Sunday, October 4, 2015

4.23 - பத்தனாய்ப் பாட மாட்டேன் - கோயில் (தில்லை - சிதம்பரம்) - ( திருநேரிசை )

15) padhigam 4.23 - கோயில் (தில்லை - சிதம்பரம்) - ( திருநேரிசை )

Verses - PDF: 4.23 - பத்தனாய்ப் பாட மாட்டேன் - pattanāyp pāḍa māṭṭēn


Tamil discussion:

Part-1: https://youtu.be/kxpGhd0xWdI

Part-2: https://youtu.be/VRrKZ5vx6N4


Odhuvar Audio:

Dharmapuram Swaminathan: https://www.youtube.com/watch?v=tWTWANSaIto&list=PL1EgcFeClKCRvy37t9uaeBM-i_ZM_66ao&index=8

Sambandam Gurukkal: https://www.youtube.com/watch?v=bAVRrOpeCZM

Madurai Pon. Muthukumaran: https://www.youtube.com/watch?v=1u1mosTQTJQ


English translation for this padhigam - 4.23 paththanAyp pAda mAttEn
- by V. M. Subramanya Ayyar - at IFP site:
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS4_023.HTM

Audio of this padhigam as sung by OdhuvAr - Thiruththani Swaminathan:
பத்தனாய் பாட (Patthanaay paada) : https://www.shaivam.org/gallery/audio/thiruthani-swaminathan/thillai-thiruppathikangal/tis-tns-thillai-04-patthanaai-paada.mp3

V. Subramanian
==================== ===============

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.23 - கோயில் (தில்லை - சிதம்பரம்) - ( திருநேரிசை )

Background:

திருநாவுக்கரசு சுவாமிகள், தில்லைத் திருநகர்க் குடதிசை (=மேற்கு) மணிவாயிற்புறம் உற்றார். எதிர்கொண்ட அடியரொடும் சென்றார். வாயிலின் வழிபுக்கார் .... திருமலி பொற்கோபுரத்துள் புகுந்தார். நஞ்சுண்ட நாயனார் நடமாடும் பொன்மன்றினைக் கண்ணெதிர் உற்றார். ....அமுதத் திருநடம் ஆராவகை தொழுது ஆர்கின்றார். .... பல முறை தொழுதார் பாவேந்தர். "என்று எய்தினை" என்றது மன்றாடும் மன்னன் திருவருட்கருணை. ஆநந்தம் பாடலாக வெளிவந்தது. ஒன்றியிருந்து நினைந்து திருக்குறிப்பு உணர்ந்து பாடியருளிய இன்தமிழ் மாலை இத்திருப்பதிகம்.

--------------

1432 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - #167

கையுந் தலைமிசை புனையஞ் சலியன;

.. கண்ணும் பொழிமழை யொழியாதே

பெய்யுந் தகையன; கரணங் களுமுட

.. னுருகும் பரிவின; பேறெய்து

மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரு;

.. மின்றாழ் சடையொடு நின்றாடும்

ஐயன் றிருநட மெதிர்கும் பிடுமவ

.. ரார்வம் பெருகுத லளவின்றால்.


1433 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - #168

இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ

.. "வென்றெய் தினை"யென மன்றாடும்

அத்தன் றிருவருள் பொழியுங் கருணையி

.. னருள்பெற் றிடவரு மானந்த

மெய்த்தன் மையினில் விருத்தத் திருமொழி

.. பாடிப் பின்னையு மேன்மேலுஞ்

சித்தம் பெருகிய பரிவா லின்புறு

.. திருநே ரிசைமொழி பகர்கின்றார்.


1434 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - #169

"பத்தனாய்ப் பாட மாட்டேன்" என்றுமுன் னெடுத்துப் பண்ணால்

"அத்தா!வுன் னாடல் காண்பா னடியனேன் வந்த வா"றென்

றித்திறம் போற்றி நின்றே யின்றமிழ் மாலை பாடிக்

கைத்திருத் தொண்டு செய்யுங் காதலிற் பணிந்து போந்தார்.

--------------

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.23 - கோயில் (தில்லை - சிதம்பரம்) - ( திருநேரிசை )

(அறுசீர் விருத்தம் - meter)

பாடல் எண் : 1

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ

எத்தினாற் பத்தி செய்கே னென்னைநீ யிகழ வேண்டா

முத்தனே முதல்வா தில்லை யம்பலத் தாடு கின்ற

அத்தாவுன் னாடல் காண்பா னடியனேன் வந்த வாறே.


பாடல் எண் : 2

கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா

ஒருத்தரா லறிய வொண்ணாத் திருவுரு வுடைய சோதீ

திருத்தமாந் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே

நிருத்தநான் காண வேண்டி நேர்பட வந்த வாறே.


பாடல் எண் : 3

கேட்டிலேன் கிளைபி ரியேன் கேட்குமா கேட்டி யாகில்

நாட்டினே னின்றன் பாதம் நடுப்பட நெஞ்சி னுள்ளே

மாட்டினீர் வாளை பாயு மல்குசிற் றம்ப லத்தே

கூட்டமாங் குவிமு லையாள் கூடநீ யாடு மாறே.


பாடல் எண் : 4

சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுடை யடிமை செய்ய

எந்தைநீ யருளிச் செய்யா யாதுநான் செய்வ தென்னே

செந்தியார் வேள்வி யோவாத் தில்லைச்சிற் றம்ப லத்தே

அந்தியும் பகலு மாட அடியிணை யலசுங் கொல்லோ.


பாடல் எண் : 5

கண்டவா திரிந்து நாளுங் கருத்தினா னின்றன் பாதங்

கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலே

வண்டுபண் பாடுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே

எண்டிசை யோரு மேத்த விறைவநீ யாடு மாறே.


பாடல் எண் : 6

பார்த்திருந் தடிய னேனான் பரவுவன் பாடி யாடி

மூர்த்தியே யென்ப னுன்னை மூவரின் முதல்வ னென்பன்

ஏத்துவா ரிடர்க டீர்ப்பாய் தில்லைச்சிற் றம்ப லத்துக்

கூத்தாவுன் கூத்துக் காண்பான் கூடநான் வந்த வாறே.


பாடல் எண் : 7

பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா வடிமை செய்ய

ஐயநீ யருளிச் செய்யா யாதியே யாதி மூர்த்தீ

வையகந் தன்னின் மிக்க மல்குசிற் றம்ப லத்தே

பையநுன் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே.


பாடல் எண் : 8

மனத்தினார் திகைத்து நாளு மாண்பலா நெறிகண் மேலே

கனைப்பரா லென்செய் கேனோ கறையணி கண்டத் தானே

தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச்சிற் றம்ப லத்தே

அனைத்துநின் னிலயங் காண்பா னடியனேன் வந்த வாறே.


பாடல் எண் : 9

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பி யாதே

வஞ்சமே செய்தி யாலோ வானவர் தலைவ னேநீ

மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே

அஞ்சொலாள் காண நின்று வழகநீ யாடு மாறே.


பாடல் எண் : 10

மண்ணுண்ட மால வனு மலர்மிசை மன்னி னானும்

விண்ணுண்ட திருவு ருவம் விரும்பினார் காண மாட்டார்

திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச்சிற் றம்ப லத்தே

பண்ணுண்ட பாட லோடும் பரமநீ யாடு மாறே.

============================= ============================

Word separated version:


1432 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - #167

கையும் தலைமிசை புனை-அஞ்சலியன;

.. கண்ணும் பொழி-மழை ஒழியாதே

பெய்யும் தகையன; கரணங்களும் உடன்

.. உருகும் பரிவின; பேறு எய்தும்

மெய்யும் தரைமிசை விழுமுன்பு எழுதரும்;

.. மின்-தாழ்-சடையொடு நின்று ஆடும்

ஐயன் திருநடம் எதிர்-கும்பிடும் அவர்

.. ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால்.


1433 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - #168

இத்தன்மையர் பல முறையும் தொழுது எழ,

.. "என்று எய்தினை?" என மன்று ஆடும்

அத்தன் திருவருள் பொழியும் கருணையின்

.. அருள்-பெற்றிட வரும் ஆனந்த

மெய்த்தன்மையினில் விருத்தத் திருமொழி

.. பாடிப், பின்னையும் மேன்மேலும்

சித்தம் பெருகிய பரிவால் இன்புறு

.. திருநேரிசை மொழி பகர்கின்றார்.


1434 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - #169

"பத்தனாய்ப் பாட மாட்டேன்" என்று முன் எடுத்துப் பண்ணால்

"அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு" என்று

இத்திறம் போற்றி நின்றே இன்-தமிழ் மாலை பாடிக்

கைத்திருத்தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார்.

--------------


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.23 - கோயில் (தில்லை - சிதம்பரம்) - ( திருநேரிசை )

(அறுசீர் விருத்தம் - meter)


பாடல் எண் : 1

பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே; பரம யோகீ;

எத்தினால் பத்தி செய்கேன்? என்னை நீ இகழ வேண்டா;

முத்தனே; முதல்வா; தில்லை அம்பலத்து ஆடுகின்ற

அத்தா; உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே.


பாடல் எண் : 2

கருத்தனாய்ப் பாட மாட்டேன்; காம்பு அன தோளி பங்கா;

ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திரு-உரு உடைய சோதீ;

திருத்தம் ஆம் தில்லைதன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே

நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே.


பாடல் எண் : 3

கேட்டிலேன்; கிளை பிரியேன்; கேட்குமா கேட்டி ஆகில்,

நாட்டினேன் நின்றன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே;

மாட்டில் நீர் வாளை பாயும் மல்கு சிற்றம்பலத்தே

கூட்டம் ஆம் குவி-முலையாள் கூட நீ ஆடுமாறே.


பாடல் எண் : 4

சிந்தையைத் திகைப்பியாதே செறிவு-உடை அடிமை செய்ய,

எந்தை நீ அருளிச் செய்யாய்; யாது நான் செய்வது என்னே?

செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே

அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசும் கொல்லோ?


பாடல் எண் : 5

கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்றன் பாதம்

கொண்டிருந்து ஆடிப் பாடிக் கூடுவன் குறிப்பினாலே;

வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே

எண்-திசையோரும் ஏத்த, இறைவ நீ ஆடுமாறே.

(கருத்தினானின்றன் பாதம் - கருத்தினால் நின்றன் பாதம் / கருத்தில் நான் நின்றன் பாதம்)


பாடல் எண் : 6

பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி;

மூர்த்தியே என்பன் உன்னை மூவரின் முதல்வன் என்பன்;

ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்; தில்லைச் சிற்றம்பலத்துக்

கூத்தா; உன் கூத்துக் காண்பான், கூட நான் வந்தவாறே.


பாடல் எண் : 7

பொய்யினைத் தவிர விட்டுப், புறம் அலா அடிமை செய்ய,

ஐய, நீ அருளிச் செய்யாய்; ஆதியே, ஆதி மூர்த்தீ;

வையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே,

பைய நுன் ஆடல் காண்பான், பரம, நான் வந்தவாறே.


பாடல் எண் : 8

மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே

கனைப்பரால்; என் செய்கேனோ, கறை அணி-கண்டத்தானே;

தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே

அனைத்தும் நின் னிலயம் காண்பான் அடியனேன் வந்தவாறே.

(நின்னிலயம் = நின் நிலயம் / நின் இலயம்)


பாடல் எண் : 9

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே,

வஞ்சமே செய்தியாலோ, வானவர் தலைவனே நீ;

மஞ்சு-அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே

அஞ்சொலாள் காண நின்று அழக நீ ஆடுமாறே.

(அஞ்சொலாள் - அம் சொல்லாள்)


பாடல் எண் : 10

மண் உண்ட மாலவனும் மலர்மிசை மன்னினானும்

விண் உண்ட திரு-உருவம் விரும்பினார் காண மாட்டார்;

திண் உண்ட திருவே மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே

பண் உண்ட பாடலோடும் பரம நீ ஆடுமாறே.

============================= ============================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


1432 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - #167

kaiyum talaimisai punai-añjaliyana;

.. kaṇṇum poḻi-maḻai oḻiyādē

peyyum tagaiyana; karaṇaṅgaḷum uḍan

.. urugum parivina; pēṟu eydum

meyyum taraimisai viḻumunbu eḻudarum;

.. min-tāḻ-saḍaiyoḍu niṇḍru āḍum

aiyan tirunaḍam edir-kumbiḍum avar

.. ārvam perugudal aḷavu iṇḍrāl.


1433 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - #168

ittanmaiyar pala muṟaiyum toḻudu eḻa,

.. "eṇḍru eydinai?" ena maṇḍru āḍum

attan tiruvaruḷ poḻiyum karuṇaiyin

.. aruḷ-peṭriḍa varum ānanda

meyttanmaiyinil viruttat tirumoḻi

.. pāḍip, pinnaiyum mēnmēlum

sittam perugiya parivāl inbuṟu

.. tirunērisai moḻi pagargiṇḍrār.


1434 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - #169

"pattanāyp pāḍa māṭṭēn" eṇḍru mun eḍuttup paṇṇāl

"attā! un āḍal kāṇbān aḍiyanēn vandavāṟu" eṇḍru

ittiṟam pōṭri niṇḍrē in-tamiḻ mālai pāḍik

kaittiruttoṇḍu seyyum kādalil paṇindu pōndār.

--------------


tirunāvukkarasar tēvāram - padigam 4.23 - kōyil (tillai - sidambaram) - ( tirunērisai )

(aṟusīr viruttam - meter)


pāḍal eṇ : 1

pattanāyp pāḍa māṭṭēn; paramanē; parama yōgī;

ettināl patti seygēn? ennai nī igaḻa vēṇḍā;

muttanē; mudalvā; tillai ambalattu āḍugiṇḍra

attā; un āḍal kāṇbān aḍiyanēn vandavāṟē.


pāḍal eṇ : 2

karuttanāyp pāḍa māṭṭēn; kāmbu ana tōḷi paṅgā;

oruttarāl aṟiya oṇṇāt tiru-uru uḍaiya sōdī;

tiruttam ām tillaidannuḷ tigaḻnda siṭrambalattē

niruttam nān kāṇa vēṇḍi nērbaḍa vandavāṟē.


pāḍal eṇ : 3

kēṭṭilēn; kiḷai piriyēn; kēṭkumā kēṭṭi āgil,

nāṭṭinēn niṇḍran pādam naḍuppaḍa neñjinuḷḷē;

māṭṭil nīr vāḷai pāyum malgu siṭrambalattē

kūṭṭam ām kuvi-mulaiyāḷ kūḍa nī āḍumāṟē.


pāḍal eṇ : 4

sindaiyait tigaippiyādē seṟivu-uḍai aḍimai seyya,

endai nī aruḷic ceyyāy; yādu nān seyvadu ennē?

sendiyār vēḷvi ōvāt tillaic ciṭrambalattē

andiyum pagalum āḍa aḍiyiṇai alasum kollō?


pāḍal eṇ : 5

kaṇḍavā tirindu nāḷum karuttināl niṇḍran pādam

koṇḍirundu āḍip pāḍik kūḍuvan kuṟippinālē;

vaṇḍu paṇ pāḍum sōlai malgu siṭrambalattē

eṇ-tisaiyōrum ētta, iṟaiva nī āḍumāṟē.

(karuttināniṇḍran pādam - karuttināl niṇḍran pādam / karuttil nān niṇḍran pādam)


pāḍal eṇ : 6

pārttirundu aḍiyanēn nān paravuvan pāḍi āḍi;

mūrttiyē enban unnai mūvarin mudalvan enban;

ēttuvār iḍargaḷ tīrppāy; tillaic ciṭrambalattuk

kūttā; un kūttuk kāṇbān, kūḍa nān vandavāṟē.


pāḍal eṇ : 7

poyyinait tavira viṭṭup, puṟam alā aḍimai seyya,

aiya, nī aruḷic ceyyāy; ādiyē, ādi mūrttī;

vaiyagam tannil mikka malgu siṭrambalattē,

paiya nun āḍal kāṇbān, parama, nān vandavāṟē.


pāḍal eṇ : 8

manattinār tigaittu nāḷum māṇbu alā neṟigaḷ mēlē

kanaipparāl; en seygēnō, kaṟai aṇi-kaṇḍattānē;

tinaittanai vēdam kuṇḍrāt tillaic ciṭrambalattē

anaittum nin nilayam kāṇbān aḍiyanēn vandavāṟē.

(ninnilayam = nin nilayam / nin ilayam)


pāḍal eṇ : 9

neñjinait tūymai seydu ninaikkumā ninaippiyādē,

vañjamē seydiyālō, vānavar talaivanē nī;

mañju-aḍai sōlait tillai malgu siṭrambalattē

añjolāḷ kāṇa niṇḍru aḻaga nī āḍumāṟē.

(añjolāḷ - am sollāḷ)


pāḍal eṇ : 10

maṇ uṇḍa mālavanum malarmisai manninānum

viṇ uṇḍa tiru-uruvam virumbinār kāṇa māṭṭār;

tiṇ uṇḍa tiruvē mikka tillaic ciṭrambalattē

paṇ uṇḍa pāḍalōḍum parama nī āḍumāṟē.

============================= ============================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )

1432 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - #167

कैयुम् तलैमिसै पुनै-अञ्जलियन;

.. कण्णुम् पॊऴि-मऴै ऒऴियादे

पॆय्युम् तगैयन; करणङ्गळुम् उडन्

.. उरुगुम् परिविन; पेऱु ऎय्दुम्

मॆय्युम् तरैमिसै विऴुमुन्बु ऎऴुदरुम्;

.. मिन्-ताऴ्-सडैयॊडु निण्ड्रु आडुम्

ऐयन् तिरुनडम् ऎदिर्-कुम्बिडुम् अवर्

.. आर्वम् पॆरुगुदल् अळवु इण्ड्राल्.


1433 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - #168

इत्तन्मैयर् पल मुऱैयुम् तॊऴुदु ऎऴ,

.. "ऎण्ड्रु ऎय्दिनै?" ऎन मण्ड्रु आडुम्

अत्तन् तिरुवरुळ् पॊऴियुम् करुणैयिन्

.. अरुळ्-पॆट्रिड वरुम् आनन्द

मॆय्त्तन्मैयिनिल् विरुत्तत् तिरुमॊऴि

.. पाडिप्, पिन्नैयुम् मेन्मेलुम्

सित्तम् पॆरुगिय परिवाल् इन्बुऱु

.. तिरुनेरिसै मॊऴि पगर्गिण्ड्रार्.


1434 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - #169

"पत्तनाय्प् पाड माट्टेन्" ऎण्ड्रु मुन् ऎडुत्तुप् पण्णाल्

"अत्ता! उन् आडल् काण्बान् अडियनेन् वन्दवाऱु" ऎण्ड्रु

इत्तिऱम् पोट्रि निण्ड्रे इन्-तमिऴ् मालै पाडिक्

कैत्तिरुत्तॊण्डु सॆय्युम् कादलिल् पणिन्दु पोन्दार्.

--------------

तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.23 - कोयिल् (तिल्लै - सिदम्बरम्) - ( तिरुनेरिसै )

(अऱुसीर् विरुत्तम् - meter)

पाडल् ऎण् : 1

पत्तनाय्प् पाड माट्टेन्; परमने; परम योगी;

ऎत्तिनाल् पत्ति सॆय्गेन्? ऎन्नै नी इगऴ वेण्डा;

मुत्तने; मुदल्वा; तिल्लै अम्बलत्तु आडुगिण्ड्र

अत्ता; उन् आडल् काण्बान् अडियनेन् वन्दवाऱे.


पाडल् ऎण् : 2

करुत्तनाय्प् पाड माट्टेन्; काम्बु अन तोळि पङ्गा;

ऒरुत्तराल् अऱिय ऒण्णात् तिरु-उरु उडैय सोदी;

तिरुत्तम् आम् तिल्लैदन्नुळ् तिगऴ्न्द सिट्रम्बलत्ते

निरुत्तम् नान् काण वेण्डि नेर्बड वन्दवाऱे.


पाडल् ऎण् : 3

केट्टिलेन्; किळै पिरियेन्; केट्कुमा केट्टि आगिल्,

नाट्टिनेन् निण्ड्रन् पादम् नडुप्पड नॆञ्जिनुळ्ळे;

माट्टिल् नीर् वाळै पायुम् मल्गु सिट्रम्बलत्ते

कूट्टम् आम् कुवि-मुलैयाळ् कूड नी आडुमाऱे.


पाडल् ऎण् : 4

सिन्दैयैत् तिगैप्पियादे सॆऱिवु-उडै अडिमै सॆय्य,

ऎन्दै नी अरुळिच् चॆय्याय्; यादु नान् सॆय्वदु ऎन्ने?

सॆन्दियार् वेळ्वि ओवात् तिल्लैच् चिट्रम्बलत्ते

अन्दियुम् पगलुम् आड अडियिणै अलसुम् कॊल्लो?


पाडल् ऎण् : 5

कण्डवा तिरिन्दु नाळुम् करुत्तिनाल् निण्ड्रन् पादम्

कॊण्डिरुन्दु आडिप् पाडिक् कूडुवन् कुऱिप्पिनाले;

वण्डु पण् पाडुम् सोलै मल्गु सिट्रम्बलत्ते

ऎण्-तिसैयोरुम् एत्त, इऱैव नी आडुमाऱे.

(करुत्तिनानिण्ड्रन् पादम् - करुत्तिनाल् निण्ड्रन् पादम् / करुत्तिल् नान् निण्ड्रन् पादम्)


पाडल् ऎण् : 6

पार्त्तिरुन्दु अडियनेन् नान् परवुवन् पाडि आडि;

मूर्त्तिये ऎन्बन् उन्नै मूवरिन् मुदल्वन् ऎन्बन्;

एत्तुवार् इडर्गळ् तीर्प्पाय्; तिल्लैच् चिट्रम्बलत्तुक्

कूत्ता; उन् कूत्तुक् काण्बान्, कूड नान् वन्दवाऱे.


पाडल् ऎण् : 7

पॊय्यिनैत् तविर विट्टुप्, पुऱम् अला अडिमै सॆय्य,

ऐय, नी अरुळिच् चॆय्याय्; आदिये, आदि मूर्त्ती;

वैयगम् तन्निल् मिक्क मल्गु सिट्रम्बलत्ते,

पैय नुन् आडल् काण्बान्, परम, नान् वन्दवाऱे.


पाडल् ऎण् : 8

मनत्तिनार् तिगैत्तु नाळुम् माण्बु अला नॆऱिगळ् मेले

कनैप्पराल्; ऎन् सॆय्गेनो, कऱै अणि-कण्डत्ताने;

तिनैत्तनै वेदम् कुण्ड्रात् तिल्लैच् चिट्रम्बलत्ते

अनैत्तुम् निन् निलयम् काण्बान् अडियनेन् वन्दवाऱे.

(निन्निलयम् = निन् निलयम् / निन् इलयम्)


पाडल् ऎण् : 9

नॆञ्जिनैत् तूय्मै सॆय्दु निनैक्कुमा निनैप्पियादे,

वञ्जमे सॆय्दियालो, वानवर् तलैवने नी;

मञ्जु-अडै सोलैत् तिल्लै मल्गु सिट्रम्बलत्ते

अञ्जॊलाळ् काण निण्ड्रु अऴग नी आडुमाऱे.

(अञ्जॊलाळ् - अम् सॊल्लाळ्)


पाडल् ऎण् : 10

मण् उण्ड मालवनुम् मलर्मिसै मन्निनानुम्

विण् उण्ड तिरु-उरुवम् विरुम्बिनार् काण माट्टार्;

तिण् उण्ड तिरुवे मिक्क तिल्लैच् चिट्रम्बलत्ते

पण् उण्ड पाडलोडुम् परम नी आडुमाऱे.

============================= ============================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


1432 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - #167

కైయుం తలైమిసై పునై-అంజలియన;

.. కణ్ణుం పొఴి-మఴై ఒఴియాదే

పెయ్యుం తగైయన; కరణంగళుం ఉడన్

.. ఉరుగుం పరివిన; పేఱు ఎయ్దుం

మెయ్యుం తరైమిసై విఴుమున్బు ఎఴుదరుం;

.. మిన్-తాఴ్-సడైయొడు నిండ్రు ఆడుం

ఐయన్ తిరునడం ఎదిర్-కుంబిడుం అవర్

.. ఆర్వం పెరుగుదల్ అళవు ఇండ్రాల్.


1433 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - #168

ఇత్తన్మైయర్ పల ముఱైయుం తొఴుదు ఎఴ,

.. "ఎండ్రు ఎయ్దినై?" ఎన మండ్రు ఆడుం

అత్తన్ తిరువరుళ్ పొఴియుం కరుణైయిన్

.. అరుళ్-పెట్రిడ వరుం ఆనంద

మెయ్త్తన్మైయినిల్ విరుత్తత్ తిరుమొఴి

.. పాడిప్, పిన్నైయుం మేన్మేలుం

సిత్తం పెరుగియ పరివాల్ ఇన్బుఱు

.. తిరునేరిసై మొఴి పగర్గిండ్రార్.


1434 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - #169

"పత్తనాయ్ప్ పాడ మాట్టేన్" ఎండ్రు మున్ ఎడుత్తుప్ పణ్ణాల్

"అత్తా! ఉన్ ఆడల్ కాణ్బాన్ అడియనేన్ వందవాఱు" ఎండ్రు

ఇత్తిఱం పోట్రి నిండ్రే ఇన్-తమిఴ్ మాలై పాడిక్

కైత్తిరుత్తొండు సెయ్యుం కాదలిల్ పణిందు పోందార్.

--------------

తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.23 - కోయిల్ (తిల్లై - సిదంబరం) - ( తిరునేరిసై )

(అఱుసీర్ విరుత్తం - meter)


పాడల్ ఎణ్ : 1

పత్తనాయ్ప్ పాడ మాట్టేన్; పరమనే; పరమ యోగీ;

ఎత్తినాల్ పత్తి సెయ్గేన్? ఎన్నై నీ ఇగఴ వేండా;

ముత్తనే; ముదల్వా; తిల్లై అంబలత్తు ఆడుగిండ్ర

అత్తా; ఉన్ ఆడల్ కాణ్బాన్ అడియనేన్ వందవాఱే.


పాడల్ ఎణ్ : 2

కరుత్తనాయ్ప్ పాడ మాట్టేన్; కాంబు అన తోళి పంగా;

ఒరుత్తరాల్ అఱియ ఒణ్ణాత్ తిరు-ఉరు ఉడైయ సోదీ;

తిరుత్తం ఆం తిల్లైదన్నుళ్ తిగఴ్న్ద సిట్రంబలత్తే

నిరుత్తం నాన్ కాణ వేండి నేర్బడ వందవాఱే.


పాడల్ ఎణ్ : 3

కేట్టిలేన్; కిళై పిరియేన్; కేట్కుమా కేట్టి ఆగిల్,

నాట్టినేన్ నిండ్రన్ పాదం నడుప్పడ నెంజినుళ్ళే;

మాట్టిల్ నీర్ వాళై పాయుం మల్గు సిట్రంబలత్తే

కూట్టం ఆం కువి-ములైయాళ్ కూడ నీ ఆడుమాఱే.


పాడల్ ఎణ్ : 4

సిందైయైత్ తిగైప్పియాదే సెఱివు-ఉడై అడిమై సెయ్య,

ఎందై నీ అరుళిచ్ చెయ్యాయ్; యాదు నాన్ సెయ్వదు ఎన్నే?

సెందియార్ వేళ్వి ఓవాత్ తిల్లైచ్ చిట్రంబలత్తే

అందియుం పగలుం ఆడ అడియిణై అలసుం కొల్లో?


పాడల్ ఎణ్ : 5

కండవా తిరిందు నాళుం కరుత్తినాల్ నిండ్రన్ పాదం

కొండిరుందు ఆడిప్ పాడిక్ కూడువన్ కుఱిప్పినాలే;

వండు పణ్ పాడుం సోలై మల్గు సిట్రంబలత్తే

ఎణ్-తిసైయోరుం ఏత్త, ఇఱైవ నీ ఆడుమాఱే.

(కరుత్తినానిండ్రన్ పాదం - కరుత్తినాల్ నిండ్రన్ పాదం / కరుత్తిల్ నాన్ నిండ్రన్ పాదం)


పాడల్ ఎణ్ : 6

పార్త్తిరుందు అడియనేన్ నాన్ పరవువన్ పాడి ఆడి;

మూర్త్తియే ఎన్బన్ ఉన్నై మూవరిన్ ముదల్వన్ ఎన్బన్;

ఏత్తువార్ ఇడర్గళ్ తీర్ప్పాయ్; తిల్లైచ్ చిట్రంబలత్తుక్

కూత్తా; ఉన్ కూత్తుక్ కాణ్బాన్, కూడ నాన్ వందవాఱే.


పాడల్ ఎణ్ : 7

పొయ్యినైత్ తవిర విట్టుప్, పుఱం అలా అడిమై సెయ్య,

ఐయ, నీ అరుళిచ్ చెయ్యాయ్; ఆదియే, ఆది మూర్త్తీ;

వైయగం తన్నిల్ మిక్క మల్గు సిట్రంబలత్తే,

పైయ నున్ ఆడల్ కాణ్బాన్, పరమ, నాన్ వందవాఱే.


పాడల్ ఎణ్ : 8

మనత్తినార్ తిగైత్తు నాళుం మాణ్బు అలా నెఱిగళ్ మేలే

కనైప్పరాల్; ఎన్ సెయ్గేనో, కఱై అణి-కండత్తానే;

తినైత్తనై వేదం కుండ్రాత్ తిల్లైచ్ చిట్రంబలత్తే

అనైత్తుం నిన్ నిలయం కాణ్బాన్ అడియనేన్ వందవాఱే.

(నిన్నిలయం = నిన్ నిలయం / నిన్ ఇలయం)


పాడల్ ఎణ్ : 9

నెంజినైత్ తూయ్మై సెయ్దు నినైక్కుమా నినైప్పియాదే,

వంజమే సెయ్దియాలో, వానవర్ తలైవనే నీ;

మంజు-అడై సోలైత్ తిల్లై మల్గు సిట్రంబలత్తే

అంజొలాళ్ కాణ నిండ్రు అఴగ నీ ఆడుమాఱే.

(అంజొలాళ్ - అం సొల్లాళ్)


పాడల్ ఎణ్ : 10

మణ్ ఉండ మాలవనుం మలర్మిసై మన్నినానుం

విణ్ ఉండ తిరు-ఉరువం విరుంబినార్ కాణ మాట్టార్;

తిణ్ ఉండ తిరువే మిక్క తిల్లైచ్ చిట్రంబలత్తే

పణ్ ఉండ పాడలోడుం పరమ నీ ఆడుమాఱే.

============================= ============================

No comments:

Post a Comment