Friday, January 1, 2016

8.7 - திருவெம்பாவை - thiruvembAvai

24) padhigam 8.7 - திருவெம்பாவை - thiruvembAvai
8.7 - திருவெம்பாவை - ஆதியும் அந்தமும் இல்லா
Verses - available in several scripts here: http://sivasthothram.blogspot.com
The direct links to the verse files are:


English translation of ThiruvembAvai:

ThiruvembAvai - my translation: https://drive.google.com/open?id=1EzjFHnuGETXgyayadiFOhbLmAznTS-F2

thiruvembavai - translation - By G.Vanmikanathan: http://www.arunachalasamudra.org/thiruvempavai.html

--------

Thiruvembavai - Telugu translation - Dr. Kallakuri Sailaja

తిరువెంబావై (తిరువెంపావై) - Dr. కాళ్ళకూరి శైలజ :

https://drive.google.com/file/d/1okP-VzV6MQBUdfrdVuwFdBl5YhRTveuW/view?usp=sharing

******************
The discussion is also available on YouTube:
Tamil:
Part-1: https://youtu.be/WxTK0tyO3r0
Part-2: https://youtu.be/EqJ6UF3Z2Ws
Part-3: https://youtu.be/0nNgRxw2cdU
Part-4: https://youtu.be/GyXPQd2KKyw

English:

Part-1: songs 01-03: https://youtu.be/I28e3F1OPDg
Part-2: songs 04-06: https://youtu.be/j2zkg0RqqLc
Part-3: songs 07-09: https://youtu.be/YtK40rVezzw
Part-4: songs 10-12: https://youtu.be/RLHHWfkhb_0
Part-5: songs 13-16: https://youtu.be/Vwcy2pHb9N4
Part-6: songs 17-20: https://youtu.be/pHEFIngmkIY


******************
thiruvembAvai - rendered by Tiruththani Swaminathan: திருவெம்பாவை - திருத்தணி சுவாமிநாதன் குரலில் : http://www.shaivam.org/gallery/audio/thiruthani-swaminathan/thiruvasagam/tis-tns-tvsgm-07-thiruvempavai.mp3 

8.7 - thiruvembAvai - rendered by Mylapore Odhuvar Sathgurunathan : திருவெம்பாவை - மயிலாப்பூர் ஓதுவார் சற்குருநாதன் குரலில் : http://www.shaivam.org/gallery/audio/satguru/thiruvasagam/tis-sat-tvkm1-16-thiruvembavai.mp3

V. Subramanian

==================== ===============
பதிகம் 8.7 - திருவெம்பாவை

Intro info:
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் 7-ஆம் பதிகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது திருவெம்பாவை.
"எம்பாவாய்" என்று முடிகின்ற பாடல்களை உடையதால், இப்பாடல் தொகுதிக்குத், `திருஎம்பாவை` என்பது பெயர் ஆயிற்று.
--------------

8.07 - திருவாசகம் - திருவெம்பாவை
("வெண்டளையால் வந்த எட்டடித் தரவுக் கொச்சகக் கலிப்பா")

1.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை, யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே, வளருதியோ வன் செவியோ நின் செவிதான்,
மாதேவன் வார்-கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்,
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து,
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு, இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள், என்னே என்னே,
ஈதே ம் தோழி பரிசு, ஏலோர் எம்பாவாய்.

2.
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது, இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய், நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ, விளையாடி
ஏசும் இடம் ஈதோ, விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்,
தேசன் சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆர், ஏலோர் எம்பாவாய்.

3.
முத்தன்ன வெண்ணகையாய், முன் வந்து எதிர் எழுந்து, என்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று, அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்,
பத்துடையீர், ஈசன் பழ அடியீர், பாங்குடையீர்,
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ,
எத்தோ நின் அன்புடைமை, எல்லோம் அறியோமோ,
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை,
இத்தனையும் வேண்டும் எமக்கு, ஏலோர் எம்பாவாய்.

4.
ஒள் நித்தில நகையாய், இன்னம் புலர்ந்தின்றோ,
வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ,
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம், அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே,
விண்ணுக்கு ஒரு மருந்தை, வேத விழுப்பொருளைக்,
கண்ணுக்கு இனியானைப், பாடிக் கசிந்து உள்ளம்
உள் நெக்கு நின்று உருக, யாம் மாட்டோம், நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில், ஏலோர் எம்பாவாய்.

5.
மால் அறியா நான்முகனும் காணா மலையினை, நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்,
பால் ஊறு தேன்வாய்ப் படிறீ, கடை திறவாய்,
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும், நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச், சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய், உணராய் காண்,
ஏலக் குழலி பரிசு, ஏலோர் எம்பாவாய்.


6.
மானே, நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும், நாணாமே
போன திசை பகராய், இன்னம் புலர்ந்தின்றோ,
வானே நிலனே பிறவே அறிவரியான்,
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்,
வான் வார்கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்,
ஊனே உருகாய், உனக்கே உறும், எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடு, ஏலோர் எம்பாவாய்.

7.
அன்னே, இவையும் சிலவோ, பல அமரர்
உன்னற்கு அரியான், ஒருவன், இருஞ்சீரான்,
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்,
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்,
என்னானை என்னரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய், இன்னம் துயிலுதியோ,
வன்னெஞ்சப் பேதையர்-போல் வாளா கிடத்தியால்,
என்னே துயிலின் பரிசு, ஏலோர் எம்பாவாய்.

8.
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்,
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்,
கேழில் பரஞ்சோதி, கேழில் பரங்கருணை,
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ,
வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்,
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ,
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடு, ஏலோர் எம்பாவாய்.


9.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே,
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே,
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்,
உன் அடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம்,
அன்னவரே எம் கணவர் ஆவார், அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்,
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்,
என்ன குறையும் இலோம், ஏலோர் எம்பாவாய்.

10.
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்,
போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே,
பேதை ஒரு பால், திருமேனி ஒன்று அல்லன்,
வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன், தொண்டர் உளன்,
கோதில் குலத்து அரன்தன் கோயிற் பிணாப் பிள்ளைகாள்,
ஏது அவன் ஊர், ஏது அவன் பேர், ஆர் உற்றார் ஆர் அயலார்,
ஏது அவனைப் பாடும் பரிசு, ஏலோர் எம்பாவாய்.

11.
மொய்யார் தடம் பொய்கை புக்கு, முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி,
ஐயா, வழி அடியோம் வாழ்ந்தோம் காண், ஆர் அழல்போல்
செய்யா, வெண்ணீறாடீ, செல்வா, சிறு மருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா,
ஐயா, நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்,
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்,
எய்யாமற் காப்பாய் எமை, ஏலோர் எம்பாவாய்.


12.
ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன், நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன், இவ்வானும் குவலயமும் எல்லோமும்,
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி,
வார்த்தையும் பேசி, வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய, அணி குழல் மேல் வண்டார்ப்பப்,
பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொற்பாதம்
ஏத்தி, இருஞ்சுனை நீர் ஆடு, ஏலோர் எம்பாவாய்.

13.
பைங்குவளைக் கார் மலரால், செங்கமலப் பைம்போதால்,
அங்கம் குருகினத்தால், பின்னும் அரவத்தால்,
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த,
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து, நம்
சங்கம் சிலம்பச், சிலம்பு கலந்து ஆர்ப்பக்,
கொங்கைகள் பொங்கக், குடையும் புனல் பொங்கப்,
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.

14.
காதார் குழை ஆடப், பைம்பூண் கலன் ஆடக்,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச்,
சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப்பொருள் ஆமா பாடிச்,
சோதி திறம் பாடிச், சூழ்-கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை-தன்
பாதத் திறம் பாடி ஆடு, ஏலோர் எம்பாவாய்.


15.
ஓர் ஒரு-கால் எம்பெருமான் என்றென்றே, நம்பெருமான்
சீர் ஒரு-கால் வாய் ஓவாள், சித்தம் களி கூர
நீர் ஒரு-கால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்,
பார் ஒரு-கால் வந்தனையாள், விண்ணோரைத் தான் பணியாள்,
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆமாறும்,
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்,
வார் உருவப் பூண்முலையீர், வாயார நாம் பாடி,
ஏர் உருவப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.

16.
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து, உடையாள்
என்னத் திகழ்ந்து, எம்மை ஆள் உடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து, எம் பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பிற் சிலம்பித், திருப்புருவம்
என்னச் சிலை குலவி, நந்தம்மை ஆள் உடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு(ம்),
முன்னி, அவள் நமக்கு(ம்) முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை, ஏலோர் எம்பாவாய்.

17.
செங்கணவன்-பால் திசைமுகன்-பால் தேவர்கள்-பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக்,
கொங்கு உண் கருங்குழலி, நந்தம்மைக் கோதாட்டி,
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்,
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை,
அங்கண் அரசை, அடியோங்கட்கு ஆரமுதை,
நங்கள் பெருமானைப் பாடி, நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


18.
அண்ணாமலையான் அடிக்-கமலம் சென்று இறைஞ்சும்,
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்,
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்,
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்,
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப், பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி, இத்தனையும் வேறாகிக்,
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்,
பெண்ணே, இப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.

19.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று,
அங்கு அப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்,
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்,
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க,
எம் கை உனக்கு அல்லாது எப் பணியும் செய்யற்க,
கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க,
இங்கு இப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்,
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு, ஏலோர் எம்பாவாய்.

20.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர்,
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்,
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்,
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்,
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்,
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்,
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்,
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு, ஏலோர் எம்பாவாய்.

============================= ============================

No comments:

Post a Comment