Friday, July 17, 2015

6.98 - நாமார்க்குங் குடியல்லோம் - பொது - (மறுமாற்றத் திருத்தாண்டகம்)


6) padhigam 6.98
6.98 - nām ārkkum kuḍi allōm - word by word meaning - English translation: https://drive.google.com/open?id=1dsWpsOr59faSXtmhuz7w1bUAtlDCEZiT

On YouTube:
English discussion: 6.98 - common - nām ārkkum kuḍi allōm - Part- - Explanation in English
=======================

Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.98 - பொது (மறுமாற்றத் திருத்தாண்டகம்)


Background:

சிறுவயதில் பெற்றோரை இழந்து தமக்கையார் திலகவதியார் அரவணைப்பில் வளர்ந்த மருள்நீக்கியார், இளமையில் சமண சமயத்தைச் சேர்ந்து தருமசேனர் என்ற தலைவராகத் திகழ்ந்தார். திலகவதியாரின் நெடுநாள் வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபெருமான் அருளால் தம்பியாருக்குத் தீராச் சூலைநோய் உண்டாகித், திருவதிகையில் தொண்டுசெய்து வாழ்ந்த திலகவதியார் மடத்திற்கு அவர் வந்துசேர்ந்தார். திலகவதியார் திருவைந்தெழுத்து ஓதி அளித்த திருநீற்றைப் பூசிக்கொண்டு திருவதிகை வீரட்டானம் கோயிலுட் புகுந்து ஈசனைக் 'கூற்றாயினவாறு' என்று தொடங்கும் இப்பதிகத்தைப் பாடி வணங்கினார். சிவன் அருளால் சூலைநோய் தீர்ந்தது. வானில் எழுந்த சிவன் வாக்கால் 'திருநாவுக்கரசர்' என்ற பெயர் பெற்றார்.


இந்தச் செய்தியறிந்த சமணர் தம் சமயம் வீழ்ந்தது எனக் கலங்கினர். பல்லவ அரசன் இப்படி நிகழ்ந்ததை அறிந்திடின் அவனும் சைவன் ஆகிவிடுவான் என்றும், அப்படி அவன் மாறிவிட்டால் நம் சீவனோபாயமும் கெடும் என்றும் அஞ்சி, அரசனிடம் சென்று, '"தமக்கையார் சைவத்தில் இருத்தலினாலே, தருமசேனரும் தாம் பொய்யாக உண்டாக்கிக் கொண்டதொரு சூலை நோய் இங்குத் தீர்ந்திலது என்று இங்குக் கெடுதி உண்டாக அங்குச் சென்று அதனால் நமது சமயலங்கனமும் (சமய வரம்பை மீறுதல்) நம் தெய்வ நிந்தையும் செய்தார்" என்று சொல்வோம் என்று முடிவெடுத்தனர். அவர்கள் அவ்வாறே பல்லவ அரசனிடம் சொல்லி, "அறிவில்லாத அவரை வருத்தக் கடவாய்" என்றனர். பல்லவனும் மந்திரிகளை நோக்கிப், 'பொருள் கொண்டு விட்டுவிடாது தருமசேனரைக் கொண்டு வாரும்' என்று ஆணையிட்டான். அரசன் பணியைச் சிரமேற்கொண்ட அமைச்சர் அதிகைப்பதி சென்று அரசன் ஆணையைத் தெரிவித்தபொழுது அதற்கு மறுமொழியாகத் திருநாவுக்கரசர் பாடியருளியது இத்திருப்பதிகம்.


அரசன் அழைத்ததற்கு, மறு மொழியாக இப்பதிகம் அமைந்திருப்பதால் இதனை மறுமாற்றத் தாண்டகம் என அழைப்பர்.

--------

King's ministers and soldiers surround Thirunavukkarasar and tell him king's order

#1357 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 91

சென்றணைந்த வமைச்சருடன் சேனைவீ ரருஞ்சூழ்ந்து

மின்றயங்கு புரிவேணி வேதியனா ரடியவரை

"யின்றுநுமை யரசனழைத் தெமைவிடுத்தான்; போது"மென

நின்றவரை நேர்நோக்கி நிறைதவத்தோ ருரைசெய்வார்,


Thirunavukkarasar refuses to comply with king's order

#1358 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 92

நாமார்க்குங் குடியல்லோ' மென்றெடுத்து நான்மறையின்

கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத்

தேமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி

"யாமாறு நீரழைக்கு மடைவிலமென் றருள்செய்தார்.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.98 - பொது (மறுமாற்றத் திருத்தாண்டகம்)


பாடல் எண் : 1

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

.. நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

.. இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

.. சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

.. கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.


பாடல் எண் : 2

அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்

.. அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்

புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி

.. யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே

இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்

.. இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்

துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்

.. சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.


பாடல் எண் : 3

வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்

.. மாதேவா மாதேவா என்று வாழ்த்தி

நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்

.. நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோம்

காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்

.. கன்மனமே நன்மனமாக் கரையப் பெற்றோம்

பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்

.. பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.


பாடல் எண் : 4

உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்

.. உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே

செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்

.. நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்

நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்

.. நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்

சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட

.. சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.


பாடல் எண் : 5

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்

.. இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை

சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்

.. சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்

ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே

.. உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்

பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்

.. புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.


பாடல் எண் : 6

மூவுருவின் முதலுருவாய் இருநான் கான

.. மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்

தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்

.. செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்

நாவுடையார் நமையாள வுடையா ரன்றே

.. நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான

காவலரே யேவி விடுத்தா ரேனுங்

.. கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே.


பாடல் எண் : 7

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்

.. நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி

அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி

.. அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்

தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்

.. ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்

பொற்புடைய பேசக் கடவோம் பேயர்

.. பேசுவன பேசுதுமே பிழையற் றோமே.


பாடல் எண் : 8

ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் தன்னை

.. இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க

தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்

.. சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற

நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்

.. நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன

வாசக மெல்லாம் மறந்தோ மன்றே

.. வந்தீரார் மன்னவனா வான்றா னாரே.


பாடல் எண் : 9

சடையுடையான் சங்கக் குழையோர் காதன்

.. சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி

விடையுடையான் வேங்கை அதள்மே லாடை

.. வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த

உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்

.. உம்மோடு மற்று முளராய் நின்ற

படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்

.. பாசமற வீசும் படியோம் நாமே.


பாடல் எண் : 10

நாவார நம்பனையே பாடப் பெற்றோம்

.. நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்

ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்

.. அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட

தேவாதி தேவன் சிவனென் சிந்தை

.. சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து

கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்

.. குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே.

============================= ============================


Word separated version:


King's ministers and soldiers surround Thirunavukkarasar and tell him king's order

#1357 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 91

சென்று அணைந்த அமைச்சருடன் சேனை-வீரரும் சூழ்ந்து

மின்-தயங்கு புரி-வேணி வேதியனார் அடியவரை,

"இன்று நுமை அரசன் அழைத்து எமை விடுத்தான்; போதும்" என

நின்றவரை நேர் நோக்கி நிறை-தவத்தோர் உரை-செய்வார்,


Thirunavukkarasar refuses to comply with king's order

#1358 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 92

நாம் ஆர்க்கும் குடி அல்லோம்' என்று எடுத்து, நான்மறையின்

கோமானை, நதியினுடன் குளிர்-மதி வாழ்-சடையானைத்

தேம் மாலைச் செந்தமிழ் இன் செழும் திருத்-தாண்டகம் பாடி

"ஆம் ஆறு நீர் அழைக்கும் அடைவு இலம்" என்று அருள்செய்தார்.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.98 - பொது (மறுமாற்றத் திருத்தாண்டகம்)


பாடல் எண் : 1

நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;

.. நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;

ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;

.. இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை;

தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன

.. சங்கரன், நற்-சங்க வெண்-குழை ஓர் காதில்

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்

.. கொய்ம்-மலர்ச்சேவடி இணையே குறுகினோமே.


பாடல் எண் : 2

அகலிடமே இடம் ஆக, ஊர்கள் தோறும்

.. அட்டு உண்பார் இட்டு உண்பார், விலக்கார் ஐயம்;

புகலிடம் ஆம் அம்பலங்கள்; பூமி தேவி

.. உடன் கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே;

இகல் உடைய விடை உடையான் ஏன்று கொண்டான்;

.. இனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்;

துகில் உடுத்துப், பொன் பூண்டு திரிவார் சொல்லும்

.. சொல் கேட்கக் கடவோமோ? துரிசு அற்றோமே.


பாடல் எண் : 3

வார் ஆண்ட கொங்கையர் சேர்-மனையில் சேரோம்;

.. மாதேவா மாதேவா என்று வாழ்த்தி,

நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்;

.. நீறு அணியும் கோலமே நிகழப் பெற்றோம்;

கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக்,

.. கல்-மனமே நன்-மனமாக் கரையப் பெற்றோம்;

பார் ஆண்டு, பகடு ஏறி வருவார் சொல்லும்

.. பணி கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே.


பாடல் எண் : 4

உறவு ஆவார் உருத்திர பல்-கணத்தினோர்கள்;

.. உடுப்பன கோவணத்தொடு கீள் உளவாம் அன்றே;

செறுவாரும் செறமாட்டார்; தீமை தானும்

.. நன்மையாய்ச் சிறப்பதே; பிறப்பில் செல்லோம்;

நறவு ஆர் பொன்-இதழி நறும் தாரோன் சீர் ஆர்

.. நமச்சிவாயச் சொல்ல வல்லோம் நாவால்;

சுறவு ஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட

.. சுடர்-நயனச் சோதியையே தொடர்வு உற்றோமே.


பாடல் எண் : 5

என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்;

.. இருநிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை;

சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்;

.. சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்;

ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே;

.. உறு-பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்;

பொன்றினார் தலைமாலை அணிந்த சென்னிப்

.. புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே.


பாடல் எண் : 6

" 'மூ-உருவின் முதல் உருவாய், இரு-நான்கு ஆன

.. மூர்த்தியே' என்று முப்பத்து மூவர்

தேவர்களும், மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்

.. செம்பவளத் திருமேனிச் சிவனே" என்னும்

நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;

.. நாவலந்-தீவகத்தினுக்கு நாதர் ஆன

காவலரே ஏவி விடுத்தாரேனும்

.. கடவம் அல்லோம்; கடுமையொடு களவு அற்றோமே.


பாடல் எண் : 7

நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும்,

.. நெருப்பினொடு காற்று ஆகி, நெடு-வான் ஆகி,

அற்பமொடு பெருமையும் ஆய், அருமை ஆகி

.. அன்பு உடையார்க்கு எளிமையது ஆய், அளக்கல் ஆகாத்

தற்பரம் ஆய்ச் சதாசிவம் ஆய்த், தானும் யானும்

.. ஆகின்ற தன்மையனை, நன்மையோடும்

பொற்பு உடைய பேசக் கடவோம்; பேயர்

.. பேசுவன பேசுதுமே? பிழை அற்றோமே.


பாடல் எண் : 8

ஈசனை எவ்வுலகினுக்கும், இறைவன் தன்னை,

.. இமையவர்தம் பெருமானை, எரியாய் மிக்க

தேசனைச், செம்-மேனி வெண்-நீற்றானைச்,

.. சிலம்பு-அரையன் பொற்பாவை நலம் செய்கின்ற

நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்;

.. நின்று உண்பார் எம்மை நினையச் சொன்ன

வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே;

.. வந்தீர் ஆர்? மன்னவன் ஆவான்தான் ஆரே?


பாடல் எண் : 9

சடை உடையான், சங்கக்-குழை ஓர் காதன்,

.. சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி,

விடை உடையான், வேங்கை அதள் மேலாடை

.. வெள்ளிபோல் புள்ளி உழைமான்-தோல் சார்ந்த

உடை உடையான், நம்மை உடையான் கண்டீர்;

.. உம்மோடும் மற்றும் உளராய் நின்ற

படை உடையான் பணி கேட்கும் பணியோம் அல்லோம்;

.. பாசம் அற வீசும்படியோம் நாமே.


பாடல் எண் : 10

நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்;

.. நாண் அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்;

ஆஆ என்று எமை ஆள்வான், அமரர் நாதன்,

.. அயனொடு மாற்கு அறிவு-அரிய அனலாய் நீண்ட

தேவாதிதேவன், சிவன் என் சிந்தை

.. சேர்ந்து இருந்தான்; தென்திசைக்கோன் தானே வந்து

கோ ஆடிக், குற்றேவல் செய்கென்றாலும்

.. குணமாகக் கொள்ளோம்; எண்குணத்து உளோமே.

=============================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


King's ministers and soldiers surround Thirunavukkarasar and tell him king's order

#1357 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 91

seṇḍru aṇainda amaiccaruḍan sēnai-vīrarum sūḻndu

min-tayaṅgu puri-vēṇi vēdiyanār aḍiyavarai,

"iṇḍru numai arasan aḻaittu emai viḍuttān; pōdum" ena

niṇḍravarai nēr nōkki niṟai-tavattōr urai-seyvār,


Thirunavukkarasar refuses to comply with king's order

#1358 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 92

nām ārkkum kuḍi allōm' eṇḍru eḍuttu, nānmaṟaiyin

kōmānai, nadiyinuḍan kuḷir-madi vāḻ-saḍaiyānait

tēm mālaic cendamiḻ in seḻum tirut-tāṇḍagam pāḍi

"ām āṟu nīr aḻaikkum aḍaivu ilam" eṇḍru aruḷseydār.


tirunāvukkarasar tēvāram - padigam 6.98 - podu (maṟumāṭrat tiruttāṇḍagam)


pāḍal eṇ : 1

nām ārkkum kuḍi allōm; namanai añjōm;

.. naragattil iḍarppaḍōm; naḍalai illōm;

ēmāppōm; piṇi aṟiyōm; paṇivōm allōm;

.. inbamē ennāḷum tunbam illai;

tām ārkkum kuḍi allāt tanmai āna

.. saṅgaran, naṟ-saṅga veṇ-kuḻai ōr kādil

kōmāṟkē nām eṇḍrum mīḷā āḷāyk

.. koym-malarccēvaḍi iṇaiyē kuṟuginōmē.


pāḍal eṇ : 2

agaliḍamē iḍam āga, ūrgaḷ tōṟum

.. aṭṭu uṇbār iṭṭu uṇbār, vilakkār aiyam;

pugaliḍam ām ambalaṅgaḷ; būmi dēvi

.. uḍan kiḍandāl puraṭṭāḷ; poy aṇḍru, meyyē;

igal uḍaiya viḍai uḍaiyān ēṇḍru koṇḍān;

.. ini ēdum kuṟaivu ilōm; iḍargaḷ tīrndōm;

tugil uḍuttup, pon pūṇḍu tirivār sollum

.. sol kēṭkak kaḍavōmō? turisu aṭrōmē.


pāḍal eṇ : 3

vār āṇḍa koṅgaiyar sēr-manaiyil sērōm;

.. mādēvā mādēvā eṇḍru vāḻtti,

nīr āṇḍa purōdāyam āḍap peṭrōm;

.. nīṟu aṇiyum kōlamē nigaḻap peṭrōm;

kār āṇḍa maḻai pōlak kaṇṇīr sōrak,

.. kal-manamē nan-manamāk karaiyap peṭrōm;

pār āṇḍu, pagaḍu ēṟi varuvār sollum

.. paṇi kēṭkak kaḍavōmō? paṭru aṭrōmē.


pāḍal eṇ : 4

uṟavu āvār uruttira pal-kaṇattinōrgaḷ;

.. uḍuppana kōvaṇattoḍu kīḷ uḷavām aṇḍrē;

seṟuvārum seṟamāṭṭār; tīmai tānum

.. nanmaiyāyc ciṟappadē; piṟappil sellōm;

naṟavu ār pon-idaḻi naṟum tārōn sīr ār

.. namaccivāyac colla vallōm nāvāl;

suṟavu ārum koḍiyānaip poḍiyāk kaṇḍa

.. suḍar-nayanac cōdiyaiyē toḍarvu uṭrōmē.


pāḍal eṇ : 5

eṇḍrum nām yāvarkkum iḍaivōm allōm;

.. irunilattil emakku edir āvārum illai;

seṇḍru nām siṟudeyvam sērvōm allōm;

.. sivaberumān tiruvaḍiyē sērap peṭrōm;

oṇḍrināl kuṟai uḍaiyōm allōm aṇḍrē;

.. uṟu-piṇiyār seṟal oḻindiṭṭu ōḍip pōnār;

poṇḍrinār talaimālai aṇinda sennip

.. puṇṇiyanai naṇṇiya puṇṇiyattu uḷōmē.


pāḍal eṇ : 6

" 'mū-uruvin mudal uruvāy, iru-nāngu āna

.. mūrttiyē' eṇḍru muppattu mūvar

dēvargaḷum, mikkōrum siṟandu vāḻttum

.. sembavaḷat tirumēnic civanē" ennum

nā uḍaiyār namai āḷa uḍaiyār aṇḍrē;

.. nāvalan-dīvagattinukku nādar āna

kāvalarē ēvi viḍuttārēnum

.. kaḍavam allōm; kaḍumaiyoḍu kaḷavu aṭrōmē.


pāḍal eṇ : 7

niṟpanavum, naḍappanavum, nilanum, nīrum,

.. neruppinoḍu kāṭru āgi, neḍu-vān āgi,

aṟpamoḍu perumaiyum āy, arumai āgi

.. anbu uḍaiyārkku eḷimaiyadu āy, aḷakkal āgāt

taṟparam āyc cadāsivam āyt, tānum yānum

.. āgiṇḍra tanmaiyanai, nanmaiyōḍum

poṟpu uḍaiya pēsak kaḍavōm; pēyar

.. pēsuvana pēsudumē? piḻai aṭrōmē.


pāḍal eṇ : 8

īsanai evvulaginukkum, iṟaivan tannai,

.. imaiyavardam perumānai, eriyāy mikka

tēsanaic, cem-mēni veṇ-nīṭrānaic,

.. silambu-araiyan poṟpāvai nalam seygiṇḍra

nēsanai, nittalum ninaiyap peṭrōm;

.. niṇḍru uṇbār emmai ninaiyac conna

vāsagam ellām maṟandōm aṇḍrē;

.. vandīr ār? mannavan āvāndān ārē?


pāḍal eṇ : 9

saḍai uḍaiyān, saṅgak-kuḻai ōr kādan,

.. sāmbalum pāmbum aṇinda mēni,

viḍai uḍaiyān, vēṅgai adaḷ mēlāḍai

.. veḷḷibōl puḷḷi uḻaimān-tōl sārnda

uḍai uḍaiyān, nammai uḍaiyān kaṇḍīr;

.. ummōḍum maṭrum uḷarāy niṇḍra

paḍai uḍaiyān paṇi kēṭkum paṇiyōm allōm;

.. pāsam aṟa vīsumbaḍiyōm nāmē.


pāḍal eṇ : 10

nā āra nambanaiyē pāḍap peṭrōm;

.. nāṇ aṭrār naḷḷāmē viḷḷap peṭrōm;

āā eṇḍru emai āḷvān, amarar nādan,

.. ayanoḍu māṟku aṟivu-ariya analāy nīṇḍa

dēvādidēvan, sivan en sindai

.. sērndu irundān; ten-disaikkōn tānē vandu

kō āḍik, kuṭrēval seygeṇḍrālum

.. guṇamāgak koḷḷōm; eṇguṇattu uḷōmē.

=============================


Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


King's ministers and soldiers surround Thirunavukkarasar and tell him king's order

#1357 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 91

सॆण्ड्रु अणैन्द अमैच्चरुडन् सेनै-वीररुम् सूऴ्न्दु

मिन्-तयङ्गु पुरि-वेणि वेदियनार् अडियवरै,

"इण्ड्रु नुमै अरसन् अऴैत्तु ऎमै विडुत्तान्; पोदुम्" ऎन

निण्ड्रवरै नेर् नोक्कि निऱै-तवत्तोर् उरै-सॆय्वार्,


Thirunavukkarasar refuses to comply with king's order

#1358 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 92

नाम् आर्क्कुम् कुडि अल्लोम्' ऎण्ड्रु ऎडुत्तु, नान्मऱैयिन्

कोमानै, नदियिनुडन् कुळिर्-मदि वाऴ्-सडैयानैत्

तेम् मालैच् चॆन्दमिऴ् इन् सॆऴुम् तिरुत्-ताण्डगम् पाडि

"आम् आऱु नीर् अऴैक्कुम् अडैवु इलम्" ऎण्ड्रु अरुळ्सॆय्दार्.


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 6.98 - पॊदु (मऱुमाट्रत् तिरुत्ताण्डगम्)


पाडल् ऎण् : 1

नाम् आर्क्कुम् कुडि अल्लोम्; नमनै अञ्जोम्;

.. नरगत्तिल् इडर्प्पडोम्; नडलै इल्लोम्;

एमाप्पोम्; पिणि अऱियोम्; पणिवोम् अल्लोम्;

.. इन्बमे ऎन्नाळुम् तुन्बम् इल्लै;

ताम् आर्क्कुम् कुडि अल्लात् तन्मै आन

.. सङ्गरन्, नऱ्‌-सङ्ग वॆण्-कुऴै ओर् कादिल्

कोमाऱ्‌के नाम् ऎण्ड्रुम् मीळा आळाय्क्

.. कॊय्म्-मलर्च्चेवडि इणैये कुऱुगिनोमे.


पाडल् ऎण् : 2

अगलिडमे इडम् आग, ऊर्गळ् तोऱुम्

.. अट्टु उण्बार् इट्टु उण्बार्, विलक्कार् ऐयम्;

पुगलिडम् आम् अम्बलङ्गळ्; बूमि देवि

.. उडन् किडन्दाल् पुरट्टाळ्; पॊय् अण्ड्रु, मॆय्ये;

इगल् उडैय विडै उडैयान् एण्ड्रु कॊण्डान्;

.. इनि एदुम् कुऱैवु इलोम्; इडर्गळ् तीर्न्दोम्;

तुगिल् उडुत्तुप्, पॊन् पूण्डु तिरिवार् सॊल्लुम्

.. सॊल् केट्कक् कडवोमो? तुरिसु अट्रोमे.


पाडल् ऎण् : 3

वार् आण्ड कॊङ्गैयर् सेर्-मनैयिल् सेरोम्;

.. मादेवा मादेवा ऎण्ड्रु वाऴ्त्ति,

नीर् आण्ड पुरोदायम् आडप् पॆट्रोम्;

.. नीऱु अणियुम् कोलमे निगऴप् पॆट्रोम्;

कार् आण्ड मऴै पोलक् कण्णीर् सोरक्,

.. कल्-मनमे नन्-मनमाक् करैयप् पॆट्रोम्;

पार् आण्डु, पगडु एऱि वरुवार् सॊल्लुम्

.. पणि केट्कक् कडवोमो? पट्रु अट्रोमे.


पाडल् ऎण् : 4

उऱवु आवार् उरुत्तिर पल्-कणत्तिनोर्गळ्;

.. उडुप्पन कोवणत्तॊडु कीळ् उळवाम् अण्ड्रे;

सॆऱुवारुम् सॆऱमाट्टार्; तीमै तानुम्

.. नन्मैयाय्च् चिऱप्पदे; पिऱप्पिल् सॆल्लोम्;

नऱवु आर् पॊन्-इदऴि नऱुम् तारोन् सीर् आर्

.. नमच्चिवायच् चॊल्ल वल्लोम् नावाल्;

सुऱवु आरुम् कॊडियानैप् पॊडियाक् कण्ड

.. सुडर्-नयनच् चोदियैये तॊडर्वु उट्रोमे.


पाडल् ऎण् : 5

ऎण्ड्रुम् नाम् यावर्क्कुम् इडैवोम् अल्लोम्;

.. इरुनिलत्तिल् ऎमक्कु ऎदिर् आवारुम् इल्लै;

सॆण्ड्रु नाम् सिऱुदॆय्वम् सेर्वोम् अल्लोम्;

.. सिवबॆरुमान् तिरुवडिये सेरप् पॆट्रोम्;

ऒण्ड्रिनाल् कुऱै उडैयोम् अल्लोम् अण्ड्रे;

.. उऱु-पिणियार् सॆऱल् ऒऴिन्दिट्टु ओडिप् पोनार्;

पॊण्ड्रिनार् तलैमालै अणिन्द सॆन्निप्

.. पुण्णियनै नण्णिय पुण्णियत्तु उळोमे.


पाडल् ऎण् : 6

" 'मू-उरुविन् मुदल् उरुवाय्, इरु-नान्गु आन

.. मूर्त्तिये' ऎण्ड्रु मुप्पत्तु मूवर्

देवर्गळुम्, मिक्कोरुम् सिऱन्दु वाऴ्त्तुम्

.. सॆम्बवळत् तिरुमेनिच् चिवने" ऎन्नुम्

ना उडैयार् नमै आळ उडैयार् अण्ड्रे;

.. नावलन्-दीवगत्तिनुक्कु नादर् आन

कावलरे एवि विडुत्तारेनुम्

.. कडवम् अल्लोम्; कडुमैयॊडु कळवु अट्रोमे.


पाडल् ऎण् : 7

निऱ्‌पनवुम्, नडप्पनवुम्, निलनुम्, नीरुम्,

.. नॆरुप्पिनॊडु काट्रु आगि, नॆडु-वान् आगि,

अऱ्‌पमॊडु पॆरुमैयुम् आय्, अरुमै आगि

.. अन्बु उडैयार्क्कु ऎळिमैयदु आय्, अळक्कल् आगात्

तऱ्‌परम् आय्च् चदासिवम् आय्त्, तानुम् यानुम्

.. आगिण्ड्र तन्मैयनै, नन्मैयोडुम्

पॊऱ्‌पु उडैय पेसक् कडवोम्; पेयर्

.. पेसुवन पेसुदुमे? पिऴै अट्रोमे.


पाडल् ऎण् : 8

ईसनै ऎव्वुलगिनुक्कुम्, इऱैवन् तन्नै,

.. इमैयवर्दम् पॆरुमानै, ऎरियाय् मिक्क

तेसनैच्, चॆम्-मेनि वॆण्-नीट्रानैच्,

.. सिलम्बु-अरैयन् पॊऱ्‌पावै नलम् सॆय्गिण्ड्र

नेसनै, नित्तलुम् निनैयप् पॆट्रोम्;

.. निण्ड्रु उण्बार् ऎम्मै निनैयच् चॊन्न

वासगम् ऎल्लाम् मऱन्दोम् अण्ड्रे;

.. वन्दीर् आर्? मन्नवन् आवान्दान् आरे?


पाडल् ऎण् : 9

सडै उडैयान्, सङ्गक्-कुऴै ओर् कादन्,

.. साम्बलुम् पाम्बुम् अणिन्द मेनि,

विडै उडैयान्, वेङ्गै अदळ् मेलाडै

.. वॆळ्ळिबोल् पुळ्ळि उऴैमान्-तोल् सार्न्द

उडै उडैयान्, नम्मै उडैयान् कण्डीर्;

.. उम्मोडुम् मट्रुम् उळराय् निण्ड्र

पडै उडैयान् पणि केट्कुम् पणियोम् अल्लोम्;

.. पासम् अऱ वीसुम्बडियोम् नामे.


पाडल् ऎण् : 10

ना आर नम्बनैये पाडप् पॆट्रोम्;

.. नाण् अट्रार् नळ्ळामे विळ्ळप् पॆट्रोम्;

आआ ऎण्ड्रु ऎमै आळ्वान्, अमरर् नादन्,

.. अयनॊडु माऱ्‌कु अऱिवु-अरिय अनलाय् नीण्ड

देवादिदेवन्, सिवन् ऎन् सिन्दै

.. सेर्न्दु इरुन्दान्; तॆन्-दिसैक्कोन् ताने वन्दु

को आडिक्, कुट्रेवल् सॆय्गॆण्ड्रालुम्

.. गुणमागक् कॊळ्ळोम्; ऎण्गुणत्तु उळोमे.

=============================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


King's ministers and soldiers surround Thirunavukkarasar and tell him king's order

#1357 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 91

సెండ్రు అణైంద అమైచ్చరుడన్ సేనై-వీరరుం సూఴ్న్దు

మిన్-తయంగు పురి-వేణి వేదియనార్ అడియవరై,

"ఇండ్రు నుమై అరసన్ అఴైత్తు ఎమై విడుత్తాన్; పోదుం" ఎన

నిండ్రవరై నేర్ నోక్కి నిఱై-తవత్తోర్ ఉరై-సెయ్వార్,


Thirunavukkarasar refuses to comply with king's order

#1358 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 92

నాం ఆర్క్కుం కుడి అల్లోం' ఎండ్రు ఎడుత్తు, నాన్మఱైయిన్

కోమానై, నదియినుడన్ కుళిర్-మది వాఴ్-సడైయానైత్

తేం మాలైచ్ చెందమిఴ్ ఇన్ సెఴుం తిరుత్-తాండగం పాడి

"ఆం ఆఱు నీర్ అఴైక్కుం అడైవు ఇలం" ఎండ్రు అరుళ్సెయ్దార్.


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 6.98 - పొదు (మఱుమాట్రత్ తిరుత్తాండగం)


పాడల్ ఎణ్ : 1

నాం ఆర్క్కుం కుడి అల్లోం; నమనై అంజోం;

.. నరగత్తిల్ ఇడర్ప్పడోం; నడలై ఇల్లోం;

ఏమాప్పోం; పిణి అఱియోం; పణివోం అల్లోం;

.. ఇన్బమే ఎన్నాళుం తున్బం ఇల్లై;

తాం ఆర్క్కుం కుడి అల్లాత్ తన్మై ఆన

.. సంగరన్, నఱ్-సంగ వెణ్-కుఴై ఓర్ కాదిల్

కోమాఱ్కే నాం ఎండ్రుం మీళా ఆళాయ్క్

.. కొయ్మ్-మలర్చ్చేవడి ఇణైయే కుఱుగినోమే.


పాడల్ ఎణ్ : 2

అగలిడమే ఇడం ఆగ, ఊర్గళ్ తోఱుం

.. అట్టు ఉణ్బార్ ఇట్టు ఉణ్బార్, విలక్కార్ ఐయం;

పుగలిడం ఆం అంబలంగళ్; బూమి దేవి

.. ఉడన్ కిడందాల్ పురట్టాళ్; పొయ్ అండ్రు, మెయ్యే;

ఇగల్ ఉడైయ విడై ఉడైయాన్ ఏండ్రు కొండాన్;

.. ఇని ఏదుం కుఱైవు ఇలోం; ఇడర్గళ్ తీర్న్దోం;

తుగిల్ ఉడుత్తుప్, పొన్ పూండు తిరివార్ సొల్లుం

.. సొల్ కేట్కక్ కడవోమో? తురిసు అట్రోమే.


పాడల్ ఎణ్ : 3

వార్ ఆండ కొంగైయర్ సేర్-మనైయిల్ సేరోం;

.. మాదేవా మాదేవా ఎండ్రు వాఴ్త్తి,

నీర్ ఆండ పురోదాయం ఆడప్ పెట్రోం;

.. నీఱు అణియుం కోలమే నిగఴప్ పెట్రోం;

కార్ ఆండ మఴై పోలక్ కణ్ణీర్ సోరక్,

.. కల్-మనమే నన్-మనమాక్ కరైయప్ పెట్రోం;

పార్ ఆండు, పగడు ఏఱి వరువార్ సొల్లుం

.. పణి కేట్కక్ కడవోమో? పట్రు అట్రోమే.


పాడల్ ఎణ్ : 4

ఉఱవు ఆవార్ ఉరుత్తిర పల్-కణత్తినోర్గళ్;

.. ఉడుప్పన కోవణత్తొడు కీళ్ ఉళవాం అండ్రే;

సెఱువారుం సెఱమాట్టార్; తీమై తానుం

.. నన్మైయాయ్చ్ చిఱప్పదే; పిఱప్పిల్ సెల్లోం;

నఱవు ఆర్ పొన్-ఇదఴి నఱుం తారోన్ సీర్ ఆర్

.. నమచ్చివాయచ్ చొల్ల వల్లోం నావాల్;

సుఱవు ఆరుం కొడియానైప్ పొడియాక్ కండ

.. సుడర్-నయనచ్ చోదియైయే తొడర్వు ఉట్రోమే.


పాడల్ ఎణ్ : 5

ఎండ్రుం నాం యావర్క్కుం ఇడైవోం అల్లోం;

.. ఇరునిలత్తిల్ ఎమక్కు ఎదిర్ ఆవారుం ఇల్లై;

సెండ్రు నాం సిఱుదెయ్వం సేర్వోం అల్లోం;

.. సివబెరుమాన్ తిరువడియే సేరప్ పెట్రోం;

ఒండ్రినాల్ కుఱై ఉడైయోం అల్లోం అండ్రే;

.. ఉఱు-పిణియార్ సెఱల్ ఒఴిందిట్టు ఓడిప్ పోనార్;

పొండ్రినార్ తలైమాలై అణింద సెన్నిప్

.. పుణ్ణియనై నణ్ణియ పుణ్ణియత్తు ఉళోమే.


పాడల్ ఎణ్ : 6

" 'మూ-ఉరువిన్ ముదల్ ఉరువాయ్, ఇరు-నాన్గు ఆన

.. మూర్త్తియే' ఎండ్రు ముప్పత్తు మూవర్

దేవర్గళుం, మిక్కోరుం సిఱందు వాఴ్త్తుం

.. సెంబవళత్ తిరుమేనిచ్ చివనే" ఎన్నుం

నా ఉడైయార్ నమై ఆళ ఉడైయార్ అండ్రే;

.. నావలన్-దీవగత్తినుక్కు నాదర్ ఆన

కావలరే ఏవి విడుత్తారేనుం

.. కడవం అల్లోం; కడుమైయొడు కళవు అట్రోమే.


పాడల్ ఎణ్ : 7

నిఱ్పనవుం, నడప్పనవుం, నిలనుం, నీరుం,

.. నెరుప్పినొడు కాట్రు ఆగి, నెడు-వాన్ ఆగి,

అఱ్పమొడు పెరుమైయుం ఆయ్, అరుమై ఆగి

.. అన్బు ఉడైయార్క్కు ఎళిమైయదు ఆయ్, అళక్కల్ ఆగాత్

తఱ్పరం ఆయ్చ్ చదాసివం ఆయ్త్, తానుం యానుం

.. ఆగిండ్ర తన్మైయనై, నన్మైయోడుం

పొఱ్పు ఉడైయ పేసక్ కడవోం; పేయర్

.. పేసువన పేసుదుమే? పిఴై అట్రోమే.


పాడల్ ఎణ్ : 8

ఈసనై ఎవ్వులగినుక్కుం, ఇఱైవన్ తన్నై,

.. ఇమైయవర్దం పెరుమానై, ఎరియాయ్ మిక్క

తేసనైచ్, చెం-మేని వెణ్-నీట్రానైచ్,

.. సిలంబు-అరైయన్ పొఱ్పావై నలం సెయ్గిండ్ర

నేసనై, నిత్తలుం నినైయప్ పెట్రోం;

.. నిండ్రు ఉణ్బార్ ఎమ్మై నినైయచ్ చొన్న

వాసగం ఎల్లాం మఱందోం అండ్రే;

.. వందీర్ ఆర్? మన్నవన్ ఆవాందాన్ ఆరే?


పాడల్ ఎణ్ : 9

సడై ఉడైయాన్, సంగక్-కుఴై ఓర్ కాదన్,

.. సాంబలుం పాంబుం అణింద మేని,

విడై ఉడైయాన్, వేంగై అదళ్ మేలాడై

.. వెళ్ళిబోల్ పుళ్ళి ఉఴైమాన్-తోల్ సార్న్ద

ఉడై ఉడైయాన్, నమ్మై ఉడైయాన్ కండీర్;

.. ఉమ్మోడుం మట్రుం ఉళరాయ్ నిండ్ర

పడై ఉడైయాన్ పణి కేట్కుం పణియోం అల్లోం;

.. పాసం అఱ వీసుంబడియోం నామే.


పాడల్ ఎణ్ : 10

నా ఆర నంబనైయే పాడప్ పెట్రోం;

.. నాణ్ అట్రార్ నళ్ళామే విళ్ళప్ పెట్రోం;

ఆఆ ఎండ్రు ఎమై ఆళ్వాన్, అమరర్ నాదన్,

.. అయనొడు మాఱ్కు అఱివు-అరియ అనలాయ్ నీండ

దేవాదిదేవన్, సివన్ ఎన్ సిందై

.. సేర్న్దు ఇరుందాన్; తెన్-దిసైక్కోన్ తానే వందు

కో ఆడిక్, కుట్రేవల్ సెయ్గెండ్రాలుం

.. గుణమాగక్ కొళ్ళోం; ఎణ్గుణత్తు ఉళోమే.

=============================