சுந்தரர் தேவாரம் - sundarar thevaram
7.98 - தண்ணியல் வெம்மையினான்
7.98 - taṇ-iyal vemmaiyiṉāṉ
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses - PDF: 7.98 - தண்ணியல் வெம்மையினான் - taṇniyal vemmaiyiṉāṉ
Part-2: https://youtu.be/GFjI1-NywgM
For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:
V. Subramanian
=======================
Verses in original Tamil version & word separated Tamil / English / Devanagari / Telugu scripts
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.98 - நன்னிலம் ( பண் : பஞ்சமம் )
Background:
சுந்தரர், திருப்புகலூரில் செங்கற்கள் பொன் ஆகப் பெற்றுத், திருவாரூரை அடைந்து பெருமானை வணங்கிப் பலநாள் தங்கியிருந்து , அருகில் உள்ள பல பதிகளையும் வணங்கிய பின்னர்த் , திருவாரூரிலிருந்து புறப்பட்டுத் திருநன்னிலத்துப் பெருங்கோயிலை அடைந்து பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.
--------------
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.98 - நன்னிலம் ( பண் : பஞ்சமம் )
(தானன தானதனா தன தானன தானதனா - என்ற சந்தம்)
தண்ணியல் வெம்மையினான் தலை யிற்கடை தோறும்பலி
பண்ணியன் மென்மொழியா ரிடக்* கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர் முறை யாலடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே.
(*பாடபேதம்: மொழியாரிடம் கொண்டு / மொழியார் இடக் கொண்டு)
பாடல் எண் : 2
வலங்கிளர் மாதவஞ்செய் மலை மங்கையொர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கைதங்கச் சடை யொன்றிடை யேதரித்தான்
பலங்கிளர் பைம்பொழில்தண் பனி வெண்மதி யைத்தடவ
நலங்கிளர் நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே.
கச்சியன் இன்கருப்பூர் விருப் பன்கரு திக்கசிவார்
உச்சியன் பிச்சையுண்ணி உல கங்களெல் லாமுடையான்
நொச்சியம் பச்சிலையான்* நுரை தீர்புன லால்தொழுவார்
நச்சிய நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே.
(* 1. நொச்சியம் பச்சிலையான் ( = சிவன்) / 2. நொச்சியம் பச்சிலையால்)
பாடிய நான்மறையான் படு பல்பிணக் காடரங்கா
ஆடிய மாநடத்தான் அடி போற்றியென் றன்பினராய்ச்
சூடிய செங்கையினார் பலர்* தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே.
(*பாடபேதம்: பல / பலர் )
பிலந்தரு வாயினொடு பெரி தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம்இரு பிள வாக்கிய சக்கரம்முன்
நிலந்தரு மாமகள்கோன் நெடு மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
வெண்பொடி மேனியினான் கரு நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடையான் பிர மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறையோர் பயின் றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே.
தொடைமலி கொன்றைதுன்றுஞ் சடை யன்சுடர் வெண்மழுவாட்
படைமலி கையன்மெய்யிற் பகட் டீருரிப் போர்வையினான்
மடைமலி வண்கமலம் மலர் மேன்மட வன்னம்மன்னி
நடைமலி நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே.
குளிர்தரு திங்கள்கங்கை குர வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடைமேல் உடை யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங்கை தட மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே.
கமர்பயில் வெஞ்சுரத்துக் கடுங் கேழற்பின் கானவனாய்
அமர்பயில் வெய்தி அருச் சுனற்கருள் செய்தபிரான்
தமர்பயில் தண்விழவில் தகு சைவர்த வத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே.
கருவரை போல்அரக்கன் கயி லைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லால்அடர்த்தின் னருள் செய்த வுமாபதிதான்
திரைபொரு பொன்னிநன்னீர்த் துறை வன்திகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே.
பாடல் எண் : 11
கோடுயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங் கோயில்ந யந்தவனைச்
சேடியல் சிங்கிதந்தை சடை யன்திரு வாரூரன்
பாடிய பத்தும்வல்லார் புகு வார்பர லோகத்துளே.
============================= ============================
Word separated version:
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.98 - நன்னிலம் ( பண் : பஞ்சமம் )
(தானன தானதனா தன தானன தானதனா - Rhythm)
தண்-இயல் வெம்மையினான்; தலையில் கடைதோறும் பலி
பண்-இயல் மென்-மொழியார் இடக்* கொண்டு உழல் பண்டரங்கன்;
புண்ணிய நான்மறையோர் முறையால் அடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
(* Variant reading: மொழியாரிடம் கொண்டு / மொழியார் இடக் கொண்டு)
பாடல் எண் : 2
வலம்-கிளர் மாதவம்-செய் மலைமங்கை ஒர் பங்கினனாய்ச்,
சலம்-கிளர் கங்கை தங்கச் சடை ஒன்றிடையே தரித்தான்;
பலம்-கிளர் பைம்பொழில் தண் பனி வெண்-மதியைத் தடவ,
நலம்-கிளர் நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
கச்சியன்; இன்-கருப்பூர் விருப்பன்; கருதிக் கசிவார்
உச்சியன்; பிச்சை-உண்ணி; உலகங்கள் எல்லாம் உடையான்;
நொச்சியம் பச்சிலையான்*, நுரை-தீர் புனலால் தொழுவார்
நச்சிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
(* 1. நொச்சியம் பச்சிலையான் ( = சிவன்) / 2. நொச்சியம் பச்சிலையால்)
பாடிய நான்மறையான்; படு பல்-பிணக்காடு அரங்கா
ஆடிய மா-நடத்தான்; "அடி போற்றி" என்று அன்பினராய்ச்
சூடிய செங்கையினார் பலர்* தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
(* Variant reading: பல / பலர் )
பிலம்-தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு-உடைய
சலந்தரன் ஆகம் இரு பிளவு ஆக்கிய சக்கரம், முன்
நிலம்-தரு மாமகள்-கோன் நெடு-மாற்கு அருள்-செய்த பிரான்,
நலம்-தரு நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
வெண்-பொடி மேனியினான்; கரு-நீல மணி-மிடற்றான்;
பெண்-படி செஞ்சடையான்; பிரமன் சிரம் பீடு அழித்தான்;
பண்புடை நான்மறையோர் பயின்று ஏத்திப் பல்கால் வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
தொடை-மலி கொன்றை துன்றும் சடையன்; சுடர்-வெண்-மழுவாள்
படை-மலி கையன்; மெய்யில் பகட்டு ஈர்-உரிப் போர்வையினான்;
மடை-மலி வண்-கமலம் மலர்மேல் மட அன்னம் மன்னி
நடை-மலி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
குளிர்தரு திங்கள், கங்கை, குரவோடு அரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடைமேல் உடையான்; விடையான்; விரை சேர்
தளிர்தரு கோங்கு, வேங்கை, தட மாதவி, சண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
கமர்-பயில் வெஞ்சுரத்துக் கடும் கேழற்பின் கானவனாய்,
அமர்-பயில்வு எய்தி அருச்சுனற்கு அருள்-செய்த பிரான்;
தமர்-பயில் தண்-விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க
நமர்-பயில் நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
கரு-வரை போல் அரக்கன் கயிலைம்-மலைக்கீழ்க் கதற
ஒரு விரலால் அடர்த்து இன்-அருள் செய்த உமாபதிதான்;
திரை-பொரு பொன்னி-நன்னீர்த் துறைவன், திகழ் செம்பியர்-கோன்,
நரபதி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
பாடல் எண் : 11
கோடு-உயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்கணான் செய்-கோயில்
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனைச்,
சேடியல் சிங்கி தந்தை, சடையன் திருவாரூரன்
பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே.
================== ==========================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
sundarar tēvāram - padigam 7.98 - nannilam ( paṇ : pañjamam )
(tānana tānadanā tana tānana tānadanā - Rhythm)
pāḍal eṇ : 1
taṇ-iyal vemmaiyinān; talaiyil kaḍaidōṟum pali
paṇ-iyal men-moḻiyār iḍak* koṇḍu uḻal paṇḍaraṅgan;
puṇṇiya nānmaṟaiyōr muṟaiyāl aḍi pōṭrisaippa
naṇṇiya nannilattup peruṅgōyil nayandavanē.
(* Variant reading: moḻiyāriḍam koṇḍu / moḻiyār iḍak koṇḍu)
pāḍal eṇ : 2
valam-kiḷar mādavam-sey malaimaṅgai or paṅginanāyc,
calam-kiḷar gaṅgai taṅgac caḍai oṇḍriḍaiyē tarittān;
palam-kiḷar paimboḻil taṇ pani veṇ-madiyait taḍava,
nalam-kiḷar nannilattup peruṅgōyil nayandavanē.
pāḍal eṇ : 3
kacciyan; in-karuppūr viruppan; karudik kasivār
ucciyan; piccai-uṇṇi; ulagaṅgaḷ ellām uḍaiyān;
nocciyam paccilaiyān*, nurai-tīr punalāl toḻuvār
nacciya nannilattup peruṅgōyil nayandavanē.
(* 1. nocciyam paccilaiyān ( = sivan) / 2. nocciyam paccilaiyāl)
pāḍal eṇ : 4
pāḍiya nānmaṟaiyān; paḍu pal-piṇakkāḍu araṅgā
āḍiya mā-naḍattān; "aḍi pōṭri" eṇḍru anbinarāyc
cūḍiya seṅgaiyinār palar* tōttiram vāyttasolli
nāḍiya nannilattup peruṅgōyil nayandavanē.
(* Variant reading: pala / palar )
pāḍal eṇ : 5
pilam-taru vāyinoḍu peridum vali mikku-uḍaiya
salandaran āgam iru piḷavu ākkiya sakkaram, mun
nilam-taru māmagaḷ-kōn neḍu-māṟku aruḷ-seyda pirān,
nalam-taru nannilattup peruṅgōyil nayandavanē.
pāḍal eṇ : 6
veṇ-poḍi mēniyinān; karu-nīla maṇi-miḍaṭrān;
peṇ-paḍi señjaḍaiyān; piraman siram pīḍu aḻittān;
paṇbuḍai nānmaṟaiyōr payiṇḍru ēttip palgāl vaṇaṅgum
naṇbuḍai nannilattup peruṅgōyil nayandavanē.
pāḍal eṇ : 7
toḍai-mali koṇḍrai tuṇḍrum saḍaiyan; suḍar-veṇ-maḻuvāḷ
paḍai-mali kaiyan; meyyil pagaṭṭu īr-urip pōrvaiyinān;
maḍai-mali vaṇ-kamalam malarmēl maḍa annam manni
naḍai-mali nannilattup peruṅgōyil nayandavanē.
pāḍal eṇ : 8
kuḷirdaru tiṅgaḷ, kaṅgai, kuravōḍu arak kūviḷamum
miḷirdaru punsaḍaimēl uḍaiyān; viḍaiyān; virai sēr
taḷirdaru kōṅgu, vēṅgai, taḍa mādavi, saṇbagamum
naḷirdaru nannilattup peruṅgōyil nayandavanē.
pāḍal eṇ : 9
kamar-payil veñjurattuk kaḍum kēḻaṟpin kānavanāy,
amar-payilvu eydi aruccunaṟku aruḷ-seyda pirān;
tamar-payil taṇ-viḻavil tagu saivar tavattin mikka
namar-payil nannilattup peruṅgōyil nayandavanē.
pāḍal eṇ : 10
karu-varai pōl arakkan kayilaim-malaikkīḻk kadaṟa
oru viralāl aḍarttu in-aruḷ seyda umābadidān;
tirai-poru ponni-nannīrt tuṟaivan, tigaḻ sembiyar-kōn,
narabadi nannilattup peruṅgōyil nayandavanē.
pāḍal eṇ : 11
kōḍu-uyar veṅgaḷiṭrut tigaḻ kōcceṅgaṇān sey-kōyil
nāḍiya nannilattup peruṅgōyil nayandavanaic,
cēḍiyal siṅgi tandai, saḍaiyan tiruvārūran
pāḍiya pattum vallār puguvār paralōgattuḷē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
सुन्दरर् तेवारम् - पदिगम् 7.98 - नन्निलम् ( पण् : पञ्जमम् )
(तानन तानदना तन तानन तानदना - Rhythm)
पाडल् ऎण् : 1
तण्-इयल् वॆम्मैयिनान्; तलैयिल् कडैदोऱुम् पलि
पण्-इयल् मॆन्-मॊऴियार् इडक्* कॊण्डु उऴल् पण्डरङ्गन्;
पुण्णिय नान्मऱैयोर् मुऱैयाल् अडि पोट्रिसैप्प
नण्णिय नन्निलत्तुप् पॆरुङ्गोयिल् नयन्दवने.
(* Variant reading: मॊऴियारिडम् कॊण्डु / मॊऴियार् इडक् कॊण्डु)
पाडल् ऎण् : 2
वलम्-किळर् मादवम्-सॆय् मलैमङ्गै ऒर् पङ्गिननाय्च्,
चलम्-किळर् गङ्गै तङ्गच् चडै ऒण्ड्रिडैये तरित्तान्;
पलम्-किळर् पैम्बॊऴिल् तण् पनि वॆण्-मदियैत् तडव,
नलम्-किळर् नन्निलत्तुप् पॆरुङ्गोयिल् नयन्दवने.
पाडल् ऎण् : 3
कच्चियन्; इन्-करुप्पूर् विरुप्पन्; करुदिक् कसिवार्
उच्चियन्; पिच्चै-उण्णि; उलगङ्गळ् ऎल्लाम् उडैयान्;
नॊच्चियम् पच्चिलैयान्*, नुरै-तीर् पुनलाल् तॊऴुवार्
नच्चिय नन्निलत्तुप् पॆरुङ्गोयिल् नयन्दवने.
(* 1. नॊच्चियम् पच्चिलैयान् ( = सिवन्) / 2. नॊच्चियम् पच्चिलैयाल्)
पाडल् ऎण् : 4
पाडिय नान्मऱैयान्; पडु पल्-पिणक्काडु अरङ्गा
आडिय मा-नडत्तान्; "अडि पोट्रि" ऎण्ड्रु अन्बिनराय्च्
चूडिय सॆङ्गैयिनार् पलर्* तोत्तिरम् वाय्त्तसॊल्लि
नाडिय नन्निलत्तुप् पॆरुङ्गोयिल् नयन्दवने.
(* Variant reading: पल / पलर् )
पाडल् ऎण् : 5
पिलम्-तरु वायिनॊडु पॆरिदुम् वलि मिक्कु-उडैय
सलन्दरन् आगम् इरु पिळवु आक्किय सक्करम्, मुन्
निलम्-तरु मामगळ्-कोन् नॆडु-माऱ्कु अरुळ्-सॆय्द पिरान्,
नलम्-तरु नन्निलत्तुप् पॆरुङ्गोयिल् नयन्दवने.
पाडल् ऎण् : 6
वॆण्-पॊडि मेनियिनान्; करु-नील मणि-मिडट्रान्;
पॆण्-पडि सॆञ्जडैयान्; पिरमन् सिरम् पीडु अऴित्तान्;
पण्बुडै नान्मऱैयोर् पयिण्ड्रु एत्तिप् पल्गाल् वणङ्गुम्
नण्बुडै नन्निलत्तुप् पॆरुङ्गोयिल् नयन्दवने.
पाडल् ऎण् : 7
तॊडै-मलि कॊण्ड्रै तुण्ड्रुम् सडैयन्; सुडर्-वॆण्-मऴुवाळ्
पडै-मलि कैयन्; मॆय्यिल् पगट्टु ईर्-उरिप् पोर्वैयिनान्;
मडै-मलि वण्-कमलम् मलर्मेल् मड अन्नम् मन्नि
नडै-मलि नन्निलत्तुप् पॆरुङ्गोयिल् नयन्दवने.
पाडल् ऎण् : 8
कुळिर्दरु तिङ्गळ्, कङ्गै, कुरवोडु अरक् कूविळमुम्
मिळिर्दरु पुन्सडैमेल् उडैयान्; विडैयान्; विरै सेर्
तळिर्दरु कोङ्गु, वेङ्गै, तड मादवि, सण्बगमुम्
नळिर्दरु नन्निलत्तुप् पॆरुङ्गोयिल् नयन्दवने.
पाडल् ऎण् : 9
कमर्-पयिल् वॆञ्जुरत्तुक् कडुम् केऴऱ्पिन् कानवनाय्,
अमर्-पयिल्वु ऎय्दि अरुच्चुनऱ्कु अरुळ्-सॆय्द पिरान्;
तमर्-पयिल् तण्-विऴविल् तगु सैवर् तवत्तिन् मिक्क
नमर्-पयिल् नन्निलत्तुप् पॆरुङ्गोयिल् नयन्दवने.
पाडल् ऎण् : 10
करु-वरै पोल् अरक्कन् कयिलैम्-मलैक्कीऴ्क् कदऱ
ऒरु विरलाल् अडर्त्तु इन्-अरुळ् सॆय्द उमाबदिदान्;
तिरै-पॊरु पॊन्नि-नन्नीर्त् तुऱैवन्, तिगऴ् सॆम्बियर्-कोन्,
नरबदि नन्निलत्तुप् पॆरुङ्गोयिल् नयन्दवने.
पाडल् ऎण् : 11
कोडु-उयर् वॆङ्गळिट्रुत् तिगऴ् कोच्चॆङ्गणान् सॆय्-कोयिल्
नाडिय नन्निलत्तुप् पॆरुङ्गोयिल् नयन्दवनैच्,
चेडियल् सिङ्गि तन्दै, सडैयन् तिरुवारूरन्
पाडिय पत्तुम् वल्लार् पुगुवार् परलोगत्तुळे.
================== ==========================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
సుందరర్ తేవారం - పదిగం 7.98 - నన్నిలం ( పణ్ : పంజమం )
(తానన తానదనా తన తానన తానదనా - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
తణ్-ఇయల్ వెమ్మైయినాన్; తలైయిల్ కడైదోఱుం పలి
పణ్-ఇయల్ మెన్-మొఴియార్ ఇడక్* కొండు ఉఴల్ పండరంగన్;
పుణ్ణియ నాన్మఱైయోర్ ముఱైయాల్ అడి పోట్రిసైప్ప
నణ్ణియ నన్నిలత్తుప్ పెరుంగోయిల్ నయందవనే.
(* Variant reading: మొఴియారిడం కొండు / మొఴియార్ ఇడక్ కొండు)
పాడల్ ఎణ్ : 2
వలం-కిళర్ మాదవం-సెయ్ మలైమంగై ఒర్ పంగిననాయ్చ్,
చలం-కిళర్ గంగై తంగచ్ చడై ఒండ్రిడైయే తరిత్తాన్;
పలం-కిళర్ పైంబొఴిల్ తణ్ పని వెణ్-మదియైత్ తడవ,
నలం-కిళర్ నన్నిలత్తుప్ పెరుంగోయిల్ నయందవనే.
పాడల్ ఎణ్ : 3
కచ్చియన్; ఇన్-కరుప్పూర్ విరుప్పన్; కరుదిక్ కసివార్
ఉచ్చియన్; పిచ్చై-ఉణ్ణి; ఉలగంగళ్ ఎల్లాం ఉడైయాన్;
నొచ్చియం పచ్చిలైయాన్*, నురై-తీర్ పునలాల్ తొఴువార్
నచ్చియ నన్నిలత్తుప్ పెరుంగోయిల్ నయందవనే.
(* 1. నొచ్చియం పచ్చిలైయాన్ ( = సివన్) / 2. నొచ్చియం పచ్చిలైయాల్)
పాడల్ ఎణ్ : 4
పాడియ నాన్మఱైయాన్; పడు పల్-పిణక్కాడు అరంగా
ఆడియ మా-నడత్తాన్; "అడి పోట్రి" ఎండ్రు అన్బినరాయ్చ్
చూడియ సెంగైయినార్ పలర్* తోత్తిరం వాయ్త్తసొల్లి
నాడియ నన్నిలత్తుప్ పెరుంగోయిల్ నయందవనే.
(* Variant reading: పల / పలర్ )
పాడల్ ఎణ్ : 5
పిలం-తరు వాయినొడు పెరిదుం వలి మిక్కు-ఉడైయ
సలందరన్ ఆగం ఇరు పిళవు ఆక్కియ సక్కరం, మున్
నిలం-తరు మామగళ్-కోన్ నెడు-మాఱ్కు అరుళ్-సెయ్ద పిరాన్,
నలం-తరు నన్నిలత్తుప్ పెరుంగోయిల్ నయందవనే.
పాడల్ ఎణ్ : 6
వెణ్-పొడి మేనియినాన్; కరు-నీల మణి-మిడట్రాన్;
పెణ్-పడి సెంజడైయాన్; పిరమన్ సిరం పీడు అఴిత్తాన్;
పణ్బుడై నాన్మఱైయోర్ పయిండ్రు ఏత్తిప్ పల్గాల్ వణంగుం
నణ్బుడై నన్నిలత్తుప్ పెరుంగోయిల్ నయందవనే.
పాడల్ ఎణ్ : 7
తొడై-మలి కొండ్రై తుండ్రుం సడైయన్; సుడర్-వెణ్-మఴువాళ్
పడై-మలి కైయన్; మెయ్యిల్ పగట్టు ఈర్-ఉరిప్ పోర్వైయినాన్;
మడై-మలి వణ్-కమలం మలర్మేల్ మడ అన్నం మన్ని
నడై-మలి నన్నిలత్తుప్ పెరుంగోయిల్ నయందవనే.
పాడల్ ఎణ్ : 8
కుళిర్దరు తింగళ్, కంగై, కురవోడు అరక్ కూవిళముం
మిళిర్దరు పున్సడైమేల్ ఉడైయాన్; విడైయాన్; విరై సేర్
తళిర్దరు కోంగు, వేంగై, తడ మాదవి, సణ్బగముం
నళిర్దరు నన్నిలత్తుప్ పెరుంగోయిల్ నయందవనే.
పాడల్ ఎణ్ : 9
కమర్-పయిల్ వెంజురత్తుక్ కడుం కేఴఱ్పిన్ కానవనాయ్,
అమర్-పయిల్వు ఎయ్ది అరుచ్చునఱ్కు అరుళ్-సెయ్ద పిరాన్;
తమర్-పయిల్ తణ్-విఴవిల్ తగు సైవర్ తవత్తిన్ మిక్క
నమర్-పయిల్ నన్నిలత్తుప్ పెరుంగోయిల్ నయందవనే.
పాడల్ ఎణ్ : 10
కరు-వరై పోల్ అరక్కన్ కయిలైం-మలైక్కీఴ్క్ కదఱ
ఒరు విరలాల్ అడర్త్తు ఇన్-అరుళ్ సెయ్ద ఉమాబదిదాన్;
తిరై-పొరు పొన్ని-నన్నీర్త్ తుఱైవన్, తిగఴ్ సెంబియర్-కోన్,
నరబది నన్నిలత్తుప్ పెరుంగోయిల్ నయందవనే.
పాడల్ ఎణ్ : 11
కోడు-ఉయర్ వెంగళిట్రుత్ తిగఴ్ కోచ్చెంగణాన్ సెయ్-కోయిల్
నాడియ నన్నిలత్తుప్ పెరుంగోయిల్ నయందవనైచ్,
చేడియల్ సింగి తందై, సడైయన్ తిరువారూరన్
పాడియ పత్తుం వల్లార్ పుగువార్ పరలోగత్తుళే.
================== ==========================
No comments:
Post a Comment