Pages

Sunday, January 17, 2021

8.1 – சிவபுராணம் - sivapurANam

82) 8.1சிவபுராணம் - sivapurANam

திருவாசகம் - சிவபுராணம் - பதிகம் 8.1

tiruvāsagam - sivapurāṇam - padigam 8.1


Here are the links to verses and audio of this padhigam's discussion:


Verses:

PDF: https://drive.google.com/file/d/1M3l55HLRCan6eJLzV_ofgbDHrUkpSLnr/view?usp=sharing

***

On YouTube:

Tamil discussion:

Part-1 (அடி 1-10): https://youtu.be/sVyWxSnhlC8

Part-2 (அடி 11-25): https://youtu.be/sbqMXog_8gY

Part-3 (அடி 26-40): https://youtu.be/5LyD6zLk46s

Part-4 (அடி 41-61): https://youtu.be/elIGOd4Xlas

Part-5 (அடி 62-74): https://youtu.be/z7LG7FwSeB8

Part-6 (அடி 75-95): https://youtu.be/MLJ5F8Pl3XM


English discussion:

Part-1:

Part-2:

Part-3:

Part-4:

Part-5:

Part-6:

===============

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


திருவாசகம் - சிவபுராணம் - பதிகம் 8.1

பாடலின் அமைப்பு

அடிகள்: 1 - 16: "நமச்சிவாய வாழ்க" என்பதிலிருந்து "ஆராத இன்பம் அருளும் மலை போற்றி" என்பது வரை இறைவனுக்கு மங்கல வாழ்த்துக் கூறுகின்றார்.

அடிகள்: 17 - 22: இப்பாடலைப் பாடியதன் நோக்கத்தைச் "சிவன் அவன்" என்பதிலிருந்து "வினை முழுதும் ஓய உரைப்பன் யான்" என்பது வரை கூறுகிறார். நம்மைக் கட்டியிருக்கும் வினைகளிலிருந்து விடுபடுவதே பாடலின் நோக்கம். அடிகள் 21-22-ஐயும் ("கண் நுதலான்தன் ... ... எழில் ஆர் கழல் இறைஞ்சி") இங்கே கூட்டிப் பொருள்கொள்க.

அடிகள்: 23 - 25: "விண்ணிறைந்து" என்று தொடங்கி, "புகழுமாறு ஒன்று அறியேன்" என்பது வரை அவையடக்கம் கூறுகிறார். இங்கு அவை ஆவது சிவனடியார்கள் திருக்கூட்டம். (ஆனால், இவ்வடிகள் ஈசனை முன்னிலையில் விளிக்கின்றவாறு உள்ளன).

அடிகள்: 26 - 31: "புல்லாகி" என்பது முதல் "இளைத்தேன் எம்பெருமான்" என்பது வரை பல்வேறு பிறவிகளில் உழன்றதைக் கூறுகின்றார்.

அடிகள்: 32 - 91: பின்னர், "மெய்யே உன் பொன்னடிகள்" என்பது முதல் "அல்லல் பிறவி அறுப்பானே ஓ" என்பது வரை சிவனது தன்மைகளையும், அடியவர்களுக்கு அவன் அருள்புரிவதையும் கூறுகின்றார்.

அடி-91: "அல்லற் பிறவி அறுப்பானே; !என்று" = 'அல்லல் பிறவி அறுப்பவனே! ஓலம்' என்று: இதுவே இப்பாட்டின் முடிவு. எனவே, பிறவியை அறுப்பதே இப்பாட்டில் வேண்டப்படுவது.

அடிகள்: 91 - 95: "என்று சொல்லற்கு அரியானை" என்பது முதல் "பல்லோரும் ஏத்தப் பணிந்து" என்பது வரை இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்வதால் விளையும் நலனைக் கூறுகின்றார்.


Additional notes:

1. There seems to be some nested statement here:

( "(அடி 32 - அடி85)" அடி86 - அடி 91)

( "(மெய்யேஉன் பொன்னடிகள் .... எம் ஐயா அரனே ஓ)" என்றென்று போற்றிப் ... பிறவி அறுப்பானே ஓ) என்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய...

2. பலசுருதி - திருவாசகத்தில் இந்தப் பகுதியில் மட்டுமே பாடுவார் பெறும் நன்மையை எடுத்துச்சொல்கின்றார். மற்ற பகுதிகளில் அப்படிப் பதிகத்தைப் பாடுவார் பெறும் பலன் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.

===============================================================

திருவாசகம் - சிவபுராணம் - பதிகம் 8.1


நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க

ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15

ஆராத இன்பம் அருளுமலை போற்றி


சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்

சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி


விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்


மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்-கழல்கள் காஅட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனா ரமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே

இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்

ஊற்றான உண்ணா ரமுதே உடையானே

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப

ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று


சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95


(Notes on Pronunciation - Tamil poetry conventions - for some words in this verse:

Line-1: வாஅழ்க = வா..ழ்க = The "வாஅ" indicates "வா" sound is of longer duration than normal.

Line-18: வணங்ங்கிச் = வணங்..ங்கிச் = The double "ங்" indicates "ங்" sound is of longer duration than normal.

Line-30: செல்லாஅ = செல்லா.. = The "லாஅ" indicates "லா" sound is of longer duration than normal.

Line-59: காஅட்டி = கா..ட்டி = The "காஅ" indicates "கா" sound is of longer duration than normal.)

==================

Word separated version:

திருவாசகம் - சிவபுராணம் - பதிகம் 8.1


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்-நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணி-தன் தாள் வாழ்க

ஆகமம் ஆகி-நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க 5


வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்-தன் பெய்-கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்-தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்-மகிழும் கோன்-கழல்கள் வெல்க

சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10


ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி

தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி


சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன் தாள் வணங்ங்கிச்

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண்நுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி


விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கொளியாய்,

எண் இறந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் 25


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், எம்பெருமான்


மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35


வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40


ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்

நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45


கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்துடையாய், விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50


மறைந்திட மூடிய மாய இருளை

அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்

புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி,

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55


விலங்கு மனத்தால், விமலா உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60


தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனார் அமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்-புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் 65


பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70


அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தில் 75


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் எம் காவலனே காண்பரிய பேர் ஒளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச், சொல்லாத நுண் உணர்வாய் 80


மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று 85


போற்றிப் புகழ்ந்திருந்து பொய்-கெட்டு மெய் ஆனார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று


சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95


(Notes on Pronunciation - Tamil poetry conventions - for some words in this verse:

Line-1: வாஅழ்க = வா..ழ்க = The "வாஅ" indicates "வா" sound is of longer duration than normal.

Line-18: வணங்ங்கிச் = வணங்..ங்கிச் = The double "ங்" indicates "ங்" sound is of longer duration than normal.

Line-30: செல்லாஅ = செல்லா.. = The "லாஅ" indicates "லா" sound is of longer duration than normal.

Line-59: காஅட்டி = கா..ட்டி = The "காஅ" indicates "கா" sound is of longer duration than normal. )

===================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruvāsagam - sivapurāṇam - padigam 8.1


namaccivāya vāaḻga nādan tāḷ vāḻga

imaippoḻudum en-neñjil nīṅgādān tāḷ vāḻga

kōgaḻi āṇḍa gurumaṇi-tan tāḷ vāḻga

āgamam āgi-niṇḍru aṇṇippān tāḷ vāḻga

ēgan anēgan iṟaivan aḍi vāḻga 5


vēgam keḍuttāṇḍa vēndan aḍi velga

piṟappaṟukkum piññagan-tan pey-kaḻalgaḷ velga

puṟattārkkuc cēyōn-tan pūṅgaḻalgaḷ velga

karaṅguvivār uḷ-magiḻum kōn-kaḻalgaḷ velga

siraṅguvivār ōṅguvikkum sīrōn kaḻal velga 10


īsan aḍi pōṭri endai aḍi pōṭri

tēsan aḍi pōṭri sivan sēvaḍi pōṭri

nēyattē niṇḍra nimalan aḍi pōṭri

māyap piṟappu aṟukkum mannan aḍi pōṭri

sīrār perunduṟai nam dēvan aḍi pōṭri 15

ārāda inbam aruḷum malai pōṭri


sivan avan en sindaiyuḷ niṇḍra adanāl

avan aruḷālē avan tāḷ vaṇaṅṅgic

cindai magiḻac civapurāṇam tannai

mundai vinaimuḻudum ōya uraippan yān. 20

kaṇnudalān tan karuṇaik kaṇ-gāṭṭa vandeydi

eṇṇudaṟku eṭṭā eḻilār kaḻal iṟaiñji


viṇ niṟaindu maṇ niṟaindu mikkāy, viḷaṅgoḷiyāy,

eṇ iṟandu ellai ilādānē nin peruñjīr

pollā vinaiyēn pugaḻumāṟu oṇḍraṟiyēn 25


pullāgip pūḍāyp puḻuvāy maramāgip

pal virugamāgip paṟavaiyāyp pāmbāgik

kallāy manidarāyp pēyāyk kaṇaṅgaḷāy

val asurar āgi munivarāyt tēvarāyc

cellāa niṇḍra it tāvara saṅgamattuḷ 30

ellāp piṟappum piṟandiḷaittēn, emberumān


meyyē un ponnaḍigaḷ kaṇḍiṇḍru vīḍuṭrēn

uyya en uḷḷattuḷ ōṅgāramāy niṇḍra

meyyā vimalā viḍaippāgā vēdaṅgaḷ

aiyā ena ōṅgi āḻndu agaṇḍra nuṇṇiyanē 35


veyyāy, taṇiyāy, iyamānanām vimalā

poy āyina ellām pōy agala vandaruḷi

meyññānam āgi miḷirgiṇḍra meyc cuḍarē

eññānam illādēn inbap perumānē

aññānam tannai agalvikkum nal aṟivē 40


ākkam aḷavu iṟudi illāy, anaittu ulagum

ākkuvāy kāppāy aḻippāy aruḷ taruvāy

pōkkuvāy ennaip puguvippāy nin toḻumbil

nāṭrattin nēriyāy, sēyāy, naṇiyānē

māṭram manaṅgaḻiya niṇḍra maṟaiyōnē 45


kaṟanda pāl kannaloḍu ney kalandāṟ pōlac

ciṟandaḍiyār sindanaiyuḷ tēnūṟi niṇḍru

piṟanda piṟappaṟukkum eṅgaḷ perumān

niṟaṅgaḷ ōr ainduḍaiyāy, viṇṇōrgaḷ ētta

maṟaindirundāy, emberumān valvinaiyēn tannai 50


maṟaindiḍa mūḍiya māya iruḷai

aṟam pāvam ennum aruṅgayiṭrāl kaṭṭip

puṟandōl pōrtteṅgum puḻu aḻukku mūḍi,

malañjōrum onbadu vāyiṟ kuḍilai

malaṅgap pulan aindum vañjanaiyaic ceyya, 55


vilaṅgu manattāl, vimalā unakkuk

kalanda anbāgik kasindu uḷ urugum

nalandān ilāda siṟiyēṟku nalgi

nilandanmēl vandaruḷi nīḷ-kaḻalgaḷ kāaṭṭi,

nāyiṟ kaḍaiyāyk kiḍanda aḍiyēṟkut 60


tāyiṟ ciṟanda dayāvāna tattuvanē

māsaṭra sōdi malarnda malarccuḍarē

tēsanē tēnār amudē sivapuranē

pāsamām paṭraṟuttup pārikkum āriyanē

nēsa aruḷpurindu neñjil vañjaṅgeḍap 65


pērādu niṇḍra peruṅgaruṇaip pērāṟē

ārā amudē aḷavilāp pemmānē

ōrādār uḷḷattu oḷikkum oḷiyānē

nīrāy urukki en āruyirāy niṇḍrānē

inbamum tunbamum illānē uḷḷānē 70


anbarukku anbanē yāvaiyumāy allaiyumām

sōdiyanē tunniruḷē tōṇḍrāp perumaiyanē

ādiyanē andam naḍuvāgi allānē

īrttennai āṭkoṇḍa endai perumānē

kūrtta meyññānattāl koṇḍuṇarvār taṅgaruttil 75


nōkkariya nōkkē nuṇukkariya nuṇ uṇarvē

pōkkum varavum puṇarvum ilāp puṇṇiyanē

kākkum em kāvalanē kāṇbariya pēr oḷiyē

āṭrinba veḷḷamē attā mikkāy niṇḍra

tōṭrac cuḍar oḷiyāyc, collāda nuṇ uṇarvāy 80


māṭramām vaiyagattin vevvēṟē vandaṟivām

tēṭranē tēṭrat teḷivē en sindanai uḷ

ūṭrāna uṇṇār amudē uḍaiyānē

vēṭru vigāra viḍakkuḍambin uṭkiḍappa

āṭrēn em aiyā aranē ō eṇḍreṇḍru 85


pōṭrip pugaḻndirundu poy-keṭṭu mey ānār

mīṭṭiṅgu vandu vinaippiṟavi sārāmē

kaḷḷap pulak kurambai kaṭṭaḻikka vallānē

naḷ iruḷil naṭṭam payiṇḍrāḍum nādanē

tillaiyuṭ kūttanē tenbāṇḍi nāṭṭānē 90

allaṟ piṟavi aṟuppānē ō eṇḍru


sollaṟku ariyānaic collit tiruvaḍikkīḻc

colliya pāṭṭin poruḷ uṇarndu solluvār

selvar siva-purattin uḷḷār sivan aḍikkīḻp

pallōrum ēttap paṇindu. 95


(Notes on Pronunciation - Tamil poetry conventions - for some words in this verse:

Line-1: vāaḻga = vā..ḻga = The "vāa" indicates "" sound is of longer duration than normal.

Line-18: vaṇaṅṅgic = vaṇaṅ..ṅgic = The double "" indicates "" sound is of longer duration normal.

Line-30: sellāa = sellā.. = The "lāa" indicates "" sound is of longer duration than normal.)

Line-59: kāaṭṭi = ..ṭṭi = The "kāa" indicates "" sound is of longer duration than normal.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)


तिरुवासगम् - सिवपुराणम् - पदिगम् 8.1


नमच्चिवाय वाअऴ्ग नादन् ताळ् वाऴ्ग

इमैप्पॊऴुदुम् ऎन्-नॆञ्जिल् नीङ्गादान् ताळ् वाऴ्ग

कोगऴि आण्ड गुरुमणि-तन् ताळ् वाऴ्ग

आगमम् आगि-निण्ड्रु अण्णिप्पान् ताळ् वाऴ्ग

एगन् अनेगन् इऱैवन् अडि वाऴ्ग 5


वेगम् कॆडुत्ताण्ड वेन्दन् अडि वॆल्ग

पिऱप्पऱुक्कुम् पिञ्ञगन्-तन् पॆय्-कऴल्गळ् वॆल्ग

पुऱत्तार्क्कुच् चेयोन्-तन् पूङ्गऴल्गळ् वॆल्ग

करङ्गुविवार् उळ्-मगिऴुम् कोन्-कऴल्गळ् वॆल्ग

सिरङ्गुविवार् ओङ्गुविक्कुम् सीरोन् कऴल् वॆल्ग 10


ईसन् अडि पोट्रि ऎन्दै अडि पोट्रि

तेसन् अडि पोट्रि सिवन् सेवडि पोट्रि

नेयत्ते निण्ड्र निमलन् अडि पोट्रि

मायप् पिऱप्पु अऱुक्कुम् मन्नन् अडि पोट्रि

सीरार् पॆरुन्दुऱै नम् देवन् अडि पोट्रि 15

आराद इन्बम् अरुळुम् मलै पोट्रि


सिवन् अवन् ऎन् सिन्दैयुळ् निण्ड्र अदनाल्

अवन् अरुळाले अवन् ताळ् वणङ्ङ्गिच्

चिन्दै मगिऴच् चिवपुराणम् तन्नै

मुन्दै विनैमुऴुदुम् ओय उरैप्पन् यान्. 20

कण्नुदलान् तन् करुणैक् कण्गाट्ट वन्दॆय्दि

ऎण्णुदऱ्‌कु ऎट्टा ऎऴिलार् कऴल् इऱैञ्जि


विण् निऱैन्दु मण् निऱैन्दु मिक्काय्, विळङ्गॊळियाय्,

ऎण् इऱन्दु ऎल्लै इलादाने निन् पॆरुञ्जीर्

पॊल्ला विनैयेन् पुगऴुमाऱु ऒण्ड्रऱियेन् 25


पुल्लागिप् पूडाय्प् पुऴुवाय् मरमागिप्

पल् विरुगमागिप् पऱवैयाय्प् पाम्बागिक्

कल्लाय् मनिदराय्प् पेयाय्क् कणङ्गळाय्

वल् असुरर् आगि मुनिवराय्त् तेवराय्च्

चॆल्लाअ निण्ड्र इत् तावर सङ्गमत्तुळ् 30

ऎल्लाप् पिऱप्पुम् पिऱन्दिळैत्तेन्, ऎम्बॆरुमान्


मॆय्ये उन् पॊन्नडिगळ् कण्डिण्ड्रु वीडुट्रेन्

उय्य ऎन् उळ्ळत्तुळ् ओङ्गारमाय् निण्ड्र

मॆय्या विमला विडैप्पागा वेदङ्गळ्

ऐया ऎन ओङ्गि आऴ्न्दु अगण्ड्र नुण्णियने 35


वॆय्याय्, तणियाय्, इयमाननाम् विमला

पॊय् आयिन ऎल्लाम् पोय् अगल वन्दरुळि

मॆय्ञ्ञानम् आगि मिळिर्गिण्ड्र मॆय्च् चुडरे

ऎञ्ञानम् इल्लादेन् इन्बप् पॆरुमाने

अञ्ञानम् तन्नै अगल्विक्कुम् नल् अऱिवे 40


आक्कम् अळवु इऱुदि इल्लाय्, अनैत्तु उलगुम्

आक्कुवाय् काप्पाय् अऴिप्पाय् अरुळ् तरुवाय्

पोक्कुवाय् ऎन्नैप् पुगुविप्पाय् निन् तॊऴुम्बिल्

नाट्रत्तिन् नेरियाय्, सेयाय्, नणियाने

माट्रम् मनङ्गऴिय निण्ड्र मऱैयोने 45


कऱन्द पाल् कन्नलॊडु नॆय् कलन्दाऱ्‌ पोलच्

चिऱन्दडियार् सिन्दनैयुळ् तेनूऱि निण्ड्रु

पिऱन्द पिऱप्पऱुक्कुम् ऎङ्गळ् पॆरुमान्

निऱङ्गळ् ओर् ऐन्दुडैयाय्, विण्णोर्गळ् एत्त

मऱैन्दिरुन्दाय्, ऎम्बॆरुमान् वल्विनैयेन् तन्नै 50


मऱैन्दिड मूडिय माय इरुळै

अऱम् पावम् ऎन्नुम् अरुङ्गयिट्राल् कट्टिप्

पुऱन्दोल् पोर्त्तॆङ्गुम् पुऴु अऴुक्कु मूडि,

मलञ्जोरुम् ऒन्बदु वायिऱ्‌ कुडिलै

मलङ्गप् पुलन् ऐन्दुम् वञ्जनैयैच् चॆय्य, 55


विलङ्गु मनत्ताल्, विमला उनक्कुक्

कलन्द अन्बागिक् कसिन्दु उळ् उरुगुम्

नलन्दान् इलाद सिऱियेऱ्‌कु नल्गि

निलन्दन्मेल् वन्दरुळि नीळ्-कऴल्गळ् काअट्टि,

नायिऱ्‌ कडैयाय्क् किडन्द अडियेऱ्‌कुत् 60


तायिऱ्‌ चिऱन्द दयावान तत्तुवने

मासट्र सोदि मलर्न्द मलर्च्चुडरे

तेसने तेनार् अमुदे सिवपुरने

पासमाम् पट्रऱुत्तुप् पारिक्कुम् आरियने

नेस अरुळ्-पुरिन्दु नॆञ्जिल् वञ्जङ्गॆडप् 65


पेरादु निण्ड्र पॆरुङ्गरुणैप् पेराऱे

आरा अमुदे अळविलाप् पॆम्माने

ओरादार् उळ्ळत्तु ऒळिक्कुम् ऒळियाने

नीराय् उरुक्कि ऎन् आरुयिराय् निण्ड्राने

इन्बमुम् तुन्बमुम् इल्लाने उळ्ळाने 70


अन्बरुक्कु अन्बने यावैयुमाय् अल्लैयुमाम्

सोदियने तुन्निरुळे तोण्ड्राप् पॆरुमैयने

आदियने अन्दम् नडुवागि अल्लाने

ईर्त्तॆन्नै आट्कॊण्ड ऎन्दै पॆरुमाने

कूर्त्त मॆय्ञ्ञानत्ताल् कॊण्डुणर्वार् तङ्गरुत्तिल् 75


नोक्करिय नोक्के नुणुक्करिय नुण् उणर्वे

पोक्कुम् वरवुम् पुणर्वुम् इलाप् पुण्णियने

काक्कुम् ऎम् कावलने काण्बरिय पेर् ऒळिये

आट्रिन्ब वॆळ्ळमे अत्ता मिक्काय् निण्ड्र

तोट्रच् चुडर् ऒळियाय्च्, चॊल्लाद नुण् उणर्वाय् 80


माट्रमाम् वैयगत्तिन् वॆव्वेऱे वन्दऱिवाम्

तेट्रने तेट्रत् तॆळिवे ऎन् सिन्दनै उळ्

ऊट्रान उण्णार् अमुदे उडैयाने

वेट्रु विगार विडक्कुडम्बिन् उट्किडप्प

आट्रेन् ऎम् ऐया अरने ओ ऎण्ड्रॆण्ड्रु 85


पोट्रिप् पुगऴ्न्दिरुन्दु पॊय्-कॆट्टु मॆय् आनार्

मीट्टिङ्गु वन्दु विनैप्पिऱवि सारामे

कळ्ळप् पुलक् कुरम्बै कट्टऴिक्क वल्लाने

नळ् इरुळिल् नट्टम् पयिण्ड्राडुम् नादने

तिल्लैयुट् कूत्तने तॆन्बाण्डि नाट्टाने 90

अल्लऱ्‌ पिऱवि अऱुप्पाने ओ ऎण्ड्रु


सॊल्लऱ्‌कु अरियानैच् चॊल्लित् तिरुवडिक्कीऴ्च्

चॊल्लिय पाट्टिन् पॊरुळ् उणर्न्दु सॊल्लुवार्

सॆल्वर् सिव-पुरत्तिन् उळ्ळार् सिवन् अडिक्कीऴ्प्

पल्लोरुम् एत्तप् पणिन्दु. 95


(Notes on Pronunciation - Tamil poetry conventions - for some words in this verse:

Line-1: वाअऴ्ग = वा..ऴ्ग = The "वाअ" indicates "वा" sound is of longer duration than normal.

Line-18: वणङ्ङ्गिच् = वणङ्..ङ्गिच् = The double "ङ्" indicates "ङ्" sound is of longer duration than normal.

Line-30: सॆल्लाअ = सॆल्ला.. = The "लाअ" indicates "ला" sound is of longer duration than normal.)

Line-59: काअट्टि = का..ट्टि = The "काअ" indicates "का" sound is of longer duration than normal.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరువాసగం - సివపురాణం - పదిగం 8.1


నమచ్చివాయ వాఅఴ్గ నాదన్ తాళ్ వాఴ్గ

ఇమైప్పొఴుదుం ఎన్-నెంజిల్ నీంగాదాన్ తాళ్ వాఴ్గ

కోగఴి ఆండ గురుమణి-తన్ తాళ్ వాఴ్గ

ఆగమం ఆగి-నిండ్రు అణ్ణిప్పాన్ తాళ్ వాఴ్గ

ఏగన్ అనేగన్ ఇఱైవన్ అడి వాఴ్గ 5


వేగం కెడుత్తాండ వేందన్ అడి వెల్గ

పిఱప్పఱుక్కుం పిఞ్ఞగన్-తన్ పెయ్-కఴల్గళ్ వెల్గ

పుఱత్తార్క్కుచ్ చేయోన్-తన్ పూంగఴల్గళ్ వెల్గ

కరంగువివార్ ఉళ్-మగిఴుం కోన్-కఴల్గళ్ వెల్గ

సిరంగువివార్ ఓంగువిక్కుం సీరోన్ కఴల్ వెల్గ 10


ఈసన్ అడి పోట్రి ఎందై అడి పోట్రి

తేసన్ అడి పోట్రి సివన్ సేవడి పోట్రి

నేయత్తే నిండ్ర నిమలన్ అడి పోట్రి

మాయప్ పిఱప్పు అఱుక్కుం మన్నన్ అడి పోట్రి

సీరార్ పెరుందుఱై నం దేవన్ అడి పోట్రి 15

ఆరాద ఇన్బం అరుళుం మలై పోట్రి


సివన్ అవన్ ఎన్ సిందైయుళ్ నిండ్ర అదనాల్

అవన్ అరుళాలే అవన్ తాళ్ వణఙ్ఙ్గిచ్

చిందై మగిఴచ్ చివపురాణం తన్నై

ముందై వినైముఴుదుం ఓయ ఉరైప్పన్ యాన్. 20

కణ్నుదలాన్ తన్ కరుణైక్ కణ్గాట్ట వందెయ్ది

ఎణ్ణుదఱ్కు ఎట్టా ఎఴిలార్ కఴల్ ఇఱైంజి


విణ్ నిఱైందు మణ్ నిఱైందు మిక్కాయ్, విళంగొళియాయ్,

ఎణ్ ఇఱందు ఎల్లై ఇలాదానే నిన్ పెరుంజీర్

పొల్లా వినైయేన్ పుగఴుమాఱు ఒండ్రఱియేన్ 25


పుల్లాగిప్ పూడాయ్ప్ పుఴువాయ్ మరమాగిప్

పల్ విరుగమాగిప్ పఱవైయాయ్ప్ పాంబాగిక్

కల్లాయ్ మనిదరాయ్ప్ పేయాయ్క్ కణంగళాయ్

వల్ అసురర్ ఆగి మునివరాయ్త్ తేవరాయ్చ్

చెల్లాఅ నిండ్ర ఇత్ తావర సంగమత్తుళ్ 30

ఎల్లాప్ పిఱప్పుం పిఱందిళైత్తేన్, ఎంబెరుమాన్


మెయ్యే ఉన్ పొన్నడిగళ్ కండిండ్రు వీడుట్రేన్

ఉయ్య ఎన్ ఉళ్ళత్తుళ్ ఓంగారమాయ్ నిండ్ర

మెయ్యా విమలా విడైప్పాగా వేదంగళ్

ఐయా ఎన ఓంగి ఆఴ్న్దు అగండ్ర నుణ్ణియనే 35


వెయ్యాయ్, తణియాయ్, ఇయమాననాం విమలా

పొయ్ ఆయిన ఎల్లాం పోయ్ అగల వందరుళి

మెయ్ఞ్ఞానం ఆగి మిళిర్గిండ్ర మెయ్చ్ చుడరే

ఎఞ్ఞానం ఇల్లాదేన్ ఇన్బప్ పెరుమానే

అఞ్ఞానం తన్నై అగల్విక్కుం నల్ అఱివే 40


ఆక్కం అళవు ఇఱుది ఇల్లాయ్, అనైత్తు ఉలగుం

ఆక్కువాయ్ కాప్పాయ్ అఴిప్పాయ్ అరుళ్ తరువాయ్

పోక్కువాయ్ ఎన్నైప్ పుగువిప్పాయ్ నిన్ తొఴుంబిల్

నాట్రత్తిన్ నేరియాయ్, సేయాయ్, నణియానే

మాట్రం మనంగఴియ నిండ్ర మఱైయోనే 45


కఱంద పాల్ కన్నలొడు నెయ్ కలందాఱ్ పోలచ్

చిఱందడియార్ సిందనైయుళ్ తేనూఱి నిండ్రు

పిఱంద పిఱప్పఱుక్కుం ఎంగళ్ పెరుమాన్

నిఱంగళ్ ఓర్ ఐందుడైయాయ్, విణ్ణోర్గళ్ ఏత్త

మఱైందిరుందాయ్, ఎంబెరుమాన్ వల్వినైయేన్ తన్నై 50


మఱైందిడ మూడియ మాయ ఇరుళై

అఱం పావం ఎన్నుం అరుంగయిట్రాల్ కట్టిప్

పుఱందోల్ పోర్త్తెంగుం పుఴు అఴుక్కు మూడి,

మలంజోరుం ఒన్బదు వాయిఱ్ కుడిలై

మలంగప్ పులన్ ఐందుం వంజనైయైచ్ చెయ్య, 55


విలంగు మనత్తాల్, విమలా ఉనక్కుక్

కలంద అన్బాగిక్ కసిందు ఉళ్ ఉరుగుం

నలందాన్ ఇలాద సిఱియేఱ్కు నల్గి

నిలందన్మేల్ వందరుళి నీళ్-కఴల్గళ్ కాఅట్టి,

నాయిఱ్ కడైయాయ్క్ కిడంద అడియేఱ్కుత్ 60


తాయిఱ్ చిఱంద దయావాన తత్తువనే

మాసట్ర సోది మలర్న్ద మలర్చ్చుడరే

తేసనే తేనార్ అముదే సివపురనే

పాసమాం పట్రఱుత్తుప్ పారిక్కుం ఆరియనే

నేస అరుళ్-పురిందు నెంజిల్ వంజంగెడప్ 65


పేరాదు నిండ్ర పెరుంగరుణైప్ పేరాఱే

ఆరా అముదే అళవిలాప్ పెమ్మానే

ఓరాదార్ ఉళ్ళత్తు ఒళిక్కుం ఒళియానే

నీరాయ్ ఉరుక్కి ఎన్ ఆరుయిరాయ్ నిండ్రానే

ఇన్బముం తున్బముం ఇల్లానే ఉళ్ళానే 70


అన్బరుక్కు అన్బనే యావైయుమాయ్ అల్లైయుమాం

సోదియనే తున్నిరుళే తోండ్రాప్ పెరుమైయనే

ఆదియనే అందం నడువాగి అల్లానే

ఈర్త్తెన్నై ఆట్కొండ ఎందై పెరుమానే

కూర్త్త మెయ్ఞ్ఞానత్తాల్ కొండుణర్వార్ తంగరుత్తిల్ 75


నోక్కరియ నోక్కే నుణుక్కరియ నుణ్ ఉణర్వే

పోక్కుం వరవుం పుణర్వుం ఇలాప్ పుణ్ణియనే

కాక్కుం ఎం కావలనే కాణ్బరియ పేర్ ఒళియే

ఆట్రిన్బ వెళ్ళమే అత్తా మిక్కాయ్ నిండ్ర

తోట్రచ్ చుడర్ ఒళియాయ్చ్, చొల్లాద నుణ్ ఉణర్వాయ్ 80


మాట్రమాం వైయగత్తిన్ వెవ్వేఱే వందఱివాం

తేట్రనే తేట్రత్ తెళివే ఎన్ సిందనై ఉళ్

ఊట్రాన ఉణ్ణార్ అముదే ఉడైయానే

వేట్రు విగార విడక్కుడంబిన్ ఉట్కిడప్ప

ఆట్రేన్ ఎం ఐయా అరనే ఓ ఎండ్రెండ్రు 85


పోట్రిప్ పుగఴ్న్దిరుందు పొయ్-కెట్టు మెయ్ ఆనార్

మీట్టింగు వందు వినైప్పిఱవి సారామే

కళ్ళప్ పులక్ కురంబై కట్టఴిక్క వల్లానే

నళ్ ఇరుళిల్ నట్టం పయిండ్రాడుం నాదనే

తిల్లైయుట్ కూత్తనే తెన్బాండి నాట్టానే 90

అల్లఱ్ పిఱవి అఱుప్పానే ఓ ఎండ్రు


సొల్లఱ్కు అరియానైచ్ చొల్లిత్ తిరువడిక్కీఴ్చ్

చొల్లియ పాట్టిన్ పొరుళ్ ఉణర్న్దు సొల్లువార్

సెల్వర్ సివ-పురత్తిన్ ఉళ్ళార్ సివన్ అడిక్కీఴ్ప్

పల్లోరుం ఏత్తప్ పణిందు. 95


(Notes on Pronunciation - Tamil poetry conventions - for some words in this verse:

Line-1: వాఅఴ్గ = వా..ఴ్గ = The "వాఅ" indicates "వా" sound is of longer duration than normal.

Line-18: వణఙ్ఙ్గిచ్ = వణఙ్..ఙ్గిచ్ = The double "ఙ్" indicates "ఙ్" sound is of longer duration than normal.

Line-30: సెల్లాఅ = సెల్లా.. = The "లాఅ" indicates "లా" sound is of longer duration than normal.)

Line-59: కాఅట్టి = కా..ట్టి = The "కాఅ" indicates "కా" sound is of longer duration than normal.

================ ============