Saturday, October 24, 2015

6.5 - எல்லாம் சிவனென்ன - திருவதிகை வீரட்டானம் ( போற்றித் திருத்தாண்டகம் )

16) padhigam 6.5 - திருவதிகை வீரட்டானம் ( போற்றித் திருத்தாண்டகம் )

Verses - PDF: 6.5 - எல்லாம் சிவனென்ன - போற்றித் திருத்தாண்டகம் - ellām sivan enna - pōṭrit tiruttāṇḍagam


6.5 - ellAm sivanenna nindRAy - word by word meaning - English translation: https://drive.google.com/open?id=1hlJfkBMfPUBP0CKXOI5Aop7dtwBOe4x5

****
On YouTube:
Tamil discussion:

English discussion: 6.5 - ellām sivan enna - Part- - Explanation in English
Part-1: https://youtu.be/ThSpXJwHEuI
Part-2: https://youtu.be/Cr0NRmjzy3g
Part-3: https://youtu.be/kq4o40A_FKY
Part-4: https://youtu.be/zPbrZhfSDaQ
Part-5: https://youtu.be/hBG6vRQHIO0
****

If you need English translation for this padhigam - 6.5 - ellAm sivanenna nindRAy
- by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS6_005.HTM


திருவதிகை வீரட்டானம் - Thiruvadhigai temple - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=853

V. Subramanian


==================== ===============

 Verses in original Tamil version & word separated Tamil / Devanagari / Roman / Telugu scripts

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.5 - திருவதிகை வீரட்டானம் ( போற்றித் திருத்தாண்டகம் )

Background:

திருநாவுக்கரசர் திருவதிகையில் தங்கிப் பணிசெயும் நாள்களில் உள்ளத்தில் அன்பு மீதூர்ந்து பாடிய செந்தமிழ்ப் பதிகங்கள் பலவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 144).

இதன் பாடல்கள் எல்லாவற்றிலும் "போற்றி , போற்றி" என்று பன்முறையாக அருளப்பெற்றிருத்தலால் , இது , "போற்றித் திருத்தாண்டகம்" எனப் பெயர்பெற்றது.

குறிப்பு : போற்றித் திருத்தாண்டகம் - போற்றியை யுடைய திருத்தாண்டகம் . இதில் , "போற்றி" என்பது அச்சொல்லைக் குறித்தது . "போற்றினார்" என்பதனை , "போற்றி செய்தார்" என்றல் வழக்காதலின், "போற்றி" என்பது இகர ஈற்றுத் தொழிற்பெயராகக் கொள்ளப்படும் . அது "வணக்கம்" எனப் பொருள்தரும் . அதனால் அச்சொல், ஆரியத்துள் "நம" என்பது போலத் திருமுறைகளுட் பயின்று வரும் என்க.

--------------

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.5 - திருவதிகை வீரட்டானம் ( போற்றித் திருத்தாண்டகம் )

பாடல் எண் : 1

எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி

.. எரிசுடராய் நின்ற இறைவா போற்றி

கொல்லார் மழுவாட் படையாய் போற்றி

.. கொல்லுங்கூற் றொன்றை யுதைத்தாய் போற்றி

கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி

.. கற்றா ரிடும்பை களைவாய் போற்றி

வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி

.. வீரட்டங் காதல் விமலா போற்றி.


பாடல் எண் : 2

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி

.. பல்லூழி யாய படைத்தாய் போற்றி

ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி

.. உள்குவா ருள்ளத் துறைவாய் போற்றி

காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி

.. கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி

ஆட்டுவதோர் நாக மசைத்தாய் போற்றி

.. அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.


பாடல் எண் : 3

முல்லையங் கண்ணி முடியாய் போற்றி

.. முழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி

எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி

.. ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி

சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி

.. சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி

தில்லைச்சிற் றம்பலம் மேயாய் போற்றி

.. திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி.


பாடல் எண் : 4

சாம்ப ரகலத் தணிந்தாய் போற்றி

.. தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி

கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்

.. குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி

பாம்பும் மதியும் புனலுந் தம்மிற்

.. பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி

ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி

.. அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.


பாடல் எண் : 5

நீறேறு நீல மிடற்றாய் போற்றி

.. நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி

கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி

.. கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி

ஆறேறு சென்னி யுடையாய் போற்றி

.. அடியார்கட் காரமுத மானாய் போற்றி

ஏறேற என்றும் உகப்பாய் போற்றி

.. யிருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.


பாடல் எண் : 6

பாடுவார் பாட லுகப்பாய் போற்றி

.. பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி

வீடுவார் வீடருள வல்லாய் போற்றி

.. வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி

நாடுவார் நாடற் கரியாய் போற்றி

.. நாக மரைக்கசைத்த நம்பா போற்றி

ஆடும்ஆன் ஐந்தும் உகப்பாய் போற்றி

.. அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.


பாடல் எண் : 7

மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி

.. மால்கடலும் மால்விசும்பு மானாய் போற்றி

விண்துளங்க மும்மதிலு மெய்தாய் போற்றி

.. வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி

பண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி

.. பார்முழுதும் ஆய பரமா போற்றி

கண்துளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி

.. கார்க்கெடிலங் கொண்ட கபாலீ போற்றி.


பாடல் எண் : 8

வெஞ்சினவெள் ஏறூர்தி யுடையாய் போற்றி

.. விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி

துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி

.. தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி

நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி

.. நான்மறையோ டாறங்க மானாய் போற்றி

அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி

.. அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.


பாடல் எண் : 9

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி

.. சீபர்ப் பதஞ்சிந்தை செய்தாய் போற்றி

புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி

.. புண்ணியனே போற்றி புனிதா போற்றி

சந்தியாய் நின்ற சதுரா போற்றி

.. தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி

அந்தியாய் நின்ற அரனே போற்றி

.. அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.


பாடல் எண் : 10

முக்கணா போற்றி முதல்வா போற்றி

.. முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி

தக்கணா போற்றி தருமா போற்றி

.. தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி

தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்

.. துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி

எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி

.. எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.

============================= ============================

Word separated version:

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.5 - திருவதிகை வீரட்டானம் ( போற்றித் திருத்தாண்டகம் )

பாடல் எண் : 1

எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி

.. எரி-சுடராய் நின்ற இறைவா போற்றி

கொல்-ஆர் மழுவாட் படையாய் போற்றி

.. கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி

.. கற்றார் இடும்பை களைவாய் போற்றி

வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி

.. வீரட்டம் காதல் விமலா போற்றி.


பாடல் எண் : 2

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி

.. பல்-ஊழி ஆய படைத்தாய் போற்றி

ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி

.. உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி

காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி

.. கார்-மேகம் அன்ன மிடற்றாய் போற்றி

ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி

.. அலை-கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.


பாடல் எண் : 3

முல்லை-அம் கண்ணி முடியாய் போற்றி

.. முழு-நீறு பூசிய மூர்த்தீ போற்றி

எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி

.. ஏழ்-நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி

சில்லைச் சிரைத்-தலையில் ஊணா போற்றி

.. சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி

தில்லைச் சிற்றம்பலம் மேயாய் போற்றி

.. திரு-வீரட்டானத்து எம் செல்வா போற்றி.

(சென்றடைந்தார் - சென்று அடைந்தார் )


பாடல் எண் : 4

சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி

.. தவ-நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி

கூம்பித் தொழுவார்தம் குற்றேவலைக்

.. குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி

பாம்பும் மதியும் புனலும் தம்மில்

.. பகை-தீர்த்து உடன்-வைத்த பண்பா போற்றி

ஆம்பல் மலர்-கொண்டு அணிந்தாய் போற்றி

.. அலை-கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.


பாடல் எண் : 5

நீறேறு நீல மிடற்றாய் போற்றி

.. நிழல் திகழும் வெண்-மழுவாள் வைத்தாய் போற்றி

கூறேறு உமை ஒரு-பால் கொண்டாய் போற்றி

.. கோள்-அரவம் ஆட்டும் குழகா போற்றி

ஆறேறு சென்னி உடையாய் போற்றி

.. அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

ஏறேற என்றும் உகப்பாய் போற்றி

.. இருங்கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி.

( நீறேறு - நீறு ஏறு; கூறேறு - கூறு ஏறு; ஆறேறு - ஆறு ஏறு; ஏறேற - ஏறு ஏற; இருங்கெடில - இரும்-கெடில )


பாடல் எண் : 6

பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி

.. பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி

வீடுவார் வீடருள வல்லாய் போற்றி

.. வேழத்து உரி வெருவப் போர்த்தாய் போற்றி

நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி

.. நாகம் அரைக்கு-அசைத்த நம்பா போற்றி

ஆடும் ஆன்-ஐந்தும் உகப்பாய் போற்றி

.. அலை-கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

( வீடருள - வீடு அருள; )


பாடல் எண் : 7

மண்-துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி

.. மால்-கடலும் மால்-விசும்பும் ஆனாய் போற்றி

விண்-துளங்க மும்-மதிலும் எய்தாய் போற்றி

.. வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி

பண்-துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி

.. பார் முழுதும் ஆய பரமா போற்றி

கண்-துளங்கக் காமனை முன் காய்ந்தாய் போற்றி

.. கார்க்-கெடிலம் கொண்ட கபாலீ போற்றி.


பாடல் எண் : 8

வெஞ்சின-வெள் ஏறு ஊர்தி உடையாய் போற்றி

.. விரி-சடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி

துஞ்சாப் பலி-தேரும் தோன்றால் போற்றி

.. தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி

நஞ்சொடுங்கும் கண்டத்து நாதா போற்றி

.. நான்மறையோடு ஆறங்கம் ஆனாய் போற்றி

அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி

.. அலை-கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

( நஞ்சொடுங்கும் - நஞ்சு ஒடுங்கும் )


பாடல் எண் : 9

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி

.. சீபர்ப்பதம் சிந்தை செய்தாய் போற்றி

புந்தியாய்ப் புண்டரிகத்து உள்ளாய் போற்றி

.. புண்ணியனே போற்றி புனிதா போற்றி

சந்தியாய் நின்ற சதுரா போற்றி

.. தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி

அந்தியாய் நின்ற அரனே போற்றி

.. அலை-கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.


பாடல் எண் : 10

முக்கணா போற்றி முதல்வா போற்றி

.. முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி

தக்கணா போற்றி தருமா போற்றி

.. தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி

தொக்கணா என்று இருவர் தோள்-கை கூப்பத்

.. துளங்காது எரி-சுடராய் நின்றாய் போற்றி

எக்-கண்ணும் கண்ணிலேன் எந்தாய் போற்றி

.. எறி-கெடில வீரட்டத்து ஈசா போற்றி.

(தொக்கணா - தொக்கு அணா; கண்ணிலேன் - கண் இலேன்)

============================= ============================


Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tirunāvukkarasar tēvāram - padigam 6.5 - tiruvadigai vīraṭṭānam ( pōṭrit tiruttāṇḍagam )


pāḍal eṇ : 1

ellām sivan enna niṇḍrāy pōṭri

.. eri-suḍarāy niṇḍra iṟaivā pōṭri

kol-ār maḻuvāṭ paḍaiyāy pōṭri

.. kollum kūṭru oṇḍrai udaittāy pōṭri

kallādār kāṭcikku ariyāy pōṭri

.. kaṭrār iḍumbai kaḷaivāy pōṭri

villāl viyan araṇam eydāy pōṭri

.. vīraṭṭam kādal vimalā pōṭri.


pāḍal eṇ : 2

pāṭṭukkum āṭṭukkum paṇbā pōṭri

.. pal-ūḻi āya paḍaittāy pōṭri

ōṭṭagattē ūṇā ugandāy pōṭri

.. uḷguvār uḷḷattu uṟaivāy pōṭri

kāṭṭagattē āḍal magiḻndāy pōṭri

.. kār-mēgam anna miḍaṭrāy pōṭri

āṭṭuvadōr nāgam asaittāy pōṭri

.. alai-keḍila vīraṭṭattu āḷvāy pōṭri.


pāḍal eṇ : 3

mullai-am kaṇṇi muḍiyāy pōṭri

.. muḻu-nīṟu pūsiya mūrttī pōṭri

ellai niṟainda kuṇattāy pōṭri

.. ēḻ-narambin ōsai paḍaittāy pōṭri

sillaic cirait-talaiyil ūṇā pōṭri

.. seṇḍraḍaindār tīvinaigaḷ tīrppāy pōṭri

tillaic ciṭrambalam mēyāy pōṭri

.. tiru-vīraṭṭānattu em selvā pōṭri.

(seṇḍraḍaindār - seṇḍru aḍaindār )


pāḍal eṇ : 4

sāmbar agalattu aṇindāy pōṭri

.. tava-neṟigaḷ sādittu niṇḍrāy pōṭri

kūmbit toḻuvārdam kuṭrēvalaik

.. kuṟikkoṇḍu irukkum kuḻagā pōṭri

pāmbum madiyum punalum tammil

.. pagai-tīrttu uḍan-vaitta paṇbā pōṭri

āmbal malar-koṇḍu aṇindāy pōṭri

.. alai-keḍila vīraṭṭattu āḷvāy pōṭri.


pāḍal eṇ : 5

nīṟēṟu nīla miḍaṭrāy pōṭri

.. niḻal tigaḻum veṇ-maḻuvāḷ vaittāy pōṭri

kūṟēṟu umai oru-pāl koṇḍāy pōṭri

.. kōḷ-aravam āṭṭum kuḻagā pōṭri

āṟēṟu senni uḍaiyāy pōṭri

.. aḍiyārgaṭku āramudam ānāy pōṭri

ēṟēṟa eṇḍrum ugappāy pōṭri

.. iruṅgeḍila vīraṭṭattu endāy pōṭri.

( nīṟēṟu - nīṟu ēṟu; kūṟēṟu - kūṟu ēṟu; āṟēṟu - āṟu ēṟu;

ēṟēṟa - ēṟu ēṟa; iruṅgeḍila - irum-keḍila )


pāḍal eṇ : 6

pāḍuvār pāḍal ugappāy pōṭri

.. paḻaiyāṭrup paṭṭīc curattāy pōṭri

vīḍuvār vīḍaruḷa vallāy pōṭri

.. vēḻattu uri veruvap pōrttāy pōṭri

nāḍuvār nāḍaṟku ariyāy pōṭri

.. nāgam araikku-asaitta nambā pōṭri

āḍum ān-aindum ugappāy pōṭri

.. alai-keḍila vīraṭṭattu āḷvāy pōṭri.

( vīḍaruḷa - vīḍu aruḷa; )


pāḍal eṇ : 7

maṇ-tuḷaṅga āḍal magiḻndāy pōṭri

.. māl-kaḍalum māl-visumbum ānāy pōṭri

viṇ-tuḷaṅga mum-madilum eydāy pōṭri

.. vēḻattu uri mūḍum vigirdā pōṭri

paṇ-tuḷaṅgap pāḍal payiṇḍrāy pōṭri

.. pār muḻudum āya paramā pōṭri

kaṇ-tuḷaṅgak kāmanai mun kāyndāy pōṭri

.. kārk-keḍilam koṇḍa kabālī pōṭri.


pāḍal eṇ : 8

veñjina-veḷ ēṟu ūrdi uḍaiyāy pōṭri

.. viri-saḍaimēl veḷḷam paḍaittāy pōṭri

tuñjāp pali-tērum tōṇḍrāl pōṭri

.. toḻudagai tunbam tuḍaippāy pōṭri

nañjoḍuṅgum kaṇḍattu nādā pōṭri

.. nānmaṟaiyōḍu āṟaṅgam ānāy pōṭri

añjolāḷ pāgam amarndāy pōṭri

.. alai-keḍila vīraṭṭattu āḷvāy pōṭri.

( nañjoḍuṅgum - nañju oḍuṅgum )


pāḍal eṇ : 9

sindaiyāy niṇḍra sivanē pōṭri

.. sīparppadam sindai seydāy pōṭri

pundiyāyp puṇḍarigattu uḷḷāy pōṭri

.. puṇṇiyanē pōṭri punidā pōṭri

sandiyāy niṇḍra sadurā pōṭri

.. tattuvanē pōṭri en tādāy pōṭri

andiyāy niṇḍra aranē pōṭri

.. alai-keḍila vīraṭṭattu āḷvāy pōṭri.


pāḍal eṇ : 10

mukkaṇā pōṭri mudalvā pōṭri

.. murugavēḷ tannaip payandāy pōṭri

takkaṇā pōṭri tarumā pōṭri

.. tattuvanē pōṭri en tādāy pōṭri

tokkaṇā eṇḍru iruvar tōḷ-kai kūppat

.. tuḷaṅgādu eri-suḍarāy niṇḍrāy pōṭri

ek-kaṇṇum kaṇṇilēn endāy pōṭri

.. eṟi-keḍila vīraṭṭattu īsā pōṭri.

(tokkaṇā - tokku aṇā; kaṇṇilēn - kaṇ ilēn)

============================= ============================


Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 6.5 - तिरुवदिगै वीरट्टानम् ( पोट्रित् तिरुत्ताण्डगम् )


पाडल् ऎण् : 1

ऎल्लाम् सिवन् ऎन्न निण्ड्राय् पोट्रि

.. ऎरि-सुडराय् निण्ड्र इऱैवा पोट्रि

कॊल्-आर् मऴुवाट् पडैयाय् पोट्रि

.. कॊल्लुम् कूट्रु ऒण्ड्रै उदैत्ताय् पोट्रि

कल्लादार् काट्चिक्कु अरियाय् पोट्रि

.. कट्रार् इडुम्बै कळैवाय् पोट्रि

विल्लाल् वियन् अरणम् ऎय्दाय् पोट्रि

.. वीरट्टम् कादल् विमला पोट्रि.


पाडल् ऎण् : 2

पाट्टुक्कुम् आट्टुक्कुम् पण्बा पोट्रि

.. पल्-ऊऴि आय पडैत्ताय् पोट्रि

ओट्टगत्ते ऊणा उगन्दाय् पोट्रि

.. उळ्गुवार् उळ्ळत्तु उऱैवाय् पोट्रि

काट्टगत्ते आडल् मगिऴ्न्दाय् पोट्रि

.. कार्-मेगम् अन्न मिडट्राय् पोट्रि

आट्टुवदोर् नागम् असैत्ताय् पोट्रि

.. अलै-कॆडिल वीरट्टत्तु आळ्वाय् पोट्रि.


पाडल् ऎण् : 3

मुल्लै-अम् कण्णि मुडियाय् पोट्रि

.. मुऴु-नीऱु पूसिय मूर्त्ती पोट्रि

ऎल्लै निऱैन्द कुणत्ताय् पोट्रि

.. एऴ्-नरम्बिन् ओसै पडैत्ताय् पोट्रि

सिल्लैच् चिरैत्-तलैयिल् ऊणा पोट्रि

.. सॆण्ड्रडैन्दार् तीविनैगळ् तीर्प्पाय् पोट्रि

तिल्लैच् चिट्रम्बलम् मेयाय् पोट्रि

.. तिरु-वीरट्टानत्तु ऎम् सॆल्वा पोट्रि.

(सॆण्ड्रडैन्दार् - सॆण्ड्रु अडैन्दार् )


पाडल् ऎण् : 4

साम्बर् अगलत्तु अणिन्दाय् पोट्रि

.. तव-नॆऱिगळ् सादित्तु निण्ड्राय् पोट्रि

कूम्बित् तॊऴुवार्दम् कुट्रेवलैक्

.. कुऱिक्कॊण्डु इरुक्कुम् कुऴगा पोट्रि

पाम्बुम् मदियुम् पुनलुम् तम्मिल्

.. पगै-तीर्त्तु उडन्-वैत्त पण्बा पोट्रि

आम्बल् मलर्-कॊण्डु अणिन्दाय् पोट्रि

.. अलै-कॆडिल वीरट्टत्तु आळ्वाय् पोट्रि.


पाडल् ऎण् : 5

नीऱेऱु नील मिडट्राय् पोट्रि

.. निऴल् तिगऴुम् वॆण्-मऴुवाळ् वैत्ताय् पोट्रि

कूऱेऱु उमै ऒरु-पाल् कॊण्डाय् पोट्रि

.. कोळ्-अरवम् आट्टुम् कुऴगा पोट्रि

आऱेऱु सॆन्नि उडैयाय् पोट्रि

.. अडियार्गट्कु आरमुदम् आनाय् पोट्रि

एऱेऱ ऎण्ड्रुम् उगप्पाय् पोट्रि

.. इरुङ्गॆडिल वीरट्टत्तु ऎन्दाय् पोट्रि.

( नीऱेऱु - नीऱु एऱु; कूऱेऱु - कूऱु एऱु;

आऱेऱु - आऱु एऱु; एऱेऱ - एऱु एऱ; इरुङ्गॆडिल - इरुम्-कॆडिल )


पाडल् ऎण् : 6

पाडुवार् पाडल् उगप्पाय् पोट्रि

.. पऴैयाट्रुप् पट्टीच् चुरत्ताय् पोट्रि

वीडुवार् वीडरुळ वल्लाय् पोट्रि

.. वेऴत्तु उरि वॆरुवप् पोर्त्ताय् पोट्रि

नाडुवार् नाडऱ्कु अरियाय् पोट्रि

.. नागम् अरैक्कु-असैत्त नम्बा पोट्रि

आडुम् आन्-ऐन्दुम् उगप्पाय् पोट्रि

.. अलै-कॆडिल वीरट्टत्तु आळ्वाय् पोट्रि.

( वीडरुळ - वीडु अरुळ; )


पाडल् ऎण् : 7

मण्-तुळङ्ग आडल् मगिऴ्न्दाय् पोट्रि

.. माल्-कडलुम् माल्-विसुम्बुम् आनाय् पोट्रि

विण्-तुळङ्ग मुम्-मदिलुम् ऎय्दाय् पोट्रि

.. वेऴत्तु उरि मूडुम् विगिर्दा पोट्रि

पण्-तुळङ्गप् पाडल् पयिण्ड्राय् पोट्रि

.. पार् मुऴुदुम् आय परमा पोट्रि

कण्-तुळङ्गक् कामनै मुन् काय्न्दाय् पोट्रि

.. कार्क्-कॆडिलम् कॊण्ड कबाली पोट्रि.


पाडल् ऎण् : 8

वॆञ्जिन-वॆळ् एऱु ऊर्दि उडैयाय् पोट्रि

.. विरि-सडैमेल् वॆळ्ळम् पडैत्ताय् पोट्रि

तुञ्जाप् पलि-तेरुम् तोण्ड्राल् पोट्रि

.. तॊऴुदगै तुन्बम् तुडैप्पाय् पोट्रि

नञ्जॊडुङ्गुम् कण्डत्तु नादा पोट्रि

.. नान्मऱैयोडु आऱङ्गम् आनाय् पोट्रि

अञ्जॊलाळ् पागम् अमर्न्दाय् पोट्रि

.. अलै-कॆडिल वीरट्टत्तु आळ्वाय् पोट्रि.

( नञ्जॊडुङ्गुम् - नञ्जु ऒडुङ्गुम् )


पाडल् ऎण् : 9

सिन्दैयाय् निण्ड्र सिवने पोट्रि

.. सीपर्प्पदम् सिन्दै सॆय्दाय् पोट्रि

पुन्दियाय्प् पुण्डरिगत्तु उळ्ळाय् पोट्रि

.. पुण्णियने पोट्रि पुनिदा पोट्रि

सन्दियाय् निण्ड्र सदुरा पोट्रि

.. तत्तुवने पोट्रि ऎन् तादाय् पोट्रि

अन्दियाय् निण्ड्र अरने पोट्रि

.. अलै-कॆडिल वीरट्टत्तु आळ्वाय् पोट्रि.


पाडल् ऎण् : 10

मुक्कणा पोट्रि मुदल्वा पोट्रि

.. मुरुगवेळ् तन्नैप् पयन्दाय् पोट्रि

तक्कणा पोट्रि तरुमा पोट्रि

.. तत्तुवने पोट्रि ऎन् तादाय् पोट्रि

तॊक्कणा ऎण्ड्रु इरुवर् तोळ्-कै कूप्पत्

.. तुळङ्गादु ऎरि-सुडराय् निण्ड्राय् पोट्रि

ऎक्-कण्णुम् कण्णिलेन् ऎन्दाय् पोट्रि

.. ऎऱि-कॆडिल वीरट्टत्तु ईसा पोट्रि.

(तॊक्कणा - तॊक्कु अणा; कण्णिलेन् - कण् इलेन्)

=============================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

--------------

తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 6.5 - తిరువదిగై వీరట్టానం ( పోట్రిత్ తిరుత్తాండగం )


పాడల్ ఎణ్ : 1

ఎల్లాం సివన్ ఎన్న నిండ్రాయ్ పోట్రి

.. ఎరి-సుడరాయ్ నిండ్ర ఇఱైవా పోట్రి

కొల్-ఆర్ మఴువాట్ పడైయాయ్ పోట్రి

.. కొల్లుం కూట్రు ఒండ్రై ఉదైత్తాయ్ పోట్రి

కల్లాదార్ కాట్చిక్కు అరియాయ్ పోట్రి

.. కట్రార్ ఇడుంబై కళైవాయ్ పోట్రి

విల్లాల్ వియన్ అరణం ఎయ్దాయ్ పోట్రి

.. వీరట్టం కాదల్ విమలా పోట్రి.


పాడల్ ఎణ్ : 2

పాట్టుక్కుం ఆట్టుక్కుం పణ్బా పోట్రి

.. పల్-ఊఴి ఆయ పడైత్తాయ్ పోట్రి

ఓట్టగత్తే ఊణా ఉగందాయ్ పోట్రి

.. ఉళ్గువార్ ఉళ్ళత్తు ఉఱైవాయ్ పోట్రి

కాట్టగత్తే ఆడల్ మగిఴ్న్దాయ్ పోట్రి

.. కార్-మేగం అన్న మిడట్రాయ్ పోట్రి

ఆట్టువదోర్ నాగం అసైత్తాయ్ పోట్రి

.. అలై-కెడిల వీరట్టత్తు ఆళ్వాయ్ పోట్రి.


పాడల్ ఎణ్ : 3

ముల్లై-అం కణ్ణి ముడియాయ్ పోట్రి

.. ముఴు-నీఱు పూసియ మూర్త్తీ పోట్రి

ఎల్లై నిఱైంద కుణత్తాయ్ పోట్రి

.. ఏఴ్-నరంబిన్ ఓసై పడైత్తాయ్ పోట్రి

సిల్లైచ్ చిరైత్-తలైయిల్ ఊణా పోట్రి

.. సెండ్రడైందార్ తీవినైగళ్ తీర్ప్పాయ్ పోట్రి

తిల్లైచ్ చిట్రంబలం మేయాయ్ పోట్రి

.. తిరు-వీరట్టానత్తు ఎం సెల్వా పోట్రి.

(సెండ్రడైందార్ - సెండ్రు అడైందార్ )


పాడల్ ఎణ్ : 4

సాంబర్ అగలత్తు అణిందాయ్ పోట్రి

.. తవ-నెఱిగళ్ సాదిత్తు నిండ్రాయ్ పోట్రి

కూంబిత్ తొఴువార్దం కుట్రేవలైక్

.. కుఱిక్కొండు ఇరుక్కుం కుఴగా పోట్రి

పాంబుం మదియుం పునలుం తమ్మిల్

.. పగై-తీర్త్తు ఉడన్-వైత్త పణ్బా పోట్రి

ఆంబల్ మలర్-కొండు అణిందాయ్ పోట్రి

.. అలై-కెడిల వీరట్టత్తు ఆళ్వాయ్ పోట్రి.


పాడల్ ఎణ్ : 5

నీఱేఱు నీల మిడట్రాయ్ పోట్రి

.. నిఴల్ తిగఴుం వెణ్-మఴువాళ్ వైత్తాయ్ పోట్రి

కూఱేఱు ఉమై ఒరు-పాల్ కొండాయ్ పోట్రి

.. కోళ్-అరవం ఆట్టుం కుఴగా పోట్రి

ఆఱేఱు సెన్ని ఉడైయాయ్ పోట్రి

.. అడియార్గట్కు ఆరముదం ఆనాయ్ పోట్రి

ఏఱేఱ ఎండ్రుం ఉగప్పాయ్ పోట్రి

.. ఇరుంగెడిల వీరట్టత్తు ఎందాయ్ పోట్రి.

( నీఱేఱు - నీఱు ఏఱు; కూఱేఱు - కూఱు ఏఱు;

ఆఱేఱు - ఆఱు ఏఱు; ఏఱేఱ - ఏఱు ఏఱ; ఇరుంగెడిల - ఇరుం-కెడిల )


పాడల్ ఎణ్ : 6

పాడువార్ పాడల్ ఉగప్పాయ్ పోట్రి

.. పఴైయాట్రుప్ పట్టీచ్ చురత్తాయ్ పోట్రి

వీడువార్ వీడరుళ వల్లాయ్ పోట్రి

.. వేఴత్తు ఉరి వెరువప్ పోర్త్తాయ్ పోట్రి

నాడువార్ నాడఱ్కు అరియాయ్ పోట్రి

.. నాగం అరైక్కు-అసైత్త నంబా పోట్రి

ఆడుం ఆన్-ఐందుం ఉగప్పాయ్ పోట్రి

.. అలై-కెడిల వీరట్టత్తు ఆళ్వాయ్ పోట్రి.

( వీడరుళ - వీడు అరుళ; )


పాడల్ ఎణ్ : 7

మణ్-తుళంగ ఆడల్ మగిఴ్న్దాయ్ పోట్రి

.. మాల్-కడలుం మాల్-విసుంబుం ఆనాయ్ పోట్రి

విణ్-తుళంగ ముం-మదిలుం ఎయ్దాయ్ పోట్రి

.. వేఴత్తు ఉరి మూడుం విగిర్దా పోట్రి

పణ్-తుళంగప్ పాడల్ పయిండ్రాయ్ పోట్రి

.. పార్ ముఴుదుం ఆయ పరమా పోట్రి

కణ్-తుళంగక్ కామనై మున్ కాయ్న్దాయ్ పోట్రి

.. కార్క్-కెడిలం కొండ కబాలీ పోట్రి.


పాడల్ ఎణ్ : 8

వెంజిన-వెళ్ ఏఱు ఊర్ది ఉడైయాయ్ పోట్రి

.. విరి-సడైమేల్ వెళ్ళం పడైత్తాయ్ పోట్రి

తుంజాప్ పలి-తేరుం తోండ్రాల్ పోట్రి

.. తొఴుదగై తున్బం తుడైప్పాయ్ పోట్రి

నంజొడుంగుం కండత్తు నాదా పోట్రి

.. నాన్మఱైయోడు ఆఱంగం ఆనాయ్ పోట్రి

అంజొలాళ్ పాగం అమర్న్దాయ్ పోట్రి

.. అలై-కెడిల వీరట్టత్తు ఆళ్వాయ్ పోట్రి.

( నంజొడుంగుం - నంజు ఒడుంగుం )


పాడల్ ఎణ్ : 9

సిందైయాయ్ నిండ్ర సివనే పోట్రి

.. సీపర్ప్పదం సిందై సెయ్దాయ్ పోట్రి

పుందియాయ్ప్ పుండరిగత్తు ఉళ్ళాయ్ పోట్రి

.. పుణ్ణియనే పోట్రి పునిదా పోట్రి

సందియాయ్ నిండ్ర సదురా పోట్రి

.. తత్తువనే పోట్రి ఎన్ తాదాయ్ పోట్రి

అందియాయ్ నిండ్ర అరనే పోట్రి

.. అలై-కెడిల వీరట్టత్తు ఆళ్వాయ్ పోట్రి.


పాడల్ ఎణ్ : 10

ముక్కణా పోట్రి ముదల్వా పోట్రి

.. మురుగవేళ్ తన్నైప్ పయందాయ్ పోట్రి

తక్కణా పోట్రి తరుమా పోట్రి

.. తత్తువనే పోట్రి ఎన్ తాదాయ్ పోట్రి

తొక్కణా ఎండ్రు ఇరువర్ తోళ్-కై కూప్పత్

.. తుళంగాదు ఎరి-సుడరాయ్ నిండ్రాయ్ పోట్రి

ఎక్-కణ్ణుం కణ్ణిలేన్ ఎందాయ్ పోట్రి

.. ఎఱి-కెడిల వీరట్టత్తు ఈసా పోట్రి.

(తొక్కణా - తొక్కు అణా; కణ్ణిలేన్ - కణ్ ఇలేన్)

======================= =============