Sunday, August 29, 2021

7.25 – பொன்செய்த மேனியினீர் - திருமுதுகுன்றம் - ponseyda mēniyinīr - tirumuduguṇḍram

91) 7.25 – பொன்செய்த மேனியினீர் திருமுதுகுன்றம் - ponseyda mēniyinīr - tirumuduguṇḍram

சுந்தரர் தேவாரம் - 7.25 – பொன்செய்த மேனியினீர் - திருமுதுகுன்றம்

sundarar tēvāram - 7.25 – ponseyda mēniyinīr - tirumuduguṇḍram


Here are the links to verses and audio of this padhigam's discussion:


Verses:

PDF: https://drive.google.com/file/d/1CW8A-DYcmxSR2mg_4mlF2-A5Ydi3LLHE/view?usp=sharing

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/9N7Bryk-A-s

Part-2: https://youtu.be/15BKSET42K0

Part-3: https://youtu.be/7vA1XOu0ZUs

***

V. Subramanian

================= ==============

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.

சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.25 – திருமுதுகுன்றம் - (பண் - நட்டராகம்)

திருமுதுகுன்றம் : மிகப் பெரிய கோயில். இத்தலம் இக்காலத்தில் விருத்தாசலம் (Vriddhachalam) என்று வழங்கப்பெறுகின்றது. விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி இடையே உள்ள தலம். (சிதம்பரத்திலிருந்து மேற்கே 45 கிமீ தூரத்தில் உள்ள தலம்).

பதிக வரலாறு : சுந்தரர் திருமுதுகுன்றத்தில் பதிகங்கள் பாடி ஈசனை வணங்கினார். (7.43 நஞ்சியிடை & 7.63 மெய்யை முற்றப் பொடிப் பூசி). ஈசன் 12,000 பொன் அருளினான். ஈசன் தந்த அப்பொற்காசுகளைத் திருவாரூரில் தரவேண்டினார் சுந்தரர். "மணிமுத்தாற்றில் இட்டுப் பின் கமலாலயத்தில் பெற்றுக்கொள்க" என்றான் ஈசன். அவ்வாறே சுந்தரர் அப்பொன்னைத் திருமுதுகுன்றத்தில் மணிமுத்தாற்றில் இட்டார். (அப்படிப் போடுமுன் ஒரு காசை மச்சம்வெட்டிக்கொண்டார் (kept a sample)).

திருவாரூரை அடைந்தபின் பரவையாரோடு கமலாலயத் திருக்குளத்தை அடைந்து தேடியபொழுது அப்பொன் கிட்டவில்லை. அப்பொழுது திருமுதுகுன்றத்து ஈசன்மேல் இப்பதிகத்தைப் பாடி அப்பொன்னைப் பெற்றார் சுந்தரர். பிறகு, அது மாற்றுக்குறைவாக இருப்பது கண்டு, மீண்டும் ஒரு பதிகம் பாடி மாற்றுக்குறையாத பொன் பெற்றார்! (அப்படிப் பாடிய இரண்டாம் பதிகம் நமக்குக் கிட்டிலது).

Note: Even though this padhigam was sung in Thiruvarur, it is classified as a ThirumudhukundRam padhigam as it addresses Siva of ThirumudhukundRam.

==========

Sundarar sings padhigams in thirumudhukundRam seeking gold

#3260 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 106

நாதர்பாற் பொருடாம் வேண்டி நண்ணிய வண்ண மெல்லாங்

கோதறு மனத்துட் கொண்ட குறிப்பொடும் பரவும் போது

தாதவிழ் கொன்றை வேய்ந்தார் தரவருள் பெறுவார் சைவ

வேதியர் தலைவர் மீண்டு "மெய்யில்வெண் பொடி"யும் பாட,


Siva gives 12,000 gold coins

#3261 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 107

பனிமதிச் சடையார் தாமும் பன்னிரண் டாயி ரம்பொன்

நனியருள் கொடுக்கு மாற்றா னல்கிட, வுடைய நம்பி

தனிவரு மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்தெழுந் தருகு சென்று

கனிவிட மிடற்றி னார்முன் பின்னொன்று கழற லுற்றார்;


Sundarar requests that he should receive the gold in Tiruvarur

#3262 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 108

அருளுமிக் கனக மெல்லா மடியனேற் காரூ ருள்ளோர்

மருளுற வியப்ப வங்கே வரப்பெற வேண்டு" மென்னத்,

தெருளுற வெழுந்த வாக்காற் "செழுமணி முத்தாற் றிட்டிப்

பொருளினை முழுது மாரூர்க் குளத்திற்போய்க் கொள்க" வென்றார்.


Sundarar dumps the gold coins in Manimuththaru river (but keeps a sample)

#3263 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 109

என்றுதம் பிரானார் நல்கு மின்னருள் பெற்ற பின்னர்

வன்றொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு மணிமுத் தாற்றிற்

பொன்றிர ளெடுத்து நீருட் புகவிட்டுப் போது கின்றார்

"அன்றெனை வலிந்தாட் கொண்ட வருளிதி லறிவே"னென்று.

.....

(Sundarar returns to Tiruvarur. Many intervening verses skipped here for brevity).

.....

Sundarar tells his wife Paravai about what happened in ThirumudhukundRam

#3281 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 127

"நாயனார் முதுகுன்றர் நமக்களித்த நன்னிதியந்

தூயமணி முத்தாற்றிற் புகவிட்டேந்; துணைவரவர்

கோயிலின்மா ளிகைமேல்பாற் குளத்திலவ ரருளாலே

போயெடுத்துக் கொடுபோதப் போதுவா" யெனப்புகல,


Paravai finds it difficult to believe

#3282 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 128

"என்னவதி சயமிதுதா? னென்சொன்ன வா?"றென்று்

மின்னிடையார் சிறுமுறுவ லுடன்விளம்ப, மெய்யுணர்ந்தார்

"நன்னுதலா! யென்னுடைய நாதனரு ளாற்குளத்திற்

பொன்னடைய வெடுத்துனக்குத் தருவதுபொய் யா"தென்று,


They both reach the Kamalalayam tank

#3283 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 129

ஆங்கவரு முடன்போத வளவிறந்த விருப்பினுடன்

பூங்கோயி லுண்மகிழ்ந்த புராதனரைப் புக்கிறைஞ்சி,

ஓங்குதிரு மாளிகையை வலம்வந்தங் குடன்மேலைப்

பாங்குதிருக் குளத்தணைந்தார் பரவையார் தனித்துணைவர்.


Sundarar puts his hand in the Kamalalayam tank water and searches for gold

#3284 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 130

மற்றதனில் வடகீழ்பாற் கரைமீது வந்தருளி **

முற்றிழையார் தமைநிறுத்தி முனைப்பாடித் திருநாடர்

கற்றைவார் சடையாரைக் கைதொழுது குளத்திலிழிந்

தற்றைநா ளிட்டெடுப்பார் போலங்குத் தடவுதலும்,

(** தருமை ஆதீன நூலில்: மற்றதனின்)


Sundarar does not find any gold and his wife teases him

#3285 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 131

நீற்றழகர் பாட்டுவந்து திருவிளையாட் டினினின்று

மாற்றுறுசெம் பொன்குளத்து வருவியா தொழிந்தருள

"ஆற்றினிலிட் டுக்குளத்திற் றேடுவீ! ரருளிதுவோ?

சாற்று"மெனக் கோற்றொடியார் மொழிந்தருளத் தனித்தொண்டர்.


Sundarar sings a padhigam - "ponseyda mēniyinīr"

#3286 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 132

"முன்செய்த வருள்வழியே முருகலர்பூங் குழற்பரவை

தன்செய்ய வாயினகை தாராமே தாரு"மென

மின்செய்த நூன்மார்பின் வேதியர்தா "முதுகுன்றிற்

பொன்செய்த மேனியினீ" ரெனப்பதிகம் போற்றிசைத்து,


No gold even after 8 songs of that padhigam

#3287 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 133

"முட்டவிமை யோரறிய முதுகுன்றிற் றந்தபொருள்

சட்டநான் பெறாதொழிந்த தளர்வினாற் கையறவாம்

இட்டளத்தை யிவளெதிரே கெடுத்தருளு" மெனுந்திருப்பாட்

டெட்டளவும் பொன்காட்டா தொழிந்தருள வேத்துவார்,


Siva gives the gold after the 9th song

#3288 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 134

"ஏத்தாதே யிருந்தறியே" னெனுந்திருப்பாட் டெவ்வுலகுங்

காத்தாடு மம்பலத்துக் கண்ணுளனாங் கண்ணுதலைக்

"கூத்தா!தந் தருளாயிக் கோமளத்தின் முன்"னென்று

நீத்தாருந் தொடர்வரிய நெறிநின்றார் பரவுதலும்,


#3289 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 135

கொந்தவிழ்பூங் கொன்றைமுடிக் கூத்தனார் திருவருளால்

வந்தெழுபொன் றிரளெடுத்து வரன்முறையாற் கரையேற்ற,

அந்தரத்து மலர்மாரி பொழிந்திழிந்த தவனியுள்ளோர்

"இந்தவதி சயமென்னே! யார்பெறுவா" ரெனத்தொழுதார்.


Sundarar finds the gold to be of inferior quality & then sings another padhigam

#3290 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 136

ஞாலம்வியப் பெய்தவரு நற்கனக மிடையெடுத்து

மூலமெனக் கொடுபோந்த வாணியின்முன் னுரைப்பிக்க,

நீலமிடற் றவரருளா லுரைதாழப், பின்னுநெடு

மாலயனுக் கரியகழல் வழுத்தினார் வன்றொண்டர்.


Siva makes the gold to be of fine quality

#3291 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 137

மீட்டுமவர் பரவுதலு மெய்யன்ப ரன்பில்வரும்

பாட்டுவந்து கூத்துவந்தார் படுவாசி முடிவெய்தும்

ஓட்டறுசெம் பொன்னொக்க ஒருமாவுங் குறையாமற்

காட்டுதலு மகிழ்ந்தெடுத்துக் கொண்டுகரை யேறினார்.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.25 – திருமுதுகுன்றம் - (பண் - நட்டராகம்)

(தானா தானதனா தன தானன தானதனா - என்ற சந்தம்)

(தானா - may also come as தனனா / தானன)

பாடல் எண் : 1

பொன்செய்த மேனியினீர் புலித் தோலை அரைக்கசைத்தீர்

முன்செய்த மூவெயிலும் மெரித் தீர்முது குன்றமர்ந்தீர்

மின்செய்த நுண்ணிடையாள் பர வையிவள் தன்முகப்பே

என்செய்த வாறடிகேள் அடி யேன்இட் டளங்கெடவே.


பாடல் எண் : 2

உம்பரும் வானவரும் முட னேநிற்க வேயெனக்குச்

செம்பொனைத் தந்தருளித் திக ழும்முது குன்றமர்ந்தீர்

வம்பம ருங்குழலாள் பர வையிவள் வாடுகின்றாள்

எம்பெரு மான்அருளீர் அடி யேன்இட் டளங்கெடவே.


பாடல் எண் : 3

பத்தா பத்தர்களுக் கருள் செய்யும் பரம்பரனே

முத்தா முக்கணனே முது குன்ற மமர்ந்தவனே

மைத்தா ருந்தடங்கண் பர வையிவள் வாடாமே

அத்தா தந்தருளாய் அடி யேன்இட் டளங்கெடவே.


பாடல் எண் : 4

மங்கையொர் கூறமர்ந்தீர் மறை நான்கும் விரித்துகந்தீர்

திங்கள் சடைக்கணிந்தீர் திக ழும்முது குன்றமர்ந்தீர்

கொங்கைநல் லாள்பரவை குணங் கொண்டிருந் தாள்முகப்பே

அங்கண னேயருளாய் அடி யேன்இட் டளங்கெடவே.


பாடல் எண் : 5

மையா ரும்மிடற்றாய் மரு வார்புர மூன்றெரித்த

செய்யார் மேனியனே திக ழும்முது குன்றமர்ந்தாய்

பையா ரும்மரவே ரல்கு லாளிவள் வாடுகின்றாள்

ஐயா தந்தருளாய் அடி யேன்இட் டளங்கெடவே.


பாடல் எண் : 6

நெடியான் நான்முகனும் மிர வியொடும் இந்திரனும்

முடியால் வந்திறைஞ்ச முது குன்றம் அமர்ந்தவனே

படியா ரும்மியலாள் பர வையிவள் தன்முகப்பே

யடிகேள் தந்தருளீர் அடி யேன்இட் டளங்கெடவே.


பாடல் எண் : 7

கொந்தண வும்பொழில்சூழ் குளிர் மாமதில் மாளிகைமேல்

வந்தண வும்மதிசேர் சடை மாமுது குன்றுடையாய்

பந்தண வும்விரலாள் பர வையிவள் தன்முகப்பே

அந்தண னேயருளாய் அடி யேன்இட் டளங்கெடவே.


பாடல் எண் : 8

பரசா ருங்கரவா பதி னெண்கண முஞ்சூழ

முரசார் வந்ததிர முது குன்ற மமர்ந்தவனே

விரைசே ருங்குழலாள் பர வையிவள் தன்முகப்பே

அரசே தந்தருளாய் அடி யேன்இட் டளங்கெடவே.


பாடல் எண் : 9

ஏத்தா திருந்தறியேன் இமை யோர்தனி நாயகனே

மூத்தாய் உலகுக்கெல்லா முது குன்ற மமர்ந்தவனே

பூத்தா ருங்குழலாள் பர வையிவள் தன்முகப்பே

கூத்தா தந்தருளாய் கொடி யேன்இட் டளங்கெடவே.


பாடல் எண் : 10

பிறையா ருஞ்சடையெம் பெரு மானரு ளாயென்று

முறையால் வந்தமரர் வணங் கும்முது குன்றர்தம்மை

மறையார் தங்குரிசில் வயல் நாவலா ரூரன்சொன்ன

இறையார் பாடல்வல்லார்க் கெளி தாஞ்சிவ லோகமதே.

==================

Word separated version:


Sundarar sings padhigams in thirumudhukundRam seeking gold

#3260 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 106

நாதர்பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணமெல்லாம்

கோது-அறு மனத்துள் கொண்ட குறிப்பொடும் பரவும்போது,

தாது-அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ

வேதியர் தலைவர் மீண்டும் "மெய்யில் வெண் பொடி"யும் பாட,


Siva gives 12,000 gold coins

#3261 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 107

பனி-மதிச் சடையார் தாமும் பன்னிரண்டாயிரம் பொன்

நனி-அருள் கொடுக்குமாற்றால் நல்கிட, உடைய நம்பி

தனி-வரு மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்தெழுந்து அருகு சென்று

கனி-விட மிடற்றினார்முன் பின் ஒன்று கழறல் உற்றார்;


Sundarar requests that he should receive the gold in Tiruvarur

#3262 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 108

"அருளும் இக் கனகமெல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர்

மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும்" என்னத்,

தெருளுற எழுந்த வாக்கால் "செழு மணிமுத்தாற்று இட்டு இப்

பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்திற்போய்க் கொள்க" என்றார்.


Sundarar dumps the gold coins in Manimuththaru river (but keeps a sample)

#3263 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 109

என்று தம் பிரானார் நல்கும் இன்னருள் பெற்ற பின்னர்,

வன்றொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு, மணிமுத்தாற்றில்

பொன்-திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போதுகின்றார்,

"அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன்" என்று.

.....

(Sundarar returns to Tiruvarur. Many intervening verses skipped here for brevity).

.....

Sundarar tells his wife Paravai about what happened in ThirumudhukundRam

#3281 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 127

"நாயனார் முதுகுன்றர் நமக்கு அளித்த நல்-நிதியம்

தூய மணிமுத்தாற்றில் புகவிட்டேம்; துணைவர் அவர்

கோயிலின் மாளிகை மேல்பால் குளத்தில் அவர் அருளாலே

போய் எடுத்துக்கொடு போதப் போதுவாய்" எனப் புகல,


Paravai finds it difficult to believe

#3282 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 128

"என்ன அதிசயம் இதுதான்? என் சொன்னவாறு?" என்று்

மின்-இடையார் சிறு-முறுவலுடன் விளம்ப, மெய் உணர்ந்தார்

"நன்னுதலாய்! என்னுடைய நாதன் அருளால் குளத்தில்

பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது" என்று,


They both reach the Kamalalayam tank

#3283 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 129

ஆங்கு அவரும் உடன் போத, அளவு இறந்த விருப்பினுடன்

பூங்கோயிலுள் மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சி,

ஓங்கு திரு மாளிகையை வலம்வந்து அங்கு உடன் மேலைப்

பாங்கு திருக்-குளத்து அணைந்தார் பரவையார் தனித்-துணைவர்.


Sundarar puts his hand in the Kamalalayam tank water and searches for gold

#3284 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 130

மற்று அதனில் வடகீழ்பால் கரைமீது வந்தருளி, **

முற்றிழையார்-தமை நிறுத்தி, முனைப்பாடித் திரு-நாடர்

கற்றை-வார் சடையாரைக் கை-தொழுது, குளத்தில் இழிந்து

அற்றைநாள் இட்டு-எடுப்பார் போல் அங்குத் தடவுதலும்,

(** variant reading - Dharmapuram Adheenam book: மற்று அதனின்)


Sundarar does not find any gold and his wife teases him

#3285 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 131

நீற்று-அழகர் பாட்டு உவந்து திருவிளையாட்டினில் நின்று,

மாற்று-உறு செம்பொன் குளத்து வருவியாதொழிந்தருள,

"ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர்! அருள் இதுவோ?

சாற்றும்" எனக் கோற்றொடியார் மொழிந்தருளத் தனித்-தொண்டர்.


Sundarar sings a padhigam - "ponseyda mēniyinīr"

#3286 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 132

"முன் செய்த அருள் வழியே முருகு-அலர் பூங்குழல்-பரவை

தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும்" என

மின் செய்த நூல் மார்பின் வேதியர்தாம் "முதுகுன்றில்

பொன் செய்த மேனியினீர்" எனப் பதிகம் போற்றிசைத்து,


No gold even after 8 songs of that padhigam

#3287 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 133

"முட்ட இமையோர் அறிய முதுகுன்றில் தந்த பொருள்

சட்ட நான் பெறாதொழிந்த தளர்வினால் கையறவு ஆம்

இட்டளத்தை இவள் எதிரே கெடுத்தருளும்" எனும் திருப்பாட்டு

எட்டு-அளவும் பொன் காட்டாதொழிந்தருள ஏத்துவார்,


Siva gives the gold after the 9th song

#3288 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 134

"ஏத்தாதே இருந்து அறியேன்" எனும் திருப்பாட்டு எவ்வுலகும்

காத்து ஆடும் அம்பலத்துக் கண்ணுளனாம் கண்ணுதலைக்

"கூத்தா! தந்தருளாய் இக் கோமளத்தின் முன்" என்று

நீத்தாரும் தொடர்வு அரிய நெறி நின்றார் பரவுதலும்,


#3289 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 135

கொந்து-அவிழ் பூங்கொன்றை முடிக்-கூத்தனார் திருவருளால்

வந்து எழு பொன்-திரள் எடுத்து வரன்முறையால் கரை ஏற்ற,

அந்தரத்து மலர்-மாரி பொழிந்து இழிந்தது; அவனி உள்ளோர்

"இந்த அதிசயம் என்னே! யார் பெறுவார்" எனத் தொழுதார்.


Sundarar finds the gold to be of inferior quality & then sings another padhigam

#3290 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 136

ஞாலம் வியப்பு எய்த வரு நல்-கனகம் இடை எடுத்து

மூலம் எனக் கொடு-போந்த ஆணியின்முன் உரைப்பிக்க,

நீலமிடற்றவர் அருளால் உரை தாழப், பின்னும் நெடு

மால்-அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்-தொண்டர்.


Siva then makes the gold to be of fine quality

#3291 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 137

மீட்டும் அவர் பரவுதலும் மெய்யன்பர் அன்பில் வரும்

பாட்டு உவந்து கூத்து உவந்தார் படு-வாசி முடிவு எய்தும்

ஓட்டறு-செம்பொன் ஒக்க ஒருமாவும் குறையாமல்

காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக்கொண்டு கரை ஏறினார்.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.25 – திருமுதுகுன்றம் - (பண் - நட்டராகம்)

(தானா தானதனா தன தானன தானதனா - என்ற சந்தம்)

(தானா - may also come as - தனனா / தானன)

பாடல் எண் : 1

பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்;

முன் செய்த மூவெயிலும் எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்;

மின் செய்த நுண்-இடையாள் பரவை இவள்-தன் முகப்பே,

என் செய்தவாறு அடிகேள், அடியேன் இட்டளம் கெடவே.


பாடல் எண் : 2

உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச்

செம்பொனைத் தந்தருளித் திகழும் முதுகுன்று அமர்ந்தீர்;

வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்;

எம்பெருமான், அருளீர் அடியேன் இட்டளம் கெடவே.


பாடல் எண் : 3

பத்தா; பத்தர்களுக்கு அருள் செய்யும் பரம்பரனே;

முத்தா; முக்கணனே; முதுகுன்றம் அமர்ந்தவனே;

மைத்து-ஆரும் தடம் கண் பரவை இவள் வாடாமே,

அத்தா, தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.


பாடல் எண் : 4

மங்கை ஒர் கூறு அமர்ந்தீர்; மறை நான்கும் விரித்து உகந்தீர்;

திங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்று அமர்ந்தீர்;

கொங்கை-நல்லாள் பரவை குணம் கொண்டிருந்தாள் முகப்பே,

அங்கணனே, அருளாய் அடியேன் இட்டளம் கெடவே.


பாடல் எண் : 5

மை ஆரும் மிடற்றாய்; மருவார் புரம் மூன்று எரித்த,

செய் ஆர் மேனியனே; திகழும் முதுகுன்று அமர்ந்தாய்;

பை ஆரும் அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்;

ஐயா, தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.


பாடல் எண் : 6

நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்

முடியால் வந்து இறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே;

படி ஆரும் இயலாள் பரவை இவள்-தன் முகப்பே,

அடிகேள், தந்தருளீர் அடியேன் இட்டளம் கெடவே.


பாடல் எண் : 7

கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா-மதில் மாளிகைமேல்

வந்து அணவும் மதி சேர் சடை மா-முதுகுன்று உடையாய்;

பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே,

அந்தணனே, அருளாய் அடியேன் இட்டளம் கெடவே.


பாடல் எண் : 8

பரசு ஆரும் கரவா; பதினெண்கணமும் சூழ,

முரசார் வந்து அதிர முதுகுன்றம் அமர்ந்தவனே;

விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே,

அரசே, தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே.


பாடல் எண் : 9

ஏத்தாது இருந்து அறியேன், இமையோர் தனி நாயகனே;

மூத்தாய் உலகுக்கு-எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே;

பூத்து-ஆரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே,

கூத்தா, தந்தருளாய் கொடியேன் இட்டளம் கெடவே.


பாடல் எண் : 10

"பிறை ஆரும் சடை எம் பெருமான் அருளாய்" என்று

முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர்-தம்மை

மறையார்-தம் குரிசில், வயல் நாவல் ஆரூரன் சொன்ன

இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகமதே.

===================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Sundarar sings padhigams in thirumudhukundRam seeking gold

#3260 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 106

nādarbāl poruḷ tām vēṇḍi naṇṇiya vaṇṇamellām

kōdu-aṟu manattuḷ koṇḍa kuṟippoḍum paravumbōdu,

tādu-aviḻ koṇḍrai vēyndār tara aruḷ peṟuvār saiva

vēdiyar talaivar mīṇḍum "meyyil veṇ poḍi"yum pāḍa,


Siva gives 12,000 gold coins

#3261 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 107

pani-madic caḍaiyār tāmum panniraṇḍāyiram pon

nani-aruḷ koḍukkumāṭrāl nalgiḍa, uḍaiya nambi

tani-varu magiḻcci poṅgat tāḻndeḻundu arugu seṇḍru

kani-viḍa miḍaṭrinārmun pin oṇḍru kaḻaṟal uṭrār;


Sundarar requests that he should receive the gold in Tiruvarur

#3262 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 108

"aruḷum ik kanagamellām aḍiyanēṟku ārūr uḷḷōr

maruḷuṟa viyappa aṅgē varappeṟa vēṇḍum" ennat,

teruḷuṟa eḻunda vākkāl "seḻu maṇimuttāṭru iṭṭu ip

poruḷinai muḻudum ārūrk kuḷattiṟpōyk koḷga" eṇḍrār.


Sundarar dumps the gold coins in Manimuththaru river (but keeps a sample)

#3263 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 109

eṇḍru tam pirānār nalgum innaruḷ peṭra pinnar,

vaṇḍroṇḍar maccam veṭṭik kaikkoṇḍu, maṇimuttāṭril

pon-tiraḷ eḍuttu nīruḷ pugaviṭṭup pōdugiṇḍrār,

"aṇḍru enai valindu āṭkoṇḍa aruḷ idil aṟivēn" eṇḍru.

.....

(Sundarar returns to Tiruvarur. Many intervening verses skipped here for brevity).

.....

Sundarar tells his wife Paravai about what happened in ThirumudhukundRam

#3281 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 127

"nāyanār muduguṇḍrar namakku aḷitta nal-nidiyam

tūya maṇimuttāṭril pugaviṭṭēm; tuṇaivar avar

kōyilin māḷigai mēlbāl kuḷattil avar aruḷālē

pōy eḍuttukkoḍu pōdap pōduvāy" enap pugala,


Paravai finds it difficult to believe

#3282 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 128

"enna adisayam idudān? en sonnavāṟu?" eṇḍru

min-iḍaiyār siṟu-muṟuvaluḍan viḷamba, mey uṇarndār

"nannudalāy! ennuḍaiya nādan aruḷāl kuḷattil

pon aḍaiya eḍuttu unakkut taruvadu poyyādu" eṇḍru,


They both reach the Kamalalayam tank

#3283 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 129

āṅgu avarum uḍan pōda, aḷavu iṟanda viruppinuḍan

pūṅgōyiluḷ magiḻnda purādanaraip pukku iṟaiñji,

ōṅgu tiru māḷigaiyai valamvandu aṅgu uḍan mēlaip

pāṅgu tiruk-kuḷattu aṇaindār paravaiyār tanit-tuṇaivar.


Sundarar puts his hand in the Kamalalayam tank water and searches for gold

#3284 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 130

maṭru adanil vaḍagīḻbāl karaimīdu vandaruḷi, **

muṭriḻaiyār-tamai niṟutti, munaippāḍit tiru-nāḍar

kaṭrai-vār saḍaiyāraik kai-toḻudu, kuḷattil iḻindu

aṭraināḷ iṭṭu-eḍuppār pōl aṅgut taḍavudalum,

(** variant reading - Dharmapuram Adheenam book: maṭru adanin)


Sundarar does not find any gold and his wife teases him

#3285 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 131

nīṭru-aḻagar pāṭṭu uvandu tiruviḷaiyāṭṭinil niṇḍru,

māṭru-uṟu sembon kuḷattu varuviyādoḻindaruḷa,

"āṭrinil iṭṭuk kuḷattil tēḍuvīr! aruḷ iduvō?

sāṭrum" enak kōṭroḍiyār moḻindaruḷat tanit-toṇḍar.


Sundarar sings a padhigam - "ponseyda mēniyinīr"

#3286 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 132

"mun seyda aruḷ vaḻiyē murugu-alar pūṅguḻal-paravai

tan seyya vāyil nagai tārāmē tārum" ena

min seyda nūl mārbin vēdiyardām "muduguṇḍril

pon seyda mēniyinīr" enap padigam pōṭrisaittu,


No gold even after 8 songs of that padhigam

#3287 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 133

"muṭṭa imaiyōr aṟiya muduguṇḍril tanda poruḷ

saṭṭa nān peṟādoḻinda taḷarvināl kaiyaṟavu ām

iṭṭaḷattai ivaḷ edirē keḍuttaruḷum" enum tiruppāṭṭu

eṭṭu-aḷavum pon kāṭṭādoḻindaruḷa ēttuvār,


Siva gives the gold after the 9th song

#3288 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 134

"ēttādē irundu aṟiyēn" enum tiruppāṭṭu evvulagum

kāttu āḍum ambalattuk kaṇṇuḷanām kaṇṇudalaik

"kūttā! tandaruḷāy ik kōmaḷattin mun" eṇḍru

nīttārum toḍarvu ariya neṟi niṇḍrār paravudalum,


#3289 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 135

kondu-aviḻ pūṅgoṇḍrai muḍik-kūttanār tiruvaruḷāl

vandu eḻu pon-tiraḷ eḍuttu varanmuṟaiyāl karai ēṭra,

andarattu malar-māri poḻindu iḻindadu; avani uḷḷōr

"inda adisayam ennē! yār peṟuvār" enat toḻudār.


Sundarar finds the gold to be of inferior quality & then sings another padhigam

#3290 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 136

ñālam viyappu eyda varu nal-kanagam iḍai eḍuttu

mūlam enak koḍu-pōnda āṇiyinmun uraippikka,

nīlamiḍaṭravar aruḷāl urai tāḻap, pinnum neḍu

māl-ayanukku ariya kaḻal vaḻuttinār van-toṇḍar.


Siva then makes the gold to be of fine quality

#3291 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 137

mīṭṭum avar paravudalum meyyanbar anbil varum

pāṭṭu uvandu kūttu uvandār paḍu-vāsi muḍivu eydum

ōṭṭaṟu-sembon okka orumāvum kuṟaiyāmal

kāṭṭudalum magiḻndu eḍuttukkoṇḍu karai ēṟinār.


sundarar tēvāram - padigam 7.25 – tirumuduguṇḍram - (paṇ - naṭṭarāgam)

(tānā tānadanā tana tānana tānadanā - Rhythm)

(tānā - may also come as - tananā / tānana)

pāḍal eṇ : 1

pon seyda mēniyinīr; pulittōlai araikku asaittīr;

mun seyda mūveyilum erittīr; muduguṇḍru amarndīr;

min seyda nuṇ-iḍaiyāḷ paravai ivaḷ-tan mugappē,

en seydavāṟu aḍigēḷ, aḍiyēn iṭṭaḷam keḍavē.


pāḍal eṇ : 2

umbarum vānavarum uḍanē niṟkavē enakkuc

cembonait tandaruḷit tigaḻum muduguṇḍru amarndīr;

vambu amarum kuḻalāḷ paravai ivaḷ vāḍugiṇḍrāḷ;

emberumān, aruḷīr aḍiyēn iṭṭaḷam keḍavē.


pāḍal eṇ : 3

pattā; pattargaḷukku aruḷ seyyum parambaranē;

muttā; mukkaṇanē; muduguṇḍram amarndavanē;

maittu-ārum taḍam kaṇ paravai ivaḷ vāḍāmē,

attā, tandaruḷāy aḍiyēn iṭṭaḷam keḍavē.


pāḍal eṇ : 4

maṅgai or kūṟu amarndīr; maṟai nāngum virittu ugandīr;

tiṅgaḷ saḍaikku aṇindīr; tigaḻum muduguṇḍru amarndīr;

koṅgai-nallāḷ paravai guṇam koṇḍirundāḷ mugappē,

aṅgaṇanē, aruḷāy aḍiyēn iṭṭaḷam keḍavē.


pāḍal eṇ : 5

mai ārum miḍaṭrāy; maruvār puram mūṇḍru eritta,

sey ār mēniyanē; tigaḻum muduguṇḍru amarndāy;

pai ārum aravu ēr algulāḷ ivaḷ vāḍugiṇḍrāḷ;

aiyā, tandaruḷāy aḍiyēn iṭṭaḷam keḍavē.


pāḍal eṇ : 6

neḍiyān nānmuganum iraviyoḍum indiranum

muḍiyāl vandu iṟaiñja muduguṇḍram amarndavanē;

paḍi ārum iyalāḷ paravai ivaḷ-tan mugappē,

aḍigēḷ, tandaruḷīr aḍiyēn iṭṭaḷam keḍavē.


pāḍal eṇ : 7

kondu aṇavum poḻil sūḻ kuḷir mā-madil māḷigaimēl

vandu aṇavum madi sēr saḍai mā-muduguṇḍru uḍaiyāy;

pandu aṇavum viralāḷ paravai ivaḷ-tan mugappē,

andaṇanē, aruḷāy aḍiyēn iṭṭaḷam keḍavē.


pāḍal eṇ : 8

parasu ārum karavā; padineṇgaṇamum sūḻa,

murasār vandu adira muduguṇḍram amarndavanē;

virai sērum kuḻalāḷ paravai ivaḷ-tan mugappē,

arasē, tandaruḷāy aḍiyēn iṭṭaḷam keḍavē.


pāḍal eṇ : 9

ēttādu irundu aṟiyēn, imaiyōr tani nāyaganē;

mūttāy ulagukku-ellām; muduguṇḍram amarndavanē;

pūttu-ārum kuḻalāḷ paravai ivaḷ-tan mugappē,

kūttā, tandaruḷāy koḍiyēn iṭṭaḷam keḍavē.


pāḍal eṇ : 10

"piṟai ārum saḍai em perumān aruḷāy" eṇḍru

muṟaiyāl vandu amarar vaṇaṅgum muduguṇḍrar-tammai

maṟaiyār-tam kurisil, vayal nāval ārūran sonna

iṟai ār pāḍal vallārkku eḷidu ām sivalōgamadē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


Sundarar sings padhigams in thirumudhukundRam seeking gold

#3260 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 106

नादर्बाल् पॊरुळ् ताम् वेण्डि नण्णिय वण्णमॆल्लाम्

कोदु-अऱु मनत्तुळ् कॊण्ड कुऱिप्पॊडुम् परवुम्बोदु,

तादु-अविऴ् कॊण्ड्रै वेय्न्दार् तर अरुळ् पॆऱुवार् सैव

वेदियर् तलैवर् मीण्डुम् "मॆय्यिल् वॆण् पॊडि"युम् पाड,


Siva gives 12,000 gold coins

#3261 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 107

पनि-मदिच् चडैयार् तामुम् पन्निरण्डायिरम् पॊन्

ननि-अरुळ् कॊडुक्कुमाट्राल् नल्गिड, उडैय नम्बि

तनि-वरु मगिऴ्च्चि पॊङ्गत् ताऴ्न्दॆऴुन्दु अरुगु सॆण्ड्रु

कनि-विड मिडट्रिनार्मुन् पिन् ऒण्ड्रु कऴऱल् उट्रार्;


Sundarar requests that he should receive the gold in Tiruvarur

#3262 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 108

"अरुळुम् इक् कनगमॆल्लाम् अडियनेऱ्‌कु आरूर् उळ्ळोर्

मरुळुऱ वियप्प अङ्गे वरप्पॆऱ वेण्डुम्" ऎन्नत्,

तॆरुळुऱ ऎऴुन्द वाक्काल् "सॆऴु मणिमुत्ताट्रु इट्टु इप्

पॊरुळिनै मुऴुदुम् आरूर्क् कुळत्तिऱ्‌पोय्क् कॊळ्ग" ऎण्ड्रार्.


Sundarar dumps the gold coins in Manimuththaru river (but keeps a sample)

#3263 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 109

ऎण्ड्रु तम् पिरानार् नल्गुम् इन्नरुळ् पॆट्र पिन्नर्,

वण्ड्रॊण्डर् मच्चम् वॆट्टिक् कैक्कॊण्डु, मणिमुत्ताट्रिल्

पॊन्-तिरळ् ऎडुत्तु नीरुळ् पुगविट्टुप् पोदुगिण्ड्रार्,

"अण्ड्रु ऎनै वलिन्दु आट्कॊण्ड अरुळ् इदिल् अऱिवेन्" ऎण्ड्रु.

.....

(Sundarar returns to Tiruvarur. Many intervening verses skipped here for brevity).

.....

Sundarar tells his wife Paravai about what happened in ThirumudhukundRam

#3281 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 127

"नायनार् मुदुगुण्ड्रर् नमक्कु अळित्त नल्-निदियम्

तूय मणिमुत्ताट्रिल् पुगविट्टेम्; तुणैवर् अवर्

कोयिलिन् माळिगै मेल्बाल् कुळत्तिल् अवर् अरुळाले

पोय् ऎडुत्तुक्कॊडु पोदप् पोदुवाय्" ऎनप् पुगल,


Paravai finds it difficult to believe

#3282 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 128

"ऎन्न अदिसयम् इदुदान्? ऎन् सॊन्नवाऱु?" ऎण्ड्रु्

मिन्-इडैयार् सिऱु-मुऱुवलुडन् विळम्ब, मॆय् उणर्न्दार्

"नन्नुदलाय्! ऎन्नुडैय नादन् अरुळाल् कुळत्तिल्

पॊन् अडैय ऎडुत्तु उनक्कुत् तरुवदु पॊय्यादु" ऎण्ड्रु,


They both reach the Kamalalayam tank

#3283 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 129

आङ्गु अवरुम् उडन् पोद, अळवु इऱन्द विरुप्पिनुडन्

पूङ्गोयिलुळ् मगिऴ्न्द पुरादनरैप् पुक्कु इऱैञ्जि,

ओङ्गु तिरु माळिगैयै वलम्वन्दु अङ्गु उडन् मेलैप्

पाङ्गु तिरुक्-कुळत्तु अणैन्दार् परवैयार् तनित्-तुणैवर्.


Sundarar puts his hand in the Kamalalayam tank water and searches for gold

#3284 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 130

मट्रु अदनिल् वडगीऴ्बाल् करैमीदु वन्दरुळि, **

मुट्रिऴैयार्-तमै निऱुत्ति, मुनैप्पाडित् तिरु-नाडर्

कट्रै-वार् सडैयारैक् कै-तॊऴुदु, कुळत्तिल् इऴिन्दु

अट्रैनाळ् इट्टु-ऎडुप्पार् पोल् अङ्गुत् तडवुदलुम्,

(** variant reading - Dharmapuram Adheenam book: मट्रु अदनिन्)


Sundarar does not find any gold and his wife teases him

#3285 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 131

नीट्रु-अऴगर् पाट्टु उवन्दु तिरुविळैयाट्टिनिल् निण्ड्रु,

माट्रु-उऱु सॆम्बॊन् कुळत्तु वरुवियादॊऴिन्दरुळ,

"आट्रिनिल् इट्टुक् कुळत्तिल् तेडुवीर्! अरुळ् इदुवो?

साट्रुम्" ऎनक् कोट्रॊडियार् मॊऴिन्दरुळत् तनित्-तॊण्डर्.


Sundarar sings a padhigam - "ponseyda mēniyinīr"

#3286 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 132

"मुन् सॆय्द अरुळ् वऴिये मुरुगु-अलर् पूङ्गुऴल्-परवै

तन् सॆय्य वायिल् नगै तारामे तारुम्" ऎन

मिन् सॆय्द नूल् मार्बिन् वेदियर्दाम् "मुदुगुण्ड्रिल्

पॊन् सॆय्द मेनियिनीर्" ऎनप् पदिगम् पोट्रिसैत्तु,


No gold even after 8 songs of that padhigam

#3287 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 133

"मुट्ट इमैयोर् अऱिय मुदुगुण्ड्रिल् तन्द पॊरुळ्

सट्ट नान् पॆऱादॊऴिन्द तळर्विनाल् कैयऱवु आम्

इट्टळत्तै इवळ् ऎदिरे कॆडुत्तरुळुम्" ऎनुम् तिरुप्पाट्टु

ऎट्टु-अळवुम् पॊन् काट्टादॊऴिन्दरुळ एत्तुवार्,


Siva gives the gold after the 9th song

#3288 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 134

"एत्तादे इरुन्दु अऱियेन्" ऎनुम् तिरुप्पाट्टु ऎव्वुलगुम्

कात्तु आडुम् अम्बलत्तुक् कण्णुळनाम् कण्णुदलैक्

"कूत्ता! तन्दरुळाय् इक् कोमळत्तिन् मुन्" ऎण्ड्रु

नीत्तारुम् तॊडर्वु अरिय नॆऱि निण्ड्रार् परवुदलुम्,


#3289 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 135

कॊन्दु-अविऴ् पूङ्गॊण्ड्रै मुडिक्-कूत्तनार् तिरुवरुळाल्

वन्दु ऎऴु पॊन्-तिरळ् ऎडुत्तु वरन्मुऱैयाल् करै एट्र,

अन्दरत्तु मलर्-मारि पॊऴिन्दु इऴिन्ददु; अवनि उळ्ळोर्

"इन्द अदिसयम् ऎन्ने! यार् पॆऱुवार्" ऎनत् तॊऴुदार्.


Sundarar finds the gold to be of inferior quality & then sings another padhigam

#3290 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 136

ञालम् वियप्पु ऎय्द वरु नल्-कनगम् इडै ऎडुत्तु

मूलम् ऎनक् कॊडु-पोन्द आणियिन्मुन् उरैप्पिक्क,

नीलमिडट्रवर् अरुळाल् उरै ताऴप्, पिन्नुम् नॆडु

माल्-अयनुक्कु अरिय कऴल् वऴुत्तिनार् वन्-तॊण्डर्.


Siva then makes the gold to be of fine quality

#3291 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 137

मीट्टुम् अवर् परवुदलुम् मॆय्यन्बर् अन्बिल् वरुम्

पाट्टु उवन्दु कूत्तु उवन्दार् पडु-वासि मुडिवु ऎय्दुम्

ओट्टऱु-सॆम्बॊन् ऒक्क ऒरुमावुम् कुऱैयामल्

काट्टुदलुम् मगिऴ्न्दु ऎडुत्तुक्कॊण्डु करै एऱिनार्.


सुन्दरर् तेवारम् - पदिगम् 7.25 – तिरुमुदुगुण्ड्रम् - (पण् - नट्टरागम्)

(ताना तानदना तन तानन तानदना - ऎण्ड्र सन्दम्)

(ताना - may also come as - तनना / तानन)

पाडल् ऎण् : 1

पॊन् सॆय्द मेनियिनीर्; पुलित्तोलै अरैक्कु असैत्तीर्;

मुन् सॆय्द मूवॆयिलुम् ऎरित्तीर्; मुदुगुण्ड्रु अमर्न्दीर्;

मिन् सॆय्द नुण्-इडैयाळ् परवै इवळ्-तन् मुगप्पे,

ऎन् सॆय्दवाऱु अडिगेळ्, अडियेन् इट्टळम् कॆडवे.


पाडल् ऎण् : 2

उम्बरुम् वानवरुम् उडने निऱ्‌कवे ऎनक्कुच्

चॆम्बॊनैत् तन्दरुळित् तिगऴुम् मुदुगुण्ड्रु अमर्न्दीर्;

वम्बु अमरुम् कुऴलाळ् परवै इवळ् वाडुगिण्ड्राळ्;

ऎम्बॆरुमान्, अरुळीर् अडियेन् इट्टळम् कॆडवे.


पाडल् ऎण् : 3

पत्ता; पत्तर्गळुक्कु अरुळ् सॆय्युम् परम्बरने;

मुत्ता; मुक्कणने; मुदुगुण्ड्रम् अमर्न्दवने;

मैत्तु-आरुम् तडम् कण् परवै इवळ् वाडामे,

अत्ता, तन्दरुळाय् अडियेन् इट्टळम् कॆडवे.


पाडल् ऎण् : 4

मङ्गै ऒर् कूऱु अमर्न्दीर्; मऱै नान्गुम् विरित्तु उगन्दीर्;

तिङ्गळ् सडैक्कु अणिन्दीर्; तिगऴुम् मुदुगुण्ड्रु अमर्न्दीर्;

कॊङ्गै-नल्लाळ् परवै गुणम् कॊण्डिरुन्दाळ् मुगप्पे,

अङ्गणने, अरुळाय् अडियेन् इट्टळम् कॆडवे.


पाडल् ऎण् : 5

मै आरुम् मिडट्राय्; मरुवार् पुरम् मूण्ड्रु ऎरित्त,

सॆय् आर् मेनियने; तिगऴुम् मुदुगुण्ड्रु अमर्न्दाय्;

पै आरुम् अरवु एर् अल्गुलाळ् इवळ् वाडुगिण्ड्राळ्;

ऐया, तन्दरुळाय् अडियेन् इट्टळम् कॆडवे.


पाडल् ऎण् : 6

नॆडियान् नान्मुगनुम् इरवियॊडुम् इन्दिरनुम्

मुडियाल् वन्दु इऱैञ्ज मुदुगुण्ड्रम् अमर्न्दवने;

पडि आरुम् इयलाळ् परवै इवळ्-तन् मुगप्पे,

अडिगेळ्, तन्दरुळीर् अडियेन् इट्टळम् कॆडवे.


पाडल् ऎण् : 7

कॊन्दु अणवुम् पॊऴिल् सूऴ् कुळिर् मा-मदिल् माळिगैमेल्

वन्दु अणवुम् मदि सेर् सडै मा-मुदुगुण्ड्रु उडैयाय्;

पन्दु अणवुम् विरलाळ् परवै इवळ्-तन् मुगप्पे,

अन्दणने, अरुळाय् अडियेन् इट्टळम् कॆडवे.


पाडल् ऎण् : 8

परसु आरुम् करवा; पदिनॆण्गणमुम् सूऴ,

मुरसार् वन्दु अदिर मुदुगुण्ड्रम् अमर्न्दवने;

विरै सेरुम् कुऴलाळ् परवै इवळ्-तन् मुगप्पे,

अरसे, तन्दरुळाय् अडियेन् इट्टळम् कॆडवे.


पाडल् ऎण् : 9

एत्तादु इरुन्दु अऱियेन्, इमैयोर् तनि नायगने;

मूत्ताय् उलगुक्कु-ऎल्लाम्; मुदुगुण्ड्रम् अमर्न्दवने;

पूत्तु-आरुम् कुऴलाळ् परवै इवळ्-तन् मुगप्पे,

कूत्ता, तन्दरुळाय् कॊडियेन् इट्टळम् कॆडवे.


पाडल् ऎण् : 10

"पिऱै आरुम् सडै ऎम् पॆरुमान् अरुळाय्" ऎण्ड्रु

मुऱैयाल् वन्दु अमरर् वणङ्गुम् मुदुगुण्ड्रर्-तम्मै

मऱैयार्-तम् कुरिसिल्, वयल् नावल् आरूरन् सॊन्न

इऱै आर् पाडल् वल्लार्क्कु ऎळिदु आम् सिवलोगमदे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Sundarar sings padhigams in thirumudhukundRam seeking gold

#3260 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 106

నాదర్బాల్ పొరుళ్ తాం వేండి నణ్ణియ వణ్ణమెల్లాం

కోదు-అఱు మనత్తుళ్ కొండ కుఱిప్పొడుం పరవుంబోదు,

తాదు-అవిఴ్ కొండ్రై వేయ్న్దార్ తర అరుళ్ పెఱువార్ సైవ

వేదియర్ తలైవర్ మీండుం "మెయ్యిల్ వెణ్ పొడి"యుం పాడ,


Siva gives 12,000 gold coins

#3261 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 107

పని-మదిచ్ చడైయార్ తాముం పన్నిరండాయిరం పొన్

నని-అరుళ్ కొడుక్కుమాట్రాల్ నల్గిడ, ఉడైయ నంబి

తని-వరు మగిఴ్చ్చి పొంగత్ తాఴ్న్దెఴుందు అరుగు సెండ్రు

కని-విడ మిడట్రినార్మున్ పిన్ ఒండ్రు కఴఱల్ ఉట్రార్;


Sundarar requests that he should receive the gold in Tiruvarur

#3262 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 108

"అరుళుం ఇక్ కనగమెల్లాం అడియనేఱ్కు ఆరూర్ ఉళ్ళోర్

మరుళుఱ వియప్ప అంగే వరప్పెఱ వేండుం" ఎన్నత్,

తెరుళుఱ ఎఴుంద వాక్కాల్ "సెఴు మణిముత్తాట్రు ఇట్టు ఇప్

పొరుళినై ముఴుదుం ఆరూర్క్ కుళత్తిఱ్పోయ్క్ కొళ్గ" ఎండ్రార్.


Sundarar dumps the gold coins in Manimuththaru river (but keeps a sample)

#3263 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 109

ఎండ్రు తం పిరానార్ నల్గుం ఇన్నరుళ్ పెట్ర పిన్నర్,

వండ్రొండర్ మచ్చం వెట్టిక్ కైక్కొండు, మణిముత్తాట్రిల్

పొన్-తిరళ్ ఎడుత్తు నీరుళ్ పుగవిట్టుప్ పోదుగిండ్రార్,

"అండ్రు ఎనై వలిందు ఆట్కొండ అరుళ్ ఇదిల్ అఱివేన్" ఎండ్రు.

.....

(Sundarar returns to Tiruvarur. Many intervening verses skipped here for brevity).

.....

Sundarar tells his wife Paravai about what happened in ThirumudhukundRam

#3281 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 127

"నాయనార్ ముదుగుండ్రర్ నమక్కు అళిత్త నల్-నిదియం

తూయ మణిముత్తాట్రిల్ పుగవిట్టేం; తుణైవర్ అవర్

కోయిలిన్ మాళిగై మేల్బాల్ కుళత్తిల్ అవర్ అరుళాలే

పోయ్ ఎడుత్తుక్కొడు పోదప్ పోదువాయ్" ఎనప్ పుగల,


Paravai finds it difficult to believe

#3282 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 128

"ఎన్న అదిసయం ఇదుదాన్? ఎన్ సొన్నవాఱు?" ఎండ్రు్

మిన్-ఇడైయార్ సిఱు-ముఱువలుడన్ విళంబ, మెయ్ ఉణర్న్దార్

"నన్నుదలాయ్! ఎన్నుడైయ నాదన్ అరుళాల్ కుళత్తిల్

పొన్ అడైయ ఎడుత్తు ఉనక్కుత్ తరువదు పొయ్యాదు" ఎండ్రు,


They both reach the Kamalalayam tank

#3283 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 129

ఆంగు అవరుం ఉడన్ పోద, అళవు ఇఱంద విరుప్పినుడన్

పూంగోయిలుళ్ మగిఴ్న్ద పురాదనరైప్ పుక్కు ఇఱైంజి,

ఓంగు తిరు మాళిగైయై వలమ్వందు అంగు ఉడన్ మేలైప్

పాంగు తిరుక్-కుళత్తు అణైందార్ పరవైయార్ తనిత్-తుణైవర్.


Sundarar puts his hand in the Kamalalayam tank water and searches for gold

#3284 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 130

మట్రు అదనిల్ వడగీఴ్బాల్ కరైమీదు వందరుళి, **

ముట్రిఴైయార్-తమై నిఱుత్తి, మునైప్పాడిత్ తిరు-నాడర్

కట్రై-వార్ సడైయారైక్ కై-తొఴుదు, కుళత్తిల్ ఇఴిందు

అట్రైనాళ్ ఇట్టు-ఎడుప్పార్ పోల్ అంగుత్ తడవుదలుం,

(** variant reading - Dharmapuram Adheenam book: మట్రు అదనిన్)


Sundarar does not find any gold and his wife teases him

#3285 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 131

నీట్రు-అఴగర్ పాట్టు ఉవందు తిరువిళైయాట్టినిల్ నిండ్రు,

మాట్రు-ఉఱు సెంబొన్ కుళత్తు వరువియాదొఴిందరుళ,

"ఆట్రినిల్ ఇట్టుక్ కుళత్తిల్ తేడువీర్! అరుళ్ ఇదువో?

సాట్రుం" ఎనక్ కోట్రొడియార్ మొఴిందరుళత్ తనిత్-తొండర్.


Sundarar sings a padhigam - "ponseyda mēniyinīr"

#3286 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 132

"మున్ సెయ్ద అరుళ్ వఴియే మురుగు-అలర్ పూంగుఴల్-పరవై

తన్ సెయ్య వాయిల్ నగై తారామే తారుం" ఎన

మిన్ సెయ్ద నూల్ మార్బిన్ వేదియర్దాం "ముదుగుండ్రిల్

పొన్ సెయ్ద మేనియినీర్" ఎనప్ పదిగం పోట్రిసైత్తు,


No gold even after 8 songs of that padhigam

#3287 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 133

"ముట్ట ఇమైయోర్ అఱియ ముదుగుండ్రిల్ తంద పొరుళ్

సట్ట నాన్ పెఱాదొఴింద తళర్వినాల్ కైయఱవు ఆం

ఇట్టళత్తై ఇవళ్ ఎదిరే కెడుత్తరుళుం" ఎనుం తిరుప్పాట్టు

ఎట్టు-అళవుం పొన్ కాట్టాదొఴిందరుళ ఏత్తువార్,


Siva gives the gold after the 9th song

#3288 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 134

"ఏత్తాదే ఇరుందు అఱియేన్" ఎనుం తిరుప్పాట్టు ఎవ్వులగుం

కాత్తు ఆడుం అంబలత్తుక్ కణ్ణుళనాం కణ్ణుదలైక్

"కూత్తా! తందరుళాయ్ ఇక్ కోమళత్తిన్ మున్" ఎండ్రు

నీత్తారుం తొడర్వు అరియ నెఱి నిండ్రార్ పరవుదలుం,


#3289 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 135

కొందు-అవిఴ్ పూంగొండ్రై ముడిక్-కూత్తనార్ తిరువరుళాల్

వందు ఎఴు పొన్-తిరళ్ ఎడుత్తు వరన్ముఱైయాల్ కరై ఏట్ర,

అందరత్తు మలర్-మారి పొఴిందు ఇఴిందదు; అవని ఉళ్ళోర్

"ఇంద అదిసయం ఎన్నే! యార్ పెఱువార్" ఎనత్ తొఴుదార్.


Sundarar finds the gold to be of inferior quality & then sings another padhigam

#3290 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 136

ఞాలం వియప్పు ఎయ్ద వరు నల్-కనగం ఇడై ఎడుత్తు

మూలం ఎనక్ కొడు-పోంద ఆణియిన్మున్ ఉరైప్పిక్క,

నీలమిడట్రవర్ అరుళాల్ ఉరై తాఴప్, పిన్నుం నెడు

మాల్-అయనుక్కు అరియ కఴల్ వఴుత్తినార్ వన్-తొండర్.


Siva then makes the gold to be of fine quality

#3291 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 137

మీట్టుం అవర్ పరవుదలుం మెయ్యన్బర్ అన్బిల్ వరుం

పాట్టు ఉవందు కూత్తు ఉవందార్ పడు-వాసి ముడివు ఎయ్దుం

ఓట్టఱు-సెంబొన్ ఒక్క ఒరుమావుం కుఱైయామల్

కాట్టుదలుం మగిఴ్న్దు ఎడుత్తుక్కొండు కరై ఏఱినార్.


సుందరర్ తేవారం - పదిగం 7.25 – తిరుముదుగుండ్రం - (పణ్ - నట్టరాగం)

(తానా తానదనా తన తానన తానదనా - ఎండ్ర సందం)

(తానా - may also come as - తననా / తానన)

పాడల్ ఎణ్ : 1

పొన్ సెయ్ద మేనియినీర్; పులిత్తోలై అరైక్కు అసైత్తీర్;

మున్ సెయ్ద మూవెయిలుం ఎరిత్తీర్; ముదుగుండ్రు అమర్న్దీర్;

మిన్ సెయ్ద నుణ్-ఇడైయాళ్ పరవై ఇవళ్-తన్ ముగప్పే,

ఎన్ సెయ్దవాఱు అడిగేళ్, అడియేన్ ఇట్టళం కెడవే.


పాడల్ ఎణ్ : 2

ఉంబరుం వానవరుం ఉడనే నిఱ్కవే ఎనక్కుచ్

చెంబొనైత్ తందరుళిత్ తిగఴుం ముదుగుండ్రు అమర్న్దీర్;

వంబు అమరుం కుఴలాళ్ పరవై ఇవళ్ వాడుగిండ్రాళ్;

ఎంబెరుమాన్, అరుళీర్ అడియేన్ ఇట్టళం కెడవే.


పాడల్ ఎణ్ : 3

పత్తా; పత్తర్గళుక్కు అరుళ్ సెయ్యుం పరంబరనే;

ముత్తా; ముక్కణనే; ముదుగుండ్రం అమర్న్దవనే;

మైత్తు-ఆరుం తడం కణ్ పరవై ఇవళ్ వాడామే,

అత్తా, తందరుళాయ్ అడియేన్ ఇట్టళం కెడవే.


పాడల్ ఎణ్ : 4

మంగై ఒర్ కూఱు అమర్న్దీర్; మఱై నాన్గుం విరిత్తు ఉగందీర్;

తింగళ్ సడైక్కు అణిందీర్; తిగఴుం ముదుగుండ్రు అమర్న్దీర్;

కొంగై-నల్లాళ్ పరవై గుణం కొండిరుందాళ్ ముగప్పే,

అంగణనే, అరుళాయ్ అడియేన్ ఇట్టళం కెడవే.


పాడల్ ఎణ్ : 5

మై ఆరుం మిడట్రాయ్; మరువార్ పురం మూండ్రు ఎరిత్త,

సెయ్ ఆర్ మేనియనే; తిగఴుం ముదుగుండ్రు అమర్న్దాయ్;

పై ఆరుం అరవు ఏర్ అల్గులాళ్ ఇవళ్ వాడుగిండ్రాళ్;

ఐయా, తందరుళాయ్ అడియేన్ ఇట్టళం కెడవే.


పాడల్ ఎణ్ : 6

నెడియాన్ నాన్ముగనుం ఇరవియొడుం ఇందిరనుం

ముడియాల్ వందు ఇఱైంజ ముదుగుండ్రం అమర్న్దవనే;

పడి ఆరుం ఇయలాళ్ పరవై ఇవళ్-తన్ ముగప్పే,

అడిగేళ్, తందరుళీర్ అడియేన్ ఇట్టళం కెడవే.


పాడల్ ఎణ్ : 7

కొందు అణవుం పొఴిల్ సూఴ్ కుళిర్ మా-మదిల్ మాళిగైమేల్

వందు అణవుం మది సేర్ సడై మా-ముదుగుండ్రు ఉడైయాయ్;

పందు అణవుం విరలాళ్ పరవై ఇవళ్-తన్ ముగప్పే,

అందణనే, అరుళాయ్ అడియేన్ ఇట్టళం కెడవే.


పాడల్ ఎణ్ : 8

పరసు ఆరుం కరవా; పదినెణ్గణముం సూఴ,

మురసార్ వందు అదిర ముదుగుండ్రం అమర్న్దవనే;

విరై సేరుం కుఴలాళ్ పరవై ఇవళ్-తన్ ముగప్పే,

అరసే, తందరుళాయ్ అడియేన్ ఇట్టళం కెడవే.


పాడల్ ఎణ్ : 9

ఏత్తాదు ఇరుందు అఱియేన్, ఇమైయోర్ తని నాయగనే;

మూత్తాయ్ ఉలగుక్కు-ఎల్లాం; ముదుగుండ్రం అమర్న్దవనే;

పూత్తు-ఆరుం కుఴలాళ్ పరవై ఇవళ్-తన్ ముగప్పే,

కూత్తా, తందరుళాయ్ కొడియేన్ ఇట్టళం కెడవే.


పాడల్ ఎణ్ : 10

"పిఱై ఆరుం సడై ఎం పెరుమాన్ అరుళాయ్" ఎండ్రు

ముఱైయాల్ వందు అమరర్ వణంగుం ముదుగుండ్రర్-తమ్మై

మఱైయార్-తం కురిసిల్, వయల్ నావల్ ఆరూరన్ సొన్న

ఇఱై ఆర్ పాడల్ వల్లార్క్కు ఎళిదు ఆం సివలోగమదే.

================ ============