Saturday, October 21, 2017

7.66 – மறையவன் ஒரு மாணி - maṟaiyavaṉ oru māṇi

42) 7.66 – திருவாவடுதுறை ( பண் - தக்கேசி ) - tiruvāvaḍuduṟai (tiru-āvaḍuduṟai) (paṇ - takkēsi)
சுந்தரர் தேவாரம் - sundarar thevaram
7.66 – மறையவன் ஒரு மாணி
7.66 - maṟaiyavaṉ oru māṇi

Here are the links to verses and audio of this padhigam's discussion:
******
On YouTube:
Tamil discussion: https://youtu.be/Zo8z7QyDVDc
******
For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:

V. Subramanian
=================
This has verses in Tamil, English, and Nagari scripts. Please print the pages you need.

சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.66 – திருவாவடுதுறை ( பண் - தக்கேசி )

Background:
சுந்தரர் , திருஅரிசிற்கரைப்புத்தூர் தொழுது பல பதிகளையும் வணங்கித் திருவாவடுதுறை அடைந்து வழிபட்டபோது பாடியருளியது இப்பதிகம். இப்பதிகத்தில் பாடல்தோறும் ஒரு வரலாற்றைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
( பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 12.29..63)

இப்பதிகத்தில் 5 பாட்டுகளே கிடைத்துள்ளன !
----------
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.66 – திருவாவடுதுறை (திரு-ஆவடுதுறை) ( பண் - தக்கேசி )
பாடல் எண் : 1
மறைய வன்ஒரு மாணிவந் தடைய
..
வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற்
..
கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவன் எம்பெரு மான்என் றெப்போதும்
..
ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்
..
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

பாடல் எண் : 2
தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
..
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
..
சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
..
போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென்* மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
..
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
(* பாடபேதம் - “அருண்டென்")

பாடல் எண் : 3
திகழும் மாலவன் ஆயிர மலரால்
..
ஏத்து வான்ஒரு நீள்மலர் குறையப்
புகழி னால்அவன் கண்ணிடந் திடலும்
..
புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன்
திகழு நின்திருப் பாதங்கள் பரவித்
..
தேவ தேவநின் திறம்பல பிதற்றி
அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
..
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

பாடல் எண் : 4
வீரத் தால்ஒரு வேடுவ னாகி
..
விசைத்தொர் கேழலைத் துரந்துசென் றணைந்து
போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப்
..
புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன்
வாரத் தால்உன நாமங்கள் பரவி
..
வழிபட் டுன்திற மேநினைந் துருகி
ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன்
..
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

பாடல் எண் : 5
ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ
..
உன்னை உன்னிய மூவர்நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்னுல காளப்
..
புகழி னால்அருள் ஈந்தமை யறிந்து
மிக்க நின்கழ லேதொழு தரற்றி
..
வேதி யாஆதி மூர்த்திநின் அரையில்
அக்க ணிந்தஎம் மானுனை யடைந்தேன்
..
ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

பாடல் எண் : 6 ***** இப்பாடல் கிட்டிலது *****
பாடல் எண் : 7 ***** இப்பாடல் கிட்டிலது *****
பாடல் எண் : 8 ***** இப்பாடல் கிட்டிலது *****
பாடல் எண் : 9 ***** இப்பாடல் கிட்டிலது *****
பாடல் எண் : 10 ***** இப்பாடல் கிட்டிலது *****

Word separated version:
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.66 – திருவாவடுதுறை (திரு-ஆவடுதுறை) (பண் - தக்கேசி)
பாடல் எண் : 1
மறையவன் ஒரு மாணி வந்து அடைய
..
வாரமாய் அவன் ஆர்-உயிர் நிறுத்தக்,
கறைகொள் வேலுடைக் காலனைக் காலால்
..
கடந்த காரணம் கண்டு-கண்டு அடியேன்,
"
இறைவன்; எம்பெருமான்" என்று எப்போதும்
..
ஏத்தி ஏத்தி-நின்று அஞ்சலி செய்து, உன்
அறைகொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன்,
..
ஆவடு-துறை ஆதி, எம்மானே.

பாடல் எண் : 2
தெருண்ட வாயிடை நூல்-கொண்டு சிலந்தி
..
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்,
சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னைச்
..
சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன்,
புரண்டு வீழ்ந்து, "நின் பொன்-மலர்ப்-பாதம்
..
போற்றி போற்றி" என்று அன்பொடு புலம்பி,
அரண்டு* என் மேல்வினைக்கு அஞ்சி-வந்து அடைந்தேன்,
..
ஆவடு-துறை ஆதி, எம்மானே.
(* பாடபேதம் - “அருண்டு")

பாடல் எண் : 3
திகழும் மால்-அவன் ஆயிரம் மலரால்
..
ஏத்துவான் ஒரு நீள்-மலர் குறையப்,
புகழினால் அவன் கண் இடந்து இடலும்,
..
புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன்,
திகழும் நின் திருப்-பாதங்கள் பரவித்,
..
தேவ தேவ, நின் திறம் பல பிதற்றி,
அகழும் வல்வினைக்கு அஞ்சி-வந்து அடைந்தேன்,
..
ஆவடு-துறை ஆதி, எம்மானே.

பாடல் எண் : 4
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி
..
விசைத்து ஒர் கேழலைத் துரந்து-சென்று அணைந்து,
போரைத் தான் விசயன்-தனக்கு அன்பாய்ப்
..
புரிந்து வான்-படை கொடுத்தல் கண்டு அடியேன்,
வாரத்தால் உன நாமங்கள் பரவி,
..
வழிபட்டு, உன் திறமே நினைந்து உருகி,
ஆர்வத்தோடும் வந்து அடியிணை அடைந்தேன்,
..
ஆவடு-துறை ஆதி, எம்மானே.

பாடல் எண் : 5
ஒக்க முப்புரம் ஓங்கு-எரி தூவ,
..
உன்னை உன்னிய மூவர் நின் சரணம்
புக்கு, மற்று அவர் பொன்னுலகு ஆளப்
..
புகழினால் அருள் ஈந்தமை அறிந்து,
மிக்க நின் கழலே தொழுது அரற்றி,
..
வேதியா, ஆதி மூர்த்தி, நின் அரையில்
அக்கு அணிந்த எம்மான் உனை அடைந்தேன்,
..
ஆவடு-துறை ஆதி, எம்மானே.

பாடல் எண் : 6 ***** பாடல் கிட்டிலது *****
பாடல் எண் : 7 ***** பாடல் கிட்டிலது *****
பாடல் எண் : 8 ***** பாடல் கிட்டிலது *****
பாடல் எண் : 9 ***** பாடல் கிட்டிலது *****
பாடல் எண் : 10 ***** பாடல் கிட்டிலது *****
Word separated version:
sundarar tēvāram - padigam 7.66 – tiruvāvaḍuduṟai (tiru-āvaḍuduṟai) (paṇ - takkēsi)

pāḍal eṇ : 1
maṟaiyavaṉ oru māṇi vandu aḍaiya
.. vāramāy avaṉ ār-uyir niṟuttak,
kaṟaigoḷ vēluḍaik kālaṉaik kālāl
.. kaḍanda kāraṇam kaṇḍu-kaṇḍu aḍiyēṉ,
"iṟaivaṉ; emberumāṉ" eṇḍru eppōdum
.. ētti ētti-niṇḍru añjali seydu, uṉ
aṟaigoḷ sēvaḍikku aṉboḍum aḍaindēṉ,
.. āvaḍu-tuṟai ādi, emmāṉē.

pāḍal eṇ : 2
teruṇḍa vāyiḍai nūl-koṇḍu silandi
.. sittirap pandar sikkeṉa iyaṭrac,
suruṇḍa señjaḍaiyāy adu-taṉṉaic
.. sōḻaṉ ākkiya toḍarsci kaṇḍu aḍiyēṉ,
puraṇḍu vīḻndu, "niṉ poṉ-malarp-pādam
.. pōṭri pōṭri" eṇḍru aṉboḍu pulambi,
araṇḍu* eṉ mēlviṉaikku añji-vandu aḍaindēṉ,
.. āvaḍu-tuṟai ādi, emmāṉē.
(* pāḍabēdam - “aruṇḍu")

pāḍal eṇ : 3
tigaḻum māl-avaṉ āyiram malarāl
.. ēttuvāṉ oru nīḷ-malar kuṟaiyap,
pugaḻiṉāl avaṉ kaṇ iḍandu iḍalum,
.. purindu sakkaram koḍuttal kaṇḍu aḍiyēṉ,
tigaḻum niṉ tirup-pādaṅgaḷ paravit,
.. dēva dēva, niṉ tiṟam pala pidaṭri,
agaḻum valviṉaikku añji-vandu aḍaindēṉ,
.. āvaḍu-tuṟai ādi, emmāṉē.

pāḍal eṇ : 4
vīrattāl oru vēḍuvaṉ āgi
.. visaittu or kēḻalait turandu-seṇḍru aṇaindu,
pōrait tāṉ visayaṉ-taṉakku aṉbāyp
.. purindu vāṉ-paḍai koḍuttal kaṇḍu aḍiyēṉ,
vārattāl uṉa nāmaṅgaḷ paravi,
.. vaḻibaṭṭu, uṉ tiṟamē niṉaindu urugi,
ārvattōḍum vandu aḍiyiṇai aḍaindēṉ,
.. āvaḍu-tuṟai ādi, emmāṉē.

pāḍal eṇ : 5
okka muppuram ōṅgu-eri tūva,
.. uṉṉai uṉṉiya mūvar niṉ saraṇam
pukku, maṭru avar poṉṉulagu āḷap
.. pugaḻiṉāl aruḷ īndamai aṟindu,
mikka niṉ kaḻalē toḻudu araṭri,
.. vēdiyā, ādi mūrtti, niṉ araiyil
akku aṇinda emmāṉ uṉai aḍaindēṉ,
.. āvaḍu-tuṟai ādi, emmāṉē.

pāḍal eṇ : 6 ***** this verse is lost *****
pāḍal eṇ : 7 ***** this verse is lost *****
pāḍal eṇ : 8 ***** this verse is lost *****
pāḍal eṇ : 9 ***** this verse is lost *****
pāḍal eṇ : 10 ***** this verse is lost *****
================== ==========================
Word separated version:
सुन्दरर् तेवारम् - पदिगम् ७.६६ – तिरुवावडुदुऱै (तिरु-आवडुदुऱै) (पण् - तक्केसि)
पाडल् ऎण् :
मऱैयवऩ् ऒरु माणि वन्दु अडैय
.. वारमाय् अवऩ् आर्-उयिर् निऱुत्तक्,
कऱैगॊळ् वेलुडैक् कालऩैक् कालाल्
.. कडन्द कारणम् कण्डु-कण्डु अडियेऩ्,
"इऱैवऩ्; ऎम्बॆरुमाऩ्" ऎण्ड्रु ऎप्पोदुम्
.. एत्ति एत्ति-निण्ड्रु अञ्जलि सॆय्दु, उऩ्
अऱैगॊळ् सेवडिक्कु अऩ्बॊडुम् अडैन्देऩ्,
.. आवडु-तुऱै आदि, ऎम्माऩे.

पाडल् ऎण् :
तॆरुण्ड वायिडै नूल्-कॊण्डु सिलन्दि
.. सित्तिरप् पन्दर् सिक्कॆऩ इयट्रच्,
सुरुण्ड सॆञ्जडैयाय् अदु-तऩ्ऩैच्
.. सोऴऩ् आक्किय तॊडर्च्चि कण्डु अडियेऩ्,
पुरण्डु वीऴ्न्दु, "निऩ् पॊऩ्-मलर्प्-पादम्
.. पोट्रि पोट्रि" ऎण्ड्रु अऩ्बॊडु पुलम्बि,
अरण्डु* ऎऩ् मेल्विऩैक्कु अञ्जि-वन्दु अडैन्देऩ्,
.. आवडु-तुऱै आदि, ऎम्माऩे.
(* पाडबेदम् - “अरुण्डु")

पाडल् ऎण् :
तिगऴुम् माल्-अवऩ् आयिरम् मलराल्
.. एत्तुवाऩ् ऒरु नीळ्-मलर् कुऱैयप्,
पुगऴिऩाल् अवऩ् कण् इडन्दु इडलुम्,
.. पुरिन्दु सक्करम् कॊडुत्तल् कण्डु अडियेऩ्,
तिगऴुम् निऩ् तिरुप्-पादङ्गळ् परवित्,
.. देव देव, निऩ् तिऱम् पल पिदट्रि,
अगऴुम् वल्विऩैक्कु अञ्जि-वन्दु अडैन्देऩ्,
.. आवडु-तुऱै आदि, ऎम्माऩे.

पाडल् ऎण् :
वीरत्ताल् ऒरु वेडुवऩ् आगि
.. विसैत्तु ऒर् केऴलैत् तुरन्दु-सॆण्ड्रु अणैन्दु,
पोरैत् ताऩ् विसयऩ्-तऩक्कु अऩ्बाय्प्
.. पुरिन्दु वाऩ्-पडै कॊडुत्तल् कण्डु अडियेऩ्,
वारत्ताल् उऩ नामङ्गळ् परवि,
.. वऴिबट्टु, उऩ् तिऱमे निऩैन्दु उरुगि,
आर्वत्तोडुम् वन्दु अडियिणै अडैन्देऩ्,
.. आवडु-तुऱै आदि, ऎम्माऩे.

पाडल् ऎण् :
ऒक्क मुप्पुरम् ओङ्गु-ऎरि तूव,
.. उऩ्ऩै उऩ्ऩिय मूवर् निऩ् सरणम्
पुक्कु, मट्रु अवर् पॊऩ्ऩुलगु आळप्
.. पुगऴिऩाल् अरुळ् ईन्दमै अऱिन्दु,
मिक्क निऩ् कऴले तॊऴुदु अरट्रि,
.. वेदिया, आदि मूर्त्ति, निऩ् अरैयिल्
अक्कु अणिन्द ऎम्माऩ् उऩै अडैन्देऩ्,
.. आवडु-तुऱै आदि, ऎम्माऩे.

पाडल् ऎण् : ***** this verse is lost *****
पाडल् ऎण् : ***** this verse is lost *****
पाडल् ऎण् : ***** this verse is lost *****
पाडल् ऎण् : ***** this verse is lost *****
पाडल् ऎण् : १० ***** this verse is lost *****


================ ============

No comments:

Post a Comment