76) 6.54 - ஆண்டானை அடியேனை - புள்ளிருக்குவேளூர் - āṇḍānai aḍiyēnai - puḷḷirukkuvēḷūr
திருநாவுக்கரசர் தேவாரம் - 6.54 - ஆண்டானை அடியேனை - புள்ளிருக்குவேளூர் - (திருத்தாண்டகம்)
tirunāvukkarasar tēvāram - 6.54 - āṇḍānai aḍiyēnai - puḷḷirukkuvēḷūr - (tiruttāṇḍagam)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1oOHHgKLwHXFr1YZ6GW-wHhZpTChyRZZi/view?usp=sharing
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/cfyOB0UTkGU
Part-2: https://youtu.be/9Nm7G-3XwH8
V. Subramanian
==========================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.54 - புள்ளிருக்குவேளூர் - (திருத்தாண்டகம்)
Some additional notes on this padhigam:
1. இத்தலம் இக்காலத்தில் "வைத்தீஸ்வரன் கோயில்" என்று வழங்கப்பெறுகின்றது.
சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், வேதங்களும், முருகக்கடவுளும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது. (புள் - பறவை; இருக்கு - வேதம்; வேள் - முருகன்);
2. இப்பதிகத்தில் பாடல்தோறும் திருநாவுக்கரசர் தாம் பல்லாண்டுகள் சிவபெருமானை வழிபடாமல் வீணாக்கியதை எண்ணி வருந்துகின்றார்.
----------
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.54 - புள்ளிருக்குவேளூர் - (திருத்தாண்டகம்)
பாடல் எண் : 1
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
.. அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை
.. நேமிவான் படையால்நீ ளுரவோன் ஆகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
.. கேடிலியைக் கிளர்பொறிவா ளரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
.. போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பாடல் எண் : 2
சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
.. திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவ தேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
.. குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
.. பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
.. போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பாடல் எண் : 3
பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
.. பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
.. எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
.. அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
.. போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பாடல் எண் : 4
இருளாய வுள்ளத்தி னிருளை நீக்கி
.. யிடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
.. சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
.. ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
.. போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.
பாடல் எண் : 5
மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
.. வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
.. தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
.. வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
.. போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பாடல் எண் : 6
அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
.. அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
.. கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
.. திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
.. போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பாடல் எண் : 7
நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
.. நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
.. வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை யிடைமருதோ டீங்கோய் நீங்கா
.. இறையவனை யெனையாளுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
.. போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பாடல் எண் : 8
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
.. பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
.. மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
.. திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
.. போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பாடல் எண் : 9
பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப்
.. படர்சடைமேற் புனல்கரந்த படிறன் தன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
.. நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கட்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
.. காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
.. போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பாடல் எண் : 10
இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
.. எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
.. அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காமன் ஆகங்
.. காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
.. போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
==================
Word separated version:
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.54 - புள்ளிருக்குவேளூர் - (திருத்தாண்டகம்)
பாடல் எண் : 1
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு,
.. அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம்
நீண்டானை, நெடுங்கள மா-நகரான் தன்னை,
.. நேமி வான் படையால் நீள்-உரவோன் ஆகம்
கீண்டானைக், கேதாரம் மேவினானைக்,
.. கேடிலியைக், கிளர்-பொறி-வாள் அரவோடு என்பு
பூண்டானைப், புள்ளிருக்கு வேளூரானைப்
.. போற்றாதே ஆற்ற-நாள் போக்கினேனே.
பாடல் எண் : 2
சீர்த்தானைச் சிறந்து அடியேன் சிந்தையுள்ளே
.. திகழ்ந்தானைச், சிவன் தன்னைத், தேவதேவைக்,
கூர்த்தானைக், கொடு-நெடு-வேல் கூற்றம் தன்னைக்
.. குரை-கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப், பிறப்பிலியை, இறப்பு ஒன்று இல்லாப்
.. பெம்மானைக், கைம்மாவின் உரிவை பேணிப்
போர்த்தானைப், புள்ளிருக்கு வேளூரானைப்
.. போற்றாதே ஆற்ற-நாள் போக்கினேனே.
பாடல் எண் : 3
பத்திமையால் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள்
.. பாமாலை பாடப் பயில்வித்தானை,
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை,
.. எம்மானை, என் உள்ளத்துள்ளே ஊறும்
அத்தேனை, அமுதத்தை, ஆவின் பாலை,
.. அண்ணிக்கும் தீங்கரும்பை, அரனை, ஆதிப்
புத்தேளைப், புள்ளிருக்கு வேளூரானைப்
.. போற்றாதே ஆற்ற-நாள் போக்கினேனே.
பாடல் எண் : 4
இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி,
.. இடர் பாவம் கெடுத்து, ஏழையேனை உய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித், தன்போல்
.. சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த
அருளானை, ஆதி மா தவத்துளானை,
.. ஆறங்கம் நால்வேதத்து அப்பால் நின்ற
பொருளானைப், புள்ளிருக்கு வேளூரானைப்
.. போற்றாதே ஆற்ற-நாள் போக்கினேனே.
பாடல் எண் : 5
மின்-உருவை, விண்ணகத்தில் ஒன்றாய், மிக்கு
.. வீசுங்கால் தன்-அகத்தில் இரண்டாய்ச், செந்தீத்
தன்-உருவில் மூன்றாய்த், தாழ்-புனலின் நான்காய்த்,
.. தரணிதலத்து அஞ்சாகி, எஞ்சாத் தஞ்ச
மன்-உருவை, வான்-பவளக் கொழுந்தை, முத்தை,
.. வளர்-ஒளியை, வயிரத்தை, மாசு ஒன்று இல்லாப்
பொன்-உருவைப், புள்ளிருக்கு வேளூரானைப்
.. போற்றாதே ஆற்ற-நாள் போக்கினேனே.
பாடல் எண் : 6
அறை-ஆர் பொற்கழல் ஆர்ப்ப, அணி-ஆர் தில்லை
.. அம்பலத்துள் நடம் ஆடும் அழகன் தன்னைக்,
கறை-ஆர் மூவிலை நெடு-வேல் கடவுள் தன்னைக்,
.. கடல்-நாகைக் காரோணம் கருதினானை,
இறையானை, என் உள்ளத்துள்ளே விள்ளாது
.. இருந்தானை, ஏழ்-பொழிலும் தாங்கி நின்ற
பொறையானைப், புள்ளிருக்கு வேளூரானைப்
.. போற்றாதே ஆற்ற-நாள் போக்கினேனே.
பாடல் எண் : 7
நெருப்பு அனைய திருமேனி வெண்ணீற்றானை,
.. நீங்காது என் உள்ளத்தின் உள்ளே நின்ற
விருப்பவனை, வேதியனை, வேத வித்தை,
.. வெண்காடும் வியன்-துருத்தி நகரும் மேவி
இருப்பவனை, இடைமருதோடு ஈங்கோய் நீங்கா
.. இறையவனை, எனை ஆளும் கயிலை என்னும்
பொருப்பவனைப், புள்ளிருக்கு வேளூரானைப்
.. போற்றாதே ஆற்ற-நாள் போக்கினேனே.
பாடல் எண் : 8
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும்
.. பெம்மானைப், பிரிவு-இலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை,
.. மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா-நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்,
.. திரி-புரங்கள் தீயெழத் திண்-சிலை கைக் கொண்ட
போரானைப், புள்ளிருக்கு வேளூரானைப்
.. போற்றாதே ஆற்ற-நாள் போக்கினேனே.
பாடல் எண் : 9
பண்ணியனைப், பைங்கொடியாள் பாகன் தன்னைப்,
.. படர்-சடைமேல் புனல் கரந்த படிறன் தன்னை,
நண்ணியனை, என்-ஆக்கித் தன்-ஆனானை,
.. நான்மறையின் நற்பொருளை, நளிர்-வெண் திங்கள்
கண்ணியனைக், கடிய-நடை விடை ஒன்று ஏறும்
.. காரணனை, நாரணனைக், கமலத்து ஓங்கும்
புண்ணியனைப், புள்ளிருக்கு வேளூரானைப்
.. போற்றாதே ஆற்ற-நாள் போக்கினேனே.
பாடல் எண் : 10
இறுத்தானை இலங்கையர்-கோன் சிரங்கள் பத்தும்,
.. எழு-நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை,
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்,
.. அலை-கடலில் ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானைக், கண்ணழலால் காமன் ஆகம்
.. காய்ந்தானைக், கனல்-மழுவும் கலையும் அங்கை
பொறுத்தானைப், புள்ளிருக்கு வேளூரானைப்
.. போற்றாதே ஆற்ற-நாள் போக்கினேனே.
===================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tirunāvukkarasar tēvāram - padigam 6.54 - puḷḷirukkuvēḷūr - (tiruttāṇḍagam)
pāḍal eṇ : 1
āṇḍānai aḍiyēnai āḷāk koṇḍu,
.. aḍiyōḍu muḍi ayan māl aṟiyā vaṇṇam
nīṇḍānai, neḍuṅgaḷa mā-nagarān tannai,
.. nēmi vān paḍaiyāl nīḷ-uravōn āgam
kīṇḍānaik, kēdāram mēvinānaik,
.. kēḍiliyaik, kiḷar-poṟi-vāḷ aravōḍu enbu
pūṇḍānaip, puḷḷirukku vēḷūrānaip
.. pōṭrādē āṭra-nāḷ pōkkinēnē.
pāḍal eṇ : 2
sīrttānaic ciṟandu aḍiyēn sindaiyuḷḷē
.. tigaḻndānaic, civan tannait, dēvadēvaik,
kūrttānaik, koḍu-neḍu-vēl kūṭram tannaik
.. kurai-kaḻalāl kumaittu muni koṇḍa accam
pērttānaip, piṟappiliyai, iṟappu oṇḍru illāp
.. pemmānaik, kaimmāvin urivai pēṇip
pōrttānaip, puḷḷirukku vēḷūrānaip
.. pōṭrādē āṭra-nāḷ pōkkinēnē.
pāḍal eṇ : 3
pattimaiyāl paṇindu aḍiyēn tannaip pannāḷ
.. pāmālai pāḍap payilvittānai,
ettēvum ēttum iṟaivan tannai,
.. emmānai, en uḷḷattuḷḷē ūṟum
attēnai, amudattai, āvin pālai,
.. aṇṇikkum tīṅgarumbai, aranai, ādip
puttēḷaip, puḷḷirukku vēḷūrānaip
.. pōṭrādē āṭra-nāḷ pōkkinēnē.
pāḍal eṇ : 4
iruḷāya uḷḷattin iruḷai nīkki,
.. iḍar pāvam keḍuttu, ēḻaiyēnai uyyat
teruḷāda sindaidanait teruṭṭit, tanbōl
.. sivalōga neṟi aṟiyac cindai tanda
aruḷānai, ādi mā tavattuḷānai,
.. āṟaṅgam nālvēdattu appāl niṇḍra
poruḷānaip, puḷḷirukku vēḷūrānaip
.. pōṭrādē āṭra-nāḷ pōkkinēnē.
pāḍal eṇ : 5
min-uruvai, viṇṇagattil oṇḍrāy, mikku
.. vīsuṅgāl tan-agattil iraṇḍāyc, cendīt
tan-uruvil mūṇḍrāyt, tāḻ-punalin nāngāyt,
.. taraṇidalattu añjāgi, eñjāt tañja
man-uruvai, vān-pavaḷak koḻundai, muttai,
.. vaḷar-oḷiyai, vayirattai, māsu oṇḍru illāp
pon-uruvaip, puḷḷirukku vēḷūrānaip
.. pōṭrādē āṭra-nāḷ pōkkinēnē.
pāḍal eṇ : 6
aṟai-ār poṟkaḻal ārppa, aṇi-ār tillai
.. ambalattuḷ naḍam āḍum aḻagan tannaik,
kaṟai-ār mūvilai neḍu-vēl kaḍavuḷ tannaik,
.. kaḍal-nāgaik kārōṇam karudinānai,
iṟaiyānai, en uḷḷattuḷḷē viḷḷādu
.. irundānai, ēḻ-poḻilum tāṅgi niṇḍra
poṟaiyānaip, puḷḷirukku vēḷūrānaip
.. pōṭrādē āṭra-nāḷ pōkkinēnē.
pāḍal eṇ : 7
neruppu anaiya tirumēni veṇṇīṭrānai,
.. nīṅgādu en uḷḷattin uḷḷē niṇḍra
viruppavanai, vēdiyanai, vēda vittai,
.. veṇgāḍum viyan-turutti nagarum mēvi
iruppavanai, iḍaimarudōḍu īṅgōy nīṅgā
.. iṟaiyavanai, enai āḷum kayilai ennum
poruppavanaip, puḷḷirukku vēḷūrānaip
.. pōṭrādē āṭra-nāḷ pōkkinēnē.
pāḍal eṇ : 8
pēr āyiram paravi vānōr ēttum
.. pemmānaip, pirivu-ilā aḍiyārkku eṇḍrum
vārāda selvam varuvippānai,
.. mandiramum tandiramum marundum āgit
tīrā-nōy tīrttaruḷa vallān tannait,
.. tiri-puraṅgaḷ tīyeḻat tiṇ-silai kaik koṇḍa
pōrānaip, puḷḷirukku vēḷūrānaip
.. pōṭrādē āṭra-nāḷ pōkkinēnē.
pāḍal eṇ : 9
paṇṇiyanaip, paiṅgoḍiyāḷ pāgan tannaip,
.. paḍar-saḍaimēl punal karanda paḍiṟan tannai,
naṇṇiyanai, en-ākkit tan-ānānai,
.. nānmaṟaiyin naṟporuḷai, naḷir-veṇ tiṅgaḷ
kaṇṇiyanaik, kaḍiya-naḍai viḍai oṇḍru ēṟum
.. kāraṇanai, nāraṇanaik, kamalattu ōṅgum
puṇṇiyanaip, puḷḷirukku vēḷūrānaip
.. pōṭrādē āṭra-nāḷ pōkkinēnē.
pāḍal eṇ : 10
iṟuttānai ilaṅgaiyar-kōn siraṅgaḷ pattum,
.. eḻu-narambin innisai kēṭṭu inbuṭrānai,
aṟuttānai aḍiyārdam arunōy pāvam,
.. alai-kaḍalil ālālam uṇḍu kaṇḍam
kaṟuttānaik, kaṇṇaḻalāl kāman āgam
.. kāyndānaik, kanal-maḻuvum kalaiyum aṅgai
poṟuttānaip, puḷḷirukku vēḷūrānaip
.. pōṭrādē āṭra-nāḷ pōkkinēnē.
===================== ===============
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 6.54 - पुळ्ळिरुक्कुवेळूर् - (तिरुत्ताण्डगम्)
पाडल् ऎण् : 1
आण्डानै अडियेनै आळाक् कॊण्डु,
.. अडियोडु मुडि अयन् माल् अऱिया वण्णम्
नीण्डानै, नॆडुङ्गळ मा-नगरान् तन्नै,
.. नेमि वान् पडैयाल् नीळ्-उरवोन् आगम्
कीण्डानैक्, केदारम् मेविनानैक्,
.. केडिलियैक्, किळर्-पॊऱि-वाळ् अरवोडु ऎन्बु
पूण्डानैप्, पुळ्ळिरुक्कु वेळूरानैप्
.. पोट्रादे आट्र-नाळ् पोक्किनेने.
पाडल् ऎण् : 2
सीर्त्तानैच् चिऱन्दु अडियेन् सिन्दैयुळ्ळे
.. तिगऴ्न्दानैच्, चिवन् तन्नैत्, देवदेवैक्,
कूर्त्तानैक्, कॊडु-नॆडु-वेल् कूट्रम् तन्नैक्
.. कुरै-कऴलाल् कुमैत्तु मुनि कॊण्ड अच्चम्
पेर्त्तानैप्, पिऱप्पिलियै, इऱप्पु ऒण्ड्रु इल्लाप्
.. पॆम्मानैक्, कैम्माविन् उरिवै पेणिप्
पोर्त्तानैप्, पुळ्ळिरुक्कु वेळूरानैप्
.. पोट्रादे आट्र-नाळ् पोक्किनेने.
पाडल् ऎण् : 3
पत्तिमैयाल् पणिन्दु अडियेन् तन्नैप् पन्नाळ्
.. पामालै पाडप् पयिल्वित्तानै,
ऎत्तेवुम् एत्तुम् इऱैवन् तन्नै,
.. ऎम्मानै, ऎन् उळ्ळत्तुळ्ळे ऊऱुम्
अत्तेनै, अमुदत्तै, आविन् पालै,
.. अण्णिक्कुम् तीङ्गरुम्बै, अरनै, आदिप्
पुत्तेळैप्, पुळ्ळिरुक्कु वेळूरानैप्
.. पोट्रादे आट्र-नाळ् पोक्किनेने.
पाडल् ऎण् : 4
इरुळाय उळ्ळत्तिन् इरुळै नीक्कि,
.. इडर् पावम् कॆडुत्तु, एऴैयेनै उय्यत्
तॆरुळाद सिन्दैदनैत् तॆरुट्टित्, तन्बोल्
.. सिवलोग नॆऱि अऱियच् चिन्दै तन्द
अरुळानै, आदि मा तवत्तुळानै,
.. आऱङ्गम् नाल्वेदत्तु अप्पाल् निण्ड्र
पॊरुळानैप्, पुळ्ळिरुक्कु वेळूरानैप्
.. पोट्रादे आट्र-नाळ् पोक्किनेने.
पाडल् ऎण् : 5
मिन्-उरुवै, विण्णगत्तिल् ऒण्ड्राय्, मिक्कु
.. वीसुङ्गाल् तन्-अगत्तिल् इरण्डाय्च्, चॆन्दीत्
तन्-उरुविल् मूण्ड्राय्त्, ताऴ्-पुनलिन् नान्गाय्त्,
.. तरणिदलत्तु अञ्जागि, ऎञ्जात् तञ्ज
मन्-उरुवै, वान्-पवळक् कॊऴुन्दै, मुत्तै,
.. वळर्-ऒळियै, वयिरत्तै, मासु ऒण्ड्रु इल्लाप्
पॊन्-उरुवैप्, पुळ्ळिरुक्कु वेळूरानैप्
.. पोट्रादे आट्र-नाळ् पोक्किनेने.
पाडल् ऎण् : 6
अऱै-आर् पॊऱ्कऴल् आर्प्प, अणि-आर् तिल्लै
.. अम्बलत्तुळ् नडम् आडुम् अऴगन् तन्नैक्,
कऱै-आर् मूविलै नॆडु-वेल् कडवुळ् तन्नैक्,
.. कडल्-नागैक् कारोणम् करुदिनानै,
इऱैयानै, ऎन् उळ्ळत्तुळ्ळे विळ्ळादु
.. इरुन्दानै, एऴ्-पॊऴिलुम् ताङ्गि निण्ड्र
पॊऱैयानैप्, पुळ्ळिरुक्कु वेळूरानैप्
.. पोट्रादे आट्र-नाळ् पोक्किनेने.
पाडल् ऎण् : 7
नॆरुप्पु अनैय तिरुमेनि वॆण्णीट्रानै,
.. नीङ्गादु ऎन् उळ्ळत्तिन् उळ्ळे निण्ड्र
विरुप्पवनै, वेदियनै, वेद वित्तै,
.. वॆण्गाडुम् वियन्-तुरुत्ति नगरुम् मेवि
इरुप्पवनै, इडैमरुदोडु ईङ्गोय् नीङ्गा
.. इऱैयवनै, ऎनै आळुम् कयिलै ऎन्नुम्
पॊरुप्पवनैप्, पुळ्ळिरुक्कु वेळूरानैप्
.. पोट्रादे आट्र-नाळ् पोक्किनेने.
पाडल् ऎण् : 8
पेर् आयिरम् परवि वानोर् एत्तुम्
.. पॆम्मानैप्, पिरिवु-इला अडियार्क्कु ऎण्ड्रुम्
वाराद सॆल्वम् वरुविप्पानै,
.. मन्दिरमुम् तन्दिरमुम् मरुन्दुम् आगित्
तीरा-नोय् तीर्त्तरुळ वल्लान् तन्नैत्,
.. तिरि-पुरङ्गळ् तीयॆऴत् तिण्-सिलै कैक् कॊण्ड
पोरानैप्, पुळ्ळिरुक्कु वेळूरानैप्
.. पोट्रादे आट्र-नाळ् पोक्किनेने.
पाडल् ऎण् : 9
पण्णियनैप्, पैङ्गॊडियाळ् पागन् तन्नैप्,
.. पडर्-सडैमेल् पुनल् करन्द पडिऱन् तन्नै,
नण्णियनै, ऎन्-आक्कित् तन्-आनानै,
.. नान्मऱैयिन् नऱ्पॊरुळै, नळिर्-वॆण् तिङ्गळ्
कण्णियनैक्, कडिय-नडै विडै ऒण्ड्रु एऱुम्
.. कारणनै, नारणनैक्, कमलत्तु ओङ्गुम्
पुण्णियनैप्, पुळ्ळिरुक्कु वेळूरानैप्
.. पोट्रादे आट्र-नाळ् पोक्किनेने.
पाडल् ऎण् : 10
इऱुत्तानै इलङ्गैयर्-कोन् सिरङ्गळ् पत्तुम्,
.. ऎऴु-नरम्बिन् इन्निसै केट्टु इन्बुट्रानै,
अऱुत्तानै अडियार्दम् अरुनोय् पावम्,
.. अलै-कडलिल् आलालम् उण्डु कण्डम्
कऱुत्तानैक्, कण्णऴलाल् कामन् आगम्
.. काय्न्दानैक्, कनल्-मऴुवुम् कलैयुम् अङ्गै
पॊऱुत्तानैप्, पुळ्ळिरुक्कु वेळूरानैप्
.. पोट्रादे आट्र-नाळ् पोक्किनेने.
===================== ===============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 6.54 - పుళ్ళిరుక్కువేళూర్ - (తిరుత్తాండగం)
పాడల్ ఎణ్ : 1
ఆండానై అడియేనై ఆళాక్ కొండు,
.. అడియోడు ముడి అయన్ మాల్ అఱియా వణ్ణం
నీండానై, నెడుంగళ మా-నగరాన్ తన్నై,
.. నేమి వాన్ పడైయాల్ నీళ్-ఉరవోన్ ఆగం
కీండానైక్, కేదారం మేవినానైక్,
.. కేడిలియైక్, కిళర్-పొఱి-వాళ్ అరవోడు ఎన్బు
పూండానైప్, పుళ్ళిరుక్కు వేళూరానైప్
.. పోట్రాదే ఆట్ర-నాళ్ పోక్కినేనే.
పాడల్ ఎణ్ : 2
సీర్త్తానైచ్ చిఱందు అడియేన్ సిందైయుళ్ళే
.. తిగఴ్న్దానైచ్, చివన్ తన్నైత్, దేవదేవైక్,
కూర్త్తానైక్, కొడు-నెడు-వేల్ కూట్రం తన్నైక్
.. కురై-కఴలాల్ కుమైత్తు ముని కొండ అచ్చం
పేర్త్తానైప్, పిఱప్పిలియై, ఇఱప్పు ఒండ్రు ఇల్లాప్
.. పెమ్మానైక్, కైమ్మావిన్ ఉరివై పేణిప్
పోర్త్తానైప్, పుళ్ళిరుక్కు వేళూరానైప్
.. పోట్రాదే ఆట్ర-నాళ్ పోక్కినేనే.
పాడల్ ఎణ్ : 3
పత్తిమైయాల్ పణిందు అడియేన్ తన్నైప్ పన్నాళ్
.. పామాలై పాడప్ పయిల్విత్తానై,
ఎత్తేవుం ఏత్తుం ఇఱైవన్ తన్నై,
.. ఎమ్మానై, ఎన్ ఉళ్ళత్తుళ్ళే ఊఱుం
అత్తేనై, అముదత్తై, ఆవిన్ పాలై,
.. అణ్ణిక్కుం తీంగరుంబై, అరనై, ఆదిప్
పుత్తేళైప్, పుళ్ళిరుక్కు వేళూరానైప్
.. పోట్రాదే ఆట్ర-నాళ్ పోక్కినేనే.
పాడల్ ఎణ్ : 4
ఇరుళాయ ఉళ్ళత్తిన్ ఇరుళై నీక్కి,
.. ఇడర్ పావం కెడుత్తు, ఏఴైయేనై ఉయ్యత్
తెరుళాద సిందైదనైత్ తెరుట్టిత్, తన్బోల్
.. సివలోగ నెఱి అఱియచ్ చిందై తంద
అరుళానై, ఆది మా తవత్తుళానై,
.. ఆఱంగం నాల్వేదత్తు అప్పాల్ నిండ్ర
పొరుళానైప్, పుళ్ళిరుక్కు వేళూరానైప్
.. పోట్రాదే ఆట్ర-నాళ్ పోక్కినేనే.
పాడల్ ఎణ్ : 5
మిన్-ఉరువై, విణ్ణగత్తిల్ ఒండ్రాయ్, మిక్కు
.. వీసుంగాల్ తన్-అగత్తిల్ ఇరండాయ్చ్, చెందీత్
తన్-ఉరువిల్ మూండ్రాయ్త్, తాఴ్-పునలిన్ నాన్గాయ్త్,
.. తరణిదలత్తు అంజాగి, ఎంజాత్ తంజ
మన్-ఉరువై, వాన్-పవళక్ కొఴుందై, ముత్తై,
.. వళర్-ఒళియై, వయిరత్తై, మాసు ఒండ్రు ఇల్లాప్
పొన్-ఉరువైప్, పుళ్ళిరుక్కు వేళూరానైప్
.. పోట్రాదే ఆట్ర-నాళ్ పోక్కినేనే.
పాడల్ ఎణ్ : 6
అఱై-ఆర్ పొఱ్కఴల్ ఆర్ప్ప, అణి-ఆర్ తిల్లై
.. అంబలత్తుళ్ నడం ఆడుం అఴగన్ తన్నైక్,
కఱై-ఆర్ మూవిలై నెడు-వేల్ కడవుళ్ తన్నైక్,
.. కడల్-నాగైక్ కారోణం కరుదినానై,
ఇఱైయానై, ఎన్ ఉళ్ళత్తుళ్ళే విళ్ళాదు
.. ఇరుందానై, ఏఴ్-పొఴిలుం తాంగి నిండ్ర
పొఱైయానైప్, పుళ్ళిరుక్కు వేళూరానైప్
.. పోట్రాదే ఆట్ర-నాళ్ పోక్కినేనే.
పాడల్ ఎణ్ : 7
నెరుప్పు అనైయ తిరుమేని వెణ్ణీట్రానై,
.. నీంగాదు ఎన్ ఉళ్ళత్తిన్ ఉళ్ళే నిండ్ర
విరుప్పవనై, వేదియనై, వేద విత్తై,
.. వెణ్గాడుం వియన్-తురుత్తి నగరుం మేవి
ఇరుప్పవనై, ఇడైమరుదోడు ఈంగోయ్ నీంగా
.. ఇఱైయవనై, ఎనై ఆళుం కయిలై ఎన్నుం
పొరుప్పవనైప్, పుళ్ళిరుక్కు వేళూరానైప్
.. పోట్రాదే ఆట్ర-నాళ్ పోక్కినేనే.
పాడల్ ఎణ్ : 8
పేర్ ఆయిరం పరవి వానోర్ ఏత్తుం
.. పెమ్మానైప్, పిరివు-ఇలా అడియార్క్కు ఎండ్రుం
వారాద సెల్వం వరువిప్పానై,
.. మందిరముం తందిరముం మరుందుం ఆగిత్
తీరా-నోయ్ తీర్త్తరుళ వల్లాన్ తన్నైత్,
.. తిరి-పురంగళ్ తీయెఴత్ తిణ్-సిలై కైక్ కొండ
పోరానైప్, పుళ్ళిరుక్కు వేళూరానైప్
.. పోట్రాదే ఆట్ర-నాళ్ పోక్కినేనే.
పాడల్ ఎణ్ : 9
పణ్ణియనైప్, పైంగొడియాళ్ పాగన్ తన్నైప్,
.. పడర్-సడైమేల్ పునల్ కరంద పడిఱన్ తన్నై,
నణ్ణియనై, ఎన్-ఆక్కిత్ తన్-ఆనానై,
.. నాన్మఱైయిన్ నఱ్పొరుళై, నళిర్-వెణ్ తింగళ్
కణ్ణియనైక్, కడియ-నడై విడై ఒండ్రు ఏఱుం
.. కారణనై, నారణనైక్, కమలత్తు ఓంగుం
పుణ్ణియనైప్, పుళ్ళిరుక్కు వేళూరానైప్
.. పోట్రాదే ఆట్ర-నాళ్ పోక్కినేనే.
పాడల్ ఎణ్ : 10
ఇఱుత్తానై ఇలంగైయర్-కోన్ సిరంగళ్ పత్తుం,
.. ఎఴు-నరంబిన్ ఇన్నిసై కేట్టు ఇన్బుట్రానై,
అఱుత్తానై అడియార్దం అరునోయ్ పావం,
.. అలై-కడలిల్ ఆలాలం ఉండు కండం
కఱుత్తానైక్, కణ్ణఴలాల్ కామన్ ఆగం
.. కాయ్న్దానైక్, కనల్-మఴువుం కలైయుం అంగై
పొఱుత్తానైప్, పుళ్ళిరుక్కు వేళూరానైప్
.. పోట్రాదే ఆట్ర-నాళ్ పోక్కినేనే.
===================== ===============