81) 8.20 – திருப்பள்ளியெழுச்சி - tiruppaḷḷiyeḻucci
திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - பதிகம் 8.20
tiruvāsagam - tiruppaḷḷiyeḻucci - padigam 8.20
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: PDF:
Tamil : https://drive.google.com/open?id=17_vhEYNEIVzve0N5DG2nEmS4PM48_cYW
Roman (English) : https://drive.google.com/open?id=1P_NsetdIRiomKGno1FAfoKDfUFfX9XZ1
Nagari (Devanagari) : https://drive.google.com/open?id=1XKvQCrwGy8fat8eBZm6eArKoFbFq1hl6
Telugu : https://drive.google.com/open?id=1MR2GUToZ-kXYb2Adi6IAJxQIriaqGzpB
Kannada : https://drive.google.com/open?id=1gl6wZOV2tFDkub_taX494c4vajdz-rtY
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/hzVJtf_Gsrg
Part-2: https://youtu.be/2gIEzN_rQmw
English discussion:
Part-1: https://youtu.be/LVwM9hBU53w
Part-2: https://youtu.be/yAhafRwe-EI
Part-3: https://youtu.be/EjhWuQzoq5I
Part-4: https://youtu.be/Io-IUpFLsi0
V. Subramanian
===============
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - பதிகம் 8.20
1.
போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
.. புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
.. எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
.. திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
.. எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
2.
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
.. அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
.. கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
.. திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
.. அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.
3.
கூவின பூங்குயில் கூவின கோழி
.. குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
.. தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
.. திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
.. எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
4.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
.. இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
.. தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
.. திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
.. எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
5.
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
.. போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
.. கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
.. சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
.. எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
6.
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
.. பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
.. வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
.. திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
.. எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
7.
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
.. கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
.. எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
.. மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
.. எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
8.
முந்திய முதல்நடு இறுதியு மானாய்
.. மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
.. பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
.. திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
.. ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
9.
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
.. விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
.. வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
.. கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
.. எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
10.
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
.. போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
.. திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
.. படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
.. ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
==================
Word separated version:
திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - பதிகம் 8.20
1.
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே;
.. புலர்ந்தது பூங்கழற்கு இணை-துணை மலர்-கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும்
.. எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்-வயல் சூழ்,
.. திருப்பெருந்துறை உறை சிவ-பெருமானே;
ஏற்றுயர் கொடி உடையாய்; எனை உடையாய்;
.. எம்பெருமான், பள்ளி எழுந்தருளாயே.
2.
அருணன் இந்திரன் திசை அணுகினன்; இருள்-போய்
.. அகன்றது உதயம்; நின் மலர்த் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ-எழ, நயனக்
.. கடிமலர் மலர, மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்-நிரை அறு-பதம் முரல்வன, இவை ஓர்;
.. திருப்பெருந்துறை உறை சிவ-பெருமானே;
அருள்-நிதி தர வரும் ஆனந்த மலையே;
.. அலை-கடலே, பள்ளி எழுந்தருளாயே.
3.
கூவின பூங்குயில்; கூவின கோழி;
.. குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி,ஒளி உதயத்து
.. ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ, நற் செறி-கழல் தாளிணை காட்டாய்;
.. திருப்பெருந்துறை உறை சிவ-பெருமானே;
யாவரும் அறிவரியாய்; எமக்கு எளியாய்;
.. எம்பெருமான், பள்ளி எழுந்தருளாயே.
4.
இன்னிசை வீணையர் யாழினர் ஒரு-பால்;
.. இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு-பால்;
துன்னிய பிணை-மலர்க் கையினர் ஒரு-பால்;
.. தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒரு-பால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒரு-பால்;
.. திருப்பெருந்துறை உறை சிவ-பெருமானே;
என்னையும் ஆண்டு-கொண்டு இன்னருள் புரியும்
.. எம்பெருமான், பள்ளி எழுந்தருளாயே.
5.
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்,
.. போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்,
.. கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்;
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா;
.. சிந்தனைக்கும் அரியாய்; எங்கள்-முன் வந்து,
ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டருள் புரியும்
.. எம்பெருமான், பள்ளி எழுந்தருளாயே.
6.
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
.. பந்தனை வந்தறுத்தார், அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
.. வணங்குகின்றார், அணங்கின் மணவாளா;
செப்புறு கமலங்கள் மலரும் தண்-வயல் சூழ்,
.. திருப்பெருந்துறை உறை சிவபெருமானே;
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
.. எம்பெருமான், பள்ளி எழுந்தருளாயே.
7.
அது பழச்சுவை என, அமுதென, அறிதற்கு
.. அரிதென, எளிதென, அமரரும் அறியார்;
இது அவன் திருவுரு, இவன் அவன் எனவே,
.. எங்களை ஆண்டு-கொண்டு இங்கு எழுந்தருளும்,
மது வளர் பொழில் திரு உத்தர-கோச-
.. மங்கை உள்ளாய்; திருப்பெருந்துறை மன்னா;
எது எமைப் பணி-கொளுமாறு அது கேட்போம்;
.. எம்பெருமான், பள்ளி எழுந்தருளாயே.
8.
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
.. மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்;
பந்தணை விரலியும் நீயும், நின் அடியார்
.. பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே;
செந்தழல் புரை-திரு மேனியும் காட்டித்,
.. திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
.. ஆரமுதே, பள்ளி எழுந்தருளாயே.
9.
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
.. விழுப்பொருளே; உன தொழுப்படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே;
.. வண் திருப்பெருந்துறையாய்; வழி அடியோம்
கண்ணகத்தே நின்று களி-தரு தேனே;
.. கடல் அமுதே; கரும்பே; விரும்படியார்
எண்ணகத்தாய்; உலகுக்கு உயிர் ஆனாய்;
.. எம்பெருமான், பள்ளி எழுந்தருளாயே.
10.
புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம்
.. போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு என்று நோக்கித்,
.. திருப்பெருந்துறை உறைவாய், திருமாலாம்
அவன் விருப்பெய்தவும், மலரவன் ஆசைப்
.. படவும், நின் அலர்ந்த மெய்க்-கருணையும் நீயும்,
அவனியிற் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்;
.. ஆரமுதே, பள்ளி எழுந்தருளாயே.
===================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruvāsagam - tiruppaḷḷiyeḻucci - padigam 8.20
1.
pōṭri en vāḻmudal āgiya poruḷē;
.. pularndadu pūṅgaḻaṟku iṇai-tuṇai malar-koṇḍu
ēṭri, nin tirumugattu emakku aruḷ malarum
.. eḻil nagai koṇḍu nin tiruvaḍi toḻugōm;
sēṭridaḻk kamalaṅgaḷ malarum taṇ-vayal sūḻ,
.. tirupperunduṟai uṟai siva-perumānē;
ēṭruyar koḍi uḍaiyāy; enai uḍaiyāy;
.. emberumān, paḷḷi eḻundaruḷāyē.
2.
aruṇan indiran tisai aṇuginan; iruḷ-pōy
.. agaṇḍradu udayam; nin malart tirumugattin
karuṇaiyin sūriyan eḻa-eḻa, nayanak
.. kaḍimalar malara, maṭraṇṇal aṅgaṇṇām
tiraḷ-nirai aṟu-padam muralvana, ivai ōr;
.. tirupperunduṟai uṟai siva-perumānē;
aruḷ-nidi tara varum ānanda malaiyē;
.. alai-kaḍalē, paḷḷi eḻundaruḷāyē.
3.
kūvina pūṅguyil; kūvina kōḻi;
.. kurugugaḷ iyambina; iyambina saṅgam;
ōvina tāragai oḷi,oḷi udayattu
.. oruppaḍugiṇḍradu; viruppoḍu namakkut
dēva, naṟ ceṟi-kaḻal tāḷiṇai kāṭṭāy;
.. tirupperunduṟai uṟai siva-perumānē;
yāvarum aṟivariyāy; emakku eḷiyāy;
.. emberumān, paḷḷi eḻundaruḷāyē.
4.
innisai vīṇaiyar yāḻinar oru-pāl;
.. irukkoḍu tōttiram iyambinar oru-pāl;
tunniya piṇai-malark kaiyinar oru-pāl;
.. toḻugaiyar aḻugaiyar tuvaḷgaiyar oru-pāl;
senniyil añjali kūppinar oru-pāl;
.. tirupperunduṟai uṟai siva-perumānē;
ennaiyum āṇḍu-koṇḍu innaruḷ puriyum
.. emberumān, paḷḷi eḻundaruḷāyē.
5.
pūdaṅgaḷ tōṟum niṇḍrāy enin allāl,
.. pōkkilan varavilan ena ninaip pulavōr
kīdaṅgaḷ pāḍudal āḍudal allāl,
.. kēṭṭaṟiyōm unaik kaṇḍaṟivāraic;
cīdaṅgoḷ vayal tirupperunduṟai mannā;
.. sindanaikkum ariyāy; eṅgaḷ-mun vandu,
ēdaṅgaḷ aṟuttu, emmai āṇḍaruḷ puriyum
.. emberumān, paḷḷi eḻundaruḷāyē.
6.
pappaṟa vīṭṭirundu uṇarum nin aḍiyār
.. pandanai vandaṟuttār, avar palarum
maippuṟu kaṇṇiyar mānuḍattu iyalbin
.. vaṇaṅgugiṇḍrār, aṇaṅgin maṇavāḷā;
seppuṟu kamalaṅgaḷ malarum taṇ-vayal sūḻ,
.. tirupperunduṟai uṟai sivaberumānē;
ippiṟappu aṟuttu emai āṇḍaruḷ puriyum
.. emberumān, paḷḷi eḻundaruḷāyē.
7.
adu paḻaccuvai ena, amudena, aṟidaṟku
.. aridena, eḷidena, amararum aṟiyār;
idu avan tiruvuru, ivan avan enavē,
.. eṅgaḷai āṇḍu-koṇḍu iṅgu eḻundaruḷum,
madu vaḷar poḻil tiru uttara-kōsa-
.. maṅgai uḷḷāy; tirupperunduṟai mannā;
edu emaip paṇi-koḷumāṟu adu kēṭpōm;
.. emberumān, paḷḷi eḻundaruḷāyē.
8.
mundiya mudal naḍu iṟudiyum ānāy;
.. mūvarum aṟigilar; yāvar maṭraṟivār;
pandaṇai viraliyum nīyum, nin aḍiyār
.. paḻaṅguḍil toṟum eḻundaruḷiya paranē;
sendaḻal purai-tiru mēniyum kāṭṭit,
.. tirupperunduṟai uṟai kōyilum kāṭṭi,
andaṇan āvadum kāṭṭi vandāṇḍāy;
.. āramudē, paḷḷi eḻundaruḷāyē.
9.
viṇṇagat tēvarum naṇṇavum māṭṭā
.. viḻupporuḷē; una toḻuppaḍiyōṅgaḷ
maṇṇagattē vandu vāḻac ceydānē;
.. vaṇ tirupperunduṟaiyāy; vaḻi aḍiyōm
kaṇṇagattē niṇḍru kaḷi-taru tēnē;
.. kaḍal amudē; karumbē; virumbaḍiyār
eṇṇagattāy; ulagukku uyir ānāy;
.. emberumān, paḷḷi eḻundaruḷāyē.
10.
puvaniyiṟ pōyp piṟavāmaiyil nāḷ nām
.. pōkkugiṇḍrōm avamē; indap pūmi
sivan uyyak koḷgiṇḍravāṟu eṇḍru nōkkit,
.. tirupperunduṟai uṟaivāy, tirumālām
avan viruppeydavum, malaravan āsaip
.. paḍavum, nin alarnda meyk-karuṇaiyum nīyum,
avaniyiṟ pugundu emai āṭkoḷḷa vallāy;
.. āramudē, paḷḷi eḻundaruḷāyē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुवासगम् - तिरुप्पळ्ळियॆऴुच्चि - पदिगम् 8.20
1.
पोट्रि ऎन् वाऴ्मुदल् आगिय पॊरुळे;
.. पुलर्न्ददु पूङ्गऴऱ्कु इणै-तुणै मलर्-कॊण्डु
एट्रि, निन् तिरुमुगत्तु ऎमक्कु अरुळ् मलरुम्
.. ऎऴिल् नगै कॊण्डु निन् तिरुवडि तॊऴुगोम्;
सेट्रिदऴ्क् कमलङ्गळ् मलरुम् तण्-वयल् सूऴ्,
.. तिरुप्पॆरुन्दुऱै उऱै सिव-पॆरुमाने;
एट्रुयर् कॊडि उडैयाय्; ऎनै उडैयाय्;
.. ऎम्बॆरुमान्, पळ्ळि ऎऴुन्दरुळाये.
2.
अरुणन् इन्दिरन् तिसै अणुगिनन्; इरुळ्-पोय्
.. अगण्ड्रदु उदयम्; निन् मलर्त् तिरुमुगत्तिन्
करुणैयिन् सूरियन् ऎऴ-ऎऴ, नयनक्
.. कडिमलर् मलर, मट्रण्णल् अङ्गण्णाम्
तिरळ्-निरै अऱु-पदम् मुरल्वन, इवै ओर्;
.. तिरुप्पॆरुन्दुऱै उऱै सिव-पॆरुमाने;
अरुळ्-निदि तर वरुम् आनन्द मलैये;
.. अलै-कडले, पळ्ळि ऎऴुन्दरुळाये.
3.
कूविन पूङ्गुयिल्; कूविन कोऴि;
.. कुरुगुगळ् इयम्बिन; इयम्बिन सङ्गम्;
ओविन तारगै ऒळि,ऒळि उदयत्तु
.. ऒरुप्पडुगिण्ड्रदु; विरुप्पॊडु नमक्कुत्
देव, नऱ् चॆऱि-कऴल् ताळिणै काट्टाय्;
.. तिरुप्पॆरुन्दुऱै उऱै सिव-पॆरुमाने;
यावरुम् अऱिवरियाय्; ऎमक्कु ऎळियाय्;
.. ऎम्बॆरुमान्, पळ्ळि ऎऴुन्दरुळाये.
4.
इन्निसै वीणैयर् याऴिनर् ऒरु-पाल्;
.. इरुक्कॊडु तोत्तिरम् इयम्बिनर् ऒरु-पाल्;
तुन्निय पिणै-मलर्क् कैयिनर् ऒरु-पाल्;
.. तॊऴुगैयर् अऴुगैयर् तुवळ्गैयर् ऒरु-पाल्;
सॆन्नियिल् अञ्जलि कूप्पिनर् ऒरु-पाल्;
.. तिरुप्पॆरुन्दुऱै उऱै सिव-पॆरुमाने;
ऎन्नैयुम् आण्डु-कॊण्डु इन्नरुळ् पुरियुम्
.. ऎम्बॆरुमान्, पळ्ळि ऎऴुन्दरुळाये.
5.
पूदङ्गळ् तोऱुम् निण्ड्राय् ऎनिन् अल्लाल्,
.. पोक्किलन् वरविलन् ऎन निनैप् पुलवोर्
कीदङ्गळ् पाडुदल् आडुदल् अल्लाल्,
.. केट्टऱियोम् उनैक् कण्डऱिवारैच्;
चीदङ्गॊळ् वयल् तिरुप्पॆरुन्दुऱै मन्ना;
.. सिन्दनैक्कुम् अरियाय्; ऎङ्गळ्-मुन् वन्दु,
एदङ्गळ् अऱुत्तु, ऎम्मै आण्डरुळ् पुरियुम्
.. ऎम्बॆरुमान्, पळ्ळि ऎऴुन्दरुळाये.
6.
पप्पऱ वीट्टिरुन्दु उणरुम् निन् अडियार्
.. पन्दनै वन्दऱुत्तार्, अवर् पलरुम्
मैप्पुऱु कण्णियर् मानुडत्तु इयल्बिन्
.. वणङ्गुगिण्ड्रार्, अणङ्गिन् मणवाळा;
सॆप्पुऱु कमलङ्गळ् मलरुम् तण्-वयल् सूऴ्,
.. तिरुप्पॆरुन्दुऱै उऱै सिवबॆरुमाने;
इप्पिऱप्पु अऱुत्तु ऎमै आण्डरुळ् पुरियुम्
.. ऎम्बॆरुमान्, पळ्ळि ऎऴुन्दरुळाये.
7.
अदु पऴच्चुवै ऎन, अमुदॆन, अऱिदऱ्कु
.. अरिदॆन, ऎळिदॆन, अमररुम् अऱियार्;
इदु अवन् तिरुवुरु, इवन् अवन् ऎनवे,
.. ऎङ्गळै आण्डु-कॊण्डु इङ्गु ऎऴुन्दरुळुम्,
मदु वळर् पॊऴिल् तिरु उत्तर-कोस-
.. मङ्गै उळ्ळाय्; तिरुप्पॆरुन्दुऱै मन्ना;
ऎदु ऎमैप् पणि-कॊळुमाऱु अदु केट्पोम्;
.. ऎम्बॆरुमान्, पळ्ळि ऎऴुन्दरुळाये.
8.
मुन्दिय मुदल् नडु इऱुदियुम् आनाय्;
.. मूवरुम् अऱिगिलर्; यावर् मट्रऱिवार्;
पन्दणै विरलियुम् नीयुम्, निन् अडियार्
.. पऴङ्गुडिल् तॊऱुम् ऎऴुन्दरुळिय परने;
सॆन्दऴल् पुरै-तिरु मेनियुम् काट्टित्,
.. तिरुप्पॆरुन्दुऱै उऱै कोयिलुम् काट्टि,
अन्दणन् आवदुम् काट्टि वन्दाण्डाय्;
.. आरमुदे, पळ्ळि ऎऴुन्दरुळाये.
9.
विण्णगत् तेवरुम् नण्णवुम् माट्टा
.. विऴुप्पॊरुळे; उन तॊऴुप्पडियोङ्गळ्
मण्णगत्ते वन्दु वाऴच् चॆय्दाने;
.. वण् तिरुप्पॆरुन्दुऱैयाय्; वऴि अडियोम्
कण्णगत्ते निण्ड्रु कळि-तरु तेने;
.. कडल् अमुदे; करुम्बे; विरुम्बडियार्
ऎण्णगत्ताय्; उलगुक्कु उयिर् आनाय्;
.. ऎम्बॆरुमान्, पळ्ळि ऎऴुन्दरुळाये.
10.
पुवनियिऱ् पोय्प् पिऱवामैयिल् नाळ् नाम्
.. पोक्कुगिण्ड्रोम् अवमे; इन्दप् पूमि
सिवन् उय्यक् कॊळ्गिण्ड्रवाऱु ऎण्ड्रु नोक्कित्,
.. तिरुप्पॆरुन्दुऱै उऱैवाय्, तिरुमालाम्
अवन् विरुप्पॆय्दवुम्, मलरवन् आसैप्
.. पडवुम्, निन् अलर्न्द मॆय्क्-करुणैयुम् नीयुम्,
अवनियिऱ् पुगुन्दु ऎमै आट्कॊळ्ळ वल्लाय्;
.. आरमुदे, पळ्ळि ऎऴुन्दरुळाये.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరువాసగం - తిరుప్పళ్ళియెఴుచ్చి - పదిగం 8.20
1.
పోట్రి ఎన్ వాఴ్ముదల్ ఆగియ పొరుళే;
.. పులర్న్దదు పూంగఴఱ్కు ఇణై-తుణై మలర్-కొండు
ఏట్రి, నిన్ తిరుముగత్తు ఎమక్కు అరుళ్ మలరుం
.. ఎఴిల్ నగై కొండు నిన్ తిరువడి తొఴుగోం;
సేట్రిదఴ్క్ కమలంగళ్ మలరుం తణ్-వయల్ సూఴ్,
.. తిరుప్పెరుందుఱై ఉఱై సివ-పెరుమానే;
ఏట్రుయర్ కొడి ఉడైయాయ్; ఎనై ఉడైయాయ్;
.. ఎంబెరుమాన్, పళ్ళి ఎఴుందరుళాయే.
2.
అరుణన్ ఇందిరన్ తిసై అణుగినన్; ఇరుళ్-పోయ్
.. అగండ్రదు ఉదయం; నిన్ మలర్త్ తిరుముగత్తిన్
కరుణైయిన్ సూరియన్ ఎఴ-ఎఴ, నయనక్
.. కడిమలర్ మలర, మట్రణ్ణల్ అంగణ్ణాం
తిరళ్-నిరై అఱు-పదం మురల్వన, ఇవై ఓర్;
.. తిరుప్పెరుందుఱై ఉఱై సివ-పెరుమానే;
అరుళ్-నిది తర వరుం ఆనంద మలైయే;
.. అలై-కడలే, పళ్ళి ఎఴుందరుళాయే.
3.
కూవిన పూంగుయిల్; కూవిన కోఴి;
.. కురుగుగళ్ ఇయంబిన; ఇయంబిన సంగం;
ఓవిన తారగై ఒళి,ఒళి ఉదయత్తు
.. ఒరుప్పడుగిండ్రదు; విరుప్పొడు నమక్కుత్
దేవ, నఱ్ చెఱి-కఴల్ తాళిణై కాట్టాయ్;
.. తిరుప్పెరుందుఱై ఉఱై సివ-పెరుమానే;
యావరుం అఱివరియాయ్; ఎమక్కు ఎళియాయ్;
.. ఎంబెరుమాన్, పళ్ళి ఎఴుందరుళాయే.
4.
ఇన్నిసై వీణైయర్ యాఴినర్ ఒరు-పాల్;
.. ఇరుక్కొడు తోత్తిరం ఇయంబినర్ ఒరు-పాల్;
తున్నియ పిణై-మలర్క్ కైయినర్ ఒరు-పాల్;
.. తొఴుగైయర్ అఴుగైయర్ తువళ్గైయర్ ఒరు-పాల్;
సెన్నియిల్ అంజలి కూప్పినర్ ఒరు-పాల్;
.. తిరుప్పెరుందుఱై ఉఱై సివ-పెరుమానే;
ఎన్నైయుం ఆండు-కొండు ఇన్నరుళ్ పురియుం
.. ఎంబెరుమాన్, పళ్ళి ఎఴుందరుళాయే.
5.
పూదంగళ్ తోఱుం నిండ్రాయ్ ఎనిన్ అల్లాల్,
.. పోక్కిలన్ వరవిలన్ ఎన నినైప్ పులవోర్
కీదంగళ్ పాడుదల్ ఆడుదల్ అల్లాల్,
.. కేట్టఱియోం ఉనైక్ కండఱివారైచ్;
చీదంగొళ్ వయల్ తిరుప్పెరుందుఱై మన్నా;
.. సిందనైక్కుం అరియాయ్; ఎంగళ్-మున్ వందు,
ఏదంగళ్ అఱుత్తు, ఎమ్మై ఆండరుళ్ పురియుం
.. ఎంబెరుమాన్, పళ్ళి ఎఴుందరుళాయే.
6.
పప్పఱ వీట్టిరుందు ఉణరుం నిన్ అడియార్
.. పందనై వందఱుత్తార్, అవర్ పలరుం
మైప్పుఱు కణ్ణియర్ మానుడత్తు ఇయల్బిన్
.. వణంగుగిండ్రార్, అణంగిన్ మణవాళా;
సెప్పుఱు కమలంగళ్ మలరుం తణ్-వయల్ సూఴ్,
.. తిరుప్పెరుందుఱై ఉఱై సివబెరుమానే;
ఇప్పిఱప్పు అఱుత్తు ఎమై ఆండరుళ్ పురియుం
.. ఎంబెరుమాన్, పళ్ళి ఎఴుందరుళాయే.
7.
అదు పఴచ్చువై ఎన, అముదెన, అఱిదఱ్కు
.. అరిదెన, ఎళిదెన, అమరరుం అఱియార్;
ఇదు అవన్ తిరువురు, ఇవన్ అవన్ ఎనవే,
.. ఎంగళై ఆండు-కొండు ఇంగు ఎఴుందరుళుం,
మదు వళర్ పొఴిల్ తిరు ఉత్తర-కోస-
.. మంగై ఉళ్ళాయ్; తిరుప్పెరుందుఱై మన్నా;
ఎదు ఎమైప్ పణి-కొళుమాఱు అదు కేట్పోం;
.. ఎంబెరుమాన్, పళ్ళి ఎఴుందరుళాయే.
8.
ముందియ ముదల్ నడు ఇఱుదియుం ఆనాయ్;
.. మూవరుం అఱిగిలర్; యావర్ మట్రఱివార్;
పందణై విరలియుం నీయుం, నిన్ అడియార్
.. పఴంగుడిల్ తొఱుం ఎఴుందరుళియ పరనే;
సెందఴల్ పురై-తిరు మేనియుం కాట్టిత్,
.. తిరుప్పెరుందుఱై ఉఱై కోయిలుం కాట్టి,
అందణన్ ఆవదుం కాట్టి వందాండాయ్;
.. ఆరముదే, పళ్ళి ఎఴుందరుళాయే.
9.
విణ్ణగత్ తేవరుం నణ్ణవుం మాట్టా
.. విఴుప్పొరుళే; ఉన తొఴుప్పడియోంగళ్
మణ్ణగత్తే వందు వాఴచ్ చెయ్దానే;
.. వణ్ తిరుప్పెరుందుఱైయాయ్; వఴి అడియోం
కణ్ణగత్తే నిండ్రు కళి-తరు తేనే;
.. కడల్ అముదే; కరుంబే; విరుంబడియార్
ఎణ్ణగత్తాయ్; ఉలగుక్కు ఉయిర్ ఆనాయ్;
.. ఎంబెరుమాన్, పళ్ళి ఎఴుందరుళాయే.
10.
పువనియిఱ్ పోయ్ప్ పిఱవామైయిల్ నాళ్ నాం
.. పోక్కుగిండ్రోం అవమే; ఇందప్ పూమి
సివన్ ఉయ్యక్ కొళ్గిండ్రవాఱు ఎండ్రు నోక్కిత్,
.. తిరుప్పెరుందుఱై ఉఱైవాయ్, తిరుమాలాం
అవన్ విరుప్పెయ్దవుం, మలరవన్ ఆసైప్
.. పడవుం, నిన్ అలర్న్ద మెయ్క్-కరుణైయుం నీయుం,
అవనియిఱ్ పుగుందు ఎమై ఆట్కొళ్ళ వల్లాయ్;
.. ఆరముదే, పళ్ళి ఎఴుందరుళాయే.
================ ============
No comments:
Post a Comment