திருநாவுக்கரசர் தேவாரம் - Thirunavukkarasar thevaram
5.10 - பண்ணின் நேர் மொழியாள்
5.10 – paNNin nEr mozhiyAL
Here are the links to verses and audio of this padhigam's discussion:
verses: https://drive.google.com/open?id=1iwrCuuVOM8LbxjW7k6IWXsUyGRcKNvlS
******
On YouTube:
Part-1: https://youtu.be/tZHLNwx1rBs
Part-2: https://youtu.be/jKHem-2RqYQ
******
English translation – by V.M.Subramanya Ayyar:
======================
This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts. Please print the pages you need.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.10 – திருமறைக்காடு - (திருக்குறுந்தொகை )
Background:
பதிக வரலாறு :
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருமறைக்காட்டுக் கோயில் புகுந்து வலங்கொண்டு திருமுன்பு சென்று சேர்ந்தனர் . வேதங்கள் பூசித்துக் கதவைத் திருக்காப்புச் செய்த நாள்முதல் அன்றுவரை அந்தக் கதவு அடைத்தே இருந்தது. பக்கத்தில் வேறொரு வாயில் வழியாக அடியவர்கள் சென்று வழிபட்டுவந்தனர்; சம்பந்தரும் அப்பரும் இச்செய்தியைக் கேட்டறிந்தனர்; `சன்னிதி முன் உள்ள கதவு திருக்காப்பு நீங்கப் பாடும் அப்பரே !` என்று சம்பந்தர் திருநாவுக்கரசரை வேண்டினார். அச்சமயத்தில் திருநாவுக்கரசர் "பண்ணின் நேர்மொழியாள்" என்று தொடங்கும் இப்பதிகத்தைப் பாடியருளினார். பதிகத்தின் நிறைவில் கதவு திறந்தது.
http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=732
இக்காலத்தில் வேதாரண்யம் என்று வழங்குகின்றது.
ஏழு திருமுறைகளிலும் இடம் பெற்ற சிறப்புடைய தலம். சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று.
----------
1529 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 264
மன்றல் விரவு மலர்ப்புன்னை மணஞ்சூழ் சோலை யுப்பளத்தின்
முன்றி றோறுஞ் சிறுமடவார் முத்தங் கொழிக்கு மறைக்காட்டுக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த கோயில் புகுந்து வலங்கொண்டு
சென்று சேர்ந்தார் தென்புகலிக் கோவு மரசுந் திருமுன்பு.
1530 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 265
பரவை யோதக் கழிக்கானற் பாங்கு நெருங்கு மப்பதியில்
அரவச் சடையந் தணனாரை யகில மறைக ளருச்சனைசெய்
துரவக் கதவந் திருக்காப்புச் செய்த வந்நாள் முதலிந்நாள்
வரையு மடைத்தே நிற்கின்ற மணிநீள் வாயில் வணங்குவார்.
1531 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 266
தொல்லை வேதந் திருக்காப்புச் செய்த வாயிற் றொடர்வகற்ற
வல்ல வன்ப ரணையாமை மருங்கோர் வாயில் வழியெய்தி
யல்ல றீர்ப்பார் தமையருச்சிப் பார்க டொழுவா ராம்படிகண்
டெல்லை யில்லாப் பெரும்புகழா ரிதனை யங்குக் கேட்டறிந்தார்.
1532 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 267
ஆங்கப் பரிசை யறிந்தருளி யாழித் தோணி புரத்தரசர்
"ஓங்கு வேத மருச்சனைசெ யும்பர் பிரானை யுள்புக்குத்
தேங்கா திருவோ நேரிறைஞ்சத் திருமுன் கதவந் திருக்காப்பு
நீங்கப் பாடு மப்பர்!"என நீடுந் திருநா வுக்கரசர்;
1533 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 268
உண்ணீர் மையினாற் பிள்ளையா ருரைசெய் தருள வதனாலே
"பண்ணி னேரு மொழியா"ளென் றெடுத்துப் பாடப் பயன்றுய்ப்பான்
றெண்ணீ ரணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத், திருக்கடைக்காப்
"பெண்ணீ ரிரக்க மொன்றில்லீர்" என்று பாடி யிறைஞ்சுதலும்.
1534 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 269
வேத வனத்தின் மெய்ப்பொருளி னருளால் விளங்கு மணிக்கதவங்
காத லன்பர் முன்புதிருக் காப்பு நீங்கக், கலைமொழிக்கு
நாதர் ஞான முனிவருடன் றொழுது விழுந்தார்; ஞாலத்துள்
ஓத வொலியின் மிக்கெழுந்த தும்ப ரார்ப்பு மறையொலியும்.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.10 – திருமறைக்காடு - (திருக்குறுந்தொகை )
பாடல் எண் : 1
பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.
பாடல் எண் : 2
ஈண்டு செஞ்சடை யாகத்து ளீசரோ
மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே.
பாடல் எண் : 3
அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட விக்கத வந்திறப் பிம்மினே.
பாடல் எண் : 4
அரிய நான்மறை யோதிய நாவரோ
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான்கத வம்பிரி விக்கவே.
பாடல் எண் : 5
மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே.
பாடல் எண் : 6
பூக்குந் தாழை புறணி யருகெலாம்
ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீரடி கேளுமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே.
பாடல் எண் : 7
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்த மில்லி யணிமறைக் காடரோ
எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே.
பாடல் எண் : 8
ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே.
பாடல் எண் : 9
சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுகந் தேறும் பரமரோ
அண்ண லாதி யணிமறைக் காடரோ
திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே.
பாடல் எண் : 10
விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.
பாடல் எண் : 11
அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.
Word separated version:
1529 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 264
மன்றல் விரவு மலர்ப்-புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறும் சிறு-மடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டுக்
குன்ற-வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலங்கொண்டு
சென்று சேர்ந்தார் தென்-புகலிக் கோவும் அரசும் திரு-முன்பு.
1530 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 265
பரவை ஓதக் கழிக்-கானல் பாங்கு நெருங்கும் அப்-பதியில்
அரவச்சடை அந்தணனாரை அகில மறைகள் அருச்சனை-செய்து
உரவக் கதவம் திருக்-காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி-நீள்-வாயில் வணங்குவார்.
1531 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 266
தொல்லை வேதம் திருக்-காப்புச் செய்த வாயில் தொடர்வு-அகற்ற
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி
அல்லல் தீர்ப்பார்-தமை அருச்சிப்பார்கள் தொழுவாராம்படி கண்டு
எல்லை இல்லாப் பெரும்-புகழார் இதனை அங்குக் கேட்டு-அறிந்தார்.
1532 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 267
ஆங்கு அப்-பரிசை அறிந்தருளி ஆழித் தோணி-புரத்து அரசர்,
"ஓங்கு வேதம் அருச்சனை-செய் உம்பர் பிரானை உள்-புக்குத்
தேங்காது இருவோம் நேர் இறைஞ்சத் திரு-முன் கதவம் திருக்-காப்பு
நீங்கப் பாடும் அப்பர்!" என, நீடும் திருநாவுக்கரசர்;
1533 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 268
உள்-நீர்மையினால் பிள்ளையார் உரைசெய்தருள அதனாலே
"பண்ணின் நேரும் மொழியாள்" என்று எடுத்துப் பாடப், பயன் துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்-காப்பு நீக்கத் தாழ்க்கத் , திருக்-கடைக்காப்பு
"எண்ணீர் இரக்கம்-ஒன்று இல்லீர்" என்று பாடி இறைஞ்சுதலும்.
1534 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 269
வேதவனத்தின் மெய்ப்பொருளின் அருளால் விளங்கு மணிக்-கதவம்
காதல் அன்பர் முன்பு திருக்-காப்பு நீங்கக், கலைமொழிக்கு
நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார்; ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கு எழுந்தது உம்பர் ஆர்ப்பும் மறை-ஒலியும்.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.10 – திருமறைக்காடு - (திருக்குறுந்தொகை )
பாடல் எண் : 1
பண்ணின்-நேர் மொழியாள் உமை-பங்கரோ;
மண்ணினார் வலஞ்செய்ம் மறைக்காடரோ;
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே.
பாடல் எண் : 2
ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ;
மூண்ட கார்முகிலின் முறிக் கண்டரோ;
ஆண்டுகொண்ட நீரே அருள் செய்திடும்;
நீண்ட மாக்-கதவின் வலி நீக்குமே.
பாடல் எண் : 3
அட்டமூர்த்தி-அது ஆகிய அப்பரோ;
துட்டர் வான்-புரம் சுட்ட சுவண்டரோ;
பட்டம் கட்டிய சென்னிப் பரமரோ;
சட்ட இக்-கதவம் திறப்பிம்மினே.
பாடல் எண் : 4
அரிய நான்மறை ஓதிய நாவரோ;
பெரிய வான்-புரம் சுட்ட சுவண்டரோ;
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ;
பெரிய வான்-கதவம் பிரிவிக்கவே.
பாடல் எண் : 5
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ;
கலைகள் வந்து இறைஞ்சும் கழல்-ஏத்தரோ;
விலை-இல் மா-மணி-வண்ண உருவரோ;
தொலைவு இலாக் கதவம் துணை நீக்குமே.
பாடல் எண் : 6
பூக்கும் தாழை புறணி அருகு-எலாம்
ஆக்கும் தண்பொழில் சூழ் மறைக்காடரோ;
ஆர்க்கும் காண்பு-அரியீர்; அடிகேள்; உமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே.
பாடல் எண் : 7
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ;
அந்தம்-இல்லி, அணி மறைக்காடரோ;
எந்தை நீ, அடியார் வந்து இறைஞ்சிட,
இந்த மாக்-கதவம் பிணி நீக்குமே.
பாடல் எண் : 8
ஆறு சூடும் அணி மறைக்காடரோ;
கூறு மாது-உமைக்கு ஈந்த குழகரோ;
ஏறு-அது ஏறிய எம்பெருமான்; இந்த
மாறு-இலாக் கதவம் வலி நீக்குமே.
பாடல் எண் : 9
சுண்ண வெண்பொடிப் பூசும் சுவண்டரோ;
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ;
அண்ணல், ஆதி, அணி மறைக்காடரோ;
திண்ணமாக் கதவம் திறப்பிம்மினே.
(திண்ணமாக்கதவம் - 1. திண்ணமாக் கதவம்; 2. திண்ண மாக் கதவம்;)
பாடல் எண் : 10
விண்-உளார் விரும்பி எதிர் கொள்ளவே
மண்-உளார் வணங்கும் மறைக்காடரோ;
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே.
பாடல் எண் : 11
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம்-ஒன்று இலீர், எம்பெருமானிரே;
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ;
சரக்க இக்-கதவம் திறப்பிம்மினே.
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
1529 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 264
manḍral viravu malarp-punnai maṇam sūḻ sōlai uppaḷattin
munḍril tōṟum siṟu-maḍavār muttam koḻikkum maṟaikkāṭṭuk
kunḍra-villiyār magiḻnda kōyil pugundu valaṅgoṇḍu
senḍru sērndār ten-pugalik kōvum arasum tiru-munbu.
1530 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 265
paravai ōdak kaḻik-kānal pāṅgu neruṅgum ap-padiyil
aravaccaḍai andaṇanārai agila maṟaigaḷ aruccanai-seydu
uravak kadavam tiruk-kāppuc ceyda annāḷ mudal innāḷ
varaiyum aḍaittē niṟkinḍra maṇi-nīḷ-vāyil vaṇaṅguvār.
1531 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 266
tollai vēdam tiruk-kāppuc ceyda vāyil toḍarvu-agaṭra
valla anbar aṇaiyāmai maruṅgu ōr vāyil vaḻi eydi
allal tīrppār-tamai aruccippārgaḷ toḻuvārāmbaḍi kaṇḍu
ellai illāp perum-pugaḻār idanai aṅguk kēṭṭu-aṟindār.
1532 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 267
āṅgu ap-parisai aṟindaruḷi āḻit tōṇi-purattu arasar,
"ōṅgu vēdam aruccanai-sey umbar pirānai uḷ-pukkut
tēṅgādu iruvōm nēr iṟaiñjat tiru-mun kadavam tiruk-kāppu
nīṅgap pāḍum appar!" ena, nīḍum tirunāvukkarasar;
1533 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 268
uḷ-nīrmaiyināl piḷḷaiyār uraiseydaruḷa adanālē
"paṇṇin nērum moḻiyāḷ" enḍru eḍuttup pāḍap, payan tuyppān
teṇṇīr aṇindār tiruk-kāppu nīkkat tāḻkkat , tiruk-kaḍaikkāppu
"eṇṇīr irakkam-onḍru illīr" enḍru pāḍi iṟaiñjudalum.
1534 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 269
vēdavanattin meypporuḷin aruḷāl viḷaṅgu maṇik-kadavam
kādal anbar munbu tiruk-kāppu nīṅgak, kalaimoḻikku
nādar ñāna munivaruḍan toḻudu viḻundār; ñālattuḷ
ōda oliyin mikku eḻundadu umbar ārppum maṟai-oliyum.
tirunāvukkarasar tēvāram - padigam 5.10 – tirumaṟaikkāḍu - (tirukkuṟundogai )
pāḍal eṇ : 1
paṇṇin-nēr moḻiyāḷ umai-paṅgarō;
maṇṇinār valañjeym maṟaikkāḍarō;
kaṇṇināl umaik kāṇak kadavinait
tiṇṇamāgat tiṟandaruḷ seymminē.
pāḍal eṇ : 2
īṇḍu señjaḍai āgattuḷ īsarō;
mūṇḍa kārmugilin muṟik kaṇḍarō;
āṇḍugoṇḍa nīrē aruḷ seydiḍum;
nīṇḍa māk-kadavin vali nīkkumē.
pāḍal eṇ : 3
aṭṭamūrtti-adu āgiya apparō;
tuṭṭar vān-puram suṭṭa suvaṇḍarō;
paṭṭam kaṭṭiya sennip paramarō;
saṭṭa ik-kadavam tiṟappimminē.
pāḍal eṇ : 4
ariya nānmaṟai ōdiya nāvarō;
periya vān-puram suṭṭa suvaṇḍarō;
virigoḷ kōvaṇa āḍai viruttarō;
periya vān-kadavam pirivikkavē.
pāḍal eṇ : 5
malaiyil nīḍu irukkum maṟaikkāḍarō;
kalaigaḷ vandu iṟaiñjum kaḻal-ēttarō;
vilai-il mā-maṇi-vaṇṇa uruvarō;
tolaivu ilāk kadavam tuṇai nīkkumē.
pāḍal eṇ : 6
pūkkum tāḻai puṟaṇi arugu-elām
ākkum taṇboḻil sūḻ maṟaikkāḍarō;
ārkkum kāṇbu-ariyīr; aḍigēḷ; umai
nōkkik kāṇak kadavait tiṟavumē.
pāḍal eṇ : 7
venda veṇboḍip pūsum vigirdarō;
andam-illi, aṇi maṟaikkāḍarō;
endai nī, aḍiyār vandu iṟaiñjiḍa,
inda māk-kadavam piṇi nīkkumē.
pāḍal eṇ : 8
āṟu sūḍum aṇi maṟaikkāḍarō;
kūṟu mādu-umaikku īnda kuḻagarō;
ēṟu-adu ēṟiya emberumān; inda
māṟu-ilāk kadavam vali nīkkumē.
pāḍal eṇ : 9
suṇṇa veṇboḍip pūsum suvaṇḍarō;
paṇṇi ēṟu ugandu ēṟum paramarō;
aṇṇal, ādi, aṇi maṟaikkāḍarō;
tiṇṇamāk kadavam tiṟappimminē.
(tiṇṇamākkadavam - 1. tiṇṇamāk kadavam; 2. tiṇṇa māk kadavam;)
pāḍal eṇ : 10
viṇ-uḷār virumbi edir koḷḷavē
maṇ-uḷār vaṇaṅgum maṟaikkāḍarō;
kaṇṇināl umaik kāṇak kadavinait
tiṇṇamāgat tiṟandaruḷ seymminē.
pāḍal eṇ : 11
arakkanai viralāl aḍarttiṭṭa nīr
irakkam-onḍru ilīr, emberumānirē;
surakkum punnaigaḷ sūḻ maṟaikkāḍarō;
sarakka ik-kadavam tiṟappimminē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
१५२९ - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - २६४
मन्ड्रल् विरवु मलर्प्-पुन्नै मणम् सूऴ् सोलै उप्पळत्तिन्
मुन्ड्रिल् तोऱुम् सिऱु-मडवार् मुत्तम् कॊऴिक्कुम् मऱैक्काट्टुक्
कुन्ड्र-विल्लियार् मगिऴ्न्द कोयिल् पुगुन्दु वलङ्गॊण्डु
सॆन्ड्रु सेर्न्दार् तॆन्-पुगलिक् कोवुम् अरसुम् तिरु-मुन्बु.
१५३० - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - २६५
परवै ओदक् कऴिक्-कानल् पाङ्गु नॆरुङ्गुम् अप्-पदियिल्
अरवच्चडै अन्दणनारै अगिल मऱैगळ् अरुच्चनै-सॆय्दु
उरवक् कदवम् तिरुक्-काप्पुच् चॆय्द अन्नाळ् मुदल् इन्नाळ्
वरैयुम् अडैत्ते निऱ्किन्ड्र मणि-नीळ्-वायिल् वणङ्गुवार्.
१५३१ - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - २६६
तॊल्लै वेदम् तिरुक्-काप्पुच् चॆय्द वायिल् तॊडर्वु-अगट्र
वल्ल अन्बर् अणैयामै मरुङ्गु ओर् वायिल् वऴि ऎय्दि
अल्लल् तीर्प्पार्-तमै अरुच्चिप्पार्गळ् तॊऴुवाराम्बडि कण्डु
ऎल्लै इल्लाप् पॆरुम्-पुगऴार् इदनै अङ्गुक् केट्टु-अऱिन्दार्.
१५३२ - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - २६७
आङ्गु अप्-परिसै अऱिन्दरुळि आऴित् तोणि-पुरत्तु अरसर्,
"ओङ्गु वेदम् अरुच्चनै-सॆय् उम्बर् पिरानै उळ्-पुक्कुत्
तेङ्गादु इरुवोम् नेर् इऱैञ्जत् तिरु-मुन् कदवम् तिरुक्-काप्पु
नीङ्गप् पाडुम् अप्पर्!" ऎन, नीडुम् तिरुनावुक्करसर्;
१५३३ - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - २६८
उळ्-नीर्मैयिनाल् पिळ्ळैयार् उरैसॆय्दरुळ अदनाले
"पण्णिन् नेरुम् मॊऴियाळ्" ऎन्ड्रु ऎडुत्तुप् पाडप्, पयन् तुय्प्पान्
तॆण्णीर् अणिन्दार् तिरुक्-काप्पु नीक्कत् ताऴ्क्कत् , तिरुक्-कडैक्काप्पु
"ऎण्णीर् इरक्कम्-ऒन्ड्रु इल्लीर्" ऎन्ड्रु पाडि इऱैञ्जुदलुम्.
१५३४ - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - २६९
वेदवनत्तिन् मॆय्प्पॊरुळिन् अरुळाल् विळङ्गु मणिक्-कदवम्
कादल् अन्बर् मुन्बु तिरुक्-काप्पु नीङ्गक्, कलैमॊऴिक्कु
नादर् ञान मुनिवरुडन् तॊऴुदु विऴुन्दार्; ञालत्तुळ्
ओद ऒलियिन् मिक्कु ऎऴुन्ददु उम्बर् आर्प्पुम् मऱै-ऒलियुम्.
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् ५.१० – तिरुमऱैक्काडु - (तिरुक्कुऱुन्दॊगै )
पाडल् ऎण् : १
पण्णिन्-नेर् मॊऴियाळ् उमै-पङ्गरो;
मण्णिनार् वलञ्जॆय्म् मऱैक्काडरो;
कण्णिनाल् उमैक् काणक् कदविनैत्
तिण्णमागत् तिऱन्दरुळ् सॆय्म्मिने.
पाडल् ऎण् : २
ईण्डु सॆञ्जडै आगत्तुळ् ईसरो;
मूण्ड कार्मुगिलिन् मुऱिक् कण्डरो;
आण्डुगॊण्ड नीरे अरुळ् सॆय्दिडुम्;
नीण्ड माक्-कदविन् वलि नीक्कुमे.
पाडल् ऎण् : ३
अट्टमूर्त्ति-अदु आगिय अप्परो;
तुट्टर् वान्-पुरम् सुट्ट सुवण्डरो;
पट्टम् कट्टिय सॆन्निप् परमरो;
सट्ट इक्-कदवम् तिऱप्पिम्मिने.
पाडल् ऎण् : ४
अरिय नान्मऱै ओदिय नावरो;
पॆरिय वान्-पुरम् सुट्ट सुवण्डरो;
विरिगॊळ् कोवण आडै विरुत्तरो;
पॆरिय वान्-कदवम् पिरिविक्कवे.
पाडल् ऎण् : ५
मलैयिल् नीडु इरुक्कुम् मऱैक्काडरो;
कलैगळ् वन्दु इऱैञ्जुम् कऴल्-एत्तरो;
विलै-इल् मा-मणि-वण्ण उरुवरो;
तॊलैवु इलाक् कदवम् तुणै नीक्कुमे.
पाडल् ऎण् : ६
पूक्कुम् ताऴै पुऱणि अरुगु-ऎलाम्
आक्कुम् तण्बॊऴिल् सूऴ् मऱैक्काडरो;
आर्क्कुम् काण्बु-अरियीर्; अडिगेळ्; उमै
नोक्किक् काणक् कदवैत् तिऱवुमे.
पाडल् ऎण् : ७
वॆन्द वॆण्बॊडिप् पूसुम् विगिर्दरो;
अन्दम्-इल्लि, अणि मऱैक्काडरो;
ऎन्दै नी, अडियार् वन्दु इऱैञ्जिड,
इन्द माक्-कदवम् पिणि नीक्कुमे.
पाडल् ऎण् : ८
आऱु सूडुम् अणि मऱैक्काडरो;
कूऱु मादु-उमैक्कु ईन्द कुऴगरो;
एऱु-अदु एऱिय ऎम्बॆरुमान्; इन्द
माऱु-इलाक् कदवम् वलि नीक्कुमे.
पाडल् ऎण् : ९
सुण्ण वॆण्बॊडिप् पूसुम् सुवण्डरो;
पण्णि एऱु उगन्दु एऱुम् परमरो;
अण्णल्, आदि, अणि मऱैक्काडरो;
तिण्णमाक् कदवम् तिऱप्पिम्मिने.
(तिण्णमाक्कदवम् - १. तिण्णमाक् कदवम्; २. तिण्ण माक् कदवम्;)
पाडल् ऎण् : १०
विण्-उळार् विरुम्बि ऎदिर् कॊळ्ळवे
मण्-उळार् वणङ्गुम् मऱैक्काडरो;
कण्णिनाल् उमैक् काणक् कदविनैत्
तिण्णमागत् तिऱन्दरुळ् सॆय्म्मिने.
पाडल् ऎण् : ११
अरक्कनै विरलाल् अडर्त्तिट्ट नीर्
इरक्कम्-ऒन्ड्रु इलीर्, ऎम्बॆरुमानिरे;
सुरक्कुम् पुन्नैगळ् सूऴ् मऱैक्काडरो;
सरक्क इक्-कदवम् तिऱप्पिम्मिने.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
1529 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 264
మన్డ్రల్ విరవు మలర్ప్-పున్నై మణం సూఴ్ సోలై ఉప్పళత్తిన్
మున్డ్రిల్ తోఱుం సిఱు-మడవార్ ముత్తం కొఴిక్కుం మఱైక్కాట్టుక్
కున్డ్ర-విల్లియార్ మగిఴ్న్ద కోయిల్ పుగుందు వలంగొండు
సెన్డ్రు సేర్న్దార్ తెన్-పుగలిక్ కోవుం అరసుం తిరు-మున్బు.
1530 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 265
పరవై ఓదక్ కఴిక్-కానల్ పాంగు నెరుంగుం అప్-పదియిల్
అరవచ్చడై అందణనారై అగిల మఱైగళ్ అరుచ్చనై-సెయ్దు
ఉరవక్ కదవం తిరుక్-కాప్పుచ్ చెయ్ద అన్నాళ్ ముదల్ ఇన్నాళ్
వరైయుం అడైత్తే నిఱ్కిన్డ్ర మణి-నీళ్-వాయిల్ వణంగువార్.
1531 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 266
తొల్లై వేదం తిరుక్-కాప్పుచ్ చెయ్ద వాయిల్ తొడర్వు-అగట్ర
వల్ల అన్బర్ అణైయామై మరుంగు ఓర్ వాయిల్ వఴి ఎయ్ది
అల్లల్ తీర్ప్పార్-తమై అరుచ్చిప్పార్గళ్ తొఴువారాంబడి కండు
ఎల్లై ఇల్లాప్ పెరుం-పుగఴార్ ఇదనై అంగుక్ కేట్టు-అఱిందార్.
1532 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 267
ఆంగు అప్-పరిసై అఱిందరుళి ఆఴిత్ తోణి-పురత్తు అరసర్,
"ఓంగు వేదం అరుచ్చనై-సెయ్ ఉంబర్ పిరానై ఉళ్-పుక్కుత్
తేంగాదు ఇరువోం నేర్ ఇఱైంజత్ తిరు-మున్ కదవం తిరుక్-కాప్పు
నీంగప్ పాడుం అప్పర్!" ఎన, నీడుం తిరునావుక్కరసర్;
1533 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 268
ఉళ్-నీర్మైయినాల్ పిళ్ళైయార్ ఉరైసెయ్దరుళ అదనాలే
"పణ్ణిన్ నేరుం మొఴియాళ్" ఎన్డ్రు ఎడుత్తుప్ పాడప్, పయన్ తుయ్ప్పాన్
తెణ్ణీర్ అణిందార్ తిరుక్-కాప్పు నీక్కత్ తాఴ్క్కత్ , తిరుక్-కడైక్కాప్పు
"ఎణ్ణీర్ ఇరక్కం-ఒన్డ్రు ఇల్లీర్" ఎన్డ్రు పాడి ఇఱైంజుదలుం.
1534 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 269
వేదవనత్తిన్ మెయ్ప్పొరుళిన్ అరుళాల్ విళంగు మణిక్-కదవం
కాదల్ అన్బర్ మున్బు తిరుక్-కాప్పు నీంగక్, కలైమొఴిక్కు
నాదర్ ఞాన మునివరుడన్ తొఴుదు విఴుందార్; ఞాలత్తుళ్
ఓద ఒలియిన్ మిక్కు ఎఴుందదు ఉంబర్ ఆర్ప్పుం మఱై-ఒలియుం.
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 5.10 – తిరుమఱైక్కాడు - (తిరుక్కుఱుందొగై )
పాడల్ ఎణ్ : 1
పణ్ణిన్-నేర్ మొఴియాళ్ ఉమై-పంగరో;
మణ్ణినార్ వలంజెయ్మ్ మఱైక్కాడరో;
కణ్ణినాల్ ఉమైక్ కాణక్ కదవినైత్
తిణ్ణమాగత్ తిఱందరుళ్ సెయ్మ్మినే.
పాడల్ ఎణ్ : 2
ఈండు సెంజడై ఆగత్తుళ్ ఈసరో;
మూండ కార్ముగిలిన్ ముఱిక్ కండరో;
ఆండుగొండ నీరే అరుళ్ సెయ్దిడుం;
నీండ మాక్-కదవిన్ వలి నీక్కుమే.
పాడల్ ఎణ్ : 3
అట్టమూర్త్తి-అదు ఆగియ అప్పరో;
తుట్టర్ వాన్-పురం సుట్ట సువండరో;
పట్టం కట్టియ సెన్నిప్ పరమరో;
సట్ట ఇక్-కదవం తిఱప్పిమ్మినే.
పాడల్ ఎణ్ : 4
అరియ నాన్మఱై ఓదియ నావరో;
పెరియ వాన్-పురం సుట్ట సువండరో;
విరిగొళ్ కోవణ ఆడై విరుత్తరో;
పెరియ వాన్-కదవం పిరివిక్కవే.
పాడల్ ఎణ్ : 5
మలైయిల్ నీడు ఇరుక్కుం మఱైక్కాడరో;
కలైగళ్ వందు ఇఱైంజుం కఴల్-ఏత్తరో;
విలై-ఇల్ మా-మణి-వణ్ణ ఉరువరో;
తొలైవు ఇలాక్ కదవం తుణై నీక్కుమే.
పాడల్ ఎణ్ : 6
పూక్కుం తాఴై పుఱణి అరుగు-ఎలాం
ఆక్కుం తణ్బొఴిల్ సూఴ్ మఱైక్కాడరో;
ఆర్క్కుం కాణ్బు-అరియీర్; అడిగేళ్; ఉమై
నోక్కిక్ కాణక్ కదవైత్ తిఱవుమే.
పాడల్ ఎణ్ : 7
వెంద వెణ్బొడిప్ పూసుం విగిర్దరో;
అందం-ఇల్లి, అణి మఱైక్కాడరో;
ఎందై నీ, అడియార్ వందు ఇఱైంజిడ,
ఇంద మాక్-కదవం పిణి నీక్కుమే.
పాడల్ ఎణ్ : 8
ఆఱు సూడుం అణి మఱైక్కాడరో;
కూఱు మాదు-ఉమైక్కు ఈంద కుఴగరో;
ఏఱు-అదు ఏఱియ ఎంబెరుమాన్; ఇంద
మాఱు-ఇలాక్ కదవం వలి నీక్కుమే.
పాడల్ ఎణ్ : 9
సుణ్ణ వెణ్బొడిప్ పూసుం సువండరో;
పణ్ణి ఏఱు ఉగందు ఏఱుం పరమరో;
అణ్ణల్, ఆది, అణి మఱైక్కాడరో;
తిణ్ణమాక్ కదవం తిఱప్పిమ్మినే.
(తిణ్ణమాక్కదవం - 1. తిణ్ణమాక్ కదవం; 2. తిణ్ణ మాక్ కదవం;)
పాడల్ ఎణ్ : 10
విణ్-ఉళార్ విరుంబి ఎదిర్ కొళ్ళవే
మణ్-ఉళార్ వణంగుం మఱైక్కాడరో;
కణ్ణినాల్ ఉమైక్ కాణక్ కదవినైత్
తిణ్ణమాగత్ తిఱందరుళ్ సెయ్మ్మినే.
పాడల్ ఎణ్ : 11
అరక్కనై విరలాల్ అడర్త్తిట్ట నీర్
ఇరక్కం-ఒన్డ్రు ఇలీర్, ఎంబెరుమానిరే;
సురక్కుం పున్నైగళ్ సూఴ్ మఱైక్కాడరో;
సరక్క ఇక్-కదవం తిఱప్పిమ్మినే.
============ ============
No comments:
Post a Comment