79) 7.27 - விடையாரும் கொடியாய் - திருக்கற்குடி - viḍaiyārum koḍiyāy - tirukkaṟkuḍi
சுந்தரர் தேவாரம் - 7.27 – விடையாருங் கொடியாய் - கற்குடி (உய்யக்கொண்டான் மலை)
sundarar tēvāram - 7.27 – viḍaiyārum koḍiyāy - kaṟkuḍi (uyyakkoṇḍān malai)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1b4a1unf_zh_JYdDQvv3MJbV5gDO7f865/view?usp=sharing
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/Rcb6CYZoeRQ
Part-2: https://youtu.be/DTvqRCnN-I8
V. Subramanian
===============
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
கற்குடி (உய்யக்கொண்டான் மலை) : இத்தலம் இன்று திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக உள்ளது. சிறிய குன்றின்மேல் உள்ள தலம்.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.27 – கற்குடி (உய்யக்கொண்டான் மலை) - (பண் - நட்டராகம்)
("தானா தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
விடையா ருங்கொடியாய் வெறி யார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பர மாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற
அடிகே ளெம்பெருமான் அடி யேனையும் அஞ்சலென்னே.
பாடல் எண் : 2
மறையோர் வானவருந் தொழு தேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான் எனக் கின்னமு தாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடி யேனையும் அஞ்சலென்னே.
பாடல் எண் : 3
சிலையால் முப்புரங்கள் பொடி யாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மட மாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக் கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடி யேனையும் அஞ்சலென்னே.
பாடல் எண் : 4
செய்யார் மேனியனே திரு நீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மத யானை யுரித்தவனே
கையார் சூலத்தினாய் திருக் கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடி யேனையும் அஞ்சலென்னே.
பாடல் எண் : 5
சந்தார் வெண்குழையாய் சரி கோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள் ஒரு பாக மமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான் அடி யேனையும் ஏன்றுகொள்ளே.
பாடல் எண் : 6
அரையார் கீளொடுகோ வண மும்மர வும்மசைத்து
விரையார் கொன்றையுடன் விளங் கும்பிறை மேலுடையாய்
கரையா ரும்வயல்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான் அடி யேனையும் அஞ்சலென்னே.
பாடல் எண் : 7
பாரார் விண்ணவரும் பர விப்பணிந் தேத்தநின்ற *
சீரார் மேனியனே திகழ் நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடி யேனையும் அஞ்சலென்னே.
* பாடபேதம்: "பாரோர்"
பாடல் எண் : 8
நிலனே நீர்வளிதீ நெடு வானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன் மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திருக் கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடி யேனையும் அஞ்சலென்னே.
பாடல் எண் : 9
வருங்கா லன்னுயிரை மடி யத்திரு மெல்விரலால்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரி வித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடி யேனையும் வேண்டுதியே.
பாடல் எண் : 10
அலையார் தண்புனல்சூழ்ந் தழ காகி விழவமரும்
கலையார் மாதவர்சேர் திருக் கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள் நல்ல சிங்கடி யப்பனுரை
விலையார் மாலைவல்லார் வியன் மூவுல காள்பவரே.
==================
Word separated version:
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.27 – கற்குடி (உய்யக்கொண்டான் மலை) - (பண் - நட்டராகம்)
("தானா தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
விடை ஆரும் கொடியாய்; வெறி ஆர் மலர்க் கொன்றையினாய்;
படை ஆர் வெண்-மழுவா; பரம் ஆய பரம்பரனே;
கடி ஆர் பூம்பொழில்-சூழ் திருக் கற்குடி மன்னி-நின்ற
அடிகேள்; எம்பெருமான்; அடியேனையும் அஞ்சல் என்னே.
பாடல் எண் : 2
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற
இறைவா; எம்பெருமான்; எனக்கு இன்னமுது ஆயவனே;
கறை ஆர் சோலைகள்-சூழ் திருக் கற்குடி மன்னி-நின்ற
அறவா; அங்கணனே; அடியேனையும் அஞ்சல் என்னே.
பாடல் எண் : 3
சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே;
மலைமேல் மா-மருந்தே; மட-மாது இடம் கொண்டவனே;
கலை சேர் கையினனே; திருக் கற்குடி மன்னி-நின்ற
அலை சேர் செஞ்சடையாய்; அடியேனையும் அஞ்சல் என்னே.
பாடல் எண் : 4
செய்-ஆர் மேனியனே; திரு நீல மிடற்றினனே;
மை-ஆர் கண்ணி-பங்கா; மத யானை உரித்தவனே;
கை-ஆர் சூலத்தினாய்; திருக் கற்குடி மன்னி-நின்ற
ஐயா; எம்பெருமான்; அடியேனையும் அஞ்சல் என்னே.
பாடல் எண் : 5
சந்து-ஆர் வெண்-குழையாய்; சரி-கோவண ஆடையனே;
பந்து-ஆரும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே;
கந்து-ஆர் சோலைகள்-சூழ் திருக் கற்குடி மன்னி-நின்ற
எந்தாய்; எம்பெருமான்; அடியேனையும் ஏன்றுகொள்ளே.
பாடல் எண் : 6
அரை-ஆர் கீளொடு கோவணமும் அரவும் அசைத்து,
விரை-ஆர் கொன்றையுடன் விளங்கும் பிறை மேல் உடையாய்;
கரை-ஆரும் வயல்-சூழ் திருக் கற்குடி மன்னி-நின்ற
அரையா; எம்பெருமான்; அடியேனையும் அஞ்சல் என்னே.
பாடல் எண் : 7
பாரார் விண்ணவரும் பரவிப் பணிந்து ஏத்த நின்ற *
சீர்-ஆர் மேனியனே; திகழ் நீல மிடற்றினனே;
கார்-ஆர் பூம்பொழில்-சூழ் திருக் கற்குடி மன்னி-நின்ற
ஆரா இன்-அமுதே; அடியேனையும் அஞ்சல் என்னே.
* பாடபேதம்: "பாரோர்"
பாடல் எண் : 8
நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற
புலனே; புண்டரிகத்து அயன் மாலவன் போற்றிசெய்யும்
கனலே; கற்பகமே; திருக் கற்குடி மன்னி-நின்ற
அனல் சேர் கையினனே; அடியேனையும் அஞ்சல் என்னே.
பாடல் எண் : 9
வரும் காலன் உயிரை மடியத் திரு மெல்-விரலால்
பெரும்பாலன் தனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே;
கரும்பு ஆரும் வயல்-சூழ் திருக் கற்குடி மன்னி-நின்ற
விரும்பா; எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே.
பாடல் எண் : 10
அலை-ஆர் தண்புனல்-சூழ்ந்து அழகாகி விழவு-அமரும்
கலை-ஆர் மாதவர் சேர் திருக் கற்குடிக் கற்பகத்தைச்
சிலை-ஆர் வாள்-நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை
விலை-ஆர் மாலை வல்லார் வியன் மூவுலகு ஆள்பவரே.
===================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
sundarar tēvāram - padigam 7.27 – kaṟkuḍi (uyyakkoṇḍān malai) - (paṇ - naṭṭarāgam)
("tānā tānadanā tana tānana tānadanā" - Rhythm)
pāḍal eṇ : 1
viḍai ārum koḍiyāy; veṟi ār malark koṇḍraiyināy;
paḍai ār veṇ-maḻuvā; param āya parambaranē;
kaḍi ār pūmboḻil-sūḻ tiruk kaṟkuḍi manni-niṇḍra
aḍigēḷ; emberumān; aḍiyēnaiyum añjal ennē.
pāḍal eṇ : 2
maṟaiyōr vānavarum toḻudu ētti vaṇaṅga niṇḍra
iṟaivā; emberumān; enakku innamudu āyavanē;
kaṟai ār sōlaigaḷ-sūḻ tiruk kaṟkuḍi manni-niṇḍra
aṟavā; aṅgaṇanē; aḍiyēnaiyum añjal ennē.
pāḍal eṇ : 3
silaiyāl muppuraṅgaḷ poḍiyāgac cidaittavanē;
malaimēl mā-marundē; maḍa-mādu iḍam koṇḍavanē;
kalai sēr kaiyinanē; tiruk kaṟkuḍi manni-niṇḍra
alai sēr señjaḍaiyāy; aḍiyēnaiyum añjal ennē.
pāḍal eṇ : 4
sey-ār mēniyanē; tiru nīla miḍaṭrinanē;
mai-ār kaṇṇi-paṅgā; mada yānai urittavanē;
kai-ār sūlattināy; tiruk kaṟkuḍi manni-niṇḍra
aiyā; emberumān; aḍiyēnaiyum añjal ennē.
pāḍal eṇ : 5
sandu-ār veṇ-kuḻaiyāy; sari-kōvaṇa āḍaiyanē;
pandu-ārum viralāḷ oru pāgam amarndavanē;
kandu-ār sōlaigaḷ-sūḻ tiruk kaṟkuḍi manni-niṇḍra
endāy; emberumān; aḍiyēnaiyum ēṇḍrugoḷḷē.
pāḍal eṇ : 6
arai-ār kīḷoḍu kōvaṇamum aravum asaittu,
virai-ār koṇḍraiyuḍan viḷaṅgum piṟai mēl uḍaiyāy;
karai-ārum vayal-sūḻ tiruk kaṟkuḍi manni-niṇḍra
araiyā; emberumān; aḍiyēnaiyum añjal ennē.
pāḍal eṇ : 7
pārār viṇṇavarum paravip paṇindu ētta niṇḍra *
sīr-ār mēniyanē; tigaḻ nīla miḍaṭrinanē;
kār-ār pūmboḻil-sūḻ tiruk kaṟkuḍi manni-niṇḍra
ārā in-amudē; aḍiyēnaiyum añjal ennē.
* variant reading: "pārōr"
pāḍal eṇ : 8
nilanē nīr vaḷi tī neḍu vānagam āgi niṇḍra
pulanē; puṇḍarigattu ayan mālavan pōṭriseyyum
kanalē; kaṟpagamē; tiruk kaṟkuḍi manni-niṇḍra
anal sēr kaiyinanē; aḍiyēnaiyum añjal ennē.
pāḍal eṇ : 9
varum kālan uyirai maḍiyat tiru mel-viralāl
perumbālan tanakkāyp pirivitta perundagaiyē;
karumbu ārum vayal-sūḻ tiruk kaṟkuḍi manni-niṇḍra
virumbā; emberumān aḍiyēnaiyum vēṇḍudiyē.
pāḍal eṇ : 10
alai-ār taṇbunal-sūḻndu aḻagāgi viḻavu-amarum
kalai-ār mādavar sēr tiruk kaṟkuḍik kaṟpagattaic
cilai-ār vāḷ-nudalāḷ nalla siṅgaḍi appan urai
vilai-ār mālai vallār viyan mūvulagu āḷbavarē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
सुन्दरर् तेवारम् - पदिगम् 7.27 – कऱ्कुडि (उय्यक्कॊण्डान् मलै) - (पण् - नट्टरागम्)
("ताना तानदना तन तानन तानदना" - Rhythm)
पाडल् ऎण् : 1
विडै आरुम् कॊडियाय्; वॆऱि आर् मलर्क् कॊण्ड्रैयिनाय्;
पडै आर् वॆण्-मऴुवा; परम् आय परम्बरने;
कडि आर् पूम्बॊऴिल्-सूऴ् तिरुक् कऱ्कुडि मन्नि-निण्ड्र
अडिगेळ्; ऎम्बॆरुमान्; अडियेनैयुम् अञ्जल् ऎन्ने.
पाडल् ऎण् : 2
मऱैयोर् वानवरुम् तॊऴुदु एत्ति वणङ्ग निण्ड्र
इऱैवा; ऎम्बॆरुमान्; ऎनक्कु इन्नमुदु आयवने;
कऱै आर् सोलैगळ्-सूऴ् तिरुक् कऱ्कुडि मन्नि-निण्ड्र
अऱवा; अङ्गणने; अडियेनैयुम् अञ्जल् ऎन्ने.
पाडल् ऎण् : 3
सिलैयाल् मुप्पुरङ्गळ् पॊडियागच् चिदैत्तवने;
मलैमेल् मा-मरुन्दे; मड-मादु इडम् कॊण्डवने;
कलै सेर् कैयिनने; तिरुक् कऱ्कुडि मन्नि-निण्ड्र
अलै सेर् सॆञ्जडैयाय्; अडियेनैयुम् अञ्जल् ऎन्ने.
पाडल् ऎण् : 4
सॆय्-आर् मेनियने; तिरु नील मिडट्रिनने;
मै-आर् कण्णि-पङ्गा; मद यानै उरित्तवने;
कै-आर् सूलत्तिनाय्; तिरुक् कऱ्कुडि मन्नि-निण्ड्र
ऐया; ऎम्बॆरुमान्; अडियेनैयुम् अञ्जल् ऎन्ने.
पाडल् ऎण् : 5
सन्दु-आर् वॆण्-कुऴैयाय्; सरि-कोवण आडैयने;
पन्दु-आरुम् विरलाळ् ऒरु पागम् अमर्न्दवने;
कन्दु-आर् सोलैगळ्-सूऴ् तिरुक् कऱ्कुडि मन्नि-निण्ड्र
ऎन्दाय्; ऎम्बॆरुमान्; अडियेनैयुम् एण्ड्रुगॊळ्ळे.
पाडल् ऎण् : 6
अरै-आर् कीळॊडु कोवणमुम् अरवुम् असैत्तु,
विरै-आर् कॊण्ड्रैयुडन् विळङ्गुम् पिऱै मेल् उडैयाय्;
करै-आरुम् वयल्-सूऴ् तिरुक् कऱ्कुडि मन्नि-निण्ड्र
अरैया; ऎम्बॆरुमान्; अडियेनैयुम् अञ्जल् ऎन्ने.
पाडल् ऎण् : 7
पारार् विण्णवरुम् परविप् पणिन्दु एत्त निण्ड्र *
सीर्-आर् मेनियने; तिगऴ् नील मिडट्रिनने;
कार्-आर् पूम्बॊऴिल्-सूऴ् तिरुक् कऱ्कुडि मन्नि-निण्ड्र
आरा इन्-अमुदे; अडियेनैयुम् अञ्जल् ऎन्ने.
* variant reading: "पारोर्"
पाडल् ऎण् : 8
निलने नीर् वळि ती नॆडु वानगम् आगि निण्ड्र
पुलने; पुण्डरिगत्तु अयन् मालवन् पोट्रिसॆय्युम्
कनले; कऱ्पगमे; तिरुक् कऱ्कुडि मन्नि-निण्ड्र
अनल् सेर् कैयिनने; अडियेनैयुम् अञ्जल् ऎन्ने.
पाडल् ऎण् : 9
वरुम् कालन् उयिरै मडियत् तिरु मॆल्-विरलाल्
पॆरुम्बालन् तनक्काय्प् पिरिवित्त पॆरुन्दगैये;
करुम्बु आरुम् वयल्-सूऴ् तिरुक् कऱ्कुडि मन्नि-निण्ड्र
विरुम्बा; ऎम्बॆरुमान् अडियेनैयुम् वेण्डुदिये.
पाडल् ऎण् : 10
अलै-आर् तण्बुनल्-सूऴ्न्दु अऴगागि विऴवु-अमरुम्
कलै-आर् मादवर् सेर् तिरुक् कऱ्कुडिक् कऱ्पगत्तैच्
चिलै-आर् वाळ्-नुदलाळ् नल्ल सिङ्गडि अप्पन् उरै
विलै-आर् मालै वल्लार् वियन् मूवुलगु आळ्बवरे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
సుందరర్ తేవారం - పదిగం 7.27 – కఱ్కుడి (ఉయ్యక్కొండాన్ మలై) - (పణ్ - నట్టరాగం)
("తానా తానదనా తన తానన తానదనా" - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
విడై ఆరుం కొడియాయ్; వెఱి ఆర్ మలర్క్ కొండ్రైయినాయ్;
పడై ఆర్ వెణ్-మఴువా; పరం ఆయ పరంబరనే;
కడి ఆర్ పూంబొఴిల్-సూఴ్ తిరుక్ కఱ్కుడి మన్ని-నిండ్ర
అడిగేళ్; ఎంబెరుమాన్; అడియేనైయుం అంజల్ ఎన్నే.
పాడల్ ఎణ్ : 2
మఱైయోర్ వానవరుం తొఴుదు ఏత్తి వణంగ నిండ్ర
ఇఱైవా; ఎంబెరుమాన్; ఎనక్కు ఇన్నముదు ఆయవనే;
కఱై ఆర్ సోలైగళ్-సూఴ్ తిరుక్ కఱ్కుడి మన్ని-నిండ్ర
అఱవా; అంగణనే; అడియేనైయుం అంజల్ ఎన్నే.
పాడల్ ఎణ్ : 3
సిలైయాల్ ముప్పురంగళ్ పొడియాగచ్ చిదైత్తవనే;
మలైమేల్ మా-మరుందే; మడ-మాదు ఇడం కొండవనే;
కలై సేర్ కైయిననే; తిరుక్ కఱ్కుడి మన్ని-నిండ్ర
అలై సేర్ సెంజడైయాయ్; అడియేనైయుం అంజల్ ఎన్నే.
పాడల్ ఎణ్ : 4
సెయ్-ఆర్ మేనియనే; తిరు నీల మిడట్రిననే;
మై-ఆర్ కణ్ణి-పంగా; మద యానై ఉరిత్తవనే;
కై-ఆర్ సూలత్తినాయ్; తిరుక్ కఱ్కుడి మన్ని-నిండ్ర
ఐయా; ఎంబెరుమాన్; అడియేనైయుం అంజల్ ఎన్నే.
పాడల్ ఎణ్ : 5
సందు-ఆర్ వెణ్-కుఴైయాయ్; సరి-కోవణ ఆడైయనే;
పందు-ఆరుం విరలాళ్ ఒరు పాగం అమర్న్దవనే;
కందు-ఆర్ సోలైగళ్-సూఴ్ తిరుక్ కఱ్కుడి మన్ని-నిండ్ర
ఎందాయ్; ఎంబెరుమాన్; అడియేనైయుం ఏండ్రుగొళ్ళే.
పాడల్ ఎణ్ : 6
అరై-ఆర్ కీళొడు కోవణముం అరవుం అసైత్తు,
విరై-ఆర్ కొండ్రైయుడన్ విళంగుం పిఱై మేల్ ఉడైయాయ్;
కరై-ఆరుం వయల్-సూఴ్ తిరుక్ కఱ్కుడి మన్ని-నిండ్ర
అరైయా; ఎంబెరుమాన్; అడియేనైయుం అంజల్ ఎన్నే.
పాడల్ ఎణ్ : 7
పారార్ విణ్ణవరుం పరవిప్ పణిందు ఏత్త నిండ్ర *
సీర్-ఆర్ మేనియనే; తిగఴ్ నీల మిడట్రిననే;
కార్-ఆర్ పూంబొఴిల్-సూఴ్ తిరుక్ కఱ్కుడి మన్ని-నిండ్ర
ఆరా ఇన్-అముదే; అడియేనైయుం అంజల్ ఎన్నే.
* variant reading: "పారోర్"
పాడల్ ఎణ్ : 8
నిలనే నీర్ వళి తీ నెడు వానగం ఆగి నిండ్ర
పులనే; పుండరిగత్తు అయన్ మాలవన్ పోట్రిసెయ్యుం
కనలే; కఱ్పగమే; తిరుక్ కఱ్కుడి మన్ని-నిండ్ర
అనల్ సేర్ కైయిననే; అడియేనైయుం అంజల్ ఎన్నే.
పాడల్ ఎణ్ : 9
వరుం కాలన్ ఉయిరై మడియత్ తిరు మెల్-విరలాల్
పెరుంబాలన్ తనక్కాయ్ప్ పిరివిత్త పెరుందగైయే;
కరుంబు ఆరుం వయల్-సూఴ్ తిరుక్ కఱ్కుడి మన్ని-నిండ్ర
విరుంబా; ఎంబెరుమాన్ అడియేనైయుం వేండుదియే.
పాడల్ ఎణ్ : 10
అలై-ఆర్ తణ్బునల్-సూఴ్న్దు అఴగాగి విఴవు-అమరుం
కలై-ఆర్ మాదవర్ సేర్ తిరుక్ కఱ్కుడిక్ కఱ్పగత్తైచ్
చిలై-ఆర్ వాళ్-నుదలాళ్ నల్ల సింగడి అప్పన్ ఉరై
విలై-ఆర్ మాలై వల్లార్ వియన్ మూవులగు ఆళ్బవరే.
================ ============
No comments:
Post a Comment