Monday, May 23, 2016

2.40 - எம்பிரான் எனக்கு அமுதம் - திருப்பிரமபுரம் (சீகாழி) - tirup-piramapuram (sīgāḻi)

31) பதிகம் 2.40 - திருப்பிரமபுரம் (சீகாழி) - ( பண் : சீகாமரம் ) - tirup-piramapuram (sīgāḻi)
சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
2.40 - எம்பிரான் எனக்கு அமுதம்

2.40 - embirāṉ, eṉakku amudam

Verses - PDF: 2.40 - எம்பிரான் எனக்கு அமுதம் - embirāṉ eṉakku amudam

****

On YouTube:

For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_040.HTM


V. Subramanian

=====================

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


பதிகம் 2.40 - திருப்பிரமபுரம் (சீகாழி) - ( பண் : சீகாமரம் )

Background:

திருஞான சம்பந்தர் தம் ஊரான சீகாழியில் தங்கியிருந்த போது பாடிய பல பதிகங்களுள் ஒன்று இது. இப்பதிகத்தைப் பற்றிய சிறப்புக் குறிப்பு எதுவும் பெரியபுராணத்தில் இல்லை.

பிரமபுரம் - தலப்பெயர்க் காரணம்:

சீகாழி - இத்தலம் பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரு பெயர்களையுடையது.

சம்பந்தரின் முதற்பதிகத்தில் முதற்பாடலில் 'பிரமபுரம்' பெயர்க்காரணத்தைச் சுட்டுகின்றார்:

1.1.1

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த

பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

--- இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!


சீகாழி (சீர்காழி) - சட்டைநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=495

சீகாழி (சீர்காழி) - கோயில் தகவல்கள் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=87

--------------

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.40 - திருப்பிரமபுரம் (சீகாழி) - ( பண் : சீகாமரம் )

பாடல் எண் : 1

எம்பிரா னெனக்கமுதம் ஆவானுந் தன்னடைந்தார்
தம்பிரா னாவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.


பாடல் எண் : 2

தாமென்றும் மனந்தளராத் தகுதியரா யுலகத்துக்
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.


பாடல் எண் : 3

நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் றிருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை யெப்போதும்
பன்னஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.


பாடல் எண் : 4

சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்
தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை
நாநாளு நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே.


பாடல் எண் : 5

கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமா முருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை யியல்பாக வறிந்தோமே.


பாடல் எண் : 6

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமா னெருதேறிக்
கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் றன்மைகளே.


பாடல் எண் : 7

சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த
இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை யடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.


பாடல் எண் : 8

எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமன மெப்போதும் பெறுவார்தாந் தக்காரே.


பாடல் எண் : 9

கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
றெரியாதா னிருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தா மேழுலகும் உடனாள வுரியாரே.


பாடல் எண் : 10

உடையிலார் சீவரத்தார் தன்பெருமை யுணர்வரியான்
முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.


பாடல் எண் : 11

தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.

============================= ============================

Word separated version:

--------------

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.40 - திருப்-பிரமபுரம் (சீகாழி) - ( பண் : சீகாமரம் )

பாடல் எண் : 1

எம்பிரான், னக்கு அமுதம் ஆவானும், தன்டைந்தார்
தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும்,
கம்ப மா கரிரித்த காபாலி, கறைக்கண்டன்,
வம்பு-லாம் பொழில் பிரம-புரத்துறையும் வானவனே.


பாடல் எண் : 2

தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய், லகத்துக்கு
ஆம் என்று சரண்-புகுந்தார் தமைக் காக்கும் கருணையினான்;
ம் என்று மறை பயில்வார் பிரம-புரத்துறைகின்ற,
காமன்ன் ல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.


பாடல் எண் : 3

நன்-நெஞ்சே, னைரந்தேன், நம் பெருமான் திருவடியே
உன்னம் செய்து இரு கண்டாய், உய்வு-தனை வேண்டுதியேல்;
அன்னம் சேர் பிரம-புரத்து ஆர்-முதை ப்போதும்
பன்னு-ம் சீர் வாய்-துவே, பார் கண்ணே பரிந்திடவே.


பாடல் எண் : 4

சா-நாள் இன்றிம், மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்கும்
கோனாளும் திருவடிக்கே கொழு-மலர் தூவு எத்தனையும்;
தேன்-ளும் பொழில் பிரம-புரத்துறையும் தீ-வணனை
நா நாளும் நன்-நியமம் செய்து, வன் சீர் நவின்று-த்தே.


பாடல் எண் : 5

கண்-நுதலான்; வெண்-நீற்றான்; கமழ்-சடையான்; விடையேறி;
பெண்ம் ஆம் உருவத்தான்; பிஞ்ஞகன்; பேர் பலடையான்;
விண்-நுதலாத் தோன்றிய சீர்ப் பிரம-புரம் தொழ விரும்பி,
எண்ணுதல் ஆம் செல்வத்தை யல்பாக றிந்தோமே.


பாடல் எண் : 6

எங்கேனும் யாது-கிப் பிறந்திடினும் தன்டியார்க்கு
"ங்கே" ன்று அருள்-புரியும் எம்பெருமான், ருதேறிக்
கொங்கு-யும் மலர்ச்சோலைக் குளிர்-பிரம-புரத்துறையும்,
சங்கேத்து ஒளிர்-மேனிச் சங்கரன்-தன் ன்மைகளே.


பாடல் எண் : 7

சிலை-து வெஞ்சிலையாகத், திரி-புரம் மூன்று எரி-செய்த
இலை-நுனை-வேல் டக்-கையன்; ஏந்திழையாள் ஒரு கூறன்;
அலை-புனல்-சூழ் பிரம-புரத்து அரு-மணியை டி-பணிந்தால்,
நிலை-டைய பெரும் செல்வம் நீடு-லகில் பெறல் ஆமே.


பாடல் எண் : 8

எரித்த-மயிர் வாள்-ரக்கன் வெற்பு-டுக்கத் தோளொடு தாள்
நெரித்து-ருளும் சிவமூர்த்தி; நீறு அணிந்த மேனியினான்;
உரித்த வரித்-தோல் உடையான் உறை பிரம-புரம் தன்னைத்
தரித்த மனம் எப்போதும் பெறுவார்-தாம் தக்காரே.


பாடல் எண் : 9

கரியானும் நான்முகனும் காணாமைக் கனல்-உரு-ஆய்
அரியான் ஆம் பரமேட்டி; அரவம் சேர் அகலத்தான்;
தெரியாதான் இருந்து-உறையும் திகழ்-பிரம-புரம் சேர
உரியார் தாம் ஏழுலகும் உடன் ஆள உரியாரே.


பாடல் எண் : 10

உடைலார், சீவரத்தார், தன்-பெருமை ணர்வு-ரியான்;
முடையில்-ர் வெண்-லைக்-கை மூர்த்தி ஆம் திரு-ருவன்;
பெடையில்-ர் வண்டு-டும் பொழில் பிரம-புரத்துறையும்
சடையில்-ர் வெண்-பிறையான் தாள் பணிவார் தக்காரே.


பாடல் எண் : 11

தன்-அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானைத், தத்துவனைக்,
கன் அடைந்த மதில் பிரம-புரத்து உறையும் காவலனை,
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார்
பொன் அடைந்தார், போகங்கள் பல அடைந்தார், புண்ணியரே.

================== ==========================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘- retroflex letter in Tamil / Malayalam )

--------------

sambandar tēvāram - padigam 2.40 - tirup-piramaburam (sīgāḻi) - ( paṇ : sīgāmaram )

pāḍal eṇ : 1

embirān, enakku amudam āvānum, tan aḍaindār

tambirān āvānum, taḻal ēndu kaiyānum,

kamba mā kari uritta kābāli, kaṟaikkaṇḍan,

vambu-ulām poḻil pirama-purattu uṟaiyum vānavanē.


pāḍal eṇ : 2

tām eṇḍrum manam taḷarāt tagudiyarāy, ulagattukku

ām eṇḍru saraṇ-pugundār tamaik kākkum karuṇaiyinān;

ōm eṇḍru maṟai payilvār pirama-purattu uṟaigiṇḍra,

kāman tan uḍal eriyak kanal sērnda kaṇṇānē.


pāḍal eṇ : 3

nan-neñjē, unai irandēn, nam perumān tiruvaḍiyē

unnam seydu iru kaṇḍāy, uyvu-adanai vēṇḍudiyēl;

annam sēr pirama-purattu ār-amudai eppōdum

pannu-am sīr vāy-aduvē, pār kaṇṇē parindiḍavē.


pāḍal eṇ : 4

sā-nāḷ iṇḍrim, manamē saṅgaidanait tavirppikkum

kōnāḷum tiruvaḍikkē koḻu-malar tūvu ettanaiyum;

tēn-āḷum poḻil pirama-purattu uṟaiyum tī-vaṇanai

nā nāḷum nan-niyamam seydu, avan sīr naviṇḍru-ēttē.


pāḍal eṇ : 5

kaṇ-nudalān; veṇ-nīṭrān; kamaḻ-saḍaiyān; viḍaiyēṟi;

peṇ idam ām uruvattān; piññagan; pēr pala uḍaiyān;

viṇ-nudalāt tōṇḍriya sīrp pirama-puram toḻa virumbi,

eṇṇudal ām selvattai iyalbāga aṟindōmē.


pāḍal eṇ : 6

eṅgēnum yādu-āgip piṟandiḍinum tan aḍiyārkku

"iṅgē" eṇḍru aruḷ-puriyum emberumān, erudēṟik

koṅgu-ēyum malarccōlaik kuḷir-pirama-purattu uṟaiyum,

saṅgē ottu oḷir-mēnic caṅgaran-tan tanmaigaḷē.


pāḍal eṇ : 7

silai-adu veñjilaiyāgat, tiri-puram mūṇḍru eri-seyda

ilai-nunai-vēl taḍak-kaiyan; ēndiḻaiyāḷ oru kūṟan;

alai-punal-sūḻ pirama-purattu aru-maṇiyai aḍi-paṇindāl,

nilai-uḍaiya perum selvam nīḍu-ulagil peṟal āmē.


pāḍal eṇ : 8

eritta-mayir vāḷ-arakkan veṟpu-eḍukkat tōḷoḍu tāḷ

nerittu-aruḷum sivamūrtti; nīṟu aṇinda mēniyinān;

uritta varit-tōl uḍaiyān uṟai pirama-puram tannait

taritta manam eppōdum peṟuvār-tām takkārē.


pāḍal eṇ : 9

kariyānum nānmuganum kāṇāmaik kanal-uru-āy

ariyān ām paramēṭṭi; aravam sēr agalattān;

teriyādān irundu-uṟaiyum tigaḻ-pirama-puram sēra

uriyār tām ēḻulagum uḍan āḷa uriyārē.


pāḍal eṇ : 10

uḍai ilār, sīvarattār, tan-perumai uṇarvu-ariyān;

muḍaiyil-ār veṇ-talaik-kai mūrtti ām tiru-uruvan;

peḍaiyil-ār vaṇḍu-āḍum poḻil pirama-purattu uṟaiyum

saḍaiyil-ār veṇ-piṟaiyān tāḷ paṇivār takkārē.


pāḍal eṇ : 11

tan-aḍaindārkku inbaṅgaḷ taruvānait, tattuvanaik,

kan aḍainda madil pirama-purattu uṟaiyum kāvalanai,

mun aḍaindān sambandan moḻi pattum ivai vallār

pon aḍaindār, pōgaṅgaḷ pala aḍaindār, puṇṇiyarē.


================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.40 - तिरुप्-पिरमबुरम् (सीगाऴि) - ( पण् : सीगामरम् )

पाडल् ऎण् : 1

ऎम्बिरान्, ऎनक्कु अमुदम् आवानुम्, तन् अडैन्दार्

तम्बिरान् आवानुम्, तऴल् एन्दु कैयानुम्,

कम्ब मा करि उरित्त काबालि, कऱैक्कण्डन्,

वम्बु-उलाम् पॊऴिल् पिरम-पुरत्तु उऱैयुम् वानवने.


पाडल् ऎण् : 2

ताम् ऎण्ड्रुम् मनम् तळरात् तगुदियराय्, उलगत्तुक्कु

आम् ऎण्ड्रु सरण्-पुगुन्दार् तमैक् काक्कुम् करुणैयिनान्;

ओम् ऎण्ड्रु मऱै पयिल्वार् पिरम-पुरत्तु उऱैगिण्ड्र,

कामन् तन् उडल् ऎरियक् कनल् सेर्न्द कण्णाने.


पाडल् ऎण् : 3

नन्-नॆञ्जे, उनै इरन्देन्, नम् पॆरुमान् तिरुवडिये

उन्नम् सॆय्दु इरु कण्डाय्, उय्वु-अदनै वेण्डुदियेल्;

अन्नम् सेर् पिरम-पुरत्तु आर्-अमुदै ऎप्पोदुम्

पन्नु-अम् सीर् वाय्-अदुवे, पार् कण्णे परिन्दिडवे.


पाडल् ऎण् : 4

सा-नाळ् इण्ड्रिम्, मनमे सङ्गैदनैत् तविर्प्पिक्कुम्

कोनाळुम् तिरुवडिक्के कॊऴु-मलर् तूवु ऎत्तनैयुम्;

तेन्-आळुम् पॊऴिल् पिरम-पुरत्तु उऱैयुम् ती-वणनै

ना नाळुम् नन्-नियमम् सॆय्दु, अवन् सीर् नविण्ड्रु-एत्ते.


पाडल् ऎण् : 5

कण्-नुदलान्; वॆण्-नीट्रान्; कमऴ्-सडैयान्; विडैयेऱि;

पॆण् इदम् आम् उरुवत्तान्; पिञ्ञगन्; पेर् पल उडैयान्;

विण्-नुदलात् तोण्ड्रिय सीर्प् पिरम-पुरम् तॊऴ विरुम्बि,

ऎण्णुदल् आम् सॆल्वत्तै इयल्बाग अऱिन्दोमे.


पाडल् ऎण् : 6

ऎङ्गेनुम् यादु-आगिप् पिऱन्दिडिनुम् तन् अडियार्क्कु

"इङ्गे" ऎण्ड्रु अरुळ्-पुरियुम् ऎम्बॆरुमान्, ऎरुदेऱिक्

कॊङ्गु-एयुम् मलर्च्चोलैक् कुळिर्-पिरम-पुरत्तु उऱैयुम्,

सङ्गे ऒत्तु ऒळिर्-मेनिच् चङ्गरन्-तन् तन्मैगळे.


पाडल् ऎण् : 7

सिलै-अदु वॆञ्जिलैयागत्, तिरि-पुरम् मूण्ड्रु ऎरि-सॆय्द

इलै-नुनै-वेल् तडक्-कैयन्; एन्दिऴैयाळ् ऒरु कूऱन्;

अलै-पुनल्-सूऴ् पिरम-पुरत्तु अरु-मणियै अडि-पणिन्दाल्,

निलै-उडैय पॆरुम् सॆल्वम् नीडु-उलगिल् पॆऱल् आमे.


पाडल् ऎण् : 8

ऎरित्त-मयिर् वाळ्-अरक्कन् वॆऱ्‌पु-ऎडुक्कत् तोळॊडु ताळ्

नॆरित्तु-अरुळुम् सिवमूर्त्ति; नीऱु अणिन्द मेनियिनान्;

उरित्त वरित्-तोल् उडैयान् उऱै पिरम-पुरम् तन्नैत्

तरित्त मनम् ऎप्पोदुम् पॆऱुवार्-ताम् तक्कारे.


पाडल् ऎण् : 9

करियानुम् नान्मुगनुम् काणामैक् कनल्-उरु-आय्

अरियान् आम् परमेट्टि; अरवम् सेर् अगलत्तान्;

तॆरियादान् इरुन्दु-उऱैयुम् तिगऴ्-पिरम-पुरम् सेर

उरियार् ताम् एऴुलगुम् उडन् आळ उरियारे.


पाडल् ऎण् : 10

उडै इलार्, सीवरत्तार्, तन्-पॆरुमै उणर्वु-अरियान्;

मुडैयिल्-आर् वॆण्-तलैक्-कै मूर्त्ति आम् तिरु-उरुवन्;

पॆडैयिल्-आर् वण्डु-आडुम् पॊऴिल् पिरम-पुरत्तु उऱैयुम्

सडैयिल्-आर् वॆण्-पिऱैयान् ताळ् पणिवार् तक्कारे.


पाडल् ऎण् : 11

तन्-अडैन्दार्क्कु इन्बङ्गळ् तरुवानैत्, तत्तुवनैक्,

कन् अडैन्द मदिल् पिरम-पुरत्तु उऱैयुम् कावलनै,

मुन् अडैन्दान् सम्बन्दन् मॊऴि पत्तुम् इवै वल्लार्

पॊन् अडैन्दार्, पोगङ्गळ् पल अडैन्दार्, पुण्णियरे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


సంబందర్ తేవారం - పదిగం 2.40 - తిరుప్-పిరమబురం (సీగాఴి) - ( పణ్ : సీగామరం )

పాడల్ ఎణ్ : 1

ఎంబిరాన్, ఎనక్కు అముదం ఆవానుం, తన్ అడైందార్

తంబిరాన్ ఆవానుం, తఴల్ ఏందు కైయానుం,

కంబ మా కరి ఉరిత్త కాబాలి, కఱైక్కండన్,

వంబు-ఉలాం పొఴిల్ పిరమ-పురత్తు ఉఱైయుం వానవనే.


పాడల్ ఎణ్ : 2

తాం ఎండ్రుం మనం తళరాత్ తగుదియరాయ్, ఉలగత్తుక్కు

ఆం ఎండ్రు సరణ్-పుగుందార్ తమైక్ కాక్కుం కరుణైయినాన్;

ఓం ఎండ్రు మఱై పయిల్వార్ పిరమ-పురత్తు ఉఱైగిండ్ర,

కామన్ తన్ ఉడల్ ఎరియక్ కనల్ సేర్న్ద కణ్ణానే.


పాడల్ ఎణ్ : 3

నన్-నెంజే, ఉనై ఇరందేన్, నం పెరుమాన్ తిరువడియే

ఉన్నం సెయ్దు ఇరు కండాయ్, ఉయ్వు-అదనై వేండుదియేల్;

అన్నం సేర్ పిరమ-పురత్తు ఆర్-అముదై ఎప్పోదుం

పన్ను-అం సీర్ వాయ్-అదువే, పార్ కణ్ణే పరిందిడవే.


పాడల్ ఎణ్ : 4

సా-నాళ్ ఇండ్రిం, మనమే సంగైదనైత్ తవిర్ప్పిక్కుం

కోనాళుం తిరువడిక్కే కొఴు-మలర్ తూవు ఎత్తనైయుం;

తేన్-ఆళుం పొఴిల్ పిరమ-పురత్తు ఉఱైయుం తీ-వణనై

నా నాళుం నన్-నియమం సెయ్దు, అవన్ సీర్ నవిండ్రు-ఏత్తే.


పాడల్ ఎణ్ : 5

కణ్-నుదలాన్; వెణ్-నీట్రాన్; కమఴ్-సడైయాన్; విడైయేఱి;

పెణ్ ఇదం ఆం ఉరువత్తాన్; పిఞ్ఞగన్; పేర్ పల ఉడైయాన్;

విణ్-నుదలాత్ తోండ్రియ సీర్ప్ పిరమ-పురం తొఴ విరుంబి,

ఎణ్ణుదల్ ఆం సెల్వత్తై ఇయల్బాగ అఱిందోమే.


పాడల్ ఎణ్ : 6

ఎంగేనుం యాదు-ఆగిప్ పిఱందిడినుం తన్ అడియార్క్కు

"ఇంగే" ఎండ్రు అరుళ్-పురియుం ఎంబెరుమాన్, ఎరుదేఱిక్

కొంగు-ఏయుం మలర్చ్చోలైక్ కుళిర్-పిరమ-పురత్తు ఉఱైయుం,

సంగే ఒత్తు ఒళిర్-మేనిచ్ చంగరన్-తన్ తన్మైగళే.


పాడల్ ఎణ్ : 7

సిలై-అదు వెంజిలైయాగత్, తిరి-పురం మూండ్రు ఎరి-సెయ్ద

ఇలై-నునై-వేల్ తడక్-కైయన్; ఏందిఴైయాళ్ ఒరు కూఱన్;

అలై-పునల్-సూఴ్ పిరమ-పురత్తు అరు-మణియై అడి-పణిందాల్,

నిలై-ఉడైయ పెరుం సెల్వం నీడు-ఉలగిల్ పెఱల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 8

ఎరిత్త-మయిర్ వాళ్-అరక్కన్ వెఱ్పు-ఎడుక్కత్ తోళొడు తాళ్

నెరిత్తు-అరుళుం సివమూర్త్తి; నీఱు అణింద మేనియినాన్;

ఉరిత్త వరిత్-తోల్ ఉడైయాన్ ఉఱై పిరమ-పురం తన్నైత్

తరిత్త మనం ఎప్పోదుం పెఱువార్-తాం తక్కారే.


పాడల్ ఎణ్ : 9

కరియానుం నాన్ముగనుం కాణామైక్ కనల్-ఉరు-ఆయ్

అరియాన్ ఆం పరమేట్టి; అరవం సేర్ అగలత్తాన్;

తెరియాదాన్ ఇరుందు-ఉఱైయుం తిగఴ్-పిరమ-పురం సేర

ఉరియార్ తాం ఏఴులగుం ఉడన్ ఆళ ఉరియారే.


పాడల్ ఎణ్ : 10

ఉడై ఇలార్, సీవరత్తార్, తన్-పెరుమై ఉణర్వు-అరియాన్;

ముడైయిల్-ఆర్ వెణ్-తలైక్-కై మూర్త్తి ఆం తిరు-ఉరువన్;

పెడైయిల్-ఆర్ వండు-ఆడుం పొఴిల్ పిరమ-పురత్తు ఉఱైయుం

సడైయిల్-ఆర్ వెణ్-పిఱైయాన్ తాళ్ పణివార్ తక్కారే.


పాడల్ ఎణ్ : 11

తన్-అడైందార్క్కు ఇన్బంగళ్ తరువానైత్, తత్తువనైక్,

కన్ అడైంద మదిల్ పిరమ-పురత్తు ఉఱైయుం కావలనై,

మున్ అడైందాన్ సంబందన్ మొఴి పత్తుం ఇవై వల్లార్

పొన్ అడైందార్, పోగంగళ్ పల అడైందార్, పుణ్ణియరే.

================ ============



1 comment:

  1. அருமையான பதிவு. நன்றி. ஐயா. 🌼👍

    ReplyDelete