சுந்தரர் தேவாரம் - sundarar thevaram
7.20 - நீள நினைந்தடியேன்
7.20 - nīḷa niṉaindu-aḍiyēṉ
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses - PDF: 7.20 - நீள நினைந்தடியேன் - nīḷa niṉaindu-aḍiyēṉ
7.20 - nILa ninaindhadiyEn - word by word
meaning - English translation:
https://drive.google.com/file/d/19Sg3nZLrJL0eVYUXLAT6dvUiSFpJbjrX/view?usp=sharing
On YouTube:
For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS7_020.HTM
V. Subramanian
====================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.20 - திருக்கோளிலி ( பண் : நட்டராகம் )
Background:
சுந்தரரிடம் அளவற்ற அன்புடையவரான குண்டையூர்க் கிழார் சுந்தரர் இல்லத்திற்கு நெல், பருப்பு முதலிய உணவுப்பொருள்களைத் தொடர்ந்து கொடுத்துவந்தார். ஒரு சமயம், மழையின்மையால் விளைச்சல் குன்றியது . அதனால் சுந்தரருக்குப் பொருள்கள் வழங்கமுடியாமல் குண்டையூர்க் கிழார் வருந்தினார். ஒரு நாள் அப்படி வருத்தத்தோடு இரவு உணவு உண்ணாமல் உறங்கியபோது, இறைவன் அருளால் குண்டையூர் முழுதும் குவியல் குவியலாக நெல் நிரம்பியது . குண்டையூர்க் கிழார்க்கு இறைவன் அதனைக் கனவில் உணர்த்தினான். எழுந்து அதனைக் கண்டு திருவருளை வியந்து தொழுதார். அந்நெல் அனைத்தையும் திருவாரூருக்கு எடுத்துச்சென்று கொடுக்கத் தம்மால் இயலாது என்று உணர்ந்து இச்செய்தியைச் சுந்தரருக்குத் தெரிவிக்கத் திருவாரூருக்குச் சென்றார்; அதன் முன்னரே ஈசன் சுந்தரருக்கும் இச்செய்தியை உணர்த்தினான்; சுந்தரரும் குண்டையூர் நோக்கிச் சென்றார்; இருவரும் வழியில் சந்தித்தனர்; சுந்தரருக்குச் செய்தியைக் கூறி , அந்தப் பெரிய நெல்மலையை மனிதரால் எடுத்துச் செல்ல இயலாது என்றார் குண்டையூர்க் கிழார். சுந்தரரும் , அதனை நேரில் கண்டு, திருவருளை வியந்து, குண்டையூர்க்கு அருகே உள்ள திருக்கோளிலிக்குச் சென்று, நெல் எடுக்க ஆள் வேண்டிப் பாடியருளியது இத்திருப்பதிகம் .
--------------
#3167 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 13
"வன்றொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல்லெடுக்க
இன்றுகுறை யாகின்ற தென்செய்கே!" னெனநினைந்து
துன்றுபெருங் கவலையினாற் றுயரெய்தி யுண்ணாதே
அன்றிரவு துயில்கொள்ள வங்கணர்வந் தருள்புரிவார்,
#3171 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 17
குண்டையூர்க் கிழவர் தாமு மெதிர்கொண்டு கோதில் வாய்மைத்
தொண்டனார் பாதந் தன்னிற் றொழுதுவீழ்ந் தெழுந்து நின்று
"பண்டெலா மடியேன் செய்த பணியெனக் கின்று முட்ட
அண்டர்தம் பிரானார் தாமே நென்மலை யளித்தா" ரென்று,
#3172 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 18
"மனிதரா லெடுக்கு மெல்லைத் தன்றுநென் மலையி னாக்கம்;
இனியெனாற் செய்ய லாகும் பணியன்றி" தென்னக் கேட்டுப்
"பனிமதி முடியா ரன்றே பரிந்துமக் களித்தார் நெல்"லென்
றினியன மொழிந்து தாமுங் குண்டையூ ரெய்த வந்தார்.
#3174 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 20
ஆளிடவேண் டிக்கொள்வா ரருகுதிருப் பதியான
கோளிலியிற் றம்பெருமான் கோயிலினை வந்தெய்தி
"வாளன கண்மடவாள் வருந்தாமே" யெனும்பதிகம்
மூளவருங் காதலுடன் முன்றொழுது பாடுதலும்,
#3175 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 21
"பகற்பொழுது கழிந்ததற்பின் பரவைமனை யளவன்றி
மிகப்பெருகு நெல்லுலகில் விளங்கியவா ரூர்நிறையப்
புகப்பெய்து தருவனநம் பூதங்க" ளெனவிசும்பில்
நிகர்ப்பரிய தொருவாக்கு நிகழ்ந்ததுநின் மலனருளால்.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.20 - திருக்கோளிலி ( பண் : நட்டராகம் )
(தானன தானதனா தன தானன தானதனா - என்ற சந்தம்)
நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.
பாடல் எண் : 2
வண்டம ருங்குழலாள் உமை நங்கைஓர் பங்குடையாய்
விண்டவர் தம்புரமூன் றெரி செய்தஎம் வேதியனே
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக் கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே அவை அட்டித் தரப்பணியே.
பாதிஓர் பெண்ணைவைத்தாய் பட ருஞ்சடைக் கங்கை வைத்தாய்
மாதர்நல் லார்வருத்தம் மது நீயும் அறிதியன்றே
கோதில் பொழில்புடைசூழ் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புதனே அவை அட்டித் தரப்பணியே.
சொல்லுவ தென்உனைநான் தொண்டை வாய்உமை நங்கையைநீ
புல்கி இடத்தில்வைத்தாய்க் கொரு பூசல்செய் தார்உளரோ
கொல்லை வளம்புறவிற் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அல்லல் களைந்தடியேற் கவை அட்டித் தரப்பணியே.
முல்லை முறுவலுமை ஒரு பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலையிற் பலி கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புறவிற் றிருக் கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடியேற் கவை அட்டித் தரப்பணியே.
குரவம ருங்குழலாள் உமை நங்கைஓர் பங்குடையாய்
பரவை பசிவருத்தம் மது நீயும் அறிதியன்றே
குரவம ரும்பொழில்சூழ் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அரவம் அசைத்தவனே அவை அட்டித் தரப்பணியே.
எம்பெரு மான்உனையே நினைந் தேத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகைசூழ் திருக் கோளிலி எம்பெருமான்
அன்பது வாய்அடியேற் கவை அட்டித் தரப்பணியே.
அரக்கன் முடிகரங்க ளடர்த் திட்டஎம் மாதிப்பிரான்
பரக்கும் அரவல்குலாள் பர வையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதிகொள் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
இரக்கம தாய்அடியேற் கவை அட்டித் தரப்பணியே.
பண்டைய மால்பிரமன் பறந் தும்மிடந் தும்மயர்ந்தும்
கண்டில ராய்அவர்கள் கழல் காண்பரி தாயபிரான்
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக் கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே யவை அட்டித் தரப்பணியே.
கொல்லை வளம்புறவிற் றிருக் கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவுந் திரு நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந் தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துலகில் அண்டர் வானுல காள்பவரே.
============================= ============================
Word separated version:
--------------
#3167 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 13
"வன்-தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க
இன்று குறை ஆகின்றது என் செய்கேன்!" என நினைந்து,
துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி, உண்ணாதே
அன்று இரவு துயில்-கொள்ள, அங்கணர் வந்து அருள்-புரிவார்,
#3171 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 17
குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர்-கொண்டு, கோது-இல் வாய்மைத்
தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று,
"பண்டு-எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட,
அண்டர்-தம் பிரானார் தாமே நெல்-மலை அளித்தார்" என்று,
#3172 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 18
"மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம்;
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது" என்னக் கேட்டுப்,
"பனி-மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல்" என்று
இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார்.
#3174 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 20
ஆள் இட வேண்டிக்கொள்வார் அருகு திருப்-பதியான
கோளிலியில் தம்பெருமான் கோயிலினை வந்து எய்தி,
"வாள் அன கண் மடவாள் வருந்தாமே" எனும் பதிகம்
மூள-வரும் காதலுடன் முன் தொழுது பாடுதலும்,
#3175 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 21
"பகற்பொழுது கழிந்ததற்பின் பரவை-மனை அளவு அன்றி,
மிகப் பெருகு நெல், உலகில் விளங்கிய ஆரூர் நிறையப்
புகப் பெய்து தருவன நம் பூதங்கள்" என விசும்பில்
நிகர்ப்பு அரியது ஒரு வாக்கு நிகழ்ந்தது நின்மலன் அருளால்.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.20 - திருக்கோளிலி ( பண் : நட்டராகம் )
(தானன தானதனா தன தானன தானதனா - என்ற சந்தம்)
நீள நினைந்து-அடியேன் உனை நித்தலும் கை-தொழுவேன்;
வாள்-அன கண்-மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
ஆள் இலை எம்பெருமான்; அவை அட்டித்தரப் பணியே.
பாடல் எண் : 2
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்;
விண்டவர் தம் புரம் மூன்று எரி-செய்த எம் வேதியனே;
தெண்-திரை நீர்-வயல்-சூழ் திருக்-கோளிலி எம்பெருமான்;
அண்டம்-அது ஆயவனே அவை அட்டித்தரப் பணியே.
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்;
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதி அன்றே;
கோது-இல் பொழில்-புடை-சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
ஆதியே; அற்புதனே; அவை அட்டித்தரப் பணியே.
சொல்லுவது என் உனை நான்? தொண்டை-வாய்-உமை நங்கையை நீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ?
கொல்லை வளம் புறவில் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே.
முல்லை முறுவல் உமை ஒரு பங்குடை முக்கணனே;
பல்-அயர் வெண்-தலையில் பலி-கொண்டு உழல் பாசுபதா;
கொல்லை வளம் புறவில் திருக்-கோளிலி எம்பெருமான்;
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே.
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்;
பரவை பசி-வருத்தம் அது நீயும் அறிதி அன்றே;
குரவு அமரும் பொழில்-சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
அரவம் அசைத்தவனே; அவை அட்டித்தரப் பணியே.
எம்பெருமான், உனையே நினைந்து ஏத்துவன் எப்பொழுதும்;
வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே;
செம்பொனின் மாளிகை சூழ் திருக்-கோளிலி எம்பெருமான்;
அன்பு-அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே.
அரக்கன் முடி கரங்கள் அடர்த்திட்ட எம் ஆதிப்-பிரான்;
பரக்கும் அரவு-அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்;
குரக்கினங்கள் குதிகொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
இரக்கம்-அதாய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே.
பண்டைய மால் பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும்
கண்டிலராய் அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்;
தெண்-திரை நீர்-வயல்-சூழ் திருக்-கோளிலி எம்பெருமான்;
அண்டம்-அது ஆயவனே; அவை அட்டித்தரப் பணியே.
கொல்லை வளம் புறவில் திருக்-கோளிலி மேயவனை,
நல்லவர் தாம் பரவும் திரு-நாவல ஊரன்-அவன்,
நெல் இட ஆட்கள் வேண்டி, நினைந்து ஏத்திய பத்தும் வல்லார்,
அல்லல் களைந்து உலகில், அண்டர் வானுலகு ஆள்பவரே.
================== ==========================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
--------------
#3167 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 13
"van-toṇḍar tiruvārūr māḷigaikku nel eḍukka
iṇḍru kuṟai āgiṇḍradu en seygēn!" ena ninaindu,
tuṇḍru perum kavalaiyināl tuyar eydi, uṇṇādē
aṇḍru iravu tuyil-koḷḷa, aṅgaṇar vandu aruḷ-purivār,
#3171 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 17
kuṇḍaiyūrk kiḻavar tāmum edir-koṇḍu, kōdu-il vāymait
toṇḍanār pādam tannil toḻudu vīḻndu eḻundu niṇḍru,
"paṇḍu-elām aḍiyēn seyda paṇi enakku iṇḍru muṭṭa,
aṇḍar-tam pirānār tāmē nel-malai aḷittār" eṇḍru,
#3172 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 18
"manidarāl eḍukkum ellaittu aṇḍru nel malaiyin ākkam;
ini enāl seyyal āgum paṇi aṇḍru idu" ennak kēṭṭup,
"pani-madi muḍiyār aṇḍrē parindu umakku aḷittār nel" eṇḍru
iniyana moḻindu tāmum kuṇḍaiyūr eyda vandār.
#3174 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 20
āḷ iḍa vēṇḍikkoḷvār arugu tirup-padiyāna
kōḷiliyil tamberumān kōyilinai vandu eydi,
"vāḷ ana kaṇ maḍavāḷ varundāmē" enum padigam
mūḷa-varum kādaluḍan mun toḻudu pāḍudalum,
#3175 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 21
"pagaṟpoḻudu kaḻindadaṟpin paravai-manai aḷavu aṇḍri,
migap perugu nel, ulagil viḷaṅgiya ārūr niṟaiyap
pugap peydu taruvana nam pūdaṅgaḷ" ena visumbil
nigarppu ariyadu oru vākku nigaḻndadu ninmalan aruḷāl.
sundarar tēvāram - padigam 7.20 - tirukkōḷili ( paṇ : naṭṭarāgam )
(tānana tānadanā tana tānana tānadanā - Rhythm)
pāḍal eṇ : 1
nīḷa ninaindu-aḍiyēn unai nittalum kai-toḻuvēn;
vāḷ-ana kaṇ-maḍavāḷ avaḷ vāḍi varundāmē,
kōḷili emberumān kuṇḍaiyūrc cila nellup peṭrēn;
āḷ ilai emberumān; avai aṭṭittarap paṇiyē.
pāḍal eṇ : 2
vaṇḍu amarum kuḻalāḷ umai naṅgai ōr paṅgu uḍaiyāy;
viṇḍavar tam puram mūṇḍru eri-seyda em vēdiyanē;
teṇ-tirai nīr-vayal-sūḻ tiruk-kōḷili emberumān;
aṇḍam-adu āyavanē avai aṭṭittarap paṇiyē.
pāḍal eṇ : 3
pādi ōr peṇṇai vaittāy; paḍarum saḍaik kaṅgai vaittāy;
mādar nallār varuttam adu nīyum aṟidi aṇḍrē;
kōdu-il poḻil-puḍai-sūḻ kuṇḍaiyūrc cila nellup peṭrēn;
ādiyē; aṟpudanē; avai aṭṭittarap paṇiyē.
pāḍal eṇ : 4
solluvadu en unai nān? toṇḍai-vāy-umai naṅgaiyai nī
pulgi iḍattil vaittāykku oru pūsal seydār uḷarō?
kollai vaḷam puṟavil kuṇḍaiyūrc cila nellup peṭrēn;
allal kaḷaindu aḍiyēṟku avai aṭṭittarap paṇiyē.
pāḍal eṇ : 5
mullai muṟuval umai oru paṅguḍai mukkaṇanē;
pal-ayar veṇ-talaiyil pali-koṇḍu uḻal pāsubadā;
kollai vaḷam puṟavil tiruk-kōḷili emberumān;
allal kaḷaindu aḍiyēṟku avai aṭṭittarap paṇiyē.
pāḍal eṇ : 6
kuravu amarum kuḻalāḷ umai naṅgai ōr paṅgu uḍaiyāy;
paravai pasi-varuttam adu nīyum aṟidi aṇḍrē;
kuravu amarum poḻil-sūḻ kuṇḍaiyūrc cila nellup peṭrēn;
aravam asaittavanē; avai aṭṭittarap paṇiyē.
pāḍal eṇ : 7
emberumān, unaiyē ninaindu ēttuvan eppoḻudum;
vambu amarum kuḻalāḷ oru pāgam amarndavanē;
sembonin māḷigai sūḻ tiruk-kōḷili emberumān;
anbu-aduvāy aḍiyēṟku avai aṭṭittarap paṇiyē.
pāḍal eṇ : 8
arakkan muḍi karaṅgaḷ aḍarttiṭṭa em ādip-pirān;
parakkum aravu-algulāḷ paravai avaḷ vāḍugiṇḍrāḷ;
kurakkinaṅgaḷ kudigoḷ kuṇḍaiyūrc cila nellup peṭrēn;
irakkam-adāy aḍiyēṟku avai aṭṭittarap paṇiyē.
pāḍal eṇ : 9
paṇḍaiya māl piraman paṟandum iḍandum ayarndum
kaṇḍilarāy avargaḷ kaḻal kāṇbu aridu āya pirān;
teṇ-tirai nīr-vayal-sūḻ tiruk-kōḷili emberumān;
aṇḍam-adu āyavanē; avai aṭṭittarap paṇiyē.
pāḍal eṇ : 10
kollai vaḷam puṟavil tiruk-kōḷili mēyavanai,
nallavar tām paravum tiru-nāvala ūran-avan,
nel iḍa āṭkaḷ vēṇḍi, ninaindu ēttiya pattum vallār,
allal kaḷaindu ulagil, aṇḍar vānulagu āḷbavarē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
#3167 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 13
"वन्-तॊण्डर् तिरुवारूर् माळिगैक्कु नॆल् ऎडुक्क
इण्ड्रु कुऱै आगिण्ड्रदु ऎन् सॆय्गेन्!" ऎन निनैन्दु,
तुण्ड्रु पॆरुम् कवलैयिनाल् तुयर् ऎय्दि, उण्णादे
अण्ड्रु इरवु तुयिल्-कॊळ्ळ, अङ्गणर् वन्दु अरुळ्-पुरिवार्,
#3171 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 17
कुण्डैयूर्क् किऴवर् तामुम् ऎदिर्-कॊण्डु, कोदु-इल् वाय्मैत्
तॊण्डनार् पादम् तन्निल् तॊऴुदु वीऴ्न्दु ऎऴुन्दु निण्ड्रु,
"पण्डु-ऎलाम् अडियेन् सॆय्द पणि ऎनक्कु इण्ड्रु मुट्ट,
अण्डर्-तम् पिरानार् तामे नॆल्-मलै अळित्तार्" ऎण्ड्रु,
#3172 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 18
"मनिदराल् ऎडुक्कुम् ऎल्लैत्तु अण्ड्रु नॆल् मलैयिन् आक्कम्;
इनि ऎनाल् सॆय्यल् आगुम् पणि अण्ड्रु इदु" ऎन्नक् केट्टुप्,
"पनि-मदि मुडियार् अण्ड्रे परिन्दु उमक्कु अळित्तार् नॆल्" ऎण्ड्रु
इनियन मॊऴिन्दु तामुम् कुण्डैयूर् ऎय्द वन्दार्.
#3174 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 20
आळ् इड वेण्डिक्कॊळ्वार् अरुगु तिरुप्-पदियान
कोळिलियिल् तम्बॆरुमान् कोयिलिनै वन्दु ऎय्दि,
"वाळ् अन कण् मडवाळ् वरुन्दामे" ऎनुम् पदिगम्
मूळ-वरुम् कादलुडन् मुन् तॊऴुदु पाडुदलुम्,
#3175 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 21
"पगऱ्पॊऴुदु कऴिन्ददऱ्पिन् परवै-मनै अळवु अण्ड्रि,
मिगप् पॆरुगु नॆल्, उलगिल् विळङ्गिय आरूर् निऱैयप्
पुगप् पॆय्दु तरुवन नम् पूदङ्गळ्" ऎन विसुम्बिल्
निगर्प्पु अरियदु ऒरु वाक्कु निगऴ्न्ददु निन्मलन् अरुळाल्.
सुन्दरर् तेवारम् - पदिगम् 7.20 - तिरुक्कोळिलि ( पण् : नट्टरागम् )
(तानन तानदना तन तानन तानदना - Rhythm)
पाडल् ऎण् : 1
नीळ निनैन्दु-अडियेन् उनै नित्तलुम् कै-तॊऴुवेन्;
वाळ्-अन कण्-मडवाळ् अवळ् वाडि वरुन्दामे,
कोळिलि ऎम्बॆरुमान् कुण्डैयूर्च् चिल नॆल्लुप् पॆट्रेन्;
आळ् इलै ऎम्बॆरुमान्; अवै अट्टित्तरप् पणिये.
पाडल् ऎण् : 2
वण्डु अमरुम् कुऴलाळ् उमै नङ्गै ओर् पङ्गु उडैयाय्;
विण्डवर् तम् पुरम् मूण्ड्रु ऎरि-सॆय्द ऎम् वेदियने;
तॆण्-तिरै नीर्-वयल्-सूऴ् तिरुक्-कोळिलि ऎम्बॆरुमान्;
अण्डम्-अदु आयवने अवै अट्टित्तरप् पणिये.
पाडल् ऎण् : 3
पादि ओर् पॆण्णै वैत्ताय्; पडरुम् सडैक् कङ्गै वैत्ताय्;
मादर् नल्लार् वरुत्तम् अदु नीयुम् अऱिदि अण्ड्रे;
कोदु-इल् पॊऴिल्-पुडै-सूऴ् कुण्डैयूर्च् चिल नॆल्लुप् पॆट्रेन्;
आदिये; अऱ्पुदने; अवै अट्टित्तरप् पणिये.
पाडल् ऎण् : 4
सॊल्लुवदु ऎन् उनै नान्? तॊण्डै-वाय्-उमै नङ्गैयै नी
पुल्गि इडत्तिल् वैत्ताय्क्कु ऒरु पूसल् सॆय्दार् उळरो?
कॊल्लै वळम् पुऱविल् कुण्डैयूर्च् चिल नॆल्लुप् पॆट्रेन्;
अल्लल् कळैन्दु अडियेऱ्कु अवै अट्टित्तरप् पणिये.
पाडल् ऎण् : 5
मुल्लै मुऱुवल् उमै ऒरु पङ्गुडै मुक्कणने;
पल्-अयर् वॆण्-तलैयिल् पलि-कॊण्डु उऴल् पासुबदा;
कॊल्लै वळम् पुऱविल् तिरुक्-कोळिलि ऎम्बॆरुमान्;
अल्लल् कळैन्दु अडियेऱ्कु अवै अट्टित्तरप् पणिये.
पाडल् ऎण् : 6
कुरवु अमरुम् कुऴलाळ् उमै नङ्गै ओर् पङ्गु उडैयाय्;
परवै पसि-वरुत्तम् अदु नीयुम् अऱिदि अण्ड्रे;
कुरवु अमरुम् पॊऴिल्-सूऴ् कुण्डैयूर्च् चिल नॆल्लुप् पॆट्रेन्;
अरवम् असैत्तवने; अवै अट्टित्तरप् पणिये.
पाडल् ऎण् : 7
ऎम्बॆरुमान्, उनैये निनैन्दु एत्तुवन् ऎप्पॊऴुदुम्;
वम्बु अमरुम् कुऴलाळ् ऒरु पागम् अमर्न्दवने;
सॆम्बॊनिन् माळिगै सूऴ् तिरुक्-कोळिलि ऎम्बॆरुमान्;
अन्बु-अदुवाय् अडियेऱ्कु अवै अट्टित्तरप् पणिये.
पाडल् ऎण् : 8
अरक्कन् मुडि करङ्गळ् अडर्त्तिट्ट ऎम् आदिप्-पिरान्;
परक्कुम् अरवु-अल्गुलाळ् परवै अवळ् वाडुगिण्ड्राळ्;
कुरक्किनङ्गळ् कुदिगॊळ् कुण्डैयूर्च् चिल नॆल्लुप् पॆट्रेन्;
इरक्कम्-अदाय् अडियेऱ्कु अवै अट्टित्तरप् पणिये.
पाडल् ऎण् : 9
पण्डैय माल् पिरमन् पऱन्दुम् इडन्दुम् अयर्न्दुम्
कण्डिलराय् अवर्गळ् कऴल् काण्बु अरिदु आय पिरान्;
तॆण्-तिरै नीर्-वयल्-सूऴ् तिरुक्-कोळिलि ऎम्बॆरुमान्;
अण्डम्-अदु आयवने; अवै अट्टित्तरप् पणिये.
पाडल् ऎण् : 10
कॊल्लै वळम् पुऱविल् तिरुक्-कोळिलि मेयवनै,
नल्लवर् ताम् परवुम् तिरु-नावल ऊरन्-अवन्,
नॆल् इड आट्कळ् वेण्डि, निनैन्दु एत्तिय पत्तुम् वल्लार्,
अल्लल् कळैन्दु उलगिल्, अण्डर् वानुलगु आळ्बवरे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
#3167 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 13
"వన్-తొండర్ తిరువారూర్ మాళిగైక్కు నెల్ ఎడుక్క
ఇండ్రు కుఱై ఆగిండ్రదు ఎన్ సెయ్గేన్!" ఎన నినైందు,
తుండ్రు పెరుం కవలైయినాల్ తుయర్ ఎయ్ది, ఉణ్ణాదే
అండ్రు ఇరవు తుయిల్-కొళ్ళ, అంగణర్ వందు అరుళ్-పురివార్,
#3171 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 17
కుండైయూర్క్ కిఴవర్ తాముం ఎదిర్-కొండు, కోదు-ఇల్ వాయ్మైత్
తొండనార్ పాదం తన్నిల్ తొఴుదు వీఴ్న్దు ఎఴుందు నిండ్రు,
"పండు-ఎలాం అడియేన్ సెయ్ద పణి ఎనక్కు ఇండ్రు ముట్ట,
అండర్-తం పిరానార్ తామే నెల్-మలై అళిత్తార్" ఎండ్రు,
#3172 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 18
"మనిదరాల్ ఎడుక్కుం ఎల్లైత్తు అండ్రు నెల్ మలైయిన్ ఆక్కం;
ఇని ఎనాల్ సెయ్యల్ ఆగుం పణి అండ్రు ఇదు" ఎన్నక్ కేట్టుప్,
"పని-మది ముడియార్ అండ్రే పరిందు ఉమక్కు అళిత్తార్ నెల్" ఎండ్రు
ఇనియన మొఴిందు తాముం కుండైయూర్ ఎయ్ద వందార్.
#3174 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 20
ఆళ్ ఇడ వేండిక్కొళ్వార్ అరుగు తిరుప్-పదియాన
కోళిలియిల్ తంబెరుమాన్ కోయిలినై వందు ఎయ్ది,
"వాళ్ అన కణ్ మడవాళ్ వరుందామే" ఎనుం పదిగం
మూళ-వరుం కాదలుడన్ మున్ తొఴుదు పాడుదలుం,
#3175 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 21
"పగఱ్పొఴుదు కఴిందదఱ్పిన్ పరవై-మనై అళవు అండ్రి,
మిగప్ పెరుగు నెల్, ఉలగిల్ విళంగియ ఆరూర్ నిఱైయప్
పుగప్ పెయ్దు తరువన నం పూదంగళ్" ఎన విసుంబిల్
నిగర్ప్పు అరియదు ఒరు వాక్కు నిగఴ్న్దదు నిన్మలన్ అరుళాల్.
సుందరర్ తేవారం - పదిగం 7.20 - తిరుక్కోళిలి ( పణ్ : నట్టరాగం )
(తానన తానదనా తన తానన తానదనా - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
నీళ నినైందు-అడియేన్ ఉనై నిత్తలుం కై-తొఴువేన్;
వాళ్-అన కణ్-మడవాళ్ అవళ్ వాడి వరుందామే,
కోళిలి ఎంబెరుమాన్ కుండైయూర్చ్ చిల నెల్లుప్ పెట్రేన్;
ఆళ్ ఇలై ఎంబెరుమాన్; అవై అట్టిత్తరప్ పణియే.
పాడల్ ఎణ్ : 2
వండు అమరుం కుఴలాళ్ ఉమై నంగై ఓర్ పంగు ఉడైయాయ్;
విండవర్ తం పురం మూండ్రు ఎరి-సెయ్ద ఎం వేదియనే;
తెణ్-తిరై నీర్-వయల్-సూఴ్ తిరుక్-కోళిలి ఎంబెరుమాన్;
అండం-అదు ఆయవనే అవై అట్టిత్తరప్ పణియే.
పాడల్ ఎణ్ : 3
పాది ఓర్ పెణ్ణై వైత్తాయ్; పడరుం సడైక్ కంగై వైత్తాయ్;
మాదర్ నల్లార్ వరుత్తం అదు నీయుం అఱిది అండ్రే;
కోదు-ఇల్ పొఴిల్-పుడై-సూఴ్ కుండైయూర్చ్ చిల నెల్లుప్ పెట్రేన్;
ఆదియే; అఱ్పుదనే; అవై అట్టిత్తరప్ పణియే.
పాడల్ ఎణ్ : 4
సొల్లువదు ఎన్ ఉనై నాన్? తొండై-వాయ్-ఉమై నంగైయై నీ
పుల్గి ఇడత్తిల్ వైత్తాయ్క్కు ఒరు పూసల్ సెయ్దార్ ఉళరో?
కొల్లై వళం పుఱవిల్ కుండైయూర్చ్ చిల నెల్లుప్ పెట్రేన్;
అల్లల్ కళైందు అడియేఱ్కు అవై అట్టిత్తరప్ పణియే.
పాడల్ ఎణ్ : 5
ముల్లై ముఱువల్ ఉమై ఒరు పంగుడై ముక్కణనే;
పల్-అయర్ వెణ్-తలైయిల్ పలి-కొండు ఉఴల్ పాసుబదా;
కొల్లై వళం పుఱవిల్ తిరుక్-కోళిలి ఎంబెరుమాన్;
అల్లల్ కళైందు అడియేఱ్కు అవై అట్టిత్తరప్ పణియే.
పాడల్ ఎణ్ : 6
కురవు అమరుం కుఴలాళ్ ఉమై నంగై ఓర్ పంగు ఉడైయాయ్;
పరవై పసి-వరుత్తం అదు నీయుం అఱిది అండ్రే;
కురవు అమరుం పొఴిల్-సూఴ్ కుండైయూర్చ్ చిల నెల్లుప్ పెట్రేన్;
అరవం అసైత్తవనే; అవై అట్టిత్తరప్ పణియే.
పాడల్ ఎణ్ : 7
ఎంబెరుమాన్, ఉనైయే నినైందు ఏత్తువన్ ఎప్పొఴుదుం;
వంబు అమరుం కుఴలాళ్ ఒరు పాగం అమర్న్దవనే;
సెంబొనిన్ మాళిగై సూఴ్ తిరుక్-కోళిలి ఎంబెరుమాన్;
అన్బు-అదువాయ్ అడియేఱ్కు అవై అట్టిత్తరప్ పణియే.
పాడల్ ఎణ్ : 8
అరక్కన్ ముడి కరంగళ్ అడర్త్తిట్ట ఎం ఆదిప్-పిరాన్;
పరక్కుం అరవు-అల్గులాళ్ పరవై అవళ్ వాడుగిండ్రాళ్;
కురక్కినంగళ్ కుదిగొళ్ కుండైయూర్చ్ చిల నెల్లుప్ పెట్రేన్;
ఇరక్కం-అదాయ్ అడియేఱ్కు అవై అట్టిత్తరప్ పణియే.
పాడల్ ఎణ్ : 9
పండైయ మాల్ పిరమన్ పఱందుం ఇడందుం అయర్న్దుం
కండిలరాయ్ అవర్గళ్ కఴల్ కాణ్బు అరిదు ఆయ పిరాన్;
తెణ్-తిరై నీర్-వయల్-సూఴ్ తిరుక్-కోళిలి ఎంబెరుమాన్;
అండం-అదు ఆయవనే; అవై అట్టిత్తరప్ పణియే.
పాడల్ ఎణ్ : 10
కొల్లై వళం పుఱవిల్ తిరుక్-కోళిలి మేయవనై,
నల్లవర్ తాం పరవుం తిరు-నావల ఊరన్-అవన్,
నెల్ ఇడ ఆట్కళ్ వేండి, నినైందు ఏత్తియ పత్తుం వల్లార్,
అల్లల్ కళైందు ఉలగిల్, అండర్ వానులగు ఆళ్బవరే.
================ ============
No comments:
Post a Comment