Sunday, July 5, 2015

5.2 - பனைக்கை மும்மத - கோயில் (சிதம்பரம்) - Chidambaram

2) padhigam 5.2 - thirunavukkarasar thevaram - panaikkai mummadha

Verses - PDF: 5.2 - பனைக்கை மும்மத - panaikkai mummada

5.2 - panaikkai mummada vezham - word by word meaning - English translation: https://drive.google.com/open?id=1Rx6BBv1B14HO0s4C1KN_TWhlgGL1D5fg

***
On YouTube:
Tamil discussion:

English Discussion:
Part-2: https://youtu.be/2-8L41f2bhA
***
English translation for this padhigam - by V.M. Subramanya Aiyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS5_002.HTM

OdhuvAr audio of this padhigam:

Dharmapuram Swaminathan - Live concert recording: https://www.youtube.com/watch?v=lkXa7b1rGII  



V. Subramanian

=======================

 This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.2 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - (திருக்குறுந்தொகை)


Background:

திருநாவுக்கரசர் தில்லையில் தங்கியிருந்த சமயத்தில் அங்கிருந்து அருகுள்ள தலங்களான திருவேட்களம், திருக்கழிப்பாலை முதலிய இடங்களுக்குச் சென்று வழிபட்டுப் பின் சிற்றம்பலக்கூத்தனை நினைந்து தில்லைக்கு மீளும் போதில், வழியில் பாடியருளியது இத்திருப்பதிகம். ('நினைப்பவர் தம்மனங் கோயில் கொண்டருளும் அம்பலத்துக் கூத்தனைத் தினைத்தனையாம் பொழுது மறந்துய்வனோ' எனப் பாடித் தில்லை சார்ந்தார் ( தி .12 பெரிய புரா . 173- 174.)

----------------

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.2 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - (திருக்குறுந்தொகை)

பாடல் எண் : 1

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்

நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்

அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்

தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.


பாடல் எண் : 2

தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை

மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்

பார்த்த னுக்கருள் செய்தசிற் றம்பலக்

கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.


பாடல் எண் : 3

கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி

இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்

சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை

எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ.


பாடல் எண் : 4

மாணி பால்கறந் தாட்டி வழிபட

நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவென்

ஆணியைச் செம்பொ னம்பலத் துள்நின்ற

தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.


பாடல் எண் : 5

பித்த னைப்பெருங் காடரங் காவுடை

முத்த னைமுளை வெண்மதி சூடியைச்

சித்தனைச் செம்பொ னம்பலத் துள்நின்ற

அத்த னையடி யேன்மறந் துய்வனோ.


பாடல் எண் : 6

நீதி யைநிறை வைமறை நான்குடன்

ஓதி யையொரு வர்க்கும் அறிவொணாச்

சோதி யைச்சுடர்ச் செம்பொனி னம்பலத்

தாதி யையடி யேன்மறந் துய்வனோ.


பாடல் எண் : 7

மைகொள் கண்டனெண் தோளன்முக் கண்ணினன்

பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்

செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்

ஐய னையடி யேன்மறந் துய்வனோ.


பாடல் எண் : 8

முழுதும் வானுல கத்துள தேவர்கள்

தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்

எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை

இழுதை யேன்மறந் தெங்ஙன முய்வனோ.


பாடல் எண் : 9

காரு லாமலர்க் கொன்றையந் தாரனை

வாரு லாமுலை மங்கைம ணாளனைத்

தேரு லாவிய தில்லையுட் கூத்தனை

ஆர்கி லாஅமு தைமறந் துய்வனோ.


பாடல் எண் : 10

ஓங்கு மால்வரை யேந்தலுற் றான்சிரம்

வீங்கி விம்முற வூன்றிய தாளினான்

தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்

பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ.


============================= ============================



Word separated version:

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.1 - கோயில் ( தில்லை / சிதம்பரம்) - (திருக்குறுந்தொகை)

பாடல் எண் : 1

பனைக்கை மும்-மத வேழம் உரித்தவன்;

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்;

அனைத்தும் வேடம் ஆம் அம்பலக் கூத்தனைத்

தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனோ.


பாடல் எண் : 2

தீர்த்தனைச், சிவனைச், சிவலோகனை,

மூர்த்தியை, முதல் ஆய ஒருவனைப்,

பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்

கூத்தனைக் கொடியேன் மறந்துய்வனோ.


பாடல் எண் : 3

கட்டும் பாம்பும் கபாலம் கை மான்மறி,

இட்டமாய் இடுகாட்டு எரி டுவான்,

சிட்டர் வாழ் தில்லை ம்பலக் கூத்தனை

ள்-னைப் பொழுதும் மறந்துய்வனோ.


பாடல் எண் : 4

மாணி பால் கறந்து ஆட்டி வழிபட

நீணு-கு எலாம் ஆளக் கொடுத்தன்

ஆணியைச், செம்பொன் அம்பலத்துள் நின்ற

தாணுவைத் தமியேன் மறந்துய்வனோ.


பாடல் எண் : 5

பித்தனைப், பெரும் காடு அரங்காடை

முத்தனை, முளை-வெண்-மதி சூடியைச்,

சித்தனைச், செம்பொன் அம்பலத்துள் நின்ற

அத்தனைடியேன் மறந்துய்வனோ.


பாடல் எண் : 6

நீதியை, நிறைவை, மறை நான்குடன்

ஓதியை, ருவர்க்கும் அறிவு ஒணாச்

சோதியைச், சுடர்ச் செம்பொனின் அம்பலத்து

தியைடியேன் மறந்துய்வனோ.


பாடல் எண் : 7

மை-கொள் கண்டன் எண்-தோளன், முக்-கண்ணினன்,

பை-கொள் பாம்பு அரை ர்த்த பரமனார்,

செய்ய-மாதுறை சிற்றம்பலத்து எங்கள்

ஐயனைடியேன் மறந்துய்வனோ.


பாடல் எண் : 8

முழுதும் வான்-லகத்து தேவர்கள்

தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்

எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை

இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ.


பாடல் எண் : 9

கார் உலாம் மலர்க் கொன்றை-அம் தாரனை,

வார் உலாம் முலை மங்கை ணாளனைத்,

தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை,

ஆர்கிலா அமுதை மறந்துய்வனோ.


பாடல் எண் : 10

ஓங்கு மால் வரை ந்தல் உற்றான் சிரம்

வீங்கி விம்முற ன்றிய தாளினான்,

தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனைப்

பாங்கு இலாத் தொண்டனேன் மறந்துய்வனோ.

================== ==========================


Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tirunāvukkarasar tēvāram - padigam 5.2 - kōyil (tillai / cidambaram) - ( tirukkuṟundogai )

pāḍal eṇ : 1

panaikkai mum-mada vēḻam urittavan;

ninaippavar manam kōyilāk koṇḍavan;

anaittum vēḍam ām ambalak kūttanait

tinaittanaip poḻudum maṟandu uyvanō.


pāḍal eṇ : 2

tīrttanaic, civanaic, civalōganai,

mūrttiyai, mudal āya oruvanaip,

pārttanukku aruḷ seyda siṭrambalak

kūttanaik koḍiyēn maṟandu uyvanō.


pāḍal eṇ : 3

kaṭṭum pāmbum kabālam kai mānmaṟi,

iṭṭamāy iḍugāṭṭu eri āḍuvān,

siṭṭar vāḻ tillai ambalak kūttanai

eḷ-tanaip poḻudum maṟandu uyvanō.


pāḍal eṇ : 4

māṇi pāl kaṟandu āṭṭi vaḻibaḍa

nīṇu-ulagu elām āḷak koḍutta en

āṇiyaic, cembon ambalattuḷ niṇḍra

tāṇuvait tamiyēn maṟandu uyvanō.


pāḍal eṇ : 5

pittanaip, perum kāḍu araṅgā uḍai

muttanai, muḷai-veṇ-madi sūḍiyaic,

cittanaic, cembon ambalattuḷ niṇḍra

attanai aḍiyēn maṟandu uyvanō.


pāḍal eṇ : 6

nīdiyai, niṟaivai, maṟai nāngu uḍan

ōdiyai, oruvarkkum aṟivu oṇāc

cōdiyaic, cuḍarc cembonin ambalattu

ādiyai aḍiyēn maṟandu uyvanō.


pāḍal eṇ : 7

mai-koḷ kaṇḍan eṇ-tōḷan, muk-kaṇṇinan,

pai-koḷ pāmbu arai ārtta paramanār,

seyya-mādu uṟai siṭrambalattu eṅgaḷ

aiyanai aḍiyēn maṟandu uyvanō.


pāḍal eṇ : 8

muḻudum vān-ulagattu uḷa tēvargaḷ

toḻudum pōṭriyum tūya sembonnināl

eḻudi mēynda siṭrambalak kūttanai

iḻudaiyēn maṟandu eṅṅanam uyvanō.


pāḍal eṇ : 9

kār ulām malark koṇḍrai-am tāranai,

vār ulām mulai maṅgai maṇāḷanait,

tēr ulāviya tillaiyuḷ kūttanai,

ārgilā amudai maṟandu uyvanō.


pāḍal eṇ : 10

ōṅgu māl varai ēndal uṭrān siram

vīṅgi vimmuṟa ūṇḍriya tāḷinān,

tēṅgu nīr vayal sūḻ tillaik kūttanaip

pāṅgu ilāt toṇḍanēn maṟandu uyvanō.

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )

----------

तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 5.2 - कोयिल् (तिल्लै / चिदम्बरम्) - ( तिरुक्कुऱुन्दॊगै )

पाडल् ऎण् : 1

पनैक्कै मुम्-मद वेऴम् उरित्तवन्;

निनैप्पवर् मनम् कोयिलाक् कॊण्डवन्;

अनैत्तुम् वेडम् आम् अम्बलक् कूत्तनैत्

तिनैत्तनैप् पॊऴुदुम् मऱन्दु उय्वनो.


पाडल् ऎण् : 2

तीर्त्तनैच्, चिवनैच्, चिवलोगनै,

मूर्त्तियै, मुदल् आय ऒरुवनैप्,

पार्त्तनुक्कु अरुळ् सॆय्द सिट्रम्बलक्

कूत्तनैक् कॊडियेन् मऱन्दु उय्वनो.


पाडल् ऎण् : 3

कट्टुम् पाम्बुम् कबालम् कै मान्मऱि,

इट्टमाय् इडुगाट्टु ऎरि आडुवान्,

सिट्टर् वाऴ् तिल्लै अम्बलक् कूत्तनै

ऎळ्-तनैप् पॊऴुदुम् मऱन्दु उय्वनो.


पाडल् ऎण् : 4

माणि पाल् कऱन्दु आट्टि वऴिबड

नीणु-उलगु ऎलाम् आळक् कॊडुत्त ऎन्

आणियैच्, चॆम्बॊन् अम्बलत्तुळ् निण्ड्र

ताणुवैत् तमियेन् मऱन्दु उय्वनो.


पाडल् ऎण् : 5

पित्तनैप्, पॆरुम् काडु अरङ्गा उडै

मुत्तनै, मुळै-वॆण्-मदि सूडियैच्,

चित्तनैच्, चॆम्बॊन् अम्बलत्तुळ् निण्ड्र

अत्तनै अडियेन् मऱन्दु उय्वनो.


पाडल् ऎण् : 6

नीदियै, निऱैवै, मऱै नान्गु उडन्

ओदियै, ऒरुवर्क्कुम् अऱिवु ऒणाच्

चोदियैच्, चुडर्च् चॆम्बॊनिन् अम्बलत्तु

आदियै अडियेन् मऱन्दु उय्वनो.


पाडल् ऎण् : 7

मै-कॊळ् कण्डन् ऎण्-तोळन्, मुक्-कण्णिनन्,

पै-कॊळ् पाम्बु अरै आर्त्त परमनार्,

सॆय्य-मादु उऱै सिट्रम्बलत्तु ऎङ्गळ्

ऐयनै अडियेन् मऱन्दु उय्वनो.


पाडल् ऎण् : 8

मुऴुदुम् वान्-उलगत्तु उळ तेवर्गळ्

तॊऴुदुम् पोट्रियुम् तूय सॆम्बॊन्निनाल्

ऎऴुदि मेय्न्द सिट्रम्बलक् कूत्तनै

इऴुदैयेन् मऱन्दु ऎङ्ङनम् उय्वनो.


पाडल् ऎण् : 9

कार् उलाम् मलर्क् कॊण्ड्रै-अम् तारनै,

वार् उलाम् मुलै मङ्गै मणाळनैत्,

तेर् उलाविय तिल्लैयुळ् कूत्तनै,

आर्गिला अमुदै मऱन्दु उय्वनो.


पाडल् ऎण् : 10

ओङ्गु माल् वरै एन्दल् उट्रान् सिरम्

वीङ्गि विम्मुऱ ऊण्ड्रिय ताळिनान्,

तेङ्गु नीर् वयल् सूऴ् तिल्लैक् कूत्तनैप्

पाङ्गु इलात् तॊण्डनेन् मऱन्दु उय्वनो.

================== ==========================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

--------------

తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 5.2 - కోయిల్ (తిల్లై / చిదంబరం) - ( తిరుక్కుఱుందొగై )

పాడల్ ఎణ్ : 1

పనైక్కై ముం-మద వేఴం ఉరిత్తవన్;

నినైప్పవర్ మనం కోయిలాక్ కొండవన్;

అనైత్తుం వేడం ఆం అంబలక్ కూత్తనైత్

తినైత్తనైప్ పొఴుదుం మఱందు ఉయ్వనో.


పాడల్ ఎణ్ : 2

తీర్త్తనైచ్, చివనైచ్, చివలోగనై,

మూర్త్తియై, ముదల్ ఆయ ఒరువనైప్,

పార్త్తనుక్కు అరుళ్ సెయ్ద సిట్రంబలక్

కూత్తనైక్ కొడియేన్ మఱందు ఉయ్వనో.


పాడల్ ఎణ్ : 3

కట్టుం పాంబుం కబాలం కై మాన్మఱి,

ఇట్టమాయ్ ఇడుగాట్టు ఎరి ఆడువాన్,

సిట్టర్ వాఴ్ తిల్లై అంబలక్ కూత్తనై

ఎళ్-తనైప్ పొఴుదుం మఱందు ఉయ్వనో.


పాడల్ ఎణ్ : 4

మాణి పాల్ కఱందు ఆట్టి వఴిబడ

నీణు-ఉలగు ఎలాం ఆళక్ కొడుత్త ఎన్

ఆణియైచ్, చెంబొన్ అంబలత్తుళ్ నిండ్ర

తాణువైత్ తమియేన్ మఱందు ఉయ్వనో.


పాడల్ ఎణ్ : 5

పిత్తనైప్, పెరుం కాడు అరంగా ఉడై

ముత్తనై, ముళై-వెణ్-మది సూడియైచ్,

చిత్తనైచ్, చెంబొన్ అంబలత్తుళ్ నిండ్ర

అత్తనై అడియేన్ మఱందు ఉయ్వనో.


పాడల్ ఎణ్ : 6

నీదియై, నిఱైవై, మఱై నాన్గు ఉడన్

ఓదియై, ఒరువర్క్కుం అఱివు ఒణాచ్

చోదియైచ్, చుడర్చ్ చెంబొనిన్ అంబలత్తు

ఆదియై అడియేన్ మఱందు ఉయ్వనో.


పాడల్ ఎణ్ : 7

మై-కొళ్ కండన్ ఎణ్-తోళన్, ముక్-కణ్ణినన్,

పై-కొళ్ పాంబు అరై ఆర్త్త పరమనార్,

సెయ్య-మాదు ఉఱై సిట్రంబలత్తు ఎంగళ్

ఐయనై అడియేన్ మఱందు ఉయ్వనో.


పాడల్ ఎణ్ : 8

ముఴుదుం వాన్-ఉలగత్తు ఉళ తేవర్గళ్

తొఴుదుం పోట్రియుం తూయ సెంబొన్నినాల్

ఎఴుది మేయ్న్ద సిట్రంబలక్ కూత్తనై

ఇఴుదైయేన్ మఱందు ఎఙ్ఙనం ఉయ్వనో.


పాడల్ ఎణ్ : 9

కార్ ఉలాం మలర్క్ కొండ్రై-అం తారనై,

వార్ ఉలాం ములై మంగై మణాళనైత్,

తేర్ ఉలావియ తిల్లైయుళ్ కూత్తనై,

ఆర్గిలా అముదై మఱందు ఉయ్వనో.


పాడల్ ఎణ్ : 10

ఓంగు మాల్ వరై ఏందల్ ఉట్రాన్ సిరం

వీంగి విమ్ముఱ ఊండ్రియ తాళినాన్,

తేంగు నీర్ వయల్ సూఴ్ తిల్లైక్ కూత్తనైప్

పాంగు ఇలాత్ తొండనేన్ మఱందు ఉయ్వనో.

=======

2 comments:

  1. I cannot express my gratitude to you in words sir!!! It is His Grace that brought me to this page!!!! Are there any ongoing classes now? I listen to them offline. I would love to join them live.

    ReplyDelete
    Replies
    1. Happy to hear your feedback.
      Please use the contact form (on top right side on this page) to send a direct message with your query.

      Delete