This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
86) 1.15 - மையாடிய கண்டன் - திருநெய்த்தானம் - maiyāḍiya kaṇḍan - tiruneyttānam
சம்பந்தர் தேவாரம் - 1.15 – மையாடிய கண்டன் - திருநெய்த்தானம் - (பண் - நட்டபாடை)
sambandar tēvāram - 1.15 – maiyāḍiya kaṇḍan - tiruneyttānam - (paṇ - naṭṭapāḍai)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1WTTCN9Mt3GJGEzPQFtVSMEgeRUWQZe8V/view?usp=sharing
English translation – by V.M.Subramanya Ayyar: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_015.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/R3ISvlUrZIg
Part-2: https://youtu.be/JugiDPS2j5I
English discussion:
***
You can find audio clips of Odhuvar singing this padhigam here:
Sathgurunathan: https://www.youtube.com/watch?v=ltsqjG2ccn8
Sivakkara Desika Swamigal - (Harihara desikar): https://www.youtube.com/watch?v=EE0PtFVC6aU
***
V. Subramanian
===================== ================
This has verses in Tamil, English, Nagari, and Telugu scripts. Please print the pages you need.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.15 – திருநெய்த்தானம் - (பண் - நட்டபாடை)
திருநெய்த்தானம்: இது திருவையாற்றிலிருந்து 2 கிமீ தூரத்தில் காவிரியாற்றின் வடகரையில் உள்ள தலம். சுவாமி - நெய்யாடியப்பர். அம்பிகையின் திருநாமங்கள் - பாலாம்பிகை & இளமங்கை அம்மை. இந்தத் தலம் இக்காலத்தில் தில்லைஸ்தானம் என வழங்கும். இது சப்தஸ்தானத் தலங்களில் ஏழாவது தலம்.
பதிகக் குறிப்பு: நெய்த்தானம் என்ற தலத்தின் பெயரைச் சொன்னால், நெய்த்தானத்து ஈசனை வழிபாடு செய்தால், அடியார்களது துன்பங்களும், உடல் நோய்களும், வினைகளும் தீரும்; சிவகதி கிட்டும். (Songs 2, 5, 6, 7, 9, 10, 11)
----------
Sambandar proceeded further west from Thiruvaiyaru
# 2203 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 305
குடதிசைமேற் போவதற்குக் கும்பிட்டங் கருள்பெற்றுக் குறிப்பி னோடும்
படருநெறி மேலணைவார் பரமர்திரு நெய்த்தானப் பதியி னண்ணி
யடையுமன முறவணங்கி யருந்தமிழ்மா லைகள்பாடி யங்கு நின்றும்
புடைவளர்மென் கரும்பினொடு பூகமிடை மழபாடி போற்றச் சென்றார்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.15 – திருநெய்த்தானம் - (பண் - நட்டபாடை)
(தானாதன தானாதன தானாதன தானா - Rhythm;
"தானா" may come as "தனனா" as well)
பாடல் எண் : 1
மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.
பாடல் எண் : 2
பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்
பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.
பாடல் எண் : 3
பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.
பாடல் எண் : 4
சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மன லேந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்
கடுவாளிள வரவாடுமிழ் கடனஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.
பாடல் எண் : 5
நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
பகராவரு புனல்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதண்கரை நிகழ்வாயநெய்த் தான
நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.
பாடல் எண் : 6
விடையார் கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
உடையார்நறு மாலைசடை யுடையாரவர் மேய
புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்ந்தநெய்த் தானம்
அடையாதவ ரென்றும்அம ருலகம்அடை யாரே.
பாடல் எண் : 7
நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்
தழலானவ னனலங்கையில் ஏந்தியழ காய
கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே.
பாடல் எண் : 8
அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
இறையாரமு னெடுத்தானிரு பதுதோளிற வூன்றி
நிறையார்புனல் நெய்த்தானன்நல் நிகழ்சேவடி பரவக்
கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.
பாடல் எண் : 9
கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
ஞாலம்புக ழடியாருடல் உறுநோய்நலி யாவே.
பாடல் எண் : 10
மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே.
பாடல் எண் : 11
தலமல்கிய புனற்காழியுட் டமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.
Word separated version:
Sambandar proceeded further west from Thiruvaiyaru
# 2203 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 305
குடதிசைமேல் போவதற்குக் கும்பிட்டு அங்கு அருள்-பெற்றுக் குறிப்பினோடும்
படரும் நெறிமேல் அணைவார், பரமர் திரு-நெய்த்தானப் பதியில் நண்ணி,
அடையும் மனம் உற வணங்கி அரும் தமிழ்-மாலைகள் பாடி, அங்கு நின்றும்
புடை வளர் மென் கரும்பினொடு பூகம் மிடை மழபாடி போற்றச் சென்றார்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.15 – திருநெய்த்தானம் - (பண் - நட்டபாடை)
(தானாதன தானாதன தானாதன தானா - Rhythm;
"தானா" parts may come as "தனனா" as well)
பாடல் எண் : 1
மை-ஆடிய கண்டன்-மலை மகள்-பாகமது உடையான்
கை-ஆடிய கேடில்-கரி உரி-மூடிய ஒருவன்
செய்-ஆடிய குவளைம்-மலர் நயனத்தவளோடும்
நெய்-ஆடிய பெருமான்-இடம் நெய்த்தானம் எ(ன்)னீரே.
பாடல் எண் : 2
பறையும்-பழி பாவம்-படு துயரம்-பல தீரும்
பிறையும்-புனல் அரவும்-படு சடை-எம்பெருமான் ஊர்
அறையும்-புனல் வரு-காவிரி அலைசேர்-வட கரைமேல்
நிறையும்-புனை மடவார்-பயில் நெய்த்தானம் எ(ன்)னீரே.
பாடல் எண் : 3
பேய்-ஆயின பாடப்-பெரு நடம்-ஆடிய பெருமான்
வேய்-ஆயின தோளிக்கொரு பாகம்-மிக உடையான்
தாய்-ஆகிய உலகங்களை நிலை-பேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமான்-இடம் நெய்த்தானம் எ(ன்)னீரே.
பாடல் எண் : 4
சுடுநீறணி அண்ணல்-சுடர் சூலம்-அனல் ஏந்தி
நடுநள்ளிருள் நடம்-ஆடிய நம்பன்-உறை இடமாம்
கடுவாள்-இள அரவு-ஆடு-உமிழ் கடல்-நஞ்சமது உண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானம் எ(ன்)னீரே
பாடல் எண் : 5
நுகர்-ஆரமொடு ஏலம்-மணி செம்பொன்-நுரை உந்திப்
பகரா-வரு புனல்-காவிரி பரவிப்-பணிந்து ஏத்தும்
நிகரான்-மணல் இடு-தண்-கரை நிகழ்வாய-நெய்த் தான
நகரான்-அடி ஏத்த-நமை நடலை-அடை யாவே.
பாடல் எண் : 6
விடையார்-கொடி உடையவ்-அ(ண்)ணல் வீந்தார்-வெ(ள்)ளை எலும்பும்
உடையார்-நறு மாலை-சடை உடையார்-அவர் மேய
புடையே-புனல் பாயும்-வயல் பொழில்-சூழ்ந்த-நெய்த் தானம்
அடையாதவர் என்றும்-அமர் உலகம்-அடை யாரே.
பாடல் எண் : 7
நிழல்-ஆர்-வயல் கமழ்-சோலைகள் நிறைகின்ற-நெய்த் தானத்து
அழல்-ஆனவன் அனல்-அங்கையில் ஏந்தி-அழகாய
கழலான்-அடி நாளும்-கழ லாதே-விடல் இன்றித்
தொழலாரவர் நாளும்-துயர் இன்றித்-தொழு வாரே.
பாடல் எண் : 8
அறை-ஆர்-கடல் இலங்கைக்கிறை அணிசேர்-கயி லாயம்
இறையார-முன் எடுத்தான்-இருபது-தோள்-இற ஊன்றி
நிறை-ஆர்-புனல் நெய்த்தானன்-நல் நிகழ்-சேவடி பரவக்
கறை-ஆர்-கதிர் வாள்-ஈந்தவர் கழல்-ஏத்துதல் கதியே.
பாடல் எண் : 9
கோலம்-முடி நெடுமாலொடு கொய்-தாமரை யானும்
சீலம்மறிவு அரிதாய்-ஒளி திகழ்வாய-நெய்த் தானம்
காலம்பெற மலர்-நீர்-அவை தூவித்-தொழுதேத்தும்
ஞாலம்-புகழ் அடியார்-உடல் உறுநோய்-நலி யாவே.
பாடல் எண் : 10
மத்தம்-மலி சித்தத்திறை மதி-இல்லவர் சமணர்
புத்தர்-அவர் சொன்னம்-மொழி பொருளா-நினை யேன்மின்
நித்தம்-பயில் நிமலன்னுறை நெய்த்தானமது ஏத்தும்
சித்தம்முடை அடியார்-உடல் செறுநோய்-அடை யாவே.
பாடல் எண் : 11
தலமல்கிய புனல்-காழியுள் தமிழ்-ஞான-சம்பந்தன்
நிலமல்கிய புகழான்-மிகு நெய்த்தானனை நிகர்-இல்
பலமல்கிய பாடல்லிவை பத்தும்-மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்-சிவகதியே.
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Sambandar proceeded further west from Thiruvaiyaru
# 2203 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 305
kuḍadisaimēl pōvadaṟkuk kumbiṭṭu aṅgu aruḷ-peṭruk kuṟippinōḍum
paḍarum neṟimēl aṇaivār, paramar tiru-neyttānap padiyil naṇṇi,
aḍaiyum manam uṟa vaṇaṅgi arum tamiḻ-mālaigaḷ pāḍi, aṅgu niṇḍrum
puḍai vaḷar men karumbinoḍu pūgam miḍai maḻabāḍi pōṭrac ceṇḍrār.
sambandar tēvāram - padigam 1.15 – tiruneyttānam - (paṇ - naṭṭapāḍai)
(tānādana tānādana tānādana tānā - Rhythm;
"tānā" parts may come as "tananā" as well)
pāḍal eṇ : 1
mai-āḍiya kaṇḍan-malai magaḷ-pāgamadu uḍaiyān
kai-āḍiya kēḍil-kari uri-mūḍiya oruvan
sey-āḍiya kuvaḷaim-malar nayanattavaḷōḍum
ney-āḍiya perumān-iḍam neyttānam e(n)nīrē.
pāḍal eṇ : 2
paṟaiyum-paḻi pāvam-paḍu tuyaram-pala tīrum
piṟaiyum-punal aravum-paḍu saḍai-emberumān ūr
aṟaiyum-punal varu-kāviri alaisēr-vaḍa karaimēl
niṟaiyum-punai maḍavār-payil neyttānam e(n)nīrē.
pāḍal eṇ : 3
pēy-āyina pāḍap-peru naḍam-āḍiya perumān
vēy-āyina tōḷikkoru pāgam-miga uḍaiyān
tāy-āgiya ulagaṅgaḷai nilai-pēṟusey talaivan
nēyāḍiya perumān-iḍam neyttānam e(n)nīrē.
pāḍal eṇ : 4
suḍunīṟaṇi aṇṇal-suḍar sūlam-anal ēndi
naḍunaḷḷiruḷ naḍam-āḍiya namban-uṟai iḍamām
kaḍuvāḷ-iḷa aravu-āḍu-umiḻ kaḍal-nañjamadu uṇḍān
neḍuvāḷaigaḷ kudigoḷḷuyar neyttānam e(n)nīrē
pāḍal eṇ : 5
nugar-āramoḍu ēlam-maṇi sembon-nurai undip
pagarā-varu punal-kāviri paravip-paṇindu ēttum
nigarān-maṇal iḍu-taṇ-karai nigaḻvāya-neyt tāna
nagarān-aḍi ētta-namai naḍalai-aḍai yāvē.
pāḍal eṇ : 6
viḍaiyār-koḍi uḍaiyav-a(ṇ)ṇal vīndār-ve(ḷ)ḷai elumbum
uḍaiyār-naṟu mālai-saḍai uḍaiyār-avar mēya
puḍaiyē-punal pāyum-vayal poḻil-sūḻnda-neyt tānam
aḍaiyādavar eṇḍrum-amar ulagam-aḍai yārē.
pāḍal eṇ : 7
niḻal-ār-vayal kamaḻ-sōlaigaḷ niṟaigiṇḍra-neyt tānattu
aḻal-ānavan anal-aṅgaiyil ēndi-aḻagāya
kaḻalān-aḍi nāḷum-kaḻa lādē-viḍal iṇḍrit
toḻalāravar nāḷum-tuyar iṇḍrit-toḻu vārē.
pāḍal eṇ : 8
aṟai-ār-kaḍal ilaṅgaikkiṟai aṇisēr-kayi lāyam
iṟaiyāra-mun eḍuttān-irubadu-tōḷ-iṟa ūṇḍri
niṟai-ār-punal neyttānan-nal nigaḻ-sēvaḍi paravak
kaṟai-ār-kadir vāḷ-īndavar kaḻal-ēttudal gadiyē.
pāḍal eṇ : 9
kōlam-muḍi neḍumāloḍu koy-tāmarai yānum
sīlammaṟivu aridāy-oḷi tigaḻvāya-neyt tānam
kālambeṟa malar-nīr-avai tūvit-toḻudēttum
ñālam-pugaḻ aḍiyār-uḍal uṟunōy-nali yāvē.
pāḍal eṇ : 10
mattam-mali sittattiṟai madi-illavar samaṇar
puttar-avar sonnam-moḻi poruḷā-ninai yēnmin
nittam-payil nimalannuṟai neyttānamadu ēttum
sittammuḍai aḍiyār-uḍal seṟunōy-aḍai yāvē.
pāḍal eṇ : 11
talamalgiya punal-kāḻiyuḷ tamiḻ-ñāna-sambandan
nilamalgiya pugaḻān-migu neyttānanai nigar-il
palamalgiya pāḍallivai pattum-miga vallār
silamalgiya selvannaḍi sērvar-sivagadiyē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
Sambandar proceeded further west from Thiruvaiyaru
# 2203 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 305
कुडदिसैमेल् पोवदऱ्कुक् कुम्बिट्टु अङ्गु अरुळ्-पॆट्रुक् कुऱिप्पिनोडुम्
पडरुम् नॆऱिमेल् अणैवार्, परमर् तिरु-नॆय्त्तानप् पदियिल् नण्णि,
अडैयुम् मनम् उऱ वणङ्गि अरुम् तमिऴ्-मालैगळ् पाडि, अङ्गु निण्ड्रुम्
पुडै वळर् मॆन् करुम्बिनॊडु पूगम् मिडै मऴबाडि पोट्रच् चॆण्ड्रार्.
सम्बन्दर् तेवारम् - पदिगम् 1.15 – तिरुनॆय्त्तानम् - (पण् - नट्टपाडै)
(तानादन तानादन तानादन ताना - Rhythm;
"ताना" parts may come as "तनना" as well)
पाडल् ऎण् : 1
मै-आडिय कण्डन्-मलै मगळ्-पागमदु उडैयान्
कै-आडिय केडिल्-करि उरि-मूडिय ऒरुवन्
सॆय्-आडिय कुवळैम्-मलर् नयनत्तवळोडुम्
नॆय्-आडिय पॆरुमान्-इडम् नॆय्त्तानम् ऎ(न्)नीरे.
पाडल् ऎण् : 2
पऱैयुम्-पऴि पावम्-पडु तुयरम्-पल तीरुम्
पिऱैयुम्-पुनल् अरवुम्-पडु सडै-ऎम्बॆरुमान् ऊर्
अऱैयुम्-पुनल् वरु-काविरि अलैसेर्-वड करैमेल्
निऱैयुम्-पुनै मडवार्-पयिल् नॆय्त्तानम् ऎ(न्)नीरे.
पाडल् ऎण् : 3
पेय्-आयिन पाडप्-पॆरु नडम्-आडिय पॆरुमान्
वेय्-आयिन तोळिक्कॊरु पागम्-मिग उडैयान्
ताय्-आगिय उलगङ्गळै निलै-पेऱुसॆय् तलैवन्
नेयाडिय पॆरुमान्-इडम् नॆय्त्तानम् ऎ(न्)नीरे.
पाडल् ऎण् : 4
सुडुनीऱणि अण्णल्-सुडर् सूलम्-अनल् एन्दि
नडुनळ्ळिरुळ् नडम्-आडिय नम्बन्-उऱै इडमाम्
कडुवाळ्-इळ अरवु-आडु-उमिऴ् कडल्-नञ्जमदु उण्डान्
नॆडुवाळैगळ् कुदिगॊळ्ळुयर् नॆय्त्तानम् ऎ(न्)नीरे
पाडल् ऎण् : 5
नुगर्-आरमॊडु एलम्-मणि सॆम्बॊन्-नुरै उन्दिप्
पगरा-वरु पुनल्-काविरि परविप्-पणिन्दु एत्तुम्
निगरान्-मणल् इडु-तण्-करै निगऴ्वाय-नॆय्त् तान
नगरान्-अडि एत्त-नमै नडलै-अडै यावे.
पाडल् ऎण् : 6
विडैयार्-कॊडि उडैयव्-अ(ण्)णल् वीन्दार्-वॆ(ळ्)ळै ऎलुम्बुम्
उडैयार्-नऱु मालै-सडै उडैयार्-अवर् मेय
पुडैये-पुनल् पायुम्-वयल् पॊऴिल्-सूऴ्न्द-नॆय्त् तानम्
अडैयादवर् ऎण्ड्रुम्-अमर् उलगम्-अडै यारे.
पाडल् ऎण् : 7
निऴल्-आर्-वयल् कमऴ्-सोलैगळ् निऱैगिण्ड्र-नॆय्त् तानत्तु
अऴल्-आनवन् अनल्-अङ्गैयिल् एन्दि-अऴगाय
कऴलान्-अडि नाळुम्-कऴ लादे-विडल् इण्ड्रित्
तॊऴलारवर् नाळुम्-तुयर् इण्ड्रित्-तॊऴु वारे.
पाडल् ऎण् : 8
अऱै-आर्-कडल् इलङ्गैक्किऱै अणिसेर्-कयि लायम्
इऱैयार-मुन् ऎडुत्तान्-इरुबदु-तोळ्-इऱ ऊण्ड्रि
निऱै-आर्-पुनल् नॆय्त्तानन्-नल् निगऴ्-सेवडि परवक्
कऱै-आर्-कदिर् वाळ्-ईन्दवर् कऴल्-एत्तुदल् गदिये.
पाडल् ऎण् : 9
कोलम्-मुडि नॆडुमालॊडु कॊय्-तामरै यानुम्
सीलम्मऱिवु अरिदाय्-ऒळि तिगऴ्वाय-नॆय्त् तानम्
कालम्बॆऱ मलर्-नीर्-अवै तूवित्-तॊऴुदेत्तुम्
ञालम्-पुगऴ् अडियार्-उडल् उऱुनोय्-नलि यावे.
पाडल् ऎण् : 10
मत्तम्-मलि सित्तत्तिऱै मदि-इल्लवर् समणर्
पुत्तर्-अवर् सॊन्नम्-मॊऴि पॊरुळा-निनै येन्मिन्
नित्तम्-पयिल् निमलन्नुऱै नॆय्त्तानमदु एत्तुम्
सित्तम्मुडै अडियार्-उडल् सॆऱुनोय्-अडै यावे.
पाडल् ऎण् : 11
तलमल्गिय पुनल्-काऴियुळ् तमिऴ्-ञान-सम्बन्दन्
निलमल्गिय पुगऴान्-मिगु नॆय्त्ताननै निगर्-इल्
पलमल्गिय पाडल्लिवै पत्तुम्-मिग वल्लार्
सिलमल्गिय सॆल्वन्नडि सेर्वर्-सिवगदिये.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Sambandar proceeded further west from Thiruvaiyaru
# 2203 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 305
కుడదిసైమేల్ పోవదఱ్కుక్ కుంబిట్టు అంగు అరుళ్-పెట్రుక్ కుఱిప్పినోడుం
పడరుం నెఱిమేల్ అణైవార్, పరమర్ తిరు-నెయ్త్తానప్ పదియిల్ నణ్ణి,
అడైయుం మనం ఉఱ వణంగి అరుం తమిఴ్-మాలైగళ్ పాడి, అంగు నిండ్రుం
పుడై వళర్ మెన్ కరుంబినొడు పూగం మిడై మఴబాడి పోట్రచ్ చెండ్రార్.
సంబందర్ తేవారం - పదిగం 1.15 – తిరునెయ్త్తానం - (పణ్ - నట్టపాడై)
(తానాదన తానాదన తానాదన తానా - Rhythm;
"తానా" parts may come as "తననా" as well)
పాడల్ ఎణ్ : 1
మై-ఆడియ కండన్-మలై మగళ్-పాగమదు ఉడైయాన్
కై-ఆడియ కేడిల్-కరి ఉరి-మూడియ ఒరువన్
సెయ్-ఆడియ కువళైం-మలర్ నయనత్తవళోడుం
నెయ్-ఆడియ పెరుమాన్-ఇడం నెయ్త్తానం ఎ(న్)నీరే.
పాడల్ ఎణ్ : 2
పఱైయుం-పఴి పావం-పడు తుయరం-పల తీరుం
పిఱైయుం-పునల్ అరవుం-పడు సడై-ఎంబెరుమాన్ ఊర్
అఱైయుం-పునల్ వరు-కావిరి అలైసేర్-వడ కరైమేల్
నిఱైయుం-పునై మడవార్-పయిల్ నెయ్త్తానం ఎ(న్)నీరే.
పాడల్ ఎణ్ : 3
పేయ్-ఆయిన పాడప్-పెరు నడం-ఆడియ పెరుమాన్
వేయ్-ఆయిన తోళిక్కొరు పాగం-మిగ ఉడైయాన్
తాయ్-ఆగియ ఉలగంగళై నిలై-పేఱుసెయ్ తలైవన్
నేయాడియ పెరుమాన్-ఇడం నెయ్త్తానం ఎ(న్)నీరే.
పాడల్ ఎణ్ : 4
సుడునీఱణి అణ్ణల్-సుడర్ సూలం-అనల్ ఏంది
నడునళ్ళిరుళ్ నడం-ఆడియ నంబన్-ఉఱై ఇడమాం
కడువాళ్-ఇళ అరవు-ఆడు-ఉమిఴ్ కడల్-నంజమదు ఉండాన్
నెడువాళైగళ్ కుదిగొళ్ళుయర్ నెయ్త్తానం ఎ(న్)నీరే
పాడల్ ఎణ్ : 5
నుగర్-ఆరమొడు ఏలం-మణి సెంబొన్-నురై ఉందిప్
పగరా-వరు పునల్-కావిరి పరవిప్-పణిందు ఏత్తుం
నిగరాన్-మణల్ ఇడు-తణ్-కరై నిగఴ్వాయ-నెయ్త్ తాన
నగరాన్-అడి ఏత్త-నమై నడలై-అడై యావే.
పాడల్ ఎణ్ : 6
విడైయార్-కొడి ఉడైయవ్-అ(ణ్)ణల్ వీందార్-వె(ళ్)ళై ఎలుంబుం
ఉడైయార్-నఱు మాలై-సడై ఉడైయార్-అవర్ మేయ
పుడైయే-పునల్ పాయుం-వయల్ పొఴిల్-సూఴ్న్ద-నెయ్త్ తానం
అడైయాదవర్ ఎండ్రుం-అమర్ ఉలగం-అడై యారే.
పాడల్ ఎణ్ : 7
నిఴల్-ఆర్-వయల్ కమఴ్-సోలైగళ్ నిఱైగిండ్ర-నెయ్త్ తానత్తు
అఴల్-ఆనవన్ అనల్-అంగైయిల్ ఏంది-అఴగాయ
కఴలాన్-అడి నాళుం-కఴ లాదే-విడల్ ఇండ్రిత్
తొఴలారవర్ నాళుం-తుయర్ ఇండ్రిత్-తొఴు వారే.
పాడల్ ఎణ్ : 8
అఱై-ఆర్-కడల్ ఇలంగైక్కిఱై అణిసేర్-కయి లాయం
ఇఱైయార-మున్ ఎడుత్తాన్-ఇరుబదు-తోళ్-ఇఱ ఊండ్రి
నిఱై-ఆర్-పునల్ నెయ్త్తానన్-నల్ నిగఴ్-సేవడి పరవక్
కఱై-ఆర్-కదిర్ వాళ్-ఈందవర్ కఴల్-ఏత్తుదల్ గదియే.
పాడల్ ఎణ్ : 9
కోలం-ముడి నెడుమాలొడు కొయ్-తామరై యానుం
సీలమ్మఱివు అరిదాయ్-ఒళి తిగఴ్వాయ-నెయ్త్ తానం
కాలంబెఱ మలర్-నీర్-అవై తూవిత్-తొఴుదేత్తుం
ఞాలం-పుగఴ్ అడియార్-ఉడల్ ఉఱునోయ్-నలి యావే.
పాడల్ ఎణ్ : 10
మత్తం-మలి సిత్తత్తిఱై మది-ఇల్లవర్ సమణర్
పుత్తర్-అవర్ సొన్నం-మొఴి పొరుళా-నినై యేన్మిన్
నిత్తం-పయిల్ నిమలన్నుఱై నెయ్త్తానమదు ఏత్తుం
సిత్తమ్ముడై అడియార్-ఉడల్ సెఱునోయ్-అడై యావే.
పాడల్ ఎణ్ : 11
తలమల్గియ పునల్-కాఴియుళ్ తమిఴ్-ఞాన-సంబందన్
నిలమల్గియ పుగఴాన్-మిగు నెయ్త్తాననై నిగర్-ఇల్
పలమల్గియ పాడల్లివై పత్తుం-మిగ వల్లార్
సిలమల్గియ సెల్వన్నడి సేర్వర్-సివగదియే.
================ ============