

தாயும் நீயே; தந்தை நீயே; சங்கரனே; அடியேன்

ஆயும் நின்பால் அன்பு-செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்;

ஆயம் ஆய காயந்தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்;

மாயமே என்று அஞ்சுகின்றேன்; வலிவலம் மேயவனே.


பாடல் எண் : 8

நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்; நின்னுடைய பொன்-மலையை

வேரொடும் பீழ்ந்து ஏந்தல்-உற்ற வேந்தன் இராவணனைத்

தேரொடும் போய் வீழ்ந்து அலறத் திருவிரலால் அடர்த்த

வார் ஒடுங்கும் கொங்கை-பங்கா; வலிவலம் மேயவனே.


பாடல் எண் : 9

ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு-அரிய

சோதியானே; நீதி இல்லேன்; சொல்லுவன் நின் திறமே;

ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம்

வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே.


பாடல் எண் : 10

பொதியிலானே; பூவணத்தாய்; பொன் திகழும் கயிலைப்

பதி இலானே; பத்தர் சித்தம் பற்று விடாதவனே;

விதி இலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்றிவர்கள்

மதி இலாதார் என் செய்வாரோ? வலிவலம் மேயவனே.


பாடல் எண் : 11

வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனைப்

பொன்னி-நாடன் புகலி-வேந்தன் ஞான-சம்பந்தன் சொன்ன

பன்னு-பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்

மன்னு-சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே.

==================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


# 2413 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 515

mallal nīḍiya valivalam kōḷili mudalām

tollai nānmaṟai mudalvardam padi pala toḻudē,

ellai-il tiruppadigaṅgaḷāl paṇindu ētti,

allal tīrppavar mīṇḍum ārūr toḻa aṇaindār.


sambandar tēvāram - padigam 1.50 – tiruvalivalam - (paṇ - paḻandakkarāgam)

(tanana tānā - tanana tānā - tanadana tānadanā - Rhythm)

pāḍal eṇ : 1

ollai āṟi, uḷḷam oṇḍrik, kaḷḷam oḻindu, veyya

sollai āṟit, tūymai seydu kāma-vinai agaṭri,

nallavāṟē uṇḍran nāmam nāvil naviṇḍru-ētta

vallavāṟē, vandu nalgāy valivalam mēyavanē.


pāḍal eṇ : 2

iyaṅgugiṇḍra iravi tiṅgaḷ maṭru(m) nal dēvar-ellām

bayaṅgaḷālē paṭri ninbāl sittam teḷigiṇḍrilar;

tayaṅgu sōdī; sāmavēdā; kāmanaik kāyndavanē;

mayaṅgugiṇḍrēn; vandu nalgāy valivalam mēyavanē.


pāḍal eṇ : 3

peṇḍir makkaḷ suṭram ennum pēdaip peruṅgaḍalai

viṇḍu paṇḍē vāḻa-māṭṭēn; vēdanai nōy naliyak

kaṇḍu-kaṇḍē uṇḍran nāmam kādalikkiṇḍradu uḷḷam;

vaṇḍu kiṇḍip pāḍum sōlai valivalam mēyavanē.


pāḍal eṇ : 4

meyyar āgip poyyai nīkki, vēdanaiyait tuṟandu,

seyyar ānār sindaiyānē; dēvar-kulak koḻundē;

naivan nāyēn, uṇḍran nāmam nāḷum naviṭrugiṇḍrēn;

vaiyam munnē vandu nalgāy valivalam mēyavanē.


pāḍal eṇ : 5

tuñjumbōdum tuṭrumbōdum solluvan un tiṟamē;

tañjam illāt dēvar vandu un tāḷiṇaikkīḻp paṇiya,

nañjai uṇḍāykku en seygēnō? nāḷum ninaindu, aḍiyēn

vañjam uṇḍu eṇḍru añjugiṇḍrēn valivalam mēyavanē.


pāḍal eṇ : 6

"puri-saḍaiyāy; puṇṇiyanē; naṇṇalār mūveyilum

eriya eydāy; emberumān" eṇḍru imaiyōr paravum

kariyuriyāy; kāla-kālā; nīla-maṇi miḍaṭru

variyaravā; vandu nalgāy valivalam mēyavanē.


pāḍal eṇ : 7

tāyum nīyē; tandai nīyē; saṅgaranē; aḍiyēn

āyum ninbāl anbu-seyvān ādarikkiṇḍradu uḷḷam;

āyam āya kāyandannuḷ aivar niṇḍru oṇḍral oṭṭār;

māyamē eṇḍru añjugiṇḍrēn; valivalam mēyavanē.


pāḍal eṇ : 8

nīr oḍuṅgum señjaḍaiyāy; ninnuḍaiya pon-malaiyai

vēroḍum pīḻndu ēndal-uṭra vēndan irāvaṇanait

tēroḍum pōy vīḻndu alaṟat tiruviralāl aḍartta

vār oḍuṅgum koṅgai-paṅgā; valivalam mēyavanē.


pāḍal eṇ : 9

ādi āya nānmuganum mālum aṟivu-ariya

sōdiyānē; nīdi illēn; solluvan nin tiṟamē;

ōdi nāḷum unnai ēttum ennai vinai avalam

vādiyāmē vandu nalgāy valivalam mēyavanē.


pāḍal eṇ : 10

podiyilānē; pūvaṇattāy; pon tigaḻum kayilaip

padi ilānē; pattar sittam paṭru viḍādavanē;

vidi ilādār veñjamaṇar sākkiyar eṇḍrivargaḷ

madi ilādār en seyvārō? valivalam mēyavanē.


pāḍal eṇ : 11

vanni koṇḍrai mattam sūḍum valivalam mēyavanaip

ponni-nāḍan pugali-vēndan ñāna-sambandan sonna

pannu-pāḍal pattum vallār meyttavattōr virumbum

mannu-sōdi īsanōḍē manni iruppārē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)



# 2413 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 515

मल्लल् नीडिय वलिवलम् कोळिलि मुदलाम्

तॊल्लै नान्मऱै मुदल्वर्दम् पदि पल तॊऴुदे,

ऎल्लै-इल् तिरुप्पदिगङ्गळाल् पणिन्दु एत्ति,

अल्लल् तीर्प्पवर् मीण्डुम् आरूर् तॊऴ अणैन्दार्.


सम्बन्दर् तेवारम् - पदिगम् 1.50 – तिरुवलिवलम् - (पण् - पऴन्दक्करागम्)

(तनन ताना - तनन ताना - तनदन तानदना - Rhythm)

पाडल् ऎण् : 1

ऒल्लै आऱि, उळ्ळम् ऒण्ड्रिक्, कळ्ळम् ऒऴिन्दु, वॆय्य

सॊल्लै आऱित्, तूय्मै सॆय्दु काम-विनै अगट्रि,

नल्लवाऱे उण्ड्रन् नामम् नाविल् नविण्ड्रु-एत्त

वल्लवाऱे, वन्दु नल्गाय् वलिवलम् मेयवने.


पाडल् ऎण् : 2

इयङ्गुगिण्ड्र इरवि तिङ्गळ् मट्रु(म्) नल् देवर्-ऎल्लाम्

बयङ्गळाले पट्रि निन्बाल् सित्तम् तॆळिगिण्ड्रिलर्;

तयङ्गु सोदी; सामवेदा; कामनैक् काय्न्दवने;

मयङ्गुगिण्ड्रेन्; वन्दु नल्गाय् वलिवलम् मेयवने.


पाडल् ऎण् : 3

पॆण्डिर् मक्कळ् सुट्रम् ऎन्नुम् पेदैप् पॆरुङ्गडलै

विण्डु पण्डे वाऴ-माट्टेन्; वेदनै नोय् नलियक्

कण्डु-कण्डे उण्ड्रन् नामम् कादलिक्किण्ड्रदु उळ्ळम्;

वण्डु किण्डिप् पाडुम् सोलै वलिवलम् मेयवने.


पाडल् ऎण् : 4

मॆय्यर् आगिप् पॊय्यै नीक्कि, वेदनैयैत् तुऱन्दु,

सॆय्यर् आनार् सिन्दैयाने; देवर्-कुलक् कॊऴुन्दे;

नैवन् नायेन्, उण्ड्रन् नामम् नाळुम् नविट्रुगिण्ड्रेन्;

वैयम् मुन्ने वन्दु नल्गाय् वलिवलम् मेयवने.


पाडल् ऎण् : 5

तुञ्जुम्बोदुम् तुट्रुम्बोदुम् सॊल्लुवन् उन् तिऱमे;

तञ्जम् इल्लात् देवर् वन्दु उन् ताळिणैक्कीऴ्प् पणिय,

नञ्जै उण्डाय्क्कु ऎन् सॆय्गेनो? नाळुम् निनैन्दु, अडियेन्

वञ्जम् उण्डु ऎण्ड्रु अञ्जुगिण्ड्रेन् वलिवलम् मेयवने.


पाडल् ऎण् : 6

"पुरि-सडैयाय्; पुण्णियने; नण्णलार् मूवॆयिलुम्

ऎरिय ऎय्दाय्; ऎम्बॆरुमान्" ऎण्ड्रु इमैयोर् परवुम्

करियुरियाय्; काल-काला; नील-मणि मिडट्रु

वरियरवा; वन्दु नल्गाय् वलिवलम् मेयवने.


पाडल् ऎण् : 7

तायुम् नीये; तन्दै नीये; सङ्गरने; अडियेन्

आयुम् निन्बाल् अन्बु-सॆय्वान् आदरिक्किण्ड्रदु उळ्ळम्;

आयम् आय कायन्दन्नुळ् ऐवर् निण्ड्रु ऒण्ड्रल् ऒट्टार्;

मायमे ऎण्ड्रु अञ्जुगिण्ड्रेन्; वलिवलम् मेयवने.


पाडल् ऎण् : 8

नीर् ऒडुङ्गुम् सॆञ्जडैयाय्; निन्नुडैय पॊन्-मलैयै

वेरॊडुम् पीऴ्न्दु एन्दल्-उट्र वेन्दन् इरावणनैत्

तेरॊडुम् पोय् वीऴ्न्दु अलऱत् तिरुविरलाल् अडर्त्त

वार् ऒडुङ्गुम् कॊङ्गै-पङ्गा; वलिवलम् मेयवने.


पाडल् ऎण् : 9

आदि आय नान्मुगनुम् मालुम् अऱिवु-अरिय

सोदियाने; नीदि इल्लेन्; सॊल्लुवन् निन् तिऱमे;

ओदि नाळुम् उन्नै एत्तुम् ऎन्नै विनै अवलम्

वादियामे वन्दु नल्गाय् वलिवलम् मेयवने.


पाडल् ऎण् : 10

पॊदियिलाने; पूवणत्ताय्; पॊन् तिगऴुम् कयिलैप्

पदि इलाने; पत्तर् सित्तम् पट्रु विडादवने;

विदि इलादार् वॆञ्जमणर् साक्कियर् ऎण्ड्रिवर्गळ्

मदि इलादार् ऎन् सॆय्वारो? वलिवलम् मेयवने.


पाडल् ऎण् : 11

वन्नि कॊण्ड्रै मत्तम् सूडुम् वलिवलम् मेयवनैप्

पॊन्नि-नाडन् पुगलि-वेन्दन् ञान-सम्बन्दन् सॊन्न

पन्नु-पाडल् पत्तुम् वल्लार् मॆय्त्तवत्तोर् विरुम्बुम्

मन्नु-सोदि ईसनोडे मन्नि इरुप्पारे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

# 2413 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 515

మల్లల్ నీడియ వలివలం కోళిలి ముదలాం

తొల్లై నాన్మఱై ముదల్వర్దం పది పల తొఴుదే,

ఎల్లై-ఇల్ తిరుప్పదిగంగళాల్ పణిందు ఏత్తి,

అల్లల్ తీర్ప్పవర్ మీండుం ఆరూర్ తొఴ అణైందార్.


సంబందర్ తేవారం - పదిగం 1.50 – తిరువలివలం - (పణ్ - పఴందక్కరాగం)

(తనన తానా - తనన తానా - తనదన తానదనా - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

ఒల్లై ఆఱి, ఉళ్ళం ఒండ్రిక్, కళ్ళం ఒఴిందు, వెయ్య

సొల్లై ఆఱిత్, తూయ్మై సెయ్దు కామ-వినై అగట్రి,

నల్లవాఱే ఉండ్రన్ నామం నావిల్ నవిండ్రు-ఏత్త

వల్లవాఱే, వందు నల్గాయ్ వలివలం మేయవనే.


పాడల్ ఎణ్ : 2

ఇయంగుగిండ్ర ఇరవి తింగళ్ మట్రు(మ్) నల్ దేవర్-ఎల్లాం

బయంగళాలే పట్రి నిన్బాల్ సిత్తం తెళిగిండ్రిలర్;

తయంగు సోదీ; సామవేదా; కామనైక్ కాయ్న్దవనే;

మయంగుగిండ్రేన్; వందు నల్గాయ్ వలివలం మేయవనే.


పాడల్ ఎణ్ : 3

పెండిర్ మక్కళ్ సుట్రం ఎన్నుం పేదైప్ పెరుంగడలై

విండు పండే వాఴ-మాట్టేన్; వేదనై నోయ్ నలియక్

కండు-కండే ఉండ్రన్ నామం కాదలిక్కిండ్రదు ఉళ్ళం;

వండు కిండిప్ పాడుం సోలై వలివలం మేయవనే.


పాడల్ ఎణ్ : 4

మెయ్యర్ ఆగిప్ పొయ్యై నీక్కి, వేదనైయైత్ తుఱందు,

సెయ్యర్ ఆనార్ సిందైయానే; దేవర్-కులక్ కొఴుందే;

నైవన్ నాయేన్, ఉండ్రన్ నామం నాళుం నవిట్రుగిండ్రేన్;

వైయం మున్నే వందు నల్గాయ్ వలివలం మేయవనే.


పాడల్ ఎణ్ : 5

తుంజుంబోదుం తుట్రుంబోదుం సొల్లువన్ ఉన్ తిఱమే;

తంజం ఇల్లాత్ దేవర్ వందు ఉన్ తాళిణైక్కీఴ్ప్ పణియ,

నంజై ఉండాయ్క్కు ఎన్ సెయ్గేనో? నాళుం నినైందు, అడియేన్

వంజం ఉండు ఎండ్రు అంజుగిండ్రేన్ వలివలం మేయవనే.


పాడల్ ఎణ్ : 6

"పురి-సడైయాయ్; పుణ్ణియనే; నణ్ణలార్ మూవెయిలుం

ఎరియ ఎయ్దాయ్; ఎంబెరుమాన్" ఎండ్రు ఇమైయోర్ పరవుం

కరియురియాయ్; కాల-కాలా; నీల-మణి మిడట్రు

వరియరవా; వందు నల్గాయ్ వలివలం మేయవనే.


పాడల్ ఎణ్ : 7

తాయుం నీయే; తందై నీయే; సంగరనే; అడియేన్

ఆయుం నిన్బాల్ అన్బు-సెయ్వాన్ ఆదరిక్కిండ్రదు ఉళ్ళం;

ఆయం ఆయ కాయందన్నుళ్ ఐవర్ నిండ్రు ఒండ్రల్ ఒట్టార్;

మాయమే ఎండ్రు అంజుగిండ్రేన్; వలివలం మేయవనే.


పాడల్ ఎణ్ : 8

నీర్ ఒడుంగుం సెంజడైయాయ్; నిన్నుడైయ పొన్-మలైయై

వేరొడుం పీఴ్న్దు ఏందల్-ఉట్ర వేందన్ ఇరావణనైత్

తేరొడుం పోయ్ వీఴ్న్దు అలఱత్ తిరువిరలాల్ అడర్త్త

వార్ ఒడుంగుం కొంగై-పంగా; వలివలం మేయవనే.


పాడల్ ఎణ్ : 9

ఆది ఆయ నాన్ముగనుం మాలుం అఱివు-అరియ

సోదియానే; నీది ఇల్లేన్; సొల్లువన్ నిన్ తిఱమే;

ఓది నాళుం ఉన్నై ఏత్తుం ఎన్నై వినై అవలం

వాదియామే వందు నల్గాయ్ వలివలం మేయవనే.


పాడల్ ఎణ్ : 10

పొదియిలానే; పూవణత్తాయ్; పొన్ తిగఴుం కయిలైప్

పది ఇలానే; పత్తర్ సిత్తం పట్రు విడాదవనే;

విది ఇలాదార్ వెంజమణర్ సాక్కియర్ ఎండ్రివర్గళ్

మది ఇలాదార్ ఎన్ సెయ్వారో? వలివలం మేయవనే.


పాడల్ ఎణ్ : 11

వన్ని కొండ్రై మత్తం సూడుం వలివలం మేయవనైప్

పొన్ని-నాడన్ పుగలి-వేందన్ ఞాన-సంబందన్ సొన్న

పన్ను-పాడల్ పత్తుం వల్లార్ మెయ్త్తవత్తోర్ విరుంబుం

మన్ను-సోది ఈసనోడే మన్ని ఇరుప్పారే.

================ ============