Verses - PDF: 4.94 - ஈன்றாளுமாய் - īṇḍrāḷumāy
Tamil discussion:
Part-1: https://youtu.be/BOsSLJT3Wbk
Part-2: https://youtu.be/d35WIAeSiug
திருப்பாதிரிப்புலியூர் - பாடலீஸ்வரர் கோயில் தகவல்கள் - Thirupadhiripuliyur - Pataleeswarar Temple info: http://temple.dinamalar.com/New.php?id=548
V. Subramanian
======================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.94 - திருப்பாதிரிப்புலியூர் (திருவிருத்தம்)
Background:
சமண சமயத்திலிருந்து திருநாவுக்கரசர் மீண்டும் சைவ சமயம் சார்ந்ததை அறிந்த பல்லவ மன்னன், சமண குருமார்களின் தூண்டுதலினால், பல்வேறு வகைகளில் அவரைக் கொல்ல முயன்று தோற்றுக் கடைசியிற் கல்லோடு கட்டிக் கடலில் வீசச் செய்தான். அச்சமயத்தில் திருநாவுக்கரசர் 'சொற்றுணை வேதியன்' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி, ஈசன் அருளால் உய்ந்தார். அக்கல் கடலில் தெப்பம்போல் மிதந்து அவரைத் திருப்பாதிரிப்புலியூர் அருகே கரைசேர்த்தது. அவர் திருப்பாதிரிப்புலியூர் ஈசனைப் போற்றி, 'ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்' என்று தொடங்கும் இப்பதிகம் பாடியருளினார்
--------
Varuna (Lord of the sea) carries Thirunavukkarasar to the shore at Thirupadhiripuliyur
#1396 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 131
வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை யாயிட
வேந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கினில்.
Thirunavukkarasar worships Siva in Thirupadhiripuliyur
#1398 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 133
தொழுந்தகை நாவினுக் கரசுந் தொண்டர்முன்
செழுந்திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள்வெண்
கொழுந்தணி சடையனைக் கும்பிட் டன்புற
விழுந்தெழுந் தருணெறி விளங்கப் பாடுவார்.
Thirunavukkarasar sings the "īṇḍrāḷumāy" padhigam
#1399 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 134
"ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாகி" யெனவெடுத்துத்
"தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்கட்"கென்று
வான்றாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்குஞ்
சான்றா மொருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே.
--------------
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.94 - திருப்பாதிரிப்புலியூர் (திருவிருத்தம்)
(திருவிருத்தம் - "கட்டளைக் கலித்துறை" - meter)
பாடல் எண் : 1
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.
(* அடி-3-இல்: இமையவட் கன்பன் - என்று இருந்து பின்னர்ப் பாடம் பிழைபட்டதோ?)
பாடல் எண் : 2
பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றும்
சுற்றா யலைகடன் மூடினுங் கண்டேன் புகனமக்கு
உற்றா னுமையவட் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன மொய்கழலே.
பாடல் எண் : 3
விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தா னினிநமக்கிங்
கடையா வவல மருவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்
உடையா னடிய ரடியடி யோங்கட் கரியதுண்டே.
பாடல் எண் : 4
மாயமெல் லாமுற்ற விட்டிரு ணீங்க மலைமகட்கே
நேயநிலாவ விருந்தா னவன்றன் றிருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சுந் திருப்பாதிரிப்புலியூர்
மேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையு ணின்றனவே.
பாடல் எண் : 5
வைத்த பொருணமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்
அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதைநெஞ்சே.
பாடல் எண் : 6
கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.
பாடல் எண் : 7
எண்ணா தமர ரிரக்கப் பரவையு ணஞ்சையுண்டாய்
திண்ணா ரசுரர் திரிபுரந் தீயெழச் செற்றவனே
பண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழனங் கருத்தி லுடையனவே.
பாடல் எண் : 8
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.
பாடல் எண் : 9
மண்பாத லம்புக்கு மால்கடன் மூடிமற் றேழுலகும்
விண்பா றிசைகெட் டிருசுடர் வீழினு மஞ்சனெஞ்சே
திண்பா னமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.
பாடல் எண் : 10
திருந்தா வமணர் தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா வரக்க னுடனெரித் தாய்பா திரிப்புலியூர்
இருந்தா யடியே னினிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே.
============================= ============================
Word separated version:
Varuna (Lord of the sea) carries Thirunavukkarasar to the shore at Thirupadhiripuliyur
#1396 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 131
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்து அடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்தருளுவித்தனன்
பூந்திருப் பாதிரிப்-புலியூர்ப் பாங்கினில்.
(பூந்திரு = பூம் + திரு)
Thirunavukkarasar worships Siva in Thirupadhiripuliyur
#1398 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 133
தொழும்-தகை நாவினுக்கு அரசும் தொண்டர்-முன்
செழும் திருப்-பாதிரிப்-புலியூர்த் திங்கள்-வெண்
கொழுந்து அணி சடையனைக் கும்பிட்டு அன்பு உற
விழுந்து எழுந்து அருள்-நெறி விளங்கப் பாடுவார்.
Thirunavukkarasar sings the "īṇḍrāḷumāy" padhigam
#1399 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 134
"ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி" என எடுத்துத்
"தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்கட்கு" என்று
வான்-தாழ் புனல்-கங்கை வாழ்-சடையானை, மற்று எவ்வுயிர்க்கும்
சான்று ஆம் ஒருவனைத் தண்-தமிழ் மாலைகள் சாத்தினரே.
--------------
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.94 - திருப்பாதிரிப்புலியூர் (திருவிருத்தம்)
(திருவிருத்தம் - "கட்டளைக் கலித்துறை" - meter)
பாடல் எண் : 1
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினர் ஆய்,
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான்; இமையவர்க்கு அன்பன், திருப்பாதிரிப் புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே.
(* in Line-3: Was the original text - இமையவட்கு அன்பன் - that got corrupted later on?)
பாடல் எண் : 2
பற்றாய் நினைந்திடப் போது நெஞ்சே, இந்தப் பாரை முற்றும்
சுற்றாய் அலை-கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு,
உற்றான், உமையவட்கு அன்பன், திருப்பாதிரிப் புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியினான்-தன மொய்-கழலே.
பாடல் எண் : 3
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்; இனி நமக்கு இங்கு
அடையா அவலம்; அரு-வினை சாரா; நமனை அஞ்சோம்;
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்-புலியூர்
உடையான் அடியர் அடியடியோங்கட்கு அரியது உண்டே.
பாடல் எண் : 4
மாயம் எல்லாம் முற்ற விட்டு, இருள் நீங்க, மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்-புலியூர்
மேய நல்லான் மலர்ப்-பாதம் என் சிந்தையுள் நின்றனவே.
பாடல் எண் : 5
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச்
சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்று இருக்கின் அல்லால்
மொய்த்த கதிர்-மதி போல்வார்-அவர் பாதிரிப்-புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலாப் பேதை-நெஞ்சே.
பாடல் எண் : 6
கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்;
உருவாய்த் தெரிந்து உன்றன் நாமம் பயின்றேன் உனது அருளால்;
திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்;
தருவாய் சிவகதி நீ பாதிரிப்-புலியூர் அரனே.
பாடல் எண் : 7
எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சை உண்டாய்;
திண்-ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனே;
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில்-பாதிரிப்-புலியூர்க்
கண்-ஆர் நுதலாய், கழல் நம் கருத்தில் உடையனவே.
பாடல் எண் : 8
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தர வேண்டும், இவ்-வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்-செய் பாதிரிப்-புலியூர்ச்
செழு-நீர்ப்-புனற்-கங்கை செஞ்சடைமேல் வைத்த தீ-வண்ணனே.
பாடல் எண் : 9
மண் பாதலம் புக்கு, மால்-கடல் மூடி, மற்று ஏழு உலகும்
விண்பால் திசை-கெட்டு, இரு-சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே;
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திருப்பாதிரிப்-புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழல்-இணையே.
பாடல் எண் : 10
திருந்தா அமணர்தம் தீநெறிப் பட்டுத் திகைத்து, முத்தி
தரும் தாள்-இணைக்கே சரணம் புகுந்தேன்; வரை எடுத்த
பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் பாதிரிப்-புலியூர்
இருந்தாய்; அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே.
============================= ============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Varuna (Lord of the sea) carries Thirunavukkarasar to the shore at Thirupadhiripuliyur
#1396 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 131
vāynda sīr varuṇanē vākkin mannaraic
cērndu aḍai karuṅgalē sivigai āyiḍa
ēndiyē koṇḍu eḻundaruḷuvittanan
pūndirup pādirip-puliyūrp pāṅginil.
(pūndiru = pūm + tiru)
Thirunavukkarasar worships Siva in Thirupadhiripuliyur
#1398 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 133
toḻum-tagai nāvinukku arasum toṇḍar-mun
seḻum tirup-pādirip-puliyūrt tiṅgaḷ-veṇ
koḻundu aṇi saḍaiyanaik kumbiṭṭu anbu uṟa
viḻundu eḻundu aruḷ-neṟi viḷaṅgap pāḍuvār.
Thirunavukkarasar sings the "īṇḍrāḷumāy" padhigam
#1399 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 134
"īṇḍrāḷum āy enakku endaiyum āgi" ena eḍuttut
"tōṇḍrāt tuṇaiyāy irundanan tan aḍiyōṅgaṭku" eṇḍru
vān-tāḻ punal-gaṅgai vāḻ-saḍaiyānai, maṭru evvuyirkkum
sāṇḍru ām oruvanait taṇ-tamiḻ mālaigaḷ sāttinarē.
--------------
tirunāvukkarasar tēvāram - padigam 4.94 - tiruppādirippuliyūr (tiruviruttam)
(tiruviruttam - "kaṭṭaḷaik kalittuṟai" - meter)
pāḍal eṇ : 1
īṇḍrāḷum āy, enakku endaiyum āy, uḍan tōṇḍrinar āy,
mūṇḍrāy ulagam paḍaittu ugandān manattuḷ irukka
ēṇḍrān; imaiyavarkku anban, tiruppādirip puliyūrt
tōṇḍrāt tuṇaiyāy irundanan tan aḍiyōṅgaḷukkē.
(* in Line-3: Was the original text - imaiyavaṭku anban - that got corrupted later on?)
pāḍal eṇ : 2
paṭrāy ninaindiḍap pōdu neñjē, indap pārai muṭrum
suṭrāy alai-kaḍal mūḍinum kaṇḍēn pugal namakku,
uṭrān, umaiyavaṭku anban, tiruppādirip puliyūr
muṭrā muḷaimadik kaṇṇiyinān-tana moy-kaḻalē.
pāḍal eṇ : 3
viḍaiyān virumbi en uḷḷattu irundān; ini namakku iṅgu
aḍaiyā avalam; aru-vinai sārā; namanai añjōm;
puḍai ār kamalattu ayan pōlbavar pādirip-puliyūr
uḍaiyān aḍiyar aḍiyaḍiyōṅgaṭku ariyadu uṇḍē.
pāḍal eṇ : 4
māyam ellām muṭra viṭṭu, iruḷ nīṅga, malaimagaṭkē
nēyam nilāva irundān avan-tan tiruvaḍikkē
tēyam ellām niṇḍru iṟaiñjum tiruppādirip-puliyūr
mēya nallān malarp-pādam en sindaiyuḷ niṇḍranavē.
pāḍal eṇ : 5
vaitta poruḷ namakku ām eṇḍru solli manattu aḍaittuc
cittam orukkic civāyanama eṇḍru irukkin allāl
moytta kadir-madi pōlvār-avar pādirip-puliyūr
attan aruḷ peṟal āmō aṟivu ilāp pēdai-neñjē.
pāḍal eṇ : 6
karuvāyk kiḍandu un kaḻalē ninaiyum karuttu uḍaiyēn;
uruvāyt terindu uṇḍran nāmam payiṇḍrēn unadu aruḷāl;
tiruvāyp poliyac civāyanama eṇḍru nīṟu aṇindēn;
taruvāy sivagadi nī pādirip-puliyūr aranē.
pāḍal eṇ : 7
eṇṇādu amarar irakkap paravaiyuḷ nañjai uṇḍāy;
tiṇ-ār asurar tiriburam tī eḻac ceṭravanē;
paṇ ārndu amainda poruḷgaḷ payil-pādirip-puliyūrk
kaṇ-ār nudalāy, kaḻal nam karuttil uḍaiyanavē.
pāḍal eṇ : 8
puḻuvāyp piṟakkinum puṇṇiyā un aḍi en manattē
vaḻuvādu irukka varam tara vēṇḍum, iv-vaiyagattē
toḻuvārkku iraṅgi irundu aruḷ-sey pādirip-puliyūrc
ceḻu-nīrp-punaṟ-kaṅgai señjaḍaimēl vaitta tī-vaṇṇanē.
pāḍal eṇ : 9
maṇ pādalam pukku, māl-kaḍal mūḍi, maṭru ēḻu ulagum
viṇbāl tisai-keṭṭu, iru-suḍar vīḻinum añjal neñjē;
tiṇbāl namakku oṇḍru kaṇḍōm tiruppādirip-puliyūrk
kaṇbāvu neṭrik kaḍavuṭ cuḍarān kaḻal-iṇaiyē.
pāḍal eṇ : 10
tirundā amaṇardam tīneṟip paṭṭut tigaittu, mutti
tarum tāḷ-iṇaikkē saraṇam pugundēn; varai eḍutta
porundā arakkan uḍal nerittāy pādirip-puliyūr
irundāy; aḍiyēn inip piṟavāmal vandu ēṇḍrugoḷḷē.
============================= ============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Varuna (Lord of the sea) carries Thirunavukkarasar to the shore at Thirupadhiripuliyur
#1396 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 131
वाय्न्द सीर् वरुणने वाक्किन् मन्नरैच्
चेर्न्दु अडै करुङ्गले सिविगै आयिड
एन्दिये कॊण्डु ऎऴुन्दरुळुवित्तनन्
पून्दिरुप् पादिरिप्-पुलियूर्प् पाङ्गिनिल्.
(पून्दिरु = पूम् + तिरु)
Thirunavukkarasar worships Siva in Thirupadhiripuliyur
#1398 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 133
तॊऴुम्-तगै नाविनुक्कु अरसुम् तॊण्डर्-मुन्
सॆऴुम् तिरुप्-पादिरिप्-पुलियूर्त् तिङ्गळ्-वॆण्
कॊऴुन्दु अणि सडैयनैक् कुम्बिट्टु अन्बु उऱ
विऴुन्दु ऎऴुन्दु अरुळ्-नॆऱि विळङ्गप् पाडुवार्.
Thirunavukkarasar sings the "īṇḍrāḷumāy" padhigam
#1399 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 134
"ईण्ड्राळुम् आय् ऎनक्कु ऎन्दैयुम् आगि" ऎन ऎडुत्तुत्
"तोण्ड्रात् तुणैयाय् इरुन्दनन् तन् अडियोङ्गट्कु" ऎण्ड्रु
वान्-ताऴ् पुनल्-गङ्गै वाऴ्-सडैयानै, मट्रु ऎव्वुयिर्क्कुम्
साण्ड्रु आम् ऒरुवनैत् तण्-तमिऴ् मालैगळ् सात्तिनरे.
--------------
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.94 - तिरुप्पादिरिप्पुलियूर् (तिरुविरुत्तम्)
(तिरुविरुत्तम् - "कट्टळैक् कलित्तुऱै" - meter)
पाडल् ऎण् : 1
ईण्ड्राळुम् आय्, ऎनक्कु ऎन्दैयुम् आय्, उडन् तोण्ड्रिनर् आय्,
मूण्ड्राय् उलगम् पडैत्तु उगन्दान् मनत्तुळ् इरुक्क
एण्ड्रान्; इमैयवर्क्कु अन्बन्, तिरुप्पादिरिप् पुलियूर्त्
तोण्ड्रात् तुणैयाय् इरुन्दनन् तन् अडियोङ्गळुक्के.
(* in Line-3: Was the original text - इमैयवट्कु अन्बन् - that got corrupted later on?)
पाडल् ऎण् : 2
पट्राय् निनैन्दिडप् पोदु नॆञ्जे, इन्दप् पारै मुट्रुम्
सुट्राय् अलै-कडल् मूडिनुम् कण्डेन् पुगल् नमक्कु,
उट्रान्, उमैयवट्कु अन्बन्, तिरुप्पादिरिप् पुलियूर्
मुट्रा मुळैमदिक् कण्णियिनान्-तन मॊय्-कऴले.
पाडल् ऎण् : 3
विडैयान् विरुम्बि ऎन् उळ्ळत्तु इरुन्दान्; इनि नमक्कु इङ्गु
अडैया अवलम्; अरु-विनै सारा; नमनै अञ्जोम्;
पुडै आर् कमलत्तु अयन् पोल्बवर् पादिरिप्-पुलियूर्
उडैयान् अडियर् अडियडियोङ्गट्कु अरियदु उण्डे.
पाडल् ऎण् : 4
मायम् ऎल्लाम् मुट्र विट्टु, इरुळ् नीङ्ग, मलैमगट्के
नेयम् निलाव इरुन्दान् अवन्-तन् तिरुवडिक्के
तेयम् ऎल्लाम् निण्ड्रु इऱैञ्जुम् तिरुप्पादिरिप्-पुलियूर्
मेय नल्लान् मलर्प्-पादम् ऎन् सिन्दैयुळ् निण्ड्रनवे.
पाडल् ऎण् : 5
वैत्त पॊरुळ् नमक्कु आम् ऎण्ड्रु सॊल्लि मनत्तु अडैत्तुच्
चित्तम् ऒरुक्किच् चिवायनम ऎण्ड्रु इरुक्किन् अल्लाल्
मॊय्त्त कदिर्-मदि पोल्वार्-अवर् पादिरिप्-पुलियूर्
अत्तन् अरुळ् पॆऱल् आमो अऱिवु इलाप् पेदै-नॆञ्जे.
पाडल् ऎण् : 6
करुवाय्क् किडन्दु उन् कऴले निनैयुम् करुत्तु उडैयेन्;
उरुवाय्त् तॆरिन्दु उण्ड्रन् नामम् पयिण्ड्रेन् उनदु अरुळाल्;
तिरुवाय्प् पॊलियच् चिवायनम ऎण्ड्रु नीऱु अणिन्देन्;
तरुवाय् सिवगदि नी पादिरिप्-पुलियूर् अरने.
पाडल् ऎण् : 7
ऎण्णादु अमरर् इरक्कप् परवैयुळ् नञ्जै उण्डाय्;
तिण्-आर् असुरर् तिरिबुरम् ती ऎऴच् चॆट्रवने;
पण् आर्न्दु अमैन्द पॊरुळ्गळ् पयिल्-पादिरिप्-पुलियूर्क्
कण्-आर् नुदलाय्, कऴल् नम् करुत्तिल् उडैयनवे.
पाडल् ऎण् : 8
पुऴुवाय्प् पिऱक्किनुम् पुण्णिया उन् अडि ऎन् मनत्ते
वऴुवादु इरुक्क वरम् तर वेण्डुम्, इव्-वैयगत्ते
तॊऴुवार्क्कु इरङ्गि इरुन्दु अरुळ्-सॆय् पादिरिप्-पुलियूर्च्
चॆऴु-नीर्प्-पुनऱ्-कङ्गै सॆञ्जडैमेल् वैत्त ती-वण्णने.
पाडल् ऎण् : 9
मण् पादलम् पुक्कु, माल्-कडल् मूडि, मट्रु एऴु उलगुम्
विण्बाल् तिसै-कॆट्टु, इरु-सुडर् वीऴिनुम् अञ्जल् नॆञ्जे;
तिण्बाल् नमक्कु ऒण्ड्रु कण्डोम् तिरुप्पादिरिप्-पुलियूर्क्
कण्बावु नॆट्रिक् कडवुट् चुडरान् कऴल्-इणैये.
पाडल् ऎण् : 10
तिरुन्दा अमणर्दम् तीनॆऱिप् पट्टुत् तिगैत्तु, मुत्ति
तरुम् ताळ्-इणैक्के सरणम् पुगुन्देन्; वरै ऎडुत्त
पॊरुन्दा अरक्कन् उडल् नॆरित्ताय् पादिरिप्-पुलियूर्
इरुन्दाय्; अडियेन् इनिप् पिऱवामल् वन्दु एण्ड्रुगॊळ्ळे.
============================= ============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Varuna (Lord of the sea) carries Thirunavukkarasar to the shore at Thirupadhiripuliyur
#1396 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 131
వాయ్న్ద సీర్ వరుణనే వాక్కిన్ మన్నరైచ్
చేర్న్దు అడై కరుంగలే సివిగై ఆయిడ
ఏందియే కొండు ఎఴుందరుళువిత్తనన్
పూందిరుప్ పాదిరిప్-పులియూర్ప్ పాంగినిల్.
(పూందిరు = పూం + తిరు)
Thirunavukkarasar worships Siva in Thirupadhiripuliyur
#1398 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 133
తొఴుం-తగై నావినుక్కు అరసుం తొండర్-మున్
సెఴుం తిరుప్-పాదిరిప్-పులియూర్త్ తింగళ్-వెణ్
కొఴుందు అణి సడైయనైక్ కుంబిట్టు అన్బు ఉఱ
విఴుందు ఎఴుందు అరుళ్-నెఱి విళంగప్ పాడువార్.
Thirunavukkarasar sings the "īṇḍrāḷumāy" padhigam
#1399 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 134
"ఈండ్రాళుం ఆయ్ ఎనక్కు ఎందైయుం ఆగి" ఎన ఎడుత్తుత్
"తోండ్రాత్ తుణైయాయ్ ఇరుందనన్ తన్ అడియోంగట్కు" ఎండ్రు
వాన్-తాఴ్ పునల్-గంగై వాఴ్-సడైయానై, మట్రు ఎవ్వుయిర్క్కుం
సాండ్రు ఆం ఒరువనైత్ తణ్-తమిఴ్ మాలైగళ్ సాత్తినరే.
--------------
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.94 - తిరుప్పాదిరిప్పులియూర్ (తిరువిరుత్తం)
(తిరువిరుత్తం - "కట్టళైక్ కలిత్తుఱై" - meter)
పాడల్ ఎణ్ : 1
ఈండ్రాళుం ఆయ్, ఎనక్కు ఎందైయుం ఆయ్, ఉడన్ తోండ్రినర్ ఆయ్,
మూండ్రాయ్ ఉలగం పడైత్తు ఉగందాన్ మనత్తుళ్ ఇరుక్క
ఏండ్రాన్; ఇమైయవర్క్కు అన్బన్, తిరుప్పాదిరిప్ పులియూర్త్
తోండ్రాత్ తుణైయాయ్ ఇరుందనన్ తన్ అడియోంగళుక్కే.
(* in Line-3: Was the original text - ఇమైయవట్కు అన్బన్ - that got corrupted later on?)
పాడల్ ఎణ్ : 2
పట్రాయ్ నినైందిడప్ పోదు నెంజే, ఇందప్ పారై ముట్రుం
సుట్రాయ్ అలై-కడల్ మూడినుం కండేన్ పుగల్ నమక్కు,
ఉట్రాన్, ఉమైయవట్కు అన్బన్, తిరుప్పాదిరిప్ పులియూర్
ముట్రా ముళైమదిక్ కణ్ణియినాన్-తన మొయ్-కఴలే.
పాడల్ ఎణ్ : 3
విడైయాన్ విరుంబి ఎన్ ఉళ్ళత్తు ఇరుందాన్; ఇని నమక్కు ఇంగు
అడైయా అవలం; అరు-వినై సారా; నమనై అంజోం;
పుడై ఆర్ కమలత్తు అయన్ పోల్బవర్ పాదిరిప్-పులియూర్
ఉడైయాన్ అడియర్ అడియడియోంగట్కు అరియదు ఉండే.
పాడల్ ఎణ్ : 4
మాయం ఎల్లాం ముట్ర విట్టు, ఇరుళ్ నీంగ, మలైమగట్కే
నేయం నిలావ ఇరుందాన్ అవన్-తన్ తిరువడిక్కే
తేయం ఎల్లాం నిండ్రు ఇఱైంజుం తిరుప్పాదిరిప్-పులియూర్
మేయ నల్లాన్ మలర్ప్-పాదం ఎన్ సిందైయుళ్ నిండ్రనవే.
పాడల్ ఎణ్ : 5
వైత్త పొరుళ్ నమక్కు ఆం ఎండ్రు సొల్లి మనత్తు అడైత్తుచ్
చిత్తం ఒరుక్కిచ్ చివాయనమ ఎండ్రు ఇరుక్కిన్ అల్లాల్
మొయ్త్త కదిర్-మది పోల్వార్-అవర్ పాదిరిప్-పులియూర్
అత్తన్ అరుళ్ పెఱల్ ఆమో అఱివు ఇలాప్ పేదై-నెంజే.
పాడల్ ఎణ్ : 6
కరువాయ్క్ కిడందు ఉన్ కఴలే నినైయుం కరుత్తు ఉడైయేన్;
ఉరువాయ్త్ తెరిందు ఉండ్రన్ నామం పయిండ్రేన్ ఉనదు అరుళాల్;
తిరువాయ్ప్ పొలియచ్ చివాయనమ ఎండ్రు నీఱు అణిందేన్;
తరువాయ్ సివగది నీ పాదిరిప్-పులియూర్ అరనే.
పాడల్ ఎణ్ : 7
ఎణ్ణాదు అమరర్ ఇరక్కప్ పరవైయుళ్ నంజై ఉండాయ్;
తిణ్-ఆర్ అసురర్ తిరిబురం తీ ఎఴచ్ చెట్రవనే;
పణ్ ఆర్న్దు అమైంద పొరుళ్గళ్ పయిల్-పాదిరిప్-పులియూర్క్
కణ్-ఆర్ నుదలాయ్, కఴల్ నం కరుత్తిల్ ఉడైయనవే.
పాడల్ ఎణ్ : 8
పుఴువాయ్ప్ పిఱక్కినుం పుణ్ణియా ఉన్ అడి ఎన్ మనత్తే
వఴువాదు ఇరుక్క వరం తర వేండుం, ఇవ్-వైయగత్తే
తొఴువార్క్కు ఇరంగి ఇరుందు అరుళ్-సెయ్ పాదిరిప్-పులియూర్చ్
చెఴు-నీర్ప్-పునఱ్-కంగై సెంజడైమేల్ వైత్త తీ-వణ్ణనే.
పాడల్ ఎణ్ : 9
మణ్ పాదలం పుక్కు, మాల్-కడల్ మూడి, మట్రు ఏఴు ఉలగుం
విణ్బాల్ తిసై-కెట్టు, ఇరు-సుడర్ వీఴినుం అంజల్ నెంజే;
తిణ్బాల్ నమక్కు ఒండ్రు కండోం తిరుప్పాదిరిప్-పులియూర్క్
కణ్బావు నెట్రిక్ కడవుట్ చుడరాన్ కఴల్-ఇణైయే.
పాడల్ ఎణ్ : 10
తిరుందా అమణర్దం తీనెఱిప్ పట్టుత్ తిగైత్తు, ముత్తి
తరుం తాళ్-ఇణైక్కే సరణం పుగుందేన్; వరై ఎడుత్త
పొరుందా అరక్కన్ ఉడల్ నెరిత్తాయ్ పాదిరిప్-పులియూర్
ఇరుందాయ్; అడియేన్ ఇనిప్ పిఱవామల్ వందు ఏండ్రుగొళ్ళే.
============================= ============================
No comments:
Post a Comment