Pages

Saturday, April 7, 2018

2.79 – திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய் - thiruvArUr - pavanamAyc cOdaiyAy

51) 2.79திருவாரூர் ( பண் - காந்தாரம் ) - tiruvārūr ( paṇ - kāndāram )
சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
2.79 – பவனமாய்ச் சோடையாய்
2.79 – pavanamAyc cOdaiyAy

Here are the links to verses and audio of this padhigam's discussion:
******
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/LHhhB51_Nus
Part-2: https://youtu.be/mfqLpIk3r0g
******
English translation – by V.M.Subramanya Ayyar:   http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_079.HTM

V. Subramanian
======================


This has verses in Tamil, English, and Nagari scripts. Please print the pages you need.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.79 – திருவாரூர் ( பண் - காந்தாரம் )

Background:
பதிக வரலாறு :
திருவாரூரில் புற்றிடங்கொண்ட நாதரை வழிபட்டுத் திருஞானசம்பந்தர் அங்குத் தங்கியிருந்தார். பிறகு, திருப்புகலூரில் தங்கியிருந்த திருநாவுக்கரசரைக் காண விரும்பித் திருவாரூரிலிருந்து புறப்பட்டார். திருவாரூரை நீங்கி வயல்வெளியை அடைந்தபின் அங்கிருந்து ஆரூரையே நோக்கி நின்றார். திருவாரூரிலிருந்து விடைபெறும் முன், உள்ளத்திற்கு அறிவுரையாக, "நெஞ்சமே ! நீ அஞ்சாதே. மறவாமல் திருவாரூரைத் தொழுது உய்வாக" என்று இப்பதிகம் பாடியருளினார்.

----------
#2416 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 518
புவனவா ரூரினிற் புறம்புபோந் ததனையே நோக்கி நின்றே
"அவமிலா நெஞ்சமே யஞ்சனீ யுய்யுமா றறிதி யன்றே
சிவனதா ரூர்தொழாய் நீமற வா"தென்று செங்கை கூப்பிப்
"பவனமாய்ச் சோடையா" யெனுந்திருப் பதிகமுன் பாடி னாரே.
("தொழாய் நீ" ---> CKS பெரியபுராண உரைநூலில் - பாடபேதம் - “தொழ னீ”)

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.79 – திருவாரூர் ( பண் - காந்தாரம் )
("தானனா தானனா தானனா தானனா தான தான" - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு
சிவனதாள் சிந்தியாப் பேதைமார் போலநீ வெள்கி னாயே
கவனமாய்ப் பாய்வதோ ரேறுகந் தேறிய காள கண்டன்
அவனதா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பாடல் எண் : 2
தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியா லேழை நெஞ்சே
அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பாடல் எண் : 3
நிணங்குடர் தோனரம் பென்புசே ராக்கைதா னிலாய தன்றால்
குணங்களார்க் கல்லது குற்றநீங் காதெனக் குலுங்கி னாயே
வணங்குவார் வானவர் தானவர் வைகலு மனங்கொ டேத்தும்
அணங்கனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பாடல் எண் : 4
நீதியால் வாழ்கிலை நாள்செலா நின்றன நித்த நோய்கள்
வாதியா வாதலா னாளுநா ளின்பமே மருவி னாயே
சாதியார் கின்னரர் தருமனும் வருணனு மேத்து முக்கண்
ஆதியா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.
("வருணனும்" -- தருமை ஆதீன நூலில் பாடபேதம் - "வருணர்கள்")

பாடல் எண் : 5
பிறவியால் வருவன கேடுள வாதலாற் பெரிய வின்பத்
துறவியார்க் கல்லது துன்பநீங் காதெனத் தூங்கி னாயே
மறவனீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பாடல் எண் : 6
செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த் தேரைவாய்ச் சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.
("ஆக்கையம் பாம்பின்" --> பாடபேதம் - "ஆக்கையைம் பாம்பின்")

பாடல் எண் : 7
ஏறுமால் யானையே சிவிகையந் தளகமீச் சோப்பி வட்டின்
மாறிவா ழுடம்பினார் படுவதோர் நடலைக்கு மயங்கி னாயே
மாறிலா வனமுலை மங்கையோர் பங்கினர் மதியம் வைத்த
ஆறனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பாடல் எண் : 8
என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந் திதுநம் மில்லம்
புன்புலா னாறுதோல் போர்த்துப்பொல் லாமையான் முகடு கொண்டு
முன்பெலா மொன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கி டாதே
அன்பனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பாடல் எண் : 9
தந்தைதாய் தன்னுடன் றோன்றினார் புத்திரர் தார மென்னும்
பந்தநீங் காதவர்க் குய்ந்துபோக் கில்லெனப் பற்றி னாயே
வெந்தநீ றாடியா ராதியார் சோதியார் வேத கீதர்
எந்தையா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பாடல் எண் : 10
நெடியமால் பிரமனு நீண்டுமண் ணிடந்தின்ன நேடிக் காணாப்
படியனார் பவளம்போல் உருவனார் பனிவளர் மலையாள் பாக
வடிவனார் மதிபொதி சடையனார் மணியணி கண்டத் தெண்டோள்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பாடல் எண் : 11
பல்லிதழ் மாதவி யல்லிவண் டியாழ்செயுங் காழி யூரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம் பந்த னாரூர்
எல்லியம் போதெரி யாடுமெம் மீசனை யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலா ரோதநீர் வைய கத்தே.

Word separated version:

#2416 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 518
புவன ஆரூரினில் புறம்பு போந்து அதனையே நோக்கி நின்றே,
"அவம் இலா நெஞ்சமே; அஞ்சல் நீ; உய்யுமாறு அறிதியன்றே;
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது" என்று செங்கை கூப்பிப்,
"பவனமாய்ச் சோடையாய்" எனும் திருப்-பதிகம் முன் பாடினாரே.
("தொழாய் நீ" ---> CKS பெரியபுராண உரைநூலில் - பாடபேதம் - “தொழல் நீ”)

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.79 – திருவாரூர் ( பண் - காந்தாரம் )
("தானனா தானனா தானனா தானனா தான தான" - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
பவனமாய்ச் சோடையாய் நா எழாப் பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு
சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல நீ வெள்கினாயே;
கவனமாய்ப் பாய்வதோர் ஏறு உகந்து ஏறிய காள-கண்டன்
அவனது ஆரூர் தொழுது உய்யலாம்; மையல்-கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் எண் : 2
தந்தையார் போயினார்; தாயரும் போயினார்; தாமும் போவார்;
கொந்த வேல்-கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார்; கொண்டு போவார்;
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால், ஏழை நெஞ்சே;
அந்தண் ஆரூர் தொழுது உய்யலாம்; மையல்-கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் எண் : 3
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது-அன்றால்;
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக் குலுங்கினாயே;
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனங்கொடு ஏத்தும்
அணங்கன் ஆரூர் தொழுது உய்யலாம்; மையல்-கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் எண் : 4
நீதியால் வாழ்கிலை; நாள் செலாநின்றன, நித்தம் நோய்கள்
வாதியா; ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே;
சாதியார் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்
ஆதி ஆரூர் தொழுது உய்யலாம்; மையல்-கொண்டு அஞ்சல் நெஞ்சே.
("வருணனும்" -- தருமை ஆதீன நூலில் பாடபேதம் - "வருணர்கள்")

பாடல் எண் : 5
பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்பத்
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே;
மறவல் நீ, மார்க்கமே நண்ணினாய்; தீர்த்த-நீர் மல்கு சென்னி
அறவன் ஆரூர் தொழுது உய்யலாம்; மையல்-கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் எண் : 6
செடிகொள் நோய் ஆக்கை-அம் பாம்பின்-வாய்த் தேரை-வாய்ச் சிறு பறவை
கடிகொள் பூந்தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே;
முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்து முக்கண்
அடிகள் ஆரூர் தொழுது உய்யலாம்; மையல்-கொண்டு அஞ்சல் நெஞ்சே.
("ஆக்கையம் பாம்பின்" --> பாடபேதம் - "ஆக்கையைம் பாம்பின்")

பாடல் எண் : 7
ஏறு மால் யானையே, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி, வட்டில்
மாறி வாழ் உடம்பினார் படுவதோர் நடலைக்கு மயங்கினாயே;
மாறு-இலா வன-முலை மங்கை ஓர் பங்கினர், மதியம் வைத்த
ஆறன் ஆரூர் தொழுது உய்யலாம்; மையல்-கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் எண் : 8
என்பினால் கழி நிரைத்து, இறைச்சி மண் சுவர் எறிந்திது நம் இல்லம்,
புன்-புலால் நாறு தோல் போர்த்துப், பொல்லாமையால் முகடு கொண்டு;
முன்பெலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே,
அன்பன் ஆரூர் தொழுது உய்யலாம்; மையல்-கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் எண் : 9
தந்தை, தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர், தாரம் என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து-போக்கு இல் எனப் பற்றினாயே;
வெந்த-நீறு ஆடியார், ஆதியார், சோதியார், வேதகீதர்,
எந்தை ஆரூர் தொழுது உய்யலாம்; மையல்-கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் எண் : 10
நெடிய-மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடிக் காணாப்
படியனார்; பவளம்போல் உருவனார்; பனி-வளர் மலையாள் பாக
வடிவனார்; மதி-பொதி சடையனார்; மணி-அணி கண்டத்து எண்-தோள்
அடிகள் ஆரூர் தொழுது உய்யலாம்; மையல்-கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் எண் : 11
பல்-இதழ் மாதவி அல்லி வண்டு யாழ்-செயும் காழி-ஊரன்,
நல்லவே நல்லவே சொல்லிய ஞான-சம்பந்தன் ஆரூர்
எல்லியம்போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீது-இலார் ஓத-நீர் வையகத்தே.

Word separated version:

2416 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 518
puvaṉa ārūriṉil puṟambu pōndu adaṉaiyē nōkki niṇḍrē,
"avam ilā neñjamē; añjal nī; uyyumāṟu aṟidiyaṇḍrē;
sivaṉadu ārūr toḻāy nī maṟavādu" eṇḍru seṅgai kūppip,
"pavaṉamāyc cōḍaiyāy" eṉum tirup-padigam muṉ pāḍiṉārē.
("toḻāy nī" --> in CKS book - pāḍabēdam - “toḻal nī”)

sambandar tēvāram - padigam 2.79 – tiruvārūr ( paṇ - kāndāram )
("tāṉaṉā tāṉaṉā tāṉaṉā tāṉaṉā tāṉa tāṉa" - eṇḍra sandam)
pāḍal eṇ : 1
pavaṉamāyc cōḍaiyāy nā eḻāp pañju tōyccu aṭṭa uṇḍu
sivaṉa tāḷ sindiyāp pēdaimār pōla nī veḷgiṉāyē;
kavaṉamāyp pāyvadōr ēṟu ugandu ēṟiya kāḷa-kaṇḍaṉ
avaṉadu ārūr toḻudu uyyalām; maiyal-koṇḍu añjal neñjē.

pāḍal eṇ : 2
tandaiyār pōyiṉār; tāyarum pōyiṉār; tāmum pōvār;
konda vēl-koṇḍu oru kūṭrattār pārkkiṇḍrār; koṇḍu pōvār;
enda nāḷ vāḻvadaṟkē maṉam vaittiyāl, ēḻai neñjē;
andaṇ ārūr toḻudu uyyalām; maiyal-koṇḍu añjal neñjē.

pāḍal eṇ : 3
niṇam kuḍar tōl narambu eṉbu sēr ākkaidāṉ nilāyadu-aṇḍrāl;
kuṇaṅgaḷārkku alladu kuṭram nīṅgādu eṉak kuluṅgiṉāyē;
vaṇaṅguvār vāṉavar tāṉavar vaigalum maṉaṅgoḍu ēttum
aṇaṅgaṉ ārūr toḻudu uyyalām; maiyal-koṇḍu añjal neñjē.

pāḍal eṇ : 4
nīdiyāl vāḻgilai; nāḷ selāniṇḍraṉa, nittam nōygaḷ
vādiyā; ādalāl nāḷum nāḷ iṉbamē maruviṉāyē;
sādiyār kiṉṉarar tarumaṉum varuṇaṉum ēttu mukkaṇ
ādi ārūr toḻudu uyyalām; maiyal-koṇḍu añjal neñjē.
("varuṇaṉum" --> pāḍabēdam - "varuṇargaḷ")

pāḍal eṇ : 5
piṟaviyāl varuvaṉa kēḍu uḷa ādalāl periya iṉbat
tuṟaviyārkku alladu tuṉbam nīṅgādu eṉat tūṅgiṉāyē;
maṟaval nī, mārkkamē naṇṇiṉāy; tīrtta-nīr malgu seṉṉi
aṟavaṉ ārūr toḻudu uyyalām; maiyal-koṇḍu añjal neñjē.

pāḍal eṇ : 6
seḍigoḷ nōy ākkai-am pāmbiṉ-vāyt tērai-vāyc ciṟu paṟavai
kaḍigoḷ pūndēṉ suvaittu iṉbuṟal ām eṇḍru karudiṉāyē;
muḍigaḷāl vāṉavar muṉ paṇindu aṉbarāy ēttu mukkaṇ
aḍigaḷ ārūr toḻudu uyyalām; maiyal-koṇḍu añjal neñjē.
("ākkaiyam pāmbiṉ" --> pāḍabēdam - "ākkaiyaim pāmbiṉ")

pāḍal eṇ : 7
ēṟu māl yāṉaiyē, sivigai, andaḷagam, īccōppi, vaṭṭil
māṟi vāḻ uḍambiṉār paḍuvadōr naḍalaikku mayaṅgiṉāyē;
māṟu-ilā vaṉa-mulai maṅgai ōr paṅgiṉar, madiyam vaitta
āṟaṉ ārūr toḻudu uyyalām; maiyal-koṇḍu añjal neñjē.

pāḍal eṇ : 8
eṉbiṉāl kaḻi niraittu, iṟaicci maṇ suvar eṟindidu nam illam,
puṉ-pulāl nāṟu tōl pōrttup, pollāmaiyāl mugaḍu koṇḍu;
muṉbelām oṉbadu vāydal ār kurambaiyil mūḻgiḍādē,
aṉbaṉ ārūr toḻudu uyyalām; maiyal-koṇḍu añjal neñjē.

pāḍal eṇ : 9
tandai, tāy, taṉṉuḍaṉ tōṇḍriṉār, puttirar, tāram eṉṉum
pandam nīṅgādavarkku uyndu-pōkku il eṉap paṭriṉāyē;
venda-nīṟu āḍiyār, ādiyār, sōdiyār, vēdagīdar,
endai ārūr toḻudu uyyalām; maiyal-koṇḍu añjal neñjē.

pāḍal eṇ : 10
neḍiya-māl piramaṉum nīṇḍu maṇ iḍandu iṉṉam nēḍik kāṇāp
paḍiyaṉār; pavaḷambōl uruvaṉār; paṉi-vaḷar malaiyāḷ pāga
vaḍivaṉār; madi-podi saḍaiyaṉār; maṇi-aṇi kaṇḍattu eṇ-tōḷ
aḍigaḷ ārūr toḻudu uyyalām; maiyal-koṇḍu añjal neñjē.

pāḍal eṇ : 11
pal-idaḻ mādavi alli vaṇḍu yāḻ-seyum kāḻi-ūraṉ,
nallavē nallavē solliya ñāṉa-sambandaṉ ārūr
elliyambōdu eri āḍum em īsaṉai ēttu pāḍal
sollavē vallavar tīdu-ilār ōda-nīr vaiyagattē.
================== ==========================
Word separated version:

२४१६ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ५१८
पुवऩ आरूरिऩिल् पुऱम्बु पोन्दु अदऩैये नोक्कि निण्ड्रे,
"अवम् इला नॆञ्जमे; अञ्जल् नी; उय्युमाऱु अऱिदियण्ड्रे;
सिवऩदु आरूर् तॊऴाय् नी मऱवादु" ऎण्ड्रु सॆङ्गै कूप्पिप्,
"पवऩमाय्च् चोडैयाय्" ऎऩुम् तिरुप्-पदिगम् मुऩ् पाडिऩारे.
("तॊऴाय् नी" ---> in CKS book - पाडबेदम् - “तॊऴल् नी”)

सम्बन्दर् तेवारम् - पदिगम् २.७९ – तिरुवारूर् ( पण् - कान्दारम् )
("ताऩऩा ताऩऩा ताऩऩा ताऩऩा ताऩ ताऩ" - ऎण्ड्र सन्दम्)
पाडल् ऎण् :
पवऩमाय्च् चोडैयाय् ना ऎऴाप् पञ्जु तोय्च्चु अट्ट उण्डु
सिवऩ ताळ् सिन्दियाप् पेदैमार् पोल नी वॆळ्गिऩाये;
कवऩमाय्प् पाय्वदोर् एऱु उगन्दु एऱिय काळ-कण्डऩ्
अवऩदु आरूर् तॊऴुदु उय्यलाम्; मैयल्-कॊण्डु अञ्जल् नॆञ्जे.

पाडल् ऎण् :
तन्दैयार् पोयिऩार्; तायरुम् पोयिऩार्; तामुम् पोवार्;
कॊन्द वेल्-कॊण्डु ऒरु कूट्रत्तार् पार्क्किण्ड्रार्; कॊण्डु पोवार्;
ऎन्द नाळ् वाऴ्वदऱ्के मऩम् वैत्तियाल्, एऴै नॆञ्जे;
अन्दण् आरूर् तॊऴुदु उय्यलाम्; मैयल्-कॊण्डु अञ्जल् नॆञ्जे.

पाडल् ऎण् :
निणम् कुडर् तोल् नरम्बु ऎऩ्बु सेर् आक्कैदाऩ् निलायदु-अण्ड्राल्;
कुणङ्गळार्क्कु अल्लदु कुट्रम् नीङ्गादु ऎऩक् कुलुङ्गिऩाये;
वणङ्गुवार् वाऩवर् ताऩवर् वैगलुम् मऩङ्गॊडु एत्तुम्
अणङ्गऩ् आरूर् तॊऴुदु उय्यलाम्; मैयल्-कॊण्डु अञ्जल् नॆञ्जे.

पाडल् ऎण् :
नीदियाल् वाऴ्गिलै; नाळ् सॆलानिण्ड्रऩ, नित्तम् नोय्गळ्
वादिया; आदलाल् नाळुम् नाळ् इऩ्बमे मरुविऩाये;
सादियार् किऩ्ऩरर् तरुमऩुम् वरुणऩुम् एत्तु मुक्कण्
आदि आरूर् तॊऴुदु उय्यलाम्; मैयल्-कॊण्डु अञ्जल् नॆञ्जे.
("वरुणऩुम्" --> पाडबेदम् - "वरुणर्गळ्")

पाडल् ऎण् :
पिऱवियाल् वरुवऩ केडु उळ आदलाल् पॆरिय इऩ्बत्
तुऱवियार्क्कु अल्लदु तुऩ्बम् नीङ्गादु ऎऩत् तूङ्गिऩाये;
मऱवल् नी, मार्क्कमे नण्णिऩाय्; तीर्त्त-नीर् मल्गु सॆऩ्ऩि
अऱवऩ् आरूर् तॊऴुदु उय्यलाम्; मैयल्-कॊण्डु अञ्जल् नॆञ्जे.

पाडल् ऎण् :
सॆडिगॊळ् नोय् आक्कै-अम् पाम्बिऩ्-वाय्त् तेरै-वाय्च् चिऱु पऱवै
कडिगॊळ् पून्देऩ् सुवैत्तु इऩ्बुऱल् आम् ऎण्ड्रु करुदिऩाये;
मुडिगळाल् वाऩवर् मुऩ् पणिन्दु अऩ्बराय् एत्तु मुक्कण्
अडिगळ् आरूर् तॊऴुदु उय्यलाम्; मैयल्-कॊण्डु अञ्जल् नॆञ्जे.
("आक्कैयम् पाम्बिऩ्" --> पाडबेदम् - "आक्कैयैम् पाम्बिऩ्")

पाडल् ऎण् :
एऱु माल् याऩैये, सिविगै, अन्दळगम्, ईच्चोप्पि, वट्टिल्
माऱि वाऴ् उडम्बिऩार् पडुवदोर् नडलैक्कु मयङ्गिऩाये;
माऱु-इला वऩ-मुलै मङ्गै ओर् पङ्गिऩर्, मदियम् वैत्त
आऱऩ् आरूर् तॊऴुदु उय्यलाम्; मैयल्-कॊण्डु अञ्जल् नॆञ्जे.

पाडल् ऎण् :
ऎऩ्बिऩाल् कऴि निरैत्तु, इऱैच्चि मण् सुवर् ऎऱिन्दिदु नम् इल्लम्,
पुऩ्-पुलाल् नाऱु तोल् पोर्त्तुप्, पॊल्लामैयाल् मुगडु कॊण्डु;
मुऩ्बॆलाम् ऒऩ्बदु वाय्दल् आर् कुरम्बैयिल् मूऴ्गिडादे,
अऩ्बऩ् आरूर् तॊऴुदु उय्यलाम्; मैयल्-कॊण्डु अञ्जल् नॆञ्जे.

पाडल् ऎण् :
तन्दै, ताय्, तऩ्ऩुडऩ् तोण्ड्रिऩार्, पुत्तिरर्, तारम् ऎऩ्ऩुम्
पन्दम् नीङ्गादवर्क्कु उय्न्दु-पोक्कु इल् ऎऩप् पट्रिऩाये;
वॆन्द-नीऱु आडियार्, आदियार्, सोदियार्, वेदगीदर्,
ऎन्दै आरूर् तॊऴुदु उय्यलाम्; मैयल्-कॊण्डु अञ्जल् नॆञ्जे.

पाडल् ऎण् : १०
नॆडिय-माल् पिरमऩुम् नीण्डु मण् इडन्दु इऩ्ऩम् नेडिक् काणाप्
पडियऩार्; पवळम्बोल् उरुवऩार्; पऩि-वळर् मलैयाळ् पाग
वडिवऩार्; मदि-पॊदि सडैयऩार्; मणि-अणि कण्डत्तु ऎण्-तोळ्
अडिगळ् आरूर् तॊऴुदु उय्यलाम्; मैयल्-कॊण्डु अञ्जल् नॆञ्जे.

पाडल् ऎण् : ११
पल्-इदऴ् मादवि अल्लि वण्डु याऴ्-सॆयुम् काऴि-ऊरऩ्,
नल्लवे नल्लवे सॊल्लिय ञाऩ-सम्बन्दऩ् आरूर्
ऎल्लियम्बोदु ऎरि आडुम् ऎम् ईसऩै एत्तु पाडल्
सॊल्लवे वल्लवर् तीदु-इलार् ओद-नीर् वैयगत्ते.
================ ============