சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
1.92 – வாசி தீரவே
1.92 – vAsi thIravE
Verses and audio of this padhigam's discussion:
Verses: https://drive.google.com/open?id=12KfQyXu8EaaYnuriE_B2auKytvTHyGBs
******
On YouTube:
English discussion: https://youtu.be/gWVIMbpaFpw
******English translation – by V.M.Subramanya Ayyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_092.HTM
V. Subramanian
======================
This has verses in Tamil, English, Nagari, and Telugu scripts. Please print the pages you need.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.92 – திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள் ( பண் - குறிஞ்சி )
Background:
பதிக வரலாறு :
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்த காலத்தில் ஒரு பெரும்பஞ்சம் வந்தது. அதனால் அடியார்களும் வருந்தினர். அதுகண்ட நாயன்மார்கள், "சிவன் அடியவர்களுக்கும் கவலை வருமோ" என்று எண்ணி இரவு உறங்கினர். அன்று இரவு இறைவன் அவ்விருவர் கனவிலும் தோன்றினார். "உலகத்தின் இயல்பு நிகழ்வான இப்பஞ்சத்தால் வரும் பசிநோய், உங்களை அடையாது என்றாலும், உங்களைச் சேர்ந்த அடியவர்களின் வருத்தம் நீங்குதற்காகத், தினந்தோறும் ஒவ்வொரு பொற்காசினைக் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பலிபீடங்களில் உங்களுக்கு அளிப்போம்; இப்பஞ்சகாலம் நீங்கும்போது அது நிறுத்தப்படும்" என்று உரைத்தருளினார். மறுநாட் காலை நாயன்மார்கள் இருவரும் கோயிலுக்குச் சென்று அவ்வாறே பொற்காசு இருக்கக் கண்டு எடுத்துவந்து தம் தொண்டர்களிடம் கொடுத்து அடியவர்களுக்கு அமுதளித்தனர் . வாகீசர் திருமடத்தில் உரிய நேரத்தில் உணவிடப்பெற்றது. ஆனால் சம்பந்தர் திருமடத்தில் உணவிடக் காலதாமதம் ஆயிற்று. தாம் பெற்ற காசு வட்டம் கொடுத்து மாற்றப் பெறுவதால் இப்படிக் காலதாமதம் நிகழ்ந்தது என்று அறிந்த சம்பந்தர் திருக்கோயிலுக்குச் சென்று "வாசி தீரவே " என்னும் இப்பதிகத்தைப் பாடியருளி, அன்றுமுதல் வாசி இல்லாத காசு பெற்றார்; அவர் மடத்திலும் சிவனடியார்களுக்கு நேரத்தோடு திருவமுது படைத்தனர்; சில நாள்களில் பஞ்சம் நீங்கியது .
----------
#2460 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 562
மண்ணின்மிசை வான்பொய்த்து நதிக டப்பி
.. மன்னுயிர்கள் கண்சாம்பி யுணவு மாறி
விண்ணவர்க்குஞ் சிறப்பில்வரும் பூசை யாற்றா
.. மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு
பண்ணமரு மொழியுமையாண் முலையின் ஞானப்
.. பாலறா வாயருட னரசும் "பார்மேற்
கண்ணுதலோன் றிருநீற்றுச் சார்பி னோர்க்குங் **
.. கவலைவரு மோ?"வென்று கருத்திற் கொண்டார்.
(** தருமை ஆதீன நூலில் பாடபேதம் - "சார்வினோர்க்கும்")
#2461 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 563
வானாகி நிலனாகி யனலு மாகி
.. மாருதமா யிருசுடராய் நீரு மாகி
ஊனாகி யுயிராகி யுணர்வு மாகி
.. யுலகங்க ளனைத்துமா யுலகுக் கப்பால்
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய
.. வடிபரவி யன்றிரவு துயிலும் போது
கானாடு கங்காளர் மிழலை மூதூர்
.. காதலித்தார் கனவிலணைந் தருளிச் செய்வார்,
#2462 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 564
உலகியல்பு நிகழ்ச்சியா லணைந்த தீய
.. உறுபசிநோ யுமையடையா தெனினு மும்பால்
நிலவுசிவ நெறிசார்ந்தோர் தம்மை வாட்ட
.. நீக்குதற்கு நித்தமொரோர் காசு நீடும்
இலகுமணிப் பீடத்துக் குணக்கு மேற்கும்
.. யாமளித்தோ முமக்கிந்தக் காலந் தீர்ந்தால்
அலகில்புக ழீர்!தவிர்வ தாகு மென்றே
.. யருள்புரிந்தார் திருவீழி மிழலை யையர்,
(** நீக்குதற்கு - தருமை ஆதீன உரைநூலில் பாடபேதம் - நீங்குதற்கு)
#2465 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 567
நாவினுக்கு வேந்தர்திரு மடத்திற் றொண்டர்
.. நாட்கூறு திருவமுது செய்யக் கண்டு
சேவுகைத்தா ரருள்பெற்ற பிள்ளை யார்தந்
.. திருமடத்தி லமுதாக்கு வாரை நோக்கித்
"தீவினைக்கு நீரென்று மடைவி லாதீர்
.. திருவமுது காலத்தா லாக்கி யிங்கு
மேவுமிக்க வடியவருக் களியா வண்ணம்
.. விளைந்தவா றென்கொலோ? விளம்பு" மென்றார்.
#2466 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 568
திருமறையோர் தலைவர்தா மருளிச் செய்யத்
.. திருமடத்தி லமுதமைப்போர் செப்பு வார்கள்
"ஒருபரிசு மறிந்திலோ மிதனை; யும்மை
.. யுடையவர்பாற் பெறும்படிக்கா சொன்றுங் கொண்டு
கருதியவெல் லாங்கொள்ள வேண்டிச் சென்றாற்
.. காசுதனை வாசிபட வேண்டு மென்பார்;
பெருமுனிவர் வாகீசர் பெற்ற காசு
.. பேணியே கொள்வரிது பிற்பா" டென்றார்.
#2467 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 569
திருஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
.. சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த
ஒருகாசு வாசிபட மற்றக் காசு
.. நன்றாகி வாசிபடா தொழிவான் அந்தப்
பெருவாய்மைத் திருநாவுக் கரசர் தொண்டால்
.. பெறுங்காசாம் ஆதலினாற் பெரியோன் தன்னை
வருநாள்கள் தருங்காசு வாசி தீரப்
.. பாடுவன்என் றெண்ணிஅது மனத்துட் கொண்டார்
#2468 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 570
மற்றைநாள் தம்பிரான் கோயில் புக்கு
.. வாசிதீர்த் தருளும்எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நற்காசு கொண்டு மாந்தர்
.. பெயர்ந்துபோய் ஆவணவீ தியினிற் காட்ட
நற்றவத்தீர் இக்காசு சால நன்று
.. வேண்டுவன நாந்தருவோம் என்று நல்க
அற்றைநாள் தொடங்கிநாட் கூறு தன்னில்
.. அடியவரை அமுதுசெய்வித் தார்வ மிக்கார்
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.92 – திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள் ( பண் - குறிஞ்சி )
("தான தானனா" - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
வாசி தீரவே
காசு நல்குவீர்
மாசின் மிழலையீர்
ஏச லில்லையே.
பாடல் எண் : 2
இறைவ ராயினீர்
மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை
முறைமை நல்குமே.
பாடல் எண் : 3
செய்ய மேனியீர்
மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர்
உய்ய நல்குமே.
பாடல் எண் : 4
நீறு பூசினீர்
ஏற தேறினீர்
கூறு மிழலையீர்
பேறு மருளுமே.
பாடல் எண் : 5
காமன் வேவவோர்
தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர்
சேம நல்குமே.
பாடல் எண் : 6
பிணிகொள் சடையினீர்
மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர்
பணிகொண் டருளுமே.
பாடல் எண் : 7
மங்கை பங்கினீர்
துங்க மிழலையீர்
கங்கை முடியினீர்
சங்கை தவிர்மினே.
பாடல் எண் : 8
அரக்க னெரிதர
இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர்
கரக்கை தவிர்மினே.
பாடல் எண் : 9
அயனு மாலுமாய்
முயலு முடியினீர்
இயலு மிழலையீர்
பயனு மருளுமே.
பாடல் எண் : 10
பறிகொள் தலையினார்
அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர்
பிறிவ தரியதே.
பாடல் எண் : 11
காழி மாநகர்
வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல்
தாழு மொழிகளே.
Word separated version:
#2460 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 562
மண்ணின்மிசை வான் பொய்த்து, நதிகள் தப்பி,
.. மன்னுயிர்கள் கண்-சாம்பி உணவு மாறி,
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்றா
.. மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு,
பண்-அமரும் மொழி உமையாள் முலையின் ஞானப்
.. பால்-அறா வாயருடன் அரசும் "பார்மேல்
கண்ணுதலோன் திருநீற்றுச் சார்பினோர்க்கும் **
.. கவலை வருமோ?" என்று கருத்தில் கொண்டார்.
(** தருமை ஆதீன நூலில் பாடபேதம் - "சார்வினோர்க்கும்")
#2461 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 563
வான் ஆகி, நிலன் ஆகி, அனலும் ஆகி,
.. மாருதம் ஆய், இரு-சுடர் ஆய், நீரும் ஆகி,
ஊன் ஆகி, உயிர் ஆகி, உணர்வும் ஆகி,
.. உலகங்கள் அனைத்தும் ஆய், உலகுக்கு அப்பால்
ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய
.. அடி பரவி அன்று இரவு துயிலும் போது,
கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர்
.. காதலித்தார் கனவில் அணைந்தருளிச் செய்வார்,
#2462 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 564
"உலகு-இயல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய
.. உறு-பசி-நோய் உமை அடையாது எனினும் உம்-பால்
நிலவு சிவநெறி சார்ந்தோர்-தம்மை வாட்டம்
.. நீக்குதற்கு, நித்தம் ஒரோர் காசு நீடும்
இலகு மணிப்-பீடத்துக் குணக்கும் மேற்கும்
.. யாம் அளித்தோம் உமக்கு; இந்தக் காலம் தீர்ந்தால்,
அலகு-இல் புகழீர், தவிர்வது-ஆகும்" என்றே
.. அருள்-புரிந்தார் திரு-வீழிமிழலை ஐயர்,
(** நீக்குதற்கு - தருமை ஆதீன உரைநூலில் பாடபேதம் - நீங்குதற்கு)
#2465 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 567
நாவினுக்கு வேந்தர் திரு-மடத்தில் தொண்டர்
.. நாட்கூறு திரு-அமுது செய்யக் கண்டு,
சே-உகைத்தார் அருள்-பெற்ற பிள்ளையார் தம்
.. திரு-மடத்தில் அமுது-ஆக்குவாரை நோக்கித்,
"தீவினைக்கு நீர் என்றும் அடைவு-இலாதீர்;
.. திரு-அமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம்
.. விளைந்தவாறு என்-கொலோ? விளம்பும்" என்றார்.
#2466 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 568
திரு-மறையோர் தலைவர்-தாம் அருளிச் செய்யத்,
.. திரு-மடத்தில் அமுது-அமைப்போர் செப்புவார்கள்,
"ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை; உம்மை
.. உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு
கருதிய எல்லாம் கொள்ளவேண்டிச் சென்றால்,
.. காசுதனை வாசி-பட வேண்டும் என்பார்;
பெருமுனிவர் வாகீசர் பெற்ற காசு
.. பேணியே கொள்வர்; இது பிற்பாடு" என்றார்.
#2467 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 569
திருஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
.. சிந்திப்பார்; சிவபெருமான் நமக்குத் தந்த
ஒரு காசு வாசி-பட மற்றக் காசு
.. நன்று ஆகி வாசி-படாது-ஒழிவான் அந்தப்
பெரு-வாய்மைத் திரு-நாவுக்கரசர் தொண்டால்
.. பெறும் காசு ஆம்; ஆதலினால், பெரியோன்-தன்னை
வருநாள்கள் தரும் காசு வாசி தீரப்
.. பாடுவன் என்று எண்ணி அது மனத்துள் கொண்டார் .
#2468 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 570
மற்றை-நாள் தம்பிரான் கோயில் புக்கு
.. "வாசி தீர்த்து-அருளும்" எனப் பதிகம் பாடிப்
பெற்ற படி நற்காசு கொண்டு மாந்தர்
.. பெயர்ந்து-போய் ஆவண-வீதியினில் காட்ட.
"நற்றவத்தீர்; இக்காசு சால நன்று;
.. வேண்டுவன நாம் தருவோம்" என்று நல்க,
அற்றை-நாள் தொடங்கி நாட்கூறு-தன்னில்
.. அடியவரை அமுது-செய்வித்து ஆர்வம் மிக்கார்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.92 – திருவீழிமிழலை - திரு-இருக்குக்-குறள் ( பண் - குறிஞ்சி )
("தான தானனா" - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
வாசி தீரவே
காசு நல்குவீர்,
மாசு-இல் மிழலையீர்;
ஏசல் இல்லையே.
பாடல் எண் : 2
இறைவர் ஆயினீர்,
மறைகொள் மிழலையீர்;
கறைகொள் காசினை
முறைமை நல்குமே.
பாடல் எண் : 3
செய்ய மேனியீர்;
மெய்கொள் மிழலையீர்;
பைகொள் அரவினீர்;
உய்ய நல்குமே.
பாடல் எண் : 4
நீறு பூசினீர்
ஏறு-அது ஏறினீர்
கூறு மிழலையீர்
பேறும் அருளுமே.
பாடல் எண் : 5
காமன் வேவ ஓர்
தூமக் கண்ணினீர்;
நாம மிழலையீர்;
சேமம் நல்குமே.
பாடல் எண் : 6
பிணிகொள் சடையினீர்;
மணிகொள் மிடறினீர்;
அணிகொள் மிழலையீர்;
பணிகொண்டு அருளுமே.
பாடல் எண் : 7
மங்கை பங்கினீர்;
துங்க மிழலையீர்;
கங்கை முடியினீர்;
சங்கை தவிர்மினே.
பாடல் எண் : 8
அரக்கன் நெரிதர,
இரக்கம் எய்தினீர்;
பரக்கும் மிழலையீர்;
கரக்கை தவிர்மினே.
பாடல் எண் : 9
அயனும் மாலுமாய்
முயலும் முடியினீர்;
இயலும் மிழலையீர்;
பயனும் அருளுமே.
பாடல் எண் : 10
பறிகொள் தலையினார்
அறிவது அறிகிலார்;
வெறிகொள் மிழலையீர்;
பிறிவது அரியதே.
பாடல் எண் : 11
காழி மா-நகர்
வாழி சம்பந்தன்
வீழி-மிழலைமேல்
தாழும் மொழிகளே.
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
#2460 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 562
maṇṇinmisai vān poyttu, nadigaḷ tappi,
.. mannuyirgaḷ kaṇ-sāmbi uṇavu māṟi,
viṇṇavarkkum siṟappil varum pūsai āṭrā
.. mikka perum pasi ulagil viravak kaṇḍu,
paṇ-amarum moḻi umaiyāḷ mulaiyin ñānap
.. pāl-aṟā vāyaruḍan arasum "pārmēl
kaṇṇudalōn tirunīṭruc cārbinōrkkum **
.. kavalai varumō?" eṇḍru karuttil koṇḍār.
(** tarumai ādīna nūlil pāḍabēdam - "sārvinōrkkum")
#2461 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 563
vān āgi, nilan āgi, analum āgi,
.. mārudam āy, iru-suḍar āy, nīrum āgi,
ūn āgi, uyir āgi, uṇarvum āgi,
.. ulagaṅgaḷ anaittum āy, ulagukku appāl
ānāda vaḍivu āgi niṇḍrār seyya
.. aḍi paravi aṇḍru iravu tuyilum pōdu,
kān āḍu kaṅgāḷar miḻalai mūdūr
.. kādalittār kanavil aṇaindaruḷic ceyvār,
#2462 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 564
"ulagu-iyalbu nigaḻcciyāl aṇainda tīya
.. uṟu-pasi-nōy umai aḍaiyādu eninum um-pāl
nilavu sivaneṟi sārndōr-tammai vāṭṭam
.. nīkkudaṟku, nittam orōr kāsu nīḍum
ilagu maṇip-pīḍattuk kuṇakkum mēṟkum
.. yām aḷittōm umakku; indak kālam tīrndāl,
alagu-il pugaḻīr, tavirvadu-āgum" eṇḍrē
.. aruḷ-purindār tiru-vīḻimiḻalai aiyar,
(** nīkkudaṟku - tarumai ādīna urainūlil pāḍabēdam - nīṅgudaṟku)
#2465 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 567
nāvinukku vēndar tiru-maḍattil toṇḍar
.. nāṭkūṟu tiru-amudu seyyak kaṇḍu,
sē-ugaittār aruḷ-peṭra piḷḷaiyār tam
.. tiru-maḍattil amudu-ākkuvārai nōkkit,
"tīvinaikku nīr eṇḍrum aḍaivu-ilādīr;
.. tiru-amudu kālattāl ākki iṅgu
mēvu mikka aḍiyavarukku aḷiyā vaṇṇam
.. viḷaindavāṟu en-kolō? viḷambum" eṇḍrār.
#2466 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 568
tiru-maṟaiyōr talaivar-tām aruḷic ceyyat,
.. tiru-maḍattil amudu-amaippōr seppuvārgaḷ,
"oru parisum aṟindilōm idanai; ummai
.. uḍaiyavar-pāl peṟum paḍikkāsu oṇḍrum koṇḍu
karudiya ellām koḷḷavēṇḍic ceṇḍrāl,
.. kāsudanai vāsi-paḍa vēṇḍum enbār;
perumunivar vāgīsar peṭra kāsu
.. pēṇiyē koḷvar; idu piṟpāḍu" eṇḍrār.
#2467 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 569
tiruñāna sambandar adanaik kēṭṭuc
.. sindippār; sivaberumān namakkut tanda
oru kāsu vāsi-paḍa maṭrak kāsu
.. naṇḍru āgi vāsi-paḍādu-oḻivān andap
peru-vāymait tiru-nāvukkarasar toṇḍāl
.. peṟum kāsu ām; ādalināl, periyōn-tannai
varunāḷgaḷ tarum kāsu vāsi tīrap
.. pāḍuvan eṇḍru eṇṇi adu manattuḷ koṇḍār .
#2468 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 570
maṭrai-nāḷ tambirān kōyil pukku
.. "vāsi tīrttu-aruḷum" enap padigam pāḍip
peṭra paḍi naṟkāsu koṇḍu māndar
.. peyarndu-pōy āvaṇa-vīdiyinil kāṭṭa.
"naṭravattīr; ikkāsu sāla naṇḍru;
.. vēṇḍuvana nām taruvōm" eṇḍru nalga,
aṭrai-nāḷ toḍaṅgi nāṭkūṟu-tannil
.. aḍiyavarai amudu-seyvittu ārvam mikkār.
sambandar tēvāram - padigam 1.92 – tiruvīḻimiḻalai - tiru-irukkuk-kuṟaḷ ( paṇ - kuṟiñji )
("tāna tānanā" - Rhythm)
pāḍal eṇ : 1
vāsi tīravē
kāsu nalguvīr,
māsu-il miḻalaiyīr;
ēsal illaiyē.
pāḍal eṇ : 2
iṟaivar āyinīr,
maṟaigoḷ miḻalaiyīr;
kaṟaigoḷ kāsinai
muṟaimai nalgumē.
pāḍal eṇ : 3
seyya mēniyīr;
meygoḷ miḻalaiyīr;
paigoḷ aravinīr;
uyya nalgumē.
pāḍal eṇ : 4
nīṟu pūsinīr
ēṟu-adu ēṟinīr
kūṟu miḻalaiyīr
pēṟum aruḷumē.
pāḍal eṇ : 5
kāman vēva ōr
dūmak kaṇṇinīr;
nāma miḻalaiyīr;
sēmam nalgumē.
pāḍal eṇ : 6
piṇigoḷ saḍaiyinīr;
maṇigoḷ miḍaṟinīr;
aṇigoḷ miḻalaiyīr;
paṇigoṇḍu aruḷumē.
pāḍal eṇ : 7
maṅgai paṅginīr;
tuṅga miḻalaiyīr;
gaṅgai muḍiyinīr;
saṅgai tavirminē.
pāḍal eṇ : 8
arakkan neridara,
irakkam eydinīr;
parakkum miḻalaiyīr;
karakkai tavirminē.
pāḍal eṇ : 9
ayanum mālumāy
muyalum muḍiyinīr;
iyalum miḻalaiyīr;
payanum aruḷumē.
pāḍal eṇ : 10
paṟigoḷ talaiyinār
aṟivadu aṟigilār;
veṟigoḷ miḻalaiyīr;
piṟivadu ariyadē.
pāḍal eṇ : 11
kāḻi mā-nagar
vāḻi sambandan
vīḻi-miḻalaimēl
tāḻum moḻigaḷē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
#2460 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 562
मण्णिन्मिसै वान् पॊय्त्तु, नदिगळ् तप्पि,
.. मन्नुयिर्गळ् कण्-साम्बि उणवु माऱि,
विण्णवर्क्कुम् सिऱप्पिल् वरुम् पूसै आट्रा
.. मिक्क पॆरुम् पसि उलगिल् विरवक् कण्डु,
पण्-अमरुम् मॊऴि उमैयाळ् मुलैयिन् ञानप्
.. पाल्-अऱा वायरुडन् अरसुम् "पार्मेल्
कण्णुदलोन् तिरुनीट्रुच् चार्बिनोर्क्कुम् **
.. कवलै वरुमो?" ऎण्ड्रु करुत्तिल् कॊण्डार्.
(** तरुमै आदीन नूलिल् पाडबेदम् - "सार्विनोर्क्कुम्")
#2461 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 563
वान् आगि, निलन् आगि, अनलुम् आगि,
.. मारुदम् आय्, इरु-सुडर् आय्, नीरुम् आगि,
ऊन् आगि, उयिर् आगि, उणर्वुम् आगि,
.. उलगङ्गळ् अनैत्तुम् आय्, उलगुक्कु अप्पाल्
आनाद वडिवु आगि निण्ड्रार् सॆय्य
.. अडि परवि अण्ड्रु इरवु तुयिलुम् पोदु,
कान् आडु कङ्गाळर् मिऴलै मूदूर्
.. कादलित्तार् कनविल् अणैन्दरुळिच् चॆय्वार्,
#2462 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 564
"उलगु-इयल्बु निगऴ्च्चियाल् अणैन्द तीय
.. उऱु-पसि-नोय् उमै अडैयादु ऎनिनुम् उम्-पाल्
निलवु सिवनॆऱि सार्न्दोर्-तम्मै वाट्टम्
.. नीक्कुदऱ्कु, नित्तम् ऒरोर् कासु नीडुम्
इलगु मणिप्-पीडत्तुक् कुणक्कुम् मेऱ्कुम्
.. याम् अळित्तोम् उमक्कु; इन्दक् कालम् तीर्न्दाल्,
अलगु-इल् पुगऴीर्, तविर्वदु-आगुम्" ऎण्ड्रे
.. अरुळ्-पुरिन्दार् तिरु-वीऴिमिऴलै ऐयर्,
(** नीक्कुदऱ्कु - तरुमै आदीन उरैनूलिल् पाडबेदम् - नीङ्गुदऱ्कु)
#2465 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 567
नाविनुक्कु वेन्दर् तिरु-मडत्तिल् तॊण्डर्
.. नाट्कूऱु तिरु-अमुदु सॆय्यक् कण्डु,
से-उगैत्तार् अरुळ्-पॆट्र पिळ्ळैयार् तम्
.. तिरु-मडत्तिल् अमुदु-आक्कुवारै नोक्कित्,
"तीविनैक्कु नीर् ऎण्ड्रुम् अडैवु-इलादीर्;
.. तिरु-अमुदु कालत्ताल् आक्कि इङ्गु
मेवु मिक्क अडियवरुक्कु अळिया वण्णम्
.. विळैन्दवाऱु ऎन्-कॊलो? विळम्बुम्" ऎण्ड्रार्.
#2466 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 568
तिरु-मऱैयोर् तलैवर्-ताम् अरुळिच् चॆय्यत्,
.. तिरु-मडत्तिल् अमुदु-अमैप्पोर् सॆप्पुवार्गळ्,
"ऒरु परिसुम् अऱिन्दिलोम् इदनै; उम्मै
.. उडैयवर्-पाल् पॆऱुम् पडिक्कासु ऒण्ड्रुम् कॊण्डु
करुदिय ऎल्लाम् कॊळ्ळवेण्डिच् चॆण्ड्राल्,
.. कासुदनै वासि-पड वेण्डुम् ऎन्बार्;
पॆरुमुनिवर् वागीसर् पॆट्र कासु
.. पेणिये कॊळ्वर्; इदु पिऱ्पाडु" ऎण्ड्रार्.
#2467 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 569
तिरुञान सम्बन्दर् अदनैक् केट्टुच्
.. सिन्दिप्पार्; सिवबॆरुमान् नमक्कुत् तन्द
ऒरु कासु वासि-पड मट्रक् कासु
.. नण्ड्रु आगि वासि-पडादु-ऒऴिवान् अन्दप्
पॆरु-वाय्मैत् तिरु-नावुक्करसर् तॊण्डाल्
.. पॆऱुम् कासु आम्; आदलिनाल्, पॆरियोन्-तन्नै
वरुनाळ्गळ् तरुम् कासु वासि तीरप्
.. पाडुवन् ऎण्ड्रु ऎण्णि अदु मनत्तुळ् कॊण्डार् .
#2468 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 570
मट्रै-नाळ् तम्बिरान् कोयिल् पुक्कु
.. "वासि तीर्त्तु-अरुळुम्" ऎनप् पदिगम् पाडिप्
पॆट्र पडि नऱ्कासु कॊण्डु मान्दर्
.. पॆयर्न्दु-पोय् आवण-वीदियिनिल् काट्ट.
"नट्रवत्तीर्; इक्कासु साल नण्ड्रु;
.. वेण्डुवन नाम् तरुवोम्" ऎण्ड्रु नल्ग,
अट्रै-नाळ् तॊडङ्गि नाट्कूऱु-तन्निल्
.. अडियवरै अमुदु-सॆय्वित्तु आर्वम् मिक्कार्.
सम्बन्दर् तेवारम् - पदिगम् 1.92 – तिरुवीऴिमिऴलै - तिरु-इरुक्कुक्-कुऱळ् ( पण् - कुऱिञ्जि )
("तान तानना" - Rhythm)
पाडल् ऎण् : 1
वासि तीरवे
कासु नल्गुवीर्,
मासु-इल् मिऴलैयीर्;
एसल् इल्लैये.
पाडल् ऎण् : 2
इऱैवर् आयिनीर्,
मऱैगॊळ् मिऴलैयीर्;
कऱैगॊळ् कासिनै
मुऱैमै नल्गुमे.
पाडल् ऎण् : 3
सॆय्य मेनियीर्;
मॆय्गॊळ् मिऴलैयीर्;
पैगॊळ् अरविनीर्;
उय्य नल्गुमे.
पाडल् ऎण् : 4
नीऱु पूसिनीर्
एऱु-अदु एऱिनीर्
कूऱु मिऴलैयीर्
पेऱुम् अरुळुमे.
पाडल् ऎण् : 5
कामन् वेव ओर्
दूमक् कण्णिनीर्;
नाम मिऴलैयीर्;
सेमम् नल्गुमे.
पाडल् ऎण् : 6
पिणिगॊळ् सडैयिनीर्;
मणिगॊळ् मिडऱिनीर्;
अणिगॊळ् मिऴलैयीर्;
पणिगॊण्डु अरुळुमे.
पाडल् ऎण् : 7
मङ्गै पङ्गिनीर्;
तुङ्ग मिऴलैयीर्;
गङ्गै मुडियिनीर्;
सङ्गै तविर्मिने.
पाडल् ऎण् : 8
अरक्कन् नॆरिदर,
इरक्कम् ऎय्दिनीर्;
परक्कुम् मिऴलैयीर्;
करक्कै तविर्मिने.
पाडल् ऎण् : 9
अयनुम् मालुमाय्
मुयलुम् मुडियिनीर्;
इयलुम् मिऴलैयीर्;
पयनुम् अरुळुमे.
पाडल् ऎण् : 10
पऱिगॊळ् तलैयिनार्
अऱिवदु अऱिगिलार्;
वॆऱिगॊळ् मिऴलैयीर्;
पिऱिवदु अरियदे.
पाडल् ऎण् : 11
काऴि मा-नगर्
वाऴि सम्बन्दन्
वीऴि-मिऴलैमेल्
ताऴुम् मॊऴिगळे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
#2460 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 562
మణ్ణిన్మిసై వాన్ పొయ్త్తు, నదిగళ్ తప్పి,
.. మన్నుయిర్గళ్ కణ్-సాంబి ఉణవు మాఱి,
విణ్ణవర్క్కుం సిఱప్పిల్ వరుం పూసై ఆట్రా
.. మిక్క పెరుం పసి ఉలగిల్ విరవక్ కండు,
పణ్-అమరుం మొఴి ఉమైయాళ్ ములైయిన్ ఞానప్
.. పాల్-అఱా వాయరుడన్ అరసుం "పార్మేల్
కణ్ణుదలోన్ తిరునీట్రుచ్ చార్బినోర్క్కుం **
.. కవలై వరుమో?" ఎండ్రు కరుత్తిల్ కొండార్.
(** తరుమై ఆదీన నూలిల్ పాడబేదం - "సార్వినోర్క్కుం")
#2461 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 563
వాన్ ఆగి, నిలన్ ఆగి, అనలుం ఆగి,
.. మారుదం ఆయ్, ఇరు-సుడర్ ఆయ్, నీరుం ఆగి,
ఊన్ ఆగి, ఉయిర్ ఆగి, ఉణర్వుం ఆగి,
.. ఉలగంగళ్ అనైత్తుం ఆయ్, ఉలగుక్కు అప్పాల్
ఆనాద వడివు ఆగి నిండ్రార్ సెయ్య
.. అడి పరవి అండ్రు ఇరవు తుయిలుం పోదు,
కాన్ ఆడు కంగాళర్ మిఴలై మూదూర్
.. కాదలిత్తార్ కనవిల్ అణైందరుళిచ్ చెయ్వార్,
#2462 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 564
"ఉలగు-ఇయల్బు నిగఴ్చ్చియాల్ అణైంద తీయ
.. ఉఱు-పసి-నోయ్ ఉమై అడైయాదు ఎనినుం ఉం-పాల్
నిలవు సివనెఱి సార్న్దోర్-తమ్మై వాట్టం
.. నీక్కుదఱ్కు, నిత్తం ఒరోర్ కాసు నీడుం
ఇలగు మణిప్-పీడత్తుక్ కుణక్కుం మేఱ్కుం
.. యాం అళిత్తోం ఉమక్కు; ఇందక్ కాలం తీర్న్దాల్,
అలగు-ఇల్ పుగఴీర్, తవిర్వదు-ఆగుం" ఎండ్రే
.. అరుళ్-పురిందార్ తిరు-వీఴిమిఴలై ఐయర్,
(** నీక్కుదఱ్కు - తరుమై ఆదీన ఉరైనూలిల్ పాడబేదం - నీంగుదఱ్కు)
#2465 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 567
నావినుక్కు వేందర్ తిరు-మడత్తిల్ తొండర్
.. నాట్కూఱు తిరు-అముదు సెయ్యక్ కండు,
సే-ఉగైత్తార్ అరుళ్-పెట్ర పిళ్ళైయార్ తం
.. తిరు-మడత్తిల్ అముదు-ఆక్కువారై నోక్కిత్,
"తీవినైక్కు నీర్ ఎండ్రుం అడైవు-ఇలాదీర్;
.. తిరు-అముదు కాలత్తాల్ ఆక్కి ఇంగు
మేవు మిక్క అడియవరుక్కు అళియా వణ్ణం
.. విళైందవాఱు ఎన్-కొలో? విళంబుం" ఎండ్రార్.
#2466 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 568
తిరు-మఱైయోర్ తలైవర్-తాం అరుళిచ్ చెయ్యత్,
.. తిరు-మడత్తిల్ అముదు-అమైప్పోర్ సెప్పువార్గళ్,
"ఒరు పరిసుం అఱిందిలోం ఇదనై; ఉమ్మై
.. ఉడైయవర్-పాల్ పెఱుం పడిక్కాసు ఒండ్రుం కొండు
కరుదియ ఎల్లాం కొళ్ళవేండిచ్ చెండ్రాల్,
.. కాసుదనై వాసి-పడ వేండుం ఎన్బార్;
పెరుమునివర్ వాగీసర్ పెట్ర కాసు
.. పేణియే కొళ్వర్; ఇదు పిఱ్పాడు" ఎండ్రార్.
#2467 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 569
తిరుఞాన సంబందర్ అదనైక్ కేట్టుచ్
.. సిందిప్పార్; సివబెరుమాన్ నమక్కుత్ తంద
ఒరు కాసు వాసి-పడ మట్రక్ కాసు
.. నండ్రు ఆగి వాసి-పడాదు-ఒఴివాన్ అందప్
పెరు-వాయ్మైత్ తిరు-నావుక్కరసర్ తొండాల్
.. పెఱుం కాసు ఆం; ఆదలినాల్, పెరియోన్-తన్నై
వరునాళ్గళ్ తరుం కాసు వాసి తీరప్
.. పాడువన్ ఎండ్రు ఎణ్ణి అదు మనత్తుళ్ కొండార్ .
#2468 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 570
మట్రై-నాళ్ తంబిరాన్ కోయిల్ పుక్కు
.. "వాసి తీర్త్తు-అరుళుం" ఎనప్ పదిగం పాడిప్
పెట్ర పడి నఱ్కాసు కొండు మాందర్
.. పెయర్న్దు-పోయ్ ఆవణ-వీదియినిల్ కాట్ట.
"నట్రవత్తీర్; ఇక్కాసు సాల నండ్రు;
.. వేండువన నాం తరువోం" ఎండ్రు నల్గ,
అట్రై-నాళ్ తొడంగి నాట్కూఱు-తన్నిల్
.. అడియవరై అముదు-సెయ్విత్తు ఆర్వం మిక్కార్.
సంబందర్ తేవారం - పదిగం 1.92 – తిరువీఴిమిఴలై - తిరు-ఇరుక్కుక్-కుఱళ్ ( పణ్ - కుఱింజి )
("తాన తాననా" - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
వాసి తీరవే
కాసు నల్గువీర్,
మాసు-ఇల్ మిఴలైయీర్;
ఏసల్ ఇల్లైయే.
పాడల్ ఎణ్ : 2
ఇఱైవర్ ఆయినీర్,
మఱైగొళ్ మిఴలైయీర్;
కఱైగొళ్ కాసినై
ముఱైమై నల్గుమే.
పాడల్ ఎణ్ : 3
సెయ్య మేనియీర్;
మెయ్గొళ్ మిఴలైయీర్;
పైగొళ్ అరవినీర్;
ఉయ్య నల్గుమే.
పాడల్ ఎణ్ : 4
నీఱు పూసినీర్
ఏఱు-అదు ఏఱినీర్
కూఱు మిఴలైయీర్
పేఱుం అరుళుమే.
పాడల్ ఎణ్ : 5
కామన్ వేవ ఓర్
దూమక్ కణ్ణినీర్;
నామ మిఴలైయీర్;
సేమం నల్గుమే.
పాడల్ ఎణ్ : 6
పిణిగొళ్ సడైయినీర్;
మణిగొళ్ మిడఱినీర్;
అణిగొళ్ మిఴలైయీర్;
పణిగొండు అరుళుమే.
పాడల్ ఎణ్ : 7
మంగై పంగినీర్;
తుంగ మిఴలైయీర్;
గంగై ముడియినీర్;
సంగై తవిర్మినే.
పాడల్ ఎణ్ : 8
అరక్కన్ నెరిదర,
ఇరక్కం ఎయ్దినీర్;
పరక్కుం మిఴలైయీర్;
కరక్కై తవిర్మినే.
పాడల్ ఎణ్ : 9
అయనుం మాలుమాయ్
ముయలుం ముడియినీర్;
ఇయలుం మిఴలైయీర్;
పయనుం అరుళుమే.
పాడల్ ఎణ్ : 10
పఱిగొళ్ తలైయినార్
అఱివదు అఱిగిలార్;
వెఱిగొళ్ మిఴలైయీర్;
పిఱివదు అరియదే.
పాడల్ ఎణ్ : 11
కాఴి మా-నగర్
వాఴి సంబందన్
వీఴి-మిఴలైమేల్
తాఴుం మొఴిగళే.
================ ============
No comments:
Post a Comment