Verses - PDF: 4.62 - வேதியா வேத கீதா - vēdiyā vēda gīdā
Audio: For audio file of discussion - please use the contact form shown on the right.On YouTube:
4.62 - வேதியா
வேத கீதா - vēdiyā vēda
gītā - Detailed translation - English:
https://drive.google.com/file/d/1mtfR-I8KH7viTX9EUPRCjcIHjHOKGNdN/view?usp=sharing
If you need English translation for this padhigam - 4.62 - vEdhiyA vEdha gIdhA: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS4_062.HTM
V. Subramanian
==================== ===============
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.62 - திரு-ஆலவாய் (மதுரை) - ( திருநேரிசை )
Background:
திருநாவுக்கரசு சுவாமிகள், சீர்திகழும் பாண்டிமா தேவியாரும், திருநீற்றின் சார்வு அடையக் கூன் நிமிர்ந்த நின்றசீர் நெடுமாறனாரும், குலச்சிறையாரும் மிக்க காதலுற்றுப் பணிந்து போற்ற மதுரையில் வாழ்ந்திருந்த காலத்தில், திருவாலவாயில் அமர்ந்த செழுஞ்சுடரும் செழும் பொருள் நூல் தரும் பெருமானுமாகிய சொக்கேசரைப் பாடிய நேரிசையும் தாண்டகமும் முதலான பெருவாய்மைத் தமிழுள் ஒன்று இத்திருப்பதிகம் ( தி.12 பெரிய புராணம். 405 - 6).
--------------
12.21 பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - # 405
சீர்திகழும் பாண்டிமா தேவியார் திருநீற்றின்
சார்வடையக் கூனிமிர்ந்த தென்னவனார் தம்முடனே
பார்பரவுங் குலச்சிறையார் வாகீசர் தமைப்பணிவுற்
றாரகிலாக் காதன்மிக வடிபோற்ற வங்கிருந்தார்.
12.21 பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - # 406
திருவால வாயமர்ந்த செஞ்சுடரைச் செழும்பொருணூல்
தருவானை நேரிசையுந் தாண்டகமு முதலான
பெருவாய்மைத் தமிழ்பாடிப் பேணுதிருப் பணிசெய்து
மருவார்தம் புரமெரித்தார் பூவணத்தை வந்தடைந்தார்,
--------------
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.62 - திரு-ஆலவாய் (மதுரை) - ( திருநேரிசை )
(அறுசீர் விருத்தம் - meter)
பாடல் எண் : 1
வேதியா வேத கீதா விண்ணவ ரண்ணா வென்றென்
றோதியே மலர்கள் தூவி யொருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
பாடல் எண் : 2
நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தீ
என்பொனே யீசா வென்றென் றேத்திநா னேசற் றென்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
பாடல் எண் : 3
ஒருமருந் தாகி யுள்ளா யும்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளா யாளும்வல் வினைக டீர்க்கும்
அருமருந் தால வாயில் அப்பனே யருள்செ யாயே.
பாடல் எண் : 4
செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்
ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
பாடல் எண் : 5
வெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலி கொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லி லுண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப் பளகனே னுளம தார
அண்டனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
பாடல் எண் : 6
எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநா னேசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்
கஞ்சலென் றால வாயில் அப்பனே யருள்செ யாயே.
பாடல் எண் : 7
வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேனுன்
செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
பாடல் எண் : 8
நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்க மாறும்
அறிவனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.
பாடல் எண் : 9
நலந்திகழ் வாயி னூலாற் சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை யரச தாள வருளினா யென்று திண்ணம்
கலந்துடன் வந்து நின்றாள் கருதிநான் காண்ப தாக
அலந்தன னால வாயில் அப்பனே யருள்செ யாயே.
பாடல் எண் : 10
பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் றாள்க ளென்றும் பிதற்றிநா னிருக்க மாட்டேன்
எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் தெடுத்தலு மிருபது தோள்
அடர்த்தனே யால வாயி லப்பனே யருள்செ யாயே.
============================= ============================
Word separated version:
--------------
12.21 பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - # 405
சீர் திகழும் பாண்டி மாதேவியார், திருநீற்றின்
சார்வு அடையக் கூன் நிமிர்ந்த தென்னவனார் தம்முடனே,
பார் பரவும் குலச்சிறையார் வாகீசர் தமைப் பணிவுற்று
ஆரகிலாக் காதல் மிக, அடி-போற்ற அங்கு இருந்தார்.
12.21 பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - # 406
திரு-ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச், செழும்பொருள்-நூல்
தருவானை, நேரிசையும் தாண்டகமும் முதலான
பெரு-வாய்மைத் தமிழ் பாடிப், பேணு திருப்பணி செய்து,
மருவார்தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார்,
--------------
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.62 - திரு-ஆலவாய் (மதுரை) - ( திருநேரிசை )
(அறுசீர் விருத்தம் - meter)
பாடல் எண் : 1
"வேதியா; வேத கீதா; விண்ணவர் அண்ணா;" என்று என்று
ஓதியே மலர்கள் தூவி, ஒருங்கி நின் கழல்கள் காணப்,
பாதி ஓர் பெண்ணை வைத்தாய், படர்-சடை மதியம் சூடும்
ஆதியே, ஆலவாயில் அப்பனே, அருள்-செயாயே.
பாடல் எண் : 2
"நம்பனே; நான்முகத்தாய்; நாதனே; ஞான மூர்த்தீ;
என் பொனே; ஈசா;" என்று என்று ஏத்தி, நான் ஏசற்று என்றும்
பின்-பினே திரிந்து, நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்,
அன்பனே, ஆலவாயில் அப்பனே, அருள்-செயாயே.
பாடல் எண் : 3
ஒரு-மருந்து ஆகி உள்ளாய்; உம்பரோடு உலகுக்கு எல்லாம்
பெரு-மருந்து ஆகி நின்றாய்; பேர்-அமுதின் சுவையாய்க்
கரு-மருந்து ஆகி உள்ளாய்; ஆளும் வல்-வினைகள் தீர்க்கும்
அரு-மருந்து ஆலவாயில் அப்பனே; அருள்-செயாயே.
பாடல் எண் : 4
செய்ய நின் கமல-பாதம் சேருமா, "தேவர் தேவே;
மை-அணி கண்டத்தானே; மான்-மறி மழு ஒன்று ஏந்தும்
சைவனே", சால ஞானம் கற்றறிவு இலாத நாயேன்,
"ஐயனே; ஆலவாயில் அப்பனே", அருள்-செயாயே.
பாடல் எண் : 5
வெண்-தலை கையில் ஏந்தி, மிகவும் ஊர் பலி கொண்டு, என்றும்
உண்டதும் இல்லை; சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்;
பண்டு உனை நினைய-மாட்டாப் பளகனேன் உளமது ஆர,
அண்டனே, ஆலவாயில் அப்பனே, அருள்-செயாயே.
பாடல் எண் : 6
"எஞ்சல்-இல் புகல் இது" என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி, மலரடி காணும் வண்ணம்,
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே, நாயேற்கு
"அஞ்சல்" என்று ஆலவாயில் அப்பனே அருள்-செயாயே.
பாடல் எண் : 7
வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்
செழு-மலர்ப்-பாதம் காணத், தெண்-திரை நஞ்சம் உண்ட
குழகனே, கோல வில்லீ, கூத்தனே, மாத்தாய் உள்ள
அழகனே, ஆலவாயில் அப்பனே, அருள்-செயாயே.
பாடல் எண் : 8
நறு-மலர் நீரும் கொண்டு, நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச்,
செறிவன சித்தம் வைத்துத், திருவடி சேரும் வண்ணம்,
மறி-கடல் வண்ணன் பாகா, மா-மறை அங்கம் ஆறும்
அறிவனே, ஆலவாயில் அப்பனே, அருள்-செயாயே.
பாடல் எண் : 9
நலம் திகழ் வாயின் நூலால் சருகு-இலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரசது ஆள அருளினாய் என்று, திண்ணம்
கலந்து உடன் வந்து, நின் தாள் கருதி நான் காண்பதாக
அலந்தனன், ஆலவாயில் அப்பனே, அருள்-செயாயே.
பாடல் எண் : 10
பொடிக்கொடு பூசிப், பொல்லாக் குரம்பையில் புந்தி ஒன்றிப்,
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்க-மாட்டேன்;
எடுப்பன் என்று இலங்கைக்-கோன் வந்து எடுத்தலும், இருபது தோள்
அடர்த்தனே; ஆலவாயில் அப்பனே; அருள்-செயாயே.
============================= ============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
12.21 periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - # 405
sīr tigaḻum pāṇḍi mādēviyār, tirunīṭrin
sārvu aḍaiyak kūn nimirnda tennavanār tammuḍanē,
pār paravum kulacciṟaiyār vāgīsar tamaip paṇivuṭru
āragilāk kādal miga, aḍi-pōṭra aṅgu irundār.
12.21 periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - # 406
tiru-ālavāy amarnda señjuḍaraic, ceḻumboruḷ-nūl
taruvānai, nērisaiyum tāṇḍagamum mudalāna
peru-vāymait tamiḻ pāḍip, pēṇu tiruppaṇi seydu,
maruvārdam puram erittār pūvaṇattai vandu aḍaindār,
--------------
tirunāvukkarasar tēvāram - padigam 4.62 - tiru-ālavāy (madurai) - ( tirunērisai )
(aṟusīr viruttam - meter)
pāḍal eṇ : 1
"vēdiyā; vēda gīdā; viṇṇavar aṇṇā;" eṇḍru eṇḍru
ōdiyē malargaḷ tūvi, oruṅgi nin kaḻalgaḷ kāṇap,
pādi ōr peṇṇai vaittāy, paḍar-saḍai madiyam sūḍum
ādiyē, ālavāyil appanē, aruḷ-seyāyē.
pāḍal eṇ : 2
"nambanē; nānmugattāy; nādanē; ñāna mūrttī;
en ponē; īsā;" eṇḍru eṇḍru ētti, nān ēsaṭru eṇḍrum
pin-pinē tirindu, nāyēn pērttu inip piṟavā vaṇṇam,
anbanē, ālavāyil appanē, aruḷ-seyāyē.
pāḍal eṇ : 3
oru-marundu āgi uḷḷāy; umbarōḍu ulagukku ellām
peru-marundu āgi niṇḍrāy; pēr-amudin suvaiyāyk
karu-marundu āgi uḷḷāy; āḷum val-vinaigaḷ tīrkkum
aru-marundu ālavāyil appanē; aruḷ-seyāyē.
pāḍal eṇ : 4
seyya nin kamala-pādam sērumā, "dēvar dēvē;
mai-aṇi kaṇḍattānē; mān-maṟi maḻu oṇḍru ēndum
saivanē", sāla ñānam kaṭraṟivu ilāda nāyēn,
"aiyanē; ālavāyil appanē", aruḷ-seyāyē.
pāḍal eṇ : 5
veṇ-talai kaiyil ēndi, migavum ūr pali koṇḍu, eṇḍrum
uṇḍadum illai; sollil uṇḍadu nañju tannaip;
paṇḍu unai ninaiya-māṭṭāp paḷaganēn uḷamadu āra,
aṇḍanē, ālavāyil appanē, aruḷ-seyāyē.
pāḍal eṇ : 6
"eñjal-il pugal idu" eṇḍru eṇḍru ētti nān ēsaṭru, eṇḍrum
vañjagam oṇḍrum iṇḍri, malaraḍi kāṇum vaṇṇam,
nañjinai miḍaṭril vaitta naṟporuṭ padamē, nāyēṟku
"añjal" eṇḍru ālavāyil appanē aruḷ-seyāyē.
pāḍal eṇ : 7
vaḻu ilādu unnai vāḻtti vaḻibaḍum toṇḍanēn un
seḻu-malarp-pādam kāṇat, teṇ-tirai nañjam uṇḍa
kuḻaganē, kōla villī, kūttanē, māttāy uḷḷa
aḻaganē, ālavāyil appanē, aruḷ-seyāyē.
pāḍal eṇ : 8
naṟu-malar nīrum koṇḍu, nāḷdoṟum ētti vāḻttic,
ceṟivana sittam vaittut, tiruvaḍi sērum vaṇṇam,
maṟi-kaḍal vaṇṇan pāgā, mā-maṟai aṅgam āṟum
aṟivanē, ālavāyil appanē, aruḷ-seyāyē.
pāḍal eṇ : 9
nalam tigaḻ vāyin nūlāl sarugu-ilaip pandar seyda
silandiyai arasadu āḷa aruḷināy eṇḍru, tiṇṇam
kalandu uḍan vandu, nin tāḷ karudi nān kāṇbadāga
alandanan, ālavāyil appanē, aruḷ-seyāyē.
pāḍal eṇ : 10
poḍikkoḍu pūsip, pollāk kurambaiyil pundi oṇḍrip,
piḍittu nin tāḷgaḷ eṇḍrum pidaṭri nān irukka-māṭṭēn;
eḍuppan eṇḍru ilaṅgaik-kōn vandu eḍuttalum, irubadu tōḷ
aḍarttanē; ālavāyil appanē; aruḷ-seyāyē.
============================= ============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
12.21 पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - # 405
सीर् तिगऴुम् पाण्डि मादेवियार्, तिरुनीट्रिन्
सार्वु अडैयक् कून् निमिर्न्द तॆन्नवनार् तम्मुडने,
पार् परवुम् कुलच्चिऱैयार् वागीसर् तमैप् पणिवुट्रु
आरगिलाक् कादल् मिग, अडि-पोट्र अङ्गु इरुन्दार्.
12.21 पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - # 406
तिरु-आलवाय् अमर्न्द सॆञ्जुडरैच्, चॆऴुम्बॊरुळ्-नूल्
तरुवानै, नेरिसैयुम् ताण्डगमुम् मुदलान
पॆरु-वाय्मैत् तमिऴ् पाडिप्, पेणु तिरुप्पणि सॆय्दु,
मरुवार्दम् पुरम् ऎरित्तार् पूवणत्तै वन्दु अडैन्दार्,
--------------
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.62 - तिरु-आलवाय् (मदुरै) - ( तिरुनेरिसै )
(अऱुसीर् विरुत्तम् - meter)
पाडल् ऎण् : 1
"वेदिया; वेद गीदा; विण्णवर् अण्णा;" ऎण्ड्रु ऎण्ड्रु
ओदिये मलर्गळ् तूवि, ऒरुङ्गि निन् कऴल्गळ् काणप्,
पादि ओर् पॆण्णै वैत्ताय्, पडर्-सडै मदियम् सूडुम्
आदिये, आलवायिल् अप्पने, अरुळ्-सॆयाये.
पाडल् ऎण् : 2
"नम्बने; नान्मुगत्ताय्; नादने; ञान मूर्त्ती;
ऎन् पॊने; ईसा;" ऎण्ड्रु ऎण्ड्रु एत्ति, नान् एसट्रु ऎण्ड्रुम्
पिन्-पिने तिरिन्दु, नायेन् पेर्त्तु इनिप् पिऱवा वण्णम्,
अन्बने, आलवायिल् अप्पने, अरुळ्-सॆयाये.
पाडल् ऎण् : 3
ऒरु-मरुन्दु आगि उळ्ळाय्; उम्बरोडु उलगुक्कु ऎल्लाम्
पॆरु-मरुन्दु आगि निण्ड्राय्; पेर्-अमुदिन् सुवैयाय्क्
करु-मरुन्दु आगि उळ्ळाय्; आळुम् वल्-विनैगळ् तीर्क्कुम्
अरु-मरुन्दु आलवायिल् अप्पने; अरुळ्-सॆयाये.
पाडल् ऎण् : 4
सॆय्य निन् कमल-पादम् सेरुमा, "देवर् देवे;
मै-अणि कण्डत्ताने; मान्-मऱि मऴु ऒण्ड्रु एन्दुम्
सैवने", साल ञानम् कट्रऱिवु इलाद नायेन्,
"ऐयने; आलवायिल् अप्पने", अरुळ्-सॆयाये.
पाडल् ऎण् : 5
वॆण्-तलै कैयिल् एन्दि, मिगवुम् ऊर् पलि कॊण्डु, ऎण्ड्रुम्
उण्डदुम् इल्लै; सॊल्लिल् उण्डदु नञ्जु तन्नैप्;
पण्डु उनै निनैय-माट्टाप् पळगनेन् उळमदु आर,
अण्डने, आलवायिल् अप्पने, अरुळ्-सॆयाये.
पाडल् ऎण् : 6
"ऎञ्जल्-इल् पुगल् इदु" ऎण्ड्रु ऎण्ड्रु एत्ति नान् एसट्रु, ऎण्ड्रुम्
वञ्जगम् ऒण्ड्रुम् इण्ड्रि, मलरडि काणुम् वण्णम्,
नञ्जिनै मिडट्रिल् वैत्त नऱ्पॊरुट् पदमे, नायेऱ्कु
"अञ्जल्" ऎण्ड्रु आलवायिल् अप्पने अरुळ्-सॆयाये.
पाडल् ऎण् : 7
वऴु इलादु उन्नै वाऴ्त्ति वऴिबडुम् तॊण्डनेन् उन्
सॆऴु-मलर्प्-पादम् काणत्, तॆण्-तिरै नञ्जम् उण्ड
कुऴगने, कोल विल्ली, कूत्तने, मात्ताय् उळ्ळ
अऴगने, आलवायिल् अप्पने, अरुळ्-सॆयाये.
पाडल् ऎण् : 8
नऱु-मलर् नीरुम् कॊण्डु, नाळ्दॊऱुम् एत्ति वाऴ्त्तिच्,
चॆऱिवन सित्तम् वैत्तुत्, तिरुवडि सेरुम् वण्णम्,
मऱि-कडल् वण्णन् पागा, मा-मऱै अङ्गम् आऱुम्
अऱिवने, आलवायिल् अप्पने, अरुळ्-सॆयाये.
पाडल् ऎण् : 9
नलम् तिगऴ् वायिन् नूलाल् सरुगु-इलैप् पन्दर् सॆय्द
सिलन्दियै अरसदु आळ अरुळिनाय् ऎण्ड्रु, तिण्णम्
कलन्दु उडन् वन्दु, निन् ताळ् करुदि नान् काण्बदाग
अलन्दनन्, आलवायिल् अप्पने, अरुळ्-सॆयाये.
पाडल् ऎण् : 10
पॊडिक्कॊडु पूसिप्, पॊल्लाक् कुरम्बैयिल् पुन्दि ऒण्ड्रिप्,
पिडित्तु निन् ताळ्गळ् ऎण्ड्रुम् पिदट्रि नान् इरुक्क-माट्टेन्;
ऎडुप्पन् ऎण्ड्रु इलङ्गैक्-कोन् वन्दु ऎडुत्तलुम्, इरुबदु तोळ्
अडर्त्तने; आलवायिल् अप्पने; अरुळ्-सॆयाये.
============================= ============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
12.21 పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - # 405
సీర్ తిగఴుం పాండి మాదేవియార్, తిరునీట్రిన్
సార్వు అడైయక్ కూన్ నిమిర్న్ద తెన్నవనార్ తమ్ముడనే,
పార్ పరవుం కులచ్చిఱైయార్ వాగీసర్ తమైప్ పణివుట్రు
ఆరగిలాక్ కాదల్ మిగ, అడి-పోట్ర అంగు ఇరుందార్.
12.21 పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - # 406
తిరు-ఆలవాయ్ అమర్న్ద సెంజుడరైచ్, చెఴుంబొరుళ్-నూల్
తరువానై, నేరిసైయుం తాండగముం ముదలాన
పెరు-వాయ్మైత్ తమిఴ్ పాడిప్, పేణు తిరుప్పణి సెయ్దు,
మరువార్దం పురం ఎరిత్తార్ పూవణత్తై వందు అడైందార్,
--------------
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.62 - తిరు-ఆలవాయ్ (మదురై) - ( తిరునేరిసై )
(అఱుసీర్ విరుత్తం - meter)
పాడల్ ఎణ్ : 1
"వేదియా; వేద గీదా; విణ్ణవర్ అణ్ణా;" ఎండ్రు ఎండ్రు
ఓదియే మలర్గళ్ తూవి, ఒరుంగి నిన్ కఴల్గళ్ కాణప్,
పాది ఓర్ పెణ్ణై వైత్తాయ్, పడర్-సడై మదియం సూడుం
ఆదియే, ఆలవాయిల్ అప్పనే, అరుళ్-సెయాయే.
పాడల్ ఎణ్ : 2
"నంబనే; నాన్ముగత్తాయ్; నాదనే; ఞాన మూర్త్తీ;
ఎన్ పొనే; ఈసా;" ఎండ్రు ఎండ్రు ఏత్తి, నాన్ ఏసట్రు ఎండ్రుం
పిన్-పినే తిరిందు, నాయేన్ పేర్త్తు ఇనిప్ పిఱవా వణ్ణం,
అన్బనే, ఆలవాయిల్ అప్పనే, అరుళ్-సెయాయే.
పాడల్ ఎణ్ : 3
ఒరు-మరుందు ఆగి ఉళ్ళాయ్; ఉంబరోడు ఉలగుక్కు ఎల్లాం
పెరు-మరుందు ఆగి నిండ్రాయ్; పేర్-అముదిన్ సువైయాయ్క్
కరు-మరుందు ఆగి ఉళ్ళాయ్; ఆళుం వల్-వినైగళ్ తీర్క్కుం
అరు-మరుందు ఆలవాయిల్ అప్పనే; అరుళ్-సెయాయే.
పాడల్ ఎణ్ : 4
సెయ్య నిన్ కమల-పాదం సేరుమా, "దేవర్ దేవే;
మై-అణి కండత్తానే; మాన్-మఱి మఴు ఒండ్రు ఏందుం
సైవనే", సాల ఞానం కట్రఱివు ఇలాద నాయేన్,
"ఐయనే; ఆలవాయిల్ అప్పనే", అరుళ్-సెయాయే.
పాడల్ ఎణ్ : 5
వెణ్-తలై కైయిల్ ఏంది, మిగవుం ఊర్ పలి కొండు, ఎండ్రుం
ఉండదుం ఇల్లై; సొల్లిల్ ఉండదు నంజు తన్నైప్;
పండు ఉనై నినైయ-మాట్టాప్ పళగనేన్ ఉళమదు ఆర,
అండనే, ఆలవాయిల్ అప్పనే, అరుళ్-సెయాయే.
పాడల్ ఎణ్ : 6
"ఎంజల్-ఇల్ పుగల్ ఇదు" ఎండ్రు ఎండ్రు ఏత్తి నాన్ ఏసట్రు, ఎండ్రుం
వంజగం ఒండ్రుం ఇండ్రి, మలరడి కాణుం వణ్ణం,
నంజినై మిడట్రిల్ వైత్త నఱ్పొరుట్ పదమే, నాయేఱ్కు
"అంజల్" ఎండ్రు ఆలవాయిల్ అప్పనే అరుళ్-సెయాయే.
పాడల్ ఎణ్ : 7
వఴు ఇలాదు ఉన్నై వాఴ్త్తి వఴిబడుం తొండనేన్ ఉన్
సెఴు-మలర్ప్-పాదం కాణత్, తెణ్-తిరై నంజం ఉండ
కుఴగనే, కోల విల్లీ, కూత్తనే, మాత్తాయ్ ఉళ్ళ
అఴగనే, ఆలవాయిల్ అప్పనే, అరుళ్-సెయాయే.
పాడల్ ఎణ్ : 8
నఱు-మలర్ నీరుం కొండు, నాళ్దొఱుం ఏత్తి వాఴ్త్తిచ్,
చెఱివన సిత్తం వైత్తుత్, తిరువడి సేరుం వణ్ణం,
మఱి-కడల్ వణ్ణన్ పాగా, మా-మఱై అంగం ఆఱుం
అఱివనే, ఆలవాయిల్ అప్పనే, అరుళ్-సెయాయే.
పాడల్ ఎణ్ : 9
నలం తిగఴ్ వాయిన్ నూలాల్ సరుగు-ఇలైప్ పందర్ సెయ్ద
సిలందియై అరసదు ఆళ అరుళినాయ్ ఎండ్రు, తిణ్ణం
కలందు ఉడన్ వందు, నిన్ తాళ్ కరుది నాన్ కాణ్బదాగ
అలందనన్, ఆలవాయిల్ అప్పనే, అరుళ్-సెయాయే.
పాడల్ ఎణ్ : 10
పొడిక్కొడు పూసిప్, పొల్లాక్ కురంబైయిల్ పుంది ఒండ్రిప్,
పిడిత్తు నిన్ తాళ్గళ్ ఎండ్రుం పిదట్రి నాన్ ఇరుక్క-మాట్టేన్;
ఎడుప్పన్ ఎండ్రు ఇలంగైక్-కోన్ వందు ఎడుత్తలుం, ఇరుబదు తోళ్
అడర్త్తనే; ఆలవాయిల్ అప్పనే; అరుళ్-సెయాయే.
============================= ============================