Monday, August 31, 2015

5.42 - நன்று நாள்தொறும் - திருவேட்களம் - tiruvēṭkaḷam - naṇḍru nāḷdoṟum

11) padhigam 5.42 - திருவேட்களம் - (திருக்குறுந்தொகை)

5.42 - நன்று நாள்தொறும்

Verses - PDF: 5.42 - நன்று நாள்தொறும் - naṇḍru nāḷdoṟum

Tamil discussion audio recording: If you need them - please use the contact form on the right.


5.42 - நன்று நாள்தொறும் - naṇḍru nāḷdoṟum - Detailed translation - English

https://drive.google.com/file/d/1YRN7m3IuSBgFi2FOe6N3pQGzucgTNXQa/view?usp=sharing

***
On YouTube:
English Discussion:
Part-1: https://youtu.be/BBGlTdULP5U
Part-2: https://youtu.be/faYvsweOn_4
***
English translation for this padhigam - by V.M. Subramanya Aiyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS5_042.HTM

Padhigam - sung by Muthukumaran Odhuvar: https://youtu.be/v6nGAgQGOq0

திருவேட்களம் - பாசுபதேஸ்வரர் கோயில் - Thiruvetkalam Pasupatheswarar Temple: info: http://temple.dinamalar.com/en/new_en.php?id=855

V. Subramanian
======================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.

பதிகம் 5.42 - திருவேட்களம் ( திருக்குறுந்தொகை )

Background:
திருநாவுக்கரசர் தில்லையில் கூத்தப்பிரானை வழிபட்டுப் பின் அருகுள்ள தலங்களை வழிபட்டுத் தில்லை மீண்டார். அச்சமயத்தில் திருவேட்களத்தில் இப்பதிகம் பாடியருளினார்.

திருவேட்களம்: தலக்குறிப்பு:
அர்ச்சுனனுக்குப் பாசுபதம் தந்தருளிய தலம்.

இத்தலம் அண்ணாமலை நகரில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் சென்று, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்துள் புகுந்து நேரே சென்றால் (பல்கலைக்கழகப் பகுதியைத் தாண்டி) சாலை ஓரத்தில் கோயில் உள்ளது.

--------------
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.42 - திருவேட்களம்

பாடல் எண் : 1
நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்று மின்பந் தழைக்கவி ருக்கலாம்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

பாடல் எண் : 2
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
திருப்ப னாகி லெனக்கிட ரில்லையே.

பாடல் எண் : 3
வேட்க ளத்துறை வேதிய னெம்மிறை
ஆக்க ளேறுவ ரானைஞ்சு மாடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.

பாடல் எண் : 4
அல்ல லில்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
வல்ல ராகில் வழியது காண்மினே.

பாடல் எண் : 5
துன்ப மில்லை துயரில்லை யாமினி
நம்ப னாகிய நன்மணி கண்டனார்
என்பொ னாருறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே.

பாடல் எண் : 6
கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே.

பாடல் எண் : 7
வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
எட்டு மொன்று மிரண்டுமூன் றாயினார்
சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
திட்ட மாகி யிருமட நெஞ்சமே.

பாடல் எண் : 8
நட்ட மாடிய நம்பனை நாள்தொறும்
இட்டத் தாலினி தாக நினைமினோ
வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே.

பாடல் எண் : 9
வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.

பாடல் எண் : 10
சேட னாருறை யுஞ்செழு மாமலை
ஓடி ஆங்கெடுத் தான்முடி பத்திற
வாட வூன்றி மலரடி வாங்கிய
வேட னாருறை வேட்களஞ் சேர்மினே.

============================= ============================

Word separated version:
--------------
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.42 - திருவேட்களம்

பாடல் எண் : 1
நன்று நாள்தொறும்; நம் வினை போய் அறும்;
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்;
சென்று நீர், திரு-வேட்களத்துள் உறை,
துன்று பொற்சடையானைத் தொழுமினே.

பாடல் எண் : 2
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்;
பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்;
விருப்பன் மேவிய வேட்களம் கை-தொழுது
இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே.

பாடல் எண் : 3
வேட்களத்து உறை வேதியன்; எம் இறை;
ஆக்கள் ஏறுவர்; ஆன் ஐஞ்சும் ஆடுவர்;
பூக்கள் கொண்டு அவன் பொன்னடி போற்றினால்,
காப்பர் நம்மைக் கறை-மிடற்று அண்ணலே.

பாடல் எண் : 4
அல்லல் இல்லை; அருவினைதான் இல்லை;
மல்கு வெண்-பிறை சூடும் மணாளனார்,
செல்வனார் திரு-வேட்களம் கை-தொழ
வல்லராகில்; வழி அது காண்மினே.

பாடல் எண் : 5
துன்பம் இல்லை, துயர் இல்லையாம் இனி;
நம்பன் ஆகிய நன்மணி கண்டனார்,
என்பொனார் உறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி ஏத்தி இருப்பதே.

பாடல் எண் : 6
கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே,
பொட்ட வல்-உயிர் போவதன் முன்னம், நீர்
சிட்டனார் திரு-வேட்களம் கை-தொழப்,
பட்ட வல்வினை ஆயின பாறுமே.

பாடல் எண் : 7
வட்ட மென்-முலையாள் உமை பங்கனார்;
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார்;
சிட்டர் சேர் திரு-வேட்களம் கை-தொழுது
இட்டமாகி இரு மட-நெஞ்சமே.

பாடல் எண் : 8
நட்டம் ஆடிய நம்பனை நாள்தொறும்
இட்டத்தால் இனிதாக நினைமினோ;
வட்ட வார்-முலையாள் உமை பங்கனார்,
சிட்டனார் திரு-வேட்களம் தன்னையே.

பாடல் எண் : 9
வட்ட மா-மதில் மூன்றுடை வல்-அரண்
சுட்ட கொள்கையர் ஆயினும், சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் பொற்றிரு-வேட்களச் செல்வரே.

பாடல் எண் : 10
சேடனார் உறையும் செழு-மா-மலை
ஓடி ஆங்கு எடுத்தான் முடி பத்து இற
வாட ஊன்றி மலரடி வாங்கிய
வேடனார் உறை வேட்களம் சேர்மினே.
============================= ============================

tirunāvukkarasar tēvāram - padigam 5.42 - tiruvēṭkaḷam

pāḍal eṇ : 1
naṇḍru nāḷdoṟum; nam vinai pōy aṟum;
eṇḍrum inbam taḻaikka irukkalām;
seṇḍru nīr, tiru-vēṭkaḷattuḷ uṟai,
tuṇḍru poṟcaḍaiyānait toḻuminē.

pāḍal eṇ : 2
karuppu veñjilaik kāmanaik kāyndavan;
poruppu veñjilaiyāl puram seṭravan;
viruppan mēviya vēṭkaḷam kai-toḻudu
iruppanāgil enakku iḍar illaiyē.

pāḍal eṇ : 3
vēṭkaḷattu uṟai vēdiyan; em iṟai;
ākkaḷ ēṟuvar; ān aiñjum āḍuvar;
pūkkaḷ koṇḍu avan ponnaḍi pōṭrināl,
kāppar nammaik kaṟai-miḍaṭru aṇṇalē.

pāḍal eṇ : 4
allal illai; aruvinaidān illai;
malgu veṇ-piṟai sūḍum maṇāḷanār,
selvanār tiru-vēṭkaḷam kai-toḻa
vallarāgil; vaḻi adu kāṇminē.

pāḍal eṇ : 5
tunbam illai, tuyar illaiyām ini;
namban āgiya nanmaṇi kaṇḍanār,
enbonār uṟai vēṭkaḷa nannagar
inban sēvaḍi ētti iruppadē.

pāḍal eṇ : 6
kaṭṭappaṭṭuk kavalaiyil vīḻādē,
poṭṭa val-uyir pōvadan munnam, nīr
siṭṭanār tiru-vēṭkaḷam kai-toḻap,
paṭṭa valvinai āyina pāṟumē.

pāḍal eṇ : 7
vaṭṭa men-mulaiyāḷ umai paṅganār;
eṭṭum oṇḍrum iraṇḍum mūṇḍru āyinār;
siṭṭar sēr tiru-vēṭkaḷam kai-toḻudu
iṭṭamāgi iru maḍa-neñjamē.

pāḍal eṇ : 8
naṭṭam āḍiya nambanai nāḷdoṟum
iṭṭattāl inidāga ninaiminō;
vaṭṭa vār-mulaiyāḷ umai paṅganār,
siṭṭanār tiru-vēṭkaḷam tannaiyē.

pāḍal eṇ : 9
vaṭṭa mā-madil mūṇḍruḍai val-araṇ
suṭṭa koḷgaiyar āyinum, sūḻndavar
kuṭṭa valvinai tīrttuk kuḷirvikkum
siṭṭar poṭriru-vēṭkaḷac celvarē.

pāḍal eṇ : 10
sēḍanār uṟaiyum seḻu-mā-malai
ōḍi āṅgu eḍuttān muḍi pattu iṟa
vāḍa ūṇḍri malaraḍi vāṅgiya
vēḍanār uṟai vēṭkaḷam sērminē.
=============================
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 5.42 - तिरुवेट्कळम्

पाडल् ऎण् : 1
नण्ड्रु नाळ्दॊऱुम्; नम् विनै पोय् अऱुम्;
ऎण्ड्रुम् इन्बम् तऴैक्क इरुक्कलाम्;
सॆण्ड्रु नीर्, तिरु-वेट्कळत्तुळ् उऱै,
तुण्ड्रु पॊऱ्चडैयानैत् तॊऴुमिने.

पाडल् ऎण् : 2
करुप्पु वॆञ्जिलैक् कामनैक् काय्न्दवन्;
पॊरुप्पु वॆञ्जिलैयाल् पुरम् सॆट्रवन्;
विरुप्पन् मेविय वेट्कळम् कै-तॊऴुदु
इरुप्पनागिल् ऎनक्कु इडर् इल्लैये.

पाडल् ऎण् : 3
वेट्कळत्तु उऱै वेदियन्; ऎम् इऱै;
आक्कळ् एऱुवर्; आन् ऐञ्जुम् आडुवर्;
पूक्कळ् कॊण्डु अवन् पॊन्नडि पोट्रिनाल्,
काप्पर् नम्मैक् कऱै-मिडट्रु अण्णले.

पाडल् ऎण् : 4
अल्लल् इल्लै; अरुविनैदान् इल्लै;
मल्गु वॆण्-पिऱै सूडुम् मणाळनार्,
सॆल्वनार् तिरु-वेट्कळम् कै-तॊऴ
वल्लरागिल्; वऴि अदु काण्मिने.

पाडल् ऎण् : 5
तुन्बम् इल्लै, तुयर् इल्लैयाम् इनि;
नम्बन् आगिय नन्मणि कण्डनार्,
ऎन्बॊनार् उऱै वेट्कळ नन्नगर्
इन्बन् सेवडि एत्ति इरुप्पदे.

पाडल् ऎण् : 6
कट्टप्पट्टुक् कवलैयिल् वीऴादे,
पॊट्ट वल्-उयिर् पोवदन् मुन्नम्, नीर्
सिट्टनार् तिरु-वेट्कळम् कै-तॊऴप्,
पट्ट वल्विनै आयिन पाऱुमे.

पाडल् ऎण् : 7
वट्ट मॆन्-मुलैयाळ् उमै पङ्गनार्;
ऎट्टुम् ऒण्ड्रुम् इरण्डुम् मूण्ड्रु आयिनार्;
सिट्टर् सेर् तिरु-वेट्कळम् कै-तॊऴुदु
इट्टमागि इरु मड-नॆञ्जमे.

पाडल् ऎण् : 8
नट्टम् आडिय नम्बनै नाळ्दॊऱुम्
इट्टत्ताल् इनिदाग निनैमिनो;
वट्ट वार्-मुलैयाळ् उमै पङ्गनार्,
सिट्टनार् तिरु-वेट्कळम् तन्नैये.

पाडल् ऎण् : 9
वट्ट मा-मदिल् मूण्ड्रुडै वल्-अरण्
सुट्ट कॊळ्गैयर् आयिनुम्, सूऴ्न्दवर्
कुट्ट वल्विनै तीर्त्तुक् कुळिर्विक्कुम्
सिट्टर् पॊट्रिरु-वेट्कळच् चॆल्वरे.

पाडल् ऎण् : 10
सेडनार् उऱैयुम् सॆऴु-मा-मलै
ओडि आङ्गु ऎडुत्तान् मुडि पत्तु इऱ
वाड ऊण्ड्रि मलरडि वाङ्गिय
वेडनार् उऱै वेट्कळम् सेर्मिने.
=============================
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 5.42 - తిరువేట్కళం

పాడల్ ఎణ్ : 1
నండ్రు నాళ్దొఱుం; నం వినై పోయ్ అఱుం;
ఎండ్రుం ఇన్బం తఴైక్క ఇరుక్కలాం;
సెండ్రు నీర్, తిరు-వేట్కళత్తుళ్ ఉఱై,
తుండ్రు పొఱ్చడైయానైత్ తొఴుమినే.

పాడల్ ఎణ్ : 2
కరుప్పు వెంజిలైక్ కామనైక్ కాయ్న్దవన్;
పొరుప్పు వెంజిలైయాల్ పురం సెట్రవన్;
విరుప్పన్ మేవియ వేట్కళం కై-తొఴుదు
ఇరుప్పనాగిల్ ఎనక్కు ఇడర్ ఇల్లైయే.

పాడల్ ఎణ్ : 3
వేట్కళత్తు ఉఱై వేదియన్; ఎం ఇఱై;
ఆక్కళ్ ఏఱువర్; ఆన్ ఐంజుం ఆడువర్;
పూక్కళ్ కొండు అవన్ పొన్నడి పోట్రినాల్,
కాప్పర్ నమ్మైక్ కఱై-మిడట్రు అణ్ణలే.

పాడల్ ఎణ్ : 4
అల్లల్ ఇల్లై; అరువినైదాన్ ఇల్లై;
మల్గు వెణ్-పిఱై సూడుం మణాళనార్,
సెల్వనార్ తిరు-వేట్కళం కై-తొఴ
వల్లరాగిల్; వఴి అదు కాణ్మినే.

పాడల్ ఎణ్ : 5
తున్బం ఇల్లై, తుయర్ ఇల్లైయాం ఇని;
నంబన్ ఆగియ నన్మణి కండనార్,
ఎన్బొనార్ ఉఱై వేట్కళ నన్నగర్
ఇన్బన్ సేవడి ఏత్తి ఇరుప్పదే.

పాడల్ ఎణ్ : 6
కట్టప్పట్టుక్ కవలైయిల్ వీఴాదే,
పొట్ట వల్-ఉయిర్ పోవదన్ మున్నం, నీర్
సిట్టనార్ తిరు-వేట్కళం కై-తొఴప్,
పట్ట వల్వినై ఆయిన పాఱుమే.

పాడల్ ఎణ్ : 7
వట్ట మెన్-ములైయాళ్ ఉమై పంగనార్;
ఎట్టుం ఒండ్రుం ఇరండుం మూండ్రు ఆయినార్;
సిట్టర్ సేర్ తిరు-వేట్కళం కై-తొఴుదు
ఇట్టమాగి ఇరు మడ-నెంజమే.

పాడల్ ఎణ్ : 8
నట్టం ఆడియ నంబనై నాళ్దొఱుం
ఇట్టత్తాల్ ఇనిదాగ నినైమినో;
వట్ట వార్-ములైయాళ్ ఉమై పంగనార్,
సిట్టనార్ తిరు-వేట్కళం తన్నైయే.

పాడల్ ఎణ్ : 9
వట్ట మా-మదిల్ మూండ్రుడై వల్-అరణ్
సుట్ట కొళ్గైయర్ ఆయినుం, సూఴ్న్దవర్
కుట్ట వల్వినై తీర్త్తుక్ కుళిర్విక్కుం
సిట్టర్ పొట్రిరు-వేట్కళచ్ చెల్వరే.

పాడల్ ఎణ్ : 10
సేడనార్ ఉఱైయుం సెఴు-మా-మలై
ఓడి ఆంగు ఎడుత్తాన్ ముడి పత్తు ఇఱ
వాడ ఊండ్రి మలరడి వాంగియ
వేడనార్ ఉఱై వేట్కళం సేర్మినే.
=============================

No comments:

Post a Comment