Monday, August 10, 2015

5.90 - மாசில் வீணையும் - māsil vīṇaiyum - பொது (தனித் திருக்குறுந்தொகை)


5.90 - mAsil vINaiyum - word by word meaning - English translation:

https://drive.google.com/open?id=1dF3VzmZykX_K0kLVxRGft6pZ91ii96ln


***
On YouTube:
Tamil discussion

English discussion:
Part-1: https://youtu.be/lQq4wvZx3tE
Part-2: https://youtu.be/JBvjNuXxYHU
Part-3: https://youtu.be/OpE6siSlbXI
***

You can find this padhigam as sung by thiruththaNi Swaminathan on this page: http://www.shaivam.org/gallery/audio/tis-tns-nalamiku-padhikangal.htm
The direct link isமாசில் வீணையும் (Maasil veenaiyum) : http://www.shaivam.org/gallery/audio/thiruthani-swaminathan/nalamiku-padhikangal/tis-tns-np-26-maasil-veenayum.mp3

===============

This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.90 - பொது (தனித் திருக்குறுந்தொகை)

Background:

சமண சமயத்திலிருந்து திருநாவுக்கரசர் மீண்டும் சைவ சமயம் சார்ந்ததை அறிந்த பல்லவ மன்னன், சமண குருமார்களின் ஏவலால் திருநாவுக்கரசரை அழைத்துவரச்செய்தான். அவர்களின் தூண்டுகோலால் அவரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) இடுமாறு ஆணையிட்டான். சமணர்கள் அவரை நீற்றறையில் அடைத்துத் தாளிட்டனர். திருநாவுக்கரசர் அதனகத்துள் பெருமான் திருவடிகளையே எண்ணி, "ஈசன் அடியார்க்கு ஈண்டு வரும் துயர் உளவோ" என்று இருந்தார்கள். நீற்றறை இளவேனிற் பருவத்தில் தென்றல் வீசும் செங்கழுநீர்த் தடாகக் கரையைப்போல எம்பிரான் திருவடி நீழலாய்க் குளிர்ந்தது . அந்நிலையைக்காட்டுகிறது இத்திருப்பதிகம் . (திருமுறை 12 திருநாவுக்கரசர் புராணம் - பாடல் 98.)

--------

The Jains advise the Pallava to king to put Thirunavukkarasar in the lime kiln

#1360 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 95

பல்லவனு மதுகேட்டுப் பாங்கிருந்த பாயுடுக்கை

வல்லமணர் தமைநோக்கி, "மற்றவனைச் செய்வதினிச்

சொல்லு"மென, வறந்துறந்து தமக்குறுதி யறியாத

புல்லறிவோ ரஞ்சாது நீற்றறையி லிடப்புகன்றார்.


Thirunavukkarasar is saved by Siva's grace

#1363 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 98

வெய்யநீற் றறையதுதான் வீங்கிளவே னிற்பருவந்

தைவருதண் டென்றலணை தண்கழுநீர்த் தடம்போன்று

மொய்யொளிவெண் ணிலவலர்ந்து முரன்றயா ழொலியினதாய்

ஐயர்திரு வடிநீழ லருளாகிக் குளிர்ந்ததே.

--------------

பாடல் எண் : 1

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே.


பாடல் எண் : 2

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்

நமச்சி வாயவே நானறி விச்சையும்

நமச்சி வாயவே நாநவின் றேத்துமே

நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.


பாடல் எண் : 3

ஆளா காரா ளானாரை யடைந் துய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளா தசுரை யோதொழும் பர்செவி

வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.


பாடல் எண் : 4

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்

சுடலை சேர்வது சொற்பிர மாணமே

கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்

உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.


பாடல் எண் : 5

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்

நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்

ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து

காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.


பாடல் எண் : 6

குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்

நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்

அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்

பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.


பாடல் எண் : 7

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்

தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.


பாடல் எண் : 8

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்

தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்

டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்

டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.


பாடல் எண் : 9

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்

பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு

நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.


பாடல் எண் : 10

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.


============================= ============================

Word separated version:


The Jains advise the Pallava to king to put Thirunavukkarasar in the lime kiln

#1360 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 95

பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய்-உடுக்கை

வல்-அமணர்தமை நோக்கி, "மற்று அவனைச் செய்வது இனிச்

சொல்லும்" என, அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத

புல்-அறிவோர் அஞ்சாது நீற்றறையில் இடப் புகன்றார்.


Thirunavukkarasar is saved by Siva's grace

#1363 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 98

வெய்ய நீற்றறை அதுதான் வீங்கு இள-வேனில் பருவம்

தைவரு தண்-தென்றல் அணை தண்-கழுநீர்த் தடம் போன்று

மொய்-ஒளி வெண்ணிலவு அலர்ந்து முரன்ற யாழ்-ஒலியினதாய்

ஐயர் திருவடி-நீழல் அருள் ஆகிக் குளிர்ந்ததே.

--------------


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.90 - பொது (தனித் திருக்குறுந்தொகை)


பாடல் எண் : 1

மாசில் வீணையும், மாலை மதியமும்,

வீசு தென்றலும், வீங்கிள-வேனிலும்,

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே,

ஈசன் எந்தை இணையடி நீழலே.

(மாசில் = மாசு இல்; வீங்கிள = வீங்கு இள; வண்டறை = வண்டு அறை;)


பாடல் எண் : 2

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்;

நமச்சிவாயவே நான் அறி விச்சையும்;

நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.


பாடல் எண் : 3

ஆள் ஆகார்; ஆள் ஆனாரை அடைந்து உய்யார்;

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்;

தோளாத சுரையோ தொழும்பர் செவி?

வாளா மாய்ந்து, மண் ஆகிக் கழிவரே.


பாடல் எண் : 4

நடலை வாழ்வு கொண்டு என் செய்திர் நாண் இலீர்?

சுடலை சேர்வது சொற்-பிரமாணமே?

கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்,

உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே.


பாடல் எண் : 5

பூக் கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்;

நாக்கைக்கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து,

காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே.


பாடல் எண் : 6

குறிகளும், அடையாளமும், கோயிலும்,

நெறிகளும், அவர் நின்றதோர் நேர்மையும்,

அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்,

பொறி இலீர், மனம் என்கொல் புகாததே.


பாடல் எண் : 7

வாழ்த்த வாயும், நினைக்க மட-நெஞ்சும்,

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே.


பாடல் எண் : 8

எழுது பாவை-நல்லார் திறம் விட்டு நான்

தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்துகொண்டு,

உழுத சால் வழியே உழுவான் பொருட்டு

இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே.


பாடல் எண் : 9

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்-ஆர்-சடைப் புண்ணியன்,

பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு,

நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.


பாடல் எண் : 10

விறகில் தீயினன்; பாலில் படு நெய்-போல்

மறைய நின்று உளன்; மாமணிச் சோதியான்;

உறவு கோல் நட்டு, உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.

============================= ============================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


The Jains advise the Pallava to king to put Thirunavukkarasar in the lime kiln

#1360 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 95

pallavanum adu kēṭṭup pāṅgu irunda pāy-uḍukkai

val-amaṇardamai nōkki, "maṭru avanaic ceyvadu inic

collum" ena, aṟam tuṟandu tamakku uṟudi aṟiyāda

pul-aṟivōr añjādu nīṭraṟaiyil iḍap pugaṇḍrār.


Thirunavukkarasar is saved by Siva's grace

#1363 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 98

veyya nīṭraṟai adudān vīṅgu iḷa-vēnil paruvam

taivaru taṇ-teṇḍral aṇai taṇ-kaḻunīrt taḍam pōṇḍru

moy-oḷi veṇṇilavu alarndu muraṇḍra yāḻ-oliyinadāy

aiyar tiruvaḍi-nīḻal aruḷ āgik kuḷirndadē.

--------------


tirunāvukkarasar tēvāram - padigam 5.90 - podu (tanit tirukkuṟundogai)


pāḍal eṇ : 1

māsil vīṇaiyum, mālai madiyamum,

vīsu teṇḍralum, vīṅgiḷa-vēnilum,

mūsu vaṇḍaṟai poygaiyum pōṇḍradē,

īsan endai iṇaiyaḍi nīḻalē.

(māsil = māsu il; vīṅgiḷa = vīṅgu iḷa; vaṇḍaṟai = vaṇḍu aṟai;)


pāḍal eṇ : 2

namaccivāyavē ñānamum kalviyum;

namaccivāyavē nān aṟi viccaiyum;

namaccivāyavē nā naviṇḍru ēttumē;

namaccivāyavē nanneṟi kāṭṭumē.


pāḍal eṇ : 3

āḷ āgār; āḷ ānārai aḍaindu uyyār;

mīḷā āṭceydu meymmaiyuḷ niṟkilār;

tōḷāda suraiyō toḻumbar sevi?

vāḷā māyndu, maṇ āgik kaḻivarē.


pāḍal eṇ : 4

naḍalai vāḻvu koṇḍu en seydir nāṇ ilīr?

suḍalai sērvadu soṟ-piramāṇamē?

kaḍalin nañju amudu uṇḍavar kaiviṭṭāl,

uḍalinār kiḍandu ūr muni paṇḍamē.


pāḍal eṇ : 5

pūk kaikkoṇḍu aran ponnaḍi pōṭrilār;

nākkaikkoṇḍu aran nāmam navilgilār;

ākkaikkē irai tēḍi alamandu,

kākkaikkē irai āgik kaḻivarē.


pāḍal eṇ : 6

kuṟigaḷum, aḍaiyāḷamum, kōyilum,

neṟigaḷum, avar niṇḍradōr nērmaiyum,

aṟiya āyiram āraṇam ōdilum,

poṟi ilīr, manam engol pugādadē.


pāḍal eṇ : 7

vāḻtta vāyum, ninaikka maḍa-neñjum,

tāḻttac cenniyum tanda talaivanaic

cūḻtta māmalar tūvit tudiyādē

vīḻttavā vinaiyēn neḍuṅgālamē.


pāḍal eṇ : 8

eḻudu pāvai-nallār tiṟam viṭṭu nān

toḻudu pōṭri niṇḍrēnaiyum sūḻndugoṇḍu,

uḻuda sāl vaḻiyē uḻuvān poruṭṭu

iḻudai neñjam idu en paḍugiṇḍradē.


pāḍal eṇ : 9

nekku nekku ninaibavar neñjuḷē

pukku niṟkum pon-ār-saḍaip puṇṇiyan,

pokkam mikkavar pūvum nīrum kaṇḍu,

nakku niṟpar avardammai nāṇiyē.


pāḍal eṇ : 10

viṟagil tīyinan; pālil paḍu ney-pōl

maṟaiya niṇḍru uḷan; māmaṇic cōdiyān;

uṟavu kōl naṭṭu, uṇarvu kayiṭrināl

muṟuga vāṅgik kaḍaiya mun niṟkumē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)


The Jains advise the Pallava to king to put Thirunavukkarasar in the lime kiln

#1360 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 95

पल्लवनुम् अदु केट्टुप् पाङ्गु इरुन्द पाय्-उडुक्कै

वल्-अमणर्दमै नोक्कि, "मट्रु अवनैच् चॆय्वदु इनिच्

चॊल्लुम्" ऎन, अऱम् तुऱन्दु तमक्कु उऱुदि अऱियाद

पुल्-अऱिवोर् अञ्जादु नीट्रऱैयिल् इडप् पुगण्ड्रार्.


Thirunavukkarasar is saved by Siva's grace

#1363 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 98

वॆय्य नीट्रऱै अदुदान् वीङ्गु इळ-वेनिल् परुवम्

तैवरु तण्-तॆण्ड्रल् अणै तण्-कऴुनीर्त् तडम् पोण्ड्रु

मॊय्-ऒळि वॆण्णिलवु अलर्न्दु मुरण्ड्र याऴ्-ऒलियिनदाय्

ऐयर् तिरुवडि-नीऴल् अरुळ् आगिक् कुळिर्न्ददे.

--------------


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 5.90 - पॊदु (तनित् तिरुक्कुऱुन्दॊगै)


पाडल् ऎण् : 1

मासिल् वीणैयुम्, मालै मदियमुम्,

वीसु तॆण्ड्रलुम्, वीङ्गिळ-वेनिलुम्,

मूसु वण्डऱै पॊय्गैयुम् पोण्ड्रदे,

ईसन् ऎन्दै इणैयडि नीऴले.

(मासिल् = मासु इल्; वीङ्गिळ = वीङ्गु इळ; वण्डऱै = वण्डु अऱै;)


पाडल् ऎण् : 2

नमच्चिवायवे ञानमुम् कल्वियुम्;

नमच्चिवायवे नान् अऱि विच्चैयुम्;

नमच्चिवायवे ना नविण्ड्रु एत्तुमे;

नमच्चिवायवे नन्नॆऱि काट्टुमे.


पाडल् ऎण् : 3

आळ् आगार्; आळ् आनारै अडैन्दु उय्यार्;

मीळा आट्चॆय्दु मॆय्म्मैयुळ् निऱ्‌किलार्;

तोळाद सुरैयो तॊऴुम्बर् सॆवि?

वाळा माय्न्दु, मण् आगिक् कऴिवरे.


पाडल् ऎण् : 4

नडलै वाऴ्वु कॊण्डु ऎन् सॆय्दिर् नाण् इलीर्?

सुडलै सेर्वदु सॊऱ्‌-पिरमाणमे?

कडलिन् नञ्जु अमुदु उण्डवर् कैविट्टाल्,

उडलिनार् किडन्दु ऊर् मुनि पण्डमे.


पाडल् ऎण् : 5

पूक् कैक्कॊण्डु अरन् पॊन्नडि पोट्रिलार्;

नाक्कैक्कॊण्डु अरन् नामम् नविल्गिलार्;

आक्कैक्के इरै तेडि अलमन्दु,

काक्कैक्के इरै आगिक् कऴिवरे.


पाडल् ऎण् : 6

कुऱिगळुम्, अडैयाळमुम्, कोयिलुम्,

नॆऱिगळुम्, अवर् निण्ड्रदोर् नेर्मैयुम्,

अऱिय आयिरम् आरणम् ओदिलुम्,

पॊऱि इलीर्, मनम् ऎन्गॊल् पुगाददे.


पाडल् ऎण् : 7

वाऴ्त्त वायुम्, निनैक्क मड-नॆञ्जुम्,

ताऴ्त्तच् चॆन्नियुम् तन्द तलैवनैच्

चूऴ्त्त मामलर् तूवित् तुदियादे

वीऴ्त्तवा विनैयेन् नॆडुङ्गालमे.


पाडल् ऎण् : 8

ऎऴुदु पावै-नल्लार् तिऱम् विट्टु नान्

तॊऴुदु पोट्रि निण्ड्रेनैयुम् सूऴ्न्दुगॊण्डु,

उऴुद साल् वऴिये उऴुवान् पॊरुट्टु

इऴुदै नॆञ्जम् इदु ऎन् पडुगिण्ड्रदे.


पाडल् ऎण् : 9

नॆक्कु नॆक्कु निनैबवर् नॆञ्जुळे

पुक्कु निऱ्‌कुम् पॊन्-आर्-सडैप् पुण्णियन्,

पॊक्कम् मिक्कवर् पूवुम् नीरुम् कण्डु,

नक्कु निऱ्‌पर् अवर्दम्मै नाणिये.


पाडल् ऎण् : 10

विऱगिल् तीयिनन्; पालिल् पडु नॆय्-पोल्

मऱैय निण्ड्रु उळन्; मामणिच् चोदियान्;

उऱवु कोल् नट्टु, उणर्वु कयिट्रिनाल्

मुऱुग वाङ्गिक् कडैय मुन् निऱ्‌कुमे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


The Jains advise the Pallava to king to put Thirunavukkarasar in the lime kiln

#1360 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 95

పల్లవనుం అదు కేట్టుప్ పాంగు ఇరుంద పాయ్-ఉడుక్కై

వల్-అమణర్దమై నోక్కి, "మట్రు అవనైచ్ చెయ్వదు ఇనిచ్

చొల్లుం" ఎన, అఱం తుఱందు తమక్కు ఉఱుది అఱియాద

పుల్-అఱివోర్ అంజాదు నీట్రఱైయిల్ ఇడప్ పుగండ్రార్.


Thirunavukkarasar is saved by Siva's grace

#1363 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 98

వెయ్య నీట్రఱై అదుదాన్ వీంగు ఇళ-వేనిల్ పరువం

తైవరు తణ్-తెండ్రల్ అణై తణ్-కఴునీర్త్ తడం పోండ్రు

మొయ్-ఒళి వెణ్ణిలవు అలర్న్దు మురండ్ర యాఴ్-ఒలియినదాయ్

ఐయర్ తిరువడి-నీఴల్ అరుళ్ ఆగిక్ కుళిర్న్దదే.

--------------


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 5.90 - పొదు (తనిత్ తిరుక్కుఱుందొగై)


పాడల్ ఎణ్ : 1

మాసిల్ వీణైయుం, మాలై మదియముం,

వీసు తెండ్రలుం, వీంగిళ-వేనిలుం,

మూసు వండఱై పొయ్గైయుం పోండ్రదే,

ఈసన్ ఎందై ఇణైయడి నీఴలే.

(మాసిల్ = మాసు ఇల్; వీంగిళ = వీంగు ఇళ; వండఱై = వండు అఱై;)


పాడల్ ఎణ్ : 2

నమచ్చివాయవే ఞానముం కల్వియుం;

నమచ్చివాయవే నాన్ అఱి విచ్చైయుం;

నమచ్చివాయవే నా నవిండ్రు ఏత్తుమే;

నమచ్చివాయవే నన్నెఱి కాట్టుమే.


పాడల్ ఎణ్ : 3

ఆళ్ ఆగార్; ఆళ్ ఆనారై అడైందు ఉయ్యార్;

మీళా ఆట్చెయ్దు మెయ్మ్మైయుళ్ నిఱ్కిలార్;

తోళాద సురైయో తొఴుంబర్ సెవి?

వాళా మాయ్న్దు, మణ్ ఆగిక్ కఴివరే.


పాడల్ ఎణ్ : 4

నడలై వాఴ్వు కొండు ఎన్ సెయ్దిర్ నాణ్ ఇలీర్?

సుడలై సేర్వదు సొఱ్-పిరమాణమే?

కడలిన్ నంజు అముదు ఉండవర్ కైవిట్టాల్,

ఉడలినార్ కిడందు ఊర్ ముని పండమే.


పాడల్ ఎణ్ : 5

పూక్ కైక్కొండు అరన్ పొన్నడి పోట్రిలార్;

నాక్కైక్కొండు అరన్ నామం నవిల్గిలార్;

ఆక్కైక్కే ఇరై తేడి అలమందు,

కాక్కైక్కే ఇరై ఆగిక్ కఴివరే.


పాడల్ ఎణ్ : 6

కుఱిగళుం, అడైయాళముం, కోయిలుం,

నెఱిగళుం, అవర్ నిండ్రదోర్ నేర్మైయుం,

అఱియ ఆయిరం ఆరణం ఓదిలుం,

పొఱి ఇలీర్, మనం ఎన్గొల్ పుగాదదే.


పాడల్ ఎణ్ : 7

వాఴ్త్త వాయుం, నినైక్క మడ-నెంజుం,

తాఴ్త్తచ్ చెన్నియుం తంద తలైవనైచ్

చూఴ్త్త మామలర్ తూవిత్ తుదియాదే

వీఴ్త్తవా వినైయేన్ నెడుంగాలమే.


పాడల్ ఎణ్ : 8

ఎఴుదు పావై-నల్లార్ తిఱం విట్టు నాన్

తొఴుదు పోట్రి నిండ్రేనైయుం సూఴ్న్దుగొండు,

ఉఴుద సాల్ వఴియే ఉఴువాన్ పొరుట్టు

ఇఴుదై నెంజం ఇదు ఎన్ పడుగిండ్రదే.


పాడల్ ఎణ్ : 9

నెక్కు నెక్కు నినైబవర్ నెంజుళే

పుక్కు నిఱ్కుం పొన్-ఆర్-సడైప్ పుణ్ణియన్,

పొక్కం మిక్కవర్ పూవుం నీరుం కండు,

నక్కు నిఱ్పర్ అవర్దమ్మై నాణియే.


పాడల్ ఎణ్ : 10

విఱగిల్ తీయినన్; పాలిల్ పడు నెయ్-పోల్

మఱైయ నిండ్రు ఉళన్; మామణిచ్ చోదియాన్;

ఉఱవు కోల్ నట్టు, ఉణర్వు కయిట్రినాల్

ముఱుగ వాంగిక్ కడైయ మున్ నిఱ్కుమే.

================ ============


No comments:

Post a Comment