Sunday, November 12, 2017

7.24 – திருமழபாடி - பொன்னார் மேனியனே - thirumazhapadi - poṉnār mēṉiyaṉē

44) 7.24திருமழபாடி ( பண் - நட்டராகம் ) - tirumaḻabāḍi ( paṇ - naṭṭarāgam)
சுந்தரர் தேவாரம் - sundarar thevaram
7.24 – பொன்னார் மேனியனே
7.24 - poṉnār mēṉiyaṉē

Ponnar Meniyane - Singing:



******
On YouTube:
Tamil:
English:
******

For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:

 V. Subramanian
=======================

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.24 – திருமழபாடி ( பண் - நட்டராகம் )


Background:

சுந்தரர் திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி முதலிய பல தலங்களையும் தரிசித்துத் திருவாலம்பொழிலை அடைந்தார். அங்குப் பெருமானை வணங்கித் தங்கி இரவு துயில் கொள்ளும்பொழுது பெருமான் கனவில் தோன்றி , ` மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ ?` என்று அருளினர். உடனே துயில் எழுந்து திருமழபாடி அடைந்து தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம் . ( திருமுறை 12 - ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் - 71-74).

----------

Sundarar has a dream while sleeping in thiru-Alambozhil

#3225 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 71

தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திருவை யாறதனை

மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதந் தொழுதிறைஞ்சிச்

சேவில் வருவார் திருவாலம் பொழிலிற் சேர்ந்து தாழ்ந்திரவு

பாவு சயனத் தமர்ந்தருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்,


Siva appears in the dream and asks if Sundarar forgot to think of visiting thiru-mazhabAdi

#3226 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 72

"மழபா டியினில் வருவதற்கு நினைக்க மறந்தா யோ"வென்று

குழகா கியதங் கோலமெதிர் காட்டி யருளக் குறித்துணர்ந்து

நிழலார் சோலைக் கரைப்பொன்னி வடபா லேறி நெடுமாடம்

அழகார் வீதி மழபாடி யணைந்தார் நம்பி யாரூரர்.


Sundarar visits thiru-mazhabAdi the next morning

#3227 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 73

அணைந்து திருக்கோ புரமிறைஞ்சி யன்பர் சூழ வுடன்புகுந்து

பணங்கொ ளரவ மணிந்தார்முன் பணிந்து வீழ்ந்து பரங்கருணைக்

குணங்கொ ளருளின் றிறம்போற்றிக் கொண்ட புளகத்துடனுருகிப்

புணர்ந்த விசையாற் றிருப்பதிகம் "பொன்னார் மேனி" யென்றெடுத்து,


Sundarar sings the "ponnār mēniyanē" padhigam

#3228 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 74

"அன்னே யுன்னை யல்லாலியா னாரை நினைக்கே" னெனவேத்தித்

தன்னே ரில்லாப் பதிகமலர் சாத்தித் தொழுது புறம்பணைந்து

மன்னும் பதியிற் சிலநாள்கள் வைகித் தொண்ட ருடன்மகிழ்ந்து

பொன்னிக் கரையி னிருமருங்கும் பணிந்து மேல்பாற் போதுவார்.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.24 – திருமழபாடி ( பண் - நட்டராகம் )

(“தானா தானதனா தன தானன தானதனா” என்ற சந்தம்)

பாடல் எண் : 1

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.


பாடல் எண் : 2

கீளார் கோவணமுந் திரு நீறுமெய் பூசியுன்றன்

தாளே வந்தடைந்தேன் தலை வாஎனை ஏன்றுகொள்நீ

வாளார் கண்ணிபங்கா மழ பாடியுள் மாணிக்கமே

கேளா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.


பாடல் எண் : 3

எம்மான் எம்மனையென் றனக் கெட்டனைச் சார்வாகார்

இம்மா யப்பிறவி பிறந் தேஇறந் தெய்த்தொழிந்தேன்

மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே

அம்மான் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.


பாடல் எண் : 4

பண்டே நின்னடியேன் அடி யாரடி யார்கட்கெல்லாம்

தொண்டே பூண்டொழிந்தேன் தொட ராமைத் துரிசறுத்தேன்

வண்டார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே

அண்டா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.


பாடல் எண் : 5

கண்ணாய் ஏழுலகுங் கருத் தாய அருத்தமுமாய்ப்

பண்ணார் இன்றமிழாய்ப் பர மாய பரஞ்சுடரே

மண்ணார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே

அண்ணா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.


பாடல் எண் : 6

நாளார் வந்தணுகி நலி யாமுனம் நின்றனக்கே

ஆளா வந்தடைந்தேன் அடி யேனையும் ஏன்றுகொள்நீ

மாளா நாளருளும் மழ பாடியுள் மாணிக்கமே

ஆளாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.


பாடல் எண் : 7

சந்தா ருங்குழையாய் சடை மேற்பிறை தாங்கிநல்ல

வெந்தார் வெண்பொடியாய் விடை யேறிய வித்தகனே

மைந்தார் சோலைகள்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே

எந்தாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.


பாடல் எண் : 8

வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்களெல்லாம்

செய்ய மலர்களிட மிகு செம்மையுள் நின்றவனே

மையார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே

ஐயா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.


பாடல் எண் : 9

நெறியே நின்மலனே நெடு மாலயன் போற்றிசெய்யும்

குறியே நீர்மையனே கொடி யேரிடை யாள்தலைவா

மறிசேர் அங்கையனே மழ பாடியுள் மாணிக்கமே

அறிவே நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.


பாடல் எண் : 10

ஏரார் முப்புரமும் மெரி யச்சிலை தொட்டவனை

வாரார் கொங்கையுடன் மழ பாடியுள் மேயவனைச்

சீரார் நாவலர்கோன் ஆ ரூரன் உரைத்ததமிழ்

பாரோர் ஏத்தவல்லார் பர லோகத் திருப்பாரே.

============ ============


Word separated version:


Sundarar has a dream while sleeping in thiru-Alambozhil

#3225 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 71

தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து, திருவையாறு அதனை

மேவி வணங்கிப், பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சிச்,

சேவில் வருவார் திரு-ஆலம்பொழிலில் சேர்ந்து தாழ்ந்து, இரவு

பாவு சயனத்து அமர்ந்து-அருளிப் பள்ளி-கொள்ளக் கனவின்-கண்,


Siva appears in the dream and asks if Sundarar forgot to think of visiting thiru-mazhabAdi

#3226 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 72

"மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ" என்று

குழகாகிய தம் கோலம் எதிர் காட்டி-அருளக், குறித்து உணர்ந்து,

நிழல்-ஆர் சோலைக் கரைப்-பொன்னி வட-பால் ஏறி நெடு-மாடம்

அழகு-ஆர் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர்.


Sundarar visits thiru-mazhabAdi the next morning

#3227 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 73

அணைந்து திருக்-கோபுரம் இறைஞ்சி, அன்பர் சூழ உடன் புகுந்து,

பணங்கொள் அரவம் அணிந்தார்முன் பணிந்து வீழ்ந்து, பரங்கருணைக்

குணங்கொள் அருளின் திறம் போற்றிக் கொண்ட புளகத்துடன் உருகிப்

புணர்ந்த இசையால் திருப்-பதிகம் "பொன்னார் மேனி" என்று எடுத்து,


Sundarar sings the "ponnār mēniyanē" padhigam

#3228 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 74

"அன்னே! உன்னை அல்லால் யான் ஆரை நினைக்கேன்?" என ஏத்தித்,

தன்-நேர் இல்லாப் பதிக-மலர் சாத்தித் தொழுது, புறம்பு அணைந்து,

மன்னும் பதியில் சில நாள்கள் வைகித் தொண்டருடன் மகிழ்ந்து,

பொன்னிக் கரையின் இரு-மருங்கும் பணிந்து மேல்-பால் போதுவார்.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.24 – திருமழபாடி ( பண் - நட்டராகம் )

(“தானா தானதனா தன தானன தானதனா” என்ற சந்தம்)

பாடல் எண் : 1

பொன்-ஆர் மேனியனே; புலித்-தோலை அரைக்கு அசைத்து,

மின்-ஆர் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே;

மன்னே; மா-மணியே; மழபாடியுள் மாணிக்கமே;

அன்னே; உன்னை அல்லால் இனி ஆரை நினைக்கேனே?


பாடல் எண் : 2

கீள் ஆர் கோவணமும் திருநீறு மெய் பூசி; உன்றன்

தாளே வந்து-அடைந்தேன், தலைவா, எனை ஏன்றுகொள் நீ;

வாள் ஆர் கண்ணி பங்கா; மழபாடியுள் மாணிக்கமே;

கேளா நின்னை அல்லால் இனி ஆரை நினைக்கேனே.


பாடல் எண் : 3

எம்மான் எம்மனை என்-தனக்கு எள்-தனைச் சார்வு ஆகார்;

இம்-மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்து-ஒழிந்தேன்;

மைம்-மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே;

அம்மான்; நின்னை அல்லால் இனி ஆரை நினைக்கேனே.


பாடல் எண் : 4

பண்டே நின் அடியேன், அடியார் அடியார்கட்கு எல்லாம்

தொண்டே பூண்டு-ஒழிந்தேன்; தொடராமைத் துரிசு அறுத்தேன்;

வண்டு-ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே;

அண்டா; நின்னை அல்லால் இனி ஆரை நினைக்கேனே.


பாடல் எண் : 5

கண்ணாய் ஏழுலகும், கருத்து-ஆய அருத்தமுமாய்ப்,

பண்-ஆர் இன்-தமிழாய்ப், பரம் ஆய பரஞ்சுடரே;

மண்-ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே;

அண்ணா; நின்னை அல்லால் இனி ஆரை நினைக்கேனே.


பாடல் எண் : 6

நாளார் வந்து-அணுகி நலியாமுனம் நின்-தனக்கே

ஆளா வந்து-அடைந்தேன்; அடியேனையும் ஏன்றுகொள் நீ;

மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே;

ஆள்-ஆய், நின்னை அல்லால் இனி ஆரை நினைக்கேனே.


பாடல் எண் : 7

சந்து-ஆரும் குழையாய்; சடைமேல் பிறை தாங்கி; நல்ல

வெந்து-ஆர் வெண்-பொடியாய்; விடை ஏறிய வித்தகனே;

மைந்து-ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே;

எந்தாய்; நின்னை அல்லால் இனி ஆரை நினைக்கேனே.


பாடல் எண் : 8

வெய்ய விரி-சுடரோன் மிகு தேவர் கணங்கள்-எல்லாம்

செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே;

மை-ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே;

ஐயா; நின்னை அல்லால் இனி ஆரை நினைக்கேனே.


பாடல் எண் : 9

நெறியே; நின்மலனே; நெடு-மால் அயன் போற்றிசெய்யும்

குறியே; நீர்மையனே; கொடி ஏர் இடையாள் தலைவா;

மறி சேர் அங்கையனே; மழபாடியுள் மாணிக்கமே;

அறிவே; நின்னை அல்லால் இனி ஆரை நினைக்கேனே.


பாடல் எண் : 10

ஏர்-ஆர் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை,

வார்-ஆர் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்,

சீர்-ஆர் நாவலர்-கோன் ஆரூரன் உரைத்த தமிழ்

பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே.

============ ============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Sundarar has a dream while sleeping in thiru-Alambozhil

#3225 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 71

dēvar perumān kaṇḍiyūr paṇindu, tiruvaiyāṟu adanai

mēvi vaṇaṅgip, pūndurutti vimalar pādam toḻudu iṟaiñjic,

cēvil varuvār tiru-ālamboḻilil sērndu tāḻndu, iravu

pāvu sayanattu amarndu-aruḷip paḷḷi-koḷḷak kanavin-kaṇ,


Siva appears in the dream and asks if Sundarar forgot to think of visiting thiru-mazhabAdi

#3226 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 72

"maḻabāḍiyinil varuvadaṟku ninaikka maṟandāyō" eṇḍru

kuḻagāgiya tam kōlam edir kāṭṭi-aruḷak, kuṟittu uṇarndu,

niḻal-ār sōlaik karaip-ponni vaḍa-pāl ēṟi neḍu-māḍam

aḻagu-ār vīdi maḻabāḍi aṇaindār nambi ārūrar.


Sundarar visits thiru-mazhabAdi the next morning

#3227 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 73

aṇaindu tiruk-kōburam iṟaiñji, anbar sūḻa uḍan pugundu,

paṇaṅgoḷ aravam aṇindārmun paṇindu vīḻndu, paraṅgaruṇaik

kuṇaṅgoḷ aruḷin tiṟam pōṭrik koṇḍa puḷagattuḍan urugip

puṇarnda isaiyāl tirup-padigam "ponnār mēni" eṇḍru eḍuttu,


Sundarar sings the "ponnār mēniyanē" padhigam

#3228 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 74

"annē! unnai allāl yān ārai ninaikkēn?" ena ēttit,

tan-nēr illāp padiga-malar sāttit toḻudu, puṟambu aṇaindu,

mannum padiyil sila nāḷgaḷ vaigit toṇḍaruḍan magiḻndu,

ponnik karaiyin iru-maruṅgum paṇindu mēl-pāl pōduvār.


sundarar tēvāram - padigam 7.24 – tirumaḻabāḍi (paṇ - naṭṭarāgam)

(“tānā tānadanā tana tānana tānadanā” - Rhythm)

pāḍal eṇ : 1

pon-ār mēniyanē; pulit-tōlai araikku asaittu,

min-ār señjaḍaimēl miḷir koṇḍrai aṇindavanē;

mannē; mā-maṇiyē; maḻabāḍiyuḷ māṇikkamē;

annē; unnai allāl ini ārai ninaikkēnē?


pāḍal eṇ : 2

kīḷ ār kōvaṇamum tirunīṟu mey pūsi; uṇḍran

tāḷē vandu-aḍaindēn, talaivā, enai ēṇḍrugoḷ nī;

vāḷ ār kaṇṇi paṅgā; maḻabāḍiyuḷ māṇikkamē;

kēḷā ninnai allāl ini ārai ninaikkēnē.


pāḍal eṇ : 3

emmān emmanai en-tanakku eḷ-tanaic cārvu āgār;

im-māyap piṟavi piṟandē iṟandu eyttu-oḻindēn;

maim-mām pūmboḻil sūḻ maḻabāḍiyuḷ māṇikkamē;

ammān; ninnai allāl ini ārai ninaikkēnē.


pāḍal eṇ : 4

paṇḍē nin aḍiyēn, aḍiyār aḍiyārgaṭku ellām

toṇḍē pūṇḍu-oḻindēn; toḍarāmait turisu aṟuttēn;

vaṇḍu-ār pūmboḻil sūḻ maḻabāḍiyuḷ māṇikkamē;

aṇḍā; ninnai allāl ini ārai ninaikkēnē.


pāḍal eṇ : 5

kaṇṇāy ēḻulagum, karuttu-āya aruttamumāyp,

paṇ-ār in-tamiḻāyp, param āya parañjuḍarē;

maṇ-ār pūmboḻil sūḻ maḻabāḍiyuḷ māṇikkamē;

aṇṇā; ninnai allāl ini ārai ninaikkēnē.


pāḍal eṇ : 6

nāḷār vandu-aṇugi naliyāmunam nin-tanakkē

āḷā vandu-aḍaindēn; aḍiyēnaiyum ēṇḍrugoḷ nī;

māḷā nāḷ aruḷum maḻabāḍiyuḷ māṇikkamē;

āḷ-āy, ninnai allāl ini ārai ninaikkēnē.


pāḍal eṇ : 7

sandu-ārum kuḻaiyāy; saḍaimēl piṟai tāṅgi; nalla

vendu-ār veṇ-poḍiyāy; viḍai ēṟiya vittaganē;

maindu-ār sōlaigaḷ sūḻ maḻabāḍiyuḷ māṇikkamē;

endāy; ninnai allāl ini ārai ninaikkēnē.


pāḍal eṇ : 8

veyya viri-suḍarōn migu dēvar gaṇaṅgaḷ-ellām

seyya malargaḷ iḍa migu semmaiyuḷ niṇḍravanē;

mai-ār pūmboḻil sūḻ maḻabāḍiyuḷ māṇikkamē;

aiyā; ninnai allāl ini ārai ninaikkēnē.


pāḍal eṇ : 9

neṟiyē; ninmalanē; neḍu-māl ayan pōṭriseyyum

kuṟiyē; nīrmaiyanē; koḍi ēr iḍaiyāḷ talaivā;

maṟi sēr aṅgaiyanē; maḻabāḍiyuḷ māṇikkamē;

aṟivē; ninnai allāl ini ārai ninaikkēnē.


pāḍal eṇ : 10

ēr-ār muppuramum eriyac cilai toṭṭavanai,

vār-ār koṅgaiyuḍan maḻabāḍiyuḷ mēyavanaic,

cīr-ār nāvalar-kōn ārūran uraitta tamiḻ

pārōr ētta vallār paralōgattu iruppārē.

============ ============

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


Sundarar has a dream while sleeping in thiru-Alambozhil

#3225 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 71

देवर् पॆरुमान् कण्डियूर् पणिन्दु, तिरुवैयाऱु अदनै

मेवि वणङ्गिप्, पून्दुरुत्ति विमलर् पादम् तॊऴुदु इऱैञ्जिच्,

चेविल् वरुवार् तिरु-आलम्बॊऴिलिल् सेर्न्दु ताऴ्न्दु, इरवु

पावु सयनत्तु अमर्न्दु-अरुळिप् पळ्ळि-कॊळ्ळक् कनविन्-कण्,


Siva appears in the dream and asks if Sundarar forgot to think of visiting thiru-mazhabAdi

#3226 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 72

"मऴबाडियिनिल् वरुवदऱ्‌कु निनैक्क मऱन्दायो" ऎण्ड्रु

कुऴगागिय तम् कोलम् ऎदिर् काट्टि-अरुळक्, कुऱित्तु उणर्न्दु,

निऴल्-आर् सोलैक् करैप्-पॊन्नि वड-पाल् एऱि नॆडु-माडम्

अऴगु-आर् वीदि मऴबाडि अणैन्दार् नम्बि आरूरर्.


Sundarar visits thiru-mazhabAdi the next morning

#3227 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 73

अणैन्दु तिरुक्-कोबुरम् इऱैञ्जि, अन्बर् सूऴ उडन् पुगुन्दु,

पणङ्गॊळ् अरवम् अणिन्दार्मुन् पणिन्दु वीऴ्न्दु, परङ्गरुणैक्

कुणङ्गॊळ् अरुळिन् तिऱम् पोट्रिक् कॊण्ड पुळगत्तुडन् उरुगिप्

पुणर्न्द इसैयाल् तिरुप्-पदिगम् "पॊन्नार् मेनि" ऎण्ड्रु ऎडुत्तु,


Sundarar sings the "ponnār mēniyanē" padhigam

#3228 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 74

"अन्ने! उन्नै अल्लाल् यान् आरै निनैक्केन्?" ऎन एत्तित्,

तन्-नेर् इल्लाप् पदिग-मलर् सात्तित् तॊऴुदु, पुऱम्बु अणैन्दु,

मन्नुम् पदियिल् सिल नाळ्गळ् वैगित् तॊण्डरुडन् मगिऴ्न्दु,

पॊन्निक् करैयिन् इरु-मरुङ्गुम् पणिन्दु मेल्-पाल् पोदुवार्.


सुन्दरर् तेवारम् - पदिगम् 7.24 – तिरुमऴबाडि ( पण् - नट्टरागम् )

(“ताना तानदना तन तानन तानदना” - Rhythm)

पाडल् ऎण् : 1

पॊन्-आर् मेनियने; पुलित्-तोलै अरैक्कु असैत्तु,

मिन्-आर् सॆञ्जडैमेल् मिळिर् कॊण्ड्रै अणिन्दवने;

मन्ने; मा-मणिये; मऴबाडियुळ् माणिक्कमे;

अन्ने; उन्नै अल्लाल् इनि आरै निनैक्केने?


पाडल् ऎण् : 2

कीळ् आर् कोवणमुम् तिरुनीऱु मॆय् पूसि; उण्ड्रन्

ताळे वन्दु-अडैन्देन्, तलैवा, ऎनै एण्ड्रुगॊळ् नी;

वाळ् आर् कण्णि पङ्गा; मऴबाडियुळ् माणिक्कमे;

केळा निन्नै अल्लाल् इनि आरै निनैक्केने.


पाडल् ऎण् : 3

ऎम्मान् ऎम्मनै ऎन्-तनक्कु ऎळ्-तनैच् चार्वु आगार्;

इम्-मायप् पिऱवि पिऱन्दे इऱन्दु ऎय्त्तु-ऒऴिन्देन्;

मैम्-माम् पूम्बॊऴिल् सूऴ् मऴबाडियुळ् माणिक्कमे;

अम्मान्; निन्नै अल्लाल् इनि आरै निनैक्केने.


पाडल् ऎण् : 4

पण्डे निन् अडियेन्, अडियार् अडियार्गट्कु ऎल्लाम्

तॊण्डे पूण्डु-ऒऴिन्देन्; तॊडरामैत् तुरिसु अऱुत्तेन्;

वण्डु-आर् पूम्बॊऴिल् सूऴ् मऴबाडियुळ् माणिक्कमे;

अण्डा; निन्नै अल्लाल् इनि आरै निनैक्केने.


पाडल् ऎण् : 5

कण्णाय् एऴुलगुम्, करुत्तु-आय अरुत्तमुमाय्प्,

पण्-आर् इन्-तमिऴाय्प्, परम् आय परञ्जुडरे;

मण्-आर् पूम्बॊऴिल् सूऴ् मऴबाडियुळ् माणिक्कमे;

अण्णा; निन्नै अल्लाल् इनि आरै निनैक्केने.


पाडल् ऎण् : 6

नाळार् वन्दु-अणुगि नलियामुनम् निन्-तनक्के

आळा वन्दु-अडैन्देन्; अडियेनैयुम् एण्ड्रुगॊळ् नी;

माळा नाळ् अरुळुम् मऴबाडियुळ् माणिक्कमे;

आळ्-आय्, निन्नै अल्लाल् इनि आरै निनैक्केने.


पाडल् ऎण् : 7

सन्दु-आरुम् कुऴैयाय्; सडैमेल् पिऱै ताङ्गि; नल्ल

वॆन्दु-आर् वॆण्-पॊडियाय्; विडै एऱिय वित्तगने;

मैन्दु-आर् सोलैगळ् सूऴ् मऴबाडियुळ् माणिक्कमे;

ऎन्दाय्; निन्नै अल्लाल् इनि आरै निनैक्केने.


पाडल् ऎण् : 8

वॆय्य विरि-सुडरोन् मिगु देवर् गणङ्गळ्-ऎल्लाम्

सॆय्य मलर्गळ् इड मिगु सॆम्मैयुळ् निण्ड्रवने;

मै-आर् पूम्बॊऴिल् सूऴ् मऴबाडियुळ् माणिक्कमे;

ऐया; निन्नै अल्लाल् इनि आरै निनैक्केने.


पाडल् ऎण् : 9

नॆऱिये; निन्मलने; नॆडु-माल् अयन् पोट्रिसॆय्युम्

कुऱिये; नीर्मैयने; कॊडि एर् इडैयाळ् तलैवा;

मऱि सेर् अङ्गैयने; मऴबाडियुळ् माणिक्कमे;

अऱिवे; निन्नै अल्लाल् इनि आरै निनैक्केने.


पाडल् ऎण् : 10

एर्-आर् मुप्पुरमुम् ऎरियच् चिलै तॊट्टवनै,

वार्-आर् कॊङ्गैयुडन् मऴबाडियुळ् मेयवनैच्,

चीर्-आर् नावलर्-कोन् आरूरन् उरैत्त तमिऴ्

पारोर् एत्त वल्लार् परलोगत्तु इरुप्पारे.

============ ============


Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Sundarar has a dream while sleeping in thiru-Alambozhil

#3225 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 71

దేవర్ పెరుమాన్ కండియూర్ పణిందు, తిరువైయాఱు అదనై

మేవి వణంగిప్, పూందురుత్తి విమలర్ పాదం తొఴుదు ఇఱైంజిచ్,

చేవిల్ వరువార్ తిరు-ఆలంబొఴిలిల్ సేర్న్దు తాఴ్న్దు, ఇరవు

పావు సయనత్తు అమర్న్దు-అరుళిప్ పళ్ళి-కొళ్ళక్ కనవిన్-కణ్,


Siva appears in the dream and asks if Sundarar forgot to think of visiting thiru-mazhabAdi

#3226 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 72

"మఴబాడియినిల్ వరువదఱ్కు నినైక్క మఱందాయో" ఎండ్రు

కుఴగాగియ తం కోలం ఎదిర్ కాట్టి-అరుళక్, కుఱిత్తు ఉణర్న్దు,

నిఴల్-ఆర్ సోలైక్ కరైప్-పొన్ని వడ-పాల్ ఏఱి నెడు-మాడం

అఴగు-ఆర్ వీది మఴబాడి అణైందార్ నంబి ఆరూరర్.


Sundarar visits thiru-mazhabAdi the next morning

#3227 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 73

అణైందు తిరుక్-కోబురం ఇఱైంజి, అన్బర్ సూఴ ఉడన్ పుగుందు,

పణంగొళ్ అరవం అణిందార్మున్ పణిందు వీఴ్న్దు, పరంగరుణైక్

కుణంగొళ్ అరుళిన్ తిఱం పోట్రిక్ కొండ పుళగత్తుడన్ ఉరుగిప్

పుణర్న్ద ఇసైయాల్ తిరుప్-పదిగం "పొన్నార్ మేని" ఎండ్రు ఎడుత్తు,


Sundarar sings the "ponnār mēniyanē" padhigam

#3228 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 74

"అన్నే! ఉన్నై అల్లాల్ యాన్ ఆరై నినైక్కేన్?" ఎన ఏత్తిత్,

తన్-నేర్ ఇల్లాప్ పదిగ-మలర్ సాత్తిత్ తొఴుదు, పుఱంబు అణైందు,

మన్నుం పదియిల్ సిల నాళ్గళ్ వైగిత్ తొండరుడన్ మగిఴ్న్దు,

పొన్నిక్ కరైయిన్ ఇరు-మరుంగుం పణిందు మేల్-పాల్ పోదువార్.


సుందరర్ తేవారం - పదిగం 7.24 – తిరుమఴబాడి ( పణ్ - నట్టరాగం )

(“తానా తానదనా తన తానన తానదనా” - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

పొన్-ఆర్ మేనియనే; పులిత్-తోలై అరైక్కు అసైత్తు,

మిన్-ఆర్ సెంజడైమేల్ మిళిర్ కొండ్రై అణిందవనే;

మన్నే; మా-మణియే; మఴబాడియుళ్ మాణిక్కమే;

అన్నే; ఉన్నై అల్లాల్ ఇని ఆరై నినైక్కేనే?


పాడల్ ఎణ్ : 2

కీళ్ ఆర్ కోవణముం తిరునీఱు మెయ్ పూసి; ఉండ్రన్

తాళే వందు-అడైందేన్, తలైవా, ఎనై ఏండ్రుగొళ్ నీ;

వాళ్ ఆర్ కణ్ణి పంగా; మఴబాడియుళ్ మాణిక్కమే;

కేళా నిన్నై అల్లాల్ ఇని ఆరై నినైక్కేనే.


పాడల్ ఎణ్ : 3

ఎమ్మాన్ ఎమ్మనై ఎన్-తనక్కు ఎళ్-తనైచ్ చార్వు ఆగార్;

ఇం-మాయప్ పిఱవి పిఱందే ఇఱందు ఎయ్త్తు-ఒఴిందేన్;

మైం-మాం పూంబొఴిల్ సూఴ్ మఴబాడియుళ్ మాణిక్కమే;

అమ్మాన్; నిన్నై అల్లాల్ ఇని ఆరై నినైక్కేనే.


పాడల్ ఎణ్ : 4

పండే నిన్ అడియేన్, అడియార్ అడియార్గట్కు ఎల్లాం

తొండే పూండు-ఒఴిందేన్; తొడరామైత్ తురిసు అఱుత్తేన్;

వండు-ఆర్ పూంబొఴిల్ సూఴ్ మఴబాడియుళ్ మాణిక్కమే;

అండా; నిన్నై అల్లాల్ ఇని ఆరై నినైక్కేనే.


పాడల్ ఎణ్ : 5

కణ్ణాయ్ ఏఴులగుం, కరుత్తు-ఆయ అరుత్తముమాయ్ప్,

పణ్-ఆర్ ఇన్-తమిఴాయ్ప్, పరం ఆయ పరంజుడరే;

మణ్-ఆర్ పూంబొఴిల్ సూఴ్ మఴబాడియుళ్ మాణిక్కమే;

అణ్ణా; నిన్నై అల్లాల్ ఇని ఆరై నినైక్కేనే.


పాడల్ ఎణ్ : 6

నాళార్ వందు-అణుగి నలియామునం నిన్-తనక్కే

ఆళా వందు-అడైందేన్; అడియేనైయుం ఏండ్రుగొళ్ నీ;

మాళా నాళ్ అరుళుం మఴబాడియుళ్ మాణిక్కమే;

ఆళ్-ఆయ్, నిన్నై అల్లాల్ ఇని ఆరై నినైక్కేనే.


పాడల్ ఎణ్ : 7

సందు-ఆరుం కుఴైయాయ్; సడైమేల్ పిఱై తాంగి; నల్ల

వెందు-ఆర్ వెణ్-పొడియాయ్; విడై ఏఱియ విత్తగనే;

మైందు-ఆర్ సోలైగళ్ సూఴ్ మఴబాడియుళ్ మాణిక్కమే;

ఎందాయ్; నిన్నై అల్లాల్ ఇని ఆరై నినైక్కేనే.


పాడల్ ఎణ్ : 8

వెయ్య విరి-సుడరోన్ మిగు దేవర్ గణంగళ్-ఎల్లాం

సెయ్య మలర్గళ్ ఇడ మిగు సెమ్మైయుళ్ నిండ్రవనే;

మై-ఆర్ పూంబొఴిల్ సూఴ్ మఴబాడియుళ్ మాణిక్కమే;

ఐయా; నిన్నై అల్లాల్ ఇని ఆరై నినైక్కేనే.


పాడల్ ఎణ్ : 9

నెఱియే; నిన్మలనే; నెడు-మాల్ అయన్ పోట్రిసెయ్యుం

కుఱియే; నీర్మైయనే; కొడి ఏర్ ఇడైయాళ్ తలైవా;

మఱి సేర్ అంగైయనే; మఴబాడియుళ్ మాణిక్కమే;

అఱివే; నిన్నై అల్లాల్ ఇని ఆరై నినైక్కేనే.


పాడల్ ఎణ్ : 10

ఏర్-ఆర్ ముప్పురముం ఎరియచ్ చిలై తొట్టవనై,

వార్-ఆర్ కొంగైయుడన్ మఴబాడియుళ్ మేయవనైచ్,

చీర్-ఆర్ నావలర్-కోన్ ఆరూరన్ ఉరైత్త తమిఴ్

పారోర్ ఏత్త వల్లార్ పరలోగత్తు ఇరుప్పారే.

============ ============

2 comments:

  1. Pl provide meaning also if possible

    ReplyDelete
    Replies
    1. Meaning is already available on this page. Please see the audio recording links and YouTube links - in the first few lines of this post above.

      For Dharmapuram Adheenam urai (in Tamil) for this padhigam: http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7024

      Delete