Thursday, July 4, 2019

1.49 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள் ("பச்சைப் பதிகம்") - tirunaḷḷāṟu - bōgam-ārtta pūṇ-mulaiyāḷ ("paccaip padigam")

64) 1.49 - திருநள்ளாறு போகமார்த்த பூண்முலையாள் ("பச்சைப் பதிகம்") - tirunaḷḷāṟu - bōgam-ārtta pūṇ-mulaiyāḷ ("paccaip padigam")

சம்பந்தர் தேவாரம் - Sambandar thevaram
1.49 - திருநள்ளாறு போகமார்த்த பூண்முலையாள் ("பச்சைப் பதிகம்")
1.49 - tirunaḷḷāṟu - bōgam-ārtta pūṇ-mulaiyāḷ ("paccaip padigam")

Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: https://drive.google.com/open?id=1xR3vDnm_COeoRblZCWLkgt2VnE35QhrQ

English translation – by V.M.Subramanya Ayyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_049.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/quBEZCQPj8A
Part-2: https://youtu.be/rhB9exJ4vtQ
Part-3: https://youtu.be/TSFFO43NYGw
Part-4: https://youtu.be/h2qSsXz3x3M

***

V. Subramanian
============
 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.49 – திருநள்ளாறு - "பச்சைப் பதிகம்" ( பண் - பழந்தக்கராகம் )
Background: பதிக வரலாறு :
"அனல் வாதம்":
சுரவாதத்தில் தோற்ற சமணர்களை நோக்கிப் பாண்டிய மன்னன், "இன்னும் என்ன வாது?" என்று சொன்னதன் குறிப்பை உணராத சமணர்கள், "அடுத்த வாது தத்தம் சமய உண்மைகளை நெருப்பில் இட்டு எது எரியாமல் இருக்கின்றதோ அதுவே உண்மை நெறி" என்றனர். சம்பந்தரும் உடன்பட்டார்.

மன்னன் தீ வளர்க்க எற்பாடு செய்தான்.

திருமுறைச் சுவடிக்கட்டை அவிழ்த்துச் சம்பந்தர் அச்சுவடிகளுள் கையில் வந்த ஒரு சுவடியை எடுத்தார். அது "போகமார்த்த பூண்முலையாள்" என்று தொடங்கும் திருநள்ளாற்றுப் பதிகம்.

அதனைத் தீயில் இடுமுன், ஈசனைத் துதித்துத், "தளிரிள வளரொளி" என்று தொடங்கும் ஒரு பதிகத்தைப் பாடினார். பிறகு, "போகமார்த்த பூண்முலையாள்" என்ற பதிகத்தின் ஏட்டை நெருப்பில் இட்டார். சமணர்களும் தங்கள் சமய மந்திரங்கள் எழுதிய ஏட்டினை நெருப்பில் இட்டனர்.

குறித்த கால அளவு கடந்தபின் சம்பந்தர் தாம் இட்ட ஏட்டை நெருப்பிலிருந்து எடுத்தார். அது எரியாமல் பச்சையாகவே இருந்தது. சமணர்கள் இட்ட ஏடு எரிந்து சாம்பலே எஞ்சியிருந்தது.
அனல் வாதத்திலும் சமணர்கள் தோற்றனர்.

திருநள்ளாறு - இது சோழநாட்டில் உள்ள தலம். தர்பாரண்யேஸ்வரர் கோயில்.

Sambandar asks the Jains to state their philosophy/arguments for debate
2673 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 775
("தான தான தான தான தான தான தானனா" - என்ற சந்தம்)
பிள்ளை யாரு "முங்கள் வாய்மை பேசு மின்க" ளென்றலுந்,
தள்ளு நீர்மை யார்கள் "வேறு தர்க்க வாதி னுத்தரங்
கொள்ளும் வென்றி யன்றி யேகு றித்த கொள்கை யுண்மைதான்
உள்ள வாறு கட்பு லத்தி லுய்ப்ப" தென்ன வொட்டினார்.

2674 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 776
என்று வாது கூற லும்மி ருந்த தென்னர் மன்னனுங்
"கன்றி யென்னு டம்பொ டுங்க வெப்பு நோய்க வர்ந்தபோ
தொன்று மங்கொ ழித்தி லீர்க; ளென்ன வாது மக்"கெனச்
சென்று பின்னு முன்னு நின்று சில்லி வாயர் சொல்லுவார்,

The Jains seek "test by fire"
2675 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 777
"என்ன வாது செய்வ" தென்று ரைத்த தேவி னாவெனாச்
சொன்ன வாச கந்தொ டங்கி "யேடு கொண்டு சூழ்ச்சியான்
மன்னு தம்பொ ருட்க ருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால்
வெந்நெ ருப்பின் வேவு றாமை வெற்றி யாவ" தென்றனர்.

2676 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 778
என்ற போது மன்ன னொன்றி யம்பு முன்பு பிள்ளையார்
"நன்று நீரு ரைத்த வாறு; நாடு தீயி லேடுதான்
வென்றி டிற்பொ ருட்க ருத்து மெய்ம்மை யாவ தென்றிரேல்
வன்ற னிக்கை யானை மன்னன் முன்பு வம்மி" னென்றனர்.

The kings orders for fire to be set up for the trial
2677 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 779
அப்ப டிக்கெதி ரமணரு மணைந்துறு மளவில்
ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர் காவல ருரையாற்
செப்ப ருந்திறல் மன்னனுந் "திருந்தவை முன்னர்
வெப்பு றுந்தழ லமைக்"கென வினைஞரை விடுத்தான்

2678 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 780
ஏய மாந்தரு மிந்தனங் குறைத்துட னடுக்கித்
தீய மைத்தலுஞ் சிகைவிடு புகையொழிந் தெழுந்து **
காயும் வெவ்வழற் கடவுளும் படரொளி காட்ட
ஆயு முத்தமிழ் விரகரு மணையவந் தருளி,
(** variant reading in CKS book: புகையெழுந் தொழிந்து )

Sambandar selects a palm leaf manuscript at random from his collection previous padhigams
2679 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 781
"செங்க ணேற்றவ ரேபொரு" ளென்றுதாந் தெரித்த
பொங்கி சைத்திருப் பதிகநன் முறையினைப் போற்றி
"யெங்க ணாதனே பரம்பொரு" ளெனத்தொழு தெடுத்தே
யங்கை யான்முடி மிசைக்கொண்டு காப்புநா ணவிழ்த்தார்.

That manuscript contains "tirunaḷḷāṟu" padhigam – "bōgam ārtta pūṇmulaiyāḷ"
2680 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 782
சாற்று மெய்ப்பொரு டருந்திரு முறையினைத் தாமே
நீற்று வண்கையான் மறித்தலும் வந்துநேர்ந் துளதால்
நாற்ற டம்புயத் தண்ணலார் மருவுநள் ளாறு
போற்று மப்பதி கம்"போக மார்த்தபூண் முலையாள்"

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.49 – திருநள்ளாறு - "பச்சைப் பதிகம்" ( பண் - பழந்தக்கராகம் )
("தானதனா தானதனா தானன தானதனா" - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள்ளேற் றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 2
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கட லுஞ்சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 3
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி யணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 4
புல்கவல்ல வார்சடைமேற் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாதநி ழற்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 5
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பினில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 6
திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 7
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொண் முழவதிர
அஞ்சிடத்தோ ராடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 8
சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பான்ம தியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 9
உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுடனே யொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழல் ஆரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 10
மாசுமெய்யர் மண்டைத் தேரர் குண்டர்கு ணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி ளும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 11
தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகில் உறைவாரே.
==================
Word separated version:

Sambandar asks the Jains to state their philosophy/arguments for debate
2673 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 775
("தான தான தான தான தான தான தானனா" - என்ற சந்தம்)
பிள்ளையாரும் "உங்கள் வாய்மை பேசுமின்கள்" என்றலும்,
தள்ளும் நீர்மையார்கள் "வேறு தர்க்க வாதின் உத்தரம்
கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மைதான்
உள்ளவாறு கட்புலத்தில் உய்ப்பது" என்ன ஒட்டினார்.

2674 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 776
என்று வாது கூறலும், இருந்த தென்னர் மன்னனும்
"கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்பு நோய் கவர்ந்தபோது
ஒன்றும் அங்கு ஒழித்திலீர்கள்; என்ன வாது உமக்கு?" எனச்
சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி-வாயர் சொல்லுவார்,

The Jains seek "test by fire"
2675 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 777
"என்ன வாது செய்வது" என்று உரைத்ததே வினா எனாச்
சொன்ன வாசகம் தொடங்கி "ஏடு கொண்டு சூழ்ச்சியால்
மன்னு தம் பொருட்-கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால்
வெந்நெருப்பின் வேவுறாமை வெற்றி ஆவது" என்றனர்.

2676 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 778
என்ற போது, மன்னன் ஒன்று இயம்பும் முன்பு, பிள்ளையார்
"நன்று நீர் உரைத்தவாறு; நாடு தீயில் ஏடுதான்
வென்றிடில் பொருட்-கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல்,
வன்-தனிக்-கை யானை மன்னன் முன்பு வம்மின்" என்றனர்.

The kings orders for fire to be set up for the trial
2677 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 779
அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில்,
ஒப்பு-இல் வண்-புகழ்ச் சண்பையர் காவலர் உரையால்
செப்பரும் திறல் மன்னனும், "திருந்து-அவை முன்னர்
வெப்புறும் தழல் அமைக்கென" வினைஞரை விடுத்தான்

2678 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 780
ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கித்
தீ அமைத்தலும், சிகை-விடு புகை ஒழிந்து, எழுந்து **
காயும் வெவ்வழற் கடவுளும் படர்-ஒளி காட்ட,
ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்தருளி,
(** variant reading in CKS book: புகையெழுந் தொழிந்து )


Sambandar selects a palm leaf manuscript at random from his collection previous padhigams
2679 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 781
"செங்கண் ஏற்றவரே பொருள்" என்று தாம் தெரித்த
பொங்கிசைத் திருப்பதிக நன்-முறையினைப் போற்றி,
"எங்கள் நாதனே பரம்பொருள்" எனத் தொழுது எடுத்தே
அங்கையால் முடிமிசைக்கொண்டு காப்பு-நாண் அவிழ்த்தார்.

That manuscript contains "tirunaḷḷāṟu" padhigam – "bōgam ārtta pūṇmulaiyāḷ"
2680 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த நாயனார் புராணம் - 782
சாற்றும் மெய்ப்பொருள் தரும் திருமுறையினைத் தாமே
நீற்று வண்-கையால் மறித்தலும் வந்து நேர்ந்துளதால்,
நாற்றடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு
போற்றும் அப்பதிகம் "போகம் ஆர்த்த பூண் முலையாள்"
(நாற்றடம் புயத்து = நால்-தடம் புயத்து)

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.49 – திருநள்ளாறு - "பச்சைப் பதிகம்" ( பண் - பழந்தக்கராகம் )
("தானதனா தானதனா தானன தானதனா" - என்ற சந்தம்)
("தானதானா தானதானா தான தனதானா" என்றெல்லாமும் வரக் காணலாம்)
பாடல் எண் : 1
போகம்-ஆர்த்த பூண்-முலையாள் தன்னோடும் பொன்-அகலம்
பாகம்-ஆர்த்த பைங்கண்-வெள்ளேற்று அண்ணல் பரமேட்டி
ஆகம்-ஆர்த்த தோல்-உடையன் கோவண ஆடையின்மேல்
நாகம்-ஆர்த்த நம்-பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 2
தோடு-உடைய காது-உடையன் தோல்-உடையன் தொலையாப்
பீடு-உடைய போர்-விடையன் பெண்ணும்-ஓர் பால்-உடையன்
ஏடு-உடைய மேல்-உலகோடு ஏழ்-கடலும் சூழ்ந்த
நாடு-உடைய நம்-பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 3
ஆன்-முறையால் ஆற்ற-வெண்ணீறு ஆடி அணியிழை-ஓர்
பால்-முறையால் வைத்த, பாதம் பத்தர் பணிந்தேத்த
மான்-மறியும் வெண்-மழுவும் சூலமும் பற்றிய கை
நான்மறையான் நம்-பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 4
புல்க-வல்ல வார்-சடைமேற் பூம்புனல் பெய்து-அயலே
மல்க-வல்ல கொன்றை-மாலை மதியோடு உடன்-சூடிப்
பல்க-வல்ல தொண்டர்-தம்பொற் பாத நிழற் சேர
நல்க-வல்ல நம்-பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 5
ஏறு-தாங்கி ஊர்தி-பேணி ஏர்கொள் இள-மதியம்
ஆறு-தாங்கும் சென்னிமேல்-ஓர் ஆடரவம் சூடி
நீறு-தாங்கி நூல்-கிடந்த மார்பினில் நிரை-கொன்றை
நாறு-தாங்கு நம்-பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 6
திங்கள்-உச்சிமேல் விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்கள்-உச்சி எம்-இறைவன் என்று-அடியே இறைஞ்சத்
தங்கள்-உச்சியால் வணங்கும் தன்-அடியார்கட்கெல்லாம்
நங்கள்-உச்சி நம்-பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 7
வெஞ்சுடர்த்-தீ அங்கை ஏந்தி விண்கொள் முழவு-அதிர
அஞ்சிடத்து-ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும்-போய்ச்
செஞ்சடைக்கு-ஓர் திங்கள் சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சு-அடைத்த நம்-பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 8
சிட்டம்-ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ-அம்பினால்
சுட்டு மாட்டிச் சுண்ண வெண்ணீறு ஆடுவது அன்றியும்-போய்ப்
பட்டம்-ஆர்ந்த சென்னிமேல்-ஓர் பால்-மதியம் சூடி
நட்டம்-ஆடும் நம்-பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 9
உண்ணல்-ஆகா நஞ்சு கண்டத்து உண்டு-உடனே ஒடுக்கி
அண்ணல்-ஆகா அண்ணல்-நீழல் ஆரழல் போல்-உருவம்
எண்ணல்-ஆகா உள்வினை என்று எள்க வலித்து-இருவர்
நண்ணல்-ஆகா நம்-பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 10
மாசு-மெய்யர் மண்டைத்-தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும் பேச்சை மெய்-என்று-எண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசு-வண்டு-ஆர் கொன்றை-சூடி மும்மதிளும் உடனே
நாசம்-செய்த நம்-பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் எண் : 11
தண்-புனலும் வெண்-பிறையும் தாங்கிய தாழ்-சடையன்
நண்பு-நல்லார் மல்கு-காழி ஞான-சம்பந்தன் நல்ல
பண்பு-நள்ளாறு ஏத்து-பாடல் பத்தும் இவை-வல்லார்
உண்பு-நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே.

===================== ===============
Word separated version:
( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

Sambandar asks the Jains to state their philosophy/arguments for debate
2673 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 775
("tāna tāna tāna tāna tāna tāna tānanā" - Rhythm)
piḷḷaiyārum "uṅgaḷ vāymai pēsumin-gaḷ" eṇḍralum,
taḷḷum nīrmaiyārgaḷ "vēṟu tarkka vādin uttaram
koḷḷum veṇḍri aṇḍriyē kuṟitta koḷgai uṇmaidān
uḷḷavāṟu kaṭpulattil uyppadu" enna oṭṭinār.

2674 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 776
eṇḍru vādu kūṟalum, irunda tennar mannanum
"kaṇḍri en uḍambu oḍuṅga veppu nōy kavarndabōdu
oṇḍrum aṅgu oḻittilīrgaḷ; enna vādu umakku?" enac
ceṇḍru pinnum munnum niṇḍru silli-vāyar solluvār,

The Jains seek "test by fire"
2675 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 777
"enna vādu seyvadu" eṇḍru uraittadē vinā enāc
conna vāsagam toḍaṅgi "ēḍu koṇḍu sūḻcciyāl
mannu tam poruṭ-karuttin vāymai tīṭṭi māṭṭināl
venneruppin vēvuṟāmai veṭri āvadu" eṇḍranar.

2676 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 778
eṇḍra pōdu, mannan oṇḍru iyambum munbu, piḷḷaiyār
"naṇḍru nīr uraittavāṟu; nāḍu tīyil ēḍudān
veṇḍriḍil poruṭ-karuttu meymmai āvadu eṇḍrirēl,
van-tanik-kai yānai mannan munbu vammin" eṇḍranar.

The kings orders for fire to be set up for the trial
2677 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 779
appaḍikku edir amaṇarum aṇainduṟum aḷavil,
oppu-il vaṇ-pugaḻc caṇbaiyar kāvalar uraiyāl
sepparum tiṟal mannanum, "tirundu-avai munnar
veppuṟum taḻal amaikkena" vinaiñarai viḍuttān

2678 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 780
ēya māndarum indanam kuṟaittu uḍan aḍukkit
tī amaittalum, sigai-viḍu pugai oḻindu, eḻundu **
kāyum vevvaḻaṟ kaḍavuḷum paḍar-oḷi kāṭṭa,
āyum muttamiḻ viragarum aṇaiya vandaruḷi,
(** Variant reading in CKS book : pugai eḻundu oḻindu )

Sambandar selects a palm leaf manuscript at random from his collection previous padhigams
2679 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 781
"seṅgaṇ ēṭravarē poruḷ" eṇḍru tām teritta
poṅgisait tiruppadiga nan-muṟaiyinaip pōṭri,
"eṅgaḷ nādanē paramboruḷ" enat toḻudu eḍuttē
aṅgaiyāl muḍimisaikkoṇḍu kāppu-nāṇ aviḻttār.

That manuscript contains "tirunaḷḷāṟu" padhigam – "bōgam ārtta pūṇmulaiyāḷ"
2680 - periya purāṇam - tiruñāna sambanda nāyanār purāṇam - 782
sāṭrum meypporuḷ tarum tirumuṟaiyinait tāmē
nīṭru vaṇ-kaiyāl maṟittalum vandu nērnduḷadāl,
nāṭraḍam puyattu aṇṇalār maruvu naḷḷāṟu
pōṭrum appadigam "bōgam ārtta pūṇ mulaiyāḷ"
(nāṭraḍam puyattu = nāl-taḍam puyattu)

sambandar tēvāram - padigam 1.49 – tirunaḷḷāṟu - "paccaip padigam" ( paṇ - paḻandakkarāgam )
("tānadanā tānadanā tānana tānadanā" - Rhythm)
("tānadānā tānadānā tāna tanadānā" - etc. variations)
pāḍal eṇ : 1
bōgam-ārtta pūṇ-mulaiyāḷ tannōḍum pon-agalam
pāgam-ārtta paiṅgaṇ-veḷḷēṭru aṇṇal paramēṭṭi
āgam-ārtta tōl-uḍaiyan kōvaṇa āḍaiyinmēl
nāgam-ārtta nam-perumān mēyadu naḷḷāṟē.

pāḍal eṇ : 2
tōḍu-uḍaiya kādu-uḍaiyan tōl-uḍaiyan tolaiyāp
pīḍu-uḍaiya pōr-viḍaiyan peṇṇum-ōr pāl-uḍaiyan
ēḍu-uḍaiya mēl-ulagōḍu ēḻ-kaḍalum sūḻnda
nāḍu-uḍaiya nam-perumān mēyadu naḷḷāṟē.

pāḍal eṇ : 3
ān-muṟaiyāl āṭra-veṇṇīṟu āḍi aṇiyiḻai-ōr
pāl-muṟaiyāl vaitta, pādam pattar paṇindētta
mān-maṟiyum veṇ-maḻuvum sūlamum paṭriya kai
nānmaṟaiyān nam-perumān mēyadu naḷḷāṟē.

pāḍal eṇ : 4
pulga-valla vār-saḍaimēṟ pūmbunal peydu-ayalē
malga-valla koṇḍrai-mālai madiyōḍu uḍan-sūḍip
palga-valla toṇḍar-tamboṟ pāda niḻaṟ cēra
nalga-valla nam-perumān mēyadu naḷḷāṟē.

pāḍal eṇ : 5
ēṟu-tāṅgi ūrdi-pēṇi ērgoḷ iḷa-madiyam
āṟu-tāṅgum sennimēl-ōr āḍaravam sūḍi
nīṟu-tāṅgi nūl-kiḍanda mārbinil nirai-koṇḍrai
nāṟu-tāṅgu nam-perumān mēyadu naḷḷāṟē.

pāḍal eṇ : 6
tiṅgaḷ-uccimēl viḷaṅgum tēvan imaiyōrgaḷ
eṅgaḷ-ucci em-iṟaivan eṇḍru-aḍiyē iṟaiñjat
taṅgaḷ-ucciyāl vaṇaṅgum tan-aḍiyārgaṭkellām
naṅgaḷ-ucci nam-perumān mēyadu naḷḷāṟē.

pāḍal eṇ : 7
veñjuḍart-tī aṅgai ēndi viṇ-goḷ muḻavu-adira
añjiḍattu-ōr āḍal pāḍal pēṇuvadu aṇḍriyum-pōyc
ceñjaḍaikku-ōr tiṅgaḷ sūḍit tigaḻdaru kaṇḍattuḷḷē
nañju-aḍaitta nam-perumān mēyadu naḷḷāṟē.

pāḍal eṇ : 8
siṭṭam-ārnda mummadilum silaivarait tī-ambināl
suṭṭu māṭṭic cuṇṇa veṇṇīṟu āḍuvadu aṇḍriyum-pōyp
paṭṭam-ārnda sennimēl-ōr pāl-madiyam sūḍi
naṭṭam-āḍum nam-perumān mēyadu naḷḷāṟē.

pāḍal eṇ : 9
uṇṇal-āgā nañju kaṇḍattu uṇḍu-uḍanē oḍukki
aṇṇal-āgā aṇṇal-nīḻal āraḻal pōl-uruvam
eṇṇal-āgā uḷvinai eṇḍru eḷga valittu-iruvar
naṇṇal-āgā nam-perumān mēyadu naḷḷāṟē.

pāḍal eṇ : 10
māsu-meyyar maṇḍait-tērar kuṇḍar guṇamiligaḷ
pēsum pēccai mey-eṇḍru-eṇṇi anneṟi sellanmin
mūsu-vaṇḍu-ār koṇḍrai-sūḍi mummadiḷum uḍanē
nāsam-seyda nam-perumān mēyadu naḷḷāṟē.

pāḍal eṇ : 11
taṇ-punalum veṇ-piṟaiyum tāṅgiya tāḻ-saḍaiyan
naṇbu-nallār malgu-kāḻi ñāna-sambandan nalla
paṇbu-naḷḷāṟu ēttu-pāḍal pattum ivai-vallār

uṇbu-nīṅgi vānavarōḍu ulagil uṟaivārē.
================== ==========================
Word separated version:
( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )

Sambandar asks the Jains to state their philosophy/arguments for debate
2673 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 775
("तान तान तान तान तान तान तानना" - Rhythm)
पिळ्ळैयारुम् "उङ्गळ् वाय्मै पेसुमिन्-ळ्" ऎण्ड्रलुम्,
तळ्ळुम् नीर्मैयार्गळ् "वेऱु तर्क्क वादिन् उत्तरम्
कॊळ्ळुम् वॆण्ड्रि अण्ड्रिये कुऱित्त कॊळ्गै उण्मैदान्
उळ्ळवाऱु कट्पुलत्तिल् उय्प्पदु" ऎन्न ऒट्टिनार्.

2674 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 776
ऎण्ड्रु वादु कूऱलुम्, इरुन्द तॆन्नर् मन्ननुम्
"कण्ड्रि ऎन् उडम्बु ऒडुङ्ग वॆप्पु नोय् कवर्न्दबोदु
ऒण्ड्रुम् अङ्गु ऒऴित्तिलीर्गळ्; ऎन्न वादु उमक्कु?" ऎनच्
चॆण्ड्रु पिन्नुम् मुन्नुम् निण्ड्रु सिल्लि-वायर् सॊल्लुवार्,

The Jains seek "test by fire"
2675 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 777
"ऎन्न वादु सॆय्वदु" ऎण्ड्रु उरैत्तदे विना ऎनाच्
चॊन्न वासगम् तॊडङ्गि "एडु कॊण्डु सूऴ्च्चियाल्
मन्नु तम् पॊरुट्-करुत्तिन् वाय्मै तीट्टि माट्टिनाल्
वॆन्नॆरुप्पिन् वेवुऱामै वॆट्रि आवदु" ऎण्ड्रनर्.

2676 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 778
ऎण्ड्र पोदु, मन्नन् ऒण्ड्रु इयम्बुम् मुन्बु, पिळ्ळैयार्
"नण्ड्रु नीर् उरैत्तवाऱु; नाडु तीयिल् एडुदान्
वॆण्ड्रिडिल् पॊरुट्-करुत्तु मॆय्म्मै आवदु ऎण्ड्रिरेल्,
वन्-तनिक्-कै यानै मन्नन् मुन्बु वम्मिन्" ऎण्ड्रनर्.

The kings orders for fire to be set up for the trial
2677 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 779
अप्पडिक्कु ऎदिर् अमणरुम् अणैन्दुऱुम् अळविल्,
ऒप्पु-इल् वण्-पुगऴ्च् चण्बैयर् कावलर् उरैयाल्
सॆप्परुम् तिऱल् मन्ननुम्, "तिरुन्दु-अवै मुन्नर्
वॆप्पुऱुम् तऴल् अमैक्कॆन" विनैञरै विडुत्तान्

2678 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 780
एय मान्दरुम् इन्दनम् कुऱैत्तु उडन् अडुक्कित्
ती अमैत्तलुम्, सिगै-विडु पुगै ऒऴिन्दु, ऎऴुन्दु **
कायुम् वॆव्वऴऱ् कडवुळुम् पडर्-ऒळि काट्ट,
आयुम् मुत्तमिऴ् विरगरुम् अणैय वन्दरुळि,
(** variant reading in CKS book: पुगै ऎऴुन्दु ऒऴिन्दु )

Sambandar selects a palm leaf manuscript at random from his collection previous padhigams
2679 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 781
"सॆङ्गण् एट्रवरे पॊरुळ्" ऎण्ड्रु ताम् तॆरित्त
पॊङ्गिसैत् तिरुप्पदिग नन्-मुऱैयिनैप् पोट्रि,
"ऎङ्गळ् नादने परम्बॊरुळ्" ऎनत् तॊऴुदु ऎडुत्ते
अङ्गैयाल् मुडिमिसैक्कॊण्डु काप्पु-नाण् अविऴ्त्तार्.

That manuscript contains "tirunaḷḷāṟu" padhigam – "bōgam ārtta pūṇmulaiyāḷ"
2680 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्द नायनार् पुराणम् - 782
साट्रुम् मॆय्प्पॊरुळ् तरुम् तिरुमुऱैयिनैत् तामे
नीट्रु वण्-कैयाल् मऱित्तलुम् वन्दु नेर्न्दुळदाल्,
नाट्रडम् पुयत्तु अण्णलार् मरुवु नळ्ळाऱु
पोट्रुम् अप्पदिगम् "बोगम् आर्त्त पूण् मुलैयाळ्"
(नाट्रडम् पुयत्तु = नाल्-तडम् पुयत्तु)

सम्बन्दर् तेवारम् - पदिगम् 1.49 – तिरुनळ्ळाऱु - "पच्चैप् पदिगम्" ( पण् - पऴन्दक्करागम् )
("तानदना तानदना तानन तानदना" - Rhythm)
("तानदाना तानदाना तान तनदाना" - etc. variations)
पाडल् ऎण् : 1
बोगम्-आर्त्त पूण्-मुलैयाळ् तन्नोडुम् पॊन्-अगलम्
पागम्-आर्त्त पैङ्गण्-वॆळ्ळेट्रु अण्णल् परमेट्टि
आगम्-आर्त्त तोल्-उडैयन् कोवण आडैयिन्मेल्
नागम्-आर्त्त नम्-पॆरुमान् मेयदु नळ्ळाऱे.

पाडल् ऎण् : 2
तोडु-उडैय कादु-उडैयन् तोल्-उडैयन् तॊलैयाप्
पीडु-उडैय पोर्-विडैयन् पॆण्णुम्-ओर् पाल्-उडैयन्
एडु-उडैय मेल्-उलगोडु एऴ्-कडलुम् सूऴ्न्द
नाडु-उडैय नम्-पॆरुमान् मेयदु नळ्ळाऱे.

पाडल् ऎण् : 3
आन्-मुऱैयाल् आट्र-वॆण्णीऱु आडि अणियिऴै-ओर्
पाल्-मुऱैयाल् वैत्त, पादम् पत्तर् पणिन्देत्त
मान्-मऱियुम् वॆण्-मऴुवुम् सूलमुम् पट्रिय कै
नान्मऱैयान् नम्-पॆरुमान् मेयदु नळ्ळाऱे.

पाडल् ऎण् : 4
पुल्ग-वल्ल वार्-सडैमेऱ् पूम्बुनल् पॆय्दु-अयले
मल्ग-वल्ल कॊण्ड्रै-मालै मदियोडु उडन्-सूडिप्
पल्ग-वल्ल तॊण्डर्-तम्बॊऱ् पाद निऴऱ् चेर
नल्ग-वल्ल नम्-पॆरुमान् मेयदु नळ्ळाऱे.

पाडल् ऎण् : 5
एऱु-ताङ्गि ऊर्दि-पेणि एर्गॊळ् इळ-मदियम्
आऱु-ताङ्गुम् सॆन्निमेल्-ओर् आडरवम् सूडि
नीऱु-ताङ्गि नूल्-किडन्द मार्बिनिल् निरै-कॊण्ड्रै
नाऱु-ताङ्गु नम्-पॆरुमान् मेयदु नळ्ळाऱे.

पाडल् ऎण् : 6
तिङ्गळ्-उच्चिमेल् विळङ्गुम् तेवन् इमैयोर्गळ्
ऎङ्गळ्-उच्चि ऎम्-इऱैवन् ऎण्ड्रु-अडिये इऱैञ्जत्
तङ्गळ्-उच्चियाल् वणङ्गुम् तन्-अडियार्गट्कॆल्लाम्
नङ्गळ्-उच्चि नम्-पॆरुमान् मेयदु नळ्ळाऱे.

पाडल् ऎण् : 7
वॆञ्जुडर्त्-ती अङ्गै एन्दि विण्गॊळ् मुऴवु-अदिर
अञ्जिडत्तु-ओर् आडल् पाडल् पेणुवदु अण्ड्रियुम्-पोय्च्
चॆञ्जडैक्कु-ओर् तिङ्गळ् सूडित् तिगऴ्दरु कण्डत्तुळ्ळे
नञ्जु-अडैत्त नम्-पॆरुमान् मेयदु नळ्ळाऱे.

पाडल् ऎण् : 8
सिट्टम्-आर्न्द मुम्मदिलुम् सिलैवरैत् ती-अम्बिनाल्
सुट्टु माट्टिच् चुण्ण वॆण्णीऱु आडुवदु अण्ड्रियुम्-पोय्प्
पट्टम्-आर्न्द सॆन्निमेल्-ओर् पाल्-मदियम् सूडि
नट्टम्-आडुम् नम्-पॆरुमान् मेयदु नळ्ळाऱे.

पाडल् ऎण् : 9
उण्णल्-आगा नञ्जु कण्डत्तु उण्डु-उडने ऒडुक्कि
अण्णल्-आगा अण्णल्-नीऴल् आरऴल् पोल्-उरुवम्
ऎण्णल्-आगा उळ्विनै ऎण्ड्रु ऎळ्ग वलित्तु-इरुवर्
नण्णल्-आगा नम्-पॆरुमान् मेयदु नळ्ळाऱे.

पाडल् ऎण् : 10
मासु-मॆय्यर् मण्डैत्-तेरर् कुण्डर् गुणमिलिगळ्
पेसुम् पेच्चै मॆय्-ऎण्ड्रु-ऎण्णि अन्नॆऱि सॆल्लन्मिन्
मूसु-वण्डु-आर् कॊण्ड्रै-सूडि मुम्मदिळुम् उडने
नासम्-सॆय्द नम्-पॆरुमान् मेयदु नळ्ळाऱे.

पाडल् ऎण् : 11
तण्-पुनलुम् वॆण्-पिऱैयुम् ताङ्गिय ताऴ्-सडैयन्
नण्बु-नल्लार् मल्गु-काऴि ञान-सम्बन्दन् नल्ल
पण्बु-नळ्ळाऱु एत्तु-पाडल् पत्तुम् इवै-वल्लार्

उण्बु-नीङ्गि वानवरोडु उलगिल् उऱैवारे.
================ ============
Word separated version:
( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

Sambandar asks the Jains to state their philosophy/arguments for debate
2673 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 775
("తాన తాన తాన తాన తాన తాన తాననా" - Rhythm)
పిళ్ళైయారుం "ఉంగళ్ వాయ్మై పేసుమిన్-ళ్" ఎండ్రలుం,
తళ్ళుం నీర్మైయార్గళ్ "వేఱు తర్క్క వాదిన్ ఉత్తరం
కొళ్ళుం వెండ్రి అండ్రియే కుఱిత్త కొళ్గై ఉణ్మైదాన్
ఉళ్ళవాఱు కట్పులత్తిల్ ఉయ్ప్పదు" ఎన్న ఒట్టినార్.

2674 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 776
ఎండ్రు వాదు కూఱలుం, ఇరుంద తెన్నర్ మన్ననుం
"కండ్రి ఎన్ ఉడంబు ఒడుంగ వెప్పు నోయ్ కవర్న్దబోదు
ఒండ్రుం అంగు ఒఴిత్తిలీర్గళ్; ఎన్న వాదు ఉమక్కు?" ఎనచ్
చెండ్రు పిన్నుం మున్నుం నిండ్రు సిల్లి-వాయర్ సొల్లువార్,

The Jains seek "test by fire"
2675 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 777
"ఎన్న వాదు సెయ్వదు" ఎండ్రు ఉరైత్తదే వినా ఎనాచ్
చొన్న వాసగం తొడంగి "ఏడు కొండు సూఴ్చ్చియాల్
మన్ను తం పొరుట్-కరుత్తిన్ వాయ్మై తీట్టి మాట్టినాల్
వెన్నెరుప్పిన్ వేవుఱామై వెట్రి ఆవదు" ఎండ్రనర్.

2676 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 778
ఎండ్ర పోదు, మన్నన్ ఒండ్రు ఇయంబుం మున్బు, పిళ్ళైయార్
"నండ్రు నీర్ ఉరైత్తవాఱు; నాడు తీయిల్ ఏడుదాన్
వెండ్రిడిల్ పొరుట్-కరుత్తు మెయ్మ్మై ఆవదు ఎండ్రిరేల్,
వన్-తనిక్-కై యానై మన్నన్ మున్బు వమ్మిన్" ఎండ్రనర్.

The kings orders for fire to be set up for the trial
2677 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 779
అప్పడిక్కు ఎదిర్ అమణరుం అణైందుఱుం అళవిల్,
ఒప్పు-ఇల్ వణ్-పుగఴ్చ్ చణ్బైయర్ కావలర్ ఉరైయాల్
సెప్పరుం తిఱల్ మన్ననుం, "తిరుందు-అవై మున్నర్
వెప్పుఱుం తఴల్ అమైక్కెన" వినైఞరై విడుత్తాన్

2678 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 780
ఏయ మాందరుం ఇందనం కుఱైత్తు ఉడన్ అడుక్కిత్
తీ అమైత్తలుం, సిగై-విడు పుగై ఒఴిందు, ఎఴుందు **
కాయుం వెవ్వఴఱ్ కడవుళుం పడర్-ఒళి కాట్ట,
ఆయుం ముత్తమిఴ్ విరగరుం అణైయ వందరుళి,
(** variant reading in CKS book: పుగై ఎఴుందు ఒఴిందు )

Sambandar selects a palm leaf manuscript at random from his collection previous padhigams
2679 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 781
"సెంగణ్ ఏట్రవరే పొరుళ్" ఎండ్రు తాం తెరిత్త
పొంగిసైత్ తిరుప్పదిగ నన్-ముఱైయినైప్ పోట్రి,
"ఎంగళ్ నాదనే పరంబొరుళ్" ఎనత్ తొఴుదు ఎడుత్తే
అంగైయాల్ ముడిమిసైక్కొండు కాప్పు-నాణ్ అవిఴ్త్తార్.

That manuscript contains "tirunaḷḷāṟu" padhigam – "bōgam ārtta pūṇmulaiyāḷ"
2680 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద నాయనార్ పురాణం - 782
సాట్రుం మెయ్ప్పొరుళ్ తరుం తిరుముఱైయినైత్ తామే
నీట్రు వణ్-కైయాల్ మఱిత్తలుం వందు నేర్న్దుళదాల్,
నాట్రడం పుయత్తు అణ్ణలార్ మరువు నళ్ళాఱు
పోట్రుం అప్పదిగం "బోగం ఆర్త్త పూణ్ ములైయాళ్"
(నాట్రడం పుయత్తు = నాల్-తడం పుయత్తు)

సంబందర్ తేవారం - పదిగం 1.49 – తిరునళ్ళాఱు - "పచ్చైప్ పదిగం" ( పణ్ - పఴందక్కరాగం )
("తానదనా తానదనా తానన తానదనా" - Rhythm)
("తానదానా తానదానా తాన తనదానా" - etc. variations)
పాడల్ ఎణ్ : 1
బోగం-ఆర్త్త పూణ్-ములైయాళ్ తన్నోడుం పొన్-అగలం
పాగం-ఆర్త్త పైంగణ్-వెళ్ళేట్రు అణ్ణల్ పరమేట్టి
ఆగం-ఆర్త్త తోల్-ఉడైయన్ కోవణ ఆడైయిన్మేల్
నాగం-ఆర్త్త నం-పెరుమాన్ మేయదు నళ్ళాఱే.

పాడల్ ఎణ్ : 2
తోడు-ఉడైయ కాదు-ఉడైయన్ తోల్-ఉడైయన్ తొలైయాప్
పీడు-ఉడైయ పోర్-విడైయన్ పెణ్ణుం-ఓర్ పాల్-ఉడైయన్
ఏడు-ఉడైయ మేల్-ఉలగోడు ఏఴ్-కడలుం సూఴ్న్ద
నాడు-ఉడైయ నం-పెరుమాన్ మేయదు నళ్ళాఱే.

పాడల్ ఎణ్ : 3
ఆన్-ముఱైయాల్ ఆట్ర-వెణ్ణీఱు ఆడి అణియిఴై-ఓర్
పాల్-ముఱైయాల్ వైత్త, పాదం పత్తర్ పణిందేత్త
మాన్-మఱియుం వెణ్-మఴువుం సూలముం పట్రియ కై
నాన్మఱైయాన్ నం-పెరుమాన్ మేయదు నళ్ళాఱే.

పాడల్ ఎణ్ : 4
పుల్గ-వల్ల వార్-సడైమేఱ్ పూంబునల్ పెయ్దు-అయలే
మల్గ-వల్ల కొండ్రై-మాలై మదియోడు ఉడన్-సూడిప్
పల్గ-వల్ల తొండర్-తంబొఱ్ పాద నిఴఱ్ చేర
నల్గ-వల్ల నం-పెరుమాన్ మేయదు నళ్ళాఱే.

పాడల్ ఎణ్ : 5
ఏఱు-తాంగి ఊర్ది-పేణి ఏర్గొళ్ ఇళ-మదియం
ఆఱు-తాంగుం సెన్నిమేల్-ఓర్ ఆడరవం సూడి
నీఱు-తాంగి నూల్-కిడంద మార్బినిల్ నిరై-కొండ్రై
నాఱు-తాంగు నం-పెరుమాన్ మేయదు నళ్ళాఱే.

పాడల్ ఎణ్ : 6
తింగళ్-ఉచ్చిమేల్ విళంగుం తేవన్ ఇమైయోర్గళ్
ఎంగళ్-ఉచ్చి ఎం-ఇఱైవన్ ఎండ్రు-అడియే ఇఱైంజత్
తంగళ్-ఉచ్చియాల్ వణంగుం తన్-అడియార్గట్కెల్లాం
నంగళ్-ఉచ్చి నం-పెరుమాన్ మేయదు నళ్ళాఱే.

పాడల్ ఎణ్ : 7
వెంజుడర్త్-తీ అంగై ఏంది విణ్గొళ్ ముఴవు-అదిర
అంజిడత్తు-ఓర్ ఆడల్ పాడల్ పేణువదు అండ్రియుం-పోయ్చ్
చెంజడైక్కు-ఓర్ తింగళ్ సూడిత్ తిగఴ్దరు కండత్తుళ్ళే
నంజు-అడైత్త నం-పెరుమాన్ మేయదు నళ్ళాఱే.

పాడల్ ఎణ్ : 8
సిట్టం-ఆర్న్ద ముమ్మదిలుం సిలైవరైత్ తీ-అంబినాల్
సుట్టు మాట్టిచ్ చుణ్ణ వెణ్ణీఱు ఆడువదు అండ్రియుం-పోయ్ప్
పట్టం-ఆర్న్ద సెన్నిమేల్-ఓర్ పాల్-మదియం సూడి
నట్టం-ఆడుం నం-పెరుమాన్ మేయదు నళ్ళాఱే.

పాడల్ ఎణ్ : 9
ఉణ్ణల్-ఆగా నంజు కండత్తు ఉండు-ఉడనే ఒడుక్కి
అణ్ణల్-ఆగా అణ్ణల్-నీఴల్ ఆరఴల్ పోల్-ఉరువం
ఎణ్ణల్-ఆగా ఉళ్వినై ఎండ్రు ఎళ్గ వలిత్తు-ఇరువర్
నణ్ణల్-ఆగా నం-పెరుమాన్ మేయదు నళ్ళాఱే.

పాడల్ ఎణ్ : 10
మాసు-మెయ్యర్ మండైత్-తేరర్ కుండర్ గుణమిలిగళ్
పేసుం పేచ్చై మెయ్-ఎండ్రు-ఎణ్ణి అన్నెఱి సెల్లన్మిన్
మూసు-వండు-ఆర్ కొండ్రై-సూడి ముమ్మదిళుం ఉడనే
నాసం-సెయ్ద నం-పెరుమాన్ మేయదు నళ్ళాఱే.

పాడల్ ఎణ్ : 11
తణ్-పునలుం వెణ్-పిఱైయుం తాంగియ తాఴ్-సడైయన్
నణ్బు-నల్లార్ మల్గు-కాఴి ఞాన-సంబందన్ నల్ల
పణ్బు-నళ్ళాఱు ఏత్తు-పాడల్ పత్తుం ఇవై-వల్లార్
ఉణ్బు-నీంగి వానవరోడు ఉలగిల్ ఉఱైవారే.

================ ============

No comments:

Post a Comment