Sunday, August 27, 2017

7.34 - தம்மையே புகழ்ந்து - திருப்புகலூர் - tiruppugalūr

40) 7.34 - திருப்புகலூர் ( பண் : கொல்லி ) - tiruppugalūr ( paṇ : kolli )
சுந்தரர் தேவாரம் - sundarar thevaram
7.34 - தம்மையே புகழ்ந்து
7.34 - tammaiyē pugaḻndu

Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses - PDF: 7.34 - தம்மையே புகழ்ந்து - tammaiyē pugaḻndu

******

On YouTube:
Tamil discussion:
******

For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS7_034.HTM


V. Subramanian

=======================
(Verses in original Tamil version & word separated Tamil - English - Nagari - Telugu scripts) - print the pages you need)

சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.34 - திருப்புகலூர் ( பண் : கொல்லி )

Background:
பரவையார் பங்குனி உத்திரத் திருநாளில் செய்யும் தானதருமங்களுக்குப் பொருள் பெற எண்ணிச் சுந்தரர் திருவாரூரிலிருந்து திருப்புகலூர் சென்று தொழுதார். பின்னர் இறையருளால் உறக்கம் வரவும், கோயிலின் முன்புறம் செங்கற்களைத் தலைக்கு உயரமாக வைத்துத் துயின்றார் . துயிலெழுந்தபோது செங்கற்கள் பொன்னாகியிருந்ததைக் கண்டு இறையருளை எண்ணி வியந்து பாடியருளியது இத்திருப்பதிகம் .

--------------
#3200 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 46
செறிபுன் சடையார் திருவாரூர்த் திருப்பங் குனியுத் திரத்திருநாள்
குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவிற் குறைவறுக்க
நிறையும் பொன்கொண் டணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணியவெழுந் தருளிச் சென்றங் கெய்தினார்.

#3201 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 47
சென்று விரும்பித் திருப்புகலூர்த் தேவர் பெருமான் கோயில்மணி
முன்றில் பணிந்து வலங்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சித்
தொன்று மரபி னடித்தொண்டு தோய்ந்த வன்பிற் றுதித்தெழுந்து
நின்று பதிக விசைபாடி நினைந்த கருத்து நிகழ்விப்பார்.

#3202 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 48
சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்ன மங்கொழிய
வறிது புறம்போந் தருளியயன் மடத்தி லணையார் வன்றொண்டர்
அறிவு கூர்ந்த வன்பருட னணிமுன் றினிலோ ரருகிருப்ப
மறிவண் கையா ரருளாலோ மலர்க்கண் டுயில்வந் தெய்தியதால்.

#3203 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 49
துயில்வந் தெய்தத் தம்பிரான் றோழ ரங்குத் திருப்பணிக்குப்
பயிலுஞ் சுடுமட் பலகைபல கொணர்வித் துயரம் பண்ணித்தேன்
அயிலும் சுரும்பார் மலர்ச்சிகழி முடிமே லணையா வுத்தரிய
வெயிலுந் தியவெண் பட்டதன்மேல் விரித்துப் பள்ளி மேவினார்.

#3204 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 50
சுற்று மிருந்த தொண்டர்களுந் துயிலு மளவிற் றுணைமலர்க்கண்
பற்றுந் துயினீங் கிடப்பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையா ரருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச்செம்
பொற்றிண் கல்லா யினகண்டு புகலூ ரிறைவ ரருள்போற்றி,

#3205 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 51
தொண்ட ருணர மகிழ்ந்தெழுந்து துணைக்கைக் கமல முகைதலைமேற்
கொண்டு கோயி லுட்புக்குக் குறிப்பி லடங்காப் பேரன்பு
மண்டு காத லுறவணங்கி வாய்த்த மதுர மொழிமாலை
பண்டங் கிசையிற் "றம்மையே புகழ்ந்"தென் றெடுத்துப் பாடினார்.

சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.34 - திருப்புகலூர் ( பண் : கொல்லி )
(தான தானன தான தானன தான தானன தானன - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
..
சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
..
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
..
ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
..
கியாதும் ஐயுற வில்லையே.

பாடல் எண் : 2
மிடுக்கி லாதானை வீம னேவிறல்
..
விசய னேவில்லுக் கிவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
..
கூறி னுங்கொடுப் பாரிலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக
..
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேலம ருலகம் ஆள்வதற்
..
கியாதும் ஐயுற வில்லையே.

பாடல் எண் : 3
காணி யேற்பெரி துடைய னேகற்று
..
நல்ல னேசுற்றம் நன்கிளை
பேணி யேவிருந் தோம்பு மேயென்று
..
பேசி னுங்கொடுப் பாரிலை
பூணி பூண்டுழப் புட்சி லம்புந்தண்
..
புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆணி யாய்அம ருலகம் ஆள்வதற்
..
கியாதும் ஐயுற வில்லையே.

பாடல் எண் : 4
நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல்
..
நடுங்கி நிற்கும்இக் கிழவனை
வரைகள் போல்திரள் தோள னேயென்று
..
வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை
புரைவெள் ளேறுடைப் புண்ணி யன்புக
..
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அரைய னாய்அம ருலகம் ஆள்வதற்
..
கியாதும் ஐயுற வில்லையே.

பாடல் எண் : 5
வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப்
..
பாவி யைவழக் கில்லியைப்
பஞ்ச துட்டனைச் சாது வேயென்று
..
பாடி னுங்கொடுப் பாரிலை
பொன்செய் செஞ்சடைப் புண்ணி யன்புக
..
லூரைப் பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில் நோயறுத் துஞ்சு போவதற்
..
கியாதும் ஐயுற வில்லையே.

பாடல் எண் : 6
நலமி லாதானை நல்ல னேயென்று
..
நரைத்த மாந்தனை யிளையனே
குலமி லாதானைக் குலவ னேயென்று
..
கூறி னுங்கொடுப் பாரிலை
புலமெ லாம்வெறி கமழும் பூம்புக
..
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அலம ராதம ருலக மாள்வதற்
..
கியாதும் ஐயுற வில்லையே.

பாடல் எண் : 7
நோய னைத்தடந் தோள னேயென்று
..
நொய்ய மாந்தனை விழுமிய
தாயன் றோபுல வோர்க்கெ லாமென்று
..
சாற்றி னுங்கொடுப் பாரிலை
போயு ழன்றுகண் குழியா தேயெந்தை
..
புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆய மின்றிப்போய் அண்ட மாள்வதற்
..
கியாதும் ஐயுற வில்லையே.

பாடல் எண் : 8
எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும்
..
ஈக்கும் ஈகில னாகிலும்
வள்ள லேஎங்கள் மைந்த னேயென்று
..
வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை
புள்ளெ லாஞ்சென்று சேரும் பூம்புக
..
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அள்ளற் பட்டழுந் தாது போவதற்
..
கியாதும் ஐயுற வில்லையே.

பாடல் எண் : 9
கற்றி லாதானைக் கற்று நல்லனே
..
காம தேவனை யொக்குமே
முற்றி லாதானை முற்ற னேயென்று
..
மொழியி னுங்கொடுப் பாரிலை
பொத்தி லாந்தைகள் பாட்ட றாப்புக
..
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அத்த னாய்அம ருலகம் ஆள்வதற்
..
கியாதும் ஐயுற வில்லையே.

பாடல் எண் : 10
தைய லாருக்கொர் காம னேசால
..
நலவ ழகுடை ஐயனே
கையு லாவிய வேல னேயென்று
..
கழறி னுங்கொடுப் பாரிலை
பொய்கை வாவியின் மேதி பாய்புக
..
லூரைப் பாடுமின் புலவீர்காள்
ஐய னாய்அம ருலகம் ஆள்வதற்
..
கியாதும் ஐயுற வில்லையே.

பாடல் எண் : 11
செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென்
..
புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவ லூரன்
..
வனப்பகை யப்பன் சடையன்றன்
சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய
..
பாடல் பத்திவை வல்லவர்
அறவ னாரடி சென்று சேர்வதற்
..
கியாதும் ஐயுற வில்லையே.
============================= ============================

Word separated version:
--------------
#3200 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 46
செறி-புன்-சடையார் திருவாரூர்த் திருப்-பங்குனி-உத்திரத் திருநாள்
குறுக வரலும், பரவையார் கொடைக்கு விழாவில் குறைவு-அறுக்க,
நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து, நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணிய எழுந்தருளிச் சென்று அங்கு எய்தினார்.

#3201 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 47
சென்று, விரும்பித் திருப்புகலூர்த் தேவர் பெருமான் கோயில் மணி-
முன்றில் பணிந்து, வலங்கொண்டு, முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சித்,
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து,
நின்று பதிக இசை பாடி நினைந்த கருத்து நிகழ்விப்பார்.

#3202 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 48
சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழிய,
வறிது புறம் போந்தருளி அயல் மடத்தில் அணையார் வன்றொண்டர்,
அறிவு கூர்ந்த அன்பருடன் அணி-முன்றினில் ஓர் அருகு இருப்ப,
மறி-வண்-கையார் அருளாலோ மலர்க்கண் துயில் வந்து எய்தியது-ஆல்.

#3203 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 49
துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழஎ அங்குத் திருப்பணிக்குப்
பயிலும் சுடு-மட்-பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணித், தேன்
அயிலும் சுரும்பு ஆர் மலர்ச்-சிகழி முடிமேல் அணையா உத்தரிய
வெயில் உந்திய வெண்-பட்டு அதன்மேல் விரித்துப் பள்ளி மேவினார்.

#3204 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 50
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை-மலர்க்-கண்
பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்;
வெற்றி விடையார் அருளாலே வே-மண் கல்லே விரி-சுடர்ச்-செம்
பொன்-திண் கல் ஆயின கண்டு, புகலூர் இறைவர் அருள் போற்றி,

#3205 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 51
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து, துணைக்-கைக்-கமல-முகை தலைமேல்
கொண்டு, கோயிலுள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேரன்பு
மண்டு காதல் உற வணங்கி, வாய்த்த மதுர மொழி-மாலை
பண் தங்கு இசையில் "தம்மையே புகழ்ந்து" என்று எடுத்துப் பாடினார்.

சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.34 - திருப்புகலூர் ( பண் : கொல்லி )
(தான தானன தான தானன தான தானன தானன - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
..
சார்கினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை
..
புகலூர் பாடுமின் புலவீர்காள்;
இம்மையே தரும் சோறும் கூறையும்;
..
ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
..
யாதும் ஐயுறவு இல்லையே.

பாடல் எண் : 2
மிடுக்கு இலாதானை "வீமனே, விறல்
..
விசயனே வில்லுக்கு இவன்" என்று,
கொடுக்கிலாதானைப் "பாரியே" என்று
..
கூறினும் கொடுப்பார் இலை;
பொடிக்கொள் மேனி எம் புண்ணியன்
..
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்;
அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு
..
யாதும் ஐயுறவு இல்லையே.

பாடல் எண் : 3
"காணியேல் பெரிது உடையனே; கற்று
..
நல்லனே; சுற்றம் நன்-கிளை
பேணியே விருந்து ஓம்புமே" என்று
..
பேசினும் கொடுப்பார் இலை;
பூணி பூண்டு உழப், புள் சிலம்பும் தண்
..
புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆணியாய் அமருலகம் ஆள்வதற்கு
..
யாதும் ஐயுறவு இல்லையே.

பாடல் எண் : 4
நரைகள் போந்து, மெய் தளர்ந்து, மூத்து, உடல்
..
நடுங்கி நிற்கும் இக்-கிழவனை
"
வரைகள் போல் திரள்-தோளனே" என்று
..
வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புரை-வெள்-ஏறு-உடைப் புண்ணியன்
..
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்;
அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு
..
யாதும் ஐயுறவு இல்லையே.

பாடல் எண் : 5
வஞ்ச நெஞ்சனை, மா சழக்கனைப்,
..
பாவியை, வழக்கு இல்லியைப்,
பஞ்ச துட்டனைச் சாதுவே என்று
..
பாடினும் கொடுப்பார் இலை;
பொன்-செய் செஞ்சடைப் புண்ணியன்
..
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்;
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு
..
யாதும் ஐயுறவு இல்லையே.

பாடல் எண் : 6
நலம் இலாதானை நல்லனே என்று,
..
நரைத்த மாந்தனை இளையனே,
குலம் இலாதானைக் குலவனே என்று
..
கூறினும் கொடுப்பார் இலை;
புலம்-எலாம் வெறி கமழும்
..
பூம்புகலூரைப் பாடுமின் புலவீர்காள்;
அலமராது அமருலகம் ஆள்வதற்கு
..
யாதும் ஐயுறவு இல்லையே.

பாடல் எண் : 7
நோயனைத் "தடம் தோளனே" என்று,
..
நொய்ய மாந்தனை "விழுமிய
தாய் அன்றோ புலவோர்க்கு-எலாம்" என்று
..
சாற்றினும் கொடுப்பார் இலை;
போய் உழன்று கண் குழியாதே எந்தை
..
புகலூர் பாடுமின் புலவீர்காள்;
ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு
..
யாதும் ஐயுறவு இல்லையே.

பாடல் எண் : 8
எள்-விழுந்திடம் பார்க்கும் ஆகிலும்,
..
ஈக்கும் ஈகிலன் ஆகிலும்,
"
வள்ளலே, எங்கள் மைந்தனே" என்று
..
வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புள்-எலாம் சென்று சேரும்
..
பூம்புகலூரைப் பாடுமின் புலவீர்காள்;
அள்ளற் பட்டு அழுந்தாது போவதற்கு
..
யாதும் ஐயுறவு இல்லையே.

பாடல் எண் : 9
கற்றிலாதானைக் "கற்று நல்லனே,
..
காமதேவனை ஒக்குமே",
முற்றிலாதானை "முற்றனே" என்று
..
மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப்
..
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்;
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு
..
யாதும் ஐயுறவு இல்லையே.

பாடல் எண் : 10
"தையலாருக்கு ஒர் காமனே, சால
..
நல அழகு-உடை ஐயனே,
கை உலாவிய வேலனே" என்று
..
கழறினும் கொடுப்பார் இலை;
பொய்கை வாவியில் மேதி பாய்
..
புகலூரைப் பாடுமின் புலவீர்காள்;
ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு
..
யாதும் ஐயுறவு இல்லையே.

பாடல் எண் : 11
செறுவினில் செழும் கமலம் ஓங்கு
..
தென்-புகலூர் மேவிய செல்வனை,
நறவம் பூம்பொழில் நாவலூரன்,
..
வனப்பகை அப்பன், சடையன்-தன்
சிறுவன், வன்-தொண்டன், ஊரன் பாடிய
..
பாடல் பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு
..
யாதும் ஐயுறவு இல்லையே.
================== ==========================

Word separated version:
--------------
3200 - periya purāṇam - ēyargōṉ kalikkāma nāyaṉār purāṇam - 46
seṟi-puṉ-saḍaiyār tiruvārūrt tirup-paṅguṉi-uttirat tirunāḷ
kuṟuga varalum, paravaiyār koḍaikku viḻāvil kuṟaivu-aṟukka,
niṟaiyum poṉ koṇḍu aṇaivadaṟku niṉaindu, nambi tiruppugalūr
iṟaivar pādam paṇiya eḻundaruḷic ceṇḍru aṅgu eydiṉār.

3201 - periya purāṇam - ēyargōṉ kalikkāma nāyaṉār purāṇam - 47
seṇḍru, virumbit tiruppugalūrt tēvar perumāṉ kōyil maṇi-
muṇḍril paṇindu, valaṅgoṇḍu, mudalvar muṉbu vīḻndu iṟaiñjit,
toṇḍru marabiṉ aḍittoṇḍu tōynda aṉbil tudittu eḻundu,
niṇḍru padiga isai pāḍi niṉainda karuttu nigaḻvippār.

3202 - periya purāṇam - ēyargōṉ kalikkāma nāyaṉār purāṇam - 48
siṟidu poḻudu kumbiṭṭuc cindai muṉṉam aṅgu oḻiya,
vaṟidu puṟam pōndaruḷi ayal maḍattil aṇaiyār vaṇḍroṇḍar,
aṟivu kūrnda aṉbaruḍaṉ aṇi-muṇḍriṉil ōr arugu iruppa,
maṟi-vaṇ-kaiyār aruḷālō malarkkaṇ tuyil vandu eydiyadu-āl.

3203 - periya purāṇam - ēyargōṉ kalikkāma nāyaṉār purāṇam - 49
tuyil vandu eydat tambirāṉ tōḻa̮e aṅgut tiruppaṇikkup
payilum suḍu-maṭ-palagai pala koṇarvittu uyaram paṇṇit, tēṉ
ayilum surumbu ār malars-sigaḻi muḍimēl aṇaiyā uttariya
veyil undiya veṇ-paṭṭu adaṉmēl virittup paḷḷi mēviṉār.

3204 - periya purāṇam - ēyargōṉ kalikkāma nāyaṉār purāṇam - 50
suṭrum irunda toṇḍargaḷum tuyilum aḷavil tuṇai-malark-kaṇ
paṭrum tuyil nīṅgiḍap paḷḷi uṇarndār paravai kēḷvaṉār;
veṭri viḍaiyār aruḷālē vē-maṇ kallē viri-suḍars-sem
poṉ-tiṇ kal āyiṉa kaṇḍu, pugalūr iṟaivar aruḷ pōṭri,

3205 - periya purāṇam - ēyargōṉ kalikkāma nāyaṉār purāṇam - 51
toṇḍar uṇara magiḻndu eḻundu, tuṇaik-kaik-kamala-mugai talaimēl
koṇḍu, kōyiluḷ pukkuk kuṟippil aḍaṅgāp pēraṉbu
maṇḍu kādal uṟa vaṇaṅgi, vāytta madura moḻi-mālai
paṇ taṅgu isaiyil "tammaiyē pugaḻndu" eṇḍru eḍuttup pāḍiṉār.

sundarar tēvāram - padigam 7.34 - tiruppugalūr ( paṇ : kolli )
(tāṉa tāṉaṉa tāṉa tāṉaṉa tāṉa tāṉaṉa tāṉaṉa - eṇḍra sandam)
pāḍal eṇ : 1
tammaiyē pugaḻndu iccai pēsiṉum
.. sārgiṉum toṇḍar tarugilāp
poymmaiyāḷaraip pāḍādē endai
.. pugalūr pāḍumiṉ pulavīrgāḷ;
immaiyē tarum sōṟum kūṟaiyum;
.. ēttal ām; iḍar keḍalum ām;
ammaiyē sivalōgam āḷvadaṟku
.. yādum aiyuṟavu illaiyē.

pāḍal eṇ : 2
miḍukku ilādāṉai "vīmaṉē, viṟal
.. visayaṉē villukku ivaṉ" eṇḍru,
koḍukkilādāṉaip "pāriyē" eṇḍru
.. kūṟiṉum koḍuppār ilai;
poḍikkoḷ mēṉi em puṇṇiyaṉ
.. pugalūraip pāḍumiṉ pulavīrgāḷ;
aḍukku mēl amarulagam āḷvadaṟku
.. yādum aiyuṟavu illaiyē.

pāḍal eṇ : 3
"kāṇiyēl peridu uḍaiyaṉē; kaṭru
.. nallaṉē; suṭram naṉ-kiḷai
pēṇiyē virundu ōmbumē" eṇḍru
.. pēsiṉum koḍuppār ilai;
pūṇi pūṇḍu uḻap, puḷ silambum taṇ
.. pugalūr pāḍumiṉ pulavīrgāḷ
āṇiyāy amarulagam āḷvadaṟku
.. yādum aiyuṟavu illaiyē.

pāḍal eṇ : 4
naraigaḷ pōndu, mey taḷarndu, mūttu, uḍal
.. naḍuṅgi niṟkum ik-kiḻavaṉai
"varaigaḷ pōl tiraḷ-tōḷaṉē" eṇḍru
.. vāḻttiṉum koḍuppār ilai;
purai-veḷ-ēṟu-uḍaip puṇṇiyaṉ
.. pugalūraip pāḍumiṉ pulavīrgāḷ;
araiyaṉāy amarulagam āḷvadaṟku
.. yādum aiyuṟavu illaiyē.

pāḍal eṇ : 5
vañja neñjaṉai, mā saḻakkaṉaip,
.. pāviyai, vaḻakku illiyaip,
pañja tuṭṭaṉaic cāduvē eṇḍru
.. pāḍiṉum koḍuppār ilai;
poṉ-sey señjaḍaip puṇṇiyaṉ
.. pugalūraip pāḍumiṉ pulavīrgāḷ;
neñjil nōy aṟuttu uñju pōvadaṟku
.. yādum aiyuṟavu illaiyē.

pāḍal eṇ : 6
nalam ilādāṉai nallaṉē eṇḍru,
.. naraitta māndaṉai iḷaiyaṉē,
kulam ilādāṉaik kulavaṉē eṇḍru
.. kūṟiṉum koḍuppār ilai;
pulam-elām veṟi kamaḻum
.. pūmbugalūraip pāḍumiṉ pulavīrgāḷ;
alamarādu amarulagam āḷvadaṟku
.. yādum aiyuṟavu illaiyē.

pāḍal eṇ : 7
nōyaṉait "taḍam tōḷaṉē" eṇḍru,
.. noyya māndaṉai "viḻumiya
tāy aṇḍrō pulavōrkku-elām" eṇḍru
.. sāṭriṉum koḍuppār ilai;
pōy uḻaṇḍru kaṇ kuḻiyādē endai
.. pugalūr pāḍumiṉ pulavīrgāḷ;
āyam iṇḍrip pōy aṇḍam āḷvadaṟku
.. yādum aiyuṟavu illaiyē.

pāḍal eṇ : 8
eḷ-viḻundiḍam pārkkum āgilum,
.. īkkum īgilaṉ āgilum,
"vaḷḷalē, eṅgaḷ maindaṉē" eṇḍru
.. vāḻttiṉum koḍuppār ilai;
puḷ-elām seṇḍru sērum
.. pūmbugalūraip pāḍumiṉ pulavīrgāḷ;
aḷḷaṟ paṭṭu aḻundādu pōvadaṟku
.. yādum aiyuṟavu illaiyē.

pāḍal eṇ : 9
kaṭrilādāṉaik "kaṭru nallaṉē,
.. kāmadēvaṉai okkumē",
muṭrilādāṉai "muṭraṉē" eṇḍru
.. moḻiyiṉum koḍuppār ilai;
pottil āndaigaḷ pāṭṭu aṟāp
.. pugalūraip pāḍumiṉ pulavīrgāḷ;
attaṉāy amarulagam āḷvadaṟku
.. yādum aiyuṟavu illaiyē.

pāḍal eṇ : 10
"taiyalārukku or kāmaṉē, sāla
.. nala aḻagu-uḍai aiyaṉē,
kai ulāviya vēlaṉē" eṇḍru
.. kaḻaṟiṉum koḍuppār ilai;
poygai vāviyil mēdi pāy
.. pugalūraip pāḍumiṉ pulavīrgāḷ;
aiyaṉāy amarulagam āḷvadaṟku
.. yādum aiyuṟavu illaiyē.

pāḍal eṇ : 11
seṟuviṉil seḻum kamalam ōṅgu
.. teṉ-pugalūr mēviya selvaṉai,
naṟavam pūmboḻil nāvalūraṉ,
.. vaṉappagai appaṉ, saḍaiyaṉ-taṉ
siṟuvaṉ, vaṉ-toṇḍaṉ, ūraṉ pāḍiya
.. pāḍal pattu ivai vallavar
aṟavaṉār aḍi seṇḍru sērvadaṟku
.. yādum aiyuṟavu illaiyē.

================== ========================== 

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )

#3200 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 46

सॆऱि-पुन्-सडैयार् तिरुवारूर्त् तिरुप्-पङ्गुनि-उत्तिरत् तिरुनाळ्

कुऱुग वरलुम्, परवैयार् कॊडैक्कु विऴाविल् कुऱैवु-अऱुक्क,

निऱैयुम् पॊन् कॊण्डु अणैवदऱ्‌कु निनैन्दु, नम्बि तिरुप्पुगलूर्

इऱैवर् पादम् पणिय ऎऴुन्दरुळिच् चॆण्ड्रु अङ्गु ऎय्दिनार्.


#3201 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 47

सॆण्ड्रु, विरुम्बित् तिरुप्पुगलूर्त् तेवर् पॆरुमान् कोयिल् मणि-

मुण्ड्रिल् पणिन्दु, वलङ्गॊण्डु, मुदल्वर् मुन्बु वीऴ्न्दु इऱैञ्जित्,

तॊण्ड्रु मरबिन् अडित्तॊण्डु तोय्न्द अन्बिल् तुदित्तु ऎऴुन्दु,

निण्ड्रु पदिग इसै पाडि निनैन्द करुत्तु निगऴ्विप्पार्.


#3202 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 48

सिऱिदु पॊऴुदु कुम्बिट्टुच् चिन्दै मुन्नम् अङ्गु ऒऴिय,

वऱिदु पुऱम् पोन्दरुळि अयल् मडत्तिल् अणैयार् वण्ड्रॊण्डर्,

अऱिवु कूर्न्द अन्बरुडन् अणि-मुण्ड्रिनिल् ओर् अरुगु इरुप्प,

मऱि-वण्-कैयार् अरुळालो मलर्क्कण् तुयिल् वन्दु ऎय्दियदु-आल्.


#3203 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 49

तुयिल् वन्दु ऎय्दत् तम्बिरान् तोऴऎ अङ्गुत् तिरुप्पणिक्कुप्

पयिलुम् सुडु-मट्-पलगै पल कॊणर्वित्तु उयरम् पण्णित्, तेन्

अयिलुम् सुरुम्बु आर् मलर्च्-चिगऴि मुडिमेल् अणैया उत्तरिय

वॆयिल् उन्दिय वॆण्-पट्टु अदन्मेल् विरित्तुप् पळ्ळि मेविनार्.


#3204 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 50

सुट्रुम् इरुन्द तॊण्डर्गळुम् तुयिलुम् अळविल् तुणै-मलर्क्-कण्

पट्रुम् तुयिल् नीङ्गिडप् पळ्ळि उणर्न्दार् परवै केळ्वनार्;

वॆट्रि विडैयार् अरुळाले वे-मण् कल्ले विरि-सुडर्च्-चॆम्

पॊन्-तिण् कल् आयिन कण्डु, पुगलूर् इऱैवर् अरुळ् पोट्रि,


#3205 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 51

तॊण्डर् उणर मगिऴ्न्दु ऎऴुन्दु, तुणैक्-कैक्-कमल-मुगै तलैमेल्

कॊण्डु, कोयिलुळ् पुक्कुक् कुऱिप्पिल् अडङ्गाप् पेरन्बु

मण्डु कादल् उऱ वणङ्गि, वाय्त्त मदुर मॊऴि-मालै

पण् तङ्गु इसैयिल् "तम्मैये पुगऴ्न्दु" ऎण्ड्रु ऎडुत्तुप् पाडिनार्.


सुन्दरर् तेवारम् - पदिगम् 7.34 - तिरुप्पुगलूर् ( पण् : कॊल्लि )

(तान तानन तान तानन तान तानन तानन - Rhythm)

पाडल् ऎण् : 1

तम्मैये पुगऴ्न्दु इच्चै पेसिनुम्

.. सार्गिनुम् तॊण्डर् तरुगिलाप्

पॊय्म्मैयाळरैप् पाडादे ऎन्दै

.. पुगलूर् पाडुमिन् पुलवीर्गाळ्;

इम्मैये तरुम् सोऱुम् कूऱैयुम्;

.. एत्तल् आम्; इडर् कॆडलुम् आम्;

अम्मैये सिवलोगम् आळ्वदऱ्‌कु

.. यादुम् ऐयुऱवु इल्लैये.


पाडल् ऎण् : 2

मिडुक्कु इलादानै "वीमने, विऱल्

.. विसयने विल्लुक्कु इवन्" ऎण्ड्रु,

कॊडुक्किलादानैप् "पारिये" ऎण्ड्रु

.. कूऱिनुम् कॊडुप्पार् इलै;

पॊडिक्कॊळ् मेनि ऎम् पुण्णियन्

.. पुगलूरैप् पाडुमिन् पुलवीर्गाळ्;

अडुक्कु मेल् अमरुलगम् आळ्वदऱ्‌कु

.. यादुम् ऐयुऱवु इल्लैये.


पाडल् ऎण् : 3

"काणियेल् पॆरिदु उडैयने; कट्रु

.. नल्लने; सुट्रम् नन्-किळै

पेणिये विरुन्दु ओम्बुमे" ऎण्ड्रु

.. पेसिनुम् कॊडुप्पार् इलै;

पूणि पूण्डु उऴप्, पुळ् सिलम्बुम् तण्

.. पुगलूर् पाडुमिन् पुलवीर्गाळ्

आणियाय् अमरुलगम् आळ्वदऱ्‌कु

.. यादुम् ऐयुऱवु इल्लैये.


पाडल् ऎण् : 4

नरैगळ् पोन्दु, मॆय् तळर्न्दु, मूत्तु, उडल्

.. नडुङ्गि निऱ्‌कुम् इक्-किऴवनै

"वरैगळ् पोल् तिरळ्-तोळने" ऎण्ड्रु

.. वाऴ्त्तिनुम् कॊडुप्पार् इलै;

पुरै-वॆळ्-एऱु-उडैप् पुण्णियन्

.. पुगलूरैप् पाडुमिन् पुलवीर्गाळ्;

अरैयनाय् अमरुलगम् आळ्वदऱ्‌कु

.. यादुम् ऐयुऱवु इल्लैये.


पाडल् ऎण् : 5

वञ्ज नॆञ्जनै, मा सऴक्कनैप्,

.. पावियै, वऴक्कु इल्लियैप्,

पञ्ज तुट्टनैच् चादुवे ऎण्ड्रु

.. पाडिनुम् कॊडुप्पार् इलै;

पॊन्-सॆय् सॆञ्जडैप् पुण्णियन्

.. पुगलूरैप् पाडुमिन् पुलवीर्गाळ्;

नॆञ्जिल् नोय् अऱुत्तु उञ्जु पोवदऱ्‌कु

.. यादुम् ऐयुऱवु इल्लैये.


पाडल् ऎण् : 6

नलम् इलादानै नल्लने ऎण्ड्रु,

.. नरैत्त मान्दनै इळैयने,

कुलम् इलादानैक् कुलवने ऎण्ड्रु

.. कूऱिनुम् कॊडुप्पार् इलै;

पुलम्-ऎलाम् वॆऱि कमऴुम्

.. पूम्बुगलूरैप् पाडुमिन् पुलवीर्गाळ्;

अलमरादु अमरुलगम् आळ्वदऱ्‌कु

.. यादुम् ऐयुऱवु इल्लैये.


पाडल् ऎण् : 7

नोयनैत् "तडम् तोळने" ऎण्ड्रु,

.. नॊय्य मान्दनै "विऴुमिय

ताय् अण्ड्रो पुलवोर्क्कु-ऎलाम्" ऎण्ड्रु

.. साट्रिनुम् कॊडुप्पार् इलै;

पोय् उऴण्ड्रु कण् कुऴियादे ऎन्दै

.. पुगलूर् पाडुमिन् पुलवीर्गाळ्;

आयम् इण्ड्रिप् पोय् अण्डम् आळ्वदऱ्‌कु

.. यादुम् ऐयुऱवु इल्लैये.


पाडल् ऎण् : 8

ऎळ्-विऴुन्दिडम् पार्क्कुम् आगिलुम्,

.. ईक्कुम् ईगिलन् आगिलुम्,

"वळ्ळले, ऎङ्गळ् मैन्दने" ऎण्ड्रु

.. वाऴ्त्तिनुम् कॊडुप्पार् इलै;

पुळ्-ऎलाम् सॆण्ड्रु सेरुम्

.. पूम्बुगलूरैप् पाडुमिन् पुलवीर्गाळ्;

अळ्ळऱ्‌ पट्टु अऴुन्दादु पोवदऱ्‌कु

.. यादुम् ऐयुऱवु इल्लैये.


पाडल् ऎण् : 9

कट्रिलादानैक् "कट्रु नल्लने,

.. कामदेवनै ऒक्कुमे",

मुट्रिलादानै "मुट्रने" ऎण्ड्रु

.. मॊऴियिनुम् कॊडुप्पार् इलै;

पॊत्तिल् आन्दैगळ् पाट्टु अऱाप्

.. पुगलूरैप् पाडुमिन् पुलवीर्गाळ्;

अत्तनाय् अमरुलगम् आळ्वदऱ्‌कु

.. यादुम् ऐयुऱवु इल्लैये.


पाडल् ऎण् : 10

"तैयलारुक्कु ऒर् कामने, साल

.. नल अऴगु-उडै ऐयने,

कै उलाविय वेलने" ऎण्ड्रु

.. कऴऱिनुम् कॊडुप्पार् इलै;

पॊय्गै वावियिल् मेदि पाय्

.. पुगलूरैप् पाडुमिन् पुलवीर्गाळ्;

ऐयनाय् अमरुलगम् आळ्वदऱ्‌कु

.. यादुम् ऐयुऱवु इल्लैये.


पाडल् ऎण् : 11

सॆऱुविनिल् सॆऴुम् कमलम् ओङ्गु

.. तॆन्-पुगलूर् मेविय सॆल्वनै,

नऱवम् पूम्बॊऴिल् नावलूरन्,

.. वनप्पगै अप्पन्, सडैयन्-तन्

सिऱुवन्, वन्-तॊण्डन्, ऊरन् पाडिय

.. पाडल् पत्तु इवै वल्लवर्

अऱवनार् अडि सॆण्ड्रु सेर्वदऱ्‌कु

.. यादुम् ऐयुऱवु इल्लैये.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


#3200 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 46

సెఱి-పున్-సడైయార్ తిరువారూర్త్ తిరుప్-పంగుని-ఉత్తిరత్ తిరునాళ్

కుఱుగ వరలుం, పరవైయార్ కొడైక్కు విఴావిల్ కుఱైవు-అఱుక్క,

నిఱైయుం పొన్ కొండు అణైవదఱ్కు నినైందు, నంబి తిరుప్పుగలూర్

ఇఱైవర్ పాదం పణియ ఎఴుందరుళిచ్ చెండ్రు అంగు ఎయ్దినార్.


#3201 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 47

సెండ్రు, విరుంబిత్ తిరుప్పుగలూర్త్ తేవర్ పెరుమాన్ కోయిల్ మణి-

ముండ్రిల్ పణిందు, వలంగొండు, ముదల్వర్ మున్బు వీఴ్న్దు ఇఱైంజిత్,

తొండ్రు మరబిన్ అడిత్తొండు తోయ్న్ద అన్బిల్ తుదిత్తు ఎఴుందు,

నిండ్రు పదిగ ఇసై పాడి నినైంద కరుత్తు నిగఴ్విప్పార్.


#3202 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 48

సిఱిదు పొఴుదు కుంబిట్టుచ్ చిందై మున్నం అంగు ఒఴియ,

వఱిదు పుఱం పోందరుళి అయల్ మడత్తిల్ అణైయార్ వండ్రొండర్,

అఱివు కూర్న్ద అన్బరుడన్ అణి-ముండ్రినిల్ ఓర్ అరుగు ఇరుప్ప,

మఱి-వణ్-కైయార్ అరుళాలో మలర్క్కణ్ తుయిల్ వందు ఎయ్దియదు-ఆల్.


#3203 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 49

తుయిల్ వందు ఎయ్దత్ తంబిరాన్ తోఴఎ అంగుత్ తిరుప్పణిక్కుప్

పయిలుం సుడు-మట్-పలగై పల కొణర్విత్తు ఉయరం పణ్ణిత్, తేన్

అయిలుం సురుంబు ఆర్ మలర్చ్-చిగఴి ముడిమేల్ అణైయా ఉత్తరియ

వెయిల్ ఉందియ వెణ్-పట్టు అదన్మేల్ విరిత్తుప్ పళ్ళి మేవినార్.


#3204 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 50

సుట్రుం ఇరుంద తొండర్గళుం తుయిలుం అళవిల్ తుణై-మలర్క్-కణ్

పట్రుం తుయిల్ నీంగిడప్ పళ్ళి ఉణర్న్దార్ పరవై కేళ్వనార్;

వెట్రి విడైయార్ అరుళాలే వే-మణ్ కల్లే విరి-సుడర్చ్-చెం

పొన్-తిణ్ కల్ ఆయిన కండు, పుగలూర్ ఇఱైవర్ అరుళ్ పోట్రి,


#3205 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 51

తొండర్ ఉణర మగిఴ్న్దు ఎఴుందు, తుణైక్-కైక్-కమల-ముగై తలైమేల్

కొండు, కోయిలుళ్ పుక్కుక్ కుఱిప్పిల్ అడంగాప్ పేరన్బు

మండు కాదల్ ఉఱ వణంగి, వాయ్త్త మదుర మొఴి-మాలై

పణ్ తంగు ఇసైయిల్ "తమ్మైయే పుగఴ్న్దు" ఎండ్రు ఎడుత్తుప్ పాడినార్.


సుందరర్ తేవారం - పదిగం 7.34 - తిరుప్పుగలూర్ ( పణ్ : కొల్లి )

(తాన తానన తాన తానన తాన తానన తానన - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

తమ్మైయే పుగఴ్న్దు ఇచ్చై పేసినుం

.. సార్గినుం తొండర్ తరుగిలాప్

పొయ్మ్మైయాళరైప్ పాడాదే ఎందై

.. పుగలూర్ పాడుమిన్ పులవీర్గాళ్;

ఇమ్మైయే తరుం సోఱుం కూఱైయుం;

.. ఏత్తల్ ఆం; ఇడర్ కెడలుం ఆం;

అమ్మైయే సివలోగం ఆళ్వదఱ్కు

.. యాదుం ఐయుఱవు ఇల్లైయే.


పాడల్ ఎణ్ : 2

మిడుక్కు ఇలాదానై "వీమనే, విఱల్

.. విసయనే విల్లుక్కు ఇవన్" ఎండ్రు,

కొడుక్కిలాదానైప్ "పారియే" ఎండ్రు

.. కూఱినుం కొడుప్పార్ ఇలై;

పొడిక్కొళ్ మేని ఎం పుణ్ణియన్

.. పుగలూరైప్ పాడుమిన్ పులవీర్గాళ్;

అడుక్కు మేల్ అమరులగం ఆళ్వదఱ్కు

.. యాదుం ఐయుఱవు ఇల్లైయే.


పాడల్ ఎణ్ : 3

"కాణియేల్ పెరిదు ఉడైయనే; కట్రు

.. నల్లనే; సుట్రం నన్-కిళై

పేణియే విరుందు ఓంబుమే" ఎండ్రు

.. పేసినుం కొడుప్పార్ ఇలై;

పూణి పూండు ఉఴప్, పుళ్ సిలంబుం తణ్

.. పుగలూర్ పాడుమిన్ పులవీర్గాళ్

ఆణియాయ్ అమరులగం ఆళ్వదఱ్కు

.. యాదుం ఐయుఱవు ఇల్లైయే.


పాడల్ ఎణ్ : 4

నరైగళ్ పోందు, మెయ్ తళర్న్దు, మూత్తు, ఉడల్

.. నడుంగి నిఱ్కుం ఇక్-కిఴవనై

"వరైగళ్ పోల్ తిరళ్-తోళనే" ఎండ్రు

.. వాఴ్త్తినుం కొడుప్పార్ ఇలై;

పురై-వెళ్-ఏఱు-ఉడైప్ పుణ్ణియన్

.. పుగలూరైప్ పాడుమిన్ పులవీర్గాళ్;

అరైయనాయ్ అమరులగం ఆళ్వదఱ్కు

.. యాదుం ఐయుఱవు ఇల్లైయే.


పాడల్ ఎణ్ : 5

వంజ నెంజనై, మా సఴక్కనైప్,

.. పావియై, వఴక్కు ఇల్లియైప్,

పంజ తుట్టనైచ్ చాదువే ఎండ్రు

.. పాడినుం కొడుప్పార్ ఇలై;

పొన్-సెయ్ సెంజడైప్ పుణ్ణియన్

.. పుగలూరైప్ పాడుమిన్ పులవీర్గాళ్;

నెంజిల్ నోయ్ అఱుత్తు ఉంజు పోవదఱ్కు

.. యాదుం ఐయుఱవు ఇల్లైయే.


పాడల్ ఎణ్ : 6

నలం ఇలాదానై నల్లనే ఎండ్రు,

.. నరైత్త మాందనై ఇళైయనే,

కులం ఇలాదానైక్ కులవనే ఎండ్రు

.. కూఱినుం కొడుప్పార్ ఇలై;

పులం-ఎలాం వెఱి కమఴుం

.. పూంబుగలూరైప్ పాడుమిన్ పులవీర్గాళ్;

అలమరాదు అమరులగం ఆళ్వదఱ్కు

.. యాదుం ఐయుఱవు ఇల్లైయే.


పాడల్ ఎణ్ : 7

నోయనైత్ "తడం తోళనే" ఎండ్రు,

.. నొయ్య మాందనై "విఴుమియ

తాయ్ అండ్రో పులవోర్క్కు-ఎలాం" ఎండ్రు

.. సాట్రినుం కొడుప్పార్ ఇలై;

పోయ్ ఉఴండ్రు కణ్ కుఴియాదే ఎందై

.. పుగలూర్ పాడుమిన్ పులవీర్గాళ్;

ఆయం ఇండ్రిప్ పోయ్ అండం ఆళ్వదఱ్కు

.. యాదుం ఐయుఱవు ఇల్లైయే.


పాడల్ ఎణ్ : 8

ఎళ్-విఴుందిడం పార్క్కుం ఆగిలుం,

.. ఈక్కుం ఈగిలన్ ఆగిలుం,

"వళ్ళలే, ఎంగళ్ మైందనే" ఎండ్రు

.. వాఴ్త్తినుం కొడుప్పార్ ఇలై;

పుళ్-ఎలాం సెండ్రు సేరుం

.. పూంబుగలూరైప్ పాడుమిన్ పులవీర్గాళ్;

అళ్ళఱ్ పట్టు అఴుందాదు పోవదఱ్కు

.. యాదుం ఐయుఱవు ఇల్లైయే.


పాడల్ ఎణ్ : 9

కట్రిలాదానైక్ "కట్రు నల్లనే,

.. కామదేవనై ఒక్కుమే",

ముట్రిలాదానై "ముట్రనే" ఎండ్రు

.. మొఴియినుం కొడుప్పార్ ఇలై;

పొత్తిల్ ఆందైగళ్ పాట్టు అఱాప్

.. పుగలూరైప్ పాడుమిన్ పులవీర్గాళ్;

అత్తనాయ్ అమరులగం ఆళ్వదఱ్కు

.. యాదుం ఐయుఱవు ఇల్లైయే.


పాడల్ ఎణ్ : 10

"తైయలారుక్కు ఒర్ కామనే, సాల

.. నల అఴగు-ఉడై ఐయనే,

కై ఉలావియ వేలనే" ఎండ్రు

.. కఴఱినుం కొడుప్పార్ ఇలై;

పొయ్గై వావియిల్ మేది పాయ్

.. పుగలూరైప్ పాడుమిన్ పులవీర్గాళ్;

ఐయనాయ్ అమరులగం ఆళ్వదఱ్కు

.. యాదుం ఐయుఱవు ఇల్లైయే.


పాడల్ ఎణ్ : 11

సెఱువినిల్ సెఴుం కమలం ఓంగు

.. తెన్-పుగలూర్ మేవియ సెల్వనై,

నఱవం పూంబొఴిల్ నావలూరన్,

.. వనప్పగై అప్పన్, సడైయన్-తన్

సిఱువన్, వన్-తొండన్, ఊరన్ పాడియ

.. పాడల్ పత్తు ఇవై వల్లవర్

అఱవనార్ అడి సెండ్రు సేర్వదఱ్కు

.. యాదుం ఐయుఱవు ఇల్లైయే.

================ ============