Saturday, January 9, 2016

1.12 - மத்தாவரை நிறுவிக்கடல் - திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - thirumudukundRam (Vriddachalam)

25) பதிகம் 1.12 - திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) thirumudukundRam (Vriddachalam):
சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
1.12 - மத்தாவரை நிறுவிக்கடல்

Verses - PDF: 1.12 - மத்தாவரை நிறுவிக்கடல் - mattāvarai niṟuvikkaḍal


******
On YouTube:
Tamil discussion:
For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_012.HTM

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - விருத்தகிரீஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=493


V. Subramanian
========================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.12 - திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : நட்டபாடை )


Background:

சிதம்பரத்தைத் தரிசித்து, அருகுள்ள மற்ற தலங்களையும் தரிசித்துப், பின் மீண்டும் சிதம்பரத்தைத் தரிசித்தார் திருஞானசம்பந்தர்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர், "அடியேன் பதி முதலியவற்றையும் வணங்கிப் போதல்வேண்டும்" என்று விண்ணப்பிக்கப், பிள்ளையார் அங்ஙனமே தந்தையார், பரிசனங்கள், பாணர், மதங்கசூளாமணியார் இவர்களுடன் நிவாநதியின் கரைவழியே, மேற்றிசையிற்போய்த் திருஎருக்கத்தம்புலியூரை அடைந்தார்.

திருஎருக்கத்தம்புலியூரை வணங்கிப் பதிகம்பாடிப் புறப்பட்ட ஆளுடைய பிள்ளையார் இடையிலுள்ள தலங்கள் பலவற்றையும் வணங்கித் துதித்துத் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தை அடைந்தார். போகின்ற வழியிலேயே முதுகுன்ற நாதருடைய அருட்செயல்களும், ஆட்கொள்ளுந் திறனும், இயற்கை வளமும், நதியின் செலவும் மனத்தைக் கவர அவற்றை அமைத்து "மத்தாவரை நிறுவி" என்னும் பதிகத்தைத் தொடங்கி, "முத்தாறு வந்தடி சூழ்தரு முதுகுன்றடைவோம்" என அருளிச் செய்கின்றார்.

திருமுதுகுன்றம் செல்லும்போது வழியில் அருளியது இப்பதிகம்.


திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - தலச்சிறப்பு :

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=176

நடுநாட்டுத் தலம்.

திருமுதுகுன்றம் - தமிழ்ப்பெயர். விருத்தாசலம் என்பது சமஸ்கிருதப் பெயர். தற்போது வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப்படுகிறது.


பிரமனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய பதி. சுந்தரர் இத்தலத்தில் பரவையருக்காகப் பெருமானை வேண்டிப் பொன்பெற்று அப்பொன்னை இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூர்க் கமலாலயத்தில் எடுத்துக்கொண்டார் என்பது வரலாறு.


இத்தலத்தின் பெயரில் ‘குன்றம்’ என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லாமலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை - முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம் - பழமை, அசலம் - மலை).


மிகப்பெரிய கோயில்.

--------


#2078 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 180

அங்கு நின்றெழுந் தருளிமற் றவருட னம்பொன்மா மலைவல்லி

பங்கர் தாமினி துறையுநற் பதிபல பரிவொடும் பணிந்தேத்தித்,

துங்க வண்டமிழ்த் தொடைமலர் பாடிப்போய்த் தொல்லைவெங் குருவேந்தர்

செங்க ணேற்றவர் திருமுது குன்றினைத் தொழுதுசென் றணைகின்றார்,


Sambandar sings a padhigam on his way to thirumudukundram

#2079 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 181

"மொய்கொள் மாமணி கொழித்துமுத் தாறுசூழ் முதுகுன்றை யடைவோ"மென்

றெய்து சொன்மலர் மாலைவண் பதிகத்தை யிசையொடும் புனைந்தேத்திச்

செய்த வத்திரு முனிவருந் தேவருந் திசையெலா நெருங்கப்புக்

கையர் சேவடி பணியுமப் பொருப்பினி லாதர வுடன்சென்றார்.

--------------


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.12 - திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : நட்டபாடை )

("தானாதன தானாதன தானாதன தான" - என்ற சந்தம்.

சீர்கள் 1, 2, 3 - "தானாதன" என்பது "தனனாதன" என்றும்,

சீர் 4 - "தான" என்பது "தனன" என்றும் வரலாம்)


பாடல் எண் : 1

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விட முண்ட

தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாம்

கொத்தார்மலர் குளிர்சந்தகி லொளிர்குங்குமங் கொண்டு

முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.


பாடல் எண் : 2

தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்

இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம் *

மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகி ரெரிகண்

முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.

(* "இனிதாவுறை யிடமாம்" என்றிருக்கவேண்டுமோ?)


பாடல் எண் : 3

விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்

தளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்

களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு

முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.


பாடல் எண் : 4

சுரர்மாதவர் தொகுகின்னர ரவரோதொலை வில்லா

நரரானபன் முனிவர்தொழ விருந்தானிட நலமார்

அரசார்வர வணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்

முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.


பாடல் எண் : 5

அறையார்கழ லந்தன்றனை அயின்மூவிலை யழகார்

கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்

மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு

முறையான்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.


பாடல் எண் : 6

ஏவார்சிலை யெயினன்னுரு வாகியெழில் விசயற்

கோவாதவின் னருள்செய்தவெம் மொருவற்கிட முலகில்

சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்

மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.


பாடல் எண் : 7

தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடியர்

மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்

விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை

முழவோடிசை நடமுன்செயு முதுகுன்றடை வோமே.


பாடல் எண் : 8

செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்

கதுவாய்கள்பத் தலறீயிடக் கண்டானுறை கோயில்

மதுவாயசெங் காந்தண்மலர் நிறையக்குறை வில்லா

முதுவேய்கண்முத் துதிரும்பொழின் முதுகுன்றடை வோமே.


பாடல் எண் : 9

இயலாடிய பிரமன்னரி யிருவர்க்கறி வரிய

செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்

புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே

முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.


பாடல் எண் : 10

அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்

மருகன்வரு மிடபக்கொடி யுடையானிட மலரார்

கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி

முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.


பாடல் எண் : 11

முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்

புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த

நிகரில்லன தமிழ்மாலைக ளிசையோடிவை பத்தும்

பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.

============================= ============================


Word separated version:


#2078 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 180

அங்குநின்று எழுந்தருளி மற்று அவருடன் அம்பொன்-மா-மலைவல்லி

பங்கர் தாம் இனிது உறையும் நற்பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித்,

துங்க வண்-தமிழ்த்-தொடை-மலர் பாடிப் போய்த் தொல்லை வெங்குரு வேந்தர்

செங்கண் ஏற்றவர் திரு-முதுகுன்றினைத் தொழுது சென்று அணைகின்றார்,


Sambandar sings a padhigam on his way to thirumudukundram

#2079 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 181

"மொய்கொள் மாமணி கொழித்து முத்தாறு சூழ் முதுகுன்றை அடைவோம்" என்று

எய்து சொல்-மலர்-மாலை வண்-பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்திச்

செய்தவத் திரு முனிவரும் தேவரும் திசை-எலாம் நெருங்கப் புக்கு

ஐயர் சேவடி பணியும் அப்-பொருப்பினில் ஆதரவுடன் சென்றார்.

--------------


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.12 - திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : நட்டபாடை )

("தானாதன தானாதன தானாதன தான" - Rhythm.

Seers 1, 2 & 3 - "தானாதன" & "தனனாதன" are interchangeable,

Seer 4 - "தான" & "தனன" are interchangeable)


(To illustrate the chandam, the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)

பாடல் எண் : 1

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விட முண்ட

தொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணன திடமாம்

கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு

முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.

**********


பாடல் எண் : 1

மத்தா-வரை நிறுவிக்,-கடல் கடைந்தவ்-விடம் உண்ட

தொத்து-ர்தரு மணி-நீள்-முடிச் சுடர்-வண்ணனது ம்-ம்

கொத்து-ர்-மலர் குளிர்-சந்து-கில் ஒளிர்-குங்குமம் கொண்டு

முத்தாறு-வந்து அடி-வீழ்தரு முதுகுன்று- டைவோமே.


பாடல் எண் : 2

தழை-ர்- வடவிய வீதனில் தவமே-புரி சைவன்

இழை-ஆர்-டை மடவாளொடும் இனிதா-றைவு ம்-ம் *

மழை-வானிடை முழவவ்-ழில் வளைவாள்-கிர் ரி-கண்

முழை-வாரி குமிறும்-யர் முதுகுன்று- டைவோமே.


பாடல் எண் : 3

விளையாதது-ர் பரிசில்-வரு பசு-பாச-வேதனைண்

தளை-யின தவிரவ்-ருள் தலைவன்னது சார்பு-ம்

களை-ர்தரு கதிர்-யிரம் உடையவ்-னோடு

முளை-மா-மதி தவழும்-யர் முதுகுன்று- டைவோமே.


பாடல் எண் : 4

சுரர்-மாதவர் தொகு-கின்னரர் வரோ- தொலைவில்லா

நரர்--பன் முனிவர்-தொழ ருந்தான்-ம் நலம்-ர்

அரசார்-வர ணி-பொற்கலன் வை-கொண்டு-பன் நாளும்

முரசு-ர்வரு மண-மொய்ம்பு-டை முதுகுன்று- டைவோமே.


பாடல் எண் : 5

அறை-ர்-கழல் அந்தன்-னை அயில்-மூவிலை கு-ர்

கறை-ர்-நெடு வேலின்-மிசை ற்றான்-ம் கருதில்

மறை-யின பல-சொல்லி-ண் மலர்-சாந்து-வை கொண்டு

முறையால்-மிகு முனிவர்-தொழு முதுகுன்று- டைவோமே.


பாடல் எண் : 6

-ர்-சிலை யினன்-ரு கி-ழில் விசயற்கு

வாத- ன்னருள்-செய்த-ம் ருவற்கு-ம் உலகில்

சாவாதவர் பிறவாதவர் தவமே-மிக டையார்

மூவாத-பன் முனிவர்-தொழு முதுகுன்று- டைவோமே.


பாடல் எண் : 7

தழல்-சேர்தரு திரு-மேனியர் சசி-சேர்-சடை முடியர்

மழ-மால்-விடை மிக-றிய மறையோன்-றை கோயில்

விழவோடு-லி மிகு-மங்கையர் தகும்-டக சாலை

முழவோடு-சை நடம்-முன்-செயும் முதுகுன்று- டைவோமே.


பாடல் எண் : 8

செதுவாய்மைகள் கருதிவ்-வரை டுத்த-திறல் அரக்கன்

கது-வாய்கள்-பத்து லறீயிடக் கண்டான்-றை கோயில்

மதுவாய-செங் காந்தள்-மலர் நிறையக்-குறைவு இல்லா

முது-வேய்கள்-முத்துதிரும்-பொழில் முதுகுன்று- டைவோமே.


பாடல் எண் : 9

இயல்-ஆடிய பிரமன்-அரி இருவர்க்கு-அறிவு அரிய

செயல்-ஆடிய தீ-ஆர்-உரு ஆகி-எழு செல்வன்

புயல்-ஆடு-வண் பொழில்-சூழ்-புனல் படப்பைத்-தடத்து அருகே

முயல்-ஓட-வெண் கயல்-பாய்தரு முதுகுன்று- அடைவோமே.


பாடல் எண் : 10

அருகர்-டு புத்தர்-ர் றியா-ரன் மலையான்

மருகன்-வரும் டபக்-கொடி டையான்-ம் மலர்-ர்

கருகு-குழல் மடவார்-கடி குறிஞ்சி-து பாடி

முருகன்னது பெருமை-பகர் முதுகுன்று- டைவோமே.


பாடல் எண் : 11

முகில்-சேர்தரு முதுகுன்று- உடையானைம்-மிகு தொல்-சீர்ப்

புகலிந்நகர் மறை-ஞான- சம்பந்தன்-உரை செய்த

நிகர்-இல்லன தமிழ்-மாலைகள் இசையோடு-இவை பத்தும்

பகரும்- அடியவர்கட்கு-இடர் பாவம்- அடையாவே.

================== ==========================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


#2078 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 180

aṅguniṇḍru eḻundaruḷi maṭru avaruḍan ambon-mā-malaivalli

paṅgar tām inidu uṟaiyum naṟpadi pala parivoḍum paṇindu ēttit,

tuṅga vaṇ-tamiḻt-toḍai-malar pāḍip pōyt tollai veṅguru vēndar

seṅgaṇ ēṭravar tiru-muduguṇḍrinait toḻudu seṇḍru aṇaigiṇḍrār,


Sambandar sings a padhigam on his way to thirumudukundram

#2079 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 181

"moygoḷ māmaṇi koḻittu muttāṟu sūḻ muduguṇḍrai aḍaivōm" eṇḍru

eydu sol-malar-mālai vaṇ-padigattai isaiyoḍum punaindu ēttic

ceydavat tiru munivarum tēvarum tisai-elām neruṅgap pukku

aiyar sēvaḍi paṇiyum ap-poruppinil ādaravuḍan seṇḍrār.

--------------


sambandar tēvāram - padigam 1.12 - tirumuduguṇḍram (viruttāsalam) ( paṇ : naṭṭabāḍai )

("tānādana tānādana tānādana tāna" - Rhythm.

Seers 1, 2 & 3 - "tānādana" & "tananādana" are interchangeable,

Seer 4 - "tāna" & "tanana" are interchangeable)


(To illustrate the chandam, the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)

pāḍal eṇ : 1

mattāvarai niṟuvikkaḍal kaḍaindavviḍa muṇḍa

tottārdaru maṇinīḷmuḍic cuḍarvaṇṇana diḍamām

kottārmalar kuḷirsandagil oḷirguṅgumaṅ goṇḍu

muttāṟuvan daḍivīḻdaru muduguṇḍraḍai vōmē.

**********


pāḍal eṇ : 1

mattā-varai niṟuvik,-kaḍal kaḍaindav-viḍam uṇḍa

tottu-ārdaru maṇi-nīḷ-muḍic cuḍar-vaṇṇanadu iḍam-ām

kottu-ār-malar kuḷir-sandu-agil oḷir-kuṅgumam koṇḍu

muttāṟu-vandu aḍi-vīḻdaru muduguṇḍru- aḍaivōmē.


pāḍal eṇ : 2

taḻai-ār- vaḍaviya vīdanil tavamē-puri saivan

iḻai-ār-iḍai maḍavāḷoḍum inidā-uṟaivu iḍam-ām *

maḻai-vāniḍai muḻavav-eḻil vaḷaivāḷ-ugir eri-kaṇ

muḻai-vāḷari kumiṟum-uyar muduguṇḍru- aḍaivōmē.


pāḍal eṇ : 3

viḷaiyādadu-or parisil-varu pasu-pāsa-vēdanai oṇ

taḷai-āyina tavirav-aruḷ talaivannadu sārbu-ām

kaḷai-ārdaru kadir-āyiram uḍaiyav-avanōḍu

muḷai-mā-madi tavaḻum-uyar muduguṇḍru- aḍaivōmē.


pāḍal eṇ : 4

surar-mādavar togu-kinnarar avarō- tolaivillā

narar-āna-pan munivar-toḻa irundān-iḍam nalam-ār

arasār-vara aṇi-poṟkalan avai-koṇḍu-pan nāḷum

murasu-ārvaru maṇa-moymbu-uḍai muduguṇḍru- aḍaivōmē.


pāḍal eṇ : 5

aṟai-ār-kaḻal andan-tanai ayil-mūvilai aḻagu-ār

kaṟai-ār-neḍu vēlin-misai ēṭrān-iḍam karudil

maṟai-āyina pala-solli-oṇ malar-sāndu-avai koṇḍu

muṟaiyāl-migu munivar-toḻu muduguṇḍru- aḍaivōmē.


pāḍal eṇ : 6

ē-ār-silai eyinan-uru āgi-eḻil visayaṟku

ōvāda- innaruḷ-seyda-em oruvaṟku-iḍam ulagil

sāvādavar piṟavādavar tavamē-miga uḍaiyār

mūvāda-pan munivar-toḻu muduguṇḍru- aḍaivōmē.


pāḍal eṇ : 7

taḻal-sērdaru tiru-mēniyar sasi-sēr-saḍai muḍiyar

maḻa-māl-viḍai miga-ēṟiya maṟaiyōn-uṟai kōyil

viḻavōḍu-oli migu-maṅgaiyar tagum-āḍaga sālai

muḻavōḍu-isai naḍam-mun-seyum muduguṇḍru- aḍaivōmē.


pāḍal eṇ : 8

seduvāymaigaḷ karudiv-varai eḍutta-tiṟal arakkan

kadu-vāygaḷ-pattu alaṟīyiḍak kaṇḍān-uṟai kōyil

maduvāya-seṅ gāndaḷ-malar niṟaiyak-kuṟaivu illā

mudu-vēygaḷ-muttu udirum-poḻil muduguṇḍru- aḍaivōmē.


pāḍal eṇ : 9

iyal-āḍiya piraman-ari iruvarkku-aṟivu ariya

seyal-āḍiya tī-ār-uru āgi-eḻu selvan

puyal-āḍu-vaṇ poḻil-sūḻ-punal paḍappait-taḍattu arugē

muyal-ōḍa-veṇ kayal-pāydaru muduguṇḍru- aḍaivōmē.


pāḍal eṇ : 10

arugar-oḍu puttar-avar aṟiyā-aran malaiyān

marugan-varum iḍabak-koḍi uḍaiyān-iḍam malar-ār

karugu-kuḻal maḍavār-kaḍi kuṟiñji-adu pāḍi

murugannadu perumai-pagar muduguṇḍru- aḍaivōmē.


pāḍal eṇ : 11

mugil-sērdaru muduguṇḍru- uḍaiyānaim-migu tol-sīrp

pugalinnagar maṟai-ñāna- sambandan-urai seyda

nigar-illana tamiḻ-mālaigaḷ isaiyōḍu-ivai pattum

pagarum- aḍiyavargaṭku-iḍar pāvam- aḍaiyāvē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )

#2078 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 180

अङ्गुनिण्ड्रु ऎऴुन्दरुळि मट्रु अवरुडन् अम्बॊन्-मा-मलैवल्लि

पङ्गर् ताम् इनिदु उऱैयुम् नऱ्‌पदि पल परिवॊडुम् पणिन्दु एत्तित्,

तुङ्ग वण्-तमिऴ्त्-तॊडै-मलर् पाडिप् पोय्त् तॊल्लै वॆङ्गुरु वेन्दर्

सॆङ्गण् एट्रवर् तिरु-मुदुगुण्ड्रिनैत् तॊऴुदु सॆण्ड्रु अणैगिण्ड्रार्,


Sambandar sings a padhigam on his way to thirumudukundram

#2079 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 181

"मॊय्गॊळ् मामणि कॊऴित्तु मुत्ताऱु सूऴ् मुदुगुण्ड्रै अडैवोम्" ऎण्ड्रु

ऎय्दु सॊल्-मलर्-मालै वण्-पदिगत्तै इसैयॊडुम् पुनैन्दु एत्तिच्

चॆय्दवत् तिरु मुनिवरुम् तेवरुम् तिसै-ऎलाम् नॆरुङ्गप् पुक्कु

ऐयर् सेवडि पणियुम् अप्-पॊरुप्पिनिल् आदरवुडन् सॆण्ड्रार्.

--------------


सम्बन्दर् तेवारम् - पदिगम् 1.12 - तिरुमुदुगुण्ड्रम् (विरुत्तासलम्) ( पण् : नट्टबाडै )

("तानादन तानादन तानादन तान" - Rhythm.

Seers 1, 2 & 3 - "तानादन" & "तननादन" are interchangeable,

Seer 4 - "तान" & "तनन" are interchangeable)


(To illustrate the chandam, the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)

पाडल् ऎण् : 1

मत्तावरै निऱुविक्कडल् कडैन्दव्विड मुण्ड

तॊत्तार्दरु मणिनीळ्मुडिच् चुडर्वण्णन दिडमाम्

कॊत्तार्मलर् कुळिर्सन्दगिल् ऒळिर्गुङ्गुमङ् गॊण्डु

मुत्ताऱुवन् दडिवीऴ्दरु मुदुगुण्ड्रडै वोमे.

**********


पाडल् ऎण् : 1

मत्ता-वरै निऱुविक्,-कडल् कडैन्दव्-विडम् उण्ड

तॊत्तु-आर्दरु मणि-नीळ्-मुडिच् चुडर्-वण्णनदु इडम्-आम्

कॊत्तु-आर्-मलर् कुळिर्-सन्दु-अगिल् ऒळिर्-कुङ्गुमम् कॊण्डु

मुत्ताऱु-वन्दु अडि-वीऴ्दरु मुदुगुण्ड्रु- अडैवोमे.


पाडल् ऎण् : 2

तऴै-आर्- वडविय वीदनिल् तवमे-पुरि सैवन्

इऴै-आर्-इडै मडवाळॊडुम् इनिदा-उऱैवु इडम्-आम् *

मऴै-वानिडै मुऴवव्-ऎऴिल् वळैवाळ्-उगिर् ऎरि-कण्

मुऴै-वाळरि कुमिऱुम्-उयर् मुदुगुण्ड्रु- अडैवोमे.


पाडल् ऎण् : 3

विळैयाददु-ऒर् परिसिल्-वरु पसु-पास-वेदनै ऒण्

तळै-आयिन तविरव्-अरुळ् तलैवन्नदु सार्बु-आम्

कळै-आर्दरु कदिर्-आयिरम् उडैयव्-अवनोडु

मुळै-मा-मदि तवऴुम्-उयर् मुदुगुण्ड्रु- अडैवोमे.


पाडल् ऎण् : 4

सुरर्-मादवर् तॊगु-किन्नरर् अवरो- तॊलैविल्ला

नरर्-आन-पन् मुनिवर्-तॊऴ इरुन्दान्-इडम् नलम्-आर्

अरसार्-वर अणि-पॊऱ्‌कलन् अवै-कॊण्डु-पन् नाळुम्

मुरसु-आर्वरु मण-मॊय्म्बु-उडै मुदुगुण्ड्रु- अडैवोमे.


पाडल् ऎण् : 5

अऱै-आर्-कऴल् अन्दन्-तनै अयिल्-मूविलै अऴगु-आर्

कऱै-आर्-नॆडु वेलिन्-मिसै एट्रान्-इडम् करुदिल्

मऱै-आयिन पल-सॊल्लि-ऒण् मलर्-सान्दु-अवै कॊण्डु

मुऱैयाल्-मिगु मुनिवर्-तॊऴु मुदुगुण्ड्रु- अडैवोमे.


पाडल् ऎण् : 6

-आर्-सिलै ऎयिनन्-उरु आगि-ऎऴिल् विसयऱ्‌कु

ओवाद- इन्नरुळ्-सॆय्द-ऎम् ऒरुवऱ्‌कु-इडम् उलगिल्

सावादवर् पिऱवादवर् तवमे-मिग उडैयार्

मूवाद-पन् मुनिवर्-तॊऴु मुदुगुण्ड्रु- अडैवोमे.


पाडल् ऎण् : 7

तऴल्-सेर्दरु तिरु-मेनियर् ससि-सेर्-सडै मुडियर्

मऴ-माल्-विडै मिग-एऱिय मऱैयोन्-उऱै कोयिल्

विऴवोडु-ऒलि मिगु-मङ्गैयर् तगुम्-आडग सालै

मुऴवोडु-इसै नडम्-मुन्-सॆयुम् मुदुगुण्ड्रु- अडैवोमे.


पाडल् ऎण् : 8

सॆदुवाय्मैगळ् करुदिव्-वरै ऎडुत्त-तिऱल् अरक्कन्

कदु-वाय्गळ्-पत्तु अलऱीयिडक् कण्डान्-उऱै कोयिल्

मदुवाय-सॆङ् गान्दळ्-मलर् निऱैयक्-कुऱैवु इल्ला

मुदु-वेय्गळ्-मुत्तु उदिरुम्-पॊऴिल् मुदुगुण्ड्रु- अडैवोमे.


पाडल् ऎण् : 9

इयल्-आडिय पिरमन्-अरि इरुवर्क्कु-अऱिवु अरिय

सॆयल्-आडिय ती-आर्-उरु आगि-ऎऴु सॆल्वन्

पुयल्-आडु-वण् पॊऴिल्-सूऴ्-पुनल् पडप्पैत्-तडत्तु अरुगे

मुयल्-ओड-वॆण् कयल्-पाय्दरु मुदुगुण्ड्रु- अडैवोमे.


पाडल् ऎण् : 10

अरुगर्-ऒडु पुत्तर्-अवर् अऱिया-अरन् मलैयान्

मरुगन्-वरुम् इडबक्-कॊडि उडैयान्-इडम् मलर्-आर्

करुगु-कुऴल् मडवार्-कडि कुऱिञ्जि-अदु पाडि

मुरुगन्नदु पॆरुमै-पगर् मुदुगुण्ड्रु- अडैवोमे.


पाडल् ऎण् : 11

मुगिल्-सेर्दरु मुदुगुण्ड्रु- उडैयानैम्-मिगु तॊल्-सीर्प्

पुगलिन्नगर् मऱै-ञान- सम्बन्दन्-उरै सॆय्द

निगर्-इल्लन तमिऴ्-मालैगळ् इसैयोडु-इवै पत्तुम्

पगरुम्- अडियवर्गट्कु-इडर् पावम्- अडैयावे.

================== ==========================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


#2078 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 180

అంగునిండ్రు ఎఴుందరుళి మట్రు అవరుడన్ అంబొన్-మా-మలైవల్లి

పంగర్ తాం ఇనిదు ఉఱైయుం నఱ్పది పల పరివొడుం పణిందు ఏత్తిత్,

తుంగ వణ్-తమిఴ్త్-తొడై-మలర్ పాడిప్ పోయ్త్ తొల్లై వెంగురు వేందర్

సెంగణ్ ఏట్రవర్ తిరు-ముదుగుండ్రినైత్ తొఴుదు సెండ్రు అణైగిండ్రార్,


Sambandar sings a padhigam on his way to thirumudukundram

#2079 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 181

"మొయ్గొళ్ మామణి కొఴిత్తు ముత్తాఱు సూఴ్ ముదుగుండ్రై అడైవోం" ఎండ్రు

ఎయ్దు సొల్-మలర్-మాలై వణ్-పదిగత్తై ఇసైయొడుం పునైందు ఏత్తిచ్

చెయ్దవత్ తిరు మునివరుం తేవరుం తిసై-ఎలాం నెరుంగప్ పుక్కు

ఐయర్ సేవడి పణియుం అప్-పొరుప్పినిల్ ఆదరవుడన్ సెండ్రార్.

--------------


సంబందర్ తేవారం - పదిగం 1.12 - తిరుముదుగుండ్రం (విరుత్తాసలం) ( పణ్ : నట్టబాడై )

("తానాదన తానాదన తానాదన తాన" - Rhythm.

Seers 1, 2 & 3 - "తానాదన" & "తననాదన" are interchangeable,

Seer 4 - "తాన" & "తనన" are interchangeable)


(To illustrate the chandam, the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)

పాడల్ ఎణ్ : 1

మత్తావరై నిఱువిక్కడల్ కడైందవ్విడ ముండ

తొత్తార్దరు మణినీళ్ముడిచ్ చుడర్వణ్ణన దిడమాం

కొత్తార్మలర్ కుళిర్సందగిల్ ఒళిర్గుంగుమఙ్ గొండు

ముత్తాఱువన్ దడివీఴ్దరు ముదుగుండ్రడై వోమే.

**********


పాడల్ ఎణ్ : 1

మత్తా-వరై నిఱువిక్,-కడల్ కడైందవ్-విడం ఉండ

తొత్తు-ఆర్దరు మణి-నీళ్-ముడిచ్ చుడర్-వణ్ణనదు ఇడం-ఆం

కొత్తు-ఆర్-మలర్ కుళిర్-సందు-అగిల్ ఒళిర్-కుంగుమం కొండు

ముత్తాఱు-వందు అడి-వీఴ్దరు ముదుగుండ్రు- అడైవోమే.


పాడల్ ఎణ్ : 2

తఴై-ఆర్- వడవియ వీదనిల్ తవమే-పురి సైవన్

ఇఴై-ఆర్-ఇడై మడవాళొడుం ఇనిదా-ఉఱైవు ఇడం-ఆం *

మఴై-వానిడై ముఴవవ్-ఎఴిల్ వళైవాళ్-ఉగిర్ ఎరి-కణ్

ముఴై-వాళరి కుమిఱుం-ఉయర్ ముదుగుండ్రు- అడైవోమే.


పాడల్ ఎణ్ : 3

విళైయాదదు-ఒర్ పరిసిల్-వరు పసు-పాస-వేదనై ఒణ్

తళై-ఆయిన తవిరవ్-అరుళ్ తలైవన్నదు సార్బు-ఆం

కళై-ఆర్దరు కదిర్-ఆయిరం ఉడైయవ్-అవనోడు

ముళై-మా-మది తవఴుం-ఉయర్ ముదుగుండ్రు- అడైవోమే.


పాడల్ ఎణ్ : 4

సురర్-మాదవర్ తొగు-కిన్నరర్ అవరో- తొలైవిల్లా

నరర్-ఆన-పన్ మునివర్-తొఴ ఇరుందాన్-ఇడం నలం-ఆర్

అరసార్-వర అణి-పొఱ్కలన్ అవై-కొండు-పన్ నాళుం

మురసు-ఆర్వరు మణ-మొయ్మ్బు-ఉడై ముదుగుండ్రు- అడైవోమే.


పాడల్ ఎణ్ : 5

అఱై-ఆర్-కఴల్ అందన్-తనై అయిల్-మూవిలై అఴగు-ఆర్

కఱై-ఆర్-నెడు వేలిన్-మిసై ఏట్రాన్-ఇడం కరుదిల్

మఱై-ఆయిన పల-సొల్లి-ఒణ్ మలర్-సాందు-అవై కొండు

ముఱైయాల్-మిగు మునివర్-తొఴు ముదుగుండ్రు- అడైవోమే.


పాడల్ ఎణ్ : 6

-ఆర్-సిలై ఎయినన్-ఉరు ఆగి-ఎఴిల్ విసయఱ్కు

ఓవాద- ఇన్నరుళ్-సెయ్ద-ఎం ఒరువఱ్కు-ఇడం ఉలగిల్

సావాదవర్ పిఱవాదవర్ తవమే-మిగ ఉడైయార్

మూవాద-పన్ మునివర్-తొఴు ముదుగుండ్రు- అడైవోమే.


పాడల్ ఎణ్ : 7

తఴల్-సేర్దరు తిరు-మేనియర్ ససి-సేర్-సడై ముడియర్

మఴ-మాల్-విడై మిగ-ఏఱియ మఱైయోన్-ఉఱై కోయిల్

విఴవోడు-ఒలి మిగు-మంగైయర్ తగుం-ఆడగ సాలై

ముఴవోడు-ఇసై నడం-మున్-సెయుం ముదుగుండ్రు- అడైవోమే.


పాడల్ ఎణ్ : 8

సెదువాయ్మైగళ్ కరుదివ్-వరై ఎడుత్త-తిఱల్ అరక్కన్

కదు-వాయ్గళ్-పత్తు అలఱీయిడక్ కండాన్-ఉఱై కోయిల్

మదువాయ-సెఙ్ గాందళ్-మలర్ నిఱైయక్-కుఱైవు ఇల్లా

ముదు-వేయ్గళ్-ముత్తు ఉదిరుం-పొఴిల్ ముదుగుండ్రు- అడైవోమే.


పాడల్ ఎణ్ : 9

ఇయల్-ఆడియ పిరమన్-అరి ఇరువర్క్కు-అఱివు అరియ

సెయల్-ఆడియ తీ-ఆర్-ఉరు ఆగి-ఎఴు సెల్వన్

పుయల్-ఆడు-వణ్ పొఴిల్-సూఴ్-పునల్ పడప్పైత్-తడత్తు అరుగే

ముయల్-ఓడ-వెణ్ కయల్-పాయ్దరు ముదుగుండ్రు- అడైవోమే.


పాడల్ ఎణ్ : 10

అరుగర్-ఒడు పుత్తర్-అవర్ అఱియా-అరన్ మలైయాన్

మరుగన్-వరుం ఇడబక్-కొడి ఉడైయాన్-ఇడం మలర్-ఆర్

కరుగు-కుఴల్ మడవార్-కడి కుఱింజి-అదు పాడి

మురుగన్నదు పెరుమై-పగర్ ముదుగుండ్రు- అడైవోమే.


పాడల్ ఎణ్ : 11

ముగిల్-సేర్దరు ముదుగుండ్రు- ఉడైయానైం-మిగు తొల్-సీర్ప్

పుగలిన్నగర్ మఱై-ఞాన- సంబందన్-ఉరై సెయ్ద

నిగర్-ఇల్లన తమిఴ్-మాలైగళ్ ఇసైయోడు-ఇవై పత్తుం

పగరుం- అడియవర్గట్కు-ఇడర్ పావం- అడైయావే.

================== ==========================



No comments:

Post a Comment