Wednesday, July 25, 2018

5.50 - திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம் - tiruvāymūr - eṅgē eṉṉai irundiḍam

55) 5.50 - திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம் - tiruvāymūr - eṅgē eṉṉai irundiḍam
திருநாவுக்கரசர் தேவாரம் - Thirunavukkarasar thevaram
5.50 - எங்கே என்னை இருந்திடம்
5.50 – engE ennai irundhidam
Here are the links to verses and audio of this padhigam's discussion:
verses: https://drive.google.com/open?id=1mq0z7JSwNRhqpRZYMgMmK48myeAATu8T
English translation – by V.M.Subramanya Ayyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS5_050.HTM
***
On YouTube:
Part-1: https://youtu.be/K9ju4TwnPNk
Part-2: https://youtu.be/1I_V15Lcd0w
***

V. Subramanian
=====================

This has verses in Tamil, English, and Nagari scripts. Please print the pages you need.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.50 – திருவாய்மூர் - (திருக்குறுந்தொகை )


Background:
பதிக வரலாறு :
திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தருடன் திருமறைக்காடு சென்று மறைக்கதவைத் திறக்கவும் , அடைக்கவும் பாடித் தொழுது மடத்திற்குச் சென்றார் . அங்குத் தாம் பல பாடல்கள் பாடிய பின்னே கதவு திறந்ததையும் சம்பந்தர் ஒரு பாட்டுப் பாடியதுமே எளிதில் கதவு அடைத்ததையும் சிந்தித்து , 'இறைவர் திருவுள்ளம் அறியாது செய்தேனோ' என்று கவலையோடு துயின்றார் வாகீசர். அப்போது சிவபெருமான் திருநீற்றுக் கோலத்துடன் காட்சி கொடுத்துத், `திருவாய்மூரில் இருப்போம். தொடர்ந்து வா' என்றார். அப்போது துயில் நீங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம் .



இரவில் ஈசன் ஒளியுருவோடு முன்செல்லப் பின்தொடர்ந்து சென்றார் வாகீசர். திருவாய்மூரில் ஈசன் தன்னை மறைத்துக்கொண்டார். திருநாவுக்கரசர் திருவாய்மூருக்குக் கிளம்பியதை அறிந்து சம்பந்தரும் திருவாய்மூர் வந்தடைந்தார். ஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் வெளிப்பட்டுக் காட்சி தந்தருளினார். ஈசன் திருநடத்தைப் பிள்ளையார் பார்த்துப் பணிந்து, துதித்து, நாவுக்கரசரும் காணுமாறு காட்டியருளினார். நாவுக்கரசரும் கண்டு, `பாட அடியார் பரவக் கண்டேன் பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன்` எனத் தொடங்கும் பதிகம் பாடியருளினார் (பதிகம் 6.77).


My notes:
இப்பதிகத்தின் முதற்பாடல்கள் சிலவற்றைத் திருமறைக்காட்டில் பாடிப்., பின் மற்ற பாடல்களைத் திருவாய்மூர் சென்றடைந்தபின் பாடினாரோ? பாடல்களின் கருத்தைப் பார்த்தால் அப்படித் தோன்றுகின்றது.
பாடல் 1-2: திருமறைக்காட்டில் ஈசன் வந்து "திருவாய்மூருக்கு வா" என்றதும் பாடினார்போல்.
பாடல் 3-7: திருவாய்மூரில் ஈசன் காட்சியை மறைத்துக்கொண்டது குறித்துப் பாடியவைபோல்.
பாடல் 8-10: சம்பந்தரும் திருவாய்மூர் வந்துசேர்ந்தபின் அவரும் அருகே இருக்கும் சமயத்தில் பாடியவைபோல்.


----------
1540 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 275
அரிதிற் றிறக்கத் தாம்பாட, வடைக்க வவர்பா டியவெளிமை
கருதி, "நம்பர் திருவுள்ள மறியா தயர்ந்தே" னெனக்கவன்று,
பெரிது மஞ்சித் திருமடத்தி லொருபா லணைந்து பேழ்கணித்து
மருவு முணர்விற் றுயில்கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்.


1541 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 276
மன்னுஞ் செல்வ மறைக்காட்டு மணியின் பாத மனத்தின்கண்
உன்னித் துயிலும் பொழுதின்க ணுமையோர் பாக முடையவர்தாம்
பொன்னின் மேனி வெண்ணீறு புனைந்த கோலப் பொலிவினொடுந்
துன்னி யவர்க்கு "வாய்மூரி லிருப்போந் தொடர வா" வென்றார்.


1542 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 277
போத நிகழ"வா வென்று போனா ரதென்கொ" லெனப்பாடி
"யீதெம் பெருமா னருளாகி லியானும் போவே" னென்றெழுந்து
வேத வனத்தைப் புறப்பட்டு விரைந்து போக, வவர்முன்னே,
யாதி மூர்த்தி முன்காட்டு மவ்வே டத்தா லெழுந்தருள,
* பாடபேதம் - தருமை ஆதீனப் பதிப்பில்: "போனார் என்கொல்"
** பாடபேதம் - தருமை ஆதீனப் பதிப்பில்: "வேத வனத்தைப் புறகிட்டு"


1543 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 278
சீரார் பதியி னின்றெழுந்து செல்லுந் திருநா வுக்கரசர்,
ஆரா வன்பி லாரமுத முண்ண வெய்தா வாறேபோல்
நீரார் சடையா ரெழுந்தருள நெடிது பின்பு செல்லுமவர்
பேரா ளரைமுன் றொடர்ந்தணையப் பெறுவா ரெய்தப் பெற்றிலரால்;


1544 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 279
அன்ன வண்ண மெழுந்தருளி யணித்தே காட்சி கொடுப்பார்போற்
பொன்னின் கோயி லொன்றெதிரே காட்டி யதனுட் புக்கருளத்
துன்னுந் தொண்ட ரம்மருங்கு விரைந்து தொடரப், போந்தபடி
மன்னும் புகலி வள்ளலார் தாமுங் கேட்டு வந்தணைந்தார்,


1545 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 280
"அழைத்துக் கொடுபோந் தணியார்போற் காட்டி மறைந்தா" ரெனவயர்ந்து
"பிழைத்துச் செவ்வி யறியாதே திறப்பித் தேனுக் கேயல்லால்
உழைத்தா மொளித்தாற் கதவந்தொண் டுறைக்கப் பாடி யடைப்பித்த
தழைத்த மொழியா ருப்பாலார்; தாமிங் கெப்பான் மறைவ?"தென,


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.50 – திருவாய்மூர் - (திருக்குறுந்தொகை )


பாடல் எண் : 1
எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாள மருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனா ரதென்கொலோ.



பாடல் எண் : 2
மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
உன்னி யுன்னி யுறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி
என்னை வாவென்று போனார தென்கொலோ.



பாடல் எண் : 3
தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன்
அஞ்சே லுன்னை யழைக்கவந் தேனென்றார்
உஞ்சே னென்றுகந் தேயெழுந் தோட்டந்தேன்
வஞ்சே வல்லரே வாய்மூ ரடிகளே.



பாடல் எண் : 4
கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்
ஒழியப் போந்திலே னொக்கவே யோட்டந்தேன்
வழியிற் கண்டிலேன் வாய்மூ ரடிகள்தம்
சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தென்கொலோ.



பாடல் எண் : 5
ஒள்ளி யாரிவ ரன்றிமற் றில்லையென்
றுள்கி யுள்கி யுகந்திருந் தேனுக்குத்
தெள்ளி யாரிவர் போலத் திருவாய்மூர்க்
கள்ளி யாரவர் போலக் கரந்ததே.



பாடல் எண் : 6
யாதே செய்துமி யாமலோ நீயென்னில்
ஆதே யேயு மளவில் பெருமையான்
மாதே வாகிய வாய்மூர் மருவினார்
போதே யென்றும் புகுந்ததும் பொய்கொலோ.

பாடல் எண் : 7
பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டந் தவிர்ப்பா ரவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா
ஓடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ.



பாடல் எண் : 8
திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.



பாடல் எண் : 9
தனக்கே றாமை தவிர்க்கென்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்கருள் செய்திடு நின்மலன்
எனக்கே வந்தெதிர் வாய்மூருக் கேயெனாப்
புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ.



பாடல் எண் : 10
தீண்டற் கரிய திருவடி யொன்றினால்
மீண்டற் கும்மிதித் தார்அரக் கன்தனை
வேண்டிக்கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன்நா னென்றலுந் தோன்றுமே.


Word separated version:


1540 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 275
அரிதில் திறக்கத் தாம் பாட, அடைக்க அவர் பாடிய எளிமை
கருதி, "நம்பர் திரு-உள்ளம் அறியாது அயர்ந்தேன்" எனக் கவன்று,
பெரிதும் அஞ்சித் திரு-மடத்தில் ஒரு-பால் அணைந்து பேழ்கணித்து
மருவும் உணர்வில் துயில்-கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்.


1541 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 276
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின்-கண்
உன்னித் துயிலும் பொழுதின்-கண், உமை ஓர் பாகம் உடையவர்-தாம்
பொன்னின் மேனி வெண்ணீறு புனைந்த கோலப் பொலிவினொடும்
துன்னி அவர்க்கு "வாய்மூரில் இருப்போம்; தொடர வா" என்றார்.


1542 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 277
போதம் நிகழ "வா என்று போனார் அது-என்-கொல்" எனப் பாடி
"ஈது எம் பெருமான் அருளாகில் யானும் போவேன்" என்று எழுந்து
வேதவனத்தைப் புறப்பட்டு விரைந்து போக, அவர்முன்னே,
ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ்-வேடத்தால் எழுந்தருள,
* பாடபேதம் - தருமை ஆதீனப் பதிப்பில்: "போனார் என்-கொல்"
** பாடபேதம் - தருமை ஆதீனப் பதிப்பில்: "வேதவனத்தைப் புறகிட்டு"


1543 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 278
சீர் ஆர் பதியினின்று எழுந்து செல்லும் திரு-நாவுக்கரசர்,
ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தாவாறே போல்
நீர் ஆர் சடையார் எழுந்தருள நெடிது பின்பு செல்லுமவர்
பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்றிலர்-ஆல்;


1544 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 279
அன்ன வண்ணம் எழுந்தருளி அணித்தே காட்சி கொடுப்பார்-போல்
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கருளத்
துன்னும் தொண்டர் அம்-மருங்கு விரைந்து தொடரப், போந்த-படி
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து-அணைந்தார்,


1545 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 280
"அழைத்துக் கொடு-போந்து அணியார்-போல் காட்டி மறைந்தார்" என அயர்ந்து
"பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித்தேனுக்கே அல்லால்
உழைத் தாம் ஒளித்தால், கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்-பாலார்; தாம் இங்கு எப்-பால் மறைவது?" என,


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.50 – திருவாய்மூர் - (திருக்குறுந்தொகை )


பாடல் எண் : 1
எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு
அங்கே வந்து அடையாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்,
"அங்கே வா" என்று போனார் அது-என்-கொலோ.



பாடல் எண் : 2
மன்னு மா-மறைக்காட்டு மணாளனார்,
உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமா சொல்லி,
என்னை வா என்று போனார் அது-என்-கொலோ.



பாடல் எண் : 3
தஞ்சே கண்டேன் தரிக்கிலாதார் என்றேன்;
அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார்;
உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்;
வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே.



பாடல் எண் : 4
கழியக் கண்டிலேன், கண்-எதிரே கண்டேன்;
ஒழியப் போந்திலேன்; ஒக்கவே ஓட்டந்தேன்;
வழியில் கண்டிலேன்; வாய்மூர் அடிகள்தம்
சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்-கொலோ.



பாடல் எண் : 5
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று
உள்கி உள்கி உகந்து இருந்தேனுக்குத்
தெள்ளியார் இவர் போலத் திருவாய்மூர்க்
கள்ளியார் அவர் போலக் கரந்ததே.



பாடல் எண் : 6
யாதே செய்தும், யாம் அலோம் நீ என்னில்,
ஆதே ஏயும் அளவு-இல் பெருமையான்;
மாதேவு ஆகிய வாய்மூர் மருவினார்
போதே என்றும் புகுந்ததும் பொய்-கொலோ.

பாடல் எண் : 7
பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப் போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க்கே எனா
ஓடிப் போந்து இங்கு ஒளித்தவாறு என்-கொலோ.



பாடல் எண் : 8
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்-நின்றார்;
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே.



பாடல் எண் : 9
தனக்கு ஏறாமை தவிர்க்கென்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்கு அருள் செய்திடு நின்மலன்
எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனாப்
புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்-கொலோ.



பாடல் எண் : 10
தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால்
மீண்டற்கும் மிதித்தார் அரக்கன்-தனை
வேண்டிக்கொண்டேன் திருவாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன் நான் என்றலும் தோன்றுமே.

Word separated version:


1540 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 275
aridil tiṟakkat tām pāḍa, aḍaikka avar pāḍiya eḷimai
karudi, "nambar tiru-uḷḷam aṟiyādu ayarndēṉ" eṉak kavaṇḍru,
peridum añjit tiru-maḍattil oru-pāl aṇaindu pēḻgaṇittu
maruvum uṇarvil tuyil-koṇḍār vāymai tiṟambā vāgīsar.


1541 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 276
maṉṉum selva maṟaikkāṭṭu maṇiyiṉ pādam maṉattiṉ-kaṇ
uṉṉit tuyilum poḻudiṉ-kaṇ, umai ōr pāgam uḍaiyavar-tām
poṉṉiṉ mēṉi veṇṇīṟu puṉainda kōlap poliviṉoḍum
tuṉṉi avarkku "vāymūril iruppōm; toḍara vā" eṇḍrār.


1542 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 277
pōdam nigaḻa "vā eṇḍru pōṉār adu-eṉ-kol" eṉap pāḍi
"īdu em perumāṉ aruḷāgil yāṉum pōvēṉ" eṇḍru eḻundu
vēdavaṉattaip puṟappaṭṭu viraindu pōga, avarmuṉṉē,
ādi mūrtti muṉ kāṭṭum av-vēḍattāl eḻundaruḷa,
* Variant - Dharmapuram edition: "pōṉār eṉ-kol"
** Variant - Dharmapuram edition: "vēdavaṉattaip puṟagiṭṭu"


1543 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 278
sīr ār padiyiṉiṇḍru eḻundu sellum tiru-nāvukkarasar,
ārā aṉbil āramudam uṇṇa eydāvāṟē pōl
nīr ār saḍaiyār eḻundaruḷa neḍidu piṉbu sellumavar
pērāḷarai muṉ toḍarndu aṇaiyap peṟuvār eydap peṭrilar-āl;


1544 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 279
aṉṉa vaṇṇam eḻundaruḷi aṇittē kāṭci koḍuppār-pōl
poṉṉiṉ kōyil oṇḍru edirē kāṭṭi adaṉuḷ pukkaruḷat
tuṉṉum toṇḍar am-maruṅgu viraindu toḍarap, pōnda-paḍi
maṉṉum pugali vaḷḷalār tāmum kēṭṭu vandu-aṇaindār,


1545 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 280
"aḻaittuk koḍu-pōndu aṇiyār-pōl kāṭṭi maṟaindār" eṉa ayarndu
"piḻaittuc cevvi aṟiyādē tiṟappittēṉukkē allāl
uḻait tām oḷittāl, kadavam toṇḍu uṟaikkap pāḍi aḍaippitta
taḻaitta moḻiyār up-pālār; tām iṅgu ep-pāl maṟaivadu?" eṉa,


tirunāvukkarasar tēvāram - padigam 5.50 – tiruvāymūr - (tirukkuṟundogai )


pāḍal eṇ : 1
eṅgē eṉṉai irundiḍam tēḍikkoṇḍu
aṅgē vandu aḍaiyāḷam aruḷiṉār
teṅgē tōṇḍrum tiruvāymūrc celvaṉār,
"aṅgē vā" eṇḍru pōṉār adu-eṉ-kolō.


pāḍal eṇ : 2
maṉṉu mā-maṟaikkāṭṭu maṇāḷaṉār,
uṉṉi uṉṉi uṟaṅgugiṇḍrēṉukkut
taṉṉai vāymūrt talaivaṉ āmā solli,
eṉṉai vā eṇḍru pōṉār adu-eṉ-kolō.


pāḍal eṇ : 3
tañjē kaṇḍēṉ tarikkilādār eṇḍrēṉ;
añjēl uṉṉai aḻaikka vandēṉ eṇḍrār;
uñjēṉ eṇḍru ugandē eḻundu ōṭṭandēṉ;
vañjē vallarē vāymūr aḍigaḷē.


pāḍal eṇ : 4
kaḻiyak kaṇḍilēṉ, kaṇ-edirē kaṇḍēṉ;
oḻiyap pōndilēṉ; okkavē ōṭṭandēṉ;
vaḻiyil kaṇḍilēṉ; vāymūr aḍigaḷtam
suḻiyil paṭṭuc cuḻalgiṇḍradu eṉ-kolō.


pāḍal eṇ : 5
oḷḷiyār ivar aṇḍri maṭru illai eṇḍru
uḷgi uḷgi ugandu irundēṉukkut
teḷḷiyār ivar pōlat tiruvāymūrk
kaḷḷiyār avar pōlak karandadē.


pāḍal eṇ : 6
yādē seydum, yām alōm nī eṉṉil,
ādē ēyum aḷavu-il perumaiyāṉ;
mādēvu āgiya vāymūr maruviṉār
pōdē eṇḍrum pugundadum poy-kolō.


pāḍal eṇ : 7
pāḍip peṭra parisil paḻaṅgāsu
vāḍi vāṭṭam tavirppār avaraip pōl
tēḍik koṇḍu tiruvāymūrkkē eṉā
ōḍip pōndu iṅgu oḷittavāṟu eṉ-kolō.


pāḍal eṇ : 8
tiṟakkap pāḍiya eṉṉiṉum sendamiḻ
uṟaippup pāḍi aḍaippittār un-niṇḍrār;
maṟaikka vallarō tammait tiruvāymūrp
piṟaikkoḷ señjaḍaiyār ivar pittarē.


pāḍal eṇ : 9
taṉakku ēṟāmai tavirkkeṇḍru vēṇḍiṉum
niṉaittēṉ poykku aruḷ seydiḍu niṉmalaṉ
eṉakkē vandu edir vāymūrukkē eṉāp
puṉaṟkē poṟkōyil pukkadum poy-kolō.


pāḍal eṇ : 10
tīṇḍaṟku ariya tiruvaḍi oṇḍriṉāl
mīṇḍaṟkum midittār arakkaṉ-taṉai
vēṇḍikkoṇḍēṉ tiruvāymūr viḷakkiṉait
tūṇḍik koḷvaṉ nāṉ eṇḍralum tōṇḍrumē.
================== ==========================
Word separated version:


१५४० - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - २७५
अरिदिल् तिऱक्कत् ताम् पाड, अडैक्क अवर् पाडिय ऎळिमै
करुदि, "नम्बर् तिरु-उळ्ळम् अऱियादु अयर्न्देऩ्" ऎऩक् कवण्ड्रु,
पॆरिदुम् अञ्जित् तिरु-मडत्तिल् ऒरु-पाल् अणैन्दु पेऴ्गणित्तु
मरुवुम् उणर्विल् तुयिल्-कॊण्डार् वाय्मै तिऱम्बा वागीसर्.


१५४१ - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - २७६
मऩ्ऩुम् सॆल्व मऱैक्काट्टु मणियिऩ् पादम् मऩत्तिऩ्-कण्
उऩ्ऩित् तुयिलुम् पॊऴुदिऩ्-कण्, उमै ओर् पागम् उडैयवर्-ताम्
पॊऩ्ऩिऩ् मेऩि वॆण्णीऱु पुऩैन्द कोलप् पॊलिविऩॊडुम्
तुऩ्ऩि अवर्क्कु "वाय्मूरिल् इरुप्पोम्; तॊडर वा" ऎण्ड्रार्.


१५४२ - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - २७७
पोदम् निगऴ "वा ऎण्ड्रु पोऩार् अदु-ऎऩ्-कॊल्" ऎऩप् पाडि
"ईदु ऎम् पॆरुमाऩ् अरुळागिल् याऩुम् पोवेऩ्" ऎण्ड्रु ऎऴुन्दु
वेदवऩत्तैप् पुऱप्पट्टु विरैन्दु पोग, अवर्मुऩ्ऩे,
आदि मूर्त्ति मुऩ् काट्टुम् अव्-वेडत्ताल् ऎऴुन्दरुळ,
* पाडबेदम् - "पोऩार् ऎऩ्-कॊल्"
** पाडबेदम् - "वेदवऩत्तैप् पुऱगिट्टु"


१५४३ - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - २७८
सीर् आर् पदियिऩिण्ड्रु ऎऴुन्दु सॆल्लुम् तिरु-नावुक्करसर्,
आरा अऩ्बिल् आरमुदम् उण्ण ऎय्दावाऱे पोल्
नीर् आर् सडैयार् ऎऴुन्दरुळ नॆडिदु पिऩ्बु सॆल्लुमवर्
पेराळरै मुऩ् तॊडर्न्दु अणैयप् पॆऱुवार् ऎय्दप् पॆट्रिलर्-आल्;


१५४४ - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - २७९
अऩ्ऩ वण्णम् ऎऴुन्दरुळि अणित्ते काट्चि कॊडुप्पार्-पोल्
पॊऩ्ऩिऩ् कोयिल् ऒण्ड्रु ऎदिरे काट्टि अदऩुळ् पुक्करुळत्
तुऩ्ऩुम् तॊण्डर् अम्-मरुङ्गु विरैन्दु तॊडरप्, पोन्द-पडि
मऩ्ऩुम् पुगलि वळ्ळलार् तामुम् केट्टु वन्दु-अणैन्दार्,


१५४५ - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - २८०
"अऴैत्तुक् कॊडु-पोन्दु अणियार्-पोल् काट्टि मऱैन्दार्" ऎऩ अयर्न्दु
"पिऴैत्तुच् चॆव्वि अऱियादे तिऱप्पित्तेऩुक्के अल्लाल्
उऴैत् ताम् ऒळित्ताल्, कदवम् तॊण्डु उऱैक्कप् पाडि अडैप्पित्त
तऴैत्त मॊऴियार् उप्-पालार्; ताम् इङ्गु ऎप्-पाल् मऱैवदु?" ऎऩ,


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् ५.५० – तिरुवाय्मूर् - (तिरुक्कुऱुन्दॊगै )


पाडल् ऎण् :
ऎङ्गे ऎऩ्ऩै इरुन्दिडम् तेडिक्कॊण्डु
अङ्गे वन्दु अडैयाळम् अरुळिऩार्
तॆङ्गे तोण्ड्रुम् तिरुवाय्मूर्च् चॆल्वऩार्,
"अङ्गे वा" ऎण्ड्रु पोऩार् अदु-ऎऩ्-कॊलो.


पाडल् ऎण् :
मऩ्ऩु मा-मऱैक्काट्टु मणाळऩार्,
उऩ्ऩि उऩ्ऩि उऱङ्गुगिण्ड्रेऩुक्कुत्
तऩ्ऩै वाय्मूर्त् तलैवऩ् आमा सॊल्लि,
ऎऩ्ऩै वा ऎण्ड्रु पोऩार् अदु-ऎऩ्-कॊलो.


पाडल् ऎण् :
तञ्जे कण्डेऩ् तरिक्किलादार् ऎण्ड्रेऩ्;
अञ्जेल् उऩ्ऩै अऴैक्क वन्देऩ् ऎण्ड्रार्;
उञ्जेऩ् ऎण्ड्रु उगन्दे ऎऴुन्दु ओट्टन्देऩ्;
वञ्जे वल्लरे वाय्मूर् अडिगळे.


पाडल् ऎण् :
कऴियक् कण्डिलेऩ्, कण्-ऎदिरे कण्डेऩ्;
ऒऴियप् पोन्दिलेऩ्; ऒक्कवे ओट्टन्देऩ्;
वऴियिल् कण्डिलेऩ्; वाय्मूर् अडिगळ्तम्
सुऴियिल् पट्टुच् चुऴल्गिण्ड्रदु ऎऩ्-कॊलो.


पाडल् ऎण् :
ऒळ्ळियार् इवर् अण्ड्रि मट्रु इल्लै ऎण्ड्रु
उळ्गि उळ्गि उगन्दु इरुन्देऩुक्कुत्
तॆळ्ळियार् इवर् पोलत् तिरुवाय्मूर्क्
कळ्ळियार् अवर् पोलक् करन्ददे.


पाडल् ऎण् :
यादे सॆय्दुम्, याम् अलोम् नी ऎऩ्ऩिल्,
आदे एयुम् अळवु-इल् पॆरुमैयाऩ्;
मादेवु आगिय वाय्मूर् मरुविऩार्
पोदे ऎण्ड्रुम् पुगुन्ददुम् पॊय्-कॊलो.


पाडल् ऎण् :
पाडिप् पॆट्र परिसिल् पऴङ्गासु
वाडि वाट्टम् तविर्प्पार् अवरैप् पोल्
तेडिक् कॊण्डु तिरुवाय्मूर्क्के ऎऩा
ओडिप् पोन्दु इङ्गु ऒळित्तवाऱु ऎऩ्-कॊलो.


पाडल् ऎण् :
तिऱक्कप् पाडिय ऎऩ्ऩिऩुम् सॆन्दमिऴ्
उऱैप्पुप् पाडि अडैप्पित्तार् उन्-निण्ड्रार्;
मऱैक्क वल्लरो तम्मैत् तिरुवाय्मूर्प्
पिऱैक्कॊळ् सॆञ्जडैयार् इवर् पित्तरे.


पाडल् ऎण् :
तऩक्कु एऱामै तविर्क्कॆण्ड्रु वेण्डिऩुम्
निऩैत्तेऩ् पॊय्क्कु अरुळ् सॆय्दिडु निऩ्मलऩ्
ऎऩक्के वन्दु ऎदिर् वाय्मूरुक्के ऎऩाप्
पुऩऱ्के पॊऱ्कोयिल् पुक्कदुम् पॊय्-कॊलो.


पाडल् ऎण् : १०
तीण्डऱ्कु अरिय तिरुवडि ऒण्ड्रिऩाल्
मीण्डऱ्कुम् मिदित्तार् अरक्कऩ्-तऩै
वेण्डिक्कॊण्डेऩ् तिरुवाय्मूर् विळक्किऩैत्
तूण्डिक् कॊळ्वऩ् नाऩ् ऎण्ड्रलुम् तोण्ड्रुमे.
================ ============


No comments:

Post a Comment