Friday, July 17, 2015

4.1 - கூற்றாயினவாறு - திருவதிகை வீரட்டானம் - thiruvadhigai

5) padhigam 4.1 - கூற்றாயினவாறு 

Verses - PDF: 4.1 - கூற்றாயினவாறு - kūṭrāyiṉavāṟu

Padhigam audio (singing): 



4.1- kUtRAyinavARu - word by word meaning - English translation

https://drive.google.com/file/d/1tNWwhI1Pe1ZA7vGZBC9imo5aG553dfxW/view?usp=share_link

Playlist for explanation (Tamil) - all songs of this padhigam - kUtRAyinavARu:  

https://www.youtube.com/playlist?list=PLdpsipSnJkE_Q42Dj-U6Bm7DgX9kfBSfu

***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/ULFzkAsX66M
Part-2: https://youtu.be/KC8i-YEGMTM

***

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் - Thiruvadhigai temple info - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=853

=======================

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.1 - திருவதிகை வீரட்டானம் (பண் : கொல்லி)

Background:
சிறுவயதில் பெற்றோரை இழந்து தமக்கையார் திலகவதியார் அரவணைப்பில் வளர்ந்த மருள்நீக்கியார், இளமையில் சமண சமயத்தைச் சேர்ந்து தருமசேனர் என்ற தலைவராகத் திகழ்ந்தார். திலகவதியாரின் நெடுநாள் வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபெருமான் அருளால் தம்பியாருக்குத் தீராச் சூலைநோய் உண்டாகித், திருவதிகையில் தொண்டுசெய்து வாழ்ந்த திலகவதியார் மடத்திற்கு அவர் வந்துசேர்ந்தார். திலகவதியார் திருவைந்தெழுத்து ஓதி அளித்த திருநீற்றைப் பூசிக்கொண்டு திருவதிகை வீரட்டானம் கோயிலுட் புகுந்து ஈசனைக் 'கூற்றாயினவாறு' என்று தொடங்கும் இப்பதிகத்தைப் பாடி வணங்கினார். சிவன் அருளால் சூலைநோய் தீர்ந்தது. வானில் எழுந்த சிவன் வாக்கால் 'திருநாவுக்கரசர்' என்ற பெயர் பெற்றார்.

He sings "kūṭrāyiṉavāṟu" padhigam and prays for his stomach pain to be cured

#1335 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 70

நீற்றால்நிறை வாகிய மேனியுடன்

.. நிறையன்புறு சிந்தையில் நேசமிக

மாற்றார்புரம் மாற்றிய வேதியரை

.. மருளும்பிணி மாயை அறுத்திடுவான்

கூற்றாயின வாறு விலக்ககிலீர்

.. எனநீடிய கோதில் திருப்பதிகம்

போற்றாலுல கேழின் வருந்துயரும்

.. போமாறெதிர் நின்று புகன்றனரால்.  

--------------

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.1 - திருவதிகை வீரட்டானம் (பண் : கொல்லி)

(தானாதன தானன தானதனா x 2 - Rhythm)

(Can also be seen as - தானா தனனா தனனா தனனா x 2 - Rhythm)

பாடல் எண் : 1

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

பாடல் எண் : 2

நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

பாடல் எண் : 3

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.


பாடல் எண் : 4

முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.


பாடல் எண் : 5

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.


பாடல் எண் : 6

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.


பாடல் எண் : 7

உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்
வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.


பாடல் எண் : 8

வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.


பாடல் எண் : 9

பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.


பாடல் எண் : 10

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

-------------------

Voice from the heavens declares that he will be known as "nāvukkarasu" thenceforth

#1339 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 74
மேவுற்றஇவ் வேலையில் நீடியசீர்

.. வீரட்டம் அமர்ந்த பிரானருளால்

பாவுற்றலர் செந்தமி ழின்சொல்வளப்

.. பதிகத்தொடை பாடிய பான்மையினால்

நாவுக்கர சென்றுல கேழினும்நின்

.. நன்னாமம் நயப்புற மன்னுகஎன்

றியாவர்க்கும் வியப்புற மஞ்சுறைவா

.. னிடையேயொரு வாய்மை எழுந்ததுவே.

============================= ============================


Word separated version:


He sings "kūṭrāyiṉavāṟu" padhigam and prays for his stomach pain to be cured

#1335 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 70
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன்

.. நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக

மாற்றார் புரம் மாற்றிய வேதியரை

.. மருளும் பிணி மாயை அறுத்திடுவான்

"கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்"

.. என நீடிய கோது இல் திருப்பதிகம்

போற்றால் உலகு ஏழின் வரும் துயரும்

.. போமாறு எதிர் நின்று புகன்றனரால்.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.1 - திருவதிகை வீரட்டானம் (பண் : கொல்லி)

(தானாதன தானன தானதனா x 2 - Rhythm)

(Can also be seen as - தானா தனனா தனனா தனனா x 2 - Rhythm)

பாடல் எண் : 1

கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்; கொடுமை பல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கி இட
ஆற்றேன் அடியேன், அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.


பாடல் எண் : 2

நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்; நினையாது ஒரு போதும் இருந்து அறியேன்;
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்; வயிற்றோடு துடக்கி முடக்கி இட
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்;
அஞ்சேலும் என்னீர்; அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.

பாடல் எண் : 3

பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்; படு-வெண்-தலையில் பலி கொண்டு உழல்வீர்;
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்;
பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர்; பெற்றம் ஏற்று உகந்தீர்; சுற்றும் வெண்-தலை கொண்டு
அணிந்தீர்; அடிகேள்; அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.


பாடல் எண் : 4

முன்னம் அடியேன் அறியாமையினால் முனிந்து என்னை நலிந்து முடக்கி இடப்,
பின்னை அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்; சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்;
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ தலை ஆயவர்தம் கடன் ஆவதுதான்;
அன்ன நடையார் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.


பாடல் எண் : 5

காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால், கரை நின்றவர் "கண்டுகொள்" என்று சொல்லி
நீத்தாய கயம் புக நூக்கியிட, நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்; வயிற்றோடு துடக்கி முடக்கி இட,
ஆர்த்தார் புனல் ஆர்-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.


பாடல் எண் : 6

சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன்; தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்; உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்; உடல் உள் உறு-சூலை தவிர்த்து அருளாய்;
அலந்தேன் அடியேன், அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.


பாடல் எண் : 7

உயர்ந்தேன் மனை-வாழ்க்கையும் ஒண்-பொருளும் ஒருவர் தலை-காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்;
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன் அடியேன்; அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.


பாடல் எண் : 8

வலித்தேன் மனை-வாழ்க்கை மகிழ்ந்து அடியேன், வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை; சங்க-வெண்குழைக் காது உடை எம்பெருமான்;
கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,
அலுத்தேன் அடியேன்; அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.


பாடல் எண் : 9

பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்; புரி-புன்-சடையீர்; மெலியும் பிறையீர்;
துன்பே கவலை பிணி என்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்;
என் போலிகள் உம்மை இனித் தெளியார், அடியார் படுவது இதுவே ஆகில்;
அன்பே அமையும் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.


பாடல் எண் : 10

போர்த்தாய் அங்கு ஓர் ஆனையின் ஈர்-உரி-தோல்; புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்;
ஆர்த்தான் அரக்கன்-தனை மால்-வரைக்கீழ் அடர்த்திட்டு அருள்-செய்த அது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கி இடாய்;
ஆர்த்து ஆர்-புனல் சூழ்-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.

-------------------


Voice from the heavens declares that he will be known as "nāvukkarasu" thenceforth

#1339 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 74
மேவுற்ற இவ்-வேலையில் நீடிய சீர்

.. வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்

பா-உற்று அலர்-செந்தமிழ் இன்-சொல் வளப்

.. பதிகத்-தொடை பாடிய பான்மையினால்

நாவுக்கரசு என்று உலகு ஏழினும் நின்

.. நன்-நாமம் நயப்பு-உற மன்னுக என்று

யாவர்க்கும் வியப்பு-உற மஞ்சு உறை-வான்

.. இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே.

================== ==========================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


He sings "kūṭrāyiṉavāṟu" padhigam and prays for his stomach pain to be cured

#1335 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 70

nīṭrāl niṟaivu āgiya mēniyuḍan

.. niṟai anbu uṟu sindaiyil nēsam miga

māṭrār puram māṭriya vēdiyarai

.. maruḷum piṇi māyai aṟuttiḍuvān

"kūṭru āyinavāṟu vilakkagilīr"

.. ena nīḍiya kōdu il tiruppadigam

pōṭrāl ulagu ēḻin varum tuyarum

.. pōmāṟu edir niṇḍru pugaṇḍranarāl.


tirunāvukkarasar tēvāram - padigam 4.1 - tiruvadigai vīraṭṭānam (paṇ : kolli)

(tānādana tānana tānadanā x 2 - Rhythm)

(Can also be seen as - tānā tananā tananā tananā x 2 - Rhythm)

pāḍal eṇ : 1

kūṭru āyinavāṟu vilakkagilīr; koḍumai pala seydana nān aṟiyēn;

ēṭrāy aḍikkē iravum pagalum piriyādu vaṇaṅguvan eppoḻudum;

tōṭrādu en vayiṭrin agambaḍiyē kuḍarōḍu tuḍakki muḍakki iḍa

āṭrēn aḍiyēn, adigaik keḍila vīraṭṭānattu uṟai ammānē.


pāḍal eṇ : 2

neñjam umakkē iḍamāga vaittēn; ninaiyādu oru pōdum irundu aṟiyēn;

vañjam idu oppadu kaṇḍu aṟiyēn; vayiṭrōḍu tuḍakki muḍakki iḍa

nañju āgi vandu ennai nalivadanai naṇugāmal turandu karandum iḍīr;

añjēlum ennīr; adigaik keḍila vīraṭṭānattu uṟai ammānē.


pāḍal eṇ : 3

paṇindārana pāvaṅgaḷ pāṭra vallīr; paḍu-veṇ-talaiyil pali koṇḍu uḻalvīr;

tuṇindē umakku āṭceydu vāḻal uṭrāl suḍugiṇḍradu sūlai tavirttu aruḷīr;

piṇindār poḍigoṇḍu mey pūsa vallīr; peṭram ēṭru ugandīr; suṭrum veṇ-talai koṇḍu

aṇindīr; aḍigēḷ; adigaik keḍila vīraṭṭānattu uṟai ammānē.


pāḍal eṇ : 4

munnam aḍiyēn aṟiyāmaiyināl munindu ennai nalindu muḍakki iḍap,

pinnai aḍiyēn umakku āḷum paṭṭēn; suḍugiṇḍradu sūlai tavirttaruḷīr;

tannai aḍaindār vinai tīrppadu aṇḍrō talai āyavardam kaḍan āvadudān;

anna naḍaiyār adigaik keḍila vīraṭṭānattu uṟai ammānē.


pāḍal eṇ : 5

kāttu āḷbavar kāval igaḻndamaiyāl, karai niṇḍravar "kaṇḍugoḷ" eṇḍru solli

nīttāya kayam puga nūkkiyiḍa, nilaikkoḷḷum vaḻittuṟai oṇḍru aṟiyēn;

vārttai idu oppadu kēṭṭu aṟiyēn; vayiṭrōḍu tuḍakki muḍakki iḍa,

ārttār punal ār-adigaik keḍila vīraṭṭānattu uṟai ammānē.


pāḍal eṇ : 6

salam pūvoḍu dūbam maṟandu aṟiyēn; tamiḻōḍu isai pāḍal maṟandu aṟiyēn;

nalam tīṅgilum unnai maṟandu aṟiyēn; un nāmam en nāvil maṟandu aṟiyēn;

ulandār talaiyil pali koṇḍu uḻalvāy; uḍal uḷ uṟu-sūlai tavirttu aruḷāy;

alandēn aḍiyēn, adigaik keḍila vīraṭṭānattu uṟai ammānē.


pāḍal eṇ : 7

uyarndēn manai-vāḻkkaiyum oṇ-poruḷum oruvar talai-kāval ilāmaiyināl;

vayandē umakku āṭceydu vāḻal uṭrāl valikkiṇḍradu sūlai tavirttu aruḷīr;

payandē en vayiṭrin agambaḍiyē paṟittup puraṭṭi aṟuttu īrttiḍa, nān

ayarndēn aḍiyēn; adigaik keḍila vīraṭṭānattu uṟai ammānē.


pāḍal eṇ : 8

valittēn manai-vāḻkkai magiḻndu aḍiyēn, vañjam manam oṇḍrum ilāmaiyināl;

salittāl oruvar tuṇai yārum illai; saṅga-veṇguḻaik kādu uḍai emberumān;

kalittē en vayiṭrin agambaḍiyē kalakki malakkiṭṭuk kavarndu tinna,

aluttēn aḍiyēn; adigaik keḍila vīraṭṭānattu uṟai ammānē.


pāḍal eṇ : 9

pon pōla miḷirvadu or mēniyinīr; puri-pun-saḍaiyīr; meliyum piṟaiyīr;

tunbē kavalai piṇi eṇḍrivaṭrai naṇugāmal turandu karandum iḍīr;

en pōligaḷ ummai init teḷiyār, aḍiyār paḍuvadu iduvē āgil;

anbē amaiyum adigaik keḍila vīraṭṭānattu uṟai ammānē.


pāḍal eṇ : 10

pōrttāy aṅgu ōr ānaiyin īr-uri-tōl; puṟaṅgāḍu araṅgā naḍam āḍa vallāy;

ārttān arakkan-tanai māl-varaikkīḻ aḍarttiṭṭu aruḷ-seyda adu karudāy;

vērttum puraṇḍum viḻundum eḻundāl en vēdanai āna vilakki iḍāy;

ārttu ār-punal sūḻ-adigaik keḍila vīraṭṭānattu uṟai ammānē.

-------------------


Voice from the heavens declares that he will be known as "nāvukkarasu" thenceforth

#1339 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 74

mēvuṭra iv-vēlaiyil nīḍiya sīr

.. vīraṭṭam amarnda pirān aruḷāl

pā-uṭru alar-sendamiḻ in-sol vaḷap

.. padigat-toḍai pāḍiya pānmaiyināl

nāvukkarasu eṇḍru ulagu ēḻinum nin

.. nan-nāmam nayappu-uṟa mannuga eṇḍru

yāvarkkum viyappu-uṟa mañju uṟai-vān

.. iḍaiyē oru vāymai eḻundaduvē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )

He sings "kūṭrāyiṉavāṟu" padhigam and prays for his stomach pain to be cured

#1335 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 70

नीट्राल् निऱैवु आगिय मेनियुडन्

.. निऱै अन्बु उऱु सिन्दैयिल् नेसम् मिग

माट्रार् पुरम् माट्रिय वेदियरै

.. मरुळुम् पिणि मायै अऱुत्तिडुवान्

"कूट्रु आयिनवाऱु विलक्कगिलीर्"

.. ऎन नीडिय कोदु इल् तिरुप्पदिगम्

पोट्राल् उलगु एऴिन् वरुम् तुयरुम्

.. पोमाऱु ऎदिर् निण्ड्रु पुगण्ड्रनराल्.


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.1 - तिरुवदिगै वीरट्टानम् (पण् : कॊल्लि)

(तानादन तानन तानदना x 2 - Rhythm)

(Can also be seen as - ताना तनना तनना तनना x 2 - Rhythm)

पाडल् ऎण् : 1

कूट्रु आयिनवाऱु विलक्कगिलीर्; कॊडुमै पल सॆय्दन नान् अऱियेन्;

एट्राय् अडिक्के इरवुम् पगलुम् पिरियादु वणङ्गुवन् ऎप्पॊऴुदुम्;

तोट्रादु ऎन् वयिट्रिन् अगम्बडिये कुडरोडु तुडक्कि मुडक्कि इड

आट्रेन् अडियेन्, अदिगैक् कॆडिल वीरट्टानत्तु उऱै अम्माने.


पाडल् ऎण् : 2

नॆञ्जम् उमक्के इडमाग वैत्तेन्; निनैयादु ऒरु पोदुम् इरुन्दु अऱियेन्;

वञ्जम् इदु ऒप्पदु कण्डु अऱियेन्; वयिट्रोडु तुडक्कि मुडक्कि इड

नञ्जु आगि वन्दु ऎन्नै नलिवदनै नणुगामल् तुरन्दु करन्दुम् इडीर्;

अञ्जेलुम् ऎन्नीर्; अदिगैक् कॆडिल वीरट्टानत्तु उऱै अम्माने.


पाडल् ऎण् : 3

पणिन्दारन पावङ्गळ् पाट्र वल्लीर्; पडु-वॆण्-तलैयिल् पलि कॊण्डु उऴल्वीर्;

तुणिन्दे उमक्कु आट्चॆय्दु वाऴल् उट्राल् सुडुगिण्ड्रदु सूलै तविर्त्तु अरुळीर्;

पिणिन्दार् पॊडिगॊण्डु मॆय् पूस वल्लीर्; पॆट्रम् एट्रु उगन्दीर्; सुट्रुम् वॆण्-तलै कॊण्डु

अणिन्दीर्; अडिगेळ्; अदिगैक् कॆडिल वीरट्टानत्तु उऱै अम्माने.


पाडल् ऎण् : 4

मुन्नम् अडियेन् अऱियामैयिनाल् मुनिन्दु ऎन्नै नलिन्दु मुडक्कि इडप्,

पिन्नै अडियेन् उमक्कु आळुम् पट्टेन्; सुडुगिण्ड्रदु सूलै तविर्त्तरुळीर्;

तन्नै अडैन्दार् विनै तीर्प्पदु अण्ड्रो तलै आयवर्दम् कडन् आवदुदान्;

अन्न नडैयार् अदिगैक् कॆडिल वीरट्टानत्तु उऱै अम्माने.


पाडल् ऎण् : 5

कात्तु आळ्बवर् कावल् इगऴ्न्दमैयाल्, करै निण्ड्रवर् "कण्डुगॊळ्" ऎण्ड्रु सॊल्लि

नीत्ताय कयम् पुग नूक्कियिड, निलैक्कॊळ्ळुम् वऴित्तुऱै ऒण्ड्रु अऱियेन्;

वार्त्तै इदु ऒप्पदु केट्टु अऱियेन्; वयिट्रोडु तुडक्कि मुडक्कि इड,

आर्त्तार् पुनल् आर्-अदिगैक् कॆडिल वीरट्टानत्तु उऱै अम्माने.


पाडल् ऎण् : 6

सलम् पूवॊडु दूबम् मऱन्दु अऱियेन्; तमिऴोडु इसै पाडल् मऱन्दु अऱियेन्;

नलम् तीङ्गिलुम् उन्नै मऱन्दु अऱियेन्; उन् नामम् ऎन् नाविल् मऱन्दु अऱियेन्;

उलन्दार् तलैयिल् पलि कॊण्डु उऴल्वाय्; उडल् उळ् उऱु-सूलै तविर्त्तु अरुळाय्;

अलन्देन् अडियेन्, अदिगैक् कॆडिल वीरट्टानत्तु उऱै अम्माने.


पाडल् ऎण् : 7

उयर्न्देन् मनै-वाऴ्क्कैयुम् ऒण्-पॊरुळुम् ऒरुवर् तलै-कावल् इलामैयिनाल्;

वयन्दे उमक्कु आट्चॆय्दु वाऴल् उट्राल् वलिक्किण्ड्रदु सूलै तविर्त्तु अरुळीर्;

पयन्दे ऎन् वयिट्रिन् अगम्बडिये पऱित्तुप् पुरट्टि अऱुत्तु ईर्त्तिड, नान्

अयर्न्देन् अडियेन्; अदिगैक् कॆडिल वीरट्टानत्तु उऱै अम्माने.


पाडल् ऎण् : 8

वलित्तेन् मनै-वाऴ्क्कै मगिऴ्न्दु अडियेन्, वञ्जम् मनम् ऒण्ड्रुम् इलामैयिनाल्;

सलित्ताल् ऒरुवर् तुणै यारुम् इल्लै; सङ्ग-वॆण्गुऴैक् कादु उडै ऎम्बॆरुमान्;

कलित्ते ऎन् वयिट्रिन् अगम्बडिये कलक्कि मलक्किट्टुक् कवर्न्दु तिन्न,

अलुत्तेन् अडियेन्; अदिगैक् कॆडिल वीरट्टानत्तु उऱै अम्माने.


पाडल् ऎण् : 9

पॊन् पोल मिळिर्वदु ऒर् मेनियिनीर्; पुरि-पुन्-सडैयीर्; मॆलियुम् पिऱैयीर्;

तुन्बे कवलै पिणि ऎण्ड्रिवट्रै नणुगामल् तुरन्दु करन्दुम् इडीर्;

ऎन् पोलिगळ् उम्मै इनित् तॆळियार्, अडियार् पडुवदु इदुवे आगिल्;

अन्बे अमैयुम् अदिगैक् कॆडिल वीरट्टानत्तु उऱै अम्माने.


पाडल् ऎण् : 10

पोर्त्ताय् अङ्गु ओर् आनैयिन् ईर्-उरि-तोल्; पुऱङ्गाडु अरङ्गा नडम् आड वल्लाय्;

आर्त्तान् अरक्कन्-तनै माल्-वरैक्कीऴ् अडर्त्तिट्टु अरुळ्-सॆय्द अदु करुदाय्;

वेर्त्तुम् पुरण्डुम् विऴुन्दुम् ऎऴुन्दाल् ऎन् वेदनै आन विलक्कि इडाय्;

आर्त्तु आर्-पुनल् सूऴ्-अदिगैक् कॆडिल वीरट्टानत्तु उऱै अम्माने.

-------------------


Voice from the heavens declares that he will be known as "nāvukkarasu" thenceforth

#1339 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 74

मेवुट्र इव्-वेलैयिल् नीडिय सीर्

.. वीरट्टम् अमर्न्द पिरान् अरुळाल्

पा-उट्रु अलर्-सॆन्दमिऴ् इन्-सॊल् वळप्

.. पदिगत्-तॊडै पाडिय पान्मैयिनाल्

नावुक्करसु ऎण्ड्रु उलगु एऴिनुम् निन्

.. नन्-नामम् नयप्पु-उऱ मन्नुग ऎण्ड्रु

यावर्क्कुम् वियप्पु-उऱ मञ्जु उऱै-वान्

.. इडैये ऒरु वाय्मै ऎऴुन्ददुवे.

================== ==========================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


He sings "kūṭrāyiṉavāṟu" padhigam and prays for his stomach pain to be cured

#1335 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 70

నీట్రాల్ నిఱైవు ఆగియ మేనియుడన్

.. నిఱై అన్బు ఉఱు సిందైయిల్ నేసం మిగ

మాట్రార్ పురం మాట్రియ వేదియరై

.. మరుళుం పిణి మాయై అఱుత్తిడువాన్

"కూట్రు ఆయినవాఱు విలక్కగిలీర్"

.. ఎన నీడియ కోదు ఇల్ తిరుప్పదిగం

పోట్రాల్ ఉలగు ఏఴిన్ వరుం తుయరుం

.. పోమాఱు ఎదిర్ నిండ్రు పుగండ్రనరాల్.


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.1 - తిరువదిగై వీరట్టానం (పణ్ : కొల్లి)

(తానాదన తానన తానదనా x 2 - Rhythm)

(Can also be seen as - తానా తననా తననా తననా x 2 - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

కూట్రు ఆయినవాఱు విలక్కగిలీర్; కొడుమై పల సెయ్దన నాన్ అఱియేన్;

ఏట్రాయ్ అడిక్కే ఇరవుం పగలుం పిరియాదు వణంగువన్ ఎప్పొఴుదుం;

తోట్రాదు ఎన్ వయిట్రిన్ అగంబడియే కుడరోడు తుడక్కి ముడక్కి ఇడ

ఆట్రేన్ అడియేన్, అదిగైక్ కెడిల వీరట్టానత్తు ఉఱై అమ్మానే.


పాడల్ ఎణ్ : 2

నెంజం ఉమక్కే ఇడమాగ వైత్తేన్; నినైయాదు ఒరు పోదుం ఇరుందు అఱియేన్;

వంజం ఇదు ఒప్పదు కండు అఱియేన్; వయిట్రోడు తుడక్కి ముడక్కి ఇడ

నంజు ఆగి వందు ఎన్నై నలివదనై నణుగామల్ తురందు కరందుం ఇడీర్;

అంజేలుం ఎన్నీర్; అదిగైక్ కెడిల వీరట్టానత్తు ఉఱై అమ్మానే.


పాడల్ ఎణ్ : 3

పణిందారన పావంగళ్ పాట్ర వల్లీర్; పడు-వెణ్-తలైయిల్ పలి కొండు ఉఴల్వీర్;

తుణిందే ఉమక్కు ఆట్చెయ్దు వాఴల్ ఉట్రాల్ సుడుగిండ్రదు సూలై తవిర్త్తు అరుళీర్;

పిణిందార్ పొడిగొండు మెయ్ పూస వల్లీర్; పెట్రం ఏట్రు ఉగందీర్; సుట్రుం వెణ్-తలై కొండు

అణిందీర్; అడిగేళ్; అదిగైక్ కెడిల వీరట్టానత్తు ఉఱై అమ్మానే.


పాడల్ ఎణ్ : 4

మున్నం అడియేన్ అఱియామైయినాల్ మునిందు ఎన్నై నలిందు ముడక్కి ఇడప్,

పిన్నై అడియేన్ ఉమక్కు ఆళుం పట్టేన్; సుడుగిండ్రదు సూలై తవిర్త్తరుళీర్;

తన్నై అడైందార్ వినై తీర్ప్పదు అండ్రో తలై ఆయవర్దం కడన్ ఆవదుదాన్;

అన్న నడైయార్ అదిగైక్ కెడిల వీరట్టానత్తు ఉఱై అమ్మానే.


పాడల్ ఎణ్ : 5

కాత్తు ఆళ్బవర్ కావల్ ఇగఴ్న్దమైయాల్, కరై నిండ్రవర్ "కండుగొళ్" ఎండ్రు సొల్లి

నీత్తాయ కయం పుగ నూక్కియిడ, నిలైక్కొళ్ళుం వఴిత్తుఱై ఒండ్రు అఱియేన్;

వార్త్తై ఇదు ఒప్పదు కేట్టు అఱియేన్; వయిట్రోడు తుడక్కి ముడక్కి ఇడ,

ఆర్త్తార్ పునల్ ఆర్-అదిగైక్ కెడిల వీరట్టానత్తు ఉఱై అమ్మానే.


పాడల్ ఎణ్ : 6

సలం పూవొడు దూబం మఱందు అఱియేన్; తమిఴోడు ఇసై పాడల్ మఱందు అఱియేన్;

నలం తీంగిలుం ఉన్నై మఱందు అఱియేన్; ఉన్ నామం ఎన్ నావిల్ మఱందు అఱియేన్;

ఉలందార్ తలైయిల్ పలి కొండు ఉఴల్వాయ్; ఉడల్ ఉళ్ ఉఱు-సూలై తవిర్త్తు అరుళాయ్;

అలందేన్ అడియేన్, అదిగైక్ కెడిల వీరట్టానత్తు ఉఱై అమ్మానే.


పాడల్ ఎణ్ : 7

ఉయర్న్దేన్ మనై-వాఴ్క్కైయుం ఒణ్-పొరుళుం ఒరువర్ తలై-కావల్ ఇలామైయినాల్;

వయందే ఉమక్కు ఆట్చెయ్దు వాఴల్ ఉట్రాల్ వలిక్కిండ్రదు సూలై తవిర్త్తు అరుళీర్;

పయందే ఎన్ వయిట్రిన్ అగంబడియే పఱిత్తుప్ పురట్టి అఱుత్తు ఈర్త్తిడ, నాన్

అయర్న్దేన్ అడియేన్; అదిగైక్ కెడిల వీరట్టానత్తు ఉఱై అమ్మానే.


పాడల్ ఎణ్ : 8

వలిత్తేన్ మనై-వాఴ్క్కై మగిఴ్న్దు అడియేన్, వంజం మనం ఒండ్రుం ఇలామైయినాల్;

సలిత్తాల్ ఒరువర్ తుణై యారుం ఇల్లై; సంగ-వెణ్గుఴైక్ కాదు ఉడై ఎంబెరుమాన్;

కలిత్తే ఎన్ వయిట్రిన్ అగంబడియే కలక్కి మలక్కిట్టుక్ కవర్న్దు తిన్న,

అలుత్తేన్ అడియేన్; అదిగైక్ కెడిల వీరట్టానత్తు ఉఱై అమ్మానే.


పాడల్ ఎణ్ : 9

పొన్ పోల మిళిర్వదు ఒర్ మేనియినీర్; పురి-పున్-సడైయీర్; మెలియుం పిఱైయీర్;

తున్బే కవలై పిణి ఎండ్రివట్రై నణుగామల్ తురందు కరందుం ఇడీర్;

ఎన్ పోలిగళ్ ఉమ్మై ఇనిత్ తెళియార్, అడియార్ పడువదు ఇదువే ఆగిల్;

అన్బే అమైయుం అదిగైక్ కెడిల వీరట్టానత్తు ఉఱై అమ్మానే.


పాడల్ ఎణ్ : 10

పోర్త్తాయ్ అంగు ఓర్ ఆనైయిన్ ఈర్-ఉరి-తోల్; పుఱంగాడు అరంగా నడం ఆడ వల్లాయ్;

ఆర్త్తాన్ అరక్కన్-తనై మాల్-వరైక్కీఴ్ అడర్త్తిట్టు అరుళ్-సెయ్ద అదు కరుదాయ్;

వేర్త్తుం పురండుం విఴుందుం ఎఴుందాల్ ఎన్ వేదనై ఆన విలక్కి ఇడాయ్;

ఆర్త్తు ఆర్-పునల్ సూఴ్-అదిగైక్ కెడిల వీరట్టానత్తు ఉఱై అమ్మానే.

-------------------


Voice from the heavens declares that he will be known as "nāvukkarasu" thenceforth

#1339 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 74

మేవుట్ర ఇవ్-వేలైయిల్ నీడియ సీర్

.. వీరట్టం అమర్న్ద పిరాన్ అరుళాల్

పా-ఉట్రు అలర్-సెందమిఴ్ ఇన్-సొల్ వళప్

.. పదిగత్-తొడై పాడియ పాన్మైయినాల్

నావుక్కరసు ఎండ్రు ఉలగు ఏఴినుం నిన్

.. నన్-నామం నయప్పు-ఉఱ మన్నుగ ఎండ్రు

యావర్క్కుం వియప్పు-ఉఱ మంజు ఉఱై-వాన్

.. ఇడైయే ఒరు వాయ్మై ఎఴుందదువే.

================== ==========================

4 comments:

  1. vanakkam, thank you to post the lyrics in various language. It's very helpful.

    ReplyDelete
  2. Excellent service done. Thank you for your devine great work.

    ReplyDelete