159) 9.24 - அல்லாய்ப் பகலாய் - allAyp pagalAy - (திருவிசைப்பா - thiruvisaippA)
திருவாலியமுதனார் - திருவிசைப்பா - 9.24 - அல்லாய்ப் பகலாய் - கோயில் - (பண் - இந்தளம்)
tiruvāliyamudanār - tiruvisaippā - 9.24 - allāyp, pagalāy - Chidambaram - (paṇ - indaḷam)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1roadx2bOrK0tyAyK8-WbY4_KXRs1288E/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/4hqAymEjiyg
Part-2: https://youtu.be/8SIQMLcL9xA
***
V. Subramanian
================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
திருவாலியமுதனார் - திருவிசைப்பா - பதிகம் 9.24 - கோயில் (தில்லை) - (பண் - இந்தளம்)
General Note:
திருவாலியமுதனார் (திரு-ஆலி-அமுதன்) - 9-ஆம் திருமுறையில் 4 பதிகங்கள் (9.22 - 9.25) இவரால் பாடப்பெற்றவை. இவர் பாடல்களில் உள்ள குறிப்புகளிலிருந்து: இவர் பெயர் ஆலியமுதன் (ஆலி என்ற தலத்தில் உள்ள திருமாலின் பெயரான அமுதன்). இவர் அந்தணர் குலத்தினர். இவர் ஊர் மயிலாடுதுறை.
திருவாலியமுதனார் - திருவிசைப்பா - பதிகம் 9.24 - கோயில் (தில்லை) - (பண் - இந்தளம்)
(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா காய் - meter)
பாடல் எண் : 1
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருள்என்று
பல்லா யிரம்பேர் பதஞ்ச லிகள் பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதிலின் றில்லைக் கருளித் தேவன் ஆடுமே.
Word separated:
"அல்லாய்ப், பகலாய், அருவாய், உருவாய், ஆரா அமுதமாய்க்,
கல்லால் நிழலாய்; கயிலை மலையாய்; காண அருள்" என்று
பல்லாயிரம்பேர் பதஞ்சலிகள் பரவ, வெளிப்பட்டுச்,
செல்-வாய் மதிலின் தில்லைக்கு அருளித் தேவன் ஆடுமே.
பாடல் எண் : 2
அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம் பலந்தன்னுட்
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே.
Word separated:
அன்ன-நடையார் அமுத-மொழியார் அவர்கள் பயில்-தில்லைத்,
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்-தன்னுள்,
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கு இட்டு,
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே.
பாடல் எண் : 3
இளமென் முலையார் எழில்மைந் தரொடும் ஏரார் அமளிமேல்
திளையும் மாடத் திருவார் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர மலைபோல் வலக்கை கவித்துநின்
றளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே.
Word separated:
இள-மென் முலையார் எழில்-மைந்தரொடும் ஏர் ஆர் அமளிமேல்
திளையும் மாடத் திரு ஆர் தில்லைச் சிற்றம்பலம்-தன்னுள்
வளர்-பொன்-மலையுள் வயிர-மலை போல் வலக்-கை கவித்து-நின்று
அளவு-இல் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே.
பாடல் எண் : 4
சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும் சாதி பலவுங்கொண்
டுந்தி யிழியும் நிவவின் கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுள் சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே.
Word separated:
சந்தும் அகிலும் தழைப்-பீலிகளும் சாதி பலவும் கொண்டு
உந்தி இழியும் நிவவின் கரைமேல், உயர்ந்த மதில்-தில்லைச்
சிந்திப்பரிய தெய்வப்-பதியுள், சிற்றம்பலம்-தன்னுள்,
நந்தி முழவம் கொட்ட, நட்டம் நாதன் ஆடுமே.
பாடல் எண் : 5
ஓமப் புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வாமத் தெழிலார் எடுத்த பாதம் மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே.
Word separated:
ஓமப்-புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோயத்
தீ-மெய்த்-தொழிலார் மறையோர் மல்கு சிற்றம்பலம்-தன்னுள்,
வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலைச்-சிலம்பு ஆர்க்கத்,
தீ-மெய்ச் சடைமேல் திங்கள் சூடித் தேவன் ஆடுமே.
பாடல் எண் : 6
குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை குவிந்த கரைகள் மேல்
திரைவந் துலவும் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண் டபத்து மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல்கை யேந்தி அழகன் ஆடுமே.
Word separated:
குரவம், கோங்கம், குளிர்-புன்னை, கைதை குவிந்த கரைகள்மேல்
திரை வந்து-உலவும் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள்,
வரை போல் மலிந்த மணி-மண்டபத்து, மறையோர் மகிழ்ந்து ஏத்த,
அரவம் ஆட அனல் கையேந்தி அழகன் ஆடுமே.
பாடல் எண் : 7
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேனார் பொழில்தில்லை
அத்தா அருளாய் அணிஅம் பலவா என்றென் றவர்ஏத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே.
Word separated:
சித்தர் தேவர் இயக்கர் முனிவர், "தேன் ஆர் பொழில்-தில்லை
அத்தா! அருளாய், அணி-அம்பலவா!" என்றென்று அவர் ஏத்த,
முத்தும் மணியும் நிரந்த தலத்துள், முளை-வெண்-மதி சூடிக்,
கொத்து ஆர் சடைகள் தாழ, நட்டம் குழகன் ஆடுமே.
பாடல் எண் : 8
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருளென்று
துதித்து மறையோர் வணங்குந் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணியெங்கும்
பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே.
Word separated:
"அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய்! அருள்" என்று
துதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம்பலம்-தன்னுள்,
உதித்த போழ்தில் இரவிக்-கதிர் போல் ஒளிர்-மா-மணி எங்கும்
பதித்த தலத்துப், பவள-மேனிப் பரமன் ஆடுமே.
பாடல் எண் : 9
மாலோ டயனும் அமரர் பதியும் வந்து வணங்கிநின்
றால கண்டா அரனே யருளாய் என்றென் றவரேத்தச்
சேலா டும்வயல் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள்
பாலா டும்முடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே.
Word separated:
மாலோடு அயனும் அமரர்-பதியும் வந்து வணங்கி-நின்று,
"ஆல கண்டா! அரனே! அருளாய்" என்றென்று அவர் ஏத்தச்,
சேல் ஆடும் வயல் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள்,
பால் ஆடும் முடிச்-சடைகள் தாழப், பரமன் ஆடுமே.
பாடல் எண் : 10
நெடிய சமணும் மறைசாக் கியரும் நிரம்பாப் பல்கோடி *
செடியுந் தவத்தோர் அடையாத் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
அடிக ளவரை ஆரூர் நம்பி யவர்கள் இசைபாடக்
கொடியும் விடையும் உடையகோலக் குழகன் ஆடுமே.
(* Note: Dharmapuram edition shows - பல்கோடிச் - but I think that "ச்" should not be there)
Word separated:
நெடிய சமணும், மறை-சாக்கியரும், நிரம்பாப் பல்கோடி
செடி உந்து அவத்தோர் அடையாத் தில்லைச் சிற்றம்பலம்-தன்னுள்,
அடிகள் அவரை ஆரூர் நம்பி-அவர்கள் இசை பாடக்,
கொடியும் விடையும் உடைய கோலக் குழகன் ஆடுமே.
பாடல் எண் : 11
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு சிற்றம் பலத்தானைத்
தூநான் மறையான் அமுத வாலி சொன்ன தமிழ்மாலைப்
பானேர் பாடல் பத்தும் பாடப் பாவம் நாசமே.
Word separated:
வானோர் பணிய, மண்ணோர் ஏத்த, மன்னி நடம்-ஆடும்
தேன் ஆர் பொழில் சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத்தானைத்
தூ-நான்மறையான் அமுத-வாலி சொன்ன தமிழ்-மாலைப்
பால் நேர் பாடல் பத்தும் பாடப் பாவம் நாசமே.
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruvāliyamudanār - tiruvisaippā - padigam 9.24 - kōyil (tillai) - (paṇ - indaḷam)
(aṟusīr viruttam - mā mā mā mā mā kāy - meter)
pāḍal eṇ : 1
"allāyp, pagalāy, aruvāy, uruvāy, ārā amudamāyk,
kallāl niḻalāy; kayilai malaiyāy; kāṇa aruḷ" eṇḍru
pallāyirambēr padañjaligaḷ parava, veḷippaṭṭuc,
cel-vāy madilin tillaikku aruḷit tēvan āḍumē.
pāḍal eṇ : 2
anna-naḍaiyār amuda-moḻiyār avargaḷ payil-tillait,
tennan tamiḻum isaiyum kalanda siṭrambalam-tannuḷ,
ponnum maṇiyum niranda talattup pulittōl piyaṟku iṭṭu,
minnin iḍaiyāḷ umaiyāḷ kāṇa vigirdan āḍumē.
pāḍal eṇ : 3
iḷa-men mulaiyār eḻil-maindaroḍum ēr ār amaḷimēl
tiḷaiyum māḍat tiru ār tillaic ciṭrambalam-tannuḷ
vaḷar-pon-malaiyuḷ vayira-malai pōl valak-kai kavittu-niṇḍru
aḷavu-il perumai amarar pōṭra aḻagan āḍumē.
pāḍal eṇ : 4
sandum agilum taḻaip-pīligaḷum sādi palavum koṇḍu
undi iḻiyum nivavin karaimēl, uyarnda madil-tillaic
cindippariya deyvap-padiyuḷ, siṭrambalam-tannuḷ,
nandi muḻavam koṭṭa, naṭṭam nādan āḍumē.
pāḍal eṇ : 5
ōmap-pugaiyum agilin pugaiyum uyarndu mugil tōyat
tī-meyt-toḻilār maṟaiyōr malgu siṭrambalam-tannuḷ,
vāmattu eḻil ār eḍutta pādam maḻalaic-cilambu ārkkat,
tī-meyc caḍaimēl tiṅgaḷ sūḍit tēvan āḍumē.
pāḍal eṇ : 6
kuravam, kōṅgam, kuḷir-punnai, kaidai kuvinda karaigaḷmēl
tirai vandu-ulavum tillai malgu siṭrambalam-tannuḷ,
varai pōl malinda maṇi-maṇḍabattu, maṟaiyōr magiḻndu ētta,
aravam āḍa anal kaiyēndi aḻagan āḍumē.
pāḍal eṇ : 7
sittar dēvar iyakkar munivar, "tēn ār poḻil-tillai
attā! aruḷāy, aṇi-ambalavā!" eṇḍreṇḍru avar ētta,
muttum maṇiyum niranda talattuḷ, muḷai-veṇ-madi sūḍik,
kottu ār saḍaigaḷ tāḻa, naṭṭam kuḻagan āḍumē.
pāḍal eṇ : 8
"adirtta arakkan neriya viralāl aḍarttāy! aruḷ" eṇḍru
tudittu maṟaiyōr vaṇaṅgum tillaic ciṭrambalam-tannuḷ,
uditta pōḻdil iravik-kadir pōl oḷir-mā-maṇi eṅgum
paditta talattup, pavaḷa-mēnip paraman āḍumē.
pāḍal eṇ : 9
mālōḍu ayanum amarar-padiyum vandu vaṇaṅgi-niṇḍru,
"āla kaṇḍā! aranē! aruḷāy" eṇḍreṇḍru avar ēttac,
cēl āḍum vayal tillai malgu siṭrambalam-tannuḷ,
pāl āḍum muḍic-caḍaigaḷ tāḻap, paraman āḍumē.
pāḍal eṇ : 10
neḍiya samaṇum, maṟai-sākkiyarum, nirambāp palgōḍi
ceḍi undu avattōr aḍaiyāt tillaic ciṭrambalam-tannuḷ,
aḍigaḷ avarai ārūr nambi-avargaḷ isai pāḍak,
koḍiyum viḍaiyum uḍaiya kōlak kuḻagan āḍumē.
pāḍal eṇ : 11
vānōr paṇiya, maṇṇōr ētta, manni naḍam-āḍum
tēn ār poḻil sūḻ tillai malgu siṭrambalattānait
tū-nānmaṟaiyān amuda-vāli sonna tamiḻ-mālaip
pāl nēr pāḍal pattum pāḍap pāvam nāsamē.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुवालियमुदनार् - तिरुविसैप्पा - पदिगम् 9.24 - कोयिल् (तिल्लै) - (पण् - इन्दळम्)
(अऱुसीर् विरुत्तम् - मा मा मा मा मा काय् - meter)
पाडल् ऎण् : 1
"अल्लाय्प्, पगलाय्, अरुवाय्, उरुवाय्, आरा अमुदमाय्क्,
कल्लाल् निऴलाय्; कयिलै मलैयाय्; काण अरुळ्" ऎण्ड्रु
पल्लायिरम्बेर् पदञ्जलिगळ् परव, वॆळिप्पट्टुच्,
चॆल्-वाय् मदिलिन् तिल्लैक्कु अरुळित् तेवन् आडुमे.
पाडल् ऎण् : 2
अन्न-नडैयार् अमुद-मॊऴियार् अवर्गळ् पयिल्-तिल्लैत्,
तॆन्नन् तमिऴुम् इसैयुम् कलन्द सिट्रम्बलम्-तन्नुळ्,
पॊन्नुम् मणियुम् निरन्द तलत्तुप् पुलित्तोल् पियऱ्कु इट्टु,
मिन्निन् इडैयाळ् उमैयाळ् काण विगिर्दन् आडुमे.
पाडल् ऎण् : 3
इळ-मॆन् मुलैयार् ऎऴिल्-मैन्दरॊडुम् एर् आर् अमळिमेल्
तिळैयुम् माडत् तिरु आर् तिल्लैच् चिट्रम्बलम्-तन्नुळ्
वळर्-पॊन्-मलैयुळ् वयिर-मलै पोल् वलक्-कै कवित्तु-निण्ड्रु
अळवु-इल् पॆरुमै अमरर् पोट्र अऴगन् आडुमे.
पाडल् ऎण् : 4
सन्दुम् अगिलुम् तऴैप्-पीलिगळुम् सादि पलवुम् कॊण्डु
उन्दि इऴियुम् निवविन् करैमेल्, उयर्न्द मदिल्-तिल्लैच्
चिन्दिप्परिय दॆय्वप्-पदियुळ्, सिट्रम्बलम्-तन्नुळ्,
नन्दि मुऴवम् कॊट्ट, नट्टम् नादन् आडुमे.
पाडल् ऎण् : 5
ओमप्-पुगैयुम् अगिलिन् पुगैयुम् उयर्न्दु मुगिल् तोयत्
ती-मॆय्त्-तॊऴिलार् मऱैयोर् मल्गु सिट्रम्बलम्-तन्नुळ्,
वामत्तु ऎऴिल् आर् ऎडुत्त पादम् मऴलैच्-चिलम्बु आर्क्कत्,
ती-मॆय्च् चडैमेल् तिङ्गळ् सूडित् तेवन् आडुमे.
पाडल् ऎण् : 6
कुरवम्, कोङ्गम्, कुळिर्-पुन्नै, कैदै कुविन्द करैगळ्मेल्
तिरै वन्दु-उलवुम् तिल्लै मल्गु सिट्रम्बलम्-तन्नुळ्,
वरै पोल् मलिन्द मणि-मण्डबत्तु, मऱैयोर् मगिऴ्न्दु एत्त,
अरवम् आड अनल् कैयेन्दि अऴगन् आडुमे.
पाडल् ऎण् : 7
सित्तर् देवर् इयक्कर् मुनिवर्, "तेन् आर् पॊऴिल्-तिल्लै
अत्ता! अरुळाय्, अणि-अम्बलवा!" ऎण्ड्रॆण्ड्रु अवर् एत्त,
मुत्तुम् मणियुम् निरन्द तलत्तुळ्, मुळै-वॆण्-मदि सूडिक्,
कॊत्तु आर् सडैगळ् ताऴ, नट्टम् कुऴगन् आडुमे.
पाडल् ऎण् : 8
"अदिर्त्त अरक्कन् नॆरिय विरलाल् अडर्त्ताय्! अरुळ्" ऎण्ड्रु
तुदित्तु मऱैयोर् वणङ्गुम् तिल्लैच् चिट्रम्बलम्-तन्नुळ्,
उदित्त पोऴ्दिल् इरविक्-कदिर् पोल् ऒळिर्-मा-मणि ऎङ्गुम्
पदित्त तलत्तुप्, पवळ-मेनिप् परमन् आडुमे.
पाडल् ऎण् : 9
मालोडु अयनुम् अमरर्-पदियुम् वन्दु वणङ्गि-निण्ड्रु,
"आल कण्डा! अरने! अरुळाय्" ऎण्ड्रॆण्ड्रु अवर् एत्तच्,
चेल् आडुम् वयल् तिल्लै मल्गु सिट्रम्बलम्-तन्नुळ्,
पाल् आडुम् मुडिच्-चडैगळ् ताऴप्, परमन् आडुमे.
पाडल् ऎण् : 10
नॆडिय समणुम्, मऱै-साक्कियरुम्, निरम्बाप् पल्गोडि
चॆडि उन्दु अवत्तोर् अडैयात् तिल्लैच् चिट्रम्बलम्-तन्नुळ्,
अडिगळ् अवरै आरूर् नम्बि-अवर्गळ् इसै पाडक्,
कॊडियुम् विडैयुम् उडैय कोलक् कुऴगन् आडुमे.
पाडल् ऎण् : 11
वानोर् पणिय, मण्णोर् एत्त, मन्नि नडम्-आडुम्
तेन् आर् पॊऴिल् सूऴ् तिल्लै मल्गु सिट्रम्बलत्तानैत्
तू-नान्मऱैयान् अमुद-वालि सॊन्न तमिऴ्-मालैप्
पाल् नेर् पाडल् पत्तुम् पाडप् पावम् नासमे.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరువాలియముదనార్ - తిరువిసైప్పా - పదిగం 9.24 - కోయిల్ (తిల్లై) - (పణ్ - ఇందళం)
(అఱుసీర్ విరుత్తం - మా మా మా మా మా కాయ్ - meter)
పాడల్ ఎణ్ : 1
"అల్లాయ్ప్, పగలాయ్, అరువాయ్, ఉరువాయ్, ఆరా అముదమాయ్క్,
కల్లాల్ నిఴలాయ్; కయిలై మలైయాయ్; కాణ అరుళ్" ఎండ్రు
పల్లాయిరంబేర్ పదంజలిగళ్ పరవ, వెళిప్పట్టుచ్,
చెల్-వాయ్ మదిలిన్ తిల్లైక్కు అరుళిత్ తేవన్ ఆడుమే.
పాడల్ ఎణ్ : 2
అన్న-నడైయార్ అముద-మొఴియార్ అవర్గళ్ పయిల్-తిల్లైత్,
తెన్నన్ తమిఴుం ఇసైయుం కలంద సిట్రంబలం-తన్నుళ్,
పొన్నుం మణియుం నిరంద తలత్తుప్ పులిత్తోల్ పియఱ్కు ఇట్టు,
మిన్నిన్ ఇడైయాళ్ ఉమైయాళ్ కాణ విగిర్దన్ ఆడుమే.
పాడల్ ఎణ్ : 3
ఇళ-మెన్ ములైయార్ ఎఴిల్-మైందరొడుం ఏర్ ఆర్ అమళిమేల్
తిళైయుం మాడత్ తిరు ఆర్ తిల్లైచ్ చిట్రంబలం-తన్నుళ్
వళర్-పొన్-మలైయుళ్ వయిర-మలై పోల్ వలక్-కై కవిత్తు-నిండ్రు
అళవు-ఇల్ పెరుమై అమరర్ పోట్ర అఴగన్ ఆడుమే.
పాడల్ ఎణ్ : 4
సందుం అగిలుం తఴైప్-పీలిగళుం సాది పలవుం కొండు
ఉంది ఇఴియుం నివవిన్ కరైమేల్, ఉయర్న్ద మదిల్-తిల్లైచ్
చిందిప్పరియ దెయ్వప్-పదియుళ్, సిట్రంబలం-తన్నుళ్,
నంది ముఴవం కొట్ట, నట్టం నాదన్ ఆడుమే.
పాడల్ ఎణ్ : 5
ఓమప్-పుగైయుం అగిలిన్ పుగైయుం ఉయర్న్దు ముగిల్ తోయత్
తీ-మెయ్త్-తొఴిలార్ మఱైయోర్ మల్గు సిట్రంబలం-తన్నుళ్,
వామత్తు ఎఴిల్ ఆర్ ఎడుత్త పాదం మఴలైచ్-చిలంబు ఆర్క్కత్,
తీ-మెయ్చ్ చడైమేల్ తింగళ్ సూడిత్ తేవన్ ఆడుమే.
పాడల్ ఎణ్ : 6
కురవం, కోంగం, కుళిర్-పున్నై, కైదై కువింద కరైగళ్మేల్
తిరై వందు-ఉలవుం తిల్లై మల్గు సిట్రంబలం-తన్నుళ్,
వరై పోల్ మలింద మణి-మండబత్తు, మఱైయోర్ మగిఴ్న్దు ఏత్త,
అరవం ఆడ అనల్ కైయేంది అఴగన్ ఆడుమే.
పాడల్ ఎణ్ : 7
సిత్తర్ దేవర్ ఇయక్కర్ మునివర్, "తేన్ ఆర్ పొఴిల్-తిల్లై
అత్తా! అరుళాయ్, అణి-అంబలవా!" ఎండ్రెండ్రు అవర్ ఏత్త,
ముత్తుం మణియుం నిరంద తలత్తుళ్, ముళై-వెణ్-మది సూడిక్,
కొత్తు ఆర్ సడైగళ్ తాఴ, నట్టం కుఴగన్ ఆడుమే.
పాడల్ ఎణ్ : 8
"అదిర్త్త అరక్కన్ నెరియ విరలాల్ అడర్త్తాయ్! అరుళ్" ఎండ్రు
తుదిత్తు మఱైయోర్ వణంగుం తిల్లైచ్ చిట్రంబలం-తన్నుళ్,
ఉదిత్త పోఴ్దిల్ ఇరవిక్-కదిర్ పోల్ ఒళిర్-మా-మణి ఎంగుం
పదిత్త తలత్తుప్, పవళ-మేనిప్ పరమన్ ఆడుమే.
పాడల్ ఎణ్ : 9
మాలోడు అయనుం అమరర్-పదియుం వందు వణంగి-నిండ్రు,
"ఆల కండా! అరనే! అరుళాయ్" ఎండ్రెండ్రు అవర్ ఏత్తచ్,
చేల్ ఆడుం వయల్ తిల్లై మల్గు సిట్రంబలం-తన్నుళ్,
పాల్ ఆడుం ముడిచ్-చడైగళ్ తాఴప్, పరమన్ ఆడుమే.
పాడల్ ఎణ్ : 10
నెడియ సమణుం, మఱై-సాక్కియరుం, నిరంబాప్ పల్గోడి
చెడి ఉందు అవత్తోర్ అడైయాత్ తిల్లైచ్ చిట్రంబలం-తన్నుళ్,
అడిగళ్ అవరై ఆరూర్ నంబి-అవర్గళ్ ఇసై పాడక్,
కొడియుం విడైయుం ఉడైయ కోలక్ కుఴగన్ ఆడుమే.
పాడల్ ఎణ్ : 11
వానోర్ పణియ, మణ్ణోర్ ఏత్త, మన్ని నడం-ఆడుం
తేన్ ఆర్ పొఴిల్ సూఴ్ తిల్లై మల్గు సిట్రంబలత్తానైత్
తూ-నాన్మఱైయాన్ అముద-వాలి సొన్న తమిఴ్-మాలైప్
పాల్ నేర్ పాడల్ పత్తుం పాడప్ పావం నాసమే.
=============================