Sunday, December 15, 2024

1.69 - பூவார் மலர்கொண்டு - pUvAr malar koNdu - (திருவண்ணாமலை)


154) 1.69 - பூவார் மலர்கொண்டு - pUvAr malar koNdu - (திருவண்ணாமலை)

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.69 - பூவார் மலர்கொண்டு - திருவண்ணாமலை - (பண் - தக்கேசி)

sambandar tēvāram - 1.69 - pūvār malargoṇḍu - tiruvaṇṇāmalai - ( paṇ - takkēsi )


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1lp5AaiJF7bkitiJt6dXbk0bTrXGPiice/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/POitfvstSgk

Part-2: https://youtu.be/mz1hDo0FXPE

***
English translation (meaning) :

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_069.HTM


V. Subramanian

================

Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.69 - திருவண்ணாமலை - பூவார் மலர்கொண்டு - (பண் - தக்கேசி)


அண்ணாமலை (திருவண்ணாமலை) :

ஐம்பூதத்தலங்களுள் அக்கினித் தலம். அண்ணாமலை என்பது அண்ணுதல் அரிய (= அணுக முடியாத) மலை என்று பொருள் தந்து பிரமன் விஷ்ணு இவர்களால் முடியும் அடியும் அறியமுடியாதபடி நின்ற தலவரலாற்றைச் சுட்டியது. சிவந்த நிறம் (அருணம்) உடைய மலை (அசலம்) என்று பொருள் தருவதாகி அருணாசலம் என்றும் வழங்கப்படுவது.

அறையணிநல்லூர்க் கோயிலிலிருந்து தூரத்தே திருவண்ணாமலையைக் கண்டு சம்பந்தர் "உண்ணாமுலை" என்று தொடங்கும் பதிகத்தைப் பாடியருளினார். பின்னர்த் திருவண்ணாமலையை அடைந்து பாடியருளியது "பூவார் மலர்" என்று தொடங்கும் இந்தப் பதிகம்.


Tiruvannamalai: Karthigai Deepam festival is celebrated in a grand manner here.

Sambandar saw Tiruvannamalai hill from "Araiyani Nallur" temple hill (about 30 km from Tiruvannamalai) and sang the "uNNAmulai" padhigam from there itself. Then he proceeded to Tiruvannamalai. He sang this "pUvAr malar" padhigam during his stay in Tiruvannamalai.

--------


Padhigam background - Periya Puranam


Sambandar reaches Tiruvannamalai and worships Siva

# 2869 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 971

அங்க ணணைவார் பணிந்தெழுந்து போற்றி செய்தம் மலைமீது

தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாட்டா மரைக டம்முடிமேற்

பொங்கு மார்வத் தொடும்புனைந்து புளக மலர்ந்த திருமேனி

யெங்கு மாகிக் கண்பொழியு மின்ப வருவி பெருக்கினார்.


Word separated:

அங்கண் அணைவார் பணிந்து-எழுந்து போற்றிசெய்து, அம்-மலைமீது

தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள்-தாமரைகள் தம் முடிமேல்

பொங்கும் ஆர்வத்தொடும் புனைந்து, புளகம் மலர்ந்த திருமேனி

எங்கும் ஆகிக், கண் பொழியும் இன்ப-அருவி பெருக்கினார்.


Sambandar sings "pUvAr malar" padhigam

# 2870 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 972

ஆதி மூர்த்தி கழல்வணங்கி யங்க ணினிதி னமருநாட்

பூத நாத ரவர்தம்மைப் "பூவார் மல"ராற் போற்றிசைத்துக்,

காத லாலத் திருமலையிற் சிலநாள் வைகிக் கமழ்கொன்றை

வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்;


Word separated:

ஆதிமூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள்,

பூதநாதர் அவர்தம்மைப் பூவார் மலரால் போற்றிசைத்துக்,

காதலால் அத்-திருமலையில் சில-நாள் வைகிக், கமழ்-கொன்றை

வேதகீதர் திருப்-பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்;


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.69 - திருவண்ணாமலை - பூவார் மலர்கொண்டு - (பண் - தக்கேசி)

(தானா தானா - தானா தானா - தானா தனதானா - Rhythm;

"தானா" - parts may come as - தனனா / தான / தனன - as well)

பாடல் எண் : 1

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்

மூவார்புரங்க ளெரித்தவன்று மூவர்க் கருள்செய்தார்

தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் னிரையோடும்

ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.


Word separated:

பூ ஆர் மலர்கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார் வானோர்கள்;

மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள்செய்தார்;

தூ-மா-மழை நின்று-அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்

-மாம்-பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.


பாடல் எண் : 2

மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர் பெருமானார்

நஞ்சைக்கண்டத் தடக்குமதுவு நன்மைப் பொருள்போலும்

வெஞ்சொற்பேசும் வேடர்மடவா ரிதண மதுவேறி

அஞ்சொற்கிளிக ளாயோவென்னும் அண்ணா மலையாரே.


Word separated:

மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்

நஞ்சைக் கண்டத்து அடக்கும்-அதுவும் நன்மைப்-பொருள்-போலும்;

வெஞ்சொல் பேசும் வேடர்-மடவார் இதணம் அது-ஏறி

அஞ்சொற்-கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே.


பாடல் எண் : 3

ஞானத்திரளாய் நின்றபெருமா னல்ல வடியார்மேல்

ஊனத்திரளை நீக்குமதுவு முண்மைப் பொருள்போலும்

ஏனத்திரளோ டினமான்கரடி யிழியு மிரவின்கண்

ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.


Word separated:

ஞானத்-திரளாய் நின்ற பெருமான்; நல்ல அடியார்மேல்

ஊனத்-திரளை நீக்கும் அதுவும் உண்மைப் பொருள்-போலும்;

ஏனத்-திரளோடு இன-மான் கரடி இழியும் இரவின்கண்

ஆனைத்-திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.


பாடல் எண் : 4

இழைத்தவிடையா ளுமையாள்பங்க ரிமையோர் பெருமானார்

தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார் புரமெய்தார்

பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்

அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணா மலையாரே.


Word separated:

இழைத்த இடையாள் உமையாள் பங்கர்; இமையோர் பெருமானார்;

தழைத்த சடையார்; விடை-ஒன்று ஏறித் தரியார் புரம் எய்தார்;

பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்

அழைத்துத் திரிந்து அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே.


பாடல் எண் : 5

உருவிற்றிகழு முமையாள்பங்க ரிமையோர் பெருமானார்

செருவில்லொருகால் வளையவூன்றிச் செந்தீ யெழுவித்தார்

பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமா மணிமுத்தம்

அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணா மலையாரே.


Word separated:

உருவில் திகழும் உமையாள் பங்கர்; இமையோர் பெருமானார்;

செரு-வில் ஒரு-கால் வளைய ஊன்றிச் செந்தீ எழுவித்தார்;

பரு-விற்-குறவர் புனத்தில் குவித்த பரு-மா மணி முத்தம்

அருவித்-திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே.


பாடல் எண் : 6

எனைத்தோரூழி யடியாரேத்த விமையோர் பெருமானார்

நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமல ருறைகோயில்

கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற் குழலூத

அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணா மலையாரே.


Word separated:

எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார்;

நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை-கோயில்,

கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல்-குழல் ஊத

அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே.


பாடல் எண் : 7

வந்தித்திருக்கு மடியார்தங்கள் வருமேல் வினையோடு

பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரம னுறைகோயில்

முந்தியெழுந்த முழவினோசை முதுகல் வரைகண்மேல்

அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.


Word separated:

வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வரு-மேல்வினையோடு

பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை-கோயில்,

முந்தி-எழுந்த முழவின் ஓசை, முதுகல் வரைகள்மேல்

அந்திப்-பிறை, வந்து-அணையும் சாரல் அண்ணாமலையாரே.


பாடல் எண் : 8

மறந்தான்கருதி வலியைநினைந்து மாறா யெடுத்தான்றோள்

நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறைய வருள்செய்தார்

திறந்தான்காட்டி யருளாயென்று தேவ ரவர்வேண்ட

அறந்தான்காட்டி யருளிச்செய்தார் அண்ணா மலையாரே.


Word separated:

மறந்தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான்-தோள்

நிறந்தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள்செய்தார்;

"திறந்தான் காட்டி அருளாய்" என்று தேவர்-அவர் வேண்ட,

அறந்தான் காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.


பாடல் எண் : 9

தேடிக்காணார் திருமால்பிரமன் றேவர் பெருமானை

மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம் பலகொண்டு

கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ள வம்மினென்

றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணா மலையாரே.


Word separated:

தேடிக் காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை;

மூடி ஓங்கி முது-வேய் உகுத்த முத்தம் பல கொண்டு

கூடிக் குறவர்-மடவார் குவித்துக், "கொள்ள வம்மின் என்று

ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.


பாடல் எண் : 10

தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணே நின்றுண்ணும்

பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித் தொழுமின்கள்

வட்டமுலையா ளுமையாள்பங்கர் மன்னி யுறைகோயில்

அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணா மலையாரே.


Word separated:

தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும்

பிட்டர் சொல்லுக் கொள்ளவேண்டா; பேணித் தொழுமின்கள்,

வட்ட-முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை-கோயில்,

அட்டம்-ஆளித்-திரள் வந்து-அணையும் அண்ணாமலையாரே.


பாடல் எண் : 11

அல்லாடரவ மியங்குஞ்சாரல் அண்ணா மலையாரை

நல்லார்பரவப் படுவான்காழி ஞான சம்பந்தன்

சொல்லான்மலிந்த பாடலான பத்து மிவைகற்று

வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னி வாழ்வாரே.


Word separated:

அல் ஆடு-அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை,

நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்

சொல்லால் மலிந்த பாடலான பத்தும் இவை, கற்று

வல்லாரெல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.

=============================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

Padhigam background - Periya Puranam


Sambandar reaches Tiruvannamalai and worships Siva

# 2869 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 971

aṅgaṇ aṇaivār paṇindu-eḻundu pōṭriseydu, am-malaimīdu

taṅgu viruppil vīṭrirundār tāḷ-tāmaraigaḷ tam muḍimēl

poṅgum ārvattoḍum punaindu, puḷagam malarnda tirumēni

eṅgum āgik, kaṇ poḻiyum inba-aruvi perukkinār.


Sambandar sings "pUvAr malar" padhigam

# 2870 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 972

ādimūrtti kaḻal vaṇaṅgi aṅgaṇ inidin amarum nāḷ,

būdanādar avardammaip pūvār malarāl pōṭrisaittuk,

kādalāl at-tirumalaiyil sila-nāḷ vaigik, kamaḻ-koṇḍrai

vēdagīdar tirup-padigaḷ piṟavum paṇiyum viruppuṟuvār;


sambandar tēvāram - padigam 1.69 - tiruvaṇṇāmalai - pūvār malargoṇḍu - (paṇ - takkēsi)

(tānā tānā - tānā tānā - tānā tanadānā - Rhythm;

"tānā" - parts may come as - tananā / tāna / tanana - as well)

pāḍal eṇ : 1

pū ār malargoṇḍu aḍiyār toḻuvār; pugaḻvār vānōrgaḷ;

mūvār puraṅgaḷ eritta aṇḍru mūvarkku aruḷseydār;

tū-mā-maḻai niṇḍru-adira, veruvit toṟuvin niraiyōḍum

ā-mām-piṇai vandu aṇaiyum sāral aṇṇāmalaiyārē.


pāḍal eṇ : 2

mañjaip pōḻnda madiyam sūḍum vānōr perumānār

nañjaik kaṇḍattu aḍakkum-aduvum nanmaip-poruḷ-pōlum;

veñjol pēsum vēḍar-maḍavār idaṇam adu-ēṟi

añjoṟ-kiḷigaḷ āyō ennum aṇṇāmalaiyārē.


pāḍal eṇ : 3

ñānat-tiraḷāy niṇḍra perumān; nalla aḍiyārmēl

ūnat-tiraḷai nīkkum aduvum uṇmaip poruḷ-pōlum;

ēnat-tiraḷōḍu ina-mān karaḍi iḻiyum iravingaṇ

ānait-tiraḷ vandu aṇaiyum sāral aṇṇāmalaiyārē.


pāḍal eṇ : 4

iḻaitta iḍaiyāḷ umaiyāḷ paṅgar; imaiyōr perumānār;

taḻaitta saḍaiyār; viḍai-oṇḍru ēṟit tariyār puram eydār;

piḻaitta piḍiyaik kāṇādu ōḍip peruṅgai madavēḻam

aḻaittut tirindu aṅgu uṟaṅgum sāral aṇṇāmalaiyārē.


pāḍal eṇ : 5

uruvil tigaḻum umaiyāḷ paṅgar; imaiyōr perumānār;

seru-vil oru-kāl vaḷaiya ūṇḍric cendī eḻuvittār;

paru-viṟ-kuṟavar punattil kuvitta paru-mā maṇi muttam

aruvit-tiraḷōḍu iḻiyum sāral aṇṇāmalaiyārē.


pāḍal eṇ : 6

enaittu ōr ūḻi aḍiyār ētta imaiyōr perumānār;

ninaittut toḻuvār pāvam tīrkkum nimalar uṟai-kōyil,

kanaitta mēdi kāṇādu āyan kaimmēl-kuḻal ūda

anaittum seṇḍru tiraḷum sāral aṇṇāmalaiyārē.


pāḍal eṇ : 7

vandittirukkum aḍiyārdaṅgaḷ varu-mēlvinaiyōḍu

bandittirunda pāvam tīrkkum paraman uṟai-kōyil,

mundi-eḻunda muḻavin ōsai, mudugal varaigaḷmēl

andip-piṟai, vandu-aṇaiyum sāral aṇṇāmalaiyārē.


pāḍal eṇ : 8

maṟandān karudi valiyai ninaindu māṟāy eḍuttān-tōḷ

niṟandān muriya neriya ūṇḍri niṟaiya aruḷseydār;

"tiṟandān kāṭṭi aruḷāy" eṇḍru dēvar-avar vēṇḍa,

aṟandān kāṭṭi aruḷicceydār aṇṇāmalaiyārē.


pāḍal eṇ : 9

tēḍik kāṇār tirumāl piraman dēvar perumānai;

mūḍi ōṅgi mudu-vēy ugutta muttam pala koṇḍu

kūḍik kuṟavar-maḍavār kuvittuk, "koḷḷa vammin eṇḍru

āḍip pāḍi aḷakkum sāral aṇṇāmalaiyārē.


pāḍal eṇ : 10

taṭṭai iḍukkit talaiyaip paṟittuc camaṇē niṇḍru uṇṇum

piṭṭar solluk koḷḷavēṇḍā; pēṇit toḻumingaḷ,

vaṭṭa-mulaiyāḷ umaiyāḷ paṅgar manni uṟai-kōyil,

aṭṭam-āḷit-tiraḷ vandu-aṇaiyum aṇṇāmalaiyārē.


pāḍal eṇ : 11

al āḍu-aravam iyaṅgum sāral aṇṇāmalaiyārai,

nallār paravappaḍuvān kāḻi ñānasambandan

sollāl malinda pāḍalāna pattum ivai, kaṭru

vallārellām vānōr vaṇaṅga manni vāḻvārē.

=============================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


Padhigam background - Periya Puranam


Sambandar reaches Tiruvannamalai and worships Siva

# 2869 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 971

अङ्गण् अणैवार् पणिन्दु-ऎऴुन्दु पोट्रिसॆय्दु, अम्-मलैमीदु

तङ्गु विरुप्पिल् वीट्रिरुन्दार् ताळ्-तामरैगळ् तम् मुडिमेल्

पॊङ्गुम् आर्वत्तॊडुम् पुनैन्दु, पुळगम् मलर्न्द तिरुमेनि

ऎङ्गुम् आगिक्, कण् पॊऴियुम् इन्ब-अरुवि पॆरुक्किनार्.


Sambandar sings "pUvAr malar" padhigam

# 2870 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 972

आदिमूर्त्ति कऴल् वणङ्गि अङ्गण् इनिदिन् अमरुम् नाळ्,

बूदनादर् अवर्दम्मैप् पूवार् मलराल् पोट्रिसैत्तुक्,

कादलाल् अत्-तिरुमलैयिल् सिल-नाळ् वैगिक्, कमऴ्-कॊण्ड्रै

वेदगीदर् तिरुप्-पदिगळ् पिऱवुम् पणियुम् विरुप्पुऱुवार्;


सम्बन्दर् तेवारम् - पदिगम् 1.69 - तिरुवण्णामलै - पूवार् मलर्गॊण्डु - (पण् - तक्केसि)

(ताना ताना - ताना ताना - ताना तनदाना - Rhythm;

"ताना" - parts may come as - तनना / तान / तनन - as well)

पाडल् ऎण् : 1

पू आर् मलर्गॊण्डु अडियार् तॊऴुवार्; पुगऴ्वार् वानोर्गळ्;

मूवार् पुरङ्गळ् ऎरित्त अण्ड्रु मूवर्क्कु अरुळ्सॆय्दार्;

तू-मा-मऴै निण्ड्रु-अदिर, वॆरुवित् तॊऱुविन् निरैयोडुम्

-माम्-पिणै वन्दु अणैयुम् सारल् अण्णामलैयारे.


पाडल् ऎण् : 2

मञ्जैप् पोऴ्न्द मदियम् सूडुम् वानोर् पॆरुमानार्

नञ्जैक् कण्डत्तु अडक्कुम्-अदुवुम् नन्मैप्-पॊरुळ्-पोलुम्;

वॆञ्जॊल् पेसुम् वेडर्-मडवार् इदणम् अदु-एऱि

अञ्जॊऱ्‌-किळिगळ् आयो ऎन्नुम् अण्णामलैयारे.


पाडल् ऎण् : 3

ञानत्-तिरळाय् निण्ड्र पॆरुमान्; नल्ल अडियार्मेल्

ऊनत्-तिरळै नीक्कुम् अदुवुम् उण्मैप् पॊरुळ्-पोलुम्;

एनत्-तिरळोडु इन-मान् करडि इऴियुम् इरविन्गण्

आनैत्-तिरळ् वन्दु अणैयुम् सारल् अण्णामलैयारे.


पाडल् ऎण् : 4

इऴैत्त इडैयाळ् उमैयाळ् पङ्गर्; इमैयोर् पॆरुमानार्;

तऴैत्त सडैयार्; विडै-ऒण्ड्रु एऱित् तरियार् पुरम् ऎय्दार्;

पिऴैत्त पिडियैक् काणादु ओडिप् पॆरुङ्गै मदवेऴम्

अऴैत्तुत् तिरिन्दु अङ्गु उऱङ्गुम् सारल् अण्णामलैयारे.


पाडल् ऎण् : 5

उरुविल् तिगऴुम् उमैयाळ् पङ्गर्; इमैयोर् पॆरुमानार्;

सॆरु-विल् ऒरु-काल् वळैय ऊण्ड्रिच् चॆन्दी ऎऴुवित्तार्;

परु-विऱ्‌-कुऱवर् पुनत्तिल् कुवित्त परु-मा मणि मुत्तम्

अरुवित्-तिरळोडु इऴियुम् सारल् अण्णामलैयारे.


पाडल् ऎण् : 6

ऎनैत्तु ओर् ऊऴि अडियार् एत्त इमैयोर् पॆरुमानार्;

निनैत्तुत् तॊऴुवार् पावम् तीर्क्कुम् निमलर् उऱै-कोयिल्,

कनैत्त मेदि काणादु आयन् कैम्मेल्-कुऴल् ऊद

अनैत्तुम् सॆण्ड्रु तिरळुम् सारल् अण्णामलैयारे.


पाडल् ऎण् : 7

वन्दित्तिरुक्कुम् अडियार्दङ्गळ् वरु-मेल्विनैयोडु

बन्दित्तिरुन्द पावम् तीर्क्कुम् परमन् उऱै-कोयिल्,

मुन्दि-ऎऴुन्द मुऴविन् ओसै, मुदुगल् वरैगळ्मेल्

अन्दिप्-पिऱै, वन्दु-अणैयुम् सारल् अण्णामलैयारे.


पाडल् ऎण् : 8

मऱन्दान् करुदि वलियै निनैन्दु माऱाय् ऎडुत्तान्-तोळ्

निऱन्दान् मुरिय नॆरिय ऊण्ड्रि निऱैय अरुळ्सॆय्दार्;

"तिऱन्दान् काट्टि अरुळाय्" ऎण्ड्रु देवर्-अवर् वेण्ड,

अऱन्दान् काट्टि अरुळिच्चॆय्दार् अण्णामलैयारे.


पाडल् ऎण् : 9

तेडिक् काणार् तिरुमाल् पिरमन् देवर् पॆरुमानै;

मूडि ओङ्गि मुदु-वेय् उगुत्त मुत्तम् पल कॊण्डु

कूडिक् कुऱवर्-मडवार् कुवित्तुक्, "कॊळ्ळ वम्मिन् ऎण्ड्रु

आडिप् पाडि अळक्कुम् सारल् अण्णामलैयारे.


पाडल् ऎण् : 10

तट्टै इडुक्कित् तलैयैप् पऱित्तुच् चमणे निण्ड्रु उण्णुम्

पिट्टर् सॊल्लुक् कॊळ्ळवेण्डा; पेणित् तॊऴुमिन्गळ्,

वट्ट-मुलैयाळ् उमैयाळ् पङ्गर् मन्नि उऱै-कोयिल्,

अट्टम्-आळित्-तिरळ् वन्दु-अणैयुम् अण्णामलैयारे.


पाडल् ऎण् : 11

अल् आडु-अरवम् इयङ्गुम् सारल् अण्णामलैयारै,

नल्लार् परवप्पडुवान् काऴि ञानसम्बन्दन्

सॊल्लाल् मलिन्द पाडलान पत्तुम् इवै, कट्रु

वल्लारॆल्लाम् वानोर् वणङ्ग मन्नि वाऴ्वारे.

=============================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Padhigam background - Periya Puranam


Sambandar reaches Tiruvannamalai and worships Siva

# 2869 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 971

అంగణ్ అణైవార్ పణిందు-ఎఴుందు పోట్రిసెయ్దు, అం-మలైమీదు

తంగు విరుప్పిల్ వీట్రిరుందార్ తాళ్-తామరైగళ్ తం ముడిమేల్

పొంగుం ఆర్వత్తొడుం పునైందు, పుళగం మలర్న్ద తిరుమేని

ఎంగుం ఆగిక్, కణ్ పొఴియుం ఇన్బ-అరువి పెరుక్కినార్.


Sambandar sings "pUvAr malar" padhigam

# 2870 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 972

ఆదిమూర్త్తి కఴల్ వణంగి అంగణ్ ఇనిదిన్ అమరుం నాళ్,

బూదనాదర్ అవర్దమ్మైప్ పూవార్ మలరాల్ పోట్రిసైత్తుక్,

కాదలాల్ అత్-తిరుమలైయిల్ సిల-నాళ్ వైగిక్, కమఴ్-కొండ్రై

వేదగీదర్ తిరుప్-పదిగళ్ పిఱవుం పణియుం విరుప్పుఱువార్;


సంబందర్ తేవారం - పదిగం 1.69 - తిరువణ్ణామలై - పూవార్ మలర్గొండు - (పణ్ - తక్కేసి)

(తానా తానా - తానా తానా - తానా తనదానా - Rhythm;

"తానా" - parts may come as - తననా / తాన / తనన - as well)

పాడల్ ఎణ్ : 1

పూ ఆర్ మలర్గొండు అడియార్ తొఴువార్; పుగఴ్వార్ వానోర్గళ్;

మూవార్ పురంగళ్ ఎరిత్త అండ్రు మూవర్క్కు అరుళ్సెయ్దార్;

తూ-మా-మఴై నిండ్రు-అదిర, వెరువిత్ తొఱువిన్ నిరైయోడుం

-మాం-పిణై వందు అణైయుం సారల్ అణ్ణామలైయారే.


పాడల్ ఎణ్ : 2

మంజైప్ పోఴ్న్ద మదియం సూడుం వానోర్ పెరుమానార్

నంజైక్ కండత్తు అడక్కుం-అదువుం నన్మైప్-పొరుళ్-పోలుం;

వెంజొల్ పేసుం వేడర్-మడవార్ ఇదణం అదు-ఏఱి

అంజొఱ్-కిళిగళ్ ఆయో ఎన్నుం అణ్ణామలైయారే.


పాడల్ ఎణ్ : 3

ఞానత్-తిరళాయ్ నిండ్ర పెరుమాన్; నల్ల అడియార్మేల్

ఊనత్-తిరళై నీక్కుం అదువుం ఉణ్మైప్ పొరుళ్-పోలుం;

ఏనత్-తిరళోడు ఇన-మాన్ కరడి ఇఴియుం ఇరవిన్గణ్

ఆనైత్-తిరళ్ వందు అణైయుం సారల్ అణ్ణామలైయారే.


పాడల్ ఎణ్ : 4

ఇఴైత్త ఇడైయాళ్ ఉమైయాళ్ పంగర్; ఇమైయోర్ పెరుమానార్;

తఴైత్త సడైయార్; విడై-ఒండ్రు ఏఱిత్ తరియార్ పురం ఎయ్దార్;

పిఴైత్త పిడియైక్ కాణాదు ఓడిప్ పెరుంగై మదవేఴం

అఴైత్తుత్ తిరిందు అంగు ఉఱంగుం సారల్ అణ్ణామలైయారే.


పాడల్ ఎణ్ : 5

ఉరువిల్ తిగఴుం ఉమైయాళ్ పంగర్; ఇమైయోర్ పెరుమానార్;

సెరు-విల్ ఒరు-కాల్ వళైయ ఊండ్రిచ్ చెందీ ఎఴువిత్తార్;

పరు-విఱ్-కుఱవర్ పునత్తిల్ కువిత్త పరు-మా మణి ముత్తం

అరువిత్-తిరళోడు ఇఴియుం సారల్ అణ్ణామలైయారే.


పాడల్ ఎణ్ : 6

ఎనైత్తు ఓర్ ఊఴి అడియార్ ఏత్త ఇమైయోర్ పెరుమానార్;

నినైత్తుత్ తొఴువార్ పావం తీర్క్కుం నిమలర్ ఉఱై-కోయిల్,

కనైత్త మేది కాణాదు ఆయన్ కైమ్మేల్-కుఴల్ ఊద

అనైత్తుం సెండ్రు తిరళుం సారల్ అణ్ణామలైయారే.


పాడల్ ఎణ్ : 7

వందిత్తిరుక్కుం అడియార్దంగళ్ వరు-మేల్వినైయోడు

బందిత్తిరుంద పావం తీర్క్కుం పరమన్ ఉఱై-కోయిల్,

ముంది-ఎఴుంద ముఴవిన్ ఓసై, ముదుగల్ వరైగళ్మేల్

అందిప్-పిఱై, వందు-అణైయుం సారల్ అణ్ణామలైయారే.


పాడల్ ఎణ్ : 8

మఱందాన్ కరుది వలియై నినైందు మాఱాయ్ ఎడుత్తాన్-తోళ్

నిఱందాన్ మురియ నెరియ ఊండ్రి నిఱైయ అరుళ్సెయ్దార్;

"తిఱందాన్ కాట్టి అరుళాయ్" ఎండ్రు దేవర్-అవర్ వేండ,

అఱందాన్ కాట్టి అరుళిచ్చెయ్దార్ అణ్ణామలైయారే.


పాడల్ ఎణ్ : 9

తేడిక్ కాణార్ తిరుమాల్ పిరమన్ దేవర్ పెరుమానై;

మూడి ఓంగి ముదు-వేయ్ ఉగుత్త ముత్తం పల కొండు

కూడిక్ కుఱవర్-మడవార్ కువిత్తుక్, "కొళ్ళ వమ్మిన్ ఎండ్రు

ఆడిప్ పాడి అళక్కుం సారల్ అణ్ణామలైయారే.


పాడల్ ఎణ్ : 10

తట్టై ఇడుక్కిత్ తలైయైప్ పఱిత్తుచ్ చమణే నిండ్రు ఉణ్ణుం

పిట్టర్ సొల్లుక్ కొళ్ళవేండా; పేణిత్ తొఴుమిన్గళ్,

వట్ట-ములైయాళ్ ఉమైయాళ్ పంగర్ మన్ని ఉఱై-కోయిల్,

అట్టం-ఆళిత్-తిరళ్ వందు-అణైయుం అణ్ణామలైయారే.


పాడల్ ఎణ్ : 11

అల్ ఆడు-అరవం ఇయంగుం సారల్ అణ్ణామలైయారై,

నల్లార్ పరవప్పడువాన్ కాఴి ఞానసంబందన్

సొల్లాల్ మలింద పాడలాన పత్తుం ఇవై, కట్రు

వల్లారెల్లాం వానోర్ వణంగ మన్ని వాఴ్వారే.

=============================