173) 11.3 - திருஇரட்டைமணிமாலை - கிளர்ந்துந்து - thiru irattaimaNi malai - kiLarndhundhu
காரைக்காலம்மையார் - திருஇரட்டைமணிமாலை - 11.3 - கிளர்ந்துந்து
kāraikkāl ammaiyār - tiru iraṭṭaimaṇi-mālai - 11.3 - kiḷarndu undu
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1IrI1LjX-NnvE0Fgd3Bkv4iRtShjgzIfL/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1:
Part-2:
Part-3:
Part-4:
Part-5:
***
V.
Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
காரைக்காலம்மையார் - திருஇரட்டைமணிமாலை - பதிகம் 11.3
கட்டளைக் கலித்துறையும், நேரிசை வெண்பாவும் அந்தாதியாய் மாறி மாறி வர இருபது பாடல்களால் தொகுக்கப்படுவது, "இரட்டைமணி மாலை" என்னும் பிரபந்தம் ஆகும்.
காரைக்கால் அம்மையார் வரலாறு: https://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=16
Special note:
This is the scanned PDF version of an old edition of 11th thirumuRai - as published by Arumuga Navalar. This has the verses in the old style - applying sandhi across all seers across all lines in a song.
This edition too has some occasional errors.
For each verse, this "Arumuga Navalar" edition version is given first (after my corrections of any obvious errors) followed by the Dharmapuram Adheenam edition.
This may help those interested in learning the Tamil sandhi rules - and enable them in reading verses in old editions of books.
காரைக்காலம்மையார் - திருஇரட்டைமணிமாலை - பதிகம் 11.3
( கட்டளைக் கலித்துறை & வெண்பா - meter - 20 songs with end-to-start link between them)
பாடல் எண் : 1
கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங் கிருத்த றவிர்திகண் டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை
யிளந்திங் களும்மெருக் கும்மிருக் குஞ்சென்னி யீசனுக்கே.
கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்இருக் குஞ்சென்னி ஈசனுக்கே.
பாடல் எண் : 2
ஈச னவனல்லா தில்லை யெனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்.
ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்.
பாடல் எண் : 3
பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வாரிடர்கண்
டிரானென்ன நிற்கின்ற வீசன்கண் டீரின வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றுரைவா
யராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொ னீண்முடி யந்தணனே.
பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண்
டிரான்என நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்துறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே.
பாடல் எண் : 4
அந்தணனைத் தஞ்சமென் றாட்பட்டா ராழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த
பொன்கண்டாற் பூணாதே கோணாகம் பூண்டானே
யென்கண்டாய் நெஞ்சே யினி.
அந்தணனைத் தஞ்சம்என் றாட்பட்டார் ஆழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த
பொன்கண்டால் பூணாதே கோள்அரவம் பூண்டானே
என்கண்டாய் நெஞ்சே இனி.
பாடல் எண் : 5
இனிவார் சடையினிற் கங்கையென் பாளையங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணிலென் செய்திகை யிற்சிலையான்
முனியார் திரிபுர மூன்றும்வெந் தன்றுசெந் தீயின்மூழ்கத்
தனிவார் கணையொன்றி னான்மிகக் கோத்தவெஞ் சங்கரனே.
இனிவார் சடையினில் கங்கையென் பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என் செய்திகை யிற்சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் தன்றுசெந் தீயின்மூழ்கத்
தனிவார் கணையொன்றி னால்மிகக் கோத்தஎம் சங்கரனே.
பாடல் எண் : 6
சங்கரனைத் தாழ்ந்த சடையானை யச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - யங்கொருநா
ளாவாவென் றாழாமைக் காப்பானை யெப்பொழுது
மோவாது நெஞ்சே யுரை.
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.
பாடல் எண் : 7
உரைக்கப் படுவது மொன்றுண்டு கேட்கிற்செவ் வான்றொடைமே
லிரைக்கின்ற பாம்பினை யென்றுந் தொடேலிழிந் தோட்டத்தெங்குந்
திரைக்கின்ற கங்கையுந் தேனின்ற கொன்றையுஞ் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித் தலைவைத்த வேதியனே.
உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு கேட்கின்செவ் வான்தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றுந் தொடேல்இழிந் தோட்டந்தெங்கும் *
திரைக்கின்ற கங்கையுந் தேன்நின்ற கொன்றையுஞ் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித் தலைவைத்த வேதியனே.
* (தருமை ஆதீன நூலில் "இழிந் தோட்டத்தெங்கும்" என்று உள்ளது. அது பிழையான பாடம் என்று நான் கருதுகின்றேன்);
பாடல் எண் : 8
வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
காதியனை யாதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனு மாட்டாது
கில்லேன மாவென்றான் கீழ்.
வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
காதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேன மாஎன்றான் கீழ்.
பாடல் எண் : 9
கீழா யினதுன்ப வெள்ளக் கடற்றள்ளி யுள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டனெண் டோளன்பைம் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளுந் தலைநின்மினே.
கீழா யினதுன்ப வெள்ளக் கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன்எண் தோளன்பைம் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளுந் தலைநின்மினே.
பாடல் எண் : 10
தலையாய வைந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் - தலையாய
வண்டத்தா னாதிரையா னாலால முண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.
தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.
பாடல் எண் : 11
கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தம்மைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்து நில்லா வினைநிக ரேதுமின்றித்
தழற்கொண்ட சோதிச்செம் மேனியெம் மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி நம்மடுந் தொல்வினையே.
கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தம்மைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்தும் நில்லா வினைநிகர் ஏதுமின்றித்
தழற்கொண்ட சோதிச்செம் மேனியெம் மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி நம்அடுந் தொல்வினையே.
பாடல் எண் : 12
தொல்லை வினைவந்து சூழாமுன் றாழாமே
யொல்லை வணங்கி யுமையென்னு - மெல்லியலோர்
கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை.
தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியலோர்
கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை.
பாடல் எண் : 13
நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச மேயிங்கோர் தஞ்சமென்று
மனையா ளையுமக்க டம்மையுந் தேறியோ ராறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பனந் தாதைநொந் தாதசெந்தீ
யனையா னமரர் பிரான்அண்ட வாண னடித்தலமே.
நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச மேஇங்கொர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையுந் தேறிஓர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன்நந் தாதைநொந் தாதசெந்தீ
அனையான் அமரர் பிரான்அண்ட வாணன் அடித்தலமே.
பாடல் எண் : 14
அடித்தலத்தி னன்றரக்க னைந்நான்கு தோளு
முடித்தலமு நீமுரித்த வாறென் - முடித்தலத்தி
லாறாடி யாறா வனலாடி யவ்வனலி
னீறாடி நெய்யாடி நீ.
அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தின்
ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ.
பாடல் எண் : 15
நீநின்று தானவர் மாமதின் மூன்று நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென் றிரங்குவல்வாய்ப்
பேய்நின்று பாடப் பெருங்கா டரங்காப் பெயர்ந்துநட்டம்
போய்நின்று பூதந் தொழச்செய்யு மொய்கழற் புண்ணியனே.
நீநின்று தானவர் மாமதில் மூன்றும் நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென் திரங்குவல்வாய்ப்
பேய்நின்று பாடப் பெருங்கா டரங்காப் பெயர்ந்துநட்டம்
போய்நின்று பூதந் தொழச்செய்யும் மொய்கழற் புண்ணியனே.
பாடல் எண் : 16
புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்து மிசைந்தனவாற் - றிண்ணிய
கைம்மாவி னீருரிவை மூவுருவும் போர்த்துகந்த
வம்மானுக் காட்பட்ட வன்பு.
புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு.
பாடல் எண் : 17
அன்பா லடைவதெவ் வாறுகொன் மேலதோ ராடரவந்
தன்பா லொருவரைச் சாரவொட் டாதது வேயுமன்றி
முன்பா யினதலை யோடுகள் கோத்தவை யார்த்துவெள்ளை
யென்பா யினவு மணிந்தங்கோ ரேறுகந் தேறுவதே.
அன்பால் அடைவதெவ் வாறுகொல் மேலதோ ராடரவம்
தன்பால் ஒருவரைச் சாரவொட் டாதது வேயுமன்றி
முன்பா யினதலை யோடுகள் கோத்தவை ஆர்த்துவெள்ளை
என்பா யினவும் அணிந்தங்கோர் ஏறுகந் தேறுவதே.
பாடல் எண் : 18
ஏறலா லேறமற் றில்லையே யெம்பெருமா
னாறெலாம் பாயு மவிர்சடையார் - வேறொர்
படங்குலவு நாகமுமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த
தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு.
ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர்
படங்குலவு நாகமுமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த
தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு.
பாடல் எண் : 19
தமக்கென்று மின்பணி செய்திருப் பேமுக்குத் தாமொருநா
ளெமக்கென்று சொன்னா லருளுங்கொ லாமிணை யாதுமின்றிச்
சுமக்கின்ற பிள்ளைவெள் ளேறொப்ப தொன்றுதொண் டைக்கனிவா
யுமைக்கென்று தேடிப் பெறாதுட னேகொண்ட வுத்தமரே.
தமக்கென்றும் இன்பணி செய்திருப் பேமுக்குத் தாமொருநாள்
எமக்கென்று சொன்னால் அருளுங்கொ லாமிணை யாதுமின்றிச்
சுமக்கின்ற பிள்ளைவெள் ளேறொப்ப தொன்றுதொண் டைக்கனிவாய்
உமைக்கென்று தேடிப் பெறாதுட னேகொண்ட உத்தமரே.
பாடல் எண் : 20
உத்தமராய் வாழ்வா ருலந்தக்கா லுற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமு - னுத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்றிறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.
உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.
==================
Word separated version:
காரைக்கால் அம்மையார் - திரு இரட்டைமணி-மாலை - பதிகம் 11.3
( கட்டளைக் கலித்துறை & வெண்பா - meter - 20 songs with end-to-start link between them)
பாடல் எண் : 1
கிளர்ந்து உந்து வெம் துயர் வந்து அடும் போது அஞ்சி, நெஞ்சம், என்பாய்த்
தளர்ந்து இங்கு இருத்தல் தவிர்தி கண்டாய்; தளராது வந்தி;
வளர்ந்து உந்து கங்கையும் வானத்திடை வளர் கோட்டு-வெள்ளை
இளம்-திங்களும் எருக்கும் இருக்கும் சென்னி ஈசனுக்கே.
பாடல் எண் : 2
ஈசன் அவன் அல்லாது இல்லை என நினைந்து,
கூசி, மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி,
மறவாது வாழ்வாரை மண்ணுலகத்து என்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்.
பாடல் எண் : 3
பிரான் என்று தன்னைப் பன்னாள் பரவித் தொழுவார் இடர் கண்டு
இரான் என நிற்கின்ற ஈசன் கண்டீர்; இன-வண்டு கிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்து பொம்மென் துறைவாய்
அரா நின்று இரைக்கும் சடைச்-செம்பொன் நீள்-முடி அந்தணனே.
பாடல் எண் : 4
அந்தணனைத் தஞ்சம் என்று ஆட்பட்டார் ஆழாமே
வந்து-அணைந்து காத்து அளிக்கும் வல்லாளன்; - கொந்து அணைந்த
பொன் கண்டால் பூணாதே * கோள்-அரவம் பூண்டானே;
என் கண்டாய் நெஞ்சே இனி.
(* கோணாகம் (= கோள்-நாகம்) in Arumuga Navalar edition)
பாடல் எண் : 5
இனி வார்-சடையினில் கங்கை என்பாளை அங்கத்து இருந்த
கனி-வாய் மலைமங்கை காணில் என் செய்தி? கையில் சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும் வெந்து அன்று செந்தீயில் மூழ்கத்
தனி வார்-கணை ஒன்றினால் மிகக் கோத்த எம் சங்கரனே.
பாடல் எண் : 6
சங்கரனைத், தாழ்ந்த சடையானை, அச்சடைமேல்
பொங்கு-அரவம் வைத்து-உகந்த புண்ணியனை, - அங்கு ஒரு நாள்
ஆஆ என்று ஆழாமைக் காப்பானை, எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.
பாடல் எண் : 7
உரைக்கப் படுவதும் ஒன்று உண்டு கேட்கின்; செவ்-வான்-தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றும் தொடேல்; இழிந்து ஓட்டந்து எங்கும் *
திரைக்கின்ற கங்கையும் தேன் நின்ற கொன்றையும் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியும் சென்னித்தலை வைத்த வேதியனே.
* (The Dharmapuram adheenam edition has it as "இழிந்தோட்டத்தெங்கும்". I believe that is incorrect);
பாடல் எண் : 8
வேதியனை, வேதப் பொருளானை, வேதத்துக்கு
ஆதியனை, ஆதிரை நன்னாளானைச், - சோதிப்பான்
வல்-ஏனமாய்ப் * புக்கு மால்-அவனும் மாட்டாது
கில்லேன் அமா என்றான் கீழ்.
(அமா = அம்மா)
(* For interpretation: Move கீழ் to line-3 before புக்கு)
பாடல் எண் : 9
கீழ் ஆயின துன்ப-வெள்ளக்-கடல் தள்ளி உள்ளுறப்போய்
வீழாது இருந்து இன்பம் வேண்டும் என்பீர்; விரவார் புரங்கள்
பாழாயிடக் கண்ட கண்டன்; எண்-தோளன்; பைம்பொற்கழலே
தாழாது இறைஞ்சிப் பணிந்து பன்னாளும் தலைநின்மினே.
பாடல் எண் : 10
தலையாய ஐந்தினையும் சாதித்துத், தாழ்ந்து,
தலையாயின உணர்ந்தோர் காண்பர்; - தலையாய
அண்டத்தான், ஆதிரையான், ஆலாலம் உண்டு இருண்ட
கண்டத்தான் செம்பொற்கழல்.
பாடல் எண் : 11
கழற்கொண்ட சேவடி காணல்-உற்றார்-தம்மைப் பேணல்-உற்றார்
நிழற்கண்ட போழ்தத்தும் நில்லா வினை; நிகர் ஏதும் இன்றித்
தழற்கொண்ட சோதிச் செம்-மேனி எம்மானைக், கைம்-மாமலர்-தூய்த்
தொழக் கண்டு நிற்கிற்குமோ துன்னி நம் அடும் தொல்-வினையே.
பாடல் எண் : 12
தொல்லை-வினை வந்து சூழாமுன், தாழாமே
ஒல்லை வணங்கி, உமை என்னும் - மெல்லியல் ஓர்
கூற்றானைக், கூற்று உருவம் காய்ந்தானை, வாய்ந்து இலங்கு
நீற்றானை, நெஞ்சே நினை.
பாடல் எண் : 13
நினையாது ஒழிதி கண்டாய்; நெஞ்சமே, இங்கு ஒர் தஞ்சம் என்று
மனையாளையும் மக்கள் தம்மையும் தேறி, ஓர் ஆறு புக்கு(ம்)*
நனையாச் சடைமுடி நம்பன், நம் தாதை, நொந்தாத செந்தீ
அனையான், அமரர்-பிரான், அண்ட-வாணன் அடித்தலமே.
* (ம்) - elides due to sandhi
பாடல் எண் : 14
அடித்தலத்தின் அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீ முரித்தவாறு என்? - முடித்தலத்தின்
ஆறு-ஆடி, ஆறா அனல்-ஆடி, அவ்வனலின்
நீறு-ஆடி, நெய்-ஆடி நீ.
பாடல் எண் : 15
நீ நின்று தானவர் மா-மதில் மூன்றும் நிரந்து உடனே
தீ நின்று வேவச் சிலை-தொட்டவாறு என்? திரங்கு-வல்-வாய்ப்
பேய் நின்று பாடப், பெருங்காடு அரங்காப் பெயர்ந்து நட்டம்
போய் நின்று பூதம் தொழச் செய்யும் மொய்-கழற்-புண்ணியனே.
பாடல் எண் : 16
புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கண் சாராமே,
எண்ணி ஓர் ஐந்தும் இசைந்தனவால்; - திண்ணிய
கைம்மாவின் ஈர்-உரிவை மூவுருவும் போர்த்து-உகந்த
அம்மானுக்கு ஆட்பட்ட அன்பு.
பாடல் எண் : 17
அன்பால் அடைவது எவ்வாறுகொல்? மேலதோர் ஆடு-அரவம்
தன்பால் ஒருவரைச் சார ஒட்டாது; அதுவேயும் அன்றி,
முன்பு ஆயின தலையோடுகள் கோத்து அவை ஆர்த்து, வெள்ளை
என்பு ஆயினவும் அணிந்து, அங்கு ஓர் ஏறு உகந்து ஏறுவதே.
பாடல் எண் : 18
ஏறு அலால் ஏற மற்று இல்லையே? எம்பெருமான்,
ஆறு-எலாம் பாயும் அவிர்-சடையார், - வேறு ஓர்
படம் குலவு நாகம் உமிழ், பண்டு அமரர்ச் சூழ்ந்த,
தடம்-கடல் நஞ்சு உண்டார் தமக்கு.
பாடல் எண் : 19
தமக்கு என்றும் இன்-பணி செய்து இருப்பேமுக்குத், தாம் ஒருநாள்
எமக்கு என்று சொன்னால் அருளுங்கொலாம்? இணை யாதும் இன்றிச்
சுமக்கின்ற பிள்ளை-வெள்-ஏறு ஒப்பது ஒன்று தொண்டைக்கனி-வாய்
உமைக்கு என்று தேடிப் பெறாது உடனே கொண்ட உத்தமரே.
பாடல் எண் : 20
உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரம் அடுக்கித் தீயாமுன், - உத்தமனாய்
நீள்-ஆழி நஞ்சு உண்ட நெய்-ஆடி-தன் திறமே
கேள் ஆழி நெஞ்சே கிளர்ந்து.
===================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
kāraikkāl ammaiyār - tiru iraṭṭaimaṇi-mālai - padigam 11.3
( kaṭṭaḷaik kalittuṟai & veṇbā - meter - 20 songs with end-to-start link between them)
pāḍal eṇ : 1
kiḷarndu undu vem tuyar vandu aḍum pōdu añji, neñjam, enbāyt
taḷarndu iṅgu iruttal tavirdi kaṇḍāy; taḷarādu vandi;
vaḷarndu undu gaṅgaiyum vānattiḍai vaḷar kōṭṭu-veḷḷai
iḷam-tiṅgaḷum erukkum irukkum senni īsanukkē.
pāḍal eṇ : 2
īsan avan allādu illai ena ninaindu,
kūsi, manattagattuk koṇḍirundu - pēsi,
maṟavādu vāḻvārai maṇṇulagattu eṇḍrum
piṟavāmaik kākkum pirān.
pāḍal eṇ : 3
pirān eṇḍru tannaip pannāḷ paravit toḻuvār iḍar kaṇḍu
irān ena niṟkiṇḍra īsan kaṇḍīr; ina-vaṇḍu kiṇḍip
porāniṇḍra koṇḍraip podumbark kiḍandu pommen tuṟaivāy
arā niṇḍru iraikkum saḍaic-cembon nīḷ-muḍi andaṇanē.
pāḍal eṇ : 4
andaṇanait tañjam eṇḍru āṭpaṭṭār āḻāmē
vandu-aṇaindu kāttu aḷikkum vallāḷan; - kondu aṇainda
pon kaṇḍāl pūṇādē * kōḷ-aravam pūṇḍānē;
en kaṇḍāy neñjē ini.
(* kōṇāgam (= kōḷ-nāgam) in Arumuga Navalar edition)
pāḍal eṇ : 5
ini vār-saḍaiyinil gaṅgai enbāḷai aṅgattu irunda
kani-vāy malaimaṅgai kāṇil en seydi? kaiyil silaiyāl
munivār tiriburam mūṇḍrum vendu aṇḍru sendīyil mūḻgat
tani vār-kaṇai oṇḍrināl migak kōtta em saṅgaranē.
pāḍal eṇ : 6
saṅgaranait, tāḻnda saḍaiyānai, accaḍaimēl
poṅgu-aravam vaittu-uganda puṇṇiyanai, - aṅgu oru nāḷ
āā eṇḍru āḻāmaik kāppānai, eppoḻudum
ovādu neñjē urai.
pāḍal eṇ : 7
uraikkap paḍuvadum oṇḍru uṇḍu kēṭkin; sev-vān-toḍaimēl
iraikkiṇḍra pāmbinai eṇḍrum toḍēl; iḻindu ōṭṭandu eṅgum *
tiraikkiṇḍra gaṅgaiyum tēn niṇḍra koṇḍraiyum señjaḍaimēl
viraikkiṇḍra vanniyum sennittalai vaitta vēdiyanē.
* (The Dharmapuram adheenam edition has it as "iḻindōṭṭatteṅgum". I believe that is incorrect);
pāḍal eṇ : 8
vēdiyanai, vēdap poruḷānai, vēdattukku
ādiyanai, ādirai nannāḷānaic, - cōdippān
val-ēnamāyp * pukku māl-avanum māṭṭādu
killēn amā eṇḍrān kīḻ.
(amā = ammā)
(* For interpretation: Move kīḻ to line-3 before pukku)
pāḍal eṇ : 9
kīḻ āyina tunba-veḷḷak-kaḍal taḷḷi uḷḷuṟappōy
vīḻādu irundu inbam vēṇḍum enbīr; viravār puraṅgaḷ
pāḻāyiḍak kaṇḍa kaṇḍan; eṇ-tōḷan; paimboṟkaḻalē
tāḻādu iṟaiñjip paṇindu pannāḷum talaininminē.
pāḍal eṇ : 10
talaiyāya aindinaiyum sādittut, tāḻndu,
talaiyāyina uṇarndōr kāṇbar; - talaiyāya
aṇḍattān, ādiraiyān, ālālam uṇḍu iruṇḍa
kaṇḍattān semboṟkaḻal.
pāḍal eṇ : 11
kaḻaṟkoṇḍa sēvaḍi kāṇal-uṭrār-tammaip pēṇal-uṭrār
niḻaṟkaṇḍa pōḻdattum nillā vinai; nigar ēdum iṇḍrit
taḻaṟkoṇḍa sōdic cem-mēni emmānaik, kaim-māmalar-tūyt
toḻak kaṇḍu niṟkiṟkumō tunni nam aḍum tol-vinaiyē.
pāḍal eṇ : 12
tollai-vinai vandu sūḻāmun, tāḻāmē
ollai vaṇaṅgi, umai ennum - melliyal ōr
kūṭrānaik, kūṭru uruvam kāyndānai, vāyndu ilaṅgu
nīṭrānai, neñjē ninai.
pāḍal eṇ : 13
ninaiyādu oḻidi kaṇḍāy; neñjamē, iṅgu or tañjam eṇḍru
manaiyāḷaiyum makkaḷ tammaiyum tēṟi, ōr āṟu pukku(m)
nanaiyāc caḍaimuḍi namban, nam tādai, nondāda sendī
anaiyān, amarar-pirān, aṇḍa-vāṇan aḍittalamē.
* (m) - elides due to sandhi
pāḍal eṇ : 14
aḍittalattin aṇḍru arakkan ainnāngu tōḷum
muḍittalamum nī murittavāṟu en? - muḍittalattin
āṟu-āḍi, āṟā anal-āḍi, avvanalin
nīṟu-āḍi, ney-āḍi nī.
pāḍal eṇ : 15
nī niṇḍru tānavar mā-madil mūṇḍrum nirandu uḍanē
tī niṇḍru vēvac cilai-toṭṭavāṟu en? tiraṅgu-val-vāyp
pēy niṇḍru pāḍap, peruṅgāḍu araṅgāp peyarndu naṭṭam
pōy niṇḍru pūdam toḻac ceyyum moy-kaḻaṟ-puṇṇiyanē.
pāḍal eṇ : 16
puṇṇiyaṅgaḷ seydanavum poynneṟikkaṇ sārāmē,
eṇṇi ōr aindum isaindanavāl; - tiṇṇiya
kaimmāvin īr-urivai mūvuruvum pōrttu-uganda
ammānukku āṭpaṭṭa anbu.
pāḍal eṇ : 17
anbāl aḍaivadu evvāṟugol? mēladōr āḍu-aravam
tanbāl oruvaraic cāra oṭṭādu; aduvēyum aṇḍri,
munbu āyina talaiyōḍugaḷ kōttu avai ārttu, veḷḷai
enbu āyinavum aṇindu, aṅgu ōr ēṟu ugandu ēṟuvadē.
pāḍal eṇ : 18
ēṟu alāl ēṟa maṭru illaiyē? emberumān,
āṟu-elām pāyum avir-saḍaiyār, - vēṟu ōr
paḍam kulavu nāgam umiḻ, paṇḍu amararc cūḻnda,
taḍam-kaḍal nañju uṇḍār tamakku.
pāḍal eṇ : 19
tamakku eṇḍrum in-paṇi seydu iruppēmukkut, tām orunāḷ
emakku eṇḍru sonnāl aruḷuṅgolām? iṇai yādum iṇḍric
cumakkiṇḍra piḷḷai-veḷ-ēṟu oppadu oṇḍru toṇḍaikkani-vāy
umaikku eṇḍru tēḍip peṟādu uḍanē koṇḍa uttamarē.
pāḍal eṇ : 20
uttamarāy vāḻvār ulandakkāl uṭrārgaḷ
setta maram aḍukkit tīyāmun, - uttamanāy
nīḷ-āḻi nañju uṇḍa ney-āḍi-tan tiṟamē
kēḷ āḻi neñjē kiḷarndu.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
कारैक्काल् अम्मैयार् - तिरु इरट्टैमणि-मालै - पदिगम् 11.3
( कट्टळैक् कलित्तुऱै & वॆण्बा - meter - 20 songs with end-to-start link between them)
पाडल् ऎण् : 1
किळर्न्दु उन्दु वॆम् तुयर् वन्दु अडुम् पोदु अञ्जि, नॆञ्जम्, ऎन्बाय्त्
तळर्न्दु इङ्गु इरुत्तल् तविर्दि कण्डाय्; तळरादु वन्दि;
वळर्न्दु उन्दु गङ्गैयुम् वानत्तिडै वळर् कोट्टु-वॆळ्ळै
इळम्-तिङ्गळुम् ऎरुक्कुम् इरुक्कुम् सॆन्नि ईसनुक्के.
पाडल् ऎण् : 2
ईसन् अवन् अल्लादु इल्लै ऎन निनैन्दु,
कूसि, मनत्तगत्तुक् कॊण्डिरुन्दु - पेसि,
मऱवादु वाऴ्वारै मण्णुलगत्तु ऎण्ड्रुम्
पिऱवामैक् काक्कुम् पिरान्.
पाडल् ऎण् : 3
पिरान् ऎण्ड्रु तन्नैप् पन्नाळ् परवित् तॊऴुवार् इडर् कण्डु
इरान् ऎन निऱ्किण्ड्र ईसन् कण्डीर्; इन-वण्डु किण्डिप्
पॊरानिण्ड्र कॊण्ड्रैप् पॊदुम्बर्क् किडन्दु पॊम्मॆन् तुऱैवाय्
अरा निण्ड्रु इरैक्कुम् सडैच्-चॆम्बॊन् नीळ्-मुडि अन्दणने.
पाडल् ऎण् : 4
अन्दणनैत् तञ्जम् ऎण्ड्रु आट्पट्टार् आऴामे
वन्दु-अणैन्दु कात्तु अळिक्कुम् वल्लाळन्; - कॊन्दु अणैन्द
पॊन् कण्डाल् पूणादे * कोळ्-अरवम् पूण्डाने;
ऎन् कण्डाय् नॆञ्जे इनि.
(* कोणागम् (= कोळ्-नागम्) in Arumuga Navalar edition)
पाडल् ऎण् : 5
इनि वार्-सडैयिनिल् गङ्गै ऎन्बाळै अङ्गत्तु इरुन्द
कनि-वाय् मलैमङ्गै काणिल् ऎन् सॆय्दि? कैयिल् सिलैयाल्
मुनिवार् तिरिबुरम् मूण्ड्रुम् वॆन्दु अण्ड्रु सॆन्दीयिल् मूऴ्गत्
तनि वार्-कणै ऒण्ड्रिनाल् मिगक् कोत्त ऎम् सङ्गरने.
पाडल् ऎण् : 6
सङ्गरनैत्, ताऴ्न्द सडैयानै, अच्चडैमेल्
पॊङ्गु-अरवम् वैत्तु-उगन्द पुण्णियनै, - अङ्गु ऒरु नाळ्
आआ ऎण्ड्रु आऴामैक् काप्पानै, ऎप्पॊऴुदुम्
ऒवादु नॆञ्जे उरै.
पाडल् ऎण् : 7
उरैक्कप् पडुवदुम् ऒण्ड्रु उण्डु केट्किन्; सॆव्-वान्-तॊडैमेल्
इरैक्किण्ड्र पाम्बिनै ऎण्ड्रुम् तॊडेल्; इऴिन्दु ओट्टन्दु ऎङ्गुम् *
तिरैक्किण्ड्र गङ्गैयुम् तेन् निण्ड्र कॊण्ड्रैयुम् सॆञ्जडैमेल्
विरैक्किण्ड्र वन्नियुम् सॆन्नित्तलै वैत्त वेदियने.
* (The Dharmapuram adheenam edition has it as
"इऴिन्दोट्टत्तॆङ्गुम्". I believe that is incorrect);
पाडल् ऎण् : 8
वेदियनै, वेदप् पॊरुळानै, वेदत्तुक्कु
आदियनै, आदिरै नन्नाळानैच्, - चोदिप्पान्
वल्-एनमाय्प् * पुक्कु माल्-अवनुम् माट्टादु
किल्लेन् अमा ऎण्ड्रान् कीऴ्.
(अमा = अम्मा)
(* For interpretation: Move कीऴ् to line-3 before पुक्कु)
पाडल् ऎण् : 9
कीऴ् आयिन तुन्ब-वॆळ्ळक्-कडल् तळ्ळि उळ्ळुऱप्पोय्
वीऴादु इरुन्दु इन्बम् वेण्डुम् ऎन्बीर्; विरवार् पुरङ्गळ्
पाऴायिडक् कण्ड कण्डन्; ऎण्-तोळन्; पैम्बॊऱ्कऴले
ताऴादु इऱैञ्जिप् पणिन्दु पन्नाळुम् तलैनिन्मिने.
पाडल् ऎण् : 10
तलैयाय ऐन्दिनैयुम् सादित्तुत्, ताऴ्न्दु,
तलैयायिन उणर्न्दोर् काण्बर्; - तलैयाय
अण्डत्तान्, आदिरैयान्, आलालम् उण्डु इरुण्ड
कण्डत्तान् सॆम्बॊऱ्कऴल्.
पाडल् ऎण् : 11
कऴऱ्कॊण्ड सेवडि काणल्-उट्रार्-तम्मैप् पेणल्-उट्रार्
निऴऱ्कण्ड पोऴ्दत्तुम् निल्ला विनै; निगर् एदुम् इण्ड्रित्
तऴऱ्कॊण्ड सोदिच् चॆम्-मेनि ऎम्मानैक्, कैम्-मामलर्-तूय्त्
तॊऴक् कण्डु निऱ्किऱ्कुमो तुन्नि नम् अडुम् तॊल्-विनैये.
पाडल् ऎण् : 12
तॊल्लै-विनै वन्दु सूऴामुन्, ताऴामे
ऒल्लै वणङ्गि, उमै ऎन्नुम् - मॆल्लियल् ओर्
कूट्रानैक्, कूट्रु उरुवम् काय्न्दानै, वाय्न्दु इलङ्गु
नीट्रानै, नॆञ्जे निनै.
पाडल् ऎण् : 13
निनैयादु ऒऴिदि कण्डाय्; नॆञ्जमे, इङ्गु ऒर् तञ्जम् ऎण्ड्रु
मनैयाळैयुम् मक्कळ् तम्मैयुम् तेऱि, ओर् आऱु पुक्कु(म्)
ननैयाच् चडैमुडि नम्बन्, नम् तादै, नॊन्दाद सॆन्दी
अनैयान्, अमरर्-पिरान्, अण्ड-वाणन् अडित्तलमे.
* (म्) - elides due to sandhi
पाडल् ऎण् : 14
अडित्तलत्तिन् अण्ड्रु अरक्कन् ऐन्नान्गु तोळुम्
मुडित्तलमुम् नी मुरित्तवाऱु ऎन्? - मुडित्तलत्तिन्
आऱु-आडि, आऱा अनल्-आडि, अव्वनलिन्
नीऱु-आडि, नॆय्-आडि नी.
पाडल् ऎण् : 15
नी निण्ड्रु तानवर् मा-मदिल् मूण्ड्रुम् निरन्दु उडने
ती निण्ड्रु वेवच् चिलै-तॊट्टवाऱु ऎन्? तिरङ्गु-वल्-वाय्प्
पेय् निण्ड्रु पाडप्, पॆरुङ्गाडु अरङ्गाप् पॆयर्न्दु नट्टम्
पोय् निण्ड्रु पूदम् तॊऴच् चॆय्युम् मॊय्-कऴऱ्-पुण्णियने.
पाडल् ऎण् : 16
पुण्णियङ्गळ् सॆय्दनवुम् पॊय्न्नॆऱिक्कण् सारामे,
ऎण्णि ओर् ऐन्दुम् इसैन्दनवाल्; - तिण्णिय
कैम्माविन् ईर्-उरिवै मूवुरुवुम् पोर्त्तु-उगन्द
अम्मानुक्कु आट्पट्ट अन्बु.
पाडल् ऎण् : 17
अन्बाल् अडैवदु ऎव्वाऱुगॊल्? मेलदोर् आडु-अरवम्
तन्बाल् ऒरुवरैच् चार ऒट्टादु; अदुवेयुम् अण्ड्रि,
मुन्बु आयिन तलैयोडुगळ् कोत्तु अवै आर्त्तु, वॆळ्ळै
ऎन्बु आयिनवुम् अणिन्दु, अङ्गु ओर् एऱु उगन्दु एऱुवदे.
पाडल् ऎण् : 18
एऱु अलाल् एऱ मट्रु इल्लैये? ऎम्बॆरुमान्,
आऱु-ऎलाम् पायुम् अविर्-सडैयार्, - वेऱु ओर्
पडम् कुलवु नागम् उमिऴ्, पण्डु अमरर्च् चूऴ्न्द,
तडम्-कडल् नञ्जु उण्डार् तमक्कु.
पाडल् ऎण् : 19
तमक्कु ऎण्ड्रुम् इन्-पणि सॆय्दु इरुप्पेमुक्कुत्, ताम् ऒरुनाळ्
ऎमक्कु ऎण्ड्रु सॊन्नाल् अरुळुङ्गॊलाम्? इणै यादुम् इण्ड्रिच्
चुमक्किण्ड्र पिळ्ळै-वॆळ्-एऱु ऒप्पदु ऒण्ड्रु तॊण्डैक्कनि-वाय्
उमैक्कु ऎण्ड्रु तेडिप् पॆऱादु उडने कॊण्ड उत्तमरे.
पाडल् ऎण् : 20
उत्तमराय् वाऴ्वार् उलन्दक्काल् उट्रार्गळ्
सॆत्त मरम् अडुक्कित् तीयामुन्, - उत्तमनाय्
नीळ्-आऴि नञ्जु उण्ड नॆय्-आडि-तन् तिऱमे
केळ् आऴि नॆञ्जे किळर्न्दु.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
కారైక్కాల్ అమ్మైయార్ - తిరు ఇరట్టైమణి-మాలై - పదిగం 11.3
( కట్టళైక్ కలిత్తుఱై & వెణ్బా - meter - 20 songs with end-to-start link between them)
పాడల్ ఎణ్ : 1
కిళర్న్దు ఉందు వెం తుయర్ వందు అడుం పోదు అంజి, నెంజం, ఎన్బాయ్త్
తళర్న్దు ఇంగు ఇరుత్తల్ తవిర్ది కండాయ్; తళరాదు వంది;
వళర్న్దు ఉందు గంగైయుం వానత్తిడై వళర్ కోట్టు-వెళ్ళై
ఇళం-తింగళుం ఎరుక్కుం ఇరుక్కుం సెన్ని ఈసనుక్కే.
పాడల్ ఎణ్ : 2
ఈసన్ అవన్ అల్లాదు ఇల్లై ఎన నినైందు,
కూసి, మనత్తగత్తుక్ కొండిరుందు - పేసి,
మఱవాదు వాఴ్వారై మణ్ణులగత్తు ఎండ్రుం
పిఱవామైక్ కాక్కుం పిరాన్.
పాడల్ ఎణ్ : 3
పిరాన్ ఎండ్రు తన్నైప్ పన్నాళ్ పరవిత్ తొఴువార్ ఇడర్ కండు
ఇరాన్ ఎన నిఱ్కిండ్ర ఈసన్ కండీర్; ఇన-వండు కిండిప్
పొరానిండ్ర కొండ్రైప్ పొదుంబర్క్ కిడందు పొమ్మెన్ తుఱైవాయ్
అరా నిండ్రు ఇరైక్కుం సడైచ్-చెంబొన్ నీళ్-ముడి అందణనే.
పాడల్ ఎణ్ : 4
అందణనైత్ తంజం ఎండ్రు ఆట్పట్టార్ ఆఴామే
వందు-అణైందు కాత్తు అళిక్కుం వల్లాళన్; - కొందు అణైంద
పొన్ కండాల్ పూణాదే * కోళ్-అరవం పూండానే;
ఎన్ కండాయ్ నెంజే ఇని.
(* కోణాగం (= కోళ్-నాగం) in Arumuga Navalar edition)
పాడల్ ఎణ్ : 5
ఇని వార్-సడైయినిల్ గంగై ఎన్బాళై అంగత్తు ఇరుంద
కని-వాయ్ మలైమంగై కాణిల్ ఎన్ సెయ్ది? కైయిల్ సిలైయాల్
మునివార్ తిరిబురం మూండ్రుం వెందు అండ్రు సెందీయిల్ మూఴ్గత్
తని వార్-కణై ఒండ్రినాల్ మిగక్ కోత్త ఎం సంగరనే.
పాడల్ ఎణ్ : 6
సంగరనైత్, తాఴ్న్ద సడైయానై, అచ్చడైమేల్
పొంగు-అరవం వైత్తు-ఉగంద పుణ్ణియనై, - అంగు ఒరు నాళ్
ఆఆ ఎండ్రు ఆఴామైక్ కాప్పానై, ఎప్పొఴుదుం
ఒవాదు నెంజే ఉరై.
పాడల్ ఎణ్ : 7
ఉరైక్కప్ పడువదుం ఒండ్రు ఉండు కేట్కిన్; సెవ్-వాన్-తొడైమేల్
ఇరైక్కిండ్ర పాంబినై ఎండ్రుం తొడేల్; ఇఴిందు ఓట్టందు ఎంగుం *
తిరైక్కిండ్ర గంగైయుం తేన్ నిండ్ర కొండ్రైయుం సెంజడైమేల్
విరైక్కిండ్ర వన్నియుం సెన్నిత్తలై వైత్త వేదియనే.
* (The Dharmapuram adheenam edition has it as "ఇఴిందోట్టత్తెంగుం". I believe that is incorrect);
పాడల్ ఎణ్ : 8
వేదియనై, వేదప్ పొరుళానై, వేదత్తుక్కు
ఆదియనై, ఆదిరై నన్నాళానైచ్, - చోదిప్పాన్
వల్-ఏనమాయ్ప్ * పుక్కు మాల్-అవనుం మాట్టాదు
కిల్లేన్ అమా ఎండ్రాన్ కీఴ్.
(అమా = అమ్మా)
(* For interpretation: Move కీఴ్ to line-3 before పుక్కు)
పాడల్ ఎణ్ : 9
కీఴ్ ఆయిన తున్బ-వెళ్ళక్-కడల్ తళ్ళి ఉళ్ళుఱప్పోయ్
వీఴాదు ఇరుందు ఇన్బం వేండుం ఎన్బీర్; విరవార్ పురంగళ్
పాఴాయిడక్ కండ కండన్; ఎణ్-తోళన్; పైంబొఱ్కఴలే
తాఴాదు ఇఱైంజిప్ పణిందు పన్నాళుం తలైనిన్మినే.
పాడల్ ఎణ్ : 10
తలైయాయ ఐందినైయుం సాదిత్తుత్, తాఴ్న్దు,
తలైయాయిన ఉణర్న్దోర్ కాణ్బర్; - తలైయాయ
అండత్తాన్, ఆదిరైయాన్, ఆలాలం ఉండు ఇరుండ
కండత్తాన్ సెంబొఱ్కఴల్.
పాడల్ ఎణ్ : 11
కఴఱ్కొండ సేవడి కాణల్-ఉట్రార్-తమ్మైప్ పేణల్-ఉట్రార్
నిఴఱ్కండ పోఴ్దత్తుం నిల్లా వినై; నిగర్ ఏదుం ఇండ్రిత్
తఴఱ్కొండ సోదిచ్ చెం-మేని ఎమ్మానైక్, కైం-మామలర్-తూయ్త్
తొఴక్ కండు నిఱ్కిఱ్కుమో తున్ని నం అడుం తొల్-వినైయే.
పాడల్ ఎణ్ : 12
తొల్లై-వినై వందు సూఴామున్, తాఴామే
ఒల్లై వణంగి, ఉమై ఎన్నుం - మెల్లియల్ ఓర్
కూట్రానైక్, కూట్రు ఉరువం కాయ్న్దానై, వాయ్న్దు ఇలంగు
నీట్రానై, నెంజే నినై.
పాడల్ ఎణ్ : 13
నినైయాదు ఒఴిది కండాయ్; నెంజమే, ఇంగు ఒర్ తంజం ఎండ్రు
మనైయాళైయుం మక్కళ్ తమ్మైయుం తేఱి, ఓర్ ఆఱు పుక్కు(మ్)
ననైయాచ్ చడైముడి నంబన్, నం తాదై, నొందాద సెందీ
అనైయాన్, అమరర్-పిరాన్, అండ-వాణన్ అడిత్తలమే.
* (మ్) - elides due to sandhi
పాడల్ ఎణ్ : 14
అడిత్తలత్తిన్ అండ్రు అరక్కన్ ఐన్నాన్గు తోళుం
ముడిత్తలముం నీ మురిత్తవాఱు ఎన్? - ముడిత్తలత్తిన్
ఆఱు-ఆడి, ఆఱా అనల్-ఆడి, అవ్వనలిన్
నీఱు-ఆడి, నెయ్-ఆడి నీ.
పాడల్ ఎణ్ : 15
నీ నిండ్రు తానవర్ మా-మదిల్ మూండ్రుం నిరందు ఉడనే
తీ నిండ్రు వేవచ్ చిలై-తొట్టవాఱు ఎన్? తిరంగు-వల్-వాయ్ప్
పేయ్ నిండ్రు పాడప్, పెరుంగాడు అరంగాప్ పెయర్న్దు నట్టం
పోయ్ నిండ్రు పూదం తొఴచ్ చెయ్యుం మొయ్-కఴఱ్-పుణ్ణియనే.
పాడల్ ఎణ్ : 16
పుణ్ణియంగళ్ సెయ్దనవుం పొయ్న్నెఱిక్కణ్ సారామే,
ఎణ్ణి ఓర్ ఐందుం ఇసైందనవాల్; - తిణ్ణియ
కైమ్మావిన్ ఈర్-ఉరివై మూవురువుం పోర్త్తు-ఉగంద
అమ్మానుక్కు ఆట్పట్ట అన్బు.
పాడల్ ఎణ్ : 17
అన్బాల్ అడైవదు ఎవ్వాఱుగొల్? మేలదోర్ ఆడు-అరవం
తన్బాల్ ఒరువరైచ్ చార ఒట్టాదు; అదువేయుం అండ్రి,
మున్బు ఆయిన తలైయోడుగళ్ కోత్తు అవై ఆర్త్తు, వెళ్ళై
ఎన్బు ఆయినవుం అణిందు, అంగు ఓర్ ఏఱు ఉగందు ఏఱువదే.
పాడల్ ఎణ్ : 18
ఏఱు అలాల్ ఏఱ మట్రు ఇల్లైయే? ఎంబెరుమాన్,
ఆఱు-ఎలాం పాయుం అవిర్-సడైయార్, - వేఱు ఓర్
పడం కులవు నాగం ఉమిఴ్, పండు అమరర్చ్ చూఴ్న్ద,
తడం-కడల్ నంజు ఉండార్ తమక్కు.
పాడల్ ఎణ్ : 19
తమక్కు ఎండ్రుం ఇన్-పణి సెయ్దు ఇరుప్పేముక్కుత్, తాం ఒరునాళ్
ఎమక్కు ఎండ్రు సొన్నాల్ అరుళుంగొలాం? ఇణై యాదుం ఇండ్రిచ్
చుమక్కిండ్ర పిళ్ళై-వెళ్-ఏఱు ఒప్పదు ఒండ్రు తొండైక్కని-వాయ్
ఉమైక్కు ఎండ్రు తేడిప్ పెఱాదు ఉడనే కొండ ఉత్తమరే.
పాడల్ ఎణ్ : 20
ఉత్తమరాయ్ వాఴ్వార్ ఉలందక్కాల్ ఉట్రార్గళ్
సెత్త మరం అడుక్కిత్ తీయామున్, - ఉత్తమనాయ్
నీళ్-ఆఴి నంజు ఉండ నెయ్-ఆడి-తన్ తిఱమే
కేళ్ ఆఴి నెంజే కిళర్న్దు .
================ ============
No comments:
Post a Comment