144) 3.24 - மண்ணில் நல்ல வண்ணம் - maNNil nalla vaNNam - (கழுமலம் - சீகாழி)
சம்பந்தர் தேவாரம் - 3.24 - மண்ணில் நல்ல வண்ணம் - கழுமலம் - (பண் - கொல்லி)
sambandar tēvāram - 3.24 - maṇṇil nalla vaṇṇam - kaḻumalam - (paṇ - kolli)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1A7K_q6KKLBCdnezyP2CvtmOa8Up-VJd3/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/A6s45kE4Tp4
Part-2: https://youtu.be/9qQuqqBkVLU
***
English
translation (meaning) :
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_024.HTM
V. Subramanian
================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.24 - கழுமலம் - மண்ணில் நல்ல வண்ணம் (பண் - கொல்லி)
கழுமலம்: சீகாழி (இக்காலத்தில் சீர்காழி) என்ற தலத்தின் 12 பெயர்களில் ஒன்று.
பதிகக் குறிப்பு: சமணர்களை வாதில் வென்று மதுரையில் சம்பந்தர் தங்கியிருந்த சமயத்தில் அவரைக் காண அவர் தந்தையார் சிவபாத இருதயர் அங்குச் சென்றார். ஆலவாயில் வழிபட்டபின் அவர் சம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தை அடைந்தார். அவரை வணங்கி வரவேற்ற அடியார்கள் உள்ளே சென்று அறிவிக்கவும், சம்பந்தர் வெளியே வந்தார். சிவபாத இருதயர் சம்பந்தரை வணங்கினார். சம்பந்தரும் தந்தையாரை எதிர் வணங்கினார். அப்பொழுது காழியில் ஆண்டுகொண்ட அம்மையப்பரை நினைந்து பாடிய பதிகம் இது. (மதுரையில் பாடப்பட்டிருந்தாலும் இது திருக்கழுமல ஈசன்மேல் பாடப்பெற்றதால் இப்பதிகத்தின் தலம் திருக்கழுமலம்).
அன்பர்கள் மங்கல நிகழ்ச்சிகளில் பாடும் பதிகம் இது.
Additional note:
இந்தப் பதிகத்தில் பாடல்தோறும் ஈற்றில் உள்ள "இருந்ததே" என்பதை "நலமாக இருக்கின்றானா" என்று வினாவியதாக (வினாவேகாரமாகக்) கொள்ளவேண்டும். பெரியபுராணப் பாடலில் இப்பதிக வரலாற்றைச் சொல்லும்பொழுது சேக்கிழார் அப்படிப் பொருள்கொண்டிருக்கின்றார்.
kazhumalam: This is one of the 12 names of Sirkazhi.
Padhigam background: After defeating the Jains in the debates, Sambandar stayed in Madurai for some time. During that time, his father Sivapadha Hrudhayar came from Sirkazhi to visit him. Sivapadha Hrudhayar worshiped at the AlavAy temple and then reached the place where Sambandar was staying. The devotees received him and announced his arrival to Sambandar. When Sambandar came out, Sivapadha Hrudhayar folded his hands in homage to Sambandar. Similarly, Sambandar greeted him with folded hands in return.
At that time, the thought of Siva and Parvathi of Sirkazhi filled Sambandar's mind. Immediately he sang this padhigam on Siva (dwelling with Uma) in Sirkazhi, enquiring Sivapadha Hrudhayar about them! (Even though this padhigam was sung while in Madurai, it is on the Siva of 'kazhumalam' and hence, the sthalam for this padhigam is 'kazhumalam').
This is considered a very auspicious padhigam.
--------
Padhigam background - Periya Puranam
Sivapadha Hrudhayar reaches Madurai and worships Siva in the ālavāy temple
# 2774 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 876
மாமறையோர் வளம்பதிக ளிடைத்தங்கி வழிச்செல்வார்
தேமருவு நறும்பைந்தார்த் தென்னவன்றன் திருமதுரை
தாமணைந்து திருவால வாயமர்ந்த தனிநாதன்
பூமருவுஞ் சேவடிக்கீழ்ப் புக்கார்வத் தொடுபணிந்தார். *
(* CKS book shows: தொடும்பணிந்தார்)
Word separated:
மாமறையோர் வளம்-பதிகளிடைத் தங்கி வழிச்செல்வார்;
தேம் மருவு நறும்-பைந்தார்த் தென்னவன்றன் திரு-மதுரை
தாம் அணைந்து, திரு-ஆலவாய் அமர்ந்த தனி-நாதன்
பூ மருவும் சேவடிக்கீழ்ப் புக்கு ஆர்வத்தொடு பணிந்தார். *
(* CKS book shows: ஆர்வத்தொடும்)
Sivapadha Hrudhayar asks for direction to the place where Sambandar is staying
# 2775 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 877
அங்கணரைப் பணிந்துபோந் தருகணைந்தார் தமைவினவ
"இங்கெம்மைக் கண்விடுத்த காழியா ரிளவேறு
தங்குமிடந் திருநீற்றுத் தொண்டர்குழாஞ் சாருமிடஞ்
செங்கமலத் திருமடமற் றிது"வென்றே தெரிந்துரைத்தார்.
Word separated:
அங்கணரைப் பணிந்து, போந்து, அருகு அணைந்தார்தமை வினவ,
"இங்கு எம்மைக் கண்-விடுத்த காழியார் இள-ஏறு
தங்கும்-இடம், திருநீற்றுத் தொண்டர்-குழாம் சாரும் இடம்,
செங்கமலத் திருமடம் மற்று-இது" என்றே தெரிந்து உரைத்தார்.
Sivapadha Hrudhayar reaches that place and Sambandar comes out to greet him
# 2776 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 878
செப்புதலு மதுகேட்டுத் திருமடத்தைச் சென்றெய்த,
"அப்பரெழுந் தருளினா" ரெனக்கண்டோ ரடிவணங்கி
யொப்பில்புகழ்ப் பிள்ளையார் தமக்கோகை யுரைசெய்ய,
"எப்பொழுது வந்தருளிற்?" றென்றெதிரே எழுந்தருள,
Word separated:
செப்புதலும் அது கேட்டுத், திருமடத்தைச் சென்று-எய்த,
"அப்பர் எழுந்தருளினார்" எனக் கண்டோர் அடிவணங்கி,
ஒப்பு-இல்-புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரைசெய்ய,
"எப்பொழுது வந்தருளிற்று?" என்று எதிரே எழுந்தருள,
Sivapadha Hrudhayar pays homage to Sambandar (and vice versa)
# 2777 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 879
சிவபாத விருதயர்தா முன்றொழுது சென்றணையத்,
தவமான நெறியணையுந் தாதையா ரெதிர்தொழுவார்
அவர்சார்வு கண்டருளித், திருத்தோணி யமர்ந்தருளிப்
பவபாச மறுத்தவர்தம் பாதங்க ணினைவுற்றார்.
Word separated:
சிவபாத இருதயர்தாம் முன்-தொழுது சென்று-அணையத்,
தவமான நெறி அணையும் தாதையார் எதிர்-தொழுவார்
அவர் சார்வு கண்டருளித், திருத்தோணி அமர்ந்தருளிப்
பவபாசம் அறுத்தவர்தம் பாதங்கள் நினைவுற்றார்.
Sambandar thinks of Siva and Uma of Sirkazhi who showered their grace on him at a tender age
# 2778 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 880
இருந்தவத்தோ ரவர்முன்னே யிணைமலர்க்கை குவித்தருளி
"யருந்தவத்தீ! ரெனையறியாப் பருவத்தே யெடுத்தாண்ட
பெருந்தகையெம் பெருமாட்டி யுடனிருந்த தே?" யென்று
பொருந்துபுகழ்ப் புகலியின்மேற் றிருப்பதிகம் போற்றிசைத்தார்;
Word separated:
இரும்-தவத்தோர் அவர்முன்னே இணை-மலர்க்கை குவித்தருளி,
"அரும்-தவத்தீர்! எனை அறியாப் பருவத்தே எடுத்து-ஆண்ட
பெருந்தகை எம் பெருமாட்டியுடன் இருந்ததே?" என்று
பொருந்து-புகழ்ப் புகலியின்மேல் திருப்பதிகம் போற்றிசைத்தார்;
Sambandar sings a padhigam that starts with "maṇṇil nalla vaṇṇam"
# 2779 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 881
"மண்ணினல்ல" வென்றெடுத்து மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி
யுண்ணிறைந்த காதலினாற் கண்ணருவி பாய்ந்தொழுக
வண்ணலார் தமைவினவித் திருப்பதிக மருள்செய்தார்
தண்ணறும்பூஞ் செங்கமலத் தாரணிந்த தமிழ்விரகர்.
Word separated:
"மண்ணில் நல்ல" என்று எடுத்து, மனத்து எழுந்த பெருமகிழ்ச்சி
உள் நிறைந்த காதலினால் கண்-அருவி பாய்ந்து-ஒழுக,
அண்ணலார்-தமை வினவித், திருப்பதிகம் அருள்செய்தார்
தண்-நறும்-பூஞ் செங்கமலத்-தார் அணிந்த தமிழ்-விரகர்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.24 - கழுமலம் - மண்ணில் நல்ல வண்ணம் (பண் - கொல்லி)
(தானனா தானனா தானனா தானனா - Rhythm)
பாடல் எண் : 1
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
Word separated:
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், வைகலும்
எண்ணில், நல்ல கதிக்கு யாதுமோர் குறைவு-இலை;
கண்ணில் நல்லஃது-உறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே?
பாடல் எண் : 2
போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தான்எனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.
Word separated:
போதை-ஆர் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவுறத் தான் எனை ஆண்டவன்,
காதை-ஆர் குழையினன், கழுமல வளநகர்ப்
பேதையாள்-அவளொடும் பெருந்தகை இருந்ததே?
பாடல் எண் : 3
தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.
Word separated:
தொண்டு அணை செய் தொழில் துயர் அறுத்து உய்யலாம்;
வண்டு அணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண் துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண் துணையாக ஓர் பெருந்தகை இருந்ததே?
பாடல் எண் : 4
அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.
Word separated:
அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே;
நியர்-வளை முன்-கையாள் நேரிழை அவளொடும்,
கயல் வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர் பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே?
பாடல் எண் : 5
அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.
Word separated:
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே;
விடை அமர் கொடியினான்; விண்ணவர் தொழுதெழும்,
கடை உயர் மாடம் ஆர் கழுமல வளநகர்ப்
பெடை-நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே?
பாடல் எண் : 6
மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.
Word separated:
மற்று-ஒரு பற்று இலை நெஞ்சமே; மறை-பல
கற்ற நல்- வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேர்-அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே?
பாடல் எண் : 7
குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.
Word separated:
குறை வளைவது மொழி- குறைவு ஒழி நெஞ்சமே;
நிறை-வளை முன்-கையாள் நேரிழை அவளொடும்
கறை வளர் பொழில் அணி கழுமல வளநகர்ப்
பிறை வளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே?
பாடல் எண் : 8
அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவா ளருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.
Word separated:
அரக்கனார் அரு-வரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால்; நீடு-யாழ் பாடவே
கருக்கு-வாள் அருள்செய்தான், கழுமல வளநகர்ப்
பெருக்கு-நீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே?
(நீடியாழ் = நீடு + யாழ்; குற்றியலிகரம்)
பாடல் எண் : 9
நெடியவன் பிரமனும் நினைப்பரி தாய்அவர்
அடியொடு முடியறி யாஅழல் உருவினன்
கடிகமழ் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.
Word separated:
நெடியவன் பிரமனும் நினைப்பரிதாய், அவர்
அடியொடு முடி அறியா அழல்-உருவினன்;
கடி கமழ் பொழில் அணி கழுமல வளநகர்ப்
பிடி-நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே?
பாடல் எண் : 10
தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந் தடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.
Word separated:
தார் உறு தட்டு-உடைச் சமணர் சாக்கியர்கள்தம்
ஆர் உறு சொற்-களைந்து, அடியிணை அடைந்து உய்ம்மின்;
கார் உறு பொழில் வளர் கழுமல வளநகர்ப்
பேர்-அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே?
பாடல் எண் : 11
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.
Word separated:
கரும்-தடம் தேன் மல்கு கழுமல வளநகர்ப்
பெரும்-தடம் கொங்கையோடு இருந்த எம் பிரான்-தனை
அரும்-தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே.
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Padhigam background - Periya Puranam
Sivapadha Hrudhayar reaches Madurai and worships Siva in the ālavāy temple
# 2774 - periyapurāṇam - tiruñānasambandar purāṇam - 876
māmaṟaiyōr vaḷam-padigaḷiḍait taṅgi vaḻiccelvār;
tēm maruvu naṟum-paindārt tennavaṇḍran tiru-madurai
tām aṇaindu, tiru-ālavāy amarnda tani-nādan
pū maruvum sēvaḍikkīḻp pukku ārvattoḍu paṇindār. *
(* CKS book shows: ārvattoḍum)
Sivapadha Hrudhayar asks for direction to the place where Sambandar is staying
# 2775 - periyapurāṇam - tiruñānasambandar purāṇam - 877
aṅgaṇaraip paṇindu, pōndu, arugu aṇaindārdamai vinava,
"iṅgu emmaik kaṇ-viḍutta kāḻiyār iḷa-ēṟu
taṅgum-iḍam, tirunīṭrut toṇḍar-kuḻām sārum iḍam,
seṅgamalat tirumaḍam maṭru-idu" eṇḍrē terindu uraittār.
Sivapadha Hrudhayar reaches that place and Sambandar comes out to greet him
# 2776 - periyapurāṇam - tiruñānasambandar purāṇam - 878
seppudalum adu kēṭṭut, tirumaḍattaic ceṇḍru-eyda,
"appar eḻundaruḷinār" enak kaṇḍōr aḍivaṇaṅgi,
oppu-il-pugaḻp piḷḷaiyār tamakku ōgai uraiseyya,
"eppoḻudu vandaruḷiṭru?" eṇḍru edirē eḻundaruḷa,
Sivapadha Hrudhayar pays homage to Sambandar (and vice versa)
# 2777 - periyapurāṇam - tiruñānasambandar purāṇam - 879
sivapāda irudayardām mun-toḻudu seṇḍru-aṇaiyat,
tavamāna neṟi aṇaiyum tādaiyār edir-toḻuvār
avar sārvu kaṇḍaruḷit, tiruttōṇi amarndaruḷip
bavapāsam aṟuttavardam pādaṅgaḷ ninaivuṭrār.
Sambandar thinks of Siva and Uma of Sirkazhi who showered their grace on him at a tender age
# 2778 - periyapurāṇam - tiruñānasambandar purāṇam - 880
irum-tavattōr avarmunnē iṇai-malarkkai kuvittaruḷi,
"arum-tavattīr! enai aṟiyāp paruvattē eḍuttu-āṇḍa
perundagai em perumāṭṭiyuḍan irundadē?" eṇḍru
porundu-pugaḻp pugaliyinmēl tiruppadigam pōṭrisaittār;
Sambandar sings a padhigam that starts with "maṇṇil nalla vaṇṇam"
# 2779 - periyapurāṇam - tiruñānasambandar purāṇam - 881
"maṇṇil nalla" eṇḍru eḍuttu, manattu eḻunda perumagiḻcci
uḷ niṟainda kādalināl kaṇ-aruvi pāyndu-oḻuga,
aṇṇalār-tamai vinavit, tiruppadigam aruḷseydār
taṇ-naṟum-pūñ jeṅgamalat-tār aṇinda tamiḻ-viragar.
sambandar tēvāram - padigam 3.24 - kaḻumalam - maṇṇil nalla vaṇṇam (paṇ - kolli)
(tānanā tānanā tānanā tānanā - Rhythm)
pāḍal eṇ : 1
maṇṇil nalla vaṇṇam vāḻalām, vaigalum
eṇṇil, nalla gadikku yādumōr kuṟaivu-ilai;
kaṇṇil nallahdu-uṟum kaḻumala vaḷanagarp
peṇṇil nallāḷoḍum perundagai irundadē?
pāḍal eṇ : 2
pōdai-ār poṟkiṇṇattu aḍisil pollādu enat
tādaiyār munivuṟat tān enai āṇḍavan,
kādai-ār kuḻaiyinan, kaḻumala vaḷanagarp
pēdaiyāḷ-avaḷoḍum perundagai irundadē?
pāḍal eṇ : 3
toṇḍu aṇai sey toḻil tuyar aṟuttu uyyalām;
vaṇḍu aṇai koṇḍraiyān madumalarc caḍaimuḍik
kaṇ tuṇai neṭriyān kaḻumala vaḷanagarp
peṇ tuṇaiyāga ōr perundagai irundadē?
pāḍal eṇ : 4
ayarvu uḷōm eṇḍru nī asaivu oḻi neñjamē;
niyar-vaḷai mun-kaiyāḷ nēriḻai avaḷoḍum,
kayal vayal kudigoḷum kaḻumala vaḷanagarp
peyar pala tudiseyap perundagai irundadē?
pāḍal eṇ : 5
aḍaivu ilōm eṇḍru nī ayarvu oḻi neñjamē;
viḍai amar koḍiyinān; viṇṇavar toḻudeḻum,
kaḍai uyar māḍam ār kaḻumala vaḷanagarp
peḍai-naḍai avaḷoḍum perundagai irundadē?
pāḍal eṇ : 6
maṭru-oru paṭru ilai neñjamē; maṟai-pala
kaṭra nal- vēdiyar kaḻumala vaḷanagarc
ciṭriḍaip pēr-algul tirundiḻai avaḷoḍum
peṭru enai āḷuḍaip perundagai irundadē?
pāḍal eṇ : 7
kuṟai vaḷaivadu moḻi- kuṟaivu oḻi neñjamē;
niṟai-vaḷai mun-kaiyāḷ nēriḻai avaḷoḍum
kaṟai vaḷar poḻil aṇi kaḻumala vaḷanagarp
piṟai vaḷar saḍaimuḍip perundagai irundadē?
pāḍal eṇ : 8
arakkanār aru-varai eḍuttavan alaṟiḍa
nerukkinār viralināl; nīḍu-yāḻ pāḍavē
karukku-vāḷ aruḷseydān, kaḻumala vaḷanagarp
perukku-nīr avaḷoḍum perundagai irundadē?
(nīḍiyāḻ = nīḍu + yāḻ; kuṭriyaligaram)
pāḍal eṇ : 9
neḍiyavan piramanum ninaipparidāy, avar
aḍiyoḍu muḍi aṟiyā aḻal-uruvinan;
kaḍi kamaḻ poḻil aṇi kaḻumala vaḷanagarp
piḍi-naḍai avaḷoḍum perundagai irundadē?
pāḍal eṇ : 10
tār uṟu taṭṭu-uḍaic camaṇar sākkiyargaḷdam
ār uṟu soṟ-kaḷaindu, aḍiyiṇai aḍaindu uymmin;
kār uṟu poḻil vaḷar kaḻumala vaḷanagarp
pēr-aṟattāḷoḍum perundagai irundadē?
pāḍal eṇ : 11
karum-taḍam tēn malgu kaḻumala vaḷanagarp
perum-taḍam koṅgaiyōḍu irunda em pirān-tanai
arum-tamiḻ ñānasambandana sendamiḻ
virumbuvār avargaḷ pōy viṇṇulagu āḷvarē.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Padhigam background - Periya Puranam
Sivapadha Hrudhayar reaches Madurai and worships Siva in the ālavāy temple
# 2774 - पॆरियपुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 876
मामऱैयोर् वळम्-पदिगळिडैत् तङ्गि वऴिच्चॆल्वार्;
तेम् मरुवु नऱुम्-पैन्दार्त् तॆन्नवण्ड्रन् तिरु-मदुरै
ताम् अणैन्दु, तिरु-आलवाय् अमर्न्द तनि-नादन्
पू मरुवुम् सेवडिक्कीऴ्प् पुक्कु आर्वत्तॊडु पणिन्दार्. *
(* CKS book shows: आर्वत्तॊडुम्)
Sivapadha Hrudhayar asks for direction to the place where Sambandar is staying
# 2775 - पॆरियपुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 877
अङ्गणरैप् पणिन्दु, पोन्दु, अरुगु अणैन्दार्दमै विनव,
"इङ्गु ऎम्मैक् कण्-विडुत्त काऴियार् इळ-एऱु
तङ्गुम्-इडम्, तिरुनीट्रुत् तॊण्डर्-कुऴाम् सारुम् इडम्,
सॆङ्गमलत् तिरुमडम् मट्रु-इदु" ऎण्ड्रे तॆरिन्दु उरैत्तार्.
Sivapadha Hrudhayar reaches that place and Sambandar comes out to greet him
# 2776 - पॆरियपुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 878
सॆप्पुदलुम् अदु केट्टुत्, तिरुमडत्तैच् चॆण्ड्रु-ऎय्द,
"अप्पर् ऎऴुन्दरुळिनार्" ऎनक् कण्डोर् अडिवणङ्गि,
ऒप्पु-इल्-पुगऴ्प् पिळ्ळैयार् तमक्कु ओगै उरैसॆय्य,
"ऎप्पॊऴुदु वन्दरुळिट्रु?" ऎण्ड्रु ऎदिरे ऎऴुन्दरुळ,
Sivapadha Hrudhayar pays homage to Sambandar (and vice versa)
# 2777 - पॆरियपुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 879
सिवपाद इरुदयर्दाम् मुन्-तॊऴुदु सॆण्ड्रु-अणैयत्,
तवमान नॆऱि अणैयुम् तादैयार् ऎदिर्-तॊऴुवार्
अवर् सार्वु कण्डरुळित्, तिरुत्तोणि अमर्न्दरुळिप्
बवपासम् अऱुत्तवर्दम् पादङ्गळ् निनैवुट्रार्.
Sambandar thinks of Siva and Uma of Sirkazhi who showered their grace on him at a tender age
# 2778 - पॆरियपुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 880
इरुम्-तवत्तोर् अवर्मुन्ने इणै-मलर्क्कै कुवित्तरुळि,
"अरुम्-तवत्तीर्! ऎनै अऱियाप् परुवत्ते ऎडुत्तु-आण्ड
पॆरुन्दगै ऎम् पॆरुमाट्टियुडन् इरुन्ददे?" ऎण्ड्रु
पॊरुन्दु-पुगऴ्प् पुगलियिन्मेल् तिरुप्पदिगम् पोट्रिसैत्तार्;
Sambandar sings a padhigam that starts with "maṇṇil nalla vaṇṇam"
# 2779 - पॆरियपुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 881
"मण्णिल् नल्ल" ऎण्ड्रु ऎडुत्तु, मनत्तु ऎऴुन्द पॆरुमगिऴ्च्चि
उळ् निऱैन्द कादलिनाल् कण्-अरुवि पाय्न्दु-ऒऴुग,
अण्णलार्-तमै विनवित्, तिरुप्पदिगम् अरुळ्सॆय्दार्
तण्-नऱुम्-पूञ् जॆङ्गमलत्-तार् अणिन्द तमिऴ्-विरगर्.
सम्बन्दर् तेवारम् - पदिगम् 3.24 - कऴुमलम् - मण्णिल् नल्ल वण्णम् (पण् - कॊल्लि)
(तानना तानना तानना तानना - Rhythm)
पाडल् ऎण् : 1
मण्णिल् नल्ल वण्णम् वाऴलाम्, वैगलुम्
ऎण्णिल्, नल्ल गदिक्कु यादुमोर् कुऱैवु-इलै;
कण्णिल् नल्लह्दु-उऱुम् कऴुमल वळनगर्प्
पॆण्णिल् नल्लाळॊडुम् पॆरुन्दगै इरुन्ददे?
पाडल् ऎण् : 2
पोदै-आर् पॊऱ्किण्णत्तु अडिसिल् पॊल्लादु ऎनत्
तादैयार् मुनिवुऱत् तान् ऎनै आण्डवन्,
कादै-आर् कुऴैयिनन्, कऴुमल वळनगर्प्
पेदैयाळ्-अवळॊडुम् पॆरुन्दगै इरुन्ददे?
पाडल् ऎण् : 3
तॊण्डु अणै सॆय् तॊऴिल् तुयर् अऱुत्तु उय्यलाम्;
वण्डु अणै कॊण्ड्रैयान् मदुमलर्च् चडैमुडिक्
कण् तुणै नॆट्रियान् कऴुमल वळनगर्प्
पॆण् तुणैयाग ओर् पॆरुन्दगै इरुन्ददे?
पाडल् ऎण् : 4
अयर्वु उळोम् ऎण्ड्रु नी असैवु ऒऴि नॆञ्जमे;
नियर्-वळै मुन्-कैयाळ् नेरिऴै अवळॊडुम्,
कयल् वयल् कुदिगॊळुम् कऴुमल वळनगर्प्
पॆयर् पल तुदिसॆयप् पॆरुन्दगै इरुन्ददे?
पाडल् ऎण् : 5
अडैवु इलोम् ऎण्ड्रु नी अयर्वु ऒऴि नॆञ्जमे;
विडै अमर् कॊडियिनान्; विण्णवर् तॊऴुदॆऴुम्,
कडै उयर् माडम् आर् कऴुमल वळनगर्प्
पॆडै-नडै अवळॊडुम् पॆरुन्दगै इरुन्ददे?
पाडल् ऎण् : 6
मट्रु-ऒरु पट्रु इलै नॆञ्जमे; मऱै-पल
कट्र नल्- वेदियर् कऴुमल वळनगर्च्
चिट्रिडैप् पेर्-अल्गुल् तिरुन्दिऴै अवळॊडुम्
पॆट्रु ऎनै आळुडैप् पॆरुन्दगै इरुन्ददे?
पाडल् ऎण् : 7
कुऱै वळैवदु मॊऴि- कुऱैवु ऒऴि नॆञ्जमे;
निऱै-वळै मुन्-कैयाळ् नेरिऴै अवळॊडुम्
कऱै वळर् पॊऴिल् अणि कऴुमल वळनगर्प्
पिऱै वळर् सडैमुडिप् पॆरुन्दगै इरुन्ददे?
पाडल् ऎण् : 8
अरक्कनार् अरु-वरै ऎडुत्तवन् अलऱिड
नॆरुक्किनार् विरलिनाल्; नीडु-याऴ् पाडवे
करुक्कु-वाळ् अरुळ्सॆय्दान्, कऴुमल वळनगर्प्
पॆरुक्कु-नीर् अवळॊडुम् पॆरुन्दगै इरुन्ददे?
(नीडियाऴ् = नीडु + याऴ्; कुट्रियलिगरम्)
पाडल् ऎण् : 9
नॆडियवन् पिरमनुम् निनैप्परिदाय्, अवर्
अडियॊडु मुडि अऱिया अऴल्-उरुविनन्;
कडि कमऴ् पॊऴिल् अणि कऴुमल वळनगर्प्
पिडि-नडै अवळॊडुम् पॆरुन्दगै इरुन्ददे?
पाडल् ऎण् : 10
तार् उऱु तट्टु-उडैच् चमणर् साक्कियर्गळ्दम्
आर् उऱु सॊऱ्-कळैन्दु, अडियिणै अडैन्दु उय्म्मिन्;
कार् उऱु पॊऴिल् वळर् कऴुमल वळनगर्प्
पेर्-अऱत्ताळॊडुम् पॆरुन्दगै इरुन्ददे?
पाडल् ऎण् : 11
करुम्-तडम् तेन् मल्गु कऴुमल वळनगर्प्
पॆरुम्-तडम् कॊङ्गैयोडु इरुन्द ऎम् पिरान्-तनै
अरुम्-तमिऴ् ञानसम्बन्दन सॆन्दमिऴ्
विरुम्बुवार् अवर्गळ् पोय् विण्णुलगु आळ्वरे.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Padhigam background - Periya Puranam
Sivapadha Hrudhayar reaches Madurai and worships Siva in the ālavāy temple
# 2774 - పెరియపురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 876
మామఱైయోర్ వళం-పదిగళిడైత్ తంగి వఴిచ్చెల్వార్;
తేం మరువు నఱుం-పైందార్త్ తెన్నవండ్రన్ తిరు-మదురై
తాం అణైందు, తిరు-ఆలవాయ్ అమర్న్ద తని-నాదన్
పూ మరువుం సేవడిక్కీఴ్ప్ పుక్కు ఆర్వత్తొడు పణిందార్. *
(* CKS book shows: ఆర్వత్తొడుం)
Sivapadha Hrudhayar asks for direction to the place where Sambandar is staying
# 2775 - పెరియపురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 877
అంగణరైప్ పణిందు, పోందు, అరుగు అణైందార్దమై వినవ,
"ఇంగు ఎమ్మైక్ కణ్-విడుత్త కాఴియార్ ఇళ-ఏఱు
తంగుం-ఇడం, తిరునీట్రుత్ తొండర్-కుఴాం సారుం ఇడం,
సెంగమలత్ తిరుమడం మట్రు-ఇదు" ఎండ్రే తెరిందు ఉరైత్తార్.
Sivapadha Hrudhayar reaches that place and Sambandar comes out to greet him
# 2776 - పెరియపురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 878
సెప్పుదలుం అదు కేట్టుత్, తిరుమడత్తైచ్ చెండ్రు-ఎయ్ద,
"అప్పర్ ఎఴుందరుళినార్" ఎనక్ కండోర్ అడివణంగి,
ఒప్పు-ఇల్-పుగఴ్ప్ పిళ్ళైయార్ తమక్కు ఓగై ఉరైసెయ్య,
"ఎప్పొఴుదు వందరుళిట్రు?" ఎండ్రు ఎదిరే ఎఴుందరుళ,
Sivapadha Hrudhayar pays homage to Sambandar (and vice versa)
# 2777 - పెరియపురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 879
సివపాద ఇరుదయర్దాం మున్-తొఴుదు సెండ్రు-అణైయత్,
తవమాన నెఱి అణైయుం తాదైయార్ ఎదిర్-తొఴువార్
అవర్ సార్వు కండరుళిత్, తిరుత్తోణి అమర్న్దరుళిప్
బవపాసం అఱుత్తవర్దం పాదంగళ్ నినైవుట్రార్.
Sambandar thinks of Siva and Uma of Sirkazhi who showered their grace on him at a tender age
# 2778 - పెరియపురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 880
ఇరుం-తవత్తోర్ అవర్మున్నే ఇణై-మలర్క్కై కువిత్తరుళి,
"అరుం-తవత్తీర్! ఎనై అఱియాప్ పరువత్తే ఎడుత్తు-ఆండ
పెరుందగై ఎం పెరుమాట్టియుడన్ ఇరుందదే?" ఎండ్రు
పొరుందు-పుగఴ్ప్ పుగలియిన్మేల్ తిరుప్పదిగం పోట్రిసైత్తార్;
Sambandar sings a padhigam that starts with "maṇṇil nalla vaṇṇam"
# 2779 - పెరియపురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 881
"మణ్ణిల్ నల్ల" ఎండ్రు ఎడుత్తు, మనత్తు ఎఴుంద పెరుమగిఴ్చ్చి
ఉళ్ నిఱైంద కాదలినాల్ కణ్-అరువి పాయ్న్దు-ఒఴుగ,
అణ్ణలార్-తమై వినవిత్, తిరుప్పదిగం అరుళ్సెయ్దార్
తణ్-నఱుం-పూఞ్ జెంగమలత్-తార్ అణింద తమిఴ్-విరగర్.
సంబందర్ తేవారం - పదిగం 3.24 - కఴుమలం - మణ్ణిల్ నల్ల వణ్ణం (పణ్ - కొల్లి)
(తాననా తాననా తాననా తాననా - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
మణ్ణిల్ నల్ల వణ్ణం వాఴలాం, వైగలుం
ఎణ్ణిల్, నల్ల గదిక్కు యాదుమోర్ కుఱైవు-ఇలై;
కణ్ణిల్ నల్లహ్దు-ఉఱుం కఴుమల వళనగర్ప్
పెణ్ణిల్ నల్లాళొడుం పెరుందగై ఇరుందదే?
పాడల్ ఎణ్ : 2
పోదై-ఆర్ పొఱ్కిణ్ణత్తు అడిసిల్ పొల్లాదు ఎనత్
తాదైయార్ మునివుఱత్ తాన్ ఎనై ఆండవన్,
కాదై-ఆర్ కుఴైయినన్, కఴుమల వళనగర్ప్
పేదైయాళ్-అవళొడుం పెరుందగై ఇరుందదే?
పాడల్ ఎణ్ : 3
తొండు అణై సెయ్ తొఴిల్ తుయర్ అఱుత్తు ఉయ్యలాం;
వండు అణై కొండ్రైయాన్ మదుమలర్చ్ చడైముడిక్
కణ్ తుణై నెట్రియాన్ కఴుమల వళనగర్ప్
పెణ్ తుణైయాగ ఓర్ పెరుందగై ఇరుందదే?
పాడల్ ఎణ్ : 4
అయర్వు ఉళోం ఎండ్రు నీ అసైవు ఒఴి నెంజమే;
నియర్-వళై మున్-కైయాళ్ నేరిఴై అవళొడుం,
కయల్ వయల్ కుదిగొళుం కఴుమల వళనగర్ప్
పెయర్ పల తుదిసెయప్ పెరుందగై ఇరుందదే?
పాడల్ ఎణ్ : 5
అడైవు ఇలోం ఎండ్రు నీ అయర్వు ఒఴి నెంజమే;
విడై అమర్ కొడియినాన్; విణ్ణవర్ తొఴుదెఴుం,
కడై ఉయర్ మాడం ఆర్ కఴుమల వళనగర్ప్
పెడై-నడై అవళొడుం పెరుందగై ఇరుందదే?
పాడల్ ఎణ్ : 6
మట్రు-ఒరు పట్రు ఇలై నెంజమే; మఱై-పల
కట్ర నల్- వేదియర్ కఴుమల వళనగర్చ్
చిట్రిడైప్ పేర్-అల్గుల్ తిరుందిఴై అవళొడుం
పెట్రు ఎనై ఆళుడైప్ పెరుందగై ఇరుందదే?
పాడల్ ఎణ్ : 7
కుఱై వళైవదు మొఴి- కుఱైవు ఒఴి నెంజమే;
నిఱై-వళై మున్-కైయాళ్ నేరిఴై అవళొడుం
కఱై వళర్ పొఴిల్ అణి కఴుమల వళనగర్ప్
పిఱై వళర్ సడైముడిప్ పెరుందగై ఇరుందదే?
పాడల్ ఎణ్ : 8
అరక్కనార్ అరు-వరై ఎడుత్తవన్ అలఱిడ
నెరుక్కినార్ విరలినాల్; నీడు-యాఴ్ పాడవే
కరుక్కు-వాళ్ అరుళ్సెయ్దాన్, కఴుమల వళనగర్ప్
పెరుక్కు-నీర్ అవళొడుం పెరుందగై ఇరుందదే?
(నీడియాఴ్ = నీడు + యాఴ్; కుట్రియలిగరం)
పాడల్ ఎణ్ : 9
నెడియవన్ పిరమనుం నినైప్పరిదాయ్, అవర్
అడియొడు ముడి అఱియా అఴల్-ఉరువినన్;
కడి కమఴ్ పొఴిల్ అణి కఴుమల వళనగర్ప్
పిడి-నడై అవళొడుం పెరుందగై ఇరుందదే?
పాడల్ ఎణ్ : 10
తార్ ఉఱు తట్టు-ఉడైచ్ చమణర్ సాక్కియర్గళ్దం
ఆర్ ఉఱు సొఱ్-కళైందు, అడియిణై అడైందు ఉయ్మ్మిన్;
కార్ ఉఱు పొఴిల్ వళర్ కఴుమల వళనగర్ప్
పేర్-అఱత్తాళొడుం పెరుందగై ఇరుందదే?
పాడల్ ఎణ్ : 11
కరుం-తడం తేన్ మల్గు కఴుమల వళనగర్ప్
పెరుం-తడం కొంగైయోడు ఇరుంద ఎం పిరాన్-తనై
అరుం-తమిఴ్ ఞానసంబందన సెందమిఴ్
విరుంబువార్ అవర్గళ్ పోయ్ విణ్ణులగు ఆళ్వరే.
=============================