சம்பந்தர் தேவாரம் - Sambandar thevaram
2.37 - சதுரம் மறைதான்
5.10 – sadhuram maRaidhAn
Links to verses and audio of this padhigam's discussion:
verses: https://drive.google.com/open?id=1sV1a4_pZsow-OBtj06jDs90Q-haBEbsA
English translation – by V.M.Subramanya Ayyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_037.HTM
******
On YouTube:
Part-1: https://youtu.be/6skts_HV6Dk
Part-2: https://youtu.be/S4sJsnwgUN4
******
V. Subramanian
======================
This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts. Please print the pages you need.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.37 – திருமறைக்காடு ( பண் - இந்தளம் )
Background:
பதிக வரலாறு :
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருமறைக்காட்டுக் கோயிலுள் புகுந்து பிரதட்சிணம் செய்து சன்னிதி முன்பு சென்று சேர்ந்தனர் . வேதங்கள் பூசித்துக் கதவைத் திருக்காப்புச் செய்த நாள்முதல் அன்றுவரை அந்தக் கதவு அடைத்தே இருந்தது. பக்கத்தில் வேறொரு வாயில் வழியாக அடியவர்கள் சென்று வழிபட்டுவந்தனர்; சம்பந்தரும் அப்பரும் இச்செய்தியைக் கேட்டறிந்தனர்; `சன்னிதி முன் உள்ள கதவு திருக்காப்பு நீங்கப் பாடும் அப்பரே !` என்று சம்பந்தர் திருநாவுக்கரசரை வேண்டினார். அச்சமயத்தில் திருநாவுக்கரசர் "பண்ணின் நேர் மொழியாள்" என்று தொடங்கும் பதிகத்தைப் பாடியருளினார். பதிகத்தின் நிறைவில் ஈசன் அருளால் கதவு திறந்தது.
இருவரும் சன்னிதியுள் சென்று இறைவனைப் போற்றி வழிபட்டனர். பிறகு இருவரும் வெளியே வந்தனர். அப்பொழுது திருநாவுக்கரசர் சம்பந்தரிடம், 'இனி எப்பொழுதும் இக்கதவுகளைத் திறத்தலும் மூடுதலும் நிகழட்டும்; ஆகவே, இக்கதவுகள் மூடுவதற்கு பாடியருளுங்கள்" என்று கூறினார். சம்பந்தர், "சதுரம் மறைதான்" என்று தொடங்கும் இப்பதிகத்தைப் பாடினார். முதற்பாட்டைப் பாடியதுமே கதவுகள் மூடிக்கொண்டன. (திருமுறை 12.28.587) .
----------
2484 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 586
புறம்புவந் தணைந்த போது புகலிகா வலரை நோக்கி
"நிறங்கிளர் மணிக்க பாட நீக்கமு மடைப்பு நிற்கத்
திறந்தவா றடைக்கப் பாடி யருளுநீ " ரென்றார் தீய
மறம்புரி யமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார்.
2485 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 587
அன்றர சருளிச் செய்ய வருமறைப் பிள்ளை யாரும்
வென்றிவெள் விடையார் தம்மை விருப்பினாற் "சதுர" மென்னும்
இன்றமிழ்ப் பதிகப் பாட லிசைத்திட, விரண்டு பாலும்
நின்றவக் கதவு காப்பு நிரம்பிட வடைத்த தன்றே.
2487 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 589
அத்திரு வாயி றன்னி லற்றைநாட் டொடங்கி நேரே
மெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்ற
வைத்தெதிர் வழக்கஞ் செய்த வரம்பிலாப் பெருமை யோரைக்
கைத்தலங் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல்சூழ் வையம்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.37 – திருமறைக்காடு ( பண் - இந்தளம் )
("தனனாதன தானன தானன தானா" - என்ற சந்தம்)
("தனனா தனனா தனனா தனதானா" - என்ற சந்தமாகவும் நோக்கலாம்)
பாடல் எண் : 1
சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.
பாடல் எண் : 2
சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
மங்கை யுமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித் தகருத்தே.
பாடல் எண் : 3
குரவங் குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித் தலழகே.
பாடல் எண் : 4
படர்செம் பவளத் தொடுபன் மலர்முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
உடலம் முமைபங் கமதா கியுமென்கொல்
கடனஞ் சமுதா வதுவுண் டகருத்தே.
பாடல் எண் : 5
வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத் தவிருந் தநீயென்கொல்
கானார் கடுவே டுவனா னகருத்தே.
பாடல் எண் : 6
பலகா லங்கள்வே தங்கள்பா தங்கள்போற்றி
மலரால் வழிபா டுசெய்மா மறைக்காடா
உலகே ழுடையாய் கடைதோ றுமுன்னென்கொல்
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.
பாடல் எண் : 7
வேலா வலயத் தயலே மிளிர்வெய்தும்
சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா
மாலோ டயனிந் திரனஞ் சமுனென்கொல்
காலார் சிலைக்கா மனைக்காய்ந் தகருத்தே.
பாடல் எண் : 8
கலங்கொள் கடலோ தமுலா வுகரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையா னடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன் றியருள் செய்தவாறே.
பாடல் எண் : 9
கோனென் றுபல்கோ டியுருத் திரர்போற்றும்
தேனம் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
ஏனங் கழுகா னவருன் னைமுனென்கொல்
வானந் தலமண் டியுங்கண் டிலாவாறே.
பாடல் எண் : 10
வேதம் பலவோ மம்வியந் தடிபோற்ற
ஓதம் முலவும் மறைக்காட் டிலுறைவாய்
ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே.
பாடல் எண் : 11
காழிந் நகரான் கலைஞா னசம்பந்தன்
வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமா லையீரைந் திவைவல்லார்
வாழி யுலகோர் தொழவா னடைவாரே.
Word separated version:
2484 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 586
புறம்பு வந்து அணைந்த போது, புகலி-காவலரை நோக்கி,
"நிறம் கிளர் மணிக்-கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்கத்,
திறந்தவாறு அடைக்கப் பாடியருளும் நீர் " என்றார், தீய
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார்.
2485 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 587
அன்று அரசு அருளிச் செய்ய, அரு-மறைப் பிள்ளையாரும்
வென்றி வெள்-விடையார் தம்மை விருப்பினால் "சதுரம்" என்னும்
இன்-தமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட, இரண்டு பாலும்
நின்ற அக்-கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே.
2487 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 589
அத்-திரு-வாயில் தன்னில் அற்றை-நாள் தொடங்கி, நேரே
மெய்த்-திரு-மறைகள் போல மேதினி புக்குப் போற்ற
வைத்து, எதிர் வழக்கம் செய்த வரம்பு-இலாப் பெருமையோரைக்
கைத்தலம் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல்-சூழ் வையம்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.37 – திருமறைக்காடு ( பண் - இந்தளம் )
("தனனாதன தானன தானன தானா" - என்ற சந்தம்)
("தனனா தனனா தனனா தனதானா" - என்ற சந்தமாகவும் நோக்கலாம்)
பாடல் எண் : 1
சதுரம்-மறைதான் துதி-செய்து வணங்கும்,
மதுரம் பொழில்-சூழ் மறைக்காட்டு உறை மைந்தா ;
இது நன்கு இறை-வைத்து அருள்-செய்க, எனக்கு உன்
கதவம் திருக்-காப்புக் கொள்ளும் கருத்தாலே.
பாடல் எண் : 2
சங்கம் தரளம் அவைதான் கரைக்கு எற்றும்
வங்கக்-கடல்-சூழ் மறைக்காட்டு உறை மைந்தா ;
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல்
கங்கை சடைமேல் அடைவித்த கருத்தே?
பாடல் எண் : 3
குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல்
மருவும் பொழில்-சூழ் மறைக்காட்டு உறை மைந்தா ;
சிரமும் மலரும் திகழ் செஞ்சடைதன்மேல்
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே?
பாடல் எண் : 4
படர் செம்பவளத்தொடு பன்-மலர் முத்தம்
மடல் அம் பொழில்-சூழ் மறைக்காட்டு உறை மைந்தா ;
உடலம் உமை பங்கம்-அது ஆகியும் என்-கொல்
கடல்-நஞ்சு அமுதா அது உண்ட கருத்தே?
பாடல் எண் : 5
வானோர் மறை மாதவத்தோர் வழிபட்ட
தேன் ஆர் பொழில்-சூழ் மறைக்காட்டு உறை செல்வா ;
ஏனோர் தொழுதேத்த இருந்த நீ என்-கொல்
கான் ஆர் கடு-வேடுவன் ஆன கருத்தே?
பாடல் எண் : 6
பல காலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா ;
உலகு ஏழு உடையாய், கடைதோறும் முன் என்-கொல்
தலை சேர் பலி-கொண்டு அதில் உண்டதுதானே?
பாடல் எண் : 7
வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும்
சேல் ஆர் திரு-மா-மறைக்காட்டு உறை செல்வா ;
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச, முன் என்-கொல்
கால் ஆர் சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே?
பாடல் எண் : 8
கலங்கொள் கடல் ஓதம் உலாவு கரைமேல்
வலங்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா ;
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த
அலங்கல் விரல் ஊன்றி அருள் செய்தவாறே?
பாடல் எண் : 9
கோன் என்று பல்-கோடி உருத்திரர் போற்றும்
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா ;
ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன் என்-கொல்
வானம் தலம் மண்டியும் கண்டிலாவாறே?
பாடல் எண் : 10
வேதம் பல ஓமம் வியந்து அடி-போற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் ;
ஏதில் சமண் சாக்கியர் வாக்கு-இவை என்-கொல்
ஆதரொடுதாம் அலர் தூற்றியவாறே?
பாடல் எண் : 11
காழிந் நகரான் கலை-ஞான-சம்பந்தன்
வாழிம் மறைக்காடனை வாய்ந்து அறிவித்த
ஏழ்-இன்னிசை மாலை ஈரைந்து இவை வல்லார்
வாழி உலகோர் தொழ வான் அடைவாரே.
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
2484 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 586
puṟambu vandu aṇainda pōdu, pugali-kāvalarai nōkki,
"niṟam kiḷar maṇik-kabāḍam nīkkamum aḍaippum niṟkat,
tiṟandavāṟu aḍaikkap pāḍiyaruḷum nīr " eṇḍrār, tīya
maṟam puri amaṇar seyda vañjanai kaḍakka vallār.
2485 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 587
aṇḍru arasu aruḷic ceyya, aru-maṟaip piḷḷaiyārum
veṇḍri veḷ-viḍaiyār tammai viruppināl "saduram" ennum
in-tamiḻp padigap pāḍal isaittiḍa, iraṇḍu pālum
niṇḍra ak-kadavu kāppu nirambiḍa aḍaittadu aṇḍrē.
2487 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 589
at-tiru-vāyil tannil aṭrai-nāḷ toḍaṅgi, nērē
meyt-tiru-maṟaigaḷ pōla mēdini pukkup pōṭra
vaittu, edir vaḻakkam seyda varambu-ilāp perumaiyōraik
kaittalam kuvittut tāḻndu vāḻndadu kaḍal-sūḻ vaiyam.
sambandar tēvāram - padigam 2.37 – tirumaṟaikkāḍu ( paṇ - indaḷam )
("tananādana tānana tānana tānā" - rhythm)
("tananā tananā tananā tanadānā" - rhythm)
pāḍal eṇ : 1
saduram-maṟaidān tudi-seydu vaṇaṅgum,
maduram poḻil-sūḻ maṟaikkāṭṭu uṟai maindā ;
idu nangu iṟai-vaittu aruḷ-seyga, enakku un
kadavam tiruk-kāppuk koḷḷum karuttālē.
pāḍal eṇ : 2
saṅgam taraḷam avaidān karaikku eṭrum
vaṅgak-kaḍal-sūḻ maṟaikkāṭṭu uṟai maindā ;
maṅgai umai pāgamum āga idu en-kol
kaṅgai saḍaimēl aḍaivitta karuttē?
pāḍal eṇ : 3
kuravam kurukkattigaḷ punnaigaḷ ñāḻal
maruvum poḻil-sūḻ maṟaikkāṭṭu uṟai maindā ;
siramum malarum tigaḻ señjaḍaidanmēl
aravam madiyōḍu aḍaivittal aḻagē?
pāḍal eṇ : 4
paḍar sembavaḷattoḍu pan-malar muttam
maḍal am poḻil-sūḻ maṟaikkāṭṭu uṟai maindā ;
uḍalam umai paṅgam-adu āgiyum en-kol
kaḍal-nañju amudā adu uṇḍa karuttē?
pāḍal eṇ : 5
vānōr maṟai mādavattōr vaḻibaṭṭa
tēn ār poḻil-sūḻ maṟaikkāṭṭu uṟai selvā ;
ēnōr toḻudētta irunda nī en-kol
kān ār kaḍu-vēḍuvan āna karuttē?
pāḍal eṇ : 6
pala kālaṅgaḷ vēdaṅgaḷ pādaṅgaḷ pōṭri
malarāl vaḻibāḍu sey mā maṟaikkāḍā ;
ulagu ēḻu uḍaiyāy, kaḍaidōṟum mun en-kol
talai sēr pali-koṇḍu adil uṇḍadudānē?
pāḍal eṇ : 7
vēlāvalayattu ayalē miḷirvu eydum
sēl ār tiru-mā-maṟaikkāṭṭu uṟai selvā ;
mālōḍu ayan indiran añja, mun en-kol
kāl ār silaik kāmanaik kāynda karuttē?
pāḍal eṇ : 8
kalaṅgoḷ kaḍal ōdam ulāvu karaimēl
valaṅgoḷbavar vāḻttu isaikkum maṟaikkāḍā ;
ilaṅgai uḍaiyān aḍarppaṭṭu iḍar eyda
alaṅgal viral ūṇḍri aruḷ seydavāṟē?
pāḍal eṇ : 9
kōn eṇḍru pal-kōḍi uruttirar pōṭrum
tēn am poḻil sūḻ maṟaikkāṭṭu uṟai selvā ;
ēnam kaḻugu ānavar unnai mun en-kol
vānam talam maṇḍiyum kaṇḍilāvāṟē?
pāḍal eṇ : 10
vēdam pala ōmam viyandu aḍi-pōṭra
ōdam ulavum maṟaikkāṭṭil uṟaivāy ;
ēdil samaṇ sākkiyar vākku-ivai en-kol
ādaroḍudām alar tūṭriyavāṟē?
pāḍal eṇ : 11
kāḻin nagarān kalai-ñāna-sambandan
vāḻim maṟaikkāḍanai vāyndu aṟivitta
ēḻ-innisai mālai īraindu ivai vallār
vāḻi ulagōr toḻa vān aḍaivārē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
२४८४ - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - ५८६
पुऱम्बु वन्दु अणैन्द पोदु, पुगलि-कावलरै नोक्कि,
"निऱम् किळर् मणिक्-कबाडम् नीक्कमुम् अडैप्पुम् निऱ्कत्,
तिऱन्दवाऱु अडैक्कप् पाडियरुळुम् नीर् " ऎण्ड्रार्, तीय
मऱम् पुरि अमणर् सॆय्द वञ्जनै कडक्क वल्लार्.
२४८५ - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - ५८७
अण्ड्रु अरसु अरुळिच् चॆय्य, अरु-मऱैप् पिळ्ळैयारुम्
वॆण्ड्रि वॆळ्-विडैयार् तम्मै विरुप्पिनाल् "सदुरम्" ऎन्नुम्
इन्-तमिऴ्प् पदिगप् पाडल् इसैत्तिड, इरण्डु पालुम्
निण्ड्र अक्-कदवु काप्पु निरम्बिड अडैत्तदु अण्ड्रे.
२४८७ - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - ५८९
अत्-तिरु-वायिल् तन्निल् अट्रै-नाळ् तॊडङ्गि, नेरे
मॆय्त्-तिरु-मऱैगळ् पोल मेदिनि पुक्कुप् पोट्र
वैत्तु, ऎदिर् वऴक्कम् सॆय्द वरम्बु-इलाप् पॆरुमैयोरैक्
कैत्तलम् कुवित्तुत् ताऴ्न्दु वाऴ्न्ददु कडल्-सूऴ् वैयम्.
सम्बन्दर् तेवारम् - पदिगम् २.३७ – तिरुमऱैक्काडु ( पण् - इन्दळम् )
("तननादन तानन तानन ताना" - rhythm)
("तनना तनना तनना तनदाना" - rhythm)
पाडल् ऎण् : १
सदुरम्-मऱैदान् तुदि-सॆय्दु वणङ्गुम्,
मदुरम् पॊऴिल्-सूऴ् मऱैक्काट्टु उऱै मैन्दा ;
इदु नन्गु इऱै-वैत्तु अरुळ्-सॆय्ग, ऎनक्कु उन्
कदवम् तिरुक्-काप्पुक् कॊळ्ळुम् करुत्ताले.
पाडल् ऎण् : २
सङ्गम् तरळम् अवैदान् करैक्कु ऎट्रुम्
वङ्गक्-कडल्-सूऴ् मऱैक्काट्टु उऱै मैन्दा ;
मङ्गै उमै पागमुम् आग इदु ऎन्-कॊल्
कङ्गै सडैमेल् अडैवित्त करुत्ते?
पाडल् ऎण् : ३
कुरवम् कुरुक्कत्तिगळ् पुन्नैगळ् ञाऴल्
मरुवुम् पॊऴिल्-सूऴ् मऱैक्काट्टु उऱै मैन्दा ;
सिरमुम् मलरुम् तिगऴ् सॆञ्जडैदन्मेल्
अरवम् मदियोडु अडैवित्तल् अऴगे?
पाडल् ऎण् : ४
पडर् सॆम्बवळत्तॊडु पन्-मलर् मुत्तम्
मडल् अम् पॊऴिल्-सूऴ् मऱैक्काट्टु उऱै मैन्दा ;
उडलम् उमै पङ्गम्-अदु आगियुम् ऎन्-कॊल्
कडल्-नञ्जु अमुदा अदु उण्ड करुत्ते?
पाडल् ऎण् : ५
वानोर् मऱै मादवत्तोर् वऴिबट्ट
तेन् आर् पॊऴिल्-सूऴ् मऱैक्काट्टु उऱै सॆल्वा ;
एनोर् तॊऴुदेत्त इरुन्द नी ऎन्-कॊल्
कान् आर् कडु-वेडुवन् आन करुत्ते?
पाडल् ऎण् : ६
पल कालङ्गळ् वेदङ्गळ् पादङ्गळ् पोट्रि
मलराल् वऴिबाडु सॆय् मा मऱैक्काडा ;
उलगु एऴु उडैयाय्, कडैदोऱुम् मुन् ऎन्-कॊल्
तलै सेर् पलि-कॊण्डु अदिल् उण्डदुदाने?
पाडल् ऎण् : ७
वेलावलयत्तु अयले मिळिर्वु ऎय्दुम्
सेल् आर् तिरु-मा-मऱैक्काट्टु उऱै सॆल्वा ;
मालोडु अयन् इन्दिरन् अञ्ज, मुन् ऎन्-कॊल्
काल् आर् सिलैक् कामनैक् काय्न्द करुत्ते?
पाडल् ऎण् : ८
कलङ्गॊळ् कडल् ओदम् उलावु करैमेल्
वलङ्गॊळ्बवर् वाऴ्त्तु इसैक्कुम् मऱैक्काडा ;
इलङ्गै उडैयान् अडर्प्पट्टु इडर् ऎय्द
अलङ्गल् विरल् ऊण्ड्रि अरुळ् सॆय्दवाऱे?
पाडल् ऎण् : ९
कोन् ऎण्ड्रु पल्-कोडि उरुत्तिरर् पोट्रुम्
तेन् अम् पॊऴिल् सूऴ् मऱैक्काट्टु उऱै सॆल्वा ;
एनम् कऴुगु आनवर् उन्नै मुन् ऎन्-कॊल्
वानम् तलम् मण्डियुम् कण्डिलावाऱे?
पाडल् ऎण् : १०
वेदम् पल ओमम् वियन्दु अडि-पोट्र
ओदम् उलवुम् मऱैक्काट्टिल् उऱैवाय् ;
एदिल् समण् साक्कियर् वाक्कु-इवै ऎन्-कॊल्
आदरॊडुदाम् अलर् तूट्रियवाऱे?
पाडल् ऎण् : ११
काऴिन् नगरान् कलै-ञान-सम्बन्दन्
वाऴिम् मऱैक्काडनै वाय्न्दु अऱिवित्त
एऴ्-इन्निसै मालै ईरैन्दु इवै वल्लार्
वाऴि उलगोर् तॊऴ वान् अडैवारे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
2484 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 586
పుఱంబు వందు అణైంద పోదు, పుగలి-కావలరై నోక్కి,
"నిఱం కిళర్ మణిక్-కబాడం నీక్కముం అడైప్పుం నిఱ్కత్,
తిఱందవాఱు అడైక్కప్ పాడియరుళుం నీర్ " ఎండ్రార్, తీయ
మఱం పురి అమణర్ సెయ్ద వంజనై కడక్క వల్లార్.
2485 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 587
అండ్రు అరసు అరుళిచ్ చెయ్య, అరు-మఱైప్ పిళ్ళైయారుం
వెండ్రి వెళ్-విడైయార్ తమ్మై విరుప్పినాల్ "సదురం" ఎన్నుం
ఇన్-తమిఴ్ప్ పదిగప్ పాడల్ ఇసైత్తిడ, ఇరండు పాలుం
నిండ్ర అక్-కదవు కాప్పు నిరంబిడ అడైత్తదు అండ్రే.
2487 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 589
అత్-తిరు-వాయిల్ తన్నిల్ అట్రై-నాళ్ తొడంగి, నేరే
మెయ్త్-తిరు-మఱైగళ్ పోల మేదిని పుక్కుప్ పోట్ర
వైత్తు, ఎదిర్ వఴక్కం సెయ్ద వరంబు-ఇలాప్ పెరుమైయోరైక్
కైత్తలం కువిత్తుత్ తాఴ్న్దు వాఴ్న్దదు కడల్-సూఴ్ వైయం.
సంబందర్ తేవారం - పదిగం 2.37 – తిరుమఱైక్కాడు ( పణ్ - ఇందళం )
("తననాదన తానన తానన తానా" - rhythm)
("తననా తననా తననా తనదానా" - rhythm)
పాడల్ ఎణ్ : 1
సదురం-మఱైదాన్ తుది-సెయ్దు వణంగుం,
మదురం పొఴిల్-సూఴ్ మఱైక్కాట్టు ఉఱై మైందా ;
ఇదు నన్గు ఇఱై-వైత్తు అరుళ్-సెయ్గ, ఎనక్కు ఉన్
కదవం తిరుక్-కాప్పుక్ కొళ్ళుం కరుత్తాలే.
పాడల్ ఎణ్ : 2
సంగం తరళం అవైదాన్ కరైక్కు ఎట్రుం
వంగక్-కడల్-సూఴ్ మఱైక్కాట్టు ఉఱై మైందా ;
మంగై ఉమై పాగముం ఆగ ఇదు ఎన్-కొల్
కంగై సడైమేల్ అడైవిత్త కరుత్తే?
పాడల్ ఎణ్ : 3
కురవం కురుక్కత్తిగళ్ పున్నైగళ్ ఞాఴల్
మరువుం పొఴిల్-సూఴ్ మఱైక్కాట్టు ఉఱై మైందా ;
సిరముం మలరుం తిగఴ్ సెంజడైదన్మేల్
అరవం మదియోడు అడైవిత్తల్ అఴగే?
పాడల్ ఎణ్ : 4
పడర్ సెంబవళత్తొడు పన్-మలర్ ముత్తం
మడల్ అం పొఴిల్-సూఴ్ మఱైక్కాట్టు ఉఱై మైందా ;
ఉడలం ఉమై పంగం-అదు ఆగియుం ఎన్-కొల్
కడల్-నంజు అముదా అదు ఉండ కరుత్తే?
పాడల్ ఎణ్ : 5
వానోర్ మఱై మాదవత్తోర్ వఴిబట్ట
తేన్ ఆర్ పొఴిల్-సూఴ్ మఱైక్కాట్టు ఉఱై సెల్వా ;
ఏనోర్ తొఴుదేత్త ఇరుంద నీ ఎన్-కొల్
కాన్ ఆర్ కడు-వేడువన్ ఆన కరుత్తే?
పాడల్ ఎణ్ : 6
పల కాలంగళ్ వేదంగళ్ పాదంగళ్ పోట్రి
మలరాల్ వఴిబాడు సెయ్ మా మఱైక్కాడా ;
ఉలగు ఏఴు ఉడైయాయ్, కడైదోఱుం మున్ ఎన్-కొల్
తలై సేర్ పలి-కొండు అదిల్ ఉండదుదానే?
పాడల్ ఎణ్ : 7
వేలావలయత్తు అయలే మిళిర్వు ఎయ్దుం
సేల్ ఆర్ తిరు-మా-మఱైక్కాట్టు ఉఱై సెల్వా ;
మాలోడు అయన్ ఇందిరన్ అంజ, మున్ ఎన్-కొల్
కాల్ ఆర్ సిలైక్ కామనైక్ కాయ్న్ద కరుత్తే?
పాడల్ ఎణ్ : 8
కలంగొళ్ కడల్ ఓదం ఉలావు కరైమేల్
వలంగొళ్బవర్ వాఴ్త్తు ఇసైక్కుం మఱైక్కాడా ;
ఇలంగై ఉడైయాన్ అడర్ప్పట్టు ఇడర్ ఎయ్ద
అలంగల్ విరల్ ఊండ్రి అరుళ్ సెయ్దవాఱే?
పాడల్ ఎణ్ : 9
కోన్ ఎండ్రు పల్-కోడి ఉరుత్తిరర్ పోట్రుం
తేన్ అం పొఴిల్ సూఴ్ మఱైక్కాట్టు ఉఱై సెల్వా ;
ఏనం కఴుగు ఆనవర్ ఉన్నై మున్ ఎన్-కొల్
వానం తలం మండియుం కండిలావాఱే?
పాడల్ ఎణ్ : 10
వేదం పల ఓమం వియందు అడి-పోట్ర
ఓదం ఉలవుం మఱైక్కాట్టిల్ ఉఱైవాయ్ ;
ఏదిల్ సమణ్ సాక్కియర్ వాక్కు-ఇవై ఎన్-కొల్
ఆదరొడుదాం అలర్ తూట్రియవాఱే?
పాడల్ ఎణ్ : 11
కాఴిన్ నగరాన్ కలై-ఞాన-సంబందన్
వాఴిం మఱైక్కాడనై వాయ్న్దు అఱివిత్త
ఏఴ్-ఇన్నిసై మాలై ఈరైందు ఇవై వల్లార్
వాఴి ఉలగోర్ తొఴ వాన్ అడైవారే.
============ ============