166) 7.29 - இத்தனை ஆமாற்றை - iththanai AmAtRai
சுந்தரர் தேவாரம் - 7.29 - இத்தனை ஆமாற்றை - திருக்குருகாவூர் வெள்ளடை - (பண் - நட்டராகம்)
sundarar tēvāram - 7.29 - ittanai āmāṭrai - tirukkurugāvūr veḷḷaḍai - (paṇ - naṭṭarāgam)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1bnrq66ZiyC3JtiDN-OWyfYQllqzYYqkq/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/AsdtXM5xC84
Part-2: https://youtu.be/9TWYHwba-Xs
Part-3: https://youtu.be/e9-RDfuWnQQ
Part-4:
***
English
translation (meaning) : V.M.Subramanya Ayyar -
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS7_029.HTM
V. Subramanian
================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
சுந்தரர் தேவாரம் - 7.29 - இத்தனை ஆமாற்றை - திருக்குருகாவூர் வெள்ளடை - (பண் - நட்டராகம்)
திருக்குருகாவூர் வெள்ளடை : ஊரின் பெயர் குருகாவூர். கோயிலின் பெயர் வெள்ளடை. சீகாழியின் கிழக்கே 6 கிமீ தூரத்தில் உள்ளது.
பதிக வரலாறு : சுந்தரர், திருக்கோலக்கா, சீகாழி முதலிய தலங்களை வணங்கித் திருக்குருகாவூர் தரிசிக்கச் சென்றார். அப்படிப் பகல்நேரத்தில் செல்லும்-பொழுது அவருக்கு பசியும் தாகமும் ஏற்பட்டது. அவரது பசியைத் தீர்க்கப் பெருமான் வழியில் ஒரு பந்தல் அமைத்துப் பொதிசோறும் தண்ணீரும் வைத்துக்கொண்டு ஒரு வேதியர் வடிவில் காத்திருந்தார். அடியார்களோடு சுந்தரர் வந்ததும், அந்த அந்தணர் அவற்றை அவர்களுக்கு அளித்தார். உண்டபின் சிறிதுநேரம் எல்லாரும் உறங்கினர். உறங்கி எழுந்த சுந்தரர், அங்கே பந்தலும் அந்தணரும் இல்லாமையைக் கண்டு, வந்தவர் சிவபெருமான் என்று உணர்ந்து, ஈசன் அருளை வியந்து பாடியது இந்தப் பதிகம். (திருமுறை 12 - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் 155-163).
My notes:
இந்தப் பதிகம், ஈசன் உணவு தந்த அந்த இடத்தில் பாட ஆரம்பித்துத், திருக்குருகாவூர் போகும் வழியில் நடந்துசெல்லும்பொழுது பாடியது.
* இந்தப் பதிகத்தில் - சிவபெருமானது குணங்களில் சுந்தரருக்கு அருளியது, அடியார்களுக்கு அருள்வது, பலிதேர்தல், சுடுகாட்டில் கூத்து ஆடுதல், திருநீறு பூசுதல், தோலாடை தரித்தல் - இவையே கூறப்பெற்றுள்ளன;
உமாதேவி, இடபம், நீலகண்டம், சடை, திங்கள், கங்கை, பாம்பு, மழு, சூலம், நெற்றிக்கண், முப்புரம் எரித்தல், காமனை எரித்தல், காலனை உதைத்தல், முதலிய பலவும் கூறப்பெற்றில. தேவாரப் பதிகங்களில் இத்தகைய பதிகங்கள் சிலவே இருக்கக்கூடும் என்று தோன்றுகின்றது.
--------
Padhigam background - Periya Puranam- 12.29.155 - 163
Sundarar worships Thirukolakka & Sirkazhi and proceeds to Thirukurugavur
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 155
மூவாத முழுமுதலார் முதற்கோலக் காவகன்று
தாவாத புகழ்ச்சண்பை வலங்கொண்டு தாழ்ந்திறைஞ்சி
நாவார்முத் தமிழ்விரகர் நற்பதங்கள் பரவிப்போய்
மேவார்தம் புரஞ்செற்றார் குருகாவூர் மேவுவார்,
Sundarar feels thirsty and hungry
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 156
உண்ணீரின் வேட்கையுட னுறுபசியான் மிகவருந்திப்
பண்ணீர்மை மொழிப்பரவை யார்கொழுநர் வரும்பாங்கர்க்
கண்ணீடு திருநுதலார் காதலவர் கருத்தறிந்து
தண்ணீரும் பொதிசோறுங் கொண்டுவழிச் சார்கின்றார்.
Siva (in the disguise of a brahmin) sets up a shelter on the way and waits with water and food
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 157
வேனிலுறு வெயில்வெம்மை தணிப்பதற்கு விரைக்குளிர்மென்
பானன்மலர்த் தடம்போலும் பந்தரொரு பாலமைத்தே
ஆனமறை வேதியரா யருள்வேடங் கொண்டிருந்தார்
மானமருந் திருக்கரத்தார் வன்றொண்டர் தமைப்பார்த்து.
Sundarar enters that shelter and sits down
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 158
குருகாவூ ரமர்ந்தருளுங் குழகர்வழி பார்த்திருப்பத்
திருவாரூர்த் தம்பிரான் றோழர்திருத் தொண்டருடன்
வருவாரப் பந்தரிடைப் புகுந்துதிரு மறையவர்பாற்
பெருகார்வஞ் செலவிருந்தார் "சிவாயநம" வெனப்பேசி.
The brahmin (Siva) offers food and water to Sundarar
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 159
ஆலநிழற் கீழிருந்தா ரவர்தம்மை யெதிர்நோக்கிச்
"சாலமிகப் பசித்தீரிப் பொதிசோறு தருகின்றேன்;
காலமினித் தாழாமே கைக்கொண்டிங் கினிதருந்தி
ஏலநறுங் குளி்ர்தண்ணீர் குடித்திளைப்புத் தீரு"மென,
Sundarar accepts the food and eats with his entourage and other wayfarers
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 160
வன்றொண்ட ரதுகேட்டு "மறைமுனிவர் தரும்பொதிசோ
றின்றுநமக் கெதிர்விலக்க லாகா"தென் றிசைந்தருளிப்
பொன்றயங்கு நூன்மார்பர் தரும்பொதிசோ றதுவாங்கிச்
* சென்றதிருத் தொண்டருடன் றிருவமுது செய்தருளி,
(* Dharmapuram edition shows: சென்றுதிருத்)
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 161
எண்ணிறந்த பரிசனங்க ளெல்லாரு மினிதருந்தப்
பண்ணியபின் னம்மருங்குப் பசித்தணைந்தார் களுமருந்த
உண்ணிறைந்த வாரமுதா யொருகாலு முலவாதே
புண்ணியனார் தாமளித்த பொதிசோறு பொலிந்ததால்.
Sundarar and others take a nap & Siva and the shelter disappear
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 162
சங்கரனார் திருவருள்போற் றண்ணீரின் சுவையார்ந்து
பொங்கிவரு மாதரவா லவர்நாமம் புகழ்ந்தேத்தி
அங்கயர்வாற் பள்ளியமர்ந் தருகணைந்தார் களுந்துயிலக்
கங்கைசடைக் கரந்தாரப் பந்தரொடுந் தாங்கரந்தார்.
Sundarar wakes up and realizes Siva's grace & sings this padhigam
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 163
சித்தநிலை திரியாத திருநாவ லூர்மன்னர்
அத்தகுதி யினிற்பள்ளி யுணர்ந்தவரைக் காணாமை
"இத்தனை * யாமாற்றை யறிந்திலே" னெனவெடுத்து
மெய்த்தகைய திருப்பதிகம் விளம்பியே சென்றடைந்தார்.
(* CKS version: இத்தனை யாமாற்ற மறிந்திலே)
சுந்தரர் தேவாரம் - 7.29 - இத்தனை ஆமாற்றை - திருக்குருகாவூர் வெள்ளடை - (பண் - நட்டராகம்)
(கலிவிருத்தம் - விளம் காய் விளம் காய் - meter)
இத்தனை யாமாற்றை யறிந்திலேன் எம்பெருமான்
பித்தனே யென்றுன்னைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை மாணிக்க முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
வெப்பொடு பிணியெல்லாந் தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
ஒப்புடை யொளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி யழகாய அணிநடை மடவன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
வரும்பழி வாராமே தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை யடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
போந்தனை தரியாமே நமன்றமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை யாட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார்க் கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
வளங்கனி பொழின்மல்கு வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர் வெள்ளடை யுறைவானை
இளங்கிளை யாரூரன் வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே.
=============================
Word separated version:
Padhigam background - Periya Puranam- 12.29.155 - 163
Sundarar worships Thirukolakka & Sirkazhi and proceeds to Thirukurugavur
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 155
மூவாத முழுமுதலார் முதற்-கோலக்கா அகன்று,
தாவாத புகழ்ச்-சண்பை வலங்கொண்டு தாழ்ந்து இறைஞ்சி,
நா-ஆர்-முத்தமிழ்-விரகர் நற்பதங்கள் பரவிப்-போய்,
மேவார்தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார்,
Sundarar feels thirsty and hungry
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 156
உண்-நீரின் வேட்கையுடன் உறு-பசியால் மிக-வருந்திப்,
பண்-நீர்மை மொழிப்-பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க்,
கண்-நீடு திருநுதலார் காதலவர் கருத்து அறிந்து,
தண்ணீரும் பொதிசோறும் கொண்டு வழிச்-சார்கின்றார்.
Siva (in the disguise of a brahmin) sets up a shelter on the way and waits with water and food
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 157
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரைக்-குளிர்-மென்
பானல்-மலர்த்-தடம் போலும் பந்தர் ஒரு-பால் அமைத்தே,
ஆன மறை-வேதியராய் அருள்-வேடம் கொண்டு இருந்தார்,
மான் அமரும் திருக்-கரத்தார் வன்-தொண்டர்தமைப் பார்த்து.
Sundarar enters that shelter and sits down
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 158
குருகாவூர் அமர்ந்து-அருளும் குழகர் வழிபார்த்து-இருப்பத்,
திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத்-தொண்டருடன்
வருவார் அப்-பந்தரிடைப் புகுந்து, திரு-மறையவர்பால்
பெருகு-ஆர்வம் செல, இருந்தார் "சிவாயநம" எனப் பேசி.
The brahmin (Siva) offers food and water to Sundarar
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 159
ஆலநிழற்கீழ் இருந்தார் அவர்தம்மை எதிர் நோக்கிச்,
"சால-மிகப் பசித்தீர்; இப்-பொதிசோறு தருகின்றேன்;
காலம் இனித் தாழாமே, கைக்கொண்டு, இங்கு இனிது-அருந்தி,
ஏல-நறும்-குளி்ர்-தண்ணீர் குடித்து இளைப்புத் தீரும்" என,
Sundarar accepts the food and eats with his entourage and other wayfarers
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 160
வன்-தொண்டர் அது கேட்டு, "மறைமுனிவர் தரும் பொதிசோறு
இன்று நமக்கு எதிர்விலக்கல் ஆகாது" என்று இசைந்து-அருளிப்,
பொன் தயங்கு நூல்-மார்பர் தரும் பொதிசோறது வாங்கிச்,
* சென்ற திருத்-தொண்டருடன் திருவமுது செய்து-அருளி,
(* Dharmapuram edition shows: சென்று)
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 161
எண்-இறந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது-அருந்தப்
பண்ணிய பின், அம்-மருங்குப் பசித்து அணைந்தார்களும் அருந்த,
உள்-நிறைந்த ஆரமுதாய் ஒருகாலும் உலவாதே,
புண்ணியனார் தாம் அளித்த பொதிசோறு பொலிந்ததால்.
Sundarar and others take a nap & Siva and the shelter disappear
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 162
சங்கரனார் திருவருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து,
பொங்கி-வரும் ஆதரவால் அவர்-நாமம் புகழ்ந்து-ஏத்தி,
அங்கு அயர்வால் பள்ளியமர்ந்து, அருகு அணைந்தார்களும் துயிலக்,
கங்கை சடைக்-கரந்தார் அப்-பந்தரொடும் தாம் கரந்தார்.
Sundarar wakes up and realizes Siva's grace & sings this padhigam
# பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - 163
சித்த(ம்)நிலை திரியாத திருநாவலூர்-மன்னர்
அத்-தகுதியினில் பள்ளியுணர்ந்து, அவரைக் காணாமை
"இத்தனை * ஆமாற்றை அறிந்திலேன்" என எடுத்து,
மெய்த்-தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று-அடைந்தார்.
(* CKS version: இத்தனை ஆ(ம்)மாற்றம் அறிந்திலேன்)
சுந்தரர் தேவாரம் - 7.29 - இத்தனை ஆமாற்றை - திருக்குருகாவூர் வெள்ளடை - (பண் - நட்டராகம்)
(கலிவிருத்தம் - விளம் காய் விளம் காய் - meter)
இத்தனை ஆமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்;
"பித்தனே" என்று உன்னைப் பேசுவார் பிறரெல்லாம்;
முத்தினை மணிதன்னை மாணிக்க(ம்) முளைத்து-எழுந்த
வித்தனே; குருகாவூர் வெள்ளடை நீ-அன்றே.
ஆவியைப் போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்டாய்;
வாவியில் கயல் பாயக், குளத்திடை மடைதோறும்
காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ-அன்றே.
பாடுவார் பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்;
ஓடு நன்கலனாக உண்பலிக்கு உழல்வானே;
காடு நல்-இடமாகக் கடுவிருள் நடம் ஆடும்
வேடனே; குருகாவூர் வெள்ளடை நீ-அன்றே.
வெப்பொடு பிணி-எல்லாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டாய்;
ஒப்புடை ஒளி-நீலம் ஓங்கிய மலர்ப்-பொய்கை
அப்படி அழகாய அணி-நடை மட-அன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ-அன்றே.
வரும் பழி வாராமே தவிர்த்து என்னை ஆட்கொண்டாய்;
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ண-வெண்ணீற்றானே;
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்; பழத்தினில் சுவை ஒப்பாய்;
கண்ணிடை மணி ஒப்பாய்; கடுவிருட்-சுடர் ஒப்பாய்;
மண்ணிடை அடியார்கள் மனத்து இடர் வாராமே,
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீ-அன்றே.
போந்தனை தரியாமே; நமன்-தமர் புகுந்து என்னை
நோந்தனை செய்தாலும் நுன்-அலது அறியேன் நான்;
சாந்தனை வருமேலும் தவிர்த்து என்னை ஆட்கொண்ட
வேந்தனே; குருகாவூர் வெள்ளடை நீ-அன்றே.
மலக்கு-இல் நின்-அடியார்கள் மனத்திடை மால் தீர்ப்பாய்;
சலச்-சல-மிடுக்கு உடைய தருமனார்-தமர் என்னைக்
கலக்குவான் வந்தாலும் கடுந்துயர் வாராமே
விலக்குவாய்; குருகாவூர் வெள்ளடை நீ-அன்றே.
படுவிப்பாய் உனக்கே ஆள், பலரையும் பணியாமே;
தொடுவிப்பாய் துகிலொடு பொன்; தோல் உடுத்து உழல்வானே;
கெடுவிப்பாய் அல்லாதார்க்; கேடு இலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய்; குருகாவூர் வெள்ளடை நீ-அன்றே.
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகாய
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன்
உளம் குளிர் தமிழ்மாலை பத்தர்கட்கு உரை ஆமே.
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Padhigam background - Periya Puranam- 12.29.155 - 163
Sundarar worships Thirukolakka & Sirkazhi and proceeds to Thirukurugavur
# periya purāṇam - ēyargōn kalikkāmar purāṇam - 155
mūvāda muḻumudalār mudaṟ-kōlakkā agaṇḍru,
tāvāda pugaḻc-caṇbai valaṅgoṇḍu tāḻndu iṟaiñji,
nā-ār-muttamiḻ-viragar naṟpadaṅgaḷ paravip-pōy,
mēvārdam puram seṭrār kurugāvūr mēvuvār,
Sundarar feels thirsty and hungry
# periya purāṇam - ēyargōn kalikkāmar purāṇam - 156
uṇ-nīrin vēṭkaiyuḍan uṟu-pasiyāl miga-varundip,
paṇ-nīrmai moḻip-paravaiyār koḻunar varum pāṅgark,
kaṇ-nīḍu tirunudalār kādalavar karuttu aṟindu,
taṇṇīrum podisōṟum koṇḍu vaḻic-cārgiṇḍrār.
Siva (in the disguise of a brahmin) sets up a shelter on the way and waits with water and food
# periya purāṇam - ēyargōn kalikkāmar purāṇam - 157
vēnil uṟu veyil vemmai taṇippadaṟku viraik-kuḷir-men
pānal-malart-taḍam pōlum pandar oru-pāl amaittē,
āna maṟai-vēdiyarāy aruḷ-vēḍam koṇḍu irundār,
mān amarum tiruk-karattār van-toṇḍardamaip pārttu.
Sundarar enters that shelter and sits down
# periya purāṇam - ēyargōn kalikkāmar purāṇam - 158
kurugāvūr amarndu-aruḷum kuḻagar vaḻibārttu-iruppat,
tiruvārūrt tambirān tōḻar tirut-toṇḍaruḍan
varuvār ap-pandariḍaip pugundu, tiru-maṟaiyavarbāl
perugu-ārvam sela, irundār "sivāyanama" enap pēsi.
The brahmin (Siva) offers food and water to Sundarar
# periya purāṇam - ēyargōn kalikkāmar purāṇam - 159
ālaniḻaṟkīḻ irundār avardammai edir nōkkic,
"cāla-migap pasittīr; ip-podisōṟu tarugiṇḍrēn;
kālam init tāḻāmē, kaikkoṇḍu, iṅgu inidu-arundi,
ēla-naṟum-kuḷir-taṇṇīr kuḍittu iḷaipput tīrum" ena,
Sundarar accepts the food and eats with his entourage and other wayfarers
# periya purāṇam - ēyargōn kalikkāmar purāṇam - 160
van-toṇḍar adu kēṭṭu, "maṟaimunivar tarum podisōṟu
iṇḍru namakku edirvilakkal āgādu" eṇḍru isaindu-aruḷip,
pon tayaṅgu nūl-mārbar tarum podisōṟadu vāṅgic,
* ceṇḍra tirut-toṇḍaruḍan tiruvamudu seydu-aruḷi,
(* Dharmapuram edition shows: seṇḍru)
# periya purāṇam - ēyargōn kalikkāmar purāṇam - 161
eṇ-iṟanda parisanaṅgaḷ ellārum inidu-arundap
paṇṇiya pin, am-maruṅgup pasittu aṇaindārgaḷum arunda,
uḷ-niṟainda āramudāy orugālum ulavādē,
puṇṇiyanār tām aḷitta podisōṟu polindadāl.
Sundarar and others take a nap & Siva and the shelter disappear
# periya purāṇam - ēyargōn kalikkāmar purāṇam - 162
saṅgaranār tiruvaruḷ pōl taṇṇīrin suvai ārndu,
poṅgi-varum ādaravāl avar-nāmam pugaḻndu-ētti,
aṅgu ayarvāl paḷḷiyamarndu, arugu aṇaindārgaḷum tuyilak,
kaṅgai saḍaik-karandār ap-pandaroḍum tām karandār.
Sundarar wakes up and realizes Siva's grace & sings this padhigam
# periya purāṇam - ēyargōn kalikkāmar purāṇam - 163
sitta(m)nilai tiriyāda tirunāvalūr-mannar
at-tagudiyinil paḷḷiyuṇarndu, avaraik kāṇāmai
"ittanai * āmāṭrai aṟindilēn" ena eḍuttu,
meyt-tagaiya tiruppadigam viḷambiyē seṇḍru-aḍaindār.
(* CKS version: ittanai ā(m)māṭram aṟindilēn)
sundarar tēvāram - 7.29 - ittanai āmāṭrai - tirukkurugāvūr veḷḷaḍai - (paṇ - naṭṭarāgam)
(kaliviruttam - viḷam kāy viḷam kāy - meter)
pāḍal eṇ : 1
ittanai āmāṭrai aṟindilēn emberumān;
"pittanē" eṇḍru unnaip pēsuvār piṟarellām;
muttinai maṇidannai māṇikka(m) muḷaittu-eḻunda
vittanē; kurugāvūr veḷḷaḍai nī-aṇḍrē.
pāḍal eṇ : 2
āviyaip pōgāmē tavirttu ennai āṭkoṇḍāy;
vāviyil kayal pāyak, kuḷattiḍai maḍaidōṟum
kāviyum kuvaḷaiyum kamalam seṅgaḻunīrum
mēviya kurugāvūr veḷḷaḍai nī-aṇḍrē.
pāḍal eṇ : 3
pāḍuvār pasi tīrppāy; paravuvār piṇi kaḷaivāy;
ōḍu nangalanāga uṇbalikku uḻalvānē;
kāḍu nal-iḍamāgak kaḍuviruḷ naḍam āḍum
vēḍanē; kurugāvūr veḷḷaḍai nī-aṇḍrē.
pāḍal eṇ : 4
veppoḍu piṇi-ellām tavirttu ennai āṭkoṇḍāy;
oppuḍai oḷi-nīlam ōṅgiya malarp-poygai
appaḍi aḻagāya aṇi-naḍai maḍa-annam
meyppaḍu kurugāvūr veḷḷaḍai nī-aṇḍrē.
pāḍal eṇ : 5
varum paḻi vārāmē tavirttu ennai āṭkoṇḍāy;
surumbuḍai malarkkoṇḍraic cuṇṇa-veṇṇīṭrānē;
arumbuḍai malarppoygai alliyum malligaiyum
virumbiya kurugāvūr veḷḷaḍai nīyaṇḍrē.
pāḍal eṇ : 6
paṇṇiḍait tamiḻ oppāy; paḻattinil suvai oppāy;
kaṇṇiḍai maṇi oppāy; kaḍuviruṭ-suḍar oppāy;
maṇṇiḍai aḍiyārgaḷ manattu iḍar vārāmē,
viṇṇiḍaik kurugāvūr veḷḷaḍai nī-aṇḍrē.
pāḍal eṇ : 7
pōndanai tariyāmē; naman-tamar pugundu ennai
nōndanai seydālum nun-aladu aṟiyēn nān;
sāndanai varumēlum tavirttu ennai āṭkoṇḍa
vēndanē; kurugāvūr veḷḷaḍai nī-aṇḍrē.
pāḍal eṇ : 8
malakku-il nin-aḍiyārgaḷ manattiḍai māl tīrppāy;
salac-cala-miḍukku uḍaiya tarumanār-tamar ennaik
kalakkuvān vandālum kaḍunduyar vārāmē
vilakkuvāy; kurugāvūr veḷḷaḍai nī-aṇḍrē.
pāḍal eṇ : 9
paḍuvippāy unakkē āḷ, palaraiyum paṇiyāmē;
toḍuvippāy tugiloḍu pon; tōl uḍuttu uḻalvānē;
keḍuvippāy allādārk; kēḍu ilāp ponnaḍikkē
viḍuvippāy; kurugāvūr veḷḷaḍai nī-aṇḍrē.
pāḍal eṇ : 10
vaḷam kani poḻil malgu vayal aṇindu aḻagāya
viḷaṅgu oḷi kurugāvūr veḷḷaḍai uṟaivānai
iḷaṅgiḷai ārūran vanappagai avaḷ appan
uḷam kuḷir tamiḻmālai pattargaṭku urai āmē.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Padhigam background - Periya Puranam- 12.29.155 - 163
Sundarar worships Thirukolakka & Sirkazhi and proceeds to Thirukurugavur
# पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्कामर् पुराणम् - 155
मूवाद मुऴुमुदलार् मुदऱ्-कोलक्का अगण्ड्रु,
तावाद पुगऴ्च्-चण्बै वलङ्गॊण्डु ताऴ्न्दु इऱैञ्जि,
ना-आर्-मुत्तमिऴ्-विरगर् नऱ्पदङ्गळ् परविप्-पोय्,
मेवार्दम् पुरम् सॆट्रार् कुरुगावूर् मेवुवार्,
Sundarar feels thirsty and hungry
# पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्कामर् पुराणम् - 156
उण्-नीरिन् वेट्कैयुडन् उऱु-पसियाल् मिग-वरुन्दिप्,
पण्-नीर्मै मॊऴिप्-परवैयार् कॊऴुनर् वरुम् पाङ्गर्क्,
कण्-नीडु तिरुनुदलार् कादलवर् करुत्तु अऱिन्दु,
तण्णीरुम् पॊदिसोऱुम् कॊण्डु वऴिच्-चार्गिण्ड्रार्.
Siva (in the disguise of a brahmin) sets up a shelter on the way and waits with water and food
# पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्कामर् पुराणम् - 157
वेनिल् उऱु वॆयिल् वॆम्मै तणिप्पदऱ्कु विरैक्-कुळिर्-मॆन्
पानल्-मलर्त्-तडम् पोलुम् पन्दर् ऒरु-पाल् अमैत्ते,
आन मऱै-वेदियराय् अरुळ्-वेडम् कॊण्डु इरुन्दार्,
मान् अमरुम् तिरुक्-करत्तार् वन्-तॊण्डर्दमैप् पार्त्तु.
Sundarar enters that shelter and sits down
# पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्कामर् पुराणम् - 158
कुरुगावूर् अमर्न्दु-अरुळुम् कुऴगर् वऴिबार्त्तु-इरुप्पत्,
तिरुवारूर्त् तम्बिरान् तोऴर् तिरुत्-तॊण्डरुडन्
वरुवार् अप्-पन्दरिडैप् पुगुन्दु, तिरु-मऱैयवर्बाल्
पॆरुगु-आर्वम् सॆल, इरुन्दार् "सिवायनम" ऎनप् पेसि.
The brahmin (Siva) offers food and water to Sundarar
# पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्कामर् पुराणम् - 159
आलनिऴऱ्कीऴ् इरुन्दार् अवर्दम्मै ऎदिर् नोक्किच्,
"चाल-मिगप् पसित्तीर्; इप्-पॊदिसोऱु तरुगिण्ड्रेन्;
कालम् इनित् ताऴामे, कैक्कॊण्डु, इङ्गु इनिदु-अरुन्दि,
एल-नऱुम्-कुळि्र्-तण्णीर् कुडित्तु इळैप्पुत् तीरुम्" ऎन,
Sundarar accepts the food and eats with his entourage and other wayfarers
# पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्कामर् पुराणम् - 160
वन्-तॊण्डर् अदु केट्टु, "मऱैमुनिवर् तरुम् पॊदिसोऱु
इण्ड्रु नमक्कु ऎदिर्विलक्कल् आगादु" ऎण्ड्रु इसैन्दु-अरुळिप्,
पॊन् तयङ्गु नूल्-मार्बर् तरुम् पॊदिसोऱदु वाङ्गिच्,
* चॆण्ड्र तिरुत्-तॊण्डरुडन् तिरुवमुदु सॆय्दु-अरुळि,
(* Dharmapuram edition shows: सॆण्ड्रु)
# पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्कामर् पुराणम् - 161
ऎण्-इऱन्द परिसनङ्गळ् ऎल्लारुम् इनिदु-अरुन्दप्
पण्णिय पिन्, अम्-मरुङ्गुप् पसित्तु अणैन्दार्गळुम् अरुन्द,
उळ्-निऱैन्द आरमुदाय् ऒरुगालुम् उलवादे,
पुण्णियनार् ताम् अळित्त पॊदिसोऱु पॊलिन्ददाल्.
Sundarar and others take a nap & Siva and the shelter disappear
# पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्कामर् पुराणम् - 162
सङ्गरनार् तिरुवरुळ् पोल् तण्णीरिन् सुवै आर्न्दु,
पॊङ्गि-वरुम् आदरवाल् अवर्-नामम् पुगऴ्न्दु-एत्ति,
अङ्गु अयर्वाल् पळ्ळियमर्न्दु, अरुगु अणैन्दार्गळुम् तुयिलक्,
कङ्गै सडैक्-करन्दार् अप्-पन्दरॊडुम् ताम् करन्दार्.
Sundarar wakes up and realizes Siva's grace & sings this padhigam
# पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्कामर् पुराणम् - 163
सित्त(म्)निलै तिरियाद तिरुनावलूर्-मन्नर्
अत्-तगुदियिनिल् पळ्ळियुणर्न्दु, अवरैक् काणामै
"इत्तनै * आमाट्रै अऱिन्दिलेन्" ऎन ऎडुत्तु,
मॆय्त्-तगैय तिरुप्पदिगम् विळम्बिये सॆण्ड्रु-अडैन्दार्.
(* CKS version: इत्तनै आ(म्)माट्रम् अऱिन्दिलेन्)
सुन्दरर् तेवारम् - 7.29 - इत्तनै आमाट्रै - तिरुक्कुरुगावूर् वॆळ्ळडै - (पण् - नट्टरागम्)
(कलिविरुत्तम् - विळम् काय् विळम् काय् - meter)
पाडल् ऎण् : 1
इत्तनै आमाट्रै अऱिन्दिलेन् ऎम्बॆरुमान्;
"पित्तने" ऎण्ड्रु उन्नैप् पेसुवार् पिऱरॆल्लाम्;
मुत्तिनै मणिदन्नै माणिक्क(म्) मुळैत्तु-ऎऴुन्द
वित्तने; कुरुगावूर् वॆळ्ळडै नी-अण्ड्रे.
पाडल् ऎण् : 2
आवियैप् पोगामे तविर्त्तु ऎन्नै आट्कॊण्डाय्;
वावियिल् कयल् पायक्, कुळत्तिडै मडैदोऱुम्
कावियुम् कुवळैयुम् कमलम् सॆङ्गऴुनीरुम्
मेविय कुरुगावूर् वॆळ्ळडै नी-अण्ड्रे.
पाडल् ऎण् : 3
पाडुवार् पसि तीर्प्पाय्; परवुवार् पिणि कळैवाय्;
ओडु नन्गलनाग उण्बलिक्कु उऴल्वाने;
काडु नल्-इडमागक् कडुविरुळ् नडम् आडुम्
वेडने; कुरुगावूर् वॆळ्ळडै नी-अण्ड्रे.
पाडल् ऎण् : 4
वॆप्पॊडु पिणि-ऎल्लाम् तविर्त्तु ऎन्नै आट्कॊण्डाय्;
ऒप्पुडै ऒळि-नीलम् ओङ्गिय मलर्प्-पॊय्गै
अप्पडि अऴगाय अणि-नडै मड-अन्नम्
मॆय्प्पडु कुरुगावूर् वॆळ्ळडै नी-अण्ड्रे.
पाडल् ऎण् : 5
वरुम् पऴि वारामे तविर्त्तु ऎन्नै आट्कॊण्डाय्;
सुरुम्बुडै मलर्क्कॊण्ड्रैच् चुण्ण-वॆण्णीट्राने;
अरुम्बुडै मलर्प्पॊय्गै अल्लियुम् मल्लिगैयुम्
विरुम्बिय कुरुगावूर् वॆळ्ळडै नीयण्ड्रे.
पाडल् ऎण् : 6
पण्णिडैत् तमिऴ् ऒप्पाय्; पऴत्तिनिल् सुवै ऒप्पाय्;
कण्णिडै मणि ऒप्पाय्; कडुविरुट्-सुडर् ऒप्पाय्;
मण्णिडै अडियार्गळ् मनत्तु इडर् वारामे,
विण्णिडैक् कुरुगावूर् वॆळ्ळडै नी-अण्ड्रे.
पाडल् ऎण् : 7
पोन्दनै तरियामे; नमन्-तमर् पुगुन्दु ऎन्नै
नोन्दनै सॆय्दालुम् नुन्-अलदु अऱियेन् नान्;
सान्दनै वरुमेलुम् तविर्त्तु ऎन्नै आट्कॊण्ड
वेन्दने; कुरुगावूर् वॆळ्ळडै नी-अण्ड्रे.
पाडल् ऎण् : 8
मलक्कु-इल् निन्-अडियार्गळ् मनत्तिडै माल् तीर्प्पाय्;
सलच्-चल-मिडुक्कु उडैय तरुमनार्-तमर् ऎन्नैक्
कलक्कुवान् वन्दालुम् कडुन्दुयर् वारामे
विलक्कुवाय्; कुरुगावूर् वॆळ्ळडै नी-अण्ड्रे.
पाडल् ऎण् : 9
पडुविप्पाय् उनक्के आळ्, पलरैयुम् पणियामे;
तॊडुविप्पाय् तुगिलॊडु पॊन्; तोल् उडुत्तु उऴल्वाने;
कॆडुविप्पाय् अल्लादार्क्; केडु इलाप् पॊन्नडिक्के
विडुविप्पाय्; कुरुगावूर् वॆळ्ळडै नी-अण्ड्रे.
पाडल् ऎण् : 10
वळम् कनि पॊऴिल् मल्गु वयल् अणिन्दु अऴगाय
विळङ्गु ऒळि कुरुगावूर् वॆळ्ळडै उऱैवानै
इळङ्गिळै आरूरन् वनप्पगै अवळ् अप्पन्
उळम् कुळिर् तमिऴ्मालै पत्तर्गट्कु उरै आमे.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Padhigam background - Periya Puranam- 12.29.155 - 163
Sundarar worships Thirukolakka & Sirkazhi and proceeds to Thirukurugavur
# పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామర్ పురాణం - 155
మూవాద ముఴుముదలార్ ముదఱ్-కోలక్కా అగండ్రు,
తావాద పుగఴ్చ్-చణ్బై వలంగొండు తాఴ్న్దు ఇఱైంజి,
నా-ఆర్-ముత్తమిఴ్-విరగర్ నఱ్పదంగళ్ పరవిప్-పోయ్,
మేవార్దం పురం సెట్రార్ కురుగావూర్ మేవువార్,
Sundarar feels thirsty and hungry
# పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామర్ పురాణం - 156
ఉణ్-నీరిన్ వేట్కైయుడన్ ఉఱు-పసియాల్ మిగ-వరుందిప్,
పణ్-నీర్మై మొఴిప్-పరవైయార్ కొఴునర్ వరుం పాంగర్క్,
కణ్-నీడు తిరునుదలార్ కాదలవర్ కరుత్తు అఱిందు,
తణ్ణీరుం పొదిసోఱుం కొండు వఴిచ్-చార్గిండ్రార్.
Siva (in the disguise of a brahmin) sets up a shelter on the way and waits with water and food
# పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామర్ పురాణం - 157
వేనిల్ ఉఱు వెయిల్ వెమ్మై తణిప్పదఱ్కు విరైక్-కుళిర్-మెన్
పానల్-మలర్త్-తడం పోలుం పందర్ ఒరు-పాల్ అమైత్తే,
ఆన మఱై-వేదియరాయ్ అరుళ్-వేడం కొండు ఇరుందార్,
మాన్ అమరుం తిరుక్-కరత్తార్ వన్-తొండర్దమైప్ పార్త్తు.
Sundarar enters that shelter and sits down
# పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామర్ పురాణం - 158
కురుగావూర్ అమర్న్దు-అరుళుం కుఴగర్ వఴిబార్త్తు-ఇరుప్పత్,
తిరువారూర్త్ తంబిరాన్ తోఴర్ తిరుత్-తొండరుడన్
వరువార్ అప్-పందరిడైప్ పుగుందు, తిరు-మఱైయవర్బాల్
పెరుగు-ఆర్వం సెల, ఇరుందార్ "సివాయనమ" ఎనప్ పేసి.
The brahmin (Siva) offers food and water to Sundarar
# పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామర్ పురాణం - 159
ఆలనిఴఱ్కీఴ్ ఇరుందార్ అవర్దమ్మై ఎదిర్ నోక్కిచ్,
"చాల-మిగప్ పసిత్తీర్; ఇప్-పొదిసోఱు తరుగిండ్రేన్;
కాలం ఇనిత్ తాఴామే, కైక్కొండు, ఇంగు ఇనిదు-అరుంది,
ఏల-నఱుం-కుళి్ర్-తణ్ణీర్ కుడిత్తు ఇళైప్పుత్ తీరుం" ఎన,
Sundarar accepts the food and eats with his entourage and other wayfarers
# పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామర్ పురాణం - 160
వన్-తొండర్ అదు కేట్టు, "మఱైమునివర్ తరుం పొదిసోఱు
ఇండ్రు నమక్కు ఎదిర్విలక్కల్ ఆగాదు" ఎండ్రు ఇసైందు-అరుళిప్,
పొన్ తయంగు నూల్-మార్బర్ తరుం పొదిసోఱదు వాంగిచ్,
* చెండ్ర తిరుత్-తొండరుడన్ తిరువముదు సెయ్దు-అరుళి,
(* Dharmapuram edition shows: సెండ్రు)
# పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామర్ పురాణం - 161
ఎణ్-ఇఱంద పరిసనంగళ్ ఎల్లారుం ఇనిదు-అరుందప్
పణ్ణియ పిన్, అం-మరుంగుప్ పసిత్తు అణైందార్గళుం అరుంద,
ఉళ్-నిఱైంద ఆరముదాయ్ ఒరుగాలుం ఉలవాదే,
పుణ్ణియనార్ తాం అళిత్త పొదిసోఱు పొలిందదాల్.
Sundarar and others take a nap & Siva and the shelter disappear
# పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామర్ పురాణం - 162
సంగరనార్ తిరువరుళ్ పోల్ తణ్ణీరిన్ సువై ఆర్న్దు,
పొంగి-వరుం ఆదరవాల్ అవర్-నామం పుగఴ్న్దు-ఏత్తి,
అంగు అయర్వాల్ పళ్ళియమర్న్దు, అరుగు అణైందార్గళుం తుయిలక్,
కంగై సడైక్-కరందార్ అప్-పందరొడుం తాం కరందార్.
Sundarar wakes up and realizes Siva's grace & sings this padhigam
# పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామర్ పురాణం - 163
సిత్త(మ్)నిలై తిరియాద తిరునావలూర్-మన్నర్
అత్-తగుదియినిల్ పళ్ళియుణర్న్దు, అవరైక్ కాణామై
"ఇత్తనై * ఆమాట్రై అఱిందిలేన్" ఎన ఎడుత్తు,
మెయ్త్-తగైయ తిరుప్పదిగం విళంబియే సెండ్రు-అడైందార్.
(* CKS version: ఇత్తనై ఆ(మ్)మాట్రం అఱిందిలేన్)
సుందరర్ తేవారం - 7.29 - ఇత్తనై ఆమాట్రై - తిరుక్కురుగావూర్ వెళ్ళడై - (పణ్ - నట్టరాగం)
(కలివిరుత్తం - విళం కాయ్ విళం కాయ్ - meter)
పాడల్ ఎణ్ : 1
ఇత్తనై ఆమాట్రై అఱిందిలేన్ ఎంబెరుమాన్;
"పిత్తనే" ఎండ్రు ఉన్నైప్ పేసువార్ పిఱరెల్లాం;
ముత్తినై మణిదన్నై మాణిక్క(మ్) ముళైత్తు-ఎఴుంద
విత్తనే; కురుగావూర్ వెళ్ళడై నీ-అండ్రే.
పాడల్ ఎణ్ : 2
ఆవియైప్ పోగామే తవిర్త్తు ఎన్నై ఆట్కొండాయ్;
వావియిల్ కయల్ పాయక్, కుళత్తిడై మడైదోఱుం
కావియుం కువళైయుం కమలం సెంగఴునీరుం
మేవియ కురుగావూర్ వెళ్ళడై నీ-అండ్రే.
పాడల్ ఎణ్ : 3
పాడువార్ పసి తీర్ప్పాయ్; పరవువార్ పిణి కళైవాయ్;
ఓడు నన్గలనాగ ఉణ్బలిక్కు ఉఴల్వానే;
కాడు నల్-ఇడమాగక్ కడువిరుళ్ నడం ఆడుం
వేడనే; కురుగావూర్ వెళ్ళడై నీ-అండ్రే.
పాడల్ ఎణ్ : 4
వెప్పొడు పిణి-ఎల్లాం తవిర్త్తు ఎన్నై ఆట్కొండాయ్;
ఒప్పుడై ఒళి-నీలం ఓంగియ మలర్ప్-పొయ్గై
అప్పడి అఴగాయ అణి-నడై మడ-అన్నం
మెయ్ప్పడు కురుగావూర్ వెళ్ళడై నీ-అండ్రే.
పాడల్ ఎణ్ : 5
వరుం పఴి వారామే తవిర్త్తు ఎన్నై ఆట్కొండాయ్;
సురుంబుడై మలర్క్కొండ్రైచ్ చుణ్ణ-వెణ్ణీట్రానే;
అరుంబుడై మలర్ప్పొయ్గై అల్లియుం మల్లిగైయుం
విరుంబియ కురుగావూర్ వెళ్ళడై నీయండ్రే.
పాడల్ ఎణ్ : 6
పణ్ణిడైత్ తమిఴ్ ఒప్పాయ్; పఴత్తినిల్ సువై ఒప్పాయ్;
కణ్ణిడై మణి ఒప్పాయ్; కడువిరుట్-సుడర్ ఒప్పాయ్;
మణ్ణిడై అడియార్గళ్ మనత్తు ఇడర్ వారామే,
విణ్ణిడైక్ కురుగావూర్ వెళ్ళడై నీ-అండ్రే.
పాడల్ ఎణ్ : 7
పోందనై తరియామే; నమన్-తమర్ పుగుందు ఎన్నై
నోందనై సెయ్దాలుం నున్-అలదు అఱియేన్ నాన్;
సాందనై వరుమేలుం తవిర్త్తు ఎన్నై ఆట్కొండ
వేందనే; కురుగావూర్ వెళ్ళడై నీ-అండ్రే.
పాడల్ ఎణ్ : 8
మలక్కు-ఇల్ నిన్-అడియార్గళ్ మనత్తిడై మాల్ తీర్ప్పాయ్;
సలచ్-చల-మిడుక్కు ఉడైయ తరుమనార్-తమర్ ఎన్నైక్
కలక్కువాన్ వందాలుం కడుందుయర్ వారామే
విలక్కువాయ్; కురుగావూర్ వెళ్ళడై నీ-అండ్రే.
పాడల్ ఎణ్ : 9
పడువిప్పాయ్ ఉనక్కే ఆళ్, పలరైయుం పణియామే;
తొడువిప్పాయ్ తుగిలొడు పొన్; తోల్ ఉడుత్తు ఉఴల్వానే;
కెడువిప్పాయ్ అల్లాదార్క్; కేడు ఇలాప్ పొన్నడిక్కే
విడువిప్పాయ్; కురుగావూర్ వెళ్ళడై నీ-అండ్రే.
పాడల్ ఎణ్ : 10
వళం కని పొఴిల్ మల్గు వయల్ అణిందు అఴగాయ
విళంగు ఒళి కురుగావూర్ వెళ్ళడై ఉఱైవానై
ఇళంగిళై ఆరూరన్ వనప్పగై అవళ్ అప్పన్
ఉళం కుళిర్ తమిఴ్మాలై పత్తర్గట్కు ఉరై ఆమే.
=============================