Sunday, September 13, 2015

6.61 - மாதினையோர் கூறுகந்தாய் - திருக்கன்றாப்பூர் - mAdhinaiyOr kURugandhAy - thirukkandRAppUr

13) padhigam 6.61 - திருக்கன்றாப்பூர் - (திருத்தாண்டகம் )

Verses: PDF : 6.61 - மாதினையோர் கூறுகந்தாய் - mAdhinai Or kURu ugandhAy

On YouTube:  Tamil discussion:

Part-1: https://youtu.be/osXKN6DO5gE

Part-2: https://youtu.be/B8p-qpzXxl4

Temple info: (Dinamalar website): திருக்கன்றாப்பூர் - "கோயில் கண்ணாப்பூர்" - Koil Kannappur

If you need English translation for this padhigam - 6.61 - mAdhinai Or kURu ugandhAy: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS6_061.HTM


V, Subramanian
===========================

 This has verses in Tamil, English, Nagari, and Telugu scripts. Please print the pages you need.

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.61திருக்கன்றாப்பூர் ( திருத்தாண்டகம் )


Background:

திருநாவுக்கரசு சுவாமிகள், திருவாரூரில் தங்கியிருந்தபொழுது வலிவலம், கீழ்வேளூர் பணிந்து கன்றாப்பூர் வணங்கிப் பாடி அருளியது இத் திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 228)


பதிகக் குறிப்பு : இத்திருப்பதிகம், இறைவன், அன்போடு வழிபடும் அடியவர் உள்ளத்தையே இடமாகக் கொண்டு இனிது விளங்குதலை அருளிச் செய்தது. அதனால், அவ்வன்பின் செயல்களும், வழிபாட்டு ஒழுக்க நெறிகளும் இதன்கண் இனிதெடுத்து விளக்கியருளப்பட்டன. எனவே, சிவநெறி ஒழுகுவார்க்கு இத்திருப்பதிகம் சிறந்ததொரு செந்நெறியை அருள்வதாய் உளது.


திருக்கன்றாப்பூர்: தலக்குறிப்பு :

நாகை மாவட்டத்தில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலைக்கு வடகிழக்கே சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திலிருக்கிறது.


ஊர்க்கும் இறைவர்க்கும் முறையே கன்றாப்பூர், நடுதறியப்பர் எனப் பெயர் ஏற்பட்டமைக்குக் காரணம்: சைவர் குடியில் தோன்றிய ஒரு பெண்ணை, அவரது பெற்றோர் வைணவர் ஒருவர்க்குத் திருமணஞ் செய்துகொடுத்தனர். அப்பெண் மாமியார் வீட்டார்க்குப் புலப்படாதவாறு கன்றுக்குட்டி கட்டியிருக்கும் முளையையே (ஆப்பு = முளை)) சிவலிங்கமாகப் பாவித்து வழிபட்டுவந்தனர். ஒரு நாள் கணவன் அதைக்கண்டு அம்முளையைக் கோடாலியால் வெட்ட இறைவர் அம்முளையிலிருந்து வெளிப்பட்ட காரணத்தால் அவர் நடுதறியப்பர் என்னும் பெயர் எய்தினார். ஊரும் கன்றாப்பூர் என்னும் பெயர் எய்திற்று.


ஆப்பு = Wedge used in splitting wood, peg, stake; முளை;

தறி - Wooden post, stake; peg; முளைக்கோல்;

நடுதறி - Post planted in the ground, as for tethering a calf; நட்ட தம்பம்;

----------


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.61 – திருக்கன்றாப்பூர் ( திருத்தாண்டகம் )

பாடல் எண் : 1

மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா

.. மதிசூடீ வானவர்கள் தங்கட் கெல்லாம்

நாதனே யென்றென்று பரவி நாளும்

.. நைஞ்சுருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து

வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு

.. வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்

காதன்மையால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.


பாடல் எண் : 2

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி

.. வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்

செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ்

.. செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்

துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்

.. சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங்

கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.


பாடல் எண் : 3

எவரேனுந் தாமாக விலாடத் திட்ட

.. திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி

உவராதே யவரவரைக் கண்ட போதே

.. உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி

இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி

.. இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்

கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.


பாடல் எண் : 4

இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத்

.. திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு

விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு

.. மெய்யன்பு புகப்பெய்து பொய்யை நீக்கித்

துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்

.. உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்

கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.


பாடல் எண் : 5

விருத்தனே வேலைவிட முண்ட கண்டா

.. விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்

ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ

.. நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்

பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்

.. புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்

கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.


பாடல் எண் : 6

பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்

.. பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று

பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்

.. பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்

வசியினா லகப்பட்டு வீழா முன்னம்

.. வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்

கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.


பாடல் எண் : 7

ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு

.. ஆவியார் போவதுமே அகத்தார் கூடி

மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி

.. மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்

ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு

.. அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்

கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.


பாடல் எண் : 8

திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்

.. திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச்

சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்

.. கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்

பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா

.. பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்

கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.


பாடல் எண் : 9

****** (இப்பதிகத்தின் ஒன்பதாம் பாடல் கிடைத்திலது.) *******


பாடல் எண் : 10

குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங்

.. கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந்

தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந்

.. தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி

முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும்

.. முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தீ யென்றுங்

கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.


==================== ===============


Word separated version:


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.61 – திருக்கன்றாப்பூர் ( திருத்தாண்டகம் )

பாடல் எண் : 1

"மாதினை ஓர் கூறு உகந்தாய் ; மறைகொள் நாவா ;

.. மதிசூடீ ; வானவர்கள் தங்கட்கு எல்லாம்

நாதனே" என்று என்று பரவி நாளும்

.. நைஞ்சு உருகி, வஞ்சகம் அற்று, அன்பு கூர்ந்து,

வாதனையால் முப்பொழுதும் பூ நீர் கொண்டு

.. வைகல் மறவாது வாழ்த்தி ஏத்திக்,

காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே.


பாடல் எண் : 2

விடிவதுமே வெண்-நீற்றை மெய்யில் பூசி,

.. வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்றுச்,

செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும்

.. செல்கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும்,

துடி அனைய இடை மடவாள் பங்கா என்றும்,

.. சுடலைதனில் நடம் ஆடும் சோதீ என்றும்,

கடி-மலர் தூய்த் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே.


பாடல் எண் : 3

எவரேனுந்தாம் ஆக, இலாடத்து இட்ட

.. திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,

உவராதே, அவர் அவரைக் கண்ட போதே

.. உகந்து, அடிமைத் திறம் நினைந்து, அங்கு உவந்து நோக்கி,

இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி

.. இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணிக்,

கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே.


பாடல் எண் : 4

"இலம், காலம் செல்லா நாள்" என்று நெஞ்சத்து

.. இடையாதே, யாவர்க்கும் பிச்சை இட்டு,

விலங்காதே நெறி நின்று, அங்கு அறிவே மிக்கு,

.. மெய்-அன்பு புகப்-பெய்து, பொய்யை நீக்கித்,

துலங்கா-மெய் வானவரைக் காத்து நஞ்சம்

.. உண்ட பிரான் அடியிணைக்கே சித்தம் வைத்துக்,

கலங்காதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே.


பாடல் எண் : 5

"விருத்தனே; வேலை-விடம் உண்ட கண்டா;

.. விரி-சடைமேல் வெண்-திங்கள் விளங்கச் சூடும்

ஒருத்தனே; உமை-கணவா; உலக மூர்த்தீ;

.. நுந்தாத ஒண்-சுடரே; அடியார் தங்கள்

பொருத்தனே" என்று என்று புலம்பி நாளும்,

.. புலன் ஐந்தும் அகத்து அடக்கிப், புலம்பி நோக்கிக்,

கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே.


பாடல் எண் : 6

பொசியினால் மிடைந்து, புழுப் பொதிந்த போர்வைப்

.. பொல்லாத புலால்-உடம்பை நிலாசும் என்று,

பசியினால் மீதூரப்பட்டே ஈட்டிப்,

.. பலர்க்கு உதவல் அது ஒழிந்து, பவள வாயார்

வசியினால் அகப்பட்டு வீழா முன்னம்,

.. வானவர்-கோன் திரு-நாமம் அஞ்சும் சொல்லிக்,

கசிவினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே.


பாடல் எண் : 7

ஐயினால் மிடறு அடைப்பு-உண்டு, ஆக்கை விட்டு

.. ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி,

மையினால் கண் எழுதி, மாலை சூட்டி,

.. மயானத்தில் இடுவதன்முன், மதியம் சூடும்

ஐயனார்க்கு ஆள் ஆகி, அன்பு மிக்கு,

.. அகம் குழைந்து, மெய்-அரும்பி, அடிகள் பாதம்

கையினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே.


பாடல் எண் : 8

திருதிமையால் ஐவரையும் காவல் ஏவித்,

.. திகையாதே சிவாயநம என்னும் சிந்தைச்

சுருதிதனைத் துயக்கு அறுத்துத், துன்ப வெள்ளக்

.. கடல் நீந்திக் கரையேறும் கருத்தே மிக்குப்,

"பரிதிதனைப் பல்-பறித்த பாவ நாசா;

.. பரஞ்சுடரே" என்று என்று பரவி நாளும்

கருதி-மிகத் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே.


பாடல் எண் : 9

****** (இப்பதிகத்தின் ஒன்பதாம் பாடல் கிடைத்திலது.) *******


பாடல் எண் : 10

குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும்,

.. கூற்று உதைத்த குரை-கழற் சேவடியாய் என்றும்,

தனஞ்சயற்குப் பாசுபதம் ஈந்தாய் என்றும்,

.. தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி

முனிந்து, அவன்தன் சிரம் பத்தும் தாளும் தோளும்

.. முரண் அழித்திட்டு அருள்-கொடுத்த மூர்த்தீ என்றும்,

கனிந்து-மிகத் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே

.. கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே.


==================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tirunāvukkarasar tēvāram - padigam 6.61 – tirukkaṇḍrāppūr ( tiruttāṇḍagam )

pāḍal eṇ : 1

"mādinai ōr kūṟu ugandāy ; maṟaigoḷ nāvā ;

.. madisūḍī ; vānavargaḷ taṅgaṭku ellām

nādanē" eṇḍru eṇḍru paravi nāḷum

.. naiñju urugi, vañjagam aṭru, anbu kūrndu,

vādanaiyāl muppoḻudum pū nīr koṇḍu

.. vaigal maṟavādu vāḻtti ēttik,

kādanmaiyāl toḻum aḍiyār neñjin uḷḷē

.. kaṇḍrāppūr naḍudaṟiyaik kāṇal āmē.


pāḍal eṇ : 2

viḍivadumē veṇ-nīṭrai meyyil pūsi,

.. veḷuttu amainda kīḷoḍu kōvaṇamum taṭruc,

ceḍi uḍaiya valvinai nōy tīrppāy eṇḍrum

.. selgadikku vaḻi kāṭṭum sivanē eṇḍrum,

tuḍi anaiya iḍai maḍavāḷ paṅgā eṇḍrum,

.. suḍalaidanil naḍam āḍum sōdī eṇḍrum,

kaḍi-malar tūyt toḻum aḍiyār neñjin uḷḷē

.. kaṇḍrāppūr naḍudaṟiyaik kāṇal āmē.


pāḍal eṇ : 3

evarēnundām āga, ilāḍattu iṭṭa

.. tirunīṟum sādanamum kaṇḍāl uḷgi,

uvarādē, avar avaraik kaṇḍa pōdē

.. ugandu, aḍimait tiṟam ninaindu, aṅgu uvandu nōkki,

ivar dēvar avar dēvar eṇḍru solli

.. iraṇḍu āṭṭādu oḻindu, īsan tiṟamē pēṇik,

kavarādē toḻum aḍiyār neñjin uḷḷē

.. kaṇḍrāppūr naḍudaṟiyaik kāṇal āmē.


pāḍal eṇ : 4

"ilam, kālam sellā nāḷ" eṇḍru neñjattu

.. iḍaiyādē, yāvarkkum piccai iṭṭu,

vilaṅgādē neṟi niṇḍru, aṅgu aṟivē mikku,

.. mey-anbu pugap-peydu, poyyai nīkkit,

tulaṅgā-mey vānavaraik kāttu nañjam

.. uṇḍa pirān aḍiyiṇaikkē sittam vaittuk,

kalaṅgādē toḻum aḍiyār neñjin uḷḷē

.. kaṇḍrāppūr naḍudaṟiyaik kāṇal āmē.


pāḍal eṇ : 5

"viruttanē; vēlai-viḍam uṇḍa kaṇḍā;

.. viri-saḍaimēl veṇ-tiṅgaḷ viḷaṅgac cūḍum

oruttanē; umai-kaṇavā; ulaga mūrttī;

.. nundāda oṇ-suḍarē; aḍiyār taṅgaḷ

poruttanē" eṇḍru eṇḍru pulambi nāḷum,

.. pulan aindum agattu aḍakkip, pulambi nōkkik,

karuttināl toḻum aḍiyār neñjin uḷḷē

.. kaṇḍrāppūr naḍudaṟiyaik kāṇal āmē.


pāḍal eṇ : 6

posiyināl miḍaindu, puḻup podinda pōrvaip

.. pollāda pulāl-uḍambai nilāsum eṇḍru,

pasiyināl mīdūrappaṭṭē īṭṭip,

.. palarkku udaval adu oḻindu, pavaḷa vāyār

vasiyināl agappaṭṭu vīḻā munnam,

.. vānavar-kōn tiru-nāmam añjum sollik,

kasivināl toḻum aḍiyār neñjin uḷḷē

.. kaṇḍrāppūr naḍudaṟiyaik kāṇal āmē.


pāḍal eṇ : 7

aiyināl miḍaṟu aḍaippu-uṇḍu, ākkai viṭṭu

.. āviyār pōvadumē, agattār kūḍi,

maiyināl kaṇ eḻudi, mālai sūṭṭi,

.. mayānattil iḍuvadanmun, madiyam sūḍum

aiyanārkku āḷ āgi, anbu mikku,

.. agam kuḻaindu, mey-arumbi, aḍigaḷ pādam

kaiyināl toḻum aḍiyār neñjin uḷḷē

.. kaṇḍrāppūr naḍudaṟiyaik kāṇal āmē.


pāḍal eṇ : 8

tirudimaiyāl aivaraiyum kāval ēvit,

.. tigaiyādē sivāyanama ennum sindaic

curudidanait tuyakku aṟuttut, tunba veḷḷak

.. kaḍal nīndik karaiyēṟum karuttē mikkup,

"parididanaip pal-paṟitta pāva nāsā;

.. parañjuḍarē" eṇḍru eṇḍru paravi nāḷum

karudi-migat toḻum aḍiyār neñjin uḷḷē

.. kaṇḍrāppūr naḍudaṟiyaik kāṇal āmē.


pāḍal eṇ : 9

****** (9th verse of this padhigam is lost) *******


pāḍal eṇ : 10

kuninda silaiyāl puram mūṇḍru erittāy eṇḍrum,

.. kūṭru udaitta kurai-kaḻaṟ cēvaḍiyāy eṇḍrum,

tanañjayaṟkup pāsubadam īndāy eṇḍrum,

.. dasakkirivan malai eḍukka viralāl ūṇḍri

munindu, avandan siram pattum tāḷum tōḷum

.. muraṇ aḻittiṭṭu aruḷ-koḍutta mūrttī eṇḍrum,

kanindu-migat toḻum aḍiyār neñjin uḷḷē

.. kaṇḍrāppūr naḍudaṟiyaik kāṇal āmē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 6.61 – तिरुक्कण्ड्राप्पूर् ( तिरुत्ताण्डगम् )

पाडल् ऎण् : 1

"मादिनै ओर् कूऱु उगन्दाय् ; मऱैगॊळ् नावा ;

.. मदिसूडी ; वानवर्गळ् तङ्गट्कु ऎल्लाम्

नादने" ऎण्ड्रु ऎण्ड्रु परवि नाळुम्

.. नैञ्जु उरुगि, वञ्जगम् अट्रु, अन्बु कूर्न्दु,

वादनैयाल् मुप्पॊऴुदुम् पू नीर् कॊण्डु

.. वैगल् मऱवादु वाऴ्त्ति एत्तिक्,

कादन्मैयाल् तॊऴुम् अडियार् नॆञ्जिन् उळ्ळे

.. कण्ड्राप्पूर् नडुदऱियैक् काणल् आमे.


पाडल् ऎण् : 2

विडिवदुमे वॆण्-नीट्रै मॆय्यिल् पूसि,

.. वॆळुत्तु अमैन्द कीळॊडु कोवणमुम् तट्रुच्,

चॆडि उडैय वल्विनै नोय् तीर्प्पाय् ऎण्ड्रुम्

.. सॆल्गदिक्कु वऴि काट्टुम् सिवने ऎण्ड्रुम्,

तुडि अनैय इडै मडवाळ् पङ्गा ऎण्ड्रुम्,

.. सुडलैदनिल् नडम् आडुम् सोदी ऎण्ड्रुम्,

कडि-मलर् तूय्त् तॊऴुम् अडियार् नॆञ्जिन् उळ्ळे

.. कण्ड्राप्पूर् नडुदऱियैक् काणल् आमे.


पाडल् ऎण् : 3

ऎवरेनुन्दाम् आग, इलाडत्तु इट्ट

.. तिरुनीऱुम् सादनमुम् कण्डाल् उळ्गि,

उवरादे, अवर् अवरैक् कण्ड पोदे

.. उगन्दु, अडिमैत् तिऱम् निनैन्दु, अङ्गु उवन्दु नोक्कि,

इवर् देवर् अवर् देवर् ऎण्ड्रु सॊल्लि

.. इरण्डु आट्टादु ऒऴिन्दु, ईसन् तिऱमे पेणिक्,

कवरादे तॊऴुम् अडियार् नॆञ्जिन् उळ्ळे

.. कण्ड्राप्पूर् नडुदऱियैक् काणल् आमे.


पाडल् ऎण् : 4

"इलम्, कालम् सॆल्ला नाळ्" ऎण्ड्रु नॆञ्जत्तु

.. इडैयादे, यावर्क्कुम् पिच्चै इट्टु,

विलङ्गादे नॆऱि निण्ड्रु, अङ्गु अऱिवे मिक्कु,

.. मॆय्-अन्बु पुगप्-पॆय्दु, पॊय्यै नीक्कित्,

तुलङ्गा-मॆय् वानवरैक् कात्तु नञ्जम्

.. उण्ड पिरान् अडियिणैक्के सित्तम् वैत्तुक्,

कलङ्गादे तॊऴुम् अडियार् नॆञ्जिन् उळ्ळे

.. कण्ड्राप्पूर् नडुदऱियैक् काणल् आमे.


पाडल् ऎण् : 5

"विरुत्तने; वेलै-विडम् उण्ड कण्डा;

.. विरि-सडैमेल् वॆण्-तिङ्गळ् विळङ्गच् चूडुम्

ऒरुत्तने; उमै-कणवा; उलग मूर्त्ती;

.. नुन्दाद ऒण्-सुडरे; अडियार् तङ्गळ्

पॊरुत्तने" ऎण्ड्रु ऎण्ड्रु पुलम्बि नाळुम्,

.. पुलन् ऐन्दुम् अगत्तु अडक्किप्, पुलम्बि नोक्किक्,

करुत्तिनाल् तॊऴुम् अडियार् नॆञ्जिन् उळ्ळे

.. कण्ड्राप्पूर् नडुदऱियैक् काणल् आमे.


पाडल् ऎण् : 6

पॊसियिनाल् मिडैन्दु, पुऴुप् पॊदिन्द पोर्वैप्

.. पॊल्लाद पुलाल्-उडम्बै निलासुम् ऎण्ड्रु,

पसियिनाल् मीदूरप्पट्टे ईट्टिप्,

.. पलर्क्कु उदवल् अदु ऒऴिन्दु, पवळ वायार्

वसियिनाल् अगप्पट्टु वीऴा मुन्नम्,

.. वानवर्-कोन् तिरु-नामम् अञ्जुम् सॊल्लिक्,

कसिविनाल् तॊऴुम् अडियार् नॆञ्जिन् उळ्ळे

.. कण्ड्राप्पूर् नडुदऱियैक् काणल् आमे.


पाडल् ऎण् : 7

ऐयिनाल् मिडऱु अडैप्पु-उण्डु, आक्कै विट्टु

.. आवियार् पोवदुमे, अगत्तार् कूडि,

मैयिनाल् कण् ऎऴुदि, मालै सूट्टि,

.. मयानत्तिल् इडुवदन्मुन्, मदियम् सूडुम्

ऐयनार्क्कु आळ् आगि, अन्बु मिक्कु,

.. अगम् कुऴैन्दु, मॆय्-अरुम्बि, अडिगळ् पादम्

कैयिनाल् तॊऴुम् अडियार् नॆञ्जिन् उळ्ळे

.. कण्ड्राप्पूर् नडुदऱियैक् काणल् आमे.


पाडल् ऎण् : 8

तिरुदिमैयाल् ऐवरैयुम् कावल् एवित्,

.. तिगैयादे सिवायनम ऎन्नुम् सिन्दैच्

चुरुदिदनैत् तुयक्कु अऱुत्तुत्, तुन्ब वॆळ्ळक्

.. कडल् नीन्दिक् करैयेऱुम् करुत्ते मिक्कुप्,

"परिदिदनैप् पल्-पऱित्त पाव नासा;

.. परञ्जुडरे" ऎण्ड्रु ऎण्ड्रु परवि नाळुम्

करुदि-मिगत् तॊऴुम् अडियार् नॆञ्जिन् उळ्ळे

.. कण्ड्राप्पूर् नडुदऱियैक् काणल् आमे.


पाडल् ऎण् : 9

****** (9th verse of this padhigam is lost) *******


पाडल् ऎण् : 10

कुनिन्द सिलैयाल् पुरम् मूण्ड्रु ऎरित्ताय् ऎण्ड्रुम्,

.. कूट्रु उदैत्त कुरै-कऴऱ्‌ चेवडियाय् ऎण्ड्रुम्,

तनञ्जयऱ्‌कुप् पासुबदम् ईन्दाय् ऎण्ड्रुम्,

.. दसक्किरिवन् मलै ऎडुक्क विरलाल् ऊण्ड्रि

मुनिन्दु, अवन्दन् सिरम् पत्तुम् ताळुम् तोळुम्

.. मुरण् अऴित्तिट्टु अरुळ्-कॊडुत्त मूर्त्ती ऎण्ड्रुम्,

कनिन्दु-मिगत् तॊऴुम् अडियार् नॆञ्जिन् उळ्ळे

.. कण्ड्राप्पूर् नडुदऱियैक् काणल् आमे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 6.61 – తిరుక్కండ్రాప్పూర్ ( తిరుత్తాండగం )

పాడల్ ఎణ్ : 1

"మాదినై ఓర్ కూఱు ఉగందాయ్ ; మఱైగొళ్ నావా ;

.. మదిసూడీ ; వానవర్గళ్ తంగట్కు ఎల్లాం

నాదనే" ఎండ్రు ఎండ్రు పరవి నాళుం

.. నైంజు ఉరుగి, వంజగం అట్రు, అన్బు కూర్న్దు,

వాదనైయాల్ ముప్పొఴుదుం పూ నీర్ కొండు

.. వైగల్ మఱవాదు వాఴ్త్తి ఏత్తిక్,

కాదన్మైయాల్ తొఴుం అడియార్ నెంజిన్ ఉళ్ళే

.. కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 2

విడివదుమే వెణ్-నీట్రై మెయ్యిల్ పూసి,

.. వెళుత్తు అమైంద కీళొడు కోవణముం తట్రుచ్,

చెడి ఉడైయ వల్వినై నోయ్ తీర్ప్పాయ్ ఎండ్రుం

.. సెల్గదిక్కు వఴి కాట్టుం సివనే ఎండ్రుం,

తుడి అనైయ ఇడై మడవాళ్ పంగా ఎండ్రుం,

.. సుడలైదనిల్ నడం ఆడుం సోదీ ఎండ్రుం,

కడి-మలర్ తూయ్త్ తొఴుం అడియార్ నెంజిన్ ఉళ్ళే

.. కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 3

ఎవరేనుందాం ఆగ, ఇలాడత్తు ఇట్ట

.. తిరునీఱుం సాదనముం కండాల్ ఉళ్గి,

ఉవరాదే, అవర్ అవరైక్ కండ పోదే

.. ఉగందు, అడిమైత్ తిఱం నినైందు, అంగు ఉవందు నోక్కి,

ఇవర్ దేవర్ అవర్ దేవర్ ఎండ్రు సొల్లి

.. ఇరండు ఆట్టాదు ఒఴిందు, ఈసన్ తిఱమే పేణిక్,

కవరాదే తొఴుం అడియార్ నెంజిన్ ఉళ్ళే

.. కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 4

"ఇలం, కాలం సెల్లా నాళ్" ఎండ్రు నెంజత్తు

.. ఇడైయాదే, యావర్క్కుం పిచ్చై ఇట్టు,

విలంగాదే నెఱి నిండ్రు, అంగు అఱివే మిక్కు,

.. మెయ్-అన్బు పుగప్-పెయ్దు, పొయ్యై నీక్కిత్,

తులంగా-మెయ్ వానవరైక్ కాత్తు నంజం

.. ఉండ పిరాన్ అడియిణైక్కే సిత్తం వైత్తుక్,

కలంగాదే తొఴుం అడియార్ నెంజిన్ ఉళ్ళే

.. కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 5

"విరుత్తనే; వేలై-విడం ఉండ కండా;

.. విరి-సడైమేల్ వెణ్-తింగళ్ విళంగచ్ చూడుం

ఒరుత్తనే; ఉమై-కణవా; ఉలగ మూర్త్తీ;

.. నుందాద ఒణ్-సుడరే; అడియార్ తంగళ్

పొరుత్తనే" ఎండ్రు ఎండ్రు పులంబి నాళుం,

.. పులన్ ఐందుం అగత్తు అడక్కిప్, పులంబి నోక్కిక్,

కరుత్తినాల్ తొఴుం అడియార్ నెంజిన్ ఉళ్ళే

.. కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 6

పొసియినాల్ మిడైందు, పుఴుప్ పొదింద పోర్వైప్

.. పొల్లాద పులాల్-ఉడంబై నిలాసుం ఎండ్రు,

పసియినాల్ మీదూరప్పట్టే ఈట్టిప్,

.. పలర్క్కు ఉదవల్ అదు ఒఴిందు, పవళ వాయార్

వసియినాల్ అగప్పట్టు వీఴా మున్నం,

.. వానవర్-కోన్ తిరు-నామం అంజుం సొల్లిక్,

కసివినాల్ తొఴుం అడియార్ నెంజిన్ ఉళ్ళే

.. కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 7

ఐయినాల్ మిడఱు అడైప్పు-ఉండు, ఆక్కై విట్టు

.. ఆవియార్ పోవదుమే, అగత్తార్ కూడి,

మైయినాల్ కణ్ ఎఴుది, మాలై సూట్టి,

.. మయానత్తిల్ ఇడువదన్మున్, మదియం సూడుం

ఐయనార్క్కు ఆళ్ ఆగి, అన్బు మిక్కు,

.. అగం కుఴైందు, మెయ్-అరుంబి, అడిగళ్ పాదం

కైయినాల్ తొఴుం అడియార్ నెంజిన్ ఉళ్ళే

.. కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 8

తిరుదిమైయాల్ ఐవరైయుం కావల్ ఏవిత్,

.. తిగైయాదే సివాయనమ ఎన్నుం సిందైచ్

చురుదిదనైత్ తుయక్కు అఱుత్తుత్, తున్బ వెళ్ళక్

.. కడల్ నీందిక్ కరైయేఱుం కరుత్తే మిక్కుప్,

"పరిదిదనైప్ పల్-పఱిత్త పావ నాసా;

.. పరంజుడరే" ఎండ్రు ఎండ్రు పరవి నాళుం

కరుది-మిగత్ తొఴుం అడియార్ నెంజిన్ ఉళ్ళే

.. కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణల్ ఆమే.


పాడల్ ఎణ్ : 9

****** (9th verse of this padhigam is lost) *******


పాడల్ ఎణ్ : 10

కునింద సిలైయాల్ పురం మూండ్రు ఎరిత్తాయ్ ఎండ్రుం,

.. కూట్రు ఉదైత్త కురై-కఴఱ్ చేవడియాయ్ ఎండ్రుం,

తనంజయఱ్కుప్ పాసుబదం ఈందాయ్ ఎండ్రుం,

.. దసక్కిరివన్ మలై ఎడుక్క విరలాల్ ఊండ్రి

మునిందు, అవందన్ సిరం పత్తుం తాళుం తోళుం

.. మురణ్ అఴిత్తిట్టు అరుళ్-కొడుత్త మూర్త్తీ ఎండ్రుం,

కనిందు-మిగత్ తొఴుం అడియార్ నెంజిన్ ఉళ్ళే

.. కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణల్ ఆమే.

================ ============

No comments:

Post a Comment