164) 3.23 - உருவினார் உமையொடும் - uruvinAr umaiyodum
சம்பந்தர் தேவாரம் - 3.23 - உருவினார் உமையொடும் - திருவிற்கோலம் - (பண் - காந்தார பஞ்சமம்)
sambandar tēvāram - 3.23 - uruvinār umaiyoḍum - tiruviṟkōlam - (paṇ - kāndāra pañjamam)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1V2-WQumKvnhZwt04Maebarb_PEuyxOwO/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1:
Part-2:
***
English
translation (meaning) : V.M.Subramanya Ayyar -
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_023.HTM
V. Subramanian
================
Verses in Tamil , Roman (ISO 15919), Devanagari, and Telugu scripts.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.23 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும் - (பண் - காந்தார பஞ்சமம்)
சம்பந்தர் தொண்டைநாட்டுத் தலயாத்திரையில் இலம்பையங்கோட்டூரைத் தரிசித்துத் திருவிற்கோலத்தை அடைந்து ஈசனை வணங்கி இந்தப் பதிகம் பாடினார்.
கூகம் (கூவம்) - ஊரின் பெயர்; திருவிற்கோலம் - கோயிலின் பெயர்;
திரிபுரம் எரித்த காலத்தில் இறைவன் வில்லை ஏந்திய திருக்கோலத்தோடு இத்தலத்தில் வீற்றிருந்த காரணத்தால் விற்கோலம் எனப் பெயர் பெற்றது என்பர்.
இங்குள்ள இறைவரின் தீண்டாத்-திருமேனியின் நிறம் காலத்திற்கேற்ப மாறுபடுகிறது என்பர். (அதிக மழைபெய்வதாக இருந்தால் இறைவர் திருமேனியில் வெண்மை தோன்றுவதும், யுத்தம் ஏற்படுவதாயிருந்தால் செம்மை படர்வதும் ஆகிய அற்புதம் நிகழும் தலம்).
My notes:
இப்பதிகத்தில் பல பாடல்களில் முப்புரம் எரித்த செய்தி இடம்பெறுகின்றது. (1, 2, 4, 6, 8, 9 ).
The song with Ravana reference in this padhigam is shown as the 7th song in various books and they state that 8th song is lost. Sambandar typically mentions Ravana in the 8th song of his padhigams. Hence, in my opinion, the song mentioning Ravana should be the 8th song of this padhigam, and hence, the 7th song is lost.
----------
Sambandar sings this padhigam in tiruviṟkōlam during his visit to toṇḍaināḍu
பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1005
திருத்தொண்டர் பலர்சூழத் திருவிற்கோ லமும்பணிந்து
பொருட்பதிகத் தொடைமாலை புரமெரித்த படிபாடி
அருட்புகலி யாண்டகையார் தக்கோல மணைந்தருளி
விருப்பினொடுந் றிருவூறன் மேவினார் தமைப்பணிந்தார்.
(* CKS version - விருப்பினுடன்)
Word separated:
திருத்தொண்டர் பலர் சூழத் திரு-விற்கோலமும் பணிந்து,
பொருட்-பதிகத் தொடைமாலை புரம் எரித்தபடி பாடி,
அருட்-புகலி ஆண்டகையார் தக்கோலம் அணைந்தருளி,
விருப்பினொடும் திரு-ஊறல் மேவினார்தமைப் பணிந்தார்.
(* CKS version - விருப்பினுடன்)
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.23 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும் - (பண் - காந்தார பஞ்சமம்)
(தானன தானன தான தானன - Rhythm) (விளம் விளம் மா கூவிளம் - meter)
பாடல் எண் : 1
உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே.
Word separated:
உருவின்-ஆர் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான்; வளர்-சடைத் திங்கள் கங்கையான்;
வெருவி வானவர் தொழ, வெகுண்டு நோக்கிய
செருவினான், உறைவிடம் திரு-விற்கோலமே.
பாடல் எண் : 2
சிற்றிடை யுமையொரு பங்க னங்கையில்
உற்றதோர் எரியினன் ஒரு சரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே.
Word separated:
சிற்றிடை உமை ஒரு பங்கன்; அங்கையில்
உற்றதோர் எரியினன்; ஒரு சரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்து-அறச்
செற்றவன், உறைவிடம் திரு-விற்கோலமே.
பாடல் எண் : 3
ஐயன்நல் லதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே.
Word separated:
ஐயன்; நல்-அதிசயன்; அயன் விண்ணோர் தொழும்
மை அணி கண்டன்; * ஆர் வண்ண வண்ணம் வான்
பை-அரவு அல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன், உறைவிடம் திரு-விற்கோலமே.
(IFP edition - T.V. Gopal Iyer - "ஆர் வண்ணம், வண்ண வான்";)
பாடல் எண் : 4
விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை
உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப்
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.
Word separated:
விதைத்தவன் முனிவருக்கு அறம்; முன் காலனை
உதைத்து, அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தரப்
புதைத்தவன்; நெடு-நகர்ப் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன், உறைவிடம் திரு-விற்கோலமே.
பாடல் எண் : 5
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே.
Word separated:
முந்தினான்; மூவருள் முதல்வன் ஆயினான்;
கொந்து-உலாம் மலர்ப்பொழில் கூகம் மேவினான்;
அந்தி-வான் பிறையினான்; அடியர் மேல்வினை
சிந்துவான், உறைவிடம் திரு-விற்கோலமே.
பாடல் எண் : 6
தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.
Word separated:
தொகுத்தவன் அருமறை அங்கம்; ஆகமம்
வகுத்தவன்; வளர்-பொழில் கூகம் மேவினான்;
மிகுத்தவன்; மிகுத்தவர் புரங்கள் வெந்து-அறச்
செகுத்தவன், உறைவிடம் திரு-விற்கோலமே.
பாடல் எண் : 7
**** This verse is lost ****
பாடல் எண் : 8
விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளம்
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன் இலங்கையர் கோன்இ டர்படச் *
சிரித்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.
(* I wonder if it should be - இடர்ப்படச் )
(My note: Books show this as the 7th song of this padhigam and state that 8th song is lost. Sambandar typically mentions Ravana in the 8th songs. Hence, this song mentioning Ravana should be the 8th song of this padhigam, and hence, 7th is lost)
Word separated:
விரித்தவன் அருமறை; விரி-சடை வெள்ளம்
தரித்தவன்; தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன்; இலங்கையர்-கோன் இடர்படச் *
சிரித்தவன், உறைவிடம் திரு-விற்கோலமே.
(* I wonder if it should be - இடர்ப்படச் )
பாடல் எண் : 9
திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமன தாற்ற லால்உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே.
Word separated:
திரிதரு புரம் எரி செய்த சேவகன்;
வரி-அரவொடு மதி சடையில் வைத்தவன்;
அரியொடு பிரமனது ஆற்றலால் உருத்
தெரியலன், உறைவிடம் திரு-விற்கோலமே.
பாடல் எண் : 10
சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர்
நீர்மைஇல் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையி னான்இடம் திருவிற் கோலமே.
Word separated:
சீர்மை இல் சமணொடு சீவரக்-கையர்
நீர்மை இல் உரைகள் கொள்ளாத நேசர்க்குப்
பார் மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையினான் இடம் திரு-விற்கோலமே.
பாடல் எண் : 11
கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.
Word separated:
கோடல்-வெண்-பிறையனைக், கூகம் மேவிய
சேடன செழு-மதில் திரு-விற்கோலத்தை,
நாட-வல்ல தமிழ்-ஞான சம்பந்தன
பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே.
=====================================
Roman (ISO 15919)
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Sambandar sings this padhigam in tiruviṟkōlam during his visit to toṇḍaināḍu
periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1005
tiruttoṇḍar palar sūḻat tiru-viṟkōlamum paṇindu,
poruṭ-padigat toḍaimālai puram erittabaḍi pāḍi,
aruṭ-pugali āṇḍagaiyār takkōlam aṇaindaruḷi,
viruppinoḍum tiru-ūṟal mēvinārdamaip paṇindār.
(* CKS version - viruppinuḍan)
sambandar tēvāram - padigam 3.23 - tiruviṟkōlam - uruvinār umaiyoḍum - (paṇ - kāndāra pañjamam)
(tānana tānana tāna tānana - Rhythm) (viḷam viḷam mā kūviḷam - meter)
pāḍal eṇ : 1
uruvin-ār umaiyoḍum oṇḍri niṇḍradōr
tiruvinān; vaḷar-saḍait tiṅgaḷ gaṅgaiyān;
veruvi vānavar toḻa, veguṇḍu nōkkiya
seruvinān, uṟaiviḍam tiru-viṟkōlamē.
pāḍal eṇ : 2
siṭriḍai umai oru paṅgan; aṅgaiyil
uṭradōr eriyinan; oru sarattināl
veṭrigoḷ avuṇargaḷ puraṅgaḷ vendu-aṟac
ceṭravan, uṟaiviḍam tiru-viṟkōlamē.
pāḍal eṇ : 3
aiyan; nal-adisayan; ayan viṇṇōr toḻum
mai aṇi kaṇḍan; * ār vaṇṇa vaṇṇam vān
pai-aravu algulāḷ pāgam āgavum
seyyavan, uṟaiviḍam tiru-viṟkōlamē.
(IFP edition - T.V. Gopal Iyer - "ār vaṇṇam, vaṇṇa vān";)
pāḍal eṇ : 4
vidaittavan munivarukku aṟam; mun kālanai
udaittu, avan uyir iḻandu uruṇḍu vīḻdarap
pudaittavan; neḍu-nagarp puraṅgaḷ mūṇḍraiyum
sidaittavan, uṟaiviḍam tiru-viṟkōlamē.
pāḍal eṇ : 5
mundinān; mūvaruḷ mudalvan āyinān;
kondu-ulām malarppoḻil kūgam mēvinān;
andi-vān piṟaiyinān; aḍiyar mēlvinai
sinduvān, uṟaiviḍam tiru-viṟkōlamē.
pāḍal eṇ : 6
toguttavan arumaṟai aṅgam; āgamam
vaguttavan; vaḷar-poḻil kūgam mēvinān;
miguttavan; miguttavar puraṅgaḷ vendu-aṟac
ceguttavan, uṟaiviḍam tiru-viṟkōlamē.
pāḍal eṇ : 7
**** This verse is lost ****
pāḍal eṇ : 8
virittavan arumaṟai; viri-saḍai veḷḷam
tarittavan; tariyalar puraṅgaḷ āsaṟa
erittavan; ilaṅgaiyar-kōn iḍarbaḍac *
cirittavan, uṟaiviḍam tiru-viṟkōlamē.
(* I wonder if it should be - iḍarppaḍac )
(My note: Books show this as the 7th song of this padhigam and state that 8th song is lost. Sambandar typically mentions Ravana in the 8th songs. Hence, this song mentioning Ravana should be the 8th song of this padhigam, and hence, 7th is lost)
pāḍal eṇ : 9
tiridaru puram eri seyda sēvagan;
vari-aravoḍu madi saḍaiyil vaittavan;
ariyoḍu piramanadu āṭralāl urut
teriyalan, uṟaiviḍam tiru-viṟkōlamē.
pāḍal eṇ : 10
sīrmai il samaṇoḍu sīvarak-kaiyar
nīrmai il uraigaḷ koḷḷāda nēsarkkup
pār mali peruñjelvam parindu nalgiḍum
sīrmaiyinān iḍam tiru-viṟkōlamē.
pāḍal eṇ : 11
kōḍal-veṇ-piṟaiyanaik, kūgam mēviya
sēḍana seḻu-madil tiru-viṟkōlattai,
nāḍa-valla tamiḻ-ñāna sambandana
pāḍal vallārgaḷukku illai pāvamē.
=====================================
Devanagari
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
Sambandar sings this padhigam in tiruviṟkōlam during his visit to toṇḍaināḍu
पॆरियपुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1005
तिरुत्तॊण्डर् पलर् सूऴत् तिरु-विऱ्कोलमुम् पणिन्दु,
पॊरुट्-पदिगत् तॊडैमालै पुरम् ऎरित्तबडि पाडि,
अरुट्-पुगलि आण्डगैयार् तक्कोलम् अणैन्दरुळि,
विरुप्पिनॊडुम् तिरु-ऊऱल् मेविनार्दमैप् पणिन्दार्.
(* CKS version - विरुप्पिनुडन्)
सम्बन्दर् तेवारम् - पदिगम् 3.23 - तिरुविऱ्कोलम् - उरुविनार् उमैयॊडुम् - (पण् - कान्दार पञ्जमम्)
(तानन तानन तान तानन - Rhythm) (विळम् विळम् मा कूविळम् - meter)
पाडल् ऎण् : 1
उरुविन्-आर् उमैयॊडुम् ऒण्ड्रि निण्ड्रदोर्
तिरुविनान्; वळर्-सडैत् तिङ्गळ् गङ्गैयान्;
वॆरुवि वानवर् तॊऴ, वॆगुण्डु नोक्किय
सॆरुविनान्, उऱैविडम् तिरु-विऱ्कोलमे.
पाडल् ऎण् : 2
सिट्रिडै उमै ऒरु पङ्गन्; अङ्गैयिल्
उट्रदोर् ऎरियिनन्; ऒरु सरत्तिनाल्
वॆट्रिगॊळ् अवुणर्गळ् पुरङ्गळ् वॆन्दु-अऱच्
चॆट्रवन्, उऱैविडम् तिरु-विऱ्कोलमे.
पाडल् ऎण् : 3
ऐयन्; नल्-अदिसयन्; अयन् विण्णोर् तॊऴुम्
मै अणि कण्डन्; * आर् वण्ण वण्णम् वान्
पै-अरवु अल्गुलाळ् पागम् आगवुम्
सॆय्यवन्, उऱैविडम् तिरु-विऱ्कोलमे.
(IFP edition - T.V. Gopal Iyer - "आर् वण्णम्, वण्ण वान्";)
पाडल् ऎण् : 4
विदैत्तवन् मुनिवरुक्कु अऱम्; मुन् कालनै
उदैत्तु, अवन् उयिर् इऴन्दु उरुण्डु वीऴ्दरप्
पुदैत्तवन्; नॆडु-नगर्प् पुरङ्गळ् मूण्ड्रैयुम्
सिदैत्तवन्, उऱैविडम् तिरु-विऱ्कोलमे.
पाडल् ऎण् : 5
मुन्दिनान्; मूवरुळ् मुदल्वन् आयिनान्;
कॊन्दु-उलाम् मलर्प्पॊऴिल् कूगम् मेविनान्;
अन्दि-वान् पिऱैयिनान्; अडियर् मेल्विनै
सिन्दुवान्, उऱैविडम् तिरु-विऱ्कोलमे.
पाडल् ऎण् : 6
तॊगुत्तवन् अरुमऱै अङ्गम्; आगमम्
वगुत्तवन्; वळर्-पॊऴिल् कूगम् मेविनान्;
मिगुत्तवन्; मिगुत्तवर् पुरङ्गळ् वॆन्दु-अऱच्
चॆगुत्तवन्, उऱैविडम् तिरु-विऱ्कोलमे.
पाडल् ऎण् : 7
**** This verse is lost ****
पाडल् ऎण् : 8
विरित्तवन् अरुमऱै; विरि-सडै वॆळ्ळम्
तरित्तवन्; तरियलर् पुरङ्गळ् आसऱ
ऎरित्तवन्; इलङ्गैयर्-कोन् इडर्बडच् *
चिरित्तवन्, उऱैविडम् तिरु-विऱ्कोलमे.
(* I wonder if it should be - इडर्प्पडच् )
(My note: Books show this as the 7th song of this padhigam and state that 8th song is lost. Sambandar typically mentions Ravana in the 8th songs. Hence, this song mentioning Ravana should be the 8th song of this padhigam, and hence, 7th is lost)
पाडल् ऎण् : 9
तिरिदरु पुरम् ऎरि सॆय्द सेवगन्;
वरि-अरवॊडु मदि सडैयिल् वैत्तवन्;
अरियॊडु पिरमनदु आट्रलाल् उरुत्
तॆरियलन्, उऱैविडम् तिरु-विऱ्कोलमे.
पाडल् ऎण् : 10
सीर्मै इल् समणॊडु सीवरक्-कैयर्
नीर्मै इल् उरैगळ् कॊळ्ळाद नेसर्क्कुप्
पार् मलि पॆरुञ्जॆल्वम् परिन्दु नल्गिडुम्
सीर्मैयिनान् इडम् तिरु-विऱ्कोलमे.
पाडल् ऎण् : 11
कोडल्-वॆण्-पिऱैयनैक्, कूगम् मेविय
सेडन सॆऴु-मदिल् तिरु-विऱ्कोलत्तै,
नाड-वल्ल तमिऴ्-ञान सम्बन्दन
पाडल् वल्लार्गळुक्कु इल्लै पावमे.
=====================================
Telugu
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Sambandar sings this padhigam in tiruviṟkōlam during his visit to toṇḍaināḍu
పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1005
తిరుత్తొండర్ పలర్ సూఴత్ తిరు-విఱ్కోలముం పణిందు,
పొరుట్-పదిగత్ తొడైమాలై పురం ఎరిత్తబడి పాడి,
అరుట్-పుగలి ఆండగైయార్ తక్కోలం అణైందరుళి,
విరుప్పినొడుం తిరు-ఊఱల్ మేవినార్దమైప్ పణిందార్.
(* CKS version - విరుప్పినుడన్)
సంబందర్ తేవారం - పదిగం 3.23 - తిరువిఱ్కోలం - ఉరువినార్ ఉమైయొడుం - (పణ్ - కాందార పంజమం)
(తానన తానన తాన తానన - Rhythm) (విళం విళం మా కూవిళం - meter)
పాడల్ ఎణ్ : 1
ఉరువిన్-ఆర్ ఉమైయొడుం ఒండ్రి నిండ్రదోర్
తిరువినాన్; వళర్-సడైత్ తింగళ్ గంగైయాన్;
వెరువి వానవర్ తొఴ, వెగుండు నోక్కియ
సెరువినాన్, ఉఱైవిడం తిరు-విఱ్కోలమే.
పాడల్ ఎణ్ : 2
సిట్రిడై ఉమై ఒరు పంగన్; అంగైయిల్
ఉట్రదోర్ ఎరియినన్; ఒరు సరత్తినాల్
వెట్రిగొళ్ అవుణర్గళ్ పురంగళ్ వెందు-అఱచ్
చెట్రవన్, ఉఱైవిడం తిరు-విఱ్కోలమే.
పాడల్ ఎణ్ : 3
ఐయన్; నల్-అదిసయన్; అయన్ విణ్ణోర్ తొఴుం
మై అణి కండన్; * ఆర్ వణ్ణ వణ్ణం వాన్
పై-అరవు అల్గులాళ్ పాగం ఆగవుం
సెయ్యవన్, ఉఱైవిడం తిరు-విఱ్కోలమే.
(IFP edition - T.V. Gopal Iyer - "ఆర్ వణ్ణం, వణ్ణ వాన్";)
పాడల్ ఎణ్ : 4
విదైత్తవన్ మునివరుక్కు అఱం; మున్ కాలనై
ఉదైత్తు, అవన్ ఉయిర్ ఇఴందు ఉరుండు వీఴ్దరప్
పుదైత్తవన్; నెడు-నగర్ప్ పురంగళ్ మూండ్రైయుం
సిదైత్తవన్, ఉఱైవిడం తిరు-విఱ్కోలమే.
పాడల్ ఎణ్ : 5
ముందినాన్; మూవరుళ్ ముదల్వన్ ఆయినాన్;
కొందు-ఉలాం మలర్ప్పొఴిల్ కూగం మేవినాన్;
అంది-వాన్ పిఱైయినాన్; అడియర్ మేల్వినై
సిందువాన్, ఉఱైవిడం తిరు-విఱ్కోలమే.
పాడల్ ఎణ్ : 6
తొగుత్తవన్ అరుమఱై అంగం; ఆగమం
వగుత్తవన్; వళర్-పొఴిల్ కూగం మేవినాన్;
మిగుత్తవన్; మిగుత్తవర్ పురంగళ్ వెందు-అఱచ్
చెగుత్తవన్, ఉఱైవిడం తిరు-విఱ్కోలమే.
పాడల్ ఎణ్ : 7
**** This verse is lost ****
పాడల్ ఎణ్ : 8
విరిత్తవన్ అరుమఱై; విరి-సడై వెళ్ళం
తరిత్తవన్; తరియలర్ పురంగళ్ ఆసఱ
ఎరిత్తవన్; ఇలంగైయర్-కోన్ ఇడర్బడచ్ *
చిరిత్తవన్, ఉఱైవిడం తిరు-విఱ్కోలమే.
(* I wonder if it should be - ఇడర్ప్పడచ్ )
(My note: Books show this as the 7th song of this padhigam and state that 8th song is lost. Sambandar typically mentions Ravana in the 8th songs. Hence, this song mentioning Ravana should be the 8th song of this padhigam, and hence, 7th is lost)
పాడల్ ఎణ్ : 9
తిరిదరు పురం ఎరి సెయ్ద సేవగన్;
వరి-అరవొడు మది సడైయిల్ వైత్తవన్;
అరియొడు పిరమనదు ఆట్రలాల్ ఉరుత్
తెరియలన్, ఉఱైవిడం తిరు-విఱ్కోలమే.
పాడల్ ఎణ్ : 10
సీర్మై ఇల్ సమణొడు సీవరక్-కైయర్
నీర్మై ఇల్ ఉరైగళ్ కొళ్ళాద నేసర్క్కుప్
పార్ మలి పెరుంజెల్వం పరిందు నల్గిడుం
సీర్మైయినాన్ ఇడం తిరు-విఱ్కోలమే.
పాడల్ ఎణ్ : 11
కోడల్-వెణ్-పిఱైయనైక్, కూగం మేవియ
సేడన సెఴు-మదిల్ తిరు-విఱ్కోలత్తై,
నాడ-వల్ల తమిఴ్-ఞాన సంబందన
పాడల్ వల్లార్గళుక్కు ఇల్లై పావమే.
=====================================