1.80 - கற்றாங்கு எரி ஓம்பி
1.80 - katRAngu eri Ombi
Verses - PDF: 1.80 - கற்றாங்கெரி - kaṭrāṅgeri
1.80 - katRAngu eri Ombi - word by word meaning - English translation: https://drive.google.com/open?id=1ZrQVB9ZdfCYW3bHdQXB1bc7GWHNgwCq9
On YouTube:
Discussion in Tamil:
Discussion in English:
Part-1: https://youtu.be/Qqt39Wf4S4s
Part-2: https://youtu.be/4-lVnuY1J3c
Part-3: https://youtu.be/ofqGocaS4jU
****
For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_080.HTM
V. Subramanian
==================== ===============
Verses in original Tamil version & word separated Tamil / English / Devanagari / Telugu scripts
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) ( பண் : குறிஞ்சி )
Background:
சீகாழியினின்றும் புகலிவேந்தர், அடியார்களும், திருநீல கண்ட யாழ்ப்பாணரும் சிவபாத இருதயரும் உடன்வரத் தில்லை செல்லத் திருவுளங்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் கொள்ளிடத்தைக் கடந்தார்கள். தில்லையின் தெற்குவீதி அணுகினார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் சிரபுரப் பிள்ளையாரை எதிர்கொண்டு அழைக்க, நகரை அலங்கரித்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்ப்புறத்தே வந்து, அழைத்துச் சென்றனர். பிள்ளையார் திருவீதியைத் தொழுதனர். எழுநிலைக் கோபுரத்தையும் வணங்கினர். திருமுன்றில் திருமாளிகையையும் வலம்வந்து வணங்கிக்கொண்டு உட்புகுந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சிந்தையில் ஆர்வம் பெருகிற்று. கண்கள் ஆனந்த பாஷ்பம் பொழிந்தன. செங்கை சிரம் மீது ஏறிக் குவிந்தது. இவ்வாறு உருகிய அன்பினராய் உட்புகுந்தார். இறைவன் தமக்களித்த சிவஞானமே ஆன திருஅம்பலத்தையும், அந்த ஞானத்தால் விளைந்த ஆனந்தமாகிய கூத்தப் பெருமானையும் கண்ணாரக் கண்டு கும்பிட்டார். ஆனந்தக் கூத்தருக்கு உரிமையான தனிச் சிறப்பினையுடைய தில்லைவாழ் அந்தணரை முன் வைத்து, "கற்றாங் கெரி யோம்பி" என்னும் இப்பதிகத்தை ஏழிசையும் ஓங்க எடுத்தார். திருக்கடைக்காப்பும் முடித்து, ஊனையும் உயிரையும் உருக்கும் ஒப்பற்ற கூத்தை வெட்டவெளியிற் கண்டு திளைத்துச், சிவானந்தப் பேறமுதுண்ட பிள்ளையார் ஆனந்தமேலீட்டால் அழுதார்.
கோயில் (சிதம்பரம்) - தலச்சிறப்பு :
http://www.tamilvu.org/stream/culgal/html/cg100/cg102/html/cg102t0551.htm
சோழ நாட்டு (வடகரை)த் தலம்.
‘கோயில்’ என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம். இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.
இக்கோயிலுள் 1. சிற்றம்பலம் 2. பொன்னம்பலம் 3. பேரம்பலம் 4. நிருத்தசபை 5. இராசசபை என ஐந்து பெருமன்றங்கள் உள்ளன.
சிற்றம்பலம்: நடராசப் பெருமான் திருநடம்புரிந்தருளும் இடம்.
பொன்னம்பலம் (கனகசபை): நடராசப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். சிற்றம்பலத்திற்கு முன்னால் உள்ள பகுதி.
பேரம்பலம் : இது தேவசபை எனப்படும். .... இங்குத்தான் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர்.
நிருத்த சபை : நடராசப் பெருமானின் கொடிமரத்துக்கு (துவஜஸ்தம்பத்திற்கு)த் தென்பால் உள்ளது. ஊர்த்துவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே.
இராச சபை : இஃது ஆயிரக்கால் மண்டபமாகும்.
--------
தில்லை - தில்லைமரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்ற யெர் பெற்றது.
சிதம்பரம் = சித் + அம்பரம் = (அறிவு - வெட்டவெளி) = ஞானாகாசம்.
பெரும் பற்றப் புலியூர் - புலிக்கால் முனிவர் (வியாக்கிர பாதர்) பூசித்தமையால் இது புலியூர் எனப்பெற்றது. மாமுனிவர்களுக்குப் பெரிய பற்றுக்கோடாய் உள்ளதாதலின் - பெரும்பற்றப்புலியூர் என்பர்.
இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.
----------
#2060 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 162
ஊழி முதல்வர்க் குரிமைத் தொழிற்சிறப்பால்
வாழிதிருத் தில்லைவா ழந்தணரை முன்வைத்தே,
யேழிசையு மோங்க வெடுத்தா ரெமையாளுங்
காழியர்தங் காவலனார் "கற்றாங் கெரியோம்பி"
--------------
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) ( பண் : குறிஞ்சி )
("தானா தனதானா தானா தனதானா" - என்ற சந்தம்)
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
பாடல் எண் : 2
பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்றாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மைய றீர்வாரே.
மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுட்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்து மின்ப மின்பமே.
செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.
வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமா னுரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.
அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தா னுலகேத்தச்
சிலையா லெயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே.
கூர்வா ளரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்த றிண்ணமே.
கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலா யோங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.
பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.
பாடல் எண் : 11
ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.
============================= ============================
Word separated version:
#2060 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 162
ஊழி முதல்வர்க்கு உரிமைத்-தொழில் சிறப்பால்,
வாழி, திருத்-தில்லை-வாழ்-அந்தணரை முன் வைத்தே,
ஏழிசையும் ஓங்க எடுத்தார், எமை ஆளும்
காழியர்-தம் காவலனார், "கற்றாங்கு எரி ஓம்பி".
--------------
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.80 - கோயில் (தில்லை / சிதம்பரம்) ( பண் : குறிஞ்சி )
("தானா தனதானா தானா தனதானா" - Rhythm)
கற்றாங்கு எரி ஓம்பிக், கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய,
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
பாடல் எண் : 2
பறப்பைப் படுத்து எங்கும் பசு வேட்டு, எரி ஓம்பும்
சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய,
பிறப்பு இல் பெருமானைப், பின் தாழ் சடையானை
மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே.
மை ஆர் ஒண்-கண்ணார் மாட நெடு-வீதிக்
கையால் பந்து ஓச்சும், கழி-சூழ் தில்லையுள்
பொய்யா-மறை பாடல் புரிந்தான், உலகு ஏத்தச்
செய்யான் உறை கோயில் சிற்றம்பலம் தானே.
நிறை-வெண்-கொடி-மாடம் நெற்றி நேர் தீண்டப்
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லைச்
சிறை-வண்டு அறை ஓவாச் சிற்றம்பலம் மேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.
செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.
வரு-மாந்-தளிர்-மேனி மாது ஓர் பாகம் ஆம்
திரு-மாந்-தில்லையுள் சிற்றம்பலம் மேய
கருமான் உரி ஆடைக், கறை-சேர் கண்டத்து எம்
பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே.
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒரு பாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான், உலகு ஏத்தச்
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.
கூர்-வாள்-அரக்கன்-தன் வலியைக் குறைவித்துச்
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய
நீர்-ஆர்-சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.
கோள்-நாகணையானும் குளிர்-தாமரையானும்
காணார் கழல் ஏத்தக் கனலாய் ஓங்கினான்,
சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த,
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.
பட்டைத் துவர்-ஆடைப் படிமம் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே,
சிட்டர் வாழ்-தில்லைச் சிற்றம்பலம் மேய
நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே.
பாடல் எண் : 11
ஞாலத்து உயர்-காழி ஞான சம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்-மாலை
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.
================== ==========================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
#2060 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 162
ūḻi mudalvarkku urimait-toḻil siṟappāl,
vāḻi, tirut-tillai-vāḻ-andaṇarai mun vaittē,
ēḻisaiyum ōṅga eḍuttār, emai āḷum
kāḻiyar-tam kāvalanār, "kaṭrāṅgu eri ōmbi".
--------------
sambandar tēvāram - padigam 1.80 - kōyil (tillai / sidambaram) ( paṇ : kuṟiñji )
("tānā tanadānā tānā tanadānā" - Rhythm)
pāḍal eṇ : 1
kaṭrāṅgu eri ōmbik, kaliyai vārāmē
seṭrār vāḻ tillaic ciṭrambalam mēya,
muṭrā veṇ tiṅgaḷ mudalvan pādamē
paṭrā niṇḍrāraip paṭrā pāvamē.
pāḍal eṇ : 2
paṟappaip paḍuttu eṅgum pasu vēṭṭu, eri ōmbum
siṟappar vāḻ tillaic ciṭrambalam mēya,
piṟappu il perumānaip, pin tāḻ saḍaiyānai
maṟappu ilār kaṇḍīr maiyal tīrvārē.
pāḍal eṇ : 3
mai ār oṇ-kaṇṇār māḍa neḍu-vīdik
kaiyāl pandu ōccum, kaḻi-sūḻ tillaiyuḷ
poyyā-maṟai pāḍal purindān, ulagu ēttac
ceyyān uṟai kōyil siṭrambalam tānē.
pāḍal eṇ : 4
niṟai-veṇ-koḍi-māḍam neṭri nēr tīṇḍap
piṟai vandu iṟai tākkum pērambalam tillaic
ciṟai-vaṇḍu aṟai ōvāc ciṭrambalam mēya
iṟaivan kaḻal ēttum inbam inbamē.
pāḍal eṇ : 5
selva neḍu māḍam seṇḍru sēṇ ōṅgic
celva madi tōyac celvam uyargiṇḍra
selvar vāḻ tillaic ciṭrambalam mēya
selvan kaḻal ēttum selvam selvamē.
pāḍal eṇ : 6
varu-māntaḷir-mēni mādu ōr pāgam ām
tiru-māntillaiyuḷ siṭrambalam mēya
karumān uri āḍaik, kaṟai-sēr kaṇḍattu em
perumān kaḻal allāl pēṇādu uḷḷamē.
pāḍal eṇ : 7
alai ār punal sūḍi, āgattu oru pāgam
malaiyān magaḷōḍu magiḻndān, ulagu ēttac
cilaiyāl eyil eydān siṭrambalam tannait
talaiyāl vaṇaṅguvār talai ānārgaḷē.
pāḍal eṇ : 8
kūr-vāḷ-arakkan-tan valiyaik kuṟaivittuc
cīrālē malgu siṭrambalam mēya
nīr-ār-saḍaiyānai nittal ēttuvār
tīrā nōy ellām tīrdal tiṇṇamē.
pāḍal eṇ : 9
kōḷ-nāgaṇaiyānum kuḷir-tāmaraiyānum
kāṇār kaḻal ēttak kanalāy ōṅginān,
sēṇār vāḻ tillaic ciṭrambalam ētta,
māṇā nōy ellām vāḷā māyumē.
pāḍal eṇ : 10
paṭṭait tuvar-āḍaip paḍimam koṇḍāḍum
muṭṭaik kaṭṭurai moḻiva kēḷādē,
siṭṭar vāḻ-tillaic ciṭrambalam mēya
naṭṭap perumānai nāḷum toḻuvōmē.
pāḍal eṇ : 11
ñālattu uyar-kāḻi ñāna sambandan
sīlattār koḷgaic ciṭrambalam mēya
sūlap paḍaiyānaic conna tamiḻ-mālai
kōlattāl pāḍa vallār nallārē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
#2060 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 162
ऊऴि मुदल्वर्क्कु उरिमैत्-तॊऴिल् सिऱप्पाल्,
वाऴि, तिरुत्-तिल्लै-वाऴ्-अन्दणरै मुन् वैत्ते,
एऴिसैयुम् ओङ्ग ऎडुत्तार्, ऎमै आळुम्
काऴियर्-तम् कावलनार्, "कट्राङ्गु ऎरि ओम्बि".
--------------
सम्बन्दर् तेवारम् - पदिगम् 1.80 - कोयिल् (तिल्लै / सिदम्बरम्) ( पण् : कुऱिञ्जि )
("ताना तनदाना ताना तनदाना" - Rhythm)
पाडल् ऎण् : 1
कट्राङ्गु ऎरि ओम्बिक्, कलियै वारामे
सॆट्रार् वाऴ् तिल्लैच् चिट्रम्बलम् मेय,
मुट्रा वॆण् तिङ्गळ् मुदल्वन् पादमे
पट्रा निण्ड्रारैप् पट्रा पावमे.
पाडल् ऎण् : 2
पऱप्पैप् पडुत्तु ऎङ्गुम् पसु वेट्टु, ऎरि ओम्बुम्
सिऱप्पर् वाऴ् तिल्लैच् चिट्रम्बलम् मेय,
पिऱप्पु इल् पॆरुमानैप्, पिन् ताऴ् सडैयानै
मऱप्पु इलार् कण्डीर् मैयल् तीर्वारे.
पाडल् ऎण् : 3
मै आर् ऒण्-कण्णार् माड नॆडु-वीदिक्
कैयाल् पन्दु ओच्चुम्, कऴि-सूऴ् तिल्लैयुळ्
पॊय्या-मऱै पाडल् पुरिन्दान्, उलगु एत्तच्
चॆय्यान् उऱै कोयिल् सिट्रम्बलम् ताने.
पाडल् ऎण् : 4
निऱै-वॆण्-कॊडि-माडम् नॆट्रि नेर् तीण्डप्
पिऱै वन्दु इऱै ताक्कुम् पेरम्बलम् तिल्लैच्
चिऱै-वण्डु अऱै ओवाच् चिट्रम्बलम् मेय
इऱैवन् कऴल् एत्तुम् इन्बम् इन्बमे.
पाडल् ऎण् : 5
सॆल्व नॆडु माडम् सॆण्ड्रु सेण् ओङ्गिच्
चॆल्व मदि तोयच् चॆल्वम् उयर्गिण्ड्र
सॆल्वर् वाऴ् तिल्लैच् चिट्रम्बलम् मेय
सॆल्वन् कऴल् एत्तुम् सॆल्वम् सॆल्वमे.
पाडल् ऎण् : 6
वरु-मान्तळिर्-मेनि मादु ओर् पागम् आम्
तिरु-मान्तिल्लैयुळ् सिट्रम्बलम् मेय
करुमान् उरि आडैक्, कऱै-सेर् कण्डत्तु ऎम्
पॆरुमान् कऴल् अल्लाल् पेणादु उळ्ळमे.
पाडल् ऎण् : 7
अलै आर् पुनल् सूडि, आगत्तु ऒरु पागम्
मलैयान् मगळोडु मगिऴ्न्दान्, उलगु एत्तच्
चिलैयाल् ऎयिल् ऎय्दान् सिट्रम्बलम् तन्नैत्
तलैयाल् वणङ्गुवार् तलै आनार्गळे.
पाडल् ऎण् : 8
कूर्-वाळ्-अरक्कन्-तन् वलियैक् कुऱैवित्तुच्
चीराले मल्गु सिट्रम्बलम् मेय
नीर्-आर्-सडैयानै नित्तल् एत्तुवार्
तीरा नोय् ऎल्लाम् तीर्दल् तिण्णमे.
पाडल् ऎण् : 9
कोळ्-नागणैयानुम् कुळिर्-तामरैयानुम्
काणार् कऴल् एत्तक् कनलाय् ओङ्गिनान्,
सेणार् वाऴ् तिल्लैच् चिट्रम्बलम् एत्त,
माणा नोय् ऎल्लाम् वाळा मायुमे.
पाडल् ऎण् : 10
पट्टैत् तुवर्-आडैप् पडिमम् कॊण्डाडुम्
मुट्टैक् कट्टुरै मॊऴिव केळादे,
सिट्टर् वाऴ्-तिल्लैच् चिट्रम्बलम् मेय
नट्टप् पॆरुमानै नाळुम् तॊऴुवोमे.
पाडल् ऎण् : 11
ञालत्तु उयर्-काऴि ञान सम्बन्दन्
सीलत्तार् कॊळ्गैच् चिट्रम्बलम् मेय
सूलप् पडैयानैच् चॊन्न तमिऴ्-मालै
कोलत्ताल् पाड वल्लार् नल्लारे.
================== ==========================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
#2060 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 162
ఊఴి ముదల్వర్క్కు ఉరిమైత్-తొఴిల్ సిఱప్పాల్,
వాఴి, తిరుత్-తిల్లై-వాఴ్-అందణరై మున్ వైత్తే,
ఏఴిసైయుం ఓంగ ఎడుత్తార్, ఎమై ఆళుం
కాఴియర్-తం కావలనార్, "కట్రాంగు ఎరి ఓంబి".
--------------
సంబందర్ తేవారం - పదిగం 1.80 - కోయిల్ (తిల్లై / సిదంబరం) ( పణ్ : కుఱింజి )
("తానా తనదానా తానా తనదానా" - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
కట్రాంగు ఎరి ఓంబిక్, కలియై వారామే
సెట్రార్ వాఴ్ తిల్లైచ్ చిట్రంబలం మేయ,
ముట్రా వెణ్ తింగళ్ ముదల్వన్ పాదమే
పట్రా నిండ్రారైప్ పట్రా పావమే.
పాడల్ ఎణ్ : 2
పఱప్పైప్ పడుత్తు ఎంగుం పసు వేట్టు, ఎరి ఓంబుం
సిఱప్పర్ వాఴ్ తిల్లైచ్ చిట్రంబలం మేయ,
పిఱప్పు ఇల్ పెరుమానైప్, పిన్ తాఴ్ సడైయానై
మఱప్పు ఇలార్ కండీర్ మైయల్ తీర్వారే.
పాడల్ ఎణ్ : 3
మై ఆర్ ఒణ్-కణ్ణార్ మాడ నెడు-వీదిక్
కైయాల్ పందు ఓచ్చుం, కఴి-సూఴ్ తిల్లైయుళ్
పొయ్యా-మఱై పాడల్ పురిందాన్, ఉలగు ఏత్తచ్
చెయ్యాన్ ఉఱై కోయిల్ సిట్రంబలం తానే.
పాడల్ ఎణ్ : 4
నిఱై-వెణ్-కొడి-మాడం నెట్రి నేర్ తీండప్
పిఱై వందు ఇఱై తాక్కుం పేరంబలం తిల్లైచ్
చిఱై-వండు అఱై ఓవాచ్ చిట్రంబలం మేయ
ఇఱైవన్ కఴల్ ఏత్తుం ఇన్బం ఇన్బమే.
పాడల్ ఎణ్ : 5
సెల్వ నెడు మాడం సెండ్రు సేణ్ ఓంగిచ్
చెల్వ మది తోయచ్ చెల్వం ఉయర్గిండ్ర
సెల్వర్ వాఴ్ తిల్లైచ్ చిట్రంబలం మేయ
సెల్వన్ కఴల్ ఏత్తుం సెల్వం సెల్వమే.
పాడల్ ఎణ్ : 6
వరు-మాంతళిర్-మేని మాదు ఓర్ పాగం ఆం
తిరు-మాంతిల్లైయుళ్ సిట్రంబలం మేయ
కరుమాన్ ఉరి ఆడైక్, కఱై-సేర్ కండత్తు ఎం
పెరుమాన్ కఴల్ అల్లాల్ పేణాదు ఉళ్ళమే.
పాడల్ ఎణ్ : 7
అలై ఆర్ పునల్ సూడి, ఆగత్తు ఒరు పాగం
మలైయాన్ మగళోడు మగిఴ్న్దాన్, ఉలగు ఏత్తచ్
చిలైయాల్ ఎయిల్ ఎయ్దాన్ సిట్రంబలం తన్నైత్
తలైయాల్ వణంగువార్ తలై ఆనార్గళే.
పాడల్ ఎణ్ : 8
కూర్-వాళ్-అరక్కన్-తన్ వలియైక్ కుఱైవిత్తుచ్
చీరాలే మల్గు సిట్రంబలం మేయ
నీర్-ఆర్-సడైయానై నిత్తల్ ఏత్తువార్
తీరా నోయ్ ఎల్లాం తీర్దల్ తిణ్ణమే.
పాడల్ ఎణ్ : 9
కోళ్-నాగణైయానుం కుళిర్-తామరైయానుం
కాణార్ కఴల్ ఏత్తక్ కనలాయ్ ఓంగినాన్,
సేణార్ వాఴ్ తిల్లైచ్ చిట్రంబలం ఏత్త,
మాణా నోయ్ ఎల్లాం వాళా మాయుమే.
పాడల్ ఎణ్ : 10
పట్టైత్ తువర్-ఆడైప్ పడిమం కొండాడుం
ముట్టైక్ కట్టురై మొఴివ కేళాదే,
సిట్టర్ వాఴ్-తిల్లైచ్ చిట్రంబలం మేయ
నట్టప్ పెరుమానై నాళుం తొఴువోమే.
పాడల్ ఎణ్ : 11
ఞాలత్తు ఉయర్-కాఴి ఞాన సంబందన్
సీలత్తార్ కొళ్గైచ్ చిట్రంబలం మేయ
సూలప్ పడైయానైచ్ చొన్న తమిఴ్-మాలై
కోలత్తాల్ పాడ వల్లార్ నల్లారే.
================== ==========================
🙏Omnamashivaya shivayanamaohm 🙏
ReplyDelete