Pages

Monday, March 15, 2021

4.63 - ஓதிமா மலர்கள் - திருவண்ணாமலை - ōdi mā malargaḷ - tiruvaṇṇāmalai

84) 4.63 – ஓதிமா மலர்கள் - அண்ணாமலை - ōdi mā malargaḷ - aṇṇāmalai

திருநாவுக்கரசர் தேவாரம் - 4.63 – ஓதிமா மலர்கள் - அண்ணாமலை - (திருநேரிசை)

tirunāvukkarasr tēvāram - 4.63 – ōdi mā malargaḷ - aṇṇāmalai - (tirunērisai)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1NDsFs-r-dTeh5HNI87896Cs8rV9DvLD8/view?usp=sharing

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/FtFTwn9GRv0

Part-2: https://youtu.be/hTCkhxZ3rMY

===============

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


அண்ணாமலை (திருவண்ணாமலை) : ஐம்பூதத்தலங்களுள் அக்கினித் தலம்.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.63 – ண்ணாமலை - (திருநேரிசை)

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா விளம் மா தேமா - meter)

பாடல் எண் : 1

ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க

சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே

ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே

நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.


பாடல் எண் : 2

பண்டனை வென்ற வின்சொற் பாவையோர் பங்க நீல

கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா

அண்டனே யமரர் கோவே யணியணா மலை யுளானே

தொண்டனே னுன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.


பாடல் எண் : 3

உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்

பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க

அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே

மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.


பாடல் எண் : 4

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய் **

செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க

அம்பொனே கொழித்து வீழு மணியணா மலையு ளானே

என்பொனே யுன்னை யல்லா லேதுநா னினைவி லேனே.

(** Variant reading - seen in Dharmapuram Adheenam edition - பால்வெண் ணீறா )

பாடல் எண் : 5

பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா

மறைவலா விறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா

அறைகழ லமர ரேத்து மணியணா மலையு ளானே

இறைவனே யுன்னை யல்லால் யாதுநா னினைவி லேனே.


பாடல் எண் : 6

புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்

கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா

அரிகுல மலிந்த வண்ணா மலையுளா யலரின் மிக்க

வரிமிகு வண்டு பண்செய் பாதநான் மறப்பி லேனே.

பாடல் எண் : 7

இரவியு மதியும் விண்ணு மிருநிலம் புனலுங் காற்றும்

உரகமார் பவன மெட்டுந் திசையொளி யுருவ மானாய்

அரவுமிழ் மணிகொள் சோதி யணியணா மலையு ளானே

பரவுநின் பாத மல்லாற் பரமநான் பற்றி லேனே.


பாடல் எண் : 8

பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை யீந்தாய்

நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்

ஆர்த்துவந் தீண்டு கொண்ட லணியணா மலையு ளானே

தீர்த்தனே நின்றன் பாதத் திறமலாற் றிறமி லேனே.


பாடல் எண் : 9

பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே

மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையு ணின்றாய்

ஆலுநீர் கொண்டல் பூக மணியணா மலையு ளானே

வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே.


பாடல் எண் : 10

இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த வெம்மான்

உரத்தினால் வரையை யூக்க வொருவிர னுதியி னாலே

அரக்கனை நெரித்த வண்ணா மலையுளா யமர ரேறே

சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே.

==================

Word separated version:


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.63 – ண்ணாமலை - (திருநேரிசை)

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா விளம் மா தேமா - meter)

பாடல் எண் : 1

ஓதி மா மலர்கள் தூவி, உமையவள் பங்கா, மிக்க

சோதியே, துளங்கும் எண்-தோள் சுடர்-மழுப் படையினானே,

ஆதியே, அமரர் கோவே, அணி அணாமலை உளானே,

நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே.


பாடல் எண் : 2

பண்-தனை வென்ற இன்-சொல் பாவை ஓர் பங்க; நீல

கண்டனே; கார்கொள் கொன்றைக் கடவுளே; கமல பாதா;

அண்டனே; அமரர் கோவே; அணி அணாமலை உளானே;

தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே.


பாடல் எண் : 3

உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கெல்லாம்

பெரு-வினை பிறப்பு வீடாய் நின்ற எம் பெருமான்; மிக்க

அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய்; அண்டர் கோவே;

மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே.


பாடல் எண் : 4

பைம்பொனே; பவளக் குன்றே; பரமனே; பால்-வெண்ணீற்றாய்; **

செம்பொனே; மலர்-செய் பாதா; சீர்தரு மணியே; மிக்க

அம்பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே;

என்பொனே; உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே.

(** Variant reading - seen in Dharmapuram Adheenam edition - பால்வெண் ணீறா )

பாடல் எண் : 5

பிறை அணி முடியினானே; பிஞ்ஞகா; பெண் ஓர் பாகா;

மறைவலா; இறைவா; வண்டு ஆர் கொன்றையாய்; வாமதேவா;

அறை-கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே;

இறைவனே; உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.


பாடல் எண் : 6

புரி-சடை முடியின்மேல் ஓர் பொரு-புனல் கங்கை வைத்துக்,

கரி-உரி போர்வையாகக் கருதிய கால காலா;

அரி-குலம் மலிந்த அண்ணாமலை உளாய்; அலரின் மிக்க,

வரி-மிகு வண்டு பண்-செய் பாதம் நான் மறப்பு இலேனே.

பாடல் எண் : 7

இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலும் காற்றும்

உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய்;

அரவு உமிழ் மணிகொள் சோதி அணி அணாமலை உளானே;

பரவும் நின் பாதம் அல்லால், பரம, நான் பற்று இலேனே.


பாடல் எண் : 8

பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசு-பதத்தை ஈந்தாய்;

நீர்த் ததும்பு உலாவு கங்கை நெடு-முடி நிலாவ வைத்தாய்;

ஆர்த்து-வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே;

தீர்த்தனே; நின்றன் பாதத் திறம் அலால் திறம் இலேனே.


பாடல் எண் : 9

பாலும் நெய் முதலாம் மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே;

மாலும் நான்முகனும் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்;

ஆலும் நீர், கொண்டல், பூகம் அணி அணாமலை உளானே;

வாலுடை விடையாய்; உன்றன் மலரடி மறப்பு இலேனே.


பாடல் எண் : 10

இரக்கம் ஒன்று யாதும் இல்லாக் காலனைக் கடிந்த எம்மான்;

உரத்தினால் வரையை ஊக்க, ஒரு விரல் நுதியினாலே

அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய்; அமரர்-ஏறே;

சிரத்தினால் வணங்கி ஏத்தித் திருவடி மறப்பு இலேனே.

===================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tirunāvukkarasar tēvāram - padigam 4.63 – aṇṇāmalai - (tirunērisai)

(aṟusīr viruttam - viḷam mā tēmā viḷam mā tēmā - meter)

pāḍal eṇ : 1

ōdi mā malargaḷ tūvi, umaiyavaḷ paṅgā, mikka

sōdiyē, tuḷaṅgum eṇ-tōḷ suḍar-maḻup paḍaiyinānē,

ādiyē, amarar kōvē, aṇi aṇāmalai uḷānē,

nīdiyāl ninnai allāl ninaiyumā ninaivu ilēnē.


pāḍal eṇ : 2

paṇ-tanai veṇḍra in-sol pāvai ōr paṅga; nīla

kaṇḍanē; kārgoḷ koṇḍraik kaḍavuḷē; kamala pādā;

aṇḍanē; amarar kōvē; aṇi aṇāmalai uḷānē;

toṇḍanēn unnai allāl sollumā sol ilēnē.


pāḍal eṇ : 3

uruvamum uyirum āgi ōdiya ulagukkellām

peru-vinai piṟappu vīḍāy niṇḍra em perumān; mikka

aruvi pon soriyum aṇṇāmalai uḷāy; aṇḍar kōvē;

maruvi nin pādam allāl maṭru oru māḍu ilēnē.


pāḍal eṇ : 4

paimbonē; pavaḷak kuṇḍrē; paramanē; pāl-veṇṇīṭrāy; **

sembonē; malar-sey pādā; sīrdaru maṇiyē; mikka

ambonē koḻittu vīḻum aṇi aṇāmalai uḷānē;

enbonē; unnai allāl ēdum nān ninaivu ilēnē.

(** Variant reading - seen in Dharmapuram Adheenam edition - pālveṇ ṇīṟā )

pāḍal eṇ : 5

piṟai aṇi muḍiyinānē; piññagā; peṇ ōr pāgā;

maṟaivalā; iṟaivā; vaṇḍu ār koṇḍraiyāy; vāmadēvā;

aṟai-kaḻal amarar ēttum aṇi aṇāmalai uḷānē;

iṟaivanē; unnai allāl yādum nān ninaivu ilēnē.


pāḍal eṇ : 6

puri-saḍai muḍiyinmēl ōr poru-punal gaṅgai vaittuk,

kari-uri pōrvaiyāgak karudiya kāla kālā;

ari-kulam malinda aṇṇāmalai uḷāy; alarin mikka,

vari-migu vaṇḍu paṇ-sey pādam nān maṟappu ilēnē.

pāḍal eṇ : 7

iraviyum madiyum viṇṇum irunilam punalum kāṭrum

uragam ār pavanam eṭṭum disai oḷi uruvam ānāy;

aravu umiḻ maṇigoḷ sōdi aṇi aṇāmalai uḷānē;

paravum nin pādam allāl, parama, nān paṭru ilēnē.


pāḍal eṇ : 8

pārttanukku aṇḍru nalgip pāsu-padattai īndāy;

nīrt tadumbu ulāvu gaṅgai neḍu-muḍi nilāva vaittāy;

ārttu-vandu īṇḍu koṇḍal aṇi aṇāmalai uḷānē;

tīrttanē; niṇḍran pādat tiṟam alāl tiṟam ilēnē.


pāḍal eṇ : 9

pālum ney mudalām mikka pasuvil aindu āḍuvānē;

mālum nānmuganum kūḍik kāṇgilā vagaiyuḷ niṇḍrāy;

ālum nīr, koṇḍal, pūgam aṇi aṇāmalai uḷānē;

vāluḍai viḍaiyāy; uṇḍran malaraḍi maṟappu ilēnē.


pāḍal eṇ : 10

irakkam oṇḍru yādum illāk kālanaik kaḍinda emmān;

urattināl varaiyai ūkka, oru viral nudiyinālē

arakkanai neritta aṇṇāmalai uḷāy; amarar-ēṟē;

sirattināl vaṇaṅgi ēttit tiruvaḍi maṟappu ilēnē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.63 – अण्णामलै - (तिरुनेरिसै)

(अऱुसीर् विरुत्तम् - विळम् मा तेमा विळम् मा तेमा - meter)

पाडल् ऎण् : 1

ओदि मा मलर्गळ् तूवि, उमैयवळ् पङ्गा, मिक्क

सोदिये, तुळङ्गुम् ऎण्-तोळ् सुडर्-मऴुप् पडैयिनाने,

आदिये, अमरर् कोवे, अणि अणामलै उळाने,

नीदियाल् निन्नै अल्लाल् निनैयुमा निनैवु इलेने.


पाडल् ऎण् : 2

पण्-तनै वॆण्ड्र इन्-सॊल् पावै ओर् पङ्ग; नील

कण्डने; कार्गॊळ् कॊण्ड्रैक् कडवुळे; कमल पादा;

अण्डने; अमरर् कोवे; अणि अणामलै उळाने;

तॊण्डनेन् उन्नै अल्लाल् सॊल्लुमा सॊल् इलेने.


पाडल् ऎण् : 3

उरुवमुम् उयिरुम् आगि ओदिय उलगुक्कॆल्लाम्

पॆरु-विनै पिऱप्पु वीडाय् निण्ड्र ऎम् पॆरुमान्; मिक्क

अरुवि पॊन् सॊरियुम् अण्णामलै उळाय्; अण्डर् कोवे;

मरुवि निन् पादम् अल्लाल् मट्रु ऒरु माडु इलेने.


पाडल् ऎण् : 4

पैम्बॊने; पवळक् कुण्ड्रे; परमने; पाल्-वॆण्णीट्राय्; **

सॆम्बॊने; मलर्-सॆय् पादा; सीर्दरु मणिये; मिक्क

अम्बॊने कॊऴित्तु वीऴुम् अणि अणामलै उळाने;

ऎन्बॊने; उन्नै अल्लाल् एदुम् नान् निनैवु इलेने.

(** Variant reading - seen in Dharmapuram Adheenam edition - पाल्वॆण् णीऱा )

पाडल् ऎण् : 5

पिऱै अणि मुडियिनाने; पिञ्ञगा; पॆण् ओर् पागा;

मऱैवला; इऱैवा; वण्डु आर् कॊण्ड्रैयाय्; वामदेवा;

अऱै-कऴल् अमरर् एत्तुम् अणि अणामलै उळाने;

इऱैवने; उन्नै अल्लाल् यादुम् नान् निनैवु इलेने.


पाडल् ऎण् : 6

पुरि-सडै मुडियिन्मेल् ओर् पॊरु-पुनल् गङ्गै वैत्तुक्,

करि-उरि पोर्वैयागक् करुदिय काल काला;

अरि-कुलम् मलिन्द अण्णामलै उळाय्; अलरिन् मिक्क,

वरि-मिगु वण्डु पण्-सॆय् पादम् नान् मऱप्पु इलेने.

पाडल् ऎण् : 7

इरवियुम् मदियुम् विण्णुम् इरुनिलम् पुनलुम् काट्रुम्

उरगम् आर् पवनम् ऎट्टुम् दिसै ऒळि उरुवम् आनाय्;

अरवु उमिऴ् मणिगॊळ् सोदि अणि अणामलै उळाने;

परवुम् निन् पादम् अल्लाल्, परम, नान् पट्रु इलेने.


पाडल् ऎण् : 8

पार्त्तनुक्कु अण्ड्रु नल्गिप् पासु-पदत्तै ईन्दाय्;

नीर्त् तदुम्बु उलावु गङ्गै नॆडु-मुडि निलाव वैत्ताय्;

आर्त्तु-वन्दु ईण्डु कॊण्डल् अणि अणामलै उळाने;

तीर्त्तने; निण्ड्रन् पादत् तिऱम् अलाल् तिऱम् इलेने.


पाडल् ऎण् : 9

पालुम् नॆय् मुदलाम् मिक्क पसुविल् ऐन्दु आडुवाने;

मालुम् नान्मुगनुम् कूडिक् काण्गिला वगैयुळ् निण्ड्राय्;

आलुम् नीर्, कॊण्डल्, पूगम् अणि अणामलै उळाने;

वालुडै विडैयाय्; उण्ड्रन् मलरडि मऱप्पु इलेने.


पाडल् ऎण् : 10

इरक्कम् ऒण्ड्रु यादुम् इल्लाक् कालनैक् कडिन्द ऎम्मान्;

उरत्तिनाल् वरैयै ऊक्क, ऒरु विरल् नुदियिनाले

अरक्कनै नॆरित्त अण्णामलै उळाय्; अमरर्-एऱे;

सिरत्तिनाल् वणङ्गि एत्तित् तिरुवडि मऱप्पु इलेने.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.63 – అణ్ణామలై - (తిరునేరిసై)

(అఱుసీర్ విరుత్తం - విళం మా తేమా విళం మా తేమా - meter)

పాడల్ ఎణ్ : 1

ఓది మా మలర్గళ్ తూవి, ఉమైయవళ్ పంగా, మిక్క

సోదియే, తుళంగుం ఎణ్-తోళ్ సుడర్-మఴుప్ పడైయినానే,

ఆదియే, అమరర్ కోవే, అణి అణామలై ఉళానే,

నీదియాల్ నిన్నై అల్లాల్ నినైయుమా నినైవు ఇలేనే.


పాడల్ ఎణ్ : 2

పణ్-తనై వెండ్ర ఇన్-సొల్ పావై ఓర్ పంగ; నీల

కండనే; కార్గొళ్ కొండ్రైక్ కడవుళే; కమల పాదా;

అండనే; అమరర్ కోవే; అణి అణామలై ఉళానే;

తొండనేన్ ఉన్నై అల్లాల్ సొల్లుమా సొల్ ఇలేనే.


పాడల్ ఎణ్ : 3

ఉరువముం ఉయిరుం ఆగి ఓదియ ఉలగుక్కెల్లాం

పెరు-వినై పిఱప్పు వీడాయ్ నిండ్ర ఎం పెరుమాన్; మిక్క

అరువి పొన్ సొరియుం అణ్ణామలై ఉళాయ్; అండర్ కోవే;

మరువి నిన్ పాదం అల్లాల్ మట్రు ఒరు మాడు ఇలేనే.


పాడల్ ఎణ్ : 4

పైంబొనే; పవళక్ కుండ్రే; పరమనే; పాల్-వెణ్ణీట్రాయ్; **

సెంబొనే; మలర్-సెయ్ పాదా; సీర్దరు మణియే; మిక్క

అంబొనే కొఴిత్తు వీఴుం అణి అణామలై ఉళానే;

ఎన్బొనే; ఉన్నై అల్లాల్ ఏదుం నాన్ నినైవు ఇలేనే.

(** Variant reading - seen in Dharmapuram Adheenam edition - పాల్వెణ్ ణీఱా )

పాడల్ ఎణ్ : 5

పిఱై అణి ముడియినానే; పిఞ్ఞగా; పెణ్ ఓర్ పాగా;

మఱైవలా; ఇఱైవా; వండు ఆర్ కొండ్రైయాయ్; వామదేవా;

అఱై-కఴల్ అమరర్ ఏత్తుం అణి అణామలై ఉళానే;

ఇఱైవనే; ఉన్నై అల్లాల్ యాదుం నాన్ నినైవు ఇలేనే.


పాడల్ ఎణ్ : 6

పురి-సడై ముడియిన్మేల్ ఓర్ పొరు-పునల్ గంగై వైత్తుక్,

కరి-ఉరి పోర్వైయాగక్ కరుదియ కాల కాలా;

అరి-కులం మలింద అణ్ణామలై ఉళాయ్; అలరిన్ మిక్క,

వరి-మిగు వండు పణ్-సెయ్ పాదం నాన్ మఱప్పు ఇలేనే.

పాడల్ ఎణ్ : 7

ఇరవియుం మదియుం విణ్ణుం ఇరునిలం పునలుం కాట్రుం

ఉరగం ఆర్ పవనం ఎట్టుం దిసై ఒళి ఉరువం ఆనాయ్;

అరవు ఉమిఴ్ మణిగొళ్ సోది అణి అణామలై ఉళానే;

పరవుం నిన్ పాదం అల్లాల్, పరమ, నాన్ పట్రు ఇలేనే.


పాడల్ ఎణ్ : 8

పార్త్తనుక్కు అండ్రు నల్గిప్ పాసు-పదత్తై ఈందాయ్;

నీర్త్ తదుంబు ఉలావు గంగై నెడు-ముడి నిలావ వైత్తాయ్;

ఆర్త్తు-వందు ఈండు కొండల్ అణి అణామలై ఉళానే;

తీర్త్తనే; నిండ్రన్ పాదత్ తిఱం అలాల్ తిఱం ఇలేనే.


పాడల్ ఎణ్ : 9

పాలుం నెయ్ ముదలాం మిక్క పసువిల్ ఐందు ఆడువానే;

మాలుం నాన్ముగనుం కూడిక్ కాణ్గిలా వగైయుళ్ నిండ్రాయ్;

ఆలుం నీర్, కొండల్, పూగం అణి అణామలై ఉళానే;

వాలుడై విడైయాయ్; ఉండ్రన్ మలరడి మఱప్పు ఇలేనే.


పాడల్ ఎణ్ : 10

ఇరక్కం ఒండ్రు యాదుం ఇల్లాక్ కాలనైక్ కడింద ఎమ్మాన్;

ఉరత్తినాల్ వరైయై ఊక్క, ఒరు విరల్ నుదియినాలే

అరక్కనై నెరిత్త అణ్ణామలై ఉళాయ్; అమరర్-ఏఱే;

సిరత్తినాల్ వణంగి ఏత్తిత్ తిరువడి మఱప్పు ఇలేనే.

================ ============