Sunday, July 12, 2015

6.1 - அரியானை - கோயில் (சிதம்பரம்) - பெரிய திருத்தாண்டகம் - Chidambaram

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.1 - பெரிய திருத்தாண்டகம் - கோயில் (தில்லை - சிதம்பரம்)

Thirunavukkarasar Thevaram - padhigam 6.1 - periya thiruth-thANdagam - kOyil (thillai - Chidambaram)

Verses - PDF: 6.1 - அரியானை - ariyānai


On YouTube:
Tamil: 

English:
=======================

(Verses in original Tamil version & word separated Tamil / Roman / Devanagari / Telugu scripts)


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.1 - பெரிய திருத்தாண்டகம் - கோயில் ( தில்லை - சிதம்பரம்)


கோயில் என்பது எல்லா ஆலயத்திற்கும் பொதுப்பெயர். அதுவே சிறப்புப் பெயராகக் குறிப்பிட்ட ஒரு தலத்தைக் குறிக்குமானால் அது அதனுடைய மிக்க உயர்வைக் குறிக்கும். அங்ஙனம் உயர்வுபற்றிய காரணத்தால் இத்தலம் கோயில் என்னும் பெயர் பெற்றது.


இத்தலத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள்:


(1) பெரும்பற்றப் புலியூர்: பெரும்பற்றினால் புலிப்பாதன் (வியாக்கிரபாதர்) பூசித்த ஊராதலால் இப்பெயர் பெற்றது. இது மரூஉ மொழி. மலையமான்நாடு மலாடு என்பதுபோல.


(2) சிதம்பரம்: (சித் + அம்பரம்) சித் = அறிவு, அம்பரம் = வெட்டவெளி. ஞானாகாசம் ஆதலால் இப்பெயர்பெற்றது.


(3) தில்லைவனம்: தில்லை என்னும் மரமடர்ந்த காடாயிருந்ததால் இப்பெயர் பெற்றது. இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.


Background:

திருநாவுக்கரசு சுவாமிகள் தில்லையிலிருந்து சென்று திருவேட்களம் திருக்கழிப்பாலை வணங்கி , மீண்டும் வந்து தில்லைக் கூத்தப் பெருமானைத் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 திருநா . புராணம் - 175.)


#1440 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 175

அரியானை யென்றெடுத்தே யடியவருக் கெளியானை யவர்தஞ் சிந்தை

பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந் தமிழ்பாடிப் பிறங்கு சோதி

விரியாநின் றெவ்வுலகும் விளங்கியபொன் னம்பலத்து மேவி யாடல்

புரியாநின் றவர்தம்மைப் பணிந்துதமி ழாற்பின்னும் போற்றல் செய்வார்,


இப்பதிகத்தின் சிறப்புப் பெயர் - பெரிய திருத்தாண்டகம்:

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=114&pno=4

தருமை ஆதீன உரையில் ஆறாம் திருமுறைக் கட்டுரையில் காணும் கருத்து:

பெரிய திருத்தாண்டகம்:

பெரிய திருத்தாண்டகம் என்பதற்கு "நெடுந்தாண்டகம்" என்பதையே இப்பெயரிட்டுக் குறித்துள்ளனர் என்று கொள்ளலாம். ஆறாம் திருமுறை முழுவதுமே நெடுந்தாண்டகமாகத்தான் அமைந்துள்ளது. மேலும் இப்பதிக முதல் பாடலில் "பெரியானை" என்றும், "பெரும்பற்றப் புலியூரானை" என்றும், பின்னர்ப், பெருமானை, பெருந்தகையை, பெருந்துணையை, பெரும்பொருளை, பெரும்பயனை, பேரொளியை என்றும் குறிக்கப்பெறுதலால் இப்பெயர் பெற்றதெனக் கொள்ளலாம். மேலும், உலகம் அனைத்திற்கும் சிவபெருமானே பெரியவன் ஆதலின், இங்ஙனம் குறிப்பிட்டுள்ளார் என்பதும் கொள்ளத்தகும்.

--------------

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.1 - பெரிய திருத்தாண்டகம் - கோயில் ( தில்லை - சிதம்பரம்)


பாடல் எண் : 1

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை

.. அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்

தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்

.. திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்

.. கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 2

கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்

.. காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை

.. ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே

மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை

.. வானவர்க ளெப்பொழுதும் வணங்கி ஏத்தப்

பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 3

கருமானின் உரியதளே உடையா வீக்கிக்

.. கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி

வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட

.. வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி

அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண

.. அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற

பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 4

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை

.. அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா

மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை

.. மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்

திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்

.. திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய

பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 5

அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்

.. அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி

வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு

.. வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்

பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்

.. பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்

பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 6

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்

.. கனவயிரக் குன்றனைய காட்சி யானை

அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை

.. அருமறையோ டாறங்க மாயி னானைச்

சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்

.. சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க

பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 7

வரும்பயனை எழுநரம்பி னோசை யானை

.. வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி

அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த

.. அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச்

சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்

.. துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்

பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 8

காரானை யீருரிவைப் போர்வை யானைக்

.. காமருபூங் கச்சியே கம்பன் தன்னை

ஆரேனும் அடியவர்கட் கணியான் தன்னை

.. அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்

பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்

.. பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்

பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 9

முற்றாத பால்மதியஞ் சூடி னானை

.. மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்

செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்

.. திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்

குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்

.. கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்

பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 10

காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்

.. கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம்

சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்

.. திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்

ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்

.. ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற

பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

.. பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.


============================= ============================



Word separated version:

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.1 - பெரிய திருத்தாண்டகம் - கோயில் ( தில்லை - சிதம்பரம்)

பாடல் எண் : 1

அரியானை, அந்தணர்தம் சிந்தையானை,

.. அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்

தெரியாத தத்துவனைத், தேனைப், பாலைத்,

.. திகழொளியைத், தேவர்கள்தம் கோனை, மற்றைக்

கரியானை, நான்முகனைக், கனலைக், காற்றைக்,

.. கனை-கடலைக் குலவரையைக் கலந்து நின்ற

பெரியானைப், பெரும்பற்றப் புலியூரானைப்

.. பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 2

கற்றானைக், கங்கை வார்-சடையான் தன்னைக்,

.. காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை,

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்-செய்வானை,

.. ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே;

மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை,

.. வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்

பெற்றானைப், பெரும்பற்றப் புலியூரானைப்

.. பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 3

கருமானின் உரி-அதளே உடையா வீக்கிக்,

.. கனை-கழல்கள் கலந்து ஒலிப்ப, அனல் கை ஏந்தி,

வரு-மானத் திரள்-தோள்கள் மட்டித்து ஆட,

.. வளர்-மதியம் சடைக்கு அணிந்து, மான் நேர் நோக்கி

அரு மான வாள் முகத்தாள் அமர்ந்து காண,

.. அமரர்-கணம் முடி வணங்க ஆடுகின்ற

பெருமானைப், பெரும்பற்றப் புலியூரானைப்

.. பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 4

அரும் தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை,

.. அமரர்கள்தம் பெருமானை, அரனை, மூவா

மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன் தன்னை,

.. மறி-கடலும் குல-வரையும் மண்ணும் விண்ணும்

திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும்

.. திரி-சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய

பெருந்தகையைப், பெரும்பற்றப் புலியூரானைப்

.. பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 5

அரும் துணையை, அடியார்தம் அல்லல் தீர்க்கும்

.. அரு-மருந்தை, அகன் ஞாலத்து அகத்துள் தோன்றி

வரும் துணையும், சுற்றமும் பற்றும் விட்டு

.. வான்-புலன்கள் அகத்து அடக்கி, மடவாரோடும்

பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றிப்,

.. பொது நீக்கித் தனை நினைய வல்லோர்க்கு என்றும்

பெரும் துணையைப், பெரும்பற்றப் புலியூரானைப்

.. பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 6

கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னைக்,

.. கன-வயிரக் குன்று அனைய காட்சியானை,

அரும்பு அமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை,

.. அரு-மறையோடு ஆறங்கம் ஆயினானைச்,

சுரும்பு அமரும் கடி-பொழில்கள் சூழ் தென் ஆரூர்ச்

.. சுடர்க்கொழுந்தைத், துளக்கு இல்லா விளக்கை, மிக்க

பெரும்பொருளைப், பெரும்பற்றப் புலியூரானைப்

.. பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 7

வரும் பயனை, எழு-நரம்பின் ஓசையானை,

.. வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி

அரும்பயஞ்செய் அவுணர்-புரம் எரியக் கோத்த

.. அம்மானை, அலை-கடல் நஞ்சு அயின்றான் தன்னைச்,

சுரும்பு அமரும் குழல்-மடவார் கடைக்கண் நோக்கில்

.. துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்

பெரும்பயனைப், பெரும்பற்றப் புலியூரானைப்

.. பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 8

கார் ஆனை ஈர்-உரிவைப் போர்வையானைக்,

.. காமரு பூங் கச்சி ஏகம்பன் தன்னை,

ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை,

.. அமரர்களுக்கு அறிவு-அரிய அளவு-இலானைப்,

பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்

.. பயில்கின்ற பரஞ்சுடரைப், பரனை, எண் இல்

பேரானைப், பெரும்பற்றப் புலியூரானைப்

.. பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 9

முற்றாத பால்-மதியம் சூடினானை,

.. மூ-உலகும் தான் ஆய முதல்வன் தன்னைச்,

செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தன்னைத்,

.. திகழ்-ஒளியை, மரகதத்தைத், தேனைப், பாலைக்,

குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன் தன்னைக்,

.. கூத்தாட வல்லானைக், கோனை, ஞானம்

பெற்றானைப், பெரும்பற்றப் புலியூரானைப்

.. பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 10

கார்-ஒளிய திருமேனிச் செங்கண் மாலும்

.. கடிக்-கமலத்து இருந்தவனும் காணா வண்ணம்,

சீர்-ஒளிய தழற்-பிழம்பாய் நின்ற தொல்லைத்

.. திகழ்-ஒளியைச், சிந்தைதனை மயக்கம் தீர்க்கும்

ஏர்-ஒளியை, இரு-நிலனும் விசும்பும் விண்ணும்

.. ஏழ்-உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற

பேர்-ஒளியைப், பெரும்பற்றப் புலியூரானைப்

.. பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

================== ==========================



Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

tirunāvukkarasar tēvāram - padigam 6.1 - periya tiruttāṇḍagam - kōyil ( tillai - cidambaram)

pāḍal eṇ : 1

ariyānai, andaṇardam sindaiyānai,

.. arumaṟaiyin agattānai, aṇuvai, yārkkum

teriyāda tattuvanait, tēnaip, pālait,

.. tigaḻoḷiyait, dēvargaḷdam kōnai, maṭraik

kariyānai, nānmuganaik, kanalaik, kāṭraik,

.. kanai-kaḍalaik kulavaraiyaik kalandu niṇḍra

periyānaip, perumbaṭrap puliyūrānaip

.. pēsāda nāḷ ellām piṟavā nāḷē.


pāḍal eṇ : 2

kaṭrānaik, gaṅgai vār-saḍaiyān tannaik,

.. kāviri sūḻ valañjuḻiyum karudinānai,

aṭrārkkum alandārkkum aruḷ-seyvānai,

.. ārūrum puguvānai, aṟindōm aṇḍrē;

maṭru ārum tan oppār illādānai,

.. vānavargaḷ eppoḻudum vaṇaṅgi ēttap

peṭrānaip, perumbaṭrap puliyūrānaip

.. pēsāda nāḷ ellām piṟavā nāḷē.


pāḍal eṇ : 3

karumānin uri-adaḷē uḍaiyā vīkkik,

.. kanai-kaḻalgaḷ kalandu olippa, anal kai ēndi,

varu-mānat tiraḷ-tōḷgaḷ maṭṭittu āḍa,

.. vaḷar-madiyam saḍaikku aṇindu, mān nēr nōkki

aru māna vāḷ mugattāḷ amarndu kāṇa,

.. amarar-gaṇam muḍi vaṇaṅga āḍugiṇḍra

perumānaip, perumbaṭrap puliyūrānaip

.. pēsāda nāḷ ellām piṟavā nāḷē.


pāḍal eṇ : 4

arum tavargaḷ toḻudu ēttum appan tannai,

.. amarargaḷdam perumānai, aranai, mūvā

marundu amararkku aruḷburinda maindan tannai,

.. maṟi-kaḍalum kula-varaiyum maṇṇum viṇṇum

tirundu oḷiya tāragaiyum tisaigaḷ eṭṭum

.. tiri-suḍargaḷ ōr iraṇḍum piṟavum āya

perundagaiyaip, perumbaṭrap puliyūrānaip

.. pēsāda nāḷ ellām piṟavā nāḷē.


pāḍal eṇ : 5

arum tuṇaiyai, aḍiyārdam allal tīrkkum

.. aru-marundai, agan ñālattu agattuḷ tōṇḍri

varum tuṇaiyum, suṭramum paṭrum viṭṭu

.. vān-pulangaḷ agattu aḍakki, maḍavārōḍum

porundu aṇaimēl varum payanaip pōga māṭrip,

.. podu nīkkit tanai ninaiya vallōrkku eṇḍrum

perum tuṇaiyaip, perumbaṭrap puliyūrānaip

.. pēsāda nāḷ ellām piṟavā nāḷē.


pāḍal eṇ : 6

karumbu amarum moḻi maḍavāḷ paṅgan tannaik,

.. kana-vayirak kuṇḍru anaiya kāṭciyānai,

arumbu amarum pūṅgoṇḍrait tārān tannai,

.. aru-maṟaiyōḍu āṟaṅgam āyinānaic,

curumbu amarum kaḍi-poḻilgaḷ sūḻ ten ārūrc

.. suḍarkkoḻundait, tuḷakku illā viḷakkai, mikka

perumboruḷaip, perumbaṭrap puliyūrānaip

.. pēsāda nāḷ ellām piṟavā nāḷē.


pāḍal eṇ : 7

varum payanai, eḻu-narambin ōsaiyānai,

.. varai silaiyā vānavargaḷ muyaṇḍra vāḷi

arumbayañjey avuṇar-puram eriyak kōtta

.. ammānai, alai-kaḍal nañju ayiṇḍrān tannaic,

curumbu amarum kuḻal-maḍavār kaḍaikkaṇ nōkkil

.. tuḷaṅgāda sindaiyarāyt tuṟandōr uḷḷap

perumbayanaip, perumbaṭrap puliyūrānaip

.. pēsāda nāḷ ellām piṟavā nāḷē.


pāḍal eṇ : 8

kār ānai īr-urivaip pōrvaiyānaik,

.. kāmaru pūṅ gacci ēgamban tannai,

ārēnum aḍiyavargaṭku aṇiyān tannai,

.. amarargaḷukku aṟivu-ariya aḷavu-ilānaip,

pārōrum viṇṇōrum paṇiya naṭṭam

.. payilgiṇḍra parañjuḍaraip, paranai, eṇ il

pērānaip, perumbaṭrap puliyūrānaip

.. pēsāda nāḷ ellām piṟavā nāḷē.


pāḍal eṇ : 9

muṭrāda pāl-madiyam sūḍinānai,

.. mū-ulagum tān āya mudalvan tannaic,

ceṭrārgaḷ puram mūṇḍrum seṭrān tannait,

.. tigaḻ-oḷiyai, maragadattait, tēnaip, pālaik,

kuṭrālattu amarndu uṟaiyum kuḻagan tannaik,

.. kūttāḍa vallānaik, kōnai, ñānam

peṭrānaip, perumbaṭrap puliyūrānaip

.. pēsāda nāḷ ellām piṟavā nāḷē.


pāḍal eṇ : 10

kār-oḷiya tirumēnic ceṅgaṇ mālum

.. kaḍik-kamalattu irundavanum kāṇā vaṇṇam,

sīr-oḷiya taḻaṟ-piḻambāy niṇḍra tollait

.. tigaḻ-oḷiyaic, cindaidanai mayakkam tīrkkum

ēr-oḷiyai, iru-nilanum visumbum viṇṇum

.. ēḻ-ulagum kaḍandu aṇḍattu appāl niṇḍra

pēr-oḷiyaip, perumbaṭrap puliyūrānaip

.. pēsāda nāḷ ellām piṟavā nāḷē.

================== ==========================


Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 6.1 - पॆरिय तिरुत्ताण्डगम् - कोयिल् ( तिल्लै - चिदम्बरम्)

पाडल् ऎण् : 1

अरियानै, अन्दणर्दम् सिन्दैयानै,

.. अरुमऱैयिन् अगत्तानै, अणुवै, यार्क्कुम्

तॆरियाद तत्तुवनैत्, तेनैप्, पालैत्,

.. तिगऴॊळियैत्, देवर्गळ्दम् कोनै, मट्रैक्

करियानै, नान्मुगनैक्, कनलैक्, काट्रैक्,

.. कनै-कडलैक् कुलवरैयैक् कलन्दु निण्ड्र

पॆरियानैप्, पॆरुम्बट्रप् पुलियूरानैप्

.. पेसाद नाळ् ऎल्लाम् पिऱवा नाळे.


पाडल् ऎण् : 2

कट्रानैक्, गङ्गै वार्-सडैयान् तन्नैक्,

.. काविरि सूऴ् वलञ्जुऴियुम् करुदिनानै,

अट्रार्क्कुम् अलन्दार्क्कुम् अरुळ्-सॆय्वानै,

.. आरूरुम् पुगुवानै, अऱिन्दोम् अण्ड्रे;

मट्रु आरुम् तन् ऒप्पार् इल्लादानै,

.. वानवर्गळ् ऎप्पॊऴुदुम् वणङ्गि एत्तप्

पॆट्रानैप्, पॆरुम्बट्रप् पुलियूरानैप्

.. पेसाद नाळ् ऎल्लाम् पिऱवा नाळे.


पाडल् ऎण् : 3

करुमानिन् उरि-अदळे उडैया वीक्किक्,

.. कनै-कऴल्गळ् कलन्दु ऒलिप्प, अनल् कै एन्दि,

वरु-मानत् तिरळ्-तोळ्गळ् मट्टित्तु आड,

.. वळर्-मदियम् सडैक्कु अणिन्दु, मान् नेर् नोक्कि

अरु मान वाळ् मुगत्ताळ् अमर्न्दु काण,

.. अमरर्-गणम् मुडि वणङ्ग आडुगिण्ड्र

पॆरुमानैप्, पॆरुम्बट्रप् पुलियूरानैप्

.. पेसाद नाळ् ऎल्लाम् पिऱवा नाळे.


पाडल् ऎण् : 4

अरुम् तवर्गळ् तॊऴुदु एत्तुम् अप्पन् तन्नै,

.. अमरर्गळ्दम् पॆरुमानै, अरनै, मूवा

मरुन्दु अमरर्क्कु अरुळ्बुरिन्द मैन्दन् तन्नै,

.. मऱि-कडलुम् कुल-वरैयुम् मण्णुम् विण्णुम्

तिरुन्दु ऒळिय तारगैयुम् तिसैगळ् ऎट्टुम्

.. तिरि-सुडर्गळ् ओर् इरण्डुम् पिऱवुम् आय

पॆरुन्दगैयैप्, पॆरुम्बट्रप् पुलियूरानैप्

.. पेसाद नाळ् ऎल्लाम् पिऱवा नाळे.


पाडल् ऎण् : 5

अरुम् तुणैयै, अडियार्दम् अल्लल् तीर्क्कुम्

.. अरु-मरुन्दै, अगन् ञालत्तु अगत्तुळ् तोण्ड्रि

वरुम् तुणैयुम्, सुट्रमुम् पट्रुम् विट्टु

.. वान्-पुलन्गळ् अगत्तु अडक्कि, मडवारोडुम्

पॊरुन्दु अणैमेल् वरुम् पयनैप् पोग माट्रिप्,

.. पॊदु नीक्कित् तनै निनैय वल्लोर्क्कु ऎण्ड्रुम्

पॆरुम् तुणैयैप्, पॆरुम्बट्रप् पुलियूरानैप्

.. पेसाद नाळ् ऎल्लाम् पिऱवा नाळे.


पाडल् ऎण् : 6

करुम्बु अमरुम् मॊऴि मडवाळ् पङ्गन् तन्नैक्,

.. कन-वयिरक् कुण्ड्रु अनैय काट्चियानै,

अरुम्बु अमरुम् पूङ्गॊण्ड्रैत् तारान् तन्नै,

.. अरु-मऱैयोडु आऱङ्गम् आयिनानैच्,

चुरुम्बु अमरुम् कडि-पॊऴिल्गळ् सूऴ् तॆन् आरूर्च्

.. सुडर्क्कॊऴुन्दैत्, तुळक्कु इल्ला विळक्कै, मिक्क

पॆरुम्बॊरुळैप्, पॆरुम्बट्रप् पुलियूरानैप्

.. पेसाद नाळ् ऎल्लाम् पिऱवा नाळे.


पाडल् ऎण् : 7

वरुम् पयनै, ऎऴु-नरम्बिन् ओसैयानै,

.. वरै सिलैया वानवर्गळ् मुयण्ड्र वाळि

अरुम्बयञ्जॆय् अवुणर्-पुरम् ऎरियक् कोत्त

.. अम्मानै, अलै-कडल् नञ्जु अयिण्ड्रान् तन्नैच्,

चुरुम्बु अमरुम् कुऴल्-मडवार् कडैक्कण् नोक्किल्

.. तुळङ्गाद सिन्दैयराय्त् तुऱन्दोर् उळ्ळप्

पॆरुम्बयनैप्, पॆरुम्बट्रप् पुलियूरानैप्

.. पेसाद नाळ् ऎल्लाम् पिऱवा नाळे.


पाडल् ऎण् : 8

कार् आनै ईर्-उरिवैप् पोर्वैयानैक्,

.. कामरु पूङ् गच्चि एगम्बन् तन्नै,

आरेनुम् अडियवर्गट्कु अणियान् तन्नै,

.. अमरर्गळुक्कु अऱिवु-अरिय अळवु-इलानैप्,

पारोरुम् विण्णोरुम् पणिय नट्टम्

.. पयिल्गिण्ड्र परञ्जुडरैप्, परनै, ऎण् इल्

पेरानैप्, पॆरुम्बट्रप् पुलियूरानैप्

.. पेसाद नाळ् ऎल्लाम् पिऱवा नाळे.


पाडल् ऎण् : 9

मुट्राद पाल्-मदियम् सूडिनानै,

.. मू-उलगुम् तान् आय मुदल्वन् तन्नैच्,

चॆट्रार्गळ् पुरम् मूण्ड्रुम् सॆट्रान् तन्नैत्,

.. तिगऴ्-ऒळियै, मरगदत्तैत्, तेनैप्, पालैक्,

कुट्रालत्तु अमर्न्दु उऱैयुम् कुऴगन् तन्नैक्,

.. कूत्ताड वल्लानैक्, कोनै, ञानम्

पॆट्रानैप्, पॆरुम्बट्रप् पुलियूरानैप्

.. पेसाद नाळ् ऎल्लाम् पिऱवा नाळे.


पाडल् ऎण् : 10

कार्-ऒळिय तिरुमेनिच् चॆङ्गण् मालुम्

.. कडिक्-कमलत्तु इरुन्दवनुम् काणा वण्णम्,

सीर्-ऒळिय तऴऱ्‌-पिऴम्बाय् निण्ड्र तॊल्लैत्

.. तिगऴ्-ऒळियैच्, चिन्दैदनै मयक्कम् तीर्क्कुम्

एर्-ऒळियै, इरु-निलनुम् विसुम्बुम् विण्णुम्

.. एऴ्-उलगुम् कडन्दु अण्डत्तु अप्पाल् निण्ड्र

पेर्-ऒळियैप्, पॆरुम्बट्रप् पुलियूरानैप्

.. पेसाद नाळ् ऎल्लाम् पिऱवा नाळे.

================== ==========================


Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 6.1 - పెరియ తిరుత్తాండగం - కోయిల్ ( తిల్లై - చిదంబరం)

పాడల్ ఎణ్ : 1

అరియానై, అందణర్దం సిందైయానై,

.. అరుమఱైయిన్ అగత్తానై, అణువై, యార్క్కుం

తెరియాద తత్తువనైత్, తేనైప్, పాలైత్,

.. తిగఴొళియైత్, దేవర్గళ్దం కోనై, మట్రైక్

కరియానై, నాన్ముగనైక్, కనలైక్, కాట్రైక్,

.. కనై-కడలైక్ కులవరైయైక్ కలందు నిండ్ర

పెరియానైప్, పెరుంబట్రప్ పులియూరానైప్

.. పేసాద నాళ్ ఎల్లాం పిఱవా నాళే.


పాడల్ ఎణ్ : 2

కట్రానైక్, గంగై వార్-సడైయాన్ తన్నైక్,

.. కావిరి సూఴ్ వలంజుఴియుం కరుదినానై,

అట్రార్క్కుం అలందార్క్కుం అరుళ్-సెయ్వానై,

.. ఆరూరుం పుగువానై, అఱిందోం అండ్రే;

మట్రు ఆరుం తన్ ఒప్పార్ ఇల్లాదానై,

.. వానవర్గళ్ ఎప్పొఴుదుం వణంగి ఏత్తప్

పెట్రానైప్, పెరుంబట్రప్ పులియూరానైప్

.. పేసాద నాళ్ ఎల్లాం పిఱవా నాళే.


పాడల్ ఎణ్ : 3

కరుమానిన్ ఉరి-అదళే ఉడైయా వీక్కిక్,

.. కనై-కఴల్గళ్ కలందు ఒలిప్ప, అనల్ కై ఏంది,

వరు-మానత్ తిరళ్-తోళ్గళ్ మట్టిత్తు ఆడ,

.. వళర్-మదియం సడైక్కు అణిందు, మాన్ నేర్ నోక్కి

అరు మాన వాళ్ ముగత్తాళ్ అమర్న్దు కాణ,

.. అమరర్-గణం ముడి వణంగ ఆడుగిండ్ర

పెరుమానైప్, పెరుంబట్రప్ పులియూరానైప్

.. పేసాద నాళ్ ఎల్లాం పిఱవా నాళే.


పాడల్ ఎణ్ : 4

అరుం తవర్గళ్ తొఴుదు ఏత్తుం అప్పన్ తన్నై,

.. అమరర్గళ్దం పెరుమానై, అరనై, మూవా

మరుందు అమరర్క్కు అరుళ్బురింద మైందన్ తన్నై,

.. మఱి-కడలుం కుల-వరైయుం మణ్ణుం విణ్ణుం

తిరుందు ఒళియ తారగైయుం తిసైగళ్ ఎట్టుం

.. తిరి-సుడర్గళ్ ఓర్ ఇరండుం పిఱవుం ఆయ

పెరుందగైయైప్, పెరుంబట్రప్ పులియూరానైప్

.. పేసాద నాళ్ ఎల్లాం పిఱవా నాళే.


పాడల్ ఎణ్ : 5

అరుం తుణైయై, అడియార్దం అల్లల్ తీర్క్కుం

.. అరు-మరుందై, అగన్ ఞాలత్తు అగత్తుళ్ తోండ్రి

వరుం తుణైయుం, సుట్రముం పట్రుం విట్టు

.. వాన్-పులన్గళ్ అగత్తు అడక్కి, మడవారోడుం

పొరుందు అణైమేల్ వరుం పయనైప్ పోగ మాట్రిప్,

.. పొదు నీక్కిత్ తనై నినైయ వల్లోర్క్కు ఎండ్రుం

పెరుం తుణైయైప్, పెరుంబట్రప్ పులియూరానైప్

.. పేసాద నాళ్ ఎల్లాం పిఱవా నాళే.


పాడల్ ఎణ్ : 6

కరుంబు అమరుం మొఴి మడవాళ్ పంగన్ తన్నైక్,

.. కన-వయిరక్ కుండ్రు అనైయ కాట్చియానై,

అరుంబు అమరుం పూంగొండ్రైత్ తారాన్ తన్నై,

.. అరు-మఱైయోడు ఆఱంగం ఆయినానైచ్,

చురుంబు అమరుం కడి-పొఴిల్గళ్ సూఴ్ తెన్ ఆరూర్చ్

.. సుడర్క్కొఴుందైత్, తుళక్కు ఇల్లా విళక్కై, మిక్క

పెరుంబొరుళైప్, పెరుంబట్రప్ పులియూరానైప్

.. పేసాద నాళ్ ఎల్లాం పిఱవా నాళే.


పాడల్ ఎణ్ : 7

వరుం పయనై, ఎఴు-నరంబిన్ ఓసైయానై,

.. వరై సిలైయా వానవర్గళ్ ముయండ్ర వాళి

అరుంబయంజెయ్ అవుణర్-పురం ఎరియక్ కోత్త

.. అమ్మానై, అలై-కడల్ నంజు అయిండ్రాన్ తన్నైచ్,

చురుంబు అమరుం కుఴల్-మడవార్ కడైక్కణ్ నోక్కిల్

.. తుళంగాద సిందైయరాయ్త్ తుఱందోర్ ఉళ్ళప్

పెరుంబయనైప్, పెరుంబట్రప్ పులియూరానైప్

.. పేసాద నాళ్ ఎల్లాం పిఱవా నాళే.


పాడల్ ఎణ్ : 8

కార్ ఆనై ఈర్-ఉరివైప్ పోర్వైయానైక్,

.. కామరు పూఙ్ గచ్చి ఏగంబన్ తన్నై,

ఆరేనుం అడియవర్గట్కు అణియాన్ తన్నై,

.. అమరర్గళుక్కు అఱివు-అరియ అళవు-ఇలానైప్,

పారోరుం విణ్ణోరుం పణియ నట్టం

.. పయిల్గిండ్ర పరంజుడరైప్, పరనై, ఎణ్ ఇల్

పేరానైప్, పెరుంబట్రప్ పులియూరానైప్

.. పేసాద నాళ్ ఎల్లాం పిఱవా నాళే.


పాడల్ ఎణ్ : 9

ముట్రాద పాల్-మదియం సూడినానై,

.. మూ-ఉలగుం తాన్ ఆయ ముదల్వన్ తన్నైచ్,

చెట్రార్గళ్ పురం మూండ్రుం సెట్రాన్ తన్నైత్,

.. తిగఴ్-ఒళియై, మరగదత్తైత్, తేనైప్, పాలైక్,

కుట్రాలత్తు అమర్న్దు ఉఱైయుం కుఴగన్ తన్నైక్,

.. కూత్తాడ వల్లానైక్, కోనై, ఞానం

పెట్రానైప్, పెరుంబట్రప్ పులియూరానైప్

.. పేసాద నాళ్ ఎల్లాం పిఱవా నాళే.


పాడల్ ఎణ్ : 10

కార్-ఒళియ తిరుమేనిచ్ చెంగణ్ మాలుం

.. కడిక్-కమలత్తు ఇరుందవనుం కాణా వణ్ణం,

సీర్-ఒళియ తఴఱ్-పిఴంబాయ్ నిండ్ర తొల్లైత్

.. తిగఴ్-ఒళియైచ్, చిందైదనై మయక్కం తీర్క్కుం

ఏర్-ఒళియై, ఇరు-నిలనుం విసుంబుం విణ్ణుం

.. ఏఴ్-ఉలగుం కడందు అండత్తు అప్పాల్ నిండ్ర

పేర్-ఒళియైప్, పెరుంబట్రప్ పులియూరానైప్

.. పేసాద నాళ్ ఎల్లాం పిఱవా నాళే.

================== ==========================

No comments:

Post a Comment