Sunday, May 12, 2019

2.66 - மந்திரமாவது நீறு ("திருநீற்றுப் பதிகம்") - mandiram āvadu nīṟu ("tirunīṭrup padigam")


63) 2.66 - திரு-ஆலவாய் - மந்திரமாவது நீறு ("திருநீற்றுப் பதிகம்") - tiru-ālavāy - mandiram āvadu nīṟu ("tirunīṭrup padigam")

சம்பந்தர் தேவாரம் - Sambandar thevaram
2.66 - திரு-ஆலவாய் - மந்திரமாவது நீறு ("திருநீற்றுப் பதிகம்")
2.66 - tiru-ālavāy - mandiram āvadu nīṟu ("tirunīṭrup padigam")


Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: https://drive.google.com/open?id=1ZROT8Cl_Y9SzUY9t1EhXpMluNDcq8vAL

2.66 - mandhiram Avadhu nIRu - word by word meaning - English translation:
https://drive.google.com/file/d/1dc5tslmVr-KdiWDySF3TXgb_xfaL_BAy/view?usp=sharing

English translation – by V.M.Subramanya Ayyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_066.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/v2gWZP2LleM
Part-2: https://youtu.be/wPOe4LmWlnY
Part-3: https://youtu.be/KFjjAo-I-Fs
Part-4: https://youtu.be/7HMx6JVjfLk
***

V. Subramanian
============== 

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.66 ("திருநீற்றுப் பதிகம்") – திருஆலவாய் ( பண் - காந்தாரம் )

Background: பதிக வரலாறு :

"சுர வாதம்":

பாண்டிய மன்னன் சமணர்களை நோக்கி, "வேறு என்ன வாது வேண்டும்? நீங்களும் சிவனடியாரான இவரும் என் வெப்புநோயை (ஜுரத்தை)த் தீர்த்து, அதன்மூலம் உங்கள் சமயங்களின் உண்மையை எனக்குக் காட்டுங்கள்" என்றான்.


சமணர்கள், "மன்னா, உன் உடம்பின் இடப்பக்கத்தை நாங்கள் எங்கள் மந்திரங்களால் குணப்படுத்துவோம்" என்றனர். மந்திரித்து நீர் தெளித்து மயிற்பீலிகளால் அரசனது உடம்பின் இடது பக்கத்தைத் தடவினார்கள். வெப்புநோய் இன்னும் அதிகரித்தது!


அரசன் திருஞான சம்பந்தரைப் பார்த்தான். அவர் 'மந்திரம் ஆவது நீறு' என்று தொடங்கும் இந்தத் திருநீற்றுப் பதிகத்தைப் பாடி அவனது உடம்பின் வலப்பக்கத்தில் திருநீற்றைப் பூசினார். உடனே அப்பக்கம் ஜுரம் நீங்கியது. ஒரே சமயத்தில் உடலில் ஒரு பக்கம் நோயின்றிக் குளிர்ச்சியாக இருப்பதையும் மற்ற பக்கம் மிகுந்த ஜுரத்தால் கொதிப்பதையும் உணர்ந்த அரசன் ஆச்சரியம் அடைந்தான். அவன் வேண்டியபடி சம்பந்தர் அவன் உடம்பின் இடப்பக்கத்திலும் திருநீற்றைப் பூசி அவனைக் குணப்படுத்தினார்.

----------

Jains tell the Pandya king that they will cure his left side

2660 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 762

மன்னவன் மாற்றங் கேட்டு, வடிவுபோன் மனத்து மாசு

துன்னிய வமணர் தென்னர் தோன்றலை நோக்கி "நாங்கள்

உன்னுடம் பதனில் வெப்பை யொருபுடை வாம பாகம்

முன்னமந் திரித்துத் தெய்வ முயற்சியாற் றீர்த்து" மென்றார்.


Jains fail and King's fever on his left side increases instead

2661 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 763

யாதுமொன் றறிவி லாதா ரிருளென வணையச் சென்று **

வாதினில் மன்ன வன்றன் வாமபா கத்தைத் தீர்ப்பார்

மீதுதம் பீலி கொண்டு தடவிட மேன்மேல் வெப்புத்

தீதுறப் பொறாது மன்னன் சிரபுரத் தவரைப் பார்த்தான்

(** Variant reading in CKS book - "அறிகிலாதார்")


Sambandar sings "mandiram āvadu nīṟu" padhigam

2662 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 764

தென்னவ னோக்கங் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர்

"அன்னவன் வலப்பால் வெப்பை யாலவா யண்ண னீறே

மன்னுமந் திரமு மாகி மருந்துமாய்த் தீர்ப்ப" தென்று

பன்னிய மறைக ளேத்திப் பகர்திருப் பதிகம் பாடி,


Sambandar applies Holy ash on king's right side and cures that side

2663 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 765

திருவளர் நீறு கொண்டு திருக்கையாற் றடவத் தென்னன்

பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையிற் குளிர்ந்த தப்பால்;

மருவிய விடப்பான் மிக்க வழலெழ, மண்டு தீப்போல்

இருபுடை வெப்புங் கூடி யிடங்கொளா தென்னப் பொங்க,


Pandya king feels fine on right side and has very high fever on left side simultaneously

2666 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 768

மன்னவன் மொழிவா "னென்னே! மதித்தவிக் கால மொன்றில்

வெந்நர கொருபா லாகும்; வீட்டின்ப மொருபா லாகும்;

துன்னுநஞ் சொருபா லாகுஞ்; சுவையமு தொருபா லாகும்;

என்வடி வொன்றி லுற்றே னிருதிறத் தியல்பு" மென்பான்,


Pandya king tells Jains that they have lost and requests Sambandar to cure his left side too

2667 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 769

"வெந்தொழி லருகர்! தோற்றீ; ரென்னைவிட் டகல நீங்கும்;

வந்தெனை யுய்யக் கொண்ட மறைக்குல வள்ள லாரே!

இந்தவெப் படைய நீங்க வெனக்கருள் புரிவீ" ரென்று

சிந்தையாற் றொழுது சொன்னான் செல்கதிக் கணிய னானான்.


Sambandar applies Holy ash on king's left side and cures that side as well

2668 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 770

திருமுகங் கருணை காட்டத் திருக்கையா னீறு காட்டிப்

பெருமறை துதிக்கு மாற்றாற் பிள்ளையார் போற்றிப் பின்னும்

ஒருமுறை தடவ வங்க ணொழிந்துவெப் பகன்று பாக

மருவுதீப் பிணியு நீங்கி வழுதியு முழுது முய்ந்தான்.


The queen and the minister feel elated and revere Sambandar

2669 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 771

கொற்றவன் றேவி யாருங் குலச்சிறை யாருந் தீங்கு

செற்றவர் செய்ய பாதத் தாமரை சென்னி சேர்த்துப்

"பெற்றனம் பெருமை; யின்று பிறந்தனம்; பிறவா மேன்மை

யுற்றனன் மன்ன" னென்றே யுளங்களித் துவகை மிக்கார்.


The Pandya king reveres Sambandar

2670 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 772

மீனவன் றன்மே லுள்ள வெப்பெலா முடனே மாற,

ஆனபே ரின்ப மெய்தி யுச்சிமே லங்கை கூப்பி

"மானமொன் றில்லார் முன்பு வன்பிணி நீக்க வந்த **

ஞானசம் பந்தர் பாத நண்ணிநா னுய்ந்தே" னென்றான்.

(** Variant reading in CKS book - நீங்க)


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.66 ("திருநீற்றுப் பதிகம்") – திருஆலவாய் ( பண் - காந்தாரம் )

("தானன தானன தானா தானன தானன தானா" - என்ற சந்தம்)

பாடல் எண் : 1

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.


பாடல் எண் : 2

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.


பாடல் எண் : 3

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு

சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு

சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.


பாடல் எண் : 4

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.


பாடல் எண் : 5

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு

பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு

தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.


பாடல் எண் : 6

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு

வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு

பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.


பாடல் எண் : 7

எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு

பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.


பாடல் எண் : 8

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு

பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு

அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.


பாடல் எண் : 9

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு

ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு

ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே. **

(** variant reading in CKS / IFP versions - ஆலமு துண்ட)


பாடல் எண் : 10

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்

கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு

எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு

அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.


பாடல் எண் : 11

ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.


Word separated version:


Jains tell the Pandya king that they will cure his left side

2660 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 762

மன்னவன் மாற்றம் கேட்டு, வடிவு போல் மனத்தும் மாசு

துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி "நாங்கள்

உன் உடம்பு-அதனில் வெப்பை ஒரு-புடை வாமபாகம்

முன்னம் மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும்" என்றார்.


Jains fail and King's fever on his left side increases instead

2661 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 763

யாதும்-ஒன்று அறிவு-இலாதார் இருள் என அணையச் சென்று **

வாதினில் மன்னவன்-தன் வாமபாகத்தைத் தீர்ப்பார்,

மீது தம் பீலி-கொண்டு தடவிட, மேன்மேல் வெப்புத்

தீது-உறப், பொறாது மன்னன் சிரபுரத்தவரைப் பார்த்தான்

(** Variant reading in CKS book - "அறிகிலாதார்")


Sambandar sings "mandiram āvadu nīṟu" padhigam

2662 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 764

தென்னவன் நோக்கம் கண்டு திருக்-கழுமலத்தார் செல்வர்

"அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே

மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய்த் தீர்ப்பது" என்று,

பன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்-பதிகம் பாடி,


Sambandar applies Holy ash on king's right side and cures that side

2663 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 765

திரு-வளர் நீறு-கொண்டு திருக்-கையால் தடவத், தென்னன்

பொரு-அரு வெப்பு நீங்கிப், பொய்கையிற் குளிர்ந்தது அப்-பால்;

மருவிய இடப்-பால் மிக்க அழல் எழ, மண்டு தீப்-போல்

இரு-புடை வெப்பும் கூடி, இடம் கொளாது என்னப் பொங்க,


Pandya king feels fine on right side and has very high fever on left side simultaneously

2666 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 768

மன்னவன் மொழிவான் "என்னே! மதித்த இக்-காலம் ஒன்றில்

வெந்-நரகு ஒரு-பால் ஆகும்; வீட்டு-இன்பம் ஒரு-பால் ஆகும்;

துன்னு-நஞ்சு ஒரு-பால் ஆகும்; சுவை-அமுது ஒரு-பால் ஆகும்;

என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு-திறத்து இயல்பும்" என்பான்,


Pandya king tells Jains that they have lost and requests Sambandar to cure his left side too

2667 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 769

"வெந்தொழில் அருகர்! தோற்றீர்; என்னைவிட்டு அகல நீங்கும்;

வந்து எனை உய்யக்கொண்ட மறைக்குல வள்ளலாரே!

இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர்" என்று

சிந்தையால் தொழுது சொன்னான், செல்கதிக்கு அணியன் ஆனான்.


Sambandar applies Holy ash on king's left side and cures that side as well

2668 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 770

திரு-முகம் கருணை காட்டத், திருக்-கையால் நீறு காட்டிப்,

பெரு-மறை துதிக்குமாற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும்

ஒரு-முறை தடவ, அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம்

மருவு தீப்-பிணியும் நீங்கி, வழுதியும் முழுதும் உய்ந்தான்.


The queen and the minister feel elated and revere Sambandar

2669 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 771

கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு

செற்றவர் செய்ய பாதத் தாமரை சென்னி சேர்த்துப்

"பெற்றனம் பெருமை; இன்று பிறந்தனம்; பிறவா மேன்மை

உற்றனன் மன்னன்" என்றே உளம் களித்து உவகை மிக்கார்.


The Pandya king reveres Sambandar

2670 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 772

மீனவன் தன்மேல் உள்ள வெப்பு-எலாம் உடனே மாற,

ஆன பேரின்பம் எய்தி, உச்சிமேல் அங்கை கூப்பி

"மானம்-ஒன்று இல்லார் முன்பு வன்-பிணி நீக்க வந்த **

ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்" என்றான்.

(** Variant reading in CKS book - நீங்க)


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.66 ("திருநீற்றுப் பதிகம்") – திருஆலவாய் ( பண் - காந்தாரம் )

("தானன தானன தானா தானன தானன தானா" - என்ற சந்தம்)

பாடல் எண் : 1

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாய்-உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.


பாடல் எண் : 2

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு

சீதப் புனல்-வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.


பாடல் எண் : 3

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு

சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.


பாடல் எண் : 4

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.


பாடல் எண் : 5

பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு

பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு அந்தம்-அதாவது நீறு

தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே.


பாடல் எண் : 6

அருத்தம்-அதாவது நீறு அவல மறுப்பது நீறு

வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு

பொருத்தம்-அதாவது நீறு புண்ணியர் பூசும்-வெண் ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.


பாடல் எண் : 7

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு பாக்கியம் ஆவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு சுத்தம்-அதாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

பாடல் எண் : 8

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பரா-வணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு

தரா-வணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு

அரா-வணங்கும் திரு மேனி ஆலவாயான் திருநீறே.


பாடல் எண் : 9

மாலொடு அயன்-அறி யாத வண்ணமும் உள்ளது நீறு

மேல்-உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு

ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே. **

(** variant reading in CKS / IFP versions - ஆல் அமுதுண்ட)


பாடல் எண் : 10

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்

கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு

எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு

அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே.

( கண்டிகைப்பிப்பது = கண் திகைப்பிப்பது)

( எண்டிசைப்பட்ட - எண் திசைப்பட்ட)


பாடல் எண் : 11

ஆற்றல் அடல்-விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான-சம்பந்தன்

தேற்றித் தென்னன் உடல்-உற்ற தீப்-பிணி ஆயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.


===================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Jains tell the Pandya king that they will cure his left side

2660 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 762

mannavan māṭram kēṭṭu, vaḍivu pōl manattum māsu

tunniya amaṇar tennar tōṇḍralai nōkki "nāṅgaḷ

un uḍambu-adanil veppai oru-puḍai vāmabāgam

munnam mandirittut teyva muyaṟciyāl tīrttum" eṇḍrār.


Jains fail and King's fever on his left side increases instead

2661 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 763

yādum-oṇḍru aṟivu-ilādār iruḷ ena aṇaiyac ceṇḍru **

vādinil mannavan-tan vāmabāgattait tīrppār,

mīdu tam pīli-koṇḍu taḍaviḍa, mēnmēl vepput

tīdu-uṟap, poṟādu mannan siraburattavaraip pārttān

(** Variant reading in CKS book - "aṟigilādār")


Sambandar sings "mandiram āvadu nīṟu" padhigam

2662 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 764

tennavan nōkkam kaṇḍu tiruk-kaḻumalattār selvar

"annavan valappāl veppai ālavāy aṇṇal nīṟē

mannum mandiramum āgi marundumāyt tīrppadu" eṇḍru,

panniya maṟaigaḷ ēttip pagar tirup-padigam pāḍi,


Sambandar applies Holy ash on king's right side and cures that side

2663 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 765

tiru-vaḷar nīṟu-koṇḍu tiruk-kaiyāl taḍavat, tennan

poru-aru veppu nīṅgip, poygaiyiṟ kuḷirndadu ap-pāl;

maruviya iḍap-pāl mikka aḻal eḻa, maṇḍu tīp-pōl

iru-puḍai veppum kūḍi, iḍam koḷādu ennap poṅga,


Pandya king feels fine on right side and has very high fever on left side simultaneously

2666 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 768

mannavan moḻivān "ennē! maditta ik-kālam oṇḍril

ven-naragu oru-pāl āgum; vīṭṭu-inbam oru-pāl āgum;

tunnu-nañju oru-pāl āgum; suvai-amudu oru-pāl āgum;

en vaḍivu oṇḍril uṭrēn iru-tiṟattu iyalbum" enbān,


Pandya king tells Jains that they have lost and requests Sambandar to cure his left side too

2667 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 769

"vendoḻil arugar! tōṭrīr; ennaiviṭṭu agala nīṅgum;

vandu enai uyyakkoṇḍa maṟaikkula vaḷḷalārē!

inda veppu aḍaiya nīṅga enakku aruḷ purivīr" eṇḍru

sindaiyāl toḻudu sonnān, selgadikku aṇiyan ānān.


Sambandar applies Holy ash on king's left side and cures that side as well

2668 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 770

tiru-mugam karuṇai kāṭṭat, tiruk-kaiyāl nīṟu kāṭṭip,

peru-maṟai tudikkumāṭrāl piḷḷaiyār pōṭrip pinnum

oru-muṟai taḍava, aṅgaṇ oḻindu veppu agaṇḍru pāgam

maruvu tīp-piṇiyum nīṅgi, vaḻudiyum muḻudum uyndān.


The queen and the minister feel elated and revere Sambandar

2669 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 771

koṭravan tēviyārum kulacciṟaiyārum tīṅgu

seṭravar seyya pādat tāmarai senni sērttup

"peṭranam perumai; iṇḍru piṟandanam; piṟavā mēnmai

uṭranan mannan" eṇḍrē uḷam kaḷittu uvagai mikkār.


The Pandya king reveres Sambandar

2670 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 772

mīnavan tanmēl uḷḷa veppu-elām uḍanē māṟa,

āna pērinbam eydi, uccimēl aṅgai kūppi

"mānam-oṇḍru illār munbu van-piṇi nīkka vanda **

ñānasambandar pādam naṇṇi nān uyndēn" eṇḍrān.

(** Variant reading in CKS book - nīṅga)


sambandar tēvāram - padigam 2.66 ("tirunīṭrup padigam") – tiruālavāy ( paṇ - kāndāram )

("tānana tānana tānā tānana tānana tānā" - Rhythm)

pāḍal eṇ : 1

mandiram āvadu nīṟu vānavar mēladu nīṟu

sundaram āvadu nīṟu tudikkap paḍuvadu nīṟu

tandiram āvadu nīṟu samayattil uḷḷadu nīṟu

senduvar vāy-umai paṅgan tiru ālavāyān tirunīṟē.


pāḍal eṇ : 2

vēdattil uḷḷadu nīṟu venduyar tīrppadu nīṟu

bōdam taruvadu nīṟu punmai tavirppadu nīṟu

ōdat taguvadu nīṟu uṇmaiyil uḷḷadu nīṟu

sīdap punal-vayal sūḻnda tiru ālavāyān tirunīṟē.


pāḍal eṇ : 3

mutti taruvadu nīṟu munivar aṇivadu nīṟu

sattiyam āvadu nīṟu takkōr pugaḻvadu nīṟu

patti taruvadu nīṟu parava iniyadu nīṟu

sitti taruvadu nīṟu tiru ālavāyān tirunīṟē.


pāḍal eṇ : 4

kāṇa iniyadu nīṟu kavinait taruvadu nīṟu

pēṇi aṇibavark kellām perumai koḍuppadu nīṟu

māṇam tagaivadu nīṟu madiyait taruvadu nīṟu

sēṇam taruvadu nīṟu tiru ālavāyān tirunīṟē.


pāḍal eṇ : 5

pūsa iniyadu nīṟu puṇṇiyam āvadu nīṟu

pēsa iniyadu nīṟu perundavat tōrgaḷuk kellām

āsai keḍuppadu nīṟu andam-adāvadu nīṟu

tēsam pugaḻvadu nīṟu tiru ālavāyān tirunīṟē.


pāḍal eṇ : 6

aruttam-adāvadu nīṟu avala maṟuppadu nīṟu

varuttam taṇippadu nīṟu vānam aḷippadu nīṟu

poruttam-adāvadu nīṟu puṇṇiyar pūsum-veṇ ṇīṟu

tiruttagu māḷigai sūḻnda tiru ālavāyān tirunīṟē.


pāḍal eṇ : 7

eyiladu aṭṭadu nīṟu irumaikkum uḷḷadu nīṟu

payilap paḍuvadu nīṟu pākkiyam āvadu nīṟu

tuyilait taḍuppadu nīṟu suttam-adāvadu nīṟu

ayilaip polidaru sūlattu ālavāyān tirunīṟē.


pāḍal eṇ : 8

irāvaṇan mēladu nīṟu eṇṇat taguvadu nīṟu

parā-vaṇam āvadu nīṟu pāvam aṟuppadu nīṟu

tarā-vaṇam āvadu nīṟu tattuvam āvadu nīṟu

arā-vaṇaṅgum tiru mēni ālavāyān tirunīṟē.


pāḍal eṇ : 9

māloḍu ayan-aṟi yāda vaṇṇamum uḷḷadu nīṟu

mēl-uṟai dēvargaḷ taṅgaḷ meyyadu veṇboḍi nīṟu

ēla uḍambiḍar tīrkkum inbam taruvadu nīṟu

ālamaduṇḍa miḍaṭrem ālavāyān tirunīṟē. **

(** variant reading in CKS / IFP versions - āl amuduṇḍa)


pāḍal eṇ : 10

kuṇḍigaik kaiyarga ḷōḍu sākkiyar kūṭṭamum kūḍak

kaṇḍigaip pippadu nīṟu karuda iniyadu nīṟu

eṇḍisaip paṭṭa poruḷār ēttum tagaiyadu nīṟu

aṇḍattavar paṇindēttum ālavāyān tirunīṟē.

( kaṇḍigaippippadu = kaṇ tigaippippadu)

( eṇḍisaippaṭṭa - eṇ tisaippaṭṭa)


pāḍal eṇ : 11

āṭral aḍal-viḍai ēṟum ālavāyān tirunīṭraip

pōṭrip pugali nilāvum pūsuran ñāna-sambandan

tēṭrit tennan uḍal-uṭra tīp-piṇi āyina tīrac

cāṭriya pāḍalgaḷ pattum vallavar nallavar tāmē.


================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )

Jains tell the Pandya king that they will cure his left side

2660 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 762

मन्नवन् माट्रम् केट्टु, वडिवु पोल् मनत्तुम् मासु

तुन्निय अमणर् तॆन्नर् तोण्ड्रलै नोक्कि "नाङ्गळ्

उन् उडम्बु-अदनिल् वॆप्पै ऒरु-पुडै वामबागम्

मुन्नम् मन्दिरित्तुत् तॆय्व मुयऱ्चियाल् तीर्त्तुम्" ऎण्ड्रार्.


Jains fail and King's fever on his left side increases instead

2661 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 763

यादुम्-ऒण्ड्रु अऱिवु-इलादार् इरुळ् ऎन अणैयच् चॆण्ड्रु **

वादिनिल् मन्नवन्-तन् वामबागत्तैत् तीर्प्पार्,

मीदु तम् पीलि-कॊण्डु तडविड, मेन्मेल् वॆप्पुत्

तीदु-उऱप्, पॊऱादु मन्नन् सिरबुरत्तवरैप् पार्त्तान्

(** Variant reading in CKS book - "अऱिगिलादार्")


Sambandar sings "mandiram āvadu nīṟu" padhigam

2662 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 764

तॆन्नवन् नोक्कम् कण्डु तिरुक्-कऴुमलत्तार् सॆल्वर्

"अन्नवन् वलप्पाल् वॆप्पै आलवाय् अण्णल् नीऱे

मन्नुम् मन्दिरमुम् आगि मरुन्दुमाय्त् तीर्प्पदु" ऎण्ड्रु,

पन्निय मऱैगळ् एत्तिप् पगर् तिरुप्-पदिगम् पाडि,


Sambandar applies Holy ash on king's right side and cures that side

2663 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 765

तिरु-वळर् नीऱु-कॊण्डु तिरुक्-कैयाल् तडवत्, तॆन्नन्

पॊरु-अरु वॆप्पु नीङ्गिप्, पॊय्गैयिऱ् कुळिर्न्ददु अप्-पाल्;

मरुविय इडप्-पाल् मिक्क अऴल् ऎऴ, मण्डु तीप्-पोल्

इरु-पुडै वॆप्पुम् कूडि, इडम् कॊळादु ऎन्नप् पॊङ्ग,


Pandya king feels fine on right side and has very high fever on left side simultaneously

2666 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 768

मन्नवन् मॊऴिवान् "ऎन्ने! मदित्त इक्-कालम् ऒण्ड्रिल्

वॆन्-नरगु ऒरु-पाल् आगुम्; वीट्टु-इन्बम् ऒरु-पाल् आगुम्;

तुन्नु-नञ्जु ऒरु-पाल् आगुम्; सुवै-अमुदु ऒरु-पाल् आगुम्;

ऎन् वडिवु ऒण्ड्रिल् उट्रेन् इरु-तिऱत्तु इयल्बुम्" ऎन्बान्,


Pandya king tells Jains that they have lost and requests Sambandar to cure his left side too

2667 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 769

"वॆन्दॊऴिल् अरुगर्! तोट्रीर्; ऎन्नैविट्टु अगल नीङ्गुम्;

वन्दु ऎनै उय्यक्कॊण्ड मऱैक्कुल वळ्ळलारे!

इन्द वॆप्पु अडैय नीङ्ग ऎनक्कु अरुळ् पुरिवीर्" ऎण्ड्रु

सिन्दैयाल् तॊऴुदु सॊन्नान्, सॆल्गदिक्कु अणियन् आनान्.


Sambandar applies Holy ash on king's left side and cures that side as well

2668 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 770

तिरु-मुगम् करुणै काट्टत्, तिरुक्-कैयाल् नीऱु काट्टिप्,

पॆरु-मऱै तुदिक्कुमाट्राल् पिळ्ळैयार् पोट्रिप् पिन्नुम्

ऒरु-मुऱै तडव, अङ्गण् ऒऴिन्दु वॆप्पु अगण्ड्रु पागम्

मरुवु तीप्-पिणियुम् नीङ्गि, वऴुदियुम् मुऴुदुम् उय्न्दान्.


The queen and the minister feel elated and revere Sambandar

2669 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 771

कॊट्रवन् तेवियारुम् कुलच्चिऱैयारुम् तीङ्गु

सॆट्रवर् सॆय्य पादत् तामरै सॆन्नि सेर्त्तुप्

"पॆट्रनम् पॆरुमै; इण्ड्रु पिऱन्दनम्; पिऱवा मेन्मै

उट्रनन् मन्नन्" ऎण्ड्रे उळम् कळित्तु उवगै मिक्कार्.


The Pandya king reveres Sambandar

2670 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 772

मीनवन् तन्मेल् उळ्ळ वॆप्पु-ऎलाम् उडने माऱ,

आन पेरिन्बम् ऎय्दि, उच्चिमेल् अङ्गै कूप्पि

"मानम्-ऒण्ड्रु इल्लार् मुन्बु वन्-पिणि नीक्क वन्द **

ञानसम्बन्दर् पादम् नण्णि नान् उय्न्देन्" ऎण्ड्रान्.

(** Variant reading in CKS book - नीङ्ग)


सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.66 ("तिरुनीट्रुप् पदिगम्") – तिरुआलवाय् ( पण् - कान्दारम् )

("तानन तानन ताना तानन तानन ताना" - Rhythm)

पाडल् ऎण् : 1

मन्दिरम् आवदु नीऱु वानवर् मेलदु नीऱु

सुन्दरम् आवदु नीऱु तुदिक्कप् पडुवदु नीऱु

तन्दिरम् आवदु नीऱु समयत्तिल् उळ्ळदु नीऱु

सॆन्दुवर् वाय्-उमै पङ्गन् तिरु आलवायान् तिरुनीऱे.


पाडल् ऎण् : 2

वेदत्तिल् उळ्ळदु नीऱु वॆन्दुयर् तीर्प्पदु नीऱु

बोदम् तरुवदु नीऱु पुन्मै तविर्प्पदु नीऱु

ओदत् तगुवदु नीऱु उण्मैयिल् उळ्ळदु नीऱु

सीदप् पुनल्-वयल् सूऴ्न्द तिरु आलवायान् तिरुनीऱे.


पाडल् ऎण् : 3

मुत्ति तरुवदु नीऱु मुनिवर् अणिवदु नीऱु

सत्तियम् आवदु नीऱु तक्कोर् पुगऴ्वदु नीऱु

पत्ति तरुवदु नीऱु परव इनियदु नीऱु

सित्ति तरुवदु नीऱु तिरु आलवायान् तिरुनीऱे.


पाडल् ऎण् : 4

काण इनियदु नीऱु कविनैत् तरुवदु नीऱु

पेणि अणिबवर्क् कॆल्लाम् पॆरुमै कॊडुप्पदु नीऱु

माणम् तगैवदु नीऱु मदियैत् तरुवदु नीऱु

सेणम् तरुवदु नीऱु तिरु आलवायान् तिरुनीऱे.


पाडल् ऎण् : 5

पूस इनियदु नीऱु पुण्णियम् आवदु नीऱु

पेस इनियदु नीऱु पॆरुन्दवत् तोर्गळुक् कॆल्लाम्

आसै कॆडुप्पदु नीऱु अन्दम्-अदावदु नीऱु

तेसम् पुगऴ्वदु नीऱु तिरु आलवायान् तिरुनीऱे.


पाडल् ऎण् : 6

अरुत्तम्-अदावदु नीऱु अवल मऱुप्पदु नीऱु

वरुत्तम् तणिप्पदु नीऱु वानम् अळिप्पदु नीऱु

पॊरुत्तम्-अदावदु नीऱु पुण्णियर् पूसुम्-वॆण् णीऱु

तिरुत्तगु माळिगै सूऴ्न्द तिरु आलवायान् तिरुनीऱे.


पाडल् ऎण् : 7

ऎयिलदु अट्टदु नीऱु इरुमैक्कुम् उळ्ळदु नीऱु

पयिलप् पडुवदु नीऱु पाक्कियम् आवदु नीऱु

तुयिलैत् तडुप्पदु नीऱु सुत्तम्-अदावदु नीऱु

अयिलैप् पॊलिदरु सूलत्तु आलवायान् तिरुनीऱे.


पाडल् ऎण् : 8

इरावणन् मेलदु नीऱु ऎण्णत् तगुवदु नीऱु

परा-वणम् आवदु नीऱु पावम् अऱुप्पदु नीऱु

तरा-वणम् आवदु नीऱु तत्तुवम् आवदु नीऱु

अरा-वणङ्गुम् तिरु मेनि आलवायान् तिरुनीऱे.


पाडल् ऎण् : 9

मालॊडु अयन्-अऱि याद वण्णमुम् उळ्ळदु नीऱु

मेल्-उऱै देवर्गळ् तङ्गळ् मॆय्यदु वॆण्बॊडि नीऱु

एल उडम्बिडर् तीर्क्कुम् इन्बम् तरुवदु नीऱु

आलमदुण्ड मिडट्रॆम् आलवायान् तिरुनीऱे. **

(** variant reading in CKS / IFP versions - आल् अमुदुण्ड)


पाडल् ऎण् : 10

कुण्डिगैक् कैयर्ग ळोडु साक्कियर् कूट्टमुम् कूडक्

कण्डिगैप् पिप्पदु नीऱु करुद इनियदु नीऱु

ऎण्डिसैप् पट्ट पॊरुळार् एत्तुम् तगैयदु नीऱु

अण्डत्तवर् पणिन्देत्तुम् आलवायान् तिरुनीऱे.

( कण्डिगैप्पिप्पदु = कण् तिगैप्पिप्पदु)

( ऎण्डिसैप्पट्ट - ऎण् तिसैप्पट्ट)


पाडल् ऎण् : 11

आट्रल् अडल्-विडै एऱुम् आलवायान् तिरुनीट्रैप्

पोट्रिप् पुगलि निलावुम् पूसुरन् ञान-सम्बन्दन्

तेट्रित् तॆन्नन् उडल्-उट्र तीप्-पिणि आयिन तीरच्

चाट्रिय पाडल्गळ् पत्तुम् वल्लवर् नल्लवर् तामे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

Jains tell the Pandya king that they will cure his left side

2660 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 762

మన్నవన్ మాట్రం కేట్టు, వడివు పోల్ మనత్తుం మాసు

తున్నియ అమణర్ తెన్నర్ తోండ్రలై నోక్కి "నాంగళ్

ఉన్ ఉడంబు-అదనిల్ వెప్పై ఒరు-పుడై వామబాగం

మున్నం మందిరిత్తుత్ తెయ్వ ముయఱ్చియాల్ తీర్త్తుం" ఎండ్రార్.


Jains fail and King's fever on his left side increases instead

2661 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 763

యాదుం-ఒండ్రు అఱివు-ఇలాదార్ ఇరుళ్ ఎన అణైయచ్ చెండ్రు **

వాదినిల్ మన్నవన్-తన్ వామబాగత్తైత్ తీర్ప్పార్,

మీదు తం పీలి-కొండు తడవిడ, మేన్మేల్ వెప్పుత్

తీదు-ఉఱప్, పొఱాదు మన్నన్ సిరబురత్తవరైప్ పార్త్తాన్

(** Variant reading in CKS book - "అఱిగిలాదార్")


Sambandar sings "mandiram āvadu nīṟu" padhigam

2662 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 764

తెన్నవన్ నోక్కం కండు తిరుక్-కఴుమలత్తార్ సెల్వర్

"అన్నవన్ వలప్పాల్ వెప్పై ఆలవాయ్ అణ్ణల్ నీఱే

మన్నుం మందిరముం ఆగి మరుందుమాయ్త్ తీర్ప్పదు" ఎండ్రు,

పన్నియ మఱైగళ్ ఏత్తిప్ పగర్ తిరుప్-పదిగం పాడి,


Sambandar applies Holy ash on king's right side and cures that side

2663 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 765

తిరు-వళర్ నీఱు-కొండు తిరుక్-కైయాల్ తడవత్, తెన్నన్

పొరు-అరు వెప్పు నీంగిప్, పొయ్గైయిఱ్ కుళిర్న్దదు అప్-పాల్;

మరువియ ఇడప్-పాల్ మిక్క అఴల్ ఎఴ, మండు తీప్-పోల్

ఇరు-పుడై వెప్పుం కూడి, ఇడం కొళాదు ఎన్నప్ పొంగ,


Pandya king feels fine on right side and has very high fever on left side simultaneously

2666 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 768

మన్నవన్ మొఴివాన్ "ఎన్నే! మదిత్త ఇక్-కాలం ఒండ్రిల్

వెన్-నరగు ఒరు-పాల్ ఆగుం; వీట్టు-ఇన్బం ఒరు-పాల్ ఆగుం;

తున్ను-నంజు ఒరు-పాల్ ఆగుం; సువై-అముదు ఒరు-పాల్ ఆగుం;

ఎన్ వడివు ఒండ్రిల్ ఉట్రేన్ ఇరు-తిఱత్తు ఇయల్బుం" ఎన్బాన్,


Pandya king tells Jains that they have lost and requests Sambandar to cure his left side too

2667 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 769

"వెందొఴిల్ అరుగర్! తోట్రీర్; ఎన్నైవిట్టు అగల నీంగుం;

వందు ఎనై ఉయ్యక్కొండ మఱైక్కుల వళ్ళలారే!

ఇంద వెప్పు అడైయ నీంగ ఎనక్కు అరుళ్ పురివీర్" ఎండ్రు

సిందైయాల్ తొఴుదు సొన్నాన్, సెల్గదిక్కు అణియన్ ఆనాన్.


Sambandar applies Holy ash on king's left side and cures that side as well

2668 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 770

తిరు-ముగం కరుణై కాట్టత్, తిరుక్-కైయాల్ నీఱు కాట్టిప్,

పెరు-మఱై తుదిక్కుమాట్రాల్ పిళ్ళైయార్ పోట్రిప్ పిన్నుం

ఒరు-ముఱై తడవ, అంగణ్ ఒఴిందు వెప్పు అగండ్రు పాగం

మరువు తీప్-పిణియుం నీంగి, వఴుదియుం ముఴుదుం ఉయ్న్దాన్.


The queen and the minister feel elated and revere Sambandar

2669 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 771

కొట్రవన్ తేవియారుం కులచ్చిఱైయారుం తీంగు

సెట్రవర్ సెయ్య పాదత్ తామరై సెన్ని సేర్త్తుప్

"పెట్రనం పెరుమై; ఇండ్రు పిఱందనం; పిఱవా మేన్మై

ఉట్రనన్ మన్నన్" ఎండ్రే ఉళం కళిత్తు ఉవగై మిక్కార్.


The Pandya king reveres Sambandar

2670 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 772

మీనవన్ తన్మేల్ ఉళ్ళ వెప్పు-ఎలాం ఉడనే మాఱ,

ఆన పేరిన్బం ఎయ్ది, ఉచ్చిమేల్ అంగై కూప్పి

"మానం-ఒండ్రు ఇల్లార్ మున్బు వన్-పిణి నీక్క వంద **

ఞానసంబందర్ పాదం నణ్ణి నాన్ ఉయ్న్దేన్" ఎండ్రాన్.

(** Variant reading in CKS book - నీంగ)


సంబందర్ తేవారం - పదిగం 2.66 ("తిరునీట్రుప్ పదిగం") – తిరుఆలవాయ్ ( పణ్ - కాందారం )

("తానన తానన తానా తానన తానన తానా" - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

మందిరం ఆవదు నీఱు వానవర్ మేలదు నీఱు

సుందరం ఆవదు నీఱు తుదిక్కప్ పడువదు నీఱు

తందిరం ఆవదు నీఱు సమయత్తిల్ ఉళ్ళదు నీఱు

సెందువర్ వాయ్-ఉమై పంగన్ తిరు ఆలవాయాన్ తిరునీఱే.


పాడల్ ఎణ్ : 2

వేదత్తిల్ ఉళ్ళదు నీఱు వెందుయర్ తీర్ప్పదు నీఱు

బోదం తరువదు నీఱు పున్మై తవిర్ప్పదు నీఱు

ఓదత్ తగువదు నీఱు ఉణ్మైయిల్ ఉళ్ళదు నీఱు

సీదప్ పునల్-వయల్ సూఴ్న్ద తిరు ఆలవాయాన్ తిరునీఱే.


పాడల్ ఎణ్ : 3

ముత్తి తరువదు నీఱు మునివర్ అణివదు నీఱు

సత్తియం ఆవదు నీఱు తక్కోర్ పుగఴ్వదు నీఱు

పత్తి తరువదు నీఱు పరవ ఇనియదు నీఱు

సిత్తి తరువదు నీఱు తిరు ఆలవాయాన్ తిరునీఱే.


పాడల్ ఎణ్ : 4

కాణ ఇనియదు నీఱు కవినైత్ తరువదు నీఱు

పేణి అణిబవర్క్ కెల్లాం పెరుమై కొడుప్పదు నీఱు

మాణం తగైవదు నీఱు మదియైత్ తరువదు నీఱు

సేణం తరువదు నీఱు తిరు ఆలవాయాన్ తిరునీఱే.


పాడల్ ఎణ్ : 5

పూస ఇనియదు నీఱు పుణ్ణియం ఆవదు నీఱు

పేస ఇనియదు నీఱు పెరుందవత్ తోర్గళుక్ కెల్లాం

ఆసై కెడుప్పదు నీఱు అందం-అదావదు నీఱు

తేసం పుగఴ్వదు నీఱు తిరు ఆలవాయాన్ తిరునీఱే.


పాడల్ ఎణ్ : 6

అరుత్తం-అదావదు నీఱు అవల మఱుప్పదు నీఱు

వరుత్తం తణిప్పదు నీఱు వానం అళిప్పదు నీఱు

పొరుత్తం-అదావదు నీఱు పుణ్ణియర్ పూసుం-వెణ్ ణీఱు

తిరుత్తగు మాళిగై సూఴ్న్ద తిరు ఆలవాయాన్ తిరునీఱే.


పాడల్ ఎణ్ : 7

ఎయిలదు అట్టదు నీఱు ఇరుమైక్కుం ఉళ్ళదు నీఱు

పయిలప్ పడువదు నీఱు పాక్కియం ఆవదు నీఱు

తుయిలైత్ తడుప్పదు నీఱు సుత్తం-అదావదు నీఱు

అయిలైప్ పొలిదరు సూలత్తు ఆలవాయాన్ తిరునీఱే.

పాడల్ ఎణ్ : 8

ఇరావణన్ మేలదు నీఱు ఎణ్ణత్ తగువదు నీఱు

పరా-వణం ఆవదు నీఱు పావం అఱుప్పదు నీఱు

తరా-వణం ఆవదు నీఱు తత్తువం ఆవదు నీఱు

అరా-వణంగుం తిరు మేని ఆలవాయాన్ తిరునీఱే.


పాడల్ ఎణ్ : 9

మాలొడు అయన్-అఱి యాద వణ్ణముం ఉళ్ళదు నీఱు

మేల్-ఉఱై దేవర్గళ్ తంగళ్ మెయ్యదు వెణ్బొడి నీఱు

ఏల ఉడంబిడర్ తీర్క్కుం ఇన్బం తరువదు నీఱు

ఆలమదుండ మిడట్రెం ఆలవాయాన్ తిరునీఱే. **

(** variant reading in CKS / IFP versions - ఆల్ అముదుండ)


పాడల్ ఎణ్ : 10

కుండిగైక్ కైయర్గ ళోడు సాక్కియర్ కూట్టముం కూడక్

కండిగైప్ పిప్పదు నీఱు కరుద ఇనియదు నీఱు

ఎండిసైప్ పట్ట పొరుళార్ ఏత్తుం తగైయదు నీఱు

అండత్తవర్ పణిందేత్తుం ఆలవాయాన్ తిరునీఱే.

( కండిగైప్పిప్పదు = కణ్ తిగైప్పిప్పదు)

( ఎండిసైప్పట్ట - ఎణ్ తిసైప్పట్ట)


పాడల్ ఎణ్ : 11

ఆట్రల్ అడల్-విడై ఏఱుం ఆలవాయాన్ తిరునీట్రైప్

పోట్రిప్ పుగలి నిలావుం పూసురన్ ఞాన-సంబందన్

తేట్రిత్ తెన్నన్ ఉడల్-ఉట్ర తీప్-పిణి ఆయిన తీరచ్

చాట్రియ పాడల్గళ్ పత్తుం వల్లవర్ నల్లవర్ తామే.

================ ============