Sunday, July 5, 2015

5.3 - கடவுளைக் கடலுள் - திருநெல்வாயில் அரத்துறை

3) padhigam 5.3

Verses - PDF: 5.3 - கடவுளைக் கடலுள் - kaḍavuḷaik kaḍaluḷ eḻu

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/4uUeppgt6e4

Part-2: https://youtu.be/2T7w8pKel54

====================

பதிகம் 5.3 திருநெல்வாயில் அரத்துறை

நெல்வாயில் ஊர்ப் பெயரும், அரத்துறை கோயில் பெயருமாம்.
(This place is now called thiruvattathuRai - திருவட்டத்துறை. It is located about 22 KM southwest of Vriddhachalam.)

Background:திருத்தூங்கானைமாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடி பரவிப் பாங்காகத் திருத்தொண்டு செய்து பயின்று அமரும்நாள் பொருவில் திருவரத்துறையீசரைப் பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 திருநா . புரா . 154.)

பாடல் எண் : 1
கடவு ளைக்கடலுள்ளெழு நஞ்சுண்ட
உடலு ளானையொப் பாரியி லாதவெம்
அடலு ளானை யரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பாடல் எண் : 2
கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்பொப் பானைவிண் ணோரும் அறிகிலா
அரும்பொப் பானை யரத்துறை மேவிய
சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பாடல் எண் : 3
ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை
வேறொப் பானைவிண் ணோரும் அறிகிலா
ஆறொப் பானை யரத்துறை மேவிய
ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பாடல் எண் : 4
பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பொப் பானை யிளமதி சூடிய
அரப்பொப் பானை யரத்துறை மேவிய
சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பாடல் எண் : 5
நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொப் பானை யரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பாடல் எண் : 6
நெதியொப் பானை நெதியிற் கிழவனை
விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அதியொப் பானை யரத்துறை மேவிய
கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பாடல் எண் : 7
புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அனலொப் பானை யரத்துறை மேவிய
கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பாடல் எண் : 8
பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர்
மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அன்னொப் பானை யரத்துறை மேவிய
தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பாடல் எண் : 9
காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானைவல் லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர மற்கும ரத்துறை
ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.

பாடல் எண் : 10
கலையொப் பானைக் கற்றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை யரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.

============================= ============================


Word separated version:

பதிகம் 5.3 திருநெல்வாயில் அரத்துறை

பாடல் எண் : 1
கடவுளைக், கடலுள் எழு நஞ்சு உண்ட
உடல் உளானை, ஒப்பாரி இலாத எம்
அடல் உளானை, அரத்துறை மேவிய
சுடர் உளானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பாடல் எண் : 2
கரும்பு ஒப்பானைக், கரும்பினிற் கட்டியை
விரும்பு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
பாடல் எண் : 3
ஏறு ஒப்பானை, எல்லா உயிர்க்கும் இறை
வேறு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை, அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பாடல் எண் : 4
பரப்பு ஒப்பானைப் பகல், இருள் நல் நிலா
இரப்பு ஒப்பானை, இள-மதி சூடிய
அரப்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பாடல் எண் : 5
நெய் ஒப்பானை, நெய்யிற் சுடர் போல்வதோர்
மெய் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
ஐ ஒப்பானை, அரத்துறை மேவிய
கை ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பாடல் எண் : 6
நெதி ஒப்பானை, நெதியிற் கிழவனை
விதி ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அதி ஒப்பானை, அரத்துறை மேவிய
கதி ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பாடல் எண் : 7
புனல் ஒப்பானைப், பொருந்தலர் தம்மையே 
மினல் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அனல் ஒப்பானை, அரத்துறை மேவிய
கனல் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பாடல் எண் : 8
பொன் ஒப்பானைப், பொன்னிற் சுடர் போல்வதோர்
மின் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அன் ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.

பாடல் எண் : 9
காழியானைக், கன விடை ஊரு[ம்] மெய்
வாழியானை, வல்லோரும் என்றின்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை
ஊழியானைக் கண்டீர் நாம் தொழுவதே

பாடல் எண் : 10
கலை ஒப்பானைக், கற்றார்க்கு ஓர் அமுதினை
மலை ஒப்பானை, மணிமுடி ஊன்றிய
அலை ஒப்பானை, அரத்துறை மேவிய
நிலை ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
================== ==========================

पदिगम् ५. तिरुनॆल्वायिल् अरत्तुऱै

पाडल् ऎण् :
कडवुळैक्, कडलुळ् ऎऴु नञ्जु उण्ड
उडल् उळाऩै, ऒप्पारि इलाद ऎम्
अडल् उळाऩै, अरत्तुऱै मेविय
सुडर् उळाऩैक् कण्डीर् नाम् तॊऴुवदे.

पाडल् ऎण् :
करुम्बु ऒप्पाऩैक्, करुम्बिऩिऱ् कट्टियै,
विरुम्बु ऒप्पाऩै, विण्णोरुम् अऱिगिला
अरुम्बु ऒप्पाऩै, अरत्तुऱै मेविय
सुरुम्बु ऒप्पाऩैक् कण्डीर् नाम् तॊऴुवदे.

पाडल् ऎण् :
एऱु ऒप्पाऩै, ऎल्ला उयिर्क्कुम् इऱै
वेऱु ऒप्पाऩै, विण्णोरुम् अऱिगिला
आऱु ऒप्पाऩै, अरत्तुऱै मेविय
ऊऱु ऒप्पाऩैक् कण्डीर् नाम् तॊऴुवदे.

पाडल् ऎण् :
परप्पु ऒप्पाऩैप् पगल्, इरुळ् नल् निला
इरप्पु ऒप्पाऩै, इळ-मदि सूडिय
अरप्पु ऒप्पाऩै, अरत्तुऱै मेविय
सुरप्पु ऒप्पाऩैक् कण्डीर् नाम् तॊऴुवदे.

पाडल् ऎण् :
नॆय् ऒप्पाऩै, नॆय्यिऱ् चुडर् पोल्वदोर्
मॆय् ऒप्पाऩै, विण्णोरुम् अऱिगिलार्
ऐ ऒप्पाऩै, अरत्तुऱै मेविय
कै ऒप्पाऩैक् कण्डीर् नाम् तॊऴुवदे.

पाडल् ऎण् :
नॆदि ऒप्पाऩै, नॆदियिऱ् किऴवऩै,
विदि ऒप्पाऩै, विण्णोरुम् अऱिगिलार्
अदि ऒप्पाऩै, अरत्तुऱै मेविय
कदि ऒप्पाऩैक् कण्डीर् नाम् तॊऴुवदे.

पाडल् ऎण् :
पुऩल् ऒप्पाऩैप्, पॊरुन्दलर् तम्मैये
मिऩल् ऒप्पाऩै, विण्णोरुम् अऱिगिलार्
अऩल् ऒप्पाऩै, अरत्तुऱै मेविय
कऩल् ऒप्पाऩैक् कण्डीर् नाम् तॊऴुवदे.

पाडल् ऎण् :
पॊऩ् ऒप्पाऩैप्, पॊऩ्ऩिऱ् चुडर् पोल्वदोर्
मिऩ् ऒप्पाऩै, विण्णोरुम् अऱिगिलार्
अऩ् ऒप्पाऩै, अरत्तुऱै मेविय
तऩ् ऒप्पाऩैक् कण्डीर् नाम् तॊऴुवदे.

पाडल् ऎण् :
काऴियाऩैक्, कऩ विडै ऊरु[म्] मॆय्
वाऴियाऩै, वल्लोरुम् ऎण्ड्रिऩ्ऩवर्
आऴियाऩ् पिरमऱ्कुम् अरत्तुऱै
ऊऴियाऩैक् कण्डीर् नाम् तॊऴुवदे.

पाडल् ऎण् : १०
कलै ऒप्पाऩैक्, कट्रार्क्कु ओर् अमुदिऩै,
मलै ऒप्पाऩै, मणिमुडि ऊण्ड्रिय
अलै ऒप्पाऩै, अरत्तुऱै मेविय
निलै ऒप्पाऩैक् कण्डीर् नाम् तॊऴुवदे.
================== ==========================

Word separated version:

padigam 5.3  tirunelvāyil arattuṟai

pāḍal eṇ : 1
kaḍavuḷaik, kaḍaluḷ eḻu nañju uṇḍa
uḍal uḷāṉai, oppāri ilāda em
aḍal uḷāṉai, arattuṟai mēviya
suḍar uḷāṉaik kaṇḍīr nām toḻuvadē.

pāḍal eṇ : 2
karumbu oppāṉaik, karumbiṉiṟ kaṭṭiyai,
virumbu oppāṉai, viṇṇōrum aṟigilā
arumbu oppāṉai, arattuṟai mēviya
surumbu oppāṉaik kaṇḍīr nām toḻuvadē.

pāḍal eṇ : 3
ēṟu oppāṉai, ellā uyirkkum iṟai
vēṟu oppāṉai, viṇṇōrum aṟigilā
āṟu oppāṉai, arattuṟai mēviya
ūṟu oppāṉaik kaṇḍīr nām toḻuvadē.

pāḍal eṇ : 4
parappu oppāṉaip pagal, iruḷ nal nilā
irappu oppāṉai, iḷa-madi sūḍiya
arappu oppāṉai, arattuṟai mēviya
surappu oppāṉaik kaṇḍīr nām toḻuvadē.

pāḍal eṇ : 5
ney oppāṉai, neyyiṟ suḍar pōlvadōr
mey oppāṉai, viṇṇōrum aṟigilār
ai oppāṉai, arattuṟai mēviya
kai oppāṉaik kaṇḍīr nām toḻuvadē.

pāḍal eṇ : 6
nedi oppāṉai, nediyiṟ kiḻavaṉai,
vidi oppāṉai, viṇṇōrum aṟigilār
adi oppāṉai, arattuṟai mēviya
kadi oppāṉaik kaṇḍīr nām toḻuvadē.

pāḍal eṇ : 7
puṉal oppāṉaip, porundalar tammaiyē
miṉal oppāṉai, viṇṇōrum aṟigilār
aṉal oppāṉai, arattuṟai mēviya
kaṉal oppāṉaik kaṇḍīr nām toḻuvadē.

pāḍal eṇ : 8
poṉ oppāṉaip, poṉṉiṟ suḍar pōlvadōr
miṉ oppāṉai, viṇṇōrum aṟigilār
aṉ oppāṉai, arattuṟai mēviya
taṉ oppāṉaik kaṇḍīr nām toḻuvadē.

pāḍal eṇ : 9
kāḻiyāṉaik, kaṉa viḍai ūru[m] mey
vāḻiyāṉai, vallōrum eṇḍriṉṉavar
āḻiyāṉ piramaṟkum arattuṟai
ūḻiyāṉaik kaṇḍīr nām toḻuvadē.

pāḍal eṇ : 10
kalai oppāṉaik, kaṭrārkku ōr amudiṉai,
malai oppāṉai, maṇimuḍi ūṇḍriya
alai oppāṉai, arattuṟai mēviya 
nilai oppāṉaik kaṇḍīr nām toḻuvadē. 
====================

No comments:

Post a Comment