சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
3.94 - விண்ணவர் தொழுதெழு வெங்குரு
3.94 - viNNavar thozhudhezhu venguru
Verses - PDF: 3.94 - விண்ணவர் தொழுதெழு - viṇṇavar toḻudeḻu
If you need discussion audio file, please use the contact form on the right.
***
On YouTube:
***
3.94 - viNNavar thozhudhezhu venguru - word by word meaning - English translation:
https://drive.google.com/file/d/1klsxLytEjPqaFXevYcpaib8ljXsHVozN/view?usp=sharing
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_094.HTM
V. Subramanian
=====================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
பதிகம் 3.94 - திருவெங்குரு (சீகாழி) - திருமுக்கால் - ( பண் : சாதாரி )
Background:
திருஞான சம்பந்தர் தம் ஊரான சீகாழியில் தங்கியிருந்த போது பாடிய பல பதிகங்களுள் ஒன்று இது. இப்பதிகத்தைப் பற்றிய சிறப்புக் குறிப்பு எதுவும் பெரியபுராணத்தில் இல்லை.
இப்பதிகத்தின் 8, 9, 10-ஆம் பாடல்களில் சம்பந்தரின் மற்ற பதிகங்களில் காணும் இராவணனை நசுக்கியது, அடிமுடி தேடியது, பரசமயக் கண்டனம் போன்ற அமைப்பு இல்லை.
வெங்குரு - தலப்பெயர்க் காரணம்:
சீகாழி - இத்தலம் பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரு பெயர்களையுடையது.
சம்பந்தர் - 3.67 பதிகத்தில் பாடலுக்கு ஒரு பெயராகச் சீகாழியின் 12 பெயர்களுக்கும் காரணத்தை விளக்குகின்றார்.
3.67.4
அங்கண்மதி கங்கைநதி வெங்கணர வங்களெழி றங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிக ரெங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலக மெங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே.
--- அது தேவகுருவாகிய வியாழபகவான் உமை பங்கராகிய பரமனைப் பணிந்து பேறு பெற்ற தலமாகும்.
சீகாழி (சீர்காழி) - சட்டைநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=495
சீகாழி (சீர்காழி) - கோயில் தகவல்கள் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=87
--------------
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.94 - திருவெங்குரு (சீகாழி) - திருமுக்கால் - ( பண் : சாதாரி )
("தானன
தானன தானன தானன
தானன
தானன தானா" - என்ற
சந்தம்)
விண்ணவர்
தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண்
பொடியணி வீரே
சுண்ணவெண்
பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல்
லாரிட ரிலரே.
பாடல் எண் : 2
வேதியர்
தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய
வருமறை யீரே
ஆதிய
வருமறை யீருமை யலர்கொடு
ஓதிய
ருணர்வுடை யோரே.
விளங்குதண்
பொழிலணி வெங்குரு
மேவிய
இளம்பிறை
யணிசடை யீரே
இளம்பிறை
யணிசடை யீரும திணையடி
உளங்கொள
வுறுபிணி யிலரே.
விண்டலர்
பொழிலணி வெங்குரு மேவிய
வண்டமர்
வளர்சடை யீரே
வண்டமர்
வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்க
டுயர்பிணி யிலரே.
மிக்கவர்
தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொ
டரவசைத் தீரே
அக்கினொ
டரவசைத் தீரும தடியிணை
தக்கவ
ருறுவது தவமே.
வெந்தவெண்
பொடியணி வெங்குரு மேவிய
அந்தமில்
பெருமையி னீரே
அந்தமில்
பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய்
வோர்வினை சிதைவே.
விழமல்கு
பொழிலணி வெங்குரு மேவிய
அழன்மல்கு
மங்கையி னீரே
அழன்மல்கு
மங்கையி னீருமை யலர்கொடு
தொழவல்லல்
கெடுவது துணிவே.
வித்தக
மறையவர் வெங்குரு மேவிய
மத்தநன்
மலர்புனை வீரே
மத்தநன்
மலர்புனை வீரும தடிதொழுஞ்
சித்தம
துடையவர் திருவே.
மேலவர்
தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன்
மணிமிடற் றீரே
ஆலநன்
மணிமிடற் றீரும தடிதொழுஞ்
சீலம
துடையவர் திருவே.
விரைமல்கு
பொழிலணி வெங்குரு மேவிய
அரைமல்கு
புலியத ளீரே
அரைமல்கு
புலியத ளீரும தடியிணை
உரைமல்கு
புகழவ ருயர்வே.
பாடல் எண் : 11
****** பாட்டுக் கிடைத்திலது *****
============================= ============================
Word separated version:
--------------
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.94 - திருவெங்குரு (சீகாழி) - திருமுக்கால் - ( பண் : சாதாரி )
("தானன
தானன தானன தானன
தானன
தானன தானா" - என்ற
சந்தம்)
(To illustrate the rhythm, the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)
பாடல் எண் : 1
விண்ணவர்
தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண்
பொடியணி வீரே
சுண்ணவெண்
பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல்
லாரிட ரிலரே.
----------
பாடல் எண் : 1
விண்ணவர்
தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ண
வெண் பொடி
அணிவீரே;
சுண்ண
வெண் பொடி
அணிவீர்
உம தொழு-கழல்
எண்ண
வல்லார்
இடர்
இலரே.
பாடல் எண் : 2
வேதியர்
தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய
அரு
மறையீரே;
ஆதிய
அரு
மறையீர்
உமை அலர்-கொடு
ஓதியர்
உணர்வு
உடையோரே.
விளங்கு
தண் பொழில்
அணி வெங்குரு
மேவிய
இளம்பிறை
அணி
சடையீரே;
இளம்பிறை
அணி
சடையீர்
உமது
இணையடி
உளங்கொள
உறு-பிணி
இலரே.
விண்டு
அலர் பொழில்
அணி வெங்குரு
மேவிய
வண்டு
அமர் வளர்-சடையீரே;
வண்டு
அமர் வளர்-சடையீர்
உமை வாழ்த்தும்
அத்-
தொண்டர்கள்
துயர்
பிணி இலரே.
மிக்கவர்
தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொடு
அரவு
அசைத்தீரே;
அக்கினொடு
அரவு
அசைத்தீர்
உமது
அடியிணை
தக்கவர்
உறுவது தவமே.
வெந்த
வெண் பொடி
அணி வெங்குரு
மேவிய
அந்தம்
இல் பெருமையினீரே;
அந்தம்
இல் பெருமையினீர்
உமை அலர்-கொடு
சிந்தை-செய்வோர்
வினை சிதைவே.
விழ
மல்கு பொழில்
அணி வெங்குரு
மேவிய
அழல்
மல்கும் அங்கையினீரே;
அழல்
மல்கும்
அங்கையினீர்
உமை அலர்-கொடு
தொழ
அல்லல் கெடுவது
துணிவே.
வித்தக
மறையவர் வெங்குரு மேவிய
மத்த
நன் மலர்
புனைவீரே
மத்த
நன் மலர்
புனைவீர்
உமது அடி
தொழும்
சித்தம்-அது
உடையவர் திருவே.
மேலவர்
தொழுதெழு வெங்குரு மேவிய
ஆல
நன் மணி மிடற்றீரே;
ஆல
நன் மணி மிடற்றீர் உமது அடி
தொழும்
சீலம்-அது
உடையவர் திருவே.
விரை
மல்கு பொழில்
அணி வெங்குரு
மேவிய
அரை
மல்கு புலி-அதளீரே
அரை
மல்கு புலி-அதளீர்
உமது
அடியிணை
உரை
மல்கு புகழவர்
உயர்வே.
பாடல் எண் : 11
****** பாட்டுக் கிடைத்திலது *****
================== ==========================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
--------------
sambandar tēvāram - padigam 3.94 - tiruveṅguru (sīgāḻi) - tirumukkāl - ( paṇ : sādāri )
("tānana tānana tānana tānana
tānana tānana tānā" - rhythm)
(To illustrate the rhythm, the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)
pāḍal eṇ : 1
viṇṇavar toḻudeḻu veṅguru mēviya
suṇṇaveṇ poḍiyaṇi vīrē
suṇṇaveṇ poḍiyaṇi vīruma toḻugaḻal
eṇṇaval lāriḍa rilarē.
----------
pāḍal eṇ : 1
viṇṇavar toḻudeḻu veṅguru mēviya
suṇṇa veṇ poḍi aṇivīrē;
suṇṇa veṇ poḍi aṇivīr uma toḻu-kaḻal
eṇṇa vallār iḍar ilarē.
pāḍal eṇ : 2
vēdiyar toḻudeḻu veṅguru mēviya
ādiya aru maṟaiyīrē;
ādiya aru maṟaiyīr umai alar-koḍu
ōdiyar uṇarvu uḍaiyōrē.
pāḍal eṇ : 3
viḷaṅgu taṇ poḻil aṇi veṅguru mēviya
iḷambiṟai aṇi saḍaiyīrē;
iḷambiṟai aṇi saḍaiyīr umadu iṇaiyaḍi
uḷaṅgoḷa uṟu-piṇi ilarē.
pāḍal eṇ : 4
viṇḍu alar poḻil aṇi veṅguru mēviya
vaṇḍu amar vaḷar-saḍaiyīrē;
vaṇḍu amar vaḷar-saḍaiyīr umai vāḻttum at-
toṇḍargaḷ tuyar piṇi ilarē.
pāḍal eṇ : 5
mikkavar toḻudeḻu veṅguru mēviya
akkinoḍu aravu asaittīrē;
akkinoḍu aravu asaittīr umadu aḍiyiṇai
takkavar uṟuvadu tavamē.
pāḍal eṇ : 6
venda veṇ poḍi aṇi veṅguru mēviya
andam il perumaiyinīrē;
andam il perumaiyinīr umai alar-koḍu
sindai-seyvōr vinai sidaivē.
pāḍal eṇ : 7
viḻa malgu poḻil aṇi veṅguru mēviya
aḻal malgum aṅgaiyinīrē;
aḻal malgum aṅgaiyinīr umai alar-koḍu
toḻa allal keḍuvadu tuṇivē.
pāḍal eṇ : 8
vittaga maṟaiyavar veṅguru mēviya
matta nan malar punaivīrē
matta nan malar punaivīr umadu aḍi toḻum
sittam-adu uḍaiyavar tiruvē.
pāḍal eṇ : 9
mēlavar toḻudeḻu veṅguru mēviya
āla nan maṇi miḍaṭrīrē;
āla nan maṇi miḍaṭrīr umadu aḍi toḻum
sīlam-adu uḍaiyavar tiruvē.
pāḍal eṇ : 10
virai malgu poḻil aṇi veṅguru mēviya
arai malgu puli-adaḷīrē
arai malgu puli-adaḷīr umadu aḍiyiṇai
urai malgu pugaḻavar uyarvē.
pāḍal eṇ : 11
****** (This verse is lost) *****
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
सम्बन्दर् तेवारम् - पदिगम् 3.94 - तिरुवॆङ्गुरु (सीगाऴि) - तिरुमुक्काल् - ( पण् : सादारि )
("तानन तानन तानन तानन
तानन तानन ताना" - Rhythm)
(To illustrate the rhythm, the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)
पाडल् ऎण् : 1
विण्णवर् तॊऴुदॆऴु वॆङ्गुरु मेविय
सुण्णवॆण् पॊडियणि वीरे
सुण्णवॆण् पॊडियणि वीरुम तॊऴुगऴल्
ऎण्णवल् लारिड रिलरे.
----------
पाडल् ऎण् : 1
विण्णवर् तॊऴुदॆऴु वॆङ्गुरु मेविय
सुण्ण वॆण् पॊडि अणिवीरे;
सुण्ण वॆण् पॊडि अणिवीर् उम तॊऴु-कऴल्
ऎण्ण वल्लार् इडर् इलरे.
पाडल् ऎण् : 2
वेदियर् तॊऴुदॆऴु वॆङ्गुरु मेविय
आदिय अरु मऱैयीरे;
आदिय अरु मऱैयीर् उमै अलर्-कॊडु
ओदियर् उणर्वु उडैयोरे.
पाडल् ऎण् : 3
विळङ्गु तण् पॊऴिल् अणि वॆङ्गुरु मेविय
इळम्बिऱै अणि सडैयीरे;
इळम्बिऱै अणि सडैयीर् उमदु इणैयडि
उळङ्गॊळ उऱु-पिणि इलरे.
पाडल् ऎण् : 4
विण्डु अलर् पॊऴिल् अणि वॆङ्गुरु मेविय
वण्डु अमर् वळर्-सडैयीरे;
वण्डु अमर् वळर्-सडैयीर् उमै वाऴ्त्तुम् अत्-
तॊण्डर्गळ् तुयर् पिणि इलरे.
पाडल् ऎण् : 5
मिक्कवर् तॊऴुदॆऴु वॆङ्गुरु मेविय
अक्किनॊडु अरवु असैत्तीरे;
अक्किनॊडु अरवु असैत्तीर् उमदु अडियिणै
तक्कवर् उऱुवदु तवमे.
पाडल् ऎण् : 6
वॆन्द वॆण् पॊडि अणि वॆङ्गुरु मेविय
अन्दम् इल् पॆरुमैयिनीरे;
अन्दम् इल् पॆरुमैयिनीर् उमै अलर्-कॊडु
सिन्दै-सॆय्वोर् विनै सिदैवे.
पाडल् ऎण् : 7
विऴ मल्गु पॊऴिल् अणि वॆङ्गुरु मेविय
अऴल् मल्गुम् अङ्गैयिनीरे;
अऴल् मल्गुम् अङ्गैयिनीर् उमै अलर्-कॊडु
तॊऴ अल्लल् कॆडुवदु तुणिवे.
पाडल् ऎण् : 8
वित्तग मऱैयवर् वॆङ्गुरु मेविय
मत्त नन् मलर् पुनैवीरे
मत्त नन् मलर् पुनैवीर् उमदु अडि तॊऴुम्
सित्तम्-अदु उडैयवर् तिरुवे.
पाडल् ऎण् : 9
मेलवर् तॊऴुदॆऴु वॆङ्गुरु मेविय
आल नन् मणि मिडट्रीरे;
आल नन् मणि मिडट्रीर् उमदु अडि तॊऴुम्
सीलम्-अदु उडैयवर् तिरुवे.
पाडल् ऎण् : 10
विरै मल्गु पॊऴिल् अणि वॆङ्गुरु मेविय
अरै मल्गु पुलि-अदळीरे
अरै मल्गु पुलि-अदळीर् उमदु अडियिणै
उरै मल्गु पुगऴवर् उयर्वे.
पाडल् ऎण् : 11
****** (This verse is lost) *****
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
సంబందర్ తేవారం - పదిగం 3.94 - తిరువెంగురు (సీగాఴి) - తిరుముక్కాల్ - ( పణ్ : సాదారి )
("తానన తానన తానన తానన
తానన తానన తానా" - Rhythm)
(To illustrate the rhythm, the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)
పాడల్ ఎణ్ : 1
విణ్ణవర్ తొఴుదెఴు వెంగురు మేవియ
సుణ్ణవెణ్ పొడియణి వీరే
సుణ్ణవెణ్ పొడియణి వీరుమ తొఴుగఴల్
ఎణ్ణవల్ లారిడ రిలరే.
----------
పాడల్ ఎణ్ : 1
విణ్ణవర్ తొఴుదెఴు వెంగురు మేవియ
సుణ్ణ వెణ్ పొడి అణివీరే;
సుణ్ణ వెణ్ పొడి అణివీర్ ఉమ తొఴు-కఴల్
ఎణ్ణ వల్లార్ ఇడర్ ఇలరే.
పాడల్ ఎణ్ : 2
వేదియర్ తొఴుదెఴు వెంగురు మేవియ
ఆదియ అరు మఱైయీరే;
ఆదియ అరు మఱైయీర్ ఉమై అలర్-కొడు
ఓదియర్ ఉణర్వు ఉడైయోరే.
పాడల్ ఎణ్ : 3
విళంగు తణ్ పొఴిల్ అణి వెంగురు మేవియ
ఇళంబిఱై అణి సడైయీరే;
ఇళంబిఱై అణి సడైయీర్ ఉమదు ఇణైయడి
ఉళంగొళ ఉఱు-పిణి ఇలరే.
పాడల్ ఎణ్ : 4
విండు అలర్ పొఴిల్ అణి వెంగురు మేవియ
వండు అమర్ వళర్-సడైయీరే;
వండు అమర్ వళర్-సడైయీర్ ఉమై వాఴ్త్తుం అత్-
తొండర్గళ్ తుయర్ పిణి ఇలరే.
పాడల్ ఎణ్ : 5
మిక్కవర్ తొఴుదెఴు వెంగురు మేవియ
అక్కినొడు అరవు అసైత్తీరే;
అక్కినొడు అరవు అసైత్తీర్ ఉమదు అడియిణై
తక్కవర్ ఉఱువదు తవమే.
పాడల్ ఎణ్ : 6
వెంద వెణ్ పొడి అణి వెంగురు మేవియ
అందం ఇల్ పెరుమైయినీరే;
అందం ఇల్ పెరుమైయినీర్ ఉమై అలర్-కొడు
సిందై-సెయ్వోర్ వినై సిదైవే.
పాడల్ ఎణ్ : 7
విఴ మల్గు పొఴిల్ అణి వెంగురు మేవియ
అఴల్ మల్గుం అంగైయినీరే;
అఴల్ మల్గుం అంగైయినీర్ ఉమై అలర్-కొడు
తొఴ అల్లల్ కెడువదు తుణివే.
పాడల్ ఎణ్ : 8
విత్తగ మఱైయవర్ వెంగురు మేవియ
మత్త నన్ మలర్ పునైవీరే
మత్త నన్ మలర్ పునైవీర్ ఉమదు అడి తొఴుం
సిత్తం-అదు ఉడైయవర్ తిరువే.
పాడల్ ఎణ్ : 9
మేలవర్ తొఴుదెఴు వెంగురు మేవియ
ఆల నన్ మణి మిడట్రీరే;
ఆల నన్ మణి మిడట్రీర్ ఉమదు అడి తొఴుం
సీలం-అదు ఉడైయవర్ తిరువే.
పాడల్ ఎణ్ : 10
విరై మల్గు పొఴిల్ అణి వెంగురు మేవియ
అరై మల్గు పులి-అదళీరే
అరై మల్గు పులి-అదళీర్ ఉమదు అడియిణై
ఉరై మల్గు పుగఴవర్ ఉయర్వే.
పాడల్ ఎణ్ : 11
****** (This verse is lost) *****
================ ============
No comments:
Post a Comment