181) 6.6 - அரவணையான் சிந்தித்து (திருவடித் திருத்தாண்டகம்) - aravaNaiyAn sindhiththu
திருநாவுக்கரசர் தேவாரம் - 6.6 - அரவணையான் சிந்தித்து - திருவதிகை - (திருவடித் திருத்தாண்டகம்)
tirunāvukkarasar tēvāram - 6.6 - aravaṇaiyān sindittu - tiruvadigai - (tiruvaḍit tiruttāṇḍagam)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1inkiT-jp5PoWaI8xq2uVxd-6aH5jvbY1/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1:
Part-2:
Part-3:
***
V.
Subramanian
================
Verses in Tamil, Roman (ISO 15919), Easy English, Devanagari, and Telugu scripts.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.6 – திருவதிகை - "திருவடித் திருத்தாண்டகம்"
Padhigam background:
திருநாவுக்கரசர் திருவதிகையில் பாடியருளிய பல பதிகங்களில் ஒன்று இது.
பாடல்தோறும் அடிதோறும் ஈசன் திருவடியைப் போற்றும் பதிகம். ஆதலால், "திருவடித் திருத்தாண்டகம்" என்ற சிறப்புப்பெயர் உடையது.
(ஈசன் திருவடியைச் சிறப்பித்துப் போற்றும் வேறு சில பதிகங்கள்:
4.92 - "சிந்திப் பரியன ... ... ஐயாறன் அடித்தலமே"
4.100 - "மன்னு மலைமகள் கையால் வருடின ... ... இன்னம்பரான்றன் இணையடியே")
--------
Thirunavukkarasar sang many padhigams and performed his holy service in Thiruvadhigai
# 1409 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 144
அரியயனுக் கரியானை யடியவருக் கெளியானை
விரிபுனல்சூழ் திருவதிகை வீரட்டா னத்தமுதைத்
தெரிவரிய பெருந்தகைமைத் திருநாவுக் கரசுமனம்
பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப் பலபாடிப் பணிசெயுநாள்,
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.6 – திருவதிகை - "திருவடித் திருத்தாண்டகம்"
அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
.. அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
.. சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
.. பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
.. திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
.. குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
.. பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
.. கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
.. நிறைகெடில வீரட்டம் நீங்காவடி.
வைதெழுவார் காமம்பொய் போகாவடி
.. வஞ்ச வலைப்பாடொன் றில்லாவடி
கைதொழுது நாமேத்திக் காணும்மடி
.. கணக்கு வழக்கைக் கடந்தவடி
நெய்தொழுது நாமேத்தி ஆட்டும்மடி
.. நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
தெய்வப் புனற்கெடில நாடன்னடி
.. திருவீரட் டானத் தெஞ் செல்வன்னடி.
(* For interpretation : நாம் தொழுது ஏத்தி, நெய் ஆட்டும் அடி)
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
.. அழகெழுத லாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
.. சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி
.. பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி
.. திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
ஒருகாலத் தொன்றாகி நின்றவடி
.. ஊழிதோ றூழி உயர்ந்தவடி
பொருகழலும் பல்சிலம்பும் மார்க்கும்மடி
.. புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
.. இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
.. திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
திருமகட்குச் செந்தா மரையாமடி
.. சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி
.. புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி
.. உருவென் றுணரப் படாதவடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
.. திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
உரைமாலை யெல்லா முடையவடி
.. உரையா லுணரப் படாதவடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
.. வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமாத் திரையி லடங்கும்மடி
.. அகலம் அளக்கிற்பா ரில்லாவடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
.. கமழ்வீரட்டானக் கபாலியடி.
நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி
.. நடுவா யுலகநா டாயவடி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி
.. தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும்மடி
.. மந்திரமுந் தந்திரமும் ஆயவடி
செறிகெடில நாடர் பெருமானடி
.. திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
(* உலக-நாடு = உலகம் + நாடு)
அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
.. யடியார்கட் காரமுத மாயவடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி
.. பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
.. மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
.. தகைசார்வீ ரட்டத் தலைவன்னடி.
அந்தா மரைப்போ தலர்ந்தவடி
.. அரக்கனையும் ஆற்ற லழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
.. முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
.. பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
.. வீரட்டங் காதல் விமலன்னடி.
=============================
Word separated version:
Thirunavukkarasar sang many padhigams and performed his holy service in Thiruvadhigai
# 1409 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 144
அரி-அயனுக்கு அரியானை, அடியவருக்கு எளியானை,
விரி-புனல்-சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத்,
தெரிவு-அரிய பெருந்தகைமைத் திருநாவுக்கரசு மனம்
பரிவு-உறு செந்தமிழ்ப்-பாட்டுப் பல பாடிப் பணிசெயும் நாள்,
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.6 – திருவதிகை - "திருவடித் திருத்தாண்டகம்"
அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி;
.. அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி;
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி;
.. சார்ந்தார்கட்கு-எல்லாம் சரண் ஆம் அடி;
பரவுவார் பாவம் பறைக்கும் அடி;
.. பதினெண்-கணங்களும் பாடும் அடி;
திரை விரவு தென்-கெடில நாடன் அடி;
.. திரு-வீரட்டானத்து எம் செல்வன் அடி.
கொடு-வினையார் என்றும் குறுகா அடி;
.. குறைந்து-அடைந்தார் ஆழாமைக் காக்கும் அடி;
படு-முழவம் பாணி பயிற்றும் அடி;
.. பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்த அடி;
கடு-முரண்-ஏறு ஊர்ந்தான் கழற்சேவடி;
.. கடல்-வையம் காப்பான் கருதும் அடி;
நெடு-மதியம் கண்ணி அணிந்தான் அடி;
.. நிறை-கெடில வீரட்டம் நீங்கா அடி.
வைது-எழுவார் காமம் பொய் போகா அடி;
.. வஞ்ச-வலைப்பாடு ஒன்று-இல்லா அடி;
கைதொழுது நாம் ஏத்திக் காணும் அடி;
.. கணக்கு-வழக்கைக் கடந்த அடி;
நெய், தொழுது நாம் ஏத்தி, ஆட்டும் அடி; *
.. நீள்-விசும்பை ஊடறுத்து நின்ற அடி;
தெய்வப் புனற்-கெடில நாடன் அடி;
.. திரு-வீரட்டானத்து எம் செல்வன் அடி.
(* For interpretation : நாம் தொழுது ஏத்தி, நெய் ஆட்டும் அடி)
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி;
.. அழகு எழுதல்-ஆகா அருட்-சேவடி;
சுரும்பித்த, வண்டினங்கள் சூழ்ந்த, அடி;
.. சோமனையும் காலனையும் காய்ந்த அடி;
பெரும்-பித்தர் கூடிப் பிதற்றும் அடி;
.. பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி;
திருந்து-நீர்த் தென்-கெடில நாடன் அடி;
.. திரு-வீரட்டானத்து எம் செல்வன் அடி.
ஒரு-காலத்து ஒன்று-ஆகி நின்ற அடி;
.. ஊழிதோறு ஊழி உயர்ந்த அடி;
பொரு-கழலும் பல்-சிலம்பும் ஆர்க்கும் அடி;
.. புகழ்வார் புகழ்-தகைய வல்ல அடி;
இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி;
.. இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி;
திருவதிகைத் தென்-கெடில நாடன் அடி;
.. திருவீரட்டானத்து எம் செல்வன் அடி.
திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி;
.. சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் அடி;
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி;
.. புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி;
உருவிரண்டும் ஒன்றோடு-ஒன்று ஒவ்வா அடி;
.. உருவென்று உணரப்-படாத அடி;
திருவதிகைத் தென்-கெடில நாடன் அடி;
.. திருவீரட்டானத்து எம் செல்வன் அடி.
உரைமாலை-எல்லாம் உடைய அடி;
.. உரையால் உணரப்படாத அடி;
வரைமாதை வாடாமை வைக்கும் அடி;
.. வானவர்கள் தாம் வணங்கி வாழ்த்தும் அடி;
அரை-மாத்திரையில் அடங்கும் அடி;
.. அகலம் அளக்கிற்பார் இல்லா அடி;
கரை-மாங்கலிக்-கெடில நாடன் அடி;
.. கமழ் வீரட்டானக் கபாலி அடி.
நறுமலராய் நாறும் மலர்ச்-சேவடி;
.. நடுவாய் உலக-நாடு ஆய அடி; *
செறி-கதிரும் திங்களுமாய் நின்ற அடி;
.. தீத்-திரளாய் உள்ளே திகழ்ந்த அடி;
மறு-மதியை மாசு கழுவும் அடி;
.. மந்திரமும் தந்திரமும் ஆய அடி;
செறி-கெடில நாடர் பெருமான் அடி;
.. திரு-வீரட்டானத்து எம் செல்வன் அடி.
(* உலக-நாடு = உலகம் + நாடு)
அணியனவும் சேயனவும் அல்லா அடி;
.. அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி;
பணிபவர்க்குப் பாங்காக வல்ல அடி;
.. பற்றற்றார் பற்றும் பவள அடி;
மணி-அடி; பொன்-அடி; மாண்பாம் அடி;
.. மருந்தாய்ப் பிணி-தீர்க்க வல்ல அடி;
தணி-பாடு தண்-கெடில நாடன் அடி;
.. தகை-சார் வீரட்டத்-தலைவன் அடி.
அந்தாமரைப்-போது அலர்ந்த அடி;
.. அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி;
முந்தாகி முன்னே முளைத்த அடி;
.. முழங்கு-அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி;
பந்தாடு மெல்-விரலாள் பாகன் அடி;
.. பவளத் தட-வரையே போல்வான் அடி;
வெந்தார் சுடலை-நீறு ஆடும் அடி;
.. வீரட்டம் காதல் விமலன் அடி.
=============================
Roman (ISO 15919)
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Thirunavukkarasar sang many padhigams and performed his holy service in Thiruvadhigai
# 1409 - periyapurāṇam - tirunāvukkarasar purāṇam - 144
ari-ayanukku ariyānai, aḍiyavarukku eḷiyānai,
viri-punal-sūḻ tiruvadigai vīraṭṭānattu amudait,
terivu-ariya perundagaimait tirunāvukkarasu manam
parivu-uṟu sendamiḻp-pāṭṭup pala pāḍip paṇiseyum nāḷ,
tirunāvukkarasar tēvāram - padigam 6.6 – tiruvadigai - "tiruvaḍit tiruttāṇḍagam"
pāḍal eṇ : 1
aravaṇaiyān sindittu araṭrum aḍi;
.. arumaṟaiyān sennikku aṇi ām aḍi;
saravaṇattān kaitoḻudu sārum aḍi;
.. sārndārgaṭku-ellām saraṇ ām aḍi;
paravuvār pāvam paṟaikkum aḍi;
.. padineṇ-gaṇaṅgaḷum pāḍum aḍi;
tirai viravu ten-keḍila nāḍan aḍi;
.. tiru-vīraṭṭānattu em selvan aḍi.
pāḍal eṇ : 2
koḍu-vinaiyār eṇḍrum kuṟugā aḍi;
.. kuṟaindu-aḍaindār āḻāmaik kākkum aḍi;
paḍu-muḻavam pāṇi payiṭrum aḍi;
.. padaitteḻunda veṅgūṭraip pāynda aḍi;
kaḍu-muraṇ-ēṟu ūrndān kaḻaṟcēvaḍi;
.. kaḍal-vaiyam kāppān karudum aḍi;
neḍu-madiyam kaṇṇi aṇindān aḍi;
.. niṟai-keḍila vīraṭṭam nīṅgā aḍi.
pāḍal eṇ : 3
vaidu-eḻuvār kāmam poy pōgā aḍi;
.. vañja-valaippāḍu oṇḍru-illā aḍi;
kaidoḻudu nām ēttik kāṇum aḍi;
.. kaṇakku-vaḻakkaik kaḍanda aḍi;
ney, toḻudu nām ētti, āṭṭum aḍi; *
.. nīḷ-visumbai ūḍaṟuttu niṇḍra aḍi;
teyvap punaṟ-keḍila nāḍan aḍi;
.. tiru-vīraṭṭānattu em selvan aḍi.
(* For interpretation : nām toḻudu ētti, ney āṭṭum aḍi)
pāḍal eṇ : 4
arumbitta seññāyiṟu ēykkum aḍi;
.. aḻagu eḻudal-āgā aruṭ-cēvaḍi;
surumbitta, vaṇḍinaṅgaḷ sūḻnda, aḍi;
.. sōmanaiyum kālanaiyum kāynda aḍi;
perum-pittar kūḍip pidaṭrum aḍi;
.. piḻaittār piḻaippu aṟiya valla aḍi;
tirundu-nīrt ten-keḍila nāḍan aḍi;
.. tiru-vīraṭṭānattu em selvan aḍi.
pāḍal eṇ : 5
oru-kālattu oṇḍru-āgi niṇḍra aḍi;
.. ūḻidōṟu ūḻi uyarnda aḍi;
poru-kaḻalum pal-silambum ārkkum aḍi;
.. pugaḻvār pugaḻ-tagaiya valla aḍi;
irunilattār inbuṭru aṅgu ēttum aḍi;
.. inbuṭrār iṭṭa pū ēṟum aḍi;
tiruvadigait ten-keḍila nāḍan aḍi;
.. tiruvīraṭṭānattu em selvan aḍi.
pāḍal eṇ : 6
tirumagaṭkuc cendāmarai ām aḍi;
.. siṟandavarkkut tēnāy viḷaikkum aḍi;
poruḷavarkkup ponnuraiyāy niṇḍra aḍi;
.. pugaḻvār pugaḻ tagaiya valla aḍi;
uruviraṇḍum oṇḍrōḍu-oṇḍru ovvā aḍi;
.. uruveṇḍru uṇarap-paḍāda aḍi;
tiruvadigait ten-keḍila nāḍan aḍi;
.. tiruvīraṭṭānattu em selvan aḍi.
pāḍal eṇ : 7
uraimālai-ellām uḍaiya aḍi;
.. uraiyāl uṇarappaḍāda aḍi;
varaimādai vāḍāmai vaikkum aḍi;
.. vānavargaḷ tām vaṇaṅgi vāḻttum aḍi;
arai-māttiraiyil aḍaṅgum aḍi;
.. agalam aḷakkiṟpār illā aḍi;
karai-māṅgalik-keḍila nāḍan aḍi;
.. kamaḻ vīraṭṭānak kabāli aḍi.
pāḍal eṇ : 8
naṟumalarāy nāṟum malarc-cēvaḍi;
.. naḍuvāy ulaga-nāḍu āya aḍi; *
seṟi-kadirum tiṅgaḷumāy niṇḍra aḍi;
.. tīt-tiraḷāy uḷḷē tigaḻnda aḍi;
maṟu-madiyai māsu kaḻuvum aḍi;
.. mandiramum tandiramum āya aḍi;
seṟi-keḍila nāḍar perumān aḍi;
.. tiru-vīraṭṭānattu em selvan aḍi.
(* ulaga-nāḍu = ulagam + nāḍu)
pāḍal eṇ : 9
aṇiyanavum sēyanavum allā aḍi;
.. aḍiyārgaṭku āramudam āya aḍi;
paṇibavarkkup pāṅgāga valla aḍi;
.. paṭraṭrār paṭrum pavaḷa aḍi;
maṇi-aḍi; pon-aḍi; māṇbām aḍi;
.. marundāyp piṇi-tīrkka valla aḍi;
taṇi-pāḍu taṇ-keḍila nāḍan aḍi;
.. tagai-sār vīraṭṭat-talaivan aḍi.
pāḍal eṇ : 10
andāmaraip-pōdu alarnda aḍi;
.. arakkanaiyum āṭral aḻitta aḍi;
mundāgi munnē muḷaitta aḍi;
.. muḻaṅgu-aḻalāy nīṇḍa em mūrtti aḍi;
pandāḍu mel-viralāḷ pāgan aḍi;
.. pavaḷat taḍa-varaiyē pōlvān aḍi;
vendār suḍalai-nīṟu āḍum aḍi;
.. vīraṭṭam kādal vimalan aḍi.
=============================
Easy English
ee = ஈ; oo = ஊ; n = ந/ன; N = ண; ட = ta/da; த = tha/dha; R = ற; tra = ற்ற; ndra = ன்ற; zh = ழ
Word separated version:
Thirunavukkarasar sang many padhigams and performed his holy service in thiruvadhigai
# 1409 - periyapurāNam - thirunāvukkarasar purāNam - 144
ari-ayanukku ariyānai, adiyavarukku eLiyānai,
viri-punal-soozh thiruvadhigai veerattānaththu amudhaith,
therivu-ariya perundhagaimaith thirunāvukkarasu manam
parivu-uṟu sendhamizhp-pāttup pala pādip paNiseyum nāL,
thirunāvukkarasar thēvāram - padhigam 6.6 – thiruvadhigai - "thiruvadith thiruththāNdagam"
pādal eN : 1
aravaNaiyān sindhiththu aratrum adi;
.. arumaṟaiyān sennikku aNi ām adi;
saravaNaththān kaithozhudhu sārum adi;
.. sārndhārgatku-ellām saraN ām adi;
paravuvār pāvam paṟaikkum adi;
.. padhineN-gaNaṅgaLum pādum adi;
thirai viravu then-kedila nādan adi;
.. thiru-veerattānaththu em selvan adi.
pādal eN : 2
kodu-vinaiyār endrum kuṟugā adi;
.. kuṟaindhu-adaindhār āzhāmaik kākkum adi;
padu-muzhavam pāNi payitrum adi;
.. padhaiththezhundha veṅgootraip pāyndha adi;
kadu-muraN-ēṟu oorndhān kazhaṟcēvadi;
.. kadal-vaiyam kāppān karudhum adi;
nedu-madhiyam kaNNi aNindhān adi;
.. niṟai-kedila veerattam neeṅgā adi.
pādal eN : 3
vaidhu-ezhuvār kāmam poy pōgā adi;
.. vañja-valaippādu ondru-illā adi;
kaidhozhudhu nām ēththik kāNum adi;
.. kaNakku-vazhakkaik kadandha adi;
ney, thozhudhu nām ēththi, āttum adi; *
.. neeL-visumbai oodaṟuththu nindra adi;
theyvap punaṟ-kedila nādan adi;
.. thiru-veerattānaththu em selvan adi.
(* For interpretation : nām thozhudhu ēththi, ney āttum adi)
pādal eN : 4
arumbiththa seññāyiṟu ēykkum adi;
.. azhagu ezhudhal-āgā arut-chēvadi;
surumbiththa, vaNdinaṅgaL soozhndha, adi;
.. sōmanaiyum kālanaiyum kāyndha adi;
perum-piththar koodip pidhatrum adi;
.. pizhaiththār pizhaippu aṟiya valla adi;
thirundhu-neerth then-kedila nādan adi;
.. thiru-veerattānaththu em selvan adi.
pādal eN : 5
oru-kālaththu ondru-āgi nindra adi;
.. oozhidhōṟu oozhi uyarndha adi;
poru-kazhalum pal-silambum ārkkum adi;
.. pugazhvār pugazh-thagaiya valla adi;
irunilaththār inbutru aṅgu ēththum adi;
.. inbutrār itta poo ēṟum adi;
thiruvadhigaith then-kedila nādan adi;
.. thiruveerattānaththu em selvan adi.
pādal eN : 6
thirumagatkuc cendhāmarai ām adi;
.. siṟandhavarkkuth thēnāy viLaikkum adi;
poruLavarkkup ponnuraiyāy nindra adi;
.. pugazhvār pugazh thagaiya valla adi;
uruviraNdum ondrōdu-ondru ovvā adi;
.. uruvendru uNarap-padādha adi;
thiruvadhigaith then-kedila nādan adi;
.. thiruveerattānaththu em selvan adi.
pādal eN : 7
uraimālai-ellām udaiya adi;
.. uraiyāl uNarappadādha adi;
varaimādhai vādāmai vaikkum adi;
.. vānavargaL thām vaNaṅgi vāzhththum adi;
arai-māththiraiyil adaṅgum adi;
.. agalam aLakkiṟpār illā adi;
karai-māṅgalik-kedila nādan adi;
.. kamazh veerattānak kabāli adi.
pādal eN : 8
naṟumalarāy nāṟum malarc-cēvadi;
.. naduvāy ulaga-nādu āya adi; *
seṟi-kadhirum thiṅgaLumāy nindra adi;
.. theeth-thiraLāy uLLē thigazhndha adi;
maṟu-madhiyai māsu kazhuvum adi;
.. mandhiramum thandhiramum āya adi;
seṟi-kedila nādar perumān adi;
.. thiru-veerattānaththu em selvan adi.
(* ulaga-nādu = ulagam + nādu)
pādal eN : 9
aNiyanavum sēyanavum allā adi;
.. adiyārgatku āramudham āya adi;
paNibavarkkup pāṅgāga valla adi;
.. patratrār patrum pavaLa adi;
maNi-adi; pon-adi; māNbām adi;
.. marundhāyp piNi-theerkka valla adi;
thaNi-pādu thaN-kedila nādan adi;
.. thagai-sār veerattath-thalaivan adi.
pādal eN : 10
andhāmaraip-pōdhu alarndha adi;
.. arakkanaiyum ātral azhiththa adi;
mundhāgi munnē muLaiththa adi;
.. muzhaṅgu-azhalāy neeNda em moorththi adi;
pandhādu mel-viralāL pāgan adi;
.. pavaLath thada-varaiyē pōlvān adi;
vendhār sudalai-neeṟu ādum adi;
.. veerattam kādhal vimalan adi.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Thirunavukkarasar sang many padhigams and performed his holy service in Thiruvadhigai
# 1409 - पॆरियपुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 144
अरि-अयनुक्कु अरियानै, अडियवरुक्कु ऎळियानै,
विरि-पुनल्-सूऴ् तिरुवदिगै वीरट्टानत्तु अमुदैत्,
तॆरिवु-अरिय पॆरुन्दगैमैत् तिरुनावुक्करसु मनम्
परिवु-उऱु सॆन्दमिऴ्प्-पाट्टुप् पल पाडिप् पणिसॆयुम् नाळ्,
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 6.6 – तिरुवदिगै - "तिरुवडित् तिरुत्ताण्डगम्"
पाडल् ऎण् : 1
अरवणैयान् सिन्दित्तु अरट्रुम् अडि;
.. अरुमऱैयान् सॆन्निक्कु अणि आम् अडि;
सरवणत्तान् कैतॊऴुदु सारुम् अडि;
.. सार्न्दार्गट्कु-ऎल्लाम् सरण् आम् अडि;
परवुवार् पावम् पऱैक्कुम् अडि;
.. पदिनॆण्-गणङ्गळुम् पाडुम् अडि;
तिरै विरवु तॆन्-कॆडिल नाडन् अडि;
.. तिरु-वीरट्टानत्तु ऎम् सॆल्वन् अडि.
पाडल् ऎण् : 2
कॊडु-विनैयार् ऎण्ड्रुम् कुऱुगा अडि;
.. कुऱैन्दु-अडैन्दार् आऴामैक् काक्कुम् अडि;
पडु-मुऴवम् पाणि पयिट्रुम् अडि;
.. पदैत्तॆऴुन्द वॆङ्गूट्रैप् पाय्न्द अडि;
कडु-मुरण्-एऱु ऊर्न्दान् कऴऱ्चेवडि;
.. कडल्-वैयम् काप्पान् करुदुम् अडि;
नॆडु-मदियम् कण्णि अणिन्दान् अडि;
.. निऱै-कॆडिल वीरट्टम् नीङ्गा अडि.
पाडल् ऎण् : 3
वैदु-ऎऴुवार् कामम् पॊय् पोगा अडि;
.. वञ्ज-वलैप्पाडु ऒण्ड्रु-इल्ला अडि;
कैदॊऴुदु नाम् एत्तिक् काणुम् अडि;
.. कणक्कु-वऴक्कैक् कडन्द अडि;
नॆय्, तॊऴुदु नाम् एत्ति, आट्टुम् अडि; *
.. नीळ्-विसुम्बै ऊडऱुत्तु निण्ड्र अडि;
तॆय्वप् पुनऱ्-कॆडिल नाडन् अडि;
.. तिरु-वीरट्टानत्तु ऎम् सॆल्वन् अडि.
(* For interpretation : नाम् तॊऴुदु एत्ति, नॆय् आट्टुम् अडि)
पाडल् ऎण् : 4
अरुम्बित्त सॆञ्ञायिऱु एय्क्कुम् अडि;
.. अऴगु ऎऴुदल्-आगा अरुट्-चेवडि;
सुरुम्बित्त, वण्डिनङ्गळ् सूऴ्न्द, अडि;
.. सोमनैयुम् कालनैयुम् काय्न्द अडि;
पॆरुम्-पित्तर् कूडिप् पिदट्रुम् अडि;
.. पिऴैत्तार् पिऴैप्पु अऱिय वल्ल अडि;
तिरुन्दु-नीर्त् तॆन्-कॆडिल नाडन् अडि;
.. तिरु-वीरट्टानत्तु ऎम् सॆल्वन् अडि.
पाडल् ऎण् : 5
ऒरु-कालत्तु ऒण्ड्रु-आगि निण्ड्र अडि;
.. ऊऴिदोऱु ऊऴि उयर्न्द अडि;
पॊरु-कऴलुम् पल्-सिलम्बुम् आर्क्कुम् अडि;
.. पुगऴ्वार् पुगऴ्-तगैय वल्ल अडि;
इरुनिलत्तार् इन्बुट्रु अङ्गु एत्तुम् अडि;
.. इन्बुट्रार् इट्ट पू एऱुम् अडि;
तिरुवदिगैत् तॆन्-कॆडिल नाडन् अडि;
.. तिरुवीरट्टानत्तु ऎम् सॆल्वन् अडि.
पाडल् ऎण् : 6
तिरुमगट्कुच् चॆन्दामरै आम् अडि;
.. सिऱन्दवर्क्कुत् तेनाय् विळैक्कुम् अडि;
पॊरुळवर्क्कुप् पॊन्नुरैयाय् निण्ड्र अडि;
.. पुगऴ्वार् पुगऴ् तगैय वल्ल अडि;
उरुविरण्डुम् ऒण्ड्रोडु-ऒण्ड्रु ऒव्वा अडि;
.. उरुवॆण्ड्रु उणरप्-पडाद अडि;
तिरुवदिगैत् तॆन्-कॆडिल नाडन् अडि;
.. तिरुवीरट्टानत्तु ऎम् सॆल्वन् अडि.
पाडल् ऎण् : 7
उरैमालै-ऎल्लाम् उडैय अडि;
.. उरैयाल् उणरप्पडाद अडि;
वरैमादै वाडामै वैक्कुम् अडि;
.. वानवर्गळ् ताम् वणङ्गि वाऴ्त्तुम् अडि;
अरै-मात्तिरैयिल् अडङ्गुम् अडि;
.. अगलम् अळक्किऱ्पार् इल्ला अडि;
करै-माङ्गलिक्-कॆडिल नाडन् अडि;
.. कमऴ् वीरट्टानक् कबालि अडि.
पाडल् ऎण् : 8
नऱुमलराय् नाऱुम् मलर्च्-चेवडि;
.. नडुवाय् उलग-नाडु आय अडि; *
सॆऱि-कदिरुम् तिङ्गळुमाय् निण्ड्र अडि;
.. तीत्-तिरळाय् उळ्ळे तिगऴ्न्द अडि;
मऱु-मदियै मासु कऴुवुम् अडि;
.. मन्दिरमुम् तन्दिरमुम् आय अडि;
सॆऱि-कॆडिल नाडर् पॆरुमान् अडि;
.. तिरु-वीरट्टानत्तु ऎम् सॆल्वन् अडि.
(* उलग-नाडु = उलगम् + नाडु)
पाडल् ऎण् : 9
अणियनवुम् सेयनवुम् अल्ला अडि;
.. अडियार्गट्कु आरमुदम् आय अडि;
पणिबवर्क्कुप् पाङ्गाग वल्ल अडि;
.. पट्रट्रार् पट्रुम् पवळ अडि;
मणि-अडि; पॊन्-अडि; माण्बाम् अडि;
.. मरुन्दाय्प् पिणि-तीर्क्क वल्ल अडि;
तणि-पाडु तण्-कॆडिल नाडन् अडि;
.. तगै-सार् वीरट्टत्-तलैवन् अडि.
पाडल् ऎण् : 10
अन्दामरैप्-पोदु अलर्न्द अडि;
.. अरक्कनैयुम् आट्रल् अऴित्त अडि;
मुन्दागि मुन्ने मुळैत्त अडि;
.. मुऴङ्गु-अऴलाय् नीण्ड ऎम् मूर्त्ति अडि;
पन्दाडु मॆल्-विरलाळ् पागन् अडि;
.. पवळत् तड-वरैये पोल्वान् अडि;
वॆन्दार् सुडलै-नीऱु आडुम् अडि;
.. वीरट्टम् कादल् विमलन् अडि.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Thirunavukkarasar sang many padhigams and performed his holy service in Thiruvadhigai
# 1409 - పెరియపురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 144
అరి-అయనుక్కు అరియానై, అడియవరుక్కు ఎళియానై,
విరి-పునల్-సూఴ్ తిరువదిగై వీరట్టానత్తు అముదైత్,
తెరివు-అరియ పెరుందగైమైత్ తిరునావుక్కరసు మనం
పరివు-ఉఱు సెందమిఴ్ప్-పాట్టుప్ పల పాడిప్ పణిసెయుం నాళ్,
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 6.6 – తిరువదిగై - "తిరువడిత్ తిరుత్తాండగం"
పాడల్ ఎణ్ : 1
అరవణైయాన్ సిందిత్తు అరట్రుం అడి;
.. అరుమఱైయాన్ సెన్నిక్కు అణి ఆం అడి;
సరవణత్తాన్ కైతొఴుదు సారుం అడి;
.. సార్న్దార్గట్కు-ఎల్లాం సరణ్ ఆం అడి;
పరవువార్ పావం పఱైక్కుం అడి;
.. పదినెణ్-గణంగళుం పాడుం అడి;
తిరై విరవు తెన్-కెడిల నాడన్ అడి;
.. తిరు-వీరట్టానత్తు ఎం సెల్వన్ అడి.
పాడల్ ఎణ్ : 2
కొడు-వినైయార్ ఎండ్రుం కుఱుగా అడి;
.. కుఱైందు-అడైందార్ ఆఴామైక్ కాక్కుం అడి;
పడు-ముఴవం పాణి పయిట్రుం అడి;
.. పదైత్తెఴుంద వెంగూట్రైప్ పాయ్న్ద అడి;
కడు-మురణ్-ఏఱు ఊర్న్దాన్ కఴఱ్చేవడి;
.. కడల్-వైయం కాప్పాన్ కరుదుం అడి;
నెడు-మదియం కణ్ణి అణిందాన్ అడి;
.. నిఱై-కెడిల వీరట్టం నీంగా అడి.
పాడల్ ఎణ్ : 3
వైదు-ఎఴువార్ కామం పొయ్ పోగా అడి;
.. వంజ-వలైప్పాడు ఒండ్రు-ఇల్లా అడి;
కైదొఴుదు నాం ఏత్తిక్ కాణుం అడి;
.. కణక్కు-వఴక్కైక్ కడంద అడి;
నెయ్, తొఴుదు నాం ఏత్తి, ఆట్టుం అడి; *
.. నీళ్-విసుంబై ఊడఱుత్తు నిండ్ర అడి;
తెయ్వప్ పునఱ్-కెడిల నాడన్ అడి;
.. తిరు-వీరట్టానత్తు ఎం సెల్వన్ అడి.
(* For interpretation : నాం తొఴుదు ఏత్తి, నెయ్ ఆట్టుం అడి)
పాడల్ ఎణ్ : 4
అరుంబిత్త సెఞ్ఞాయిఱు ఏయ్క్కుం అడి;
.. అఴగు ఎఴుదల్-ఆగా అరుట్-చేవడి;
సురుంబిత్త, వండినంగళ్ సూఴ్న్ద, అడి;
.. సోమనైయుం కాలనైయుం కాయ్న్ద అడి;
పెరుం-పిత్తర్ కూడిప్ పిదట్రుం అడి;
.. పిఴైత్తార్ పిఴైప్పు అఱియ వల్ల అడి;
తిరుందు-నీర్త్ తెన్-కెడిల నాడన్ అడి;
.. తిరు-వీరట్టానత్తు ఎం సెల్వన్ అడి.
పాడల్ ఎణ్ : 5
ఒరు-కాలత్తు ఒండ్రు-ఆగి నిండ్ర అడి;
.. ఊఴిదోఱు ఊఴి ఉయర్న్ద అడి;
పొరు-కఴలుం పల్-సిలంబుం ఆర్క్కుం అడి;
.. పుగఴ్వార్ పుగఴ్-తగైయ వల్ల అడి;
ఇరునిలత్తార్ ఇన్బుట్రు అంగు ఏత్తుం అడి;
.. ఇన్బుట్రార్ ఇట్ట పూ ఏఱుం అడి;
తిరువదిగైత్ తెన్-కెడిల నాడన్ అడి;
.. తిరువీరట్టానత్తు ఎం సెల్వన్ అడి.
పాడల్ ఎణ్ : 6
తిరుమగట్కుచ్ చెందామరై ఆం అడి;
.. సిఱందవర్క్కుత్ తేనాయ్ విళైక్కుం అడి;
పొరుళవర్క్కుప్ పొన్నురైయాయ్ నిండ్ర అడి;
.. పుగఴ్వార్ పుగఴ్ తగైయ వల్ల అడి;
ఉరువిరండుం ఒండ్రోడు-ఒండ్రు ఒవ్వా అడి;
.. ఉరువెండ్రు ఉణరప్-పడాద అడి;
తిరువదిగైత్ తెన్-కెడిల నాడన్ అడి;
.. తిరువీరట్టానత్తు ఎం సెల్వన్ అడి.
పాడల్ ఎణ్ : 7
ఉరైమాలై-ఎల్లాం ఉడైయ అడి;
.. ఉరైయాల్ ఉణరప్పడాద అడి;
వరైమాదై వాడామై వైక్కుం అడి;
.. వానవర్గళ్ తాం వణంగి వాఴ్త్తుం అడి;
అరై-మాత్తిరైయిల్ అడంగుం అడి;
.. అగలం అళక్కిఱ్పార్ ఇల్లా అడి;
కరై-మాంగలిక్-కెడిల నాడన్ అడి;
.. కమఴ్ వీరట్టానక్ కబాలి అడి.
పాడల్ ఎణ్ : 8
నఱుమలరాయ్ నాఱుం మలర్చ్-చేవడి;
.. నడువాయ్ ఉలగ-నాడు ఆయ అడి; *
సెఱి-కదిరుం తింగళుమాయ్ నిండ్ర అడి;
.. తీత్-తిరళాయ్ ఉళ్ళే తిగఴ్న్ద అడి;
మఱు-మదియై మాసు కఴువుం అడి;
.. మందిరముం తందిరముం ఆయ అడి;
సెఱి-కెడిల నాడర్ పెరుమాన్ అడి;
.. తిరు-వీరట్టానత్తు ఎం సెల్వన్ అడి.
(* ఉలగ-నాడు = ఉలగం + నాడు)
పాడల్ ఎణ్ : 9
అణియనవుం సేయనవుం అల్లా అడి;
.. అడియార్గట్కు ఆరముదం ఆయ అడి;
పణిబవర్క్కుప్ పాంగాగ వల్ల అడి;
.. పట్రట్రార్ పట్రుం పవళ అడి;
మణి-అడి; పొన్-అడి; మాణ్బాం అడి;
.. మరుందాయ్ప్ పిణి-తీర్క్క వల్ల అడి;
తణి-పాడు తణ్-కెడిల నాడన్ అడి;
.. తగై-సార్ వీరట్టత్-తలైవన్ అడి.
పాడల్ ఎణ్ : 10
అందామరైప్-పోదు అలర్న్ద అడి;
.. అరక్కనైయుం ఆట్రల్ అఴిత్త అడి;
ముందాగి మున్నే ముళైత్త అడి;
.. ముఴంగు-అఴలాయ్ నీండ ఎం మూర్త్తి అడి;
పందాడు మెల్-విరలాళ్ పాగన్ అడి;
.. పవళత్ తడ-వరైయే పోల్వాన్ అడి;
వెందార్ సుడలై-నీఱు ఆడుం అడి;
.. వీరట్టం కాదల్ విమలన్ అడి.
=============================