Sunday, January 30, 2022

11.4 - A - அற்புதத் திருவந்தாதி - (songs 1-10) - aRpudhath thiruvandhAdhi

102) 11.4 - A - அற்புதத் திருவந்தாதி - (songs 1-10) - aRpudhath thiruvandhAdhi

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.

Verses:

PDF: https://drive.google.com/file/d/1ymwittTBGLpMmPAA-0-ZOv055HsJZhNb/view?usp=sharing

Unicode document: https://drive.google.com/file/d/1VFay9uxywVvKfVw8vhlIpaA-FW_JtiFO/view?usp=sharing

On YouTube:

Tamil discussion:

Part-1:

Part-2:  

V. Subramanian

=====================

காரைக்கால் அம்மையார் - அற்புதத் திருவந்தாதி - திகம் 11.4 - Selection-A (songs 1-10)


இந்த நூல் 101 வெண்பாக்களால் ஆனது. மண்டலித்து வரும் அந்தாதியாக முதற் பாடல் "பிறந்து மொழிபயின்ற" என்று தொடங்கி, இறுதியில் உள்ள 101-ஆம் பாடல் "பேராத காதல் பிறந்து" என்று முடிகின்றது. ஈசனிடம் பேய்வடிவை வேண்டிப் பெற்றபின் அவர் பாடியருளிய முதல் நூல் இது.

தமிழில் இதுவே முதல் அந்தாதி.


காரைக்கால் அம்மையார் வரலாறு: http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=16

காரைக்கால் அம்மையார் வரலாறு - வர்ஷா புவனேஸ்வரி - Varsha Bhuvaneswari's Harikatha on Sri Karaikkal Ammaiyar - (Jan 2019): https://www.youtube.com/watch?v=Y6N-NfXi6bc

Special note:

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0004347_திருமுகப்பாசுரம்_முதலிய_பிரபந்தங்கள்_அடங்கிய_பதினெராந்திருமுறை.pdf

This is the scanned PDF version of an old edition of 11th thirumuRai - as published by Arumuga Navalar. This has the verses in the old style - applying sandhi across all seers across all lines in a song.

This edition too has some occasional errors.

For each verse, this "Arumuga Navalar" edition version is given first (after my corrections of any obvious errors) followed by the Dharmapuram Adheenam edition & word separated version.

This may help those interested in learning the Tamil sandhi rules - and enable them in reading verses in old editions of books.


Padhigam background:

Siva granted her wish and at once her beautiful body transformed into that of a ghost (Sivagana)

# 1766 - பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார் புராணம் - 50

ஆனவப் பொழுது, மன்று ளாடுவா ரருளி னாலே

மேனெறி யுணர்வு கூர, வேண்டிற்றே பெறுவார் மெய்யி

லூனடை வனப்பை யெல்லா முதறியெற் புடம்பே யாக

வானமு நிலனு மெல்லாம் வணங்குபேய் வடிவ மானார்.


Word separated:

ஆனப்பொழுது, மன்றுள் ஆடுவார் அருளினாலே

மேல்-நெறி ணர்வு கூர, வேண்டிற்றே பெறுவார் மெய்யில்

ஊன்-டை வனப்பை-ல்லாம் தறிற்பு-டம்பே

வானமும் நிலனும்-ல்லாம் வணங்கு பேய் வடிவம் ஆனார்.


Karaikkal ammaiyar sang the "wonderful anthadhi" exclaiming she is one of Siva's bhuthaganas

# 1768 - பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார் புராணம் - 52

உற்பவித் தெழுந்த ஞானத் தொருமையி னுமைகோன் றன்னை

யற்புதத் திருவந் தாதி யப்பொழு தருளிச் செய்வார்

"பொற்புடைச் செய்ய பாத புண்டரீ கங்கள் போற்று

நற்கணத் தினிலொன் றானே னா"னென்று நயந்து பாடி,


Word separated:

உற்பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை-கோன் தன்னை

அற்புதத் திருவந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார்,

"பொற்பு-உடைச் செய்ய பாத புண்டரீகங்கள் போற்று

நற்கணத்தினில் ஒன்று ஆனேன் நான்" என்று நயந்து பாடி,


காரைக்கால் அம்மையார் - அற்புதத் திருவந்தாதி - பதிகம் 11.4 - Selection-A (songs 1-10)

( வெண்பா - meter) (அந்தாதி - songs with end-to-start link between them)

பாடல் எண் : 1

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தே - னிறந்திகழு

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

யெஞ்ஞான்று தீர்ப்ப திடர்.


பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.


Word separated:

பிறந்து மொழி-பயின்ற பின்-ல்லாம் காதல்

சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்; - நிறம் திகழும்

மைஞ்-ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே,

எஞ்-ஞான்று தீர்ப்பது இடர்?


பாடல் எண் : 2

இடர்களையா ரேனு மெமக்கிரங்கா ரேனும்

படரு நெறிபணியா ரேனுஞ் - சுடருருவி

லென்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க்

கன்பறா தென்னெஞ் சவர்க்கு.


இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்

படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்

என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்

கன்பறா தென்நெஞ் சவர்க்கு.


Word separated:

இடர் களையாரேனும், எமக்கு இரங்காரேனும்,

படரும் நெறி பணியாரேனும், - சுடர்-உருவில்

என்பு அறாக் கோலத்து எரி ஆடும் எம்மானார்க்கு

அன்பு அறாது என் நெஞ்சு அவர்க்கு.


பாடல் எண் : 3

அவர்க்கே யெழுபிறப்பு மாளாவோ மென்று

வர்க்கேநான்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற்

பாகாப்போழ் சூடுவர்க்கல்லான் மற்றொருவர்க்

காகாப்போ மெஞ்ஞான்று மாள்.


அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற்

பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்

காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.


Word separated:

அவர்க்கே எழு-பிறப்பும் ஆள் ஆவோம்; என்றும்

அவர்க்கே நாம் அன்பு ஆவது அல்லால், - பவர்ச்-சடைமேல்

பாகாப்-போழ் சூடும் அவர்க்கு-அல்லால் மற்றொருவர்க்கு

காப்-போம் எஞ்-ஞான்றும் ஆள்.


பாடல் எண் : 4

ஆளானோல்லறிய முறையிட்டாற்

கேளாத தென்கொலோ கேளாமை - நீளாஞ்

செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றா

மெம்மையாட் கொண்ட விறை.


ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்

கேளாத தென்கொலோ கேள்ஆமை - நீள்ஆகம்

செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்

எம்மையாட் கொண்ட இறை.


Word separated:

ஆள் ஆனோம் அல்லல் அறிய முறையிட்டால்

கேளாதது என்கொலோ கேள்ஆமை * - நீள்-ஆகம்

செம்மையான் ஆகித் திரு-மிடறு மற்றொன்று ஆம்

எம்மை ஆட்கொண்ட இறை.

(* கேளாமை - கேள் ஆ(கா)மை? கேள் ஆமை? )


பாடல் எண் : 5

இறைவனே யெவ்வுயிருந் தோற்றுவிப்பான் றோற்றி

இறைவனே யீண்டிறக்கஞ் செய்வா - னிறைவனே

யெந்தா யெவிரங்கு மெங்கண்மேல் வெந்துயரம்

வந்தாதுமாற்று வான்.


இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி

இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே

எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்

வந்தால் அதுமாற்று வான்.


Word separated:

இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான்; தோற்றி,

இறைவனே ஈண்டு இறக்கம் செய்வான்; - இறைவனே,

"எந்தாய்" என இரங்கும் எங்கள்-மேல் வெம்-துயரம்

வந்தால் அது மாற்றுவான்.


பாடல் எண் : 6

வானத்தா னென்பாரு மென்கமற் றும்பர்கோன்

றானத்தா னென்பாருந் தாமென்க - ஞானத்தான்

முன்ஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தா

னென்னெஞ்சத் தானென்பன் யான்.


வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்

தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்

முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்

என்நெஞ்சத் தானென்பன் யான்.


Word separated:

வானத்தான் என்பாரும் என்க; மற்று உம்பர்-கோன்

தானத்தான் என்பாருந்தாம் என்க; - ஞானத்தான்,

முன் நஞ்சத்தால் இருண்ட மொய்-ஒளி-சேர் கண்டத்தான்,

என் நெஞ்சத்தான் என்பன் யான்.

பாடல் எண் : 7

யானே தவமுடையே னென்னெஞ்சே நன்னெஞ்சம்

யானே பிறப்பறுப்பா னெண்ணினேன் - யானேக்

கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற

ம்மானுக் காளாயி னேன்.


யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்

யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்

கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற

அம்மானுக் காளாயி னேன்.


Word separated:

யானே தவம் உடையேன்; என் நெஞ்சே நன்னெஞ்சம்;

யானே பிறப்பு அறுப்பான் எண்ணினேன்; - யானே அக்-

கைம்மா-உரி போர்த்த கண்ணுதலான், வெண்ணீற்ற

அம்மானுக்கு ஆள் ஆயினேன்.


பாடல் எண் : 8

ஆயினே னாள்வானுக் கன்றே பெறற்கரிய

னாயினேஃதன்றே யாமாறு - தூய

புனற்கங்கை யேற்றானோர் பொன்வரையே போல்வா

னற்கங்கை யேற்றாருள்.


ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்

ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய

புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்

அனற்கங்கை ஏற்றான் அருள்.


Word separated:

ஆயினேன் ஆள்வானுக்கு; அன்றே பெறற்கு அரியன்

ஆயினேன்; அஃது-அன்றே ஆமாறு; - தூய

புனற்கங்கை ஏற்றான், ஓர் பொன்-வரையே போல்வான்,

அனற்கங்கை * ஏற்றான் அருள்.

(* அனற்கங்கை = 1. அனற்கு அங்கை; 2. அனல் கம் கை)


பாடல் எண் : 9

அருளே யுலகெலா மாள்விப்ப தீச

ருளே பிறப்பறுப்ப தானா - ருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையே னெஞ்ஞான்று

மெப்பொருளு மாவ தெனக்கு.


அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்

அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்

எப்பொருளும் ஆவ தெனக்கு.


Word separated:

அருளே உலகு-எலாம் ஆள்விப்பது, ஈசன்

அருளே பிறப்பு-அறுப்பதானால், - அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதி-உடையேன், எஞ்-ஞான்றும்

எப்-பொருளும் ஆவது எனக்கு.


பாடல் எண் : 10

எனக்கினிய வெம்மானை யீசனையா னென்று

மனக்கினிய வைப்பாக வைத்தே - னெனக்கவனைக்

கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே யின்புற்றே

னுண்டே யெனக்கரிய தொன்று.


எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்

மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்

கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்

உண்டே எனக்கரிய தொன்று.


Word separated:

எனக்கு இனிய எம்மானை, ஈசனை, யான் என்றும்

மனக்கினிய வைப்பாக வைத்தேன்; - எனக்கு அவனைக்

கொண்டேன் பிரானாகக்; கொள்வதுமே இன்புற்றேன்;

உண்டே எனக்கு அரியது-ஒன்று?


==================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Padhigam background:


Siva granted her wish and at once her beautiful body transformed into that of a ghost (Sivagana)

# 1766 - periya purāṇam - kāraikkāl ammaiyār purāṇam - 50

āna appoḻudu, maṇḍruḷ āḍuvār aruḷinālē

mēl-neṟi uṇarvu kūra, vēṇḍiṭrē peṟuvār meyyil

ūn-aḍai vanappai-ellām udaṟi eṟpu-uḍambē āga

vānamum nilanum-ellām vaṇaṅgu pēy vaḍivam ānār.


Karaikkal ammaiyar sang the "wonderful anthadhi" exclaiming she is one of Siva's bhuthaganas

# 1768 - periya purāṇam - kāraikkāl ammaiyār purāṇam - 52

uṟpavittu eḻunda ñānattu orumaiyin umai-kōn tannai

aṟpudat tiruvandādi appoḻudu aruḷic ceyvār,

"poṟpu-uḍaic ceyya pāda puṇḍarīgaṅgaḷ pōṭru

naṟkaṇattinil oṇḍru ānēn nān" eṇḍru nayandu pāḍi,


kāraikkāl ammaiyār - aṟpudat tiruvandādi - padigam 11.4 - Selection-A (songs 1-10)

( veṇbā - meter) (anthAdhi - songs with end-to-start link between them)

pāḍal eṇ : 1

piṟandu moḻi-payiṇḍra pin-ellām kādal

siṟandu nin sēvaḍiyē sērndēn; - niṟam tigaḻum

maiñ-ñāṇḍra kaṇḍattu vānōr perumānē,

eñ-ñāṇḍru tīrppadu iḍar?


pāḍal eṇ : 2

iḍar kaḷaiyārēnum, emakku iraṅgārēnum,

paḍarum neṟi paṇiyārēnum, - suḍar-uruvil

enbu aṟāk kōlattu eri āḍum emmānārkku

anbu aṟādu en neñju avarkku.


pāḍal eṇ : 3

avarkkē eḻu-piṟappum āḷ āvōm; eṇḍrum

avarkkē nām anbu āvadu allāl, - pavarc-caḍaimēl

pāgāp-pōḻ sūḍum avarkku-allāl maṭroruvarkku

āgāp-pōm eñ-ñāṇḍrum āḷ.


pāḍal eṇ : 4

āḷ ānōm allal aṟiya muṟaiyiṭṭāl

kēḷādadu engolō kēḷāmai * - nīḷ-āgam

semmaiyān āgit tiru-miḍaṟu maṭroṇḍru ām

emmai āṭkoṇḍa iṟai.

(* kēḷāmai - kēḷ ā(gā)mai? kēḷ āmai? )


pāḍal eṇ : 5

iṟaivanē evvuyirum tōṭruvippān; tōṭri,

iṟaivanē īṇḍu iṟakkam seyvān; - iṟaivanē,

"endāy" ena iraṅgum eṅgaḷ-mēl vem-tuyaram

vandāl adu māṭruvān.


pāḍal eṇ : 6

vānattān enbārum enga; maṭru umbar-kōn

tānattān enbārundām enga; - ñānattān,

mun nañjattāl iruṇḍa moy-oḷi-sēr kaṇḍattān,

en neñjattān enban yān.

pāḍal eṇ : 7

yānē tavam uḍaiyēn; en neñjē nanneñjam;

yānē piṟappu aṟuppān eṇṇinēn; - yānē ak-

kaimmā-uri pōrtta kaṇṇudalān, veṇṇīṭra

ammānukku āḷ āyinēn.


pāḍal eṇ : 8

āyinēn āḷvānukku; aṇḍrē peṟaṟku ariyan

āyinēn; ahdu-aṇḍrē āmāṟu; - tūya

punaṟkaṅgai ēṭrān, ōr pon-varaiyē pōlvān,

anaṟkaṅgai * ēṭrān aruḷ.

(* anaṟkaṅgai = 1. anaṟku aṅgai; 2. anal kam kai)


pāḍal eṇ : 9

aruḷē ulagu-elām āḷvippadu, īsan

aruḷē piṟappu-aṟuppadānāl, - aruḷālē

meypporuḷai nōkkum vidi-uḍaiyēn, eñ-ñāṇḍrum

ep-poruḷum āvadu enakku.


pāḍal eṇ : 10

enakku iniya emmānai, īsanai, yān eṇḍrum

manakkiniya vaippāga vaittēn; - enakku avanaik

koṇḍēn pirānāgak; koḷvadumē inbuṭrēn;

uṇḍē enakku ariyadu-oṇḍru?

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


Padhigam background:


Siva granted her wish and at once her beautiful body transformed into that of a ghost (Sivagana)

# 1766 - पॆरिय पुराणम् - कारैक्काल् अम्मैयार् पुराणम् - 50

आन अप्पॊऴुदु, मण्ड्रुळ् आडुवार् अरुळिनाले

मेल्-नॆऱि उणर्वु कूर, वेण्डिट्रे पॆऱुवार् मॆय्यिल्

ऊन्-अडै वनप्पै-ऎल्लाम् उदऱि ऎऱ्‌पु-उडम्बे आग

वानमुम् निलनुम्-ऎल्लाम् वणङ्गु पेय् वडिवम् आनार्.


Karaikkal ammaiyar sang the "wonderful anthadhi" exclaiming she is one of Siva's bhuthaganas

# 1768 - पॆरिय पुराणम् - कारैक्काल् अम्मैयार् पुराणम् - 52

उऱ्‌पवित्तु ऎऴुन्द ञानत्तु ऒरुमैयिन् उमै-कोन् तन्नै

अऱ्‌पुदत् तिरुवन्दादि अप्पॊऴुदु अरुळिच् चॆय्वार्,

"पॊऱ्‌पु-उडैच् चॆय्य पाद पुण्डरीगङ्गळ् पोट्रु

नऱ्‌कणत्तिनिल् ऒण्ड्रु आनेन् नान्" ऎण्ड्रु नयन्दु पाडि,


कारैक्काल् अम्मैयार् - अऱ्‌पुदत् तिरुवन्दादि - पदिगम् 11.4 - Selection-A (songs 1-10)

( वॆण्बा - meter) (anthAdhi - songs with end-to-start link between them)

पाडल् ऎण् : 1

पिऱन्दु मॊऴि-पयिण्ड्र पिन्-ऎल्लाम् कादल्

सिऱन्दु निन् सेवडिये सेर्न्देन्; - निऱम् तिगऴुम्

मैञ्-ञाण्ड्र कण्डत्तु वानोर् पॆरुमाने,

ऎञ्-ञाण्ड्रु तीर्प्पदु इडर्?


पाडल् ऎण् : 2

इडर् कळैयारेनुम्, ऎमक्कु इरङ्गारेनुम्,

पडरुम् नॆऱि पणियारेनुम्, - सुडर्-उरुविल्

ऎन्बु अऱाक् कोलत्तु ऎरि आडुम् ऎम्मानार्क्कु

अन्बु अऱादु ऎन् नॆञ्जु अवर्क्कु.


पाडल् ऎण् : 3

अवर्क्के ऎऴु-पिऱप्पुम् आळ् आवोम्; ऎण्ड्रुम्

अवर्क्के नाम् अन्बु आवदु अल्लाल्, - पवर्च्-चडैमेल्

पागाप्-पोऴ् सूडुम् अवर्क्कु-अल्लाल् मट्रॊरुवर्क्कु

आगाप्-पोम् ऎञ्-ञाण्ड्रुम् आळ्.


पाडल् ऎण् : 4

आळ् आनोम् अल्लल् अऱिय मुऱैयिट्टाल्

केळाददु ऎन्गॊलो केळ्आमै * - नीळ्-आगम्

सॆम्मैयान् आगित् तिरु-मिडऱु मट्रॊण्ड्रु आम्

ऎम्मै आट्कॊण्ड इऱै.

(* केळामै - केळ् आ(गा)मै? केळ् आमै? )


पाडल् ऎण् : 5

इऱैवने ऎव्वुयिरुम् तोट्रुविप्पान्; तोट्रि,

इऱैवने ईण्डु इऱक्कम् सॆय्वान्; - इऱैवने,

"ऎन्दाय्" ऎन इरङ्गुम् ऎङ्गळ्-मेल् वॆम्-तुयरम्

वन्दाल् अदु माट्रुवान्.


पाडल् ऎण् : 6

वानत्तान् ऎन्बारुम् ऎन्ग; मट्रु उम्बर्-कोन्

तानत्तान् ऎन्बारुन्दाम् ऎन्ग; - ञानत्तान्,

मुन् नञ्जत्ताल् इरुण्ड मॊय्-ऒळि-सेर् कण्डत्तान्,

ऎन् नॆञ्जत्तान् ऎन्बन् यान्.

पाडल् ऎण् : 7

याने तवम् उडैयेन्; ऎन् नॆञ्जे नन्नॆञ्जम्;

याने पिऱप्पु अऱुप्पान् ऎण्णिनेन्; - याने अक्-

कैम्मा-उरि पोर्त्त कण्णुदलान्, वॆण्णीट्र

अम्मानुक्कु आळ् आयिनेन्.


पाडल् ऎण् : 8

आयिनेन् आळ्वानुक्कु; अण्ड्रे पॆऱऱ्‌कु अरियन्

आयिनेन्; अह्दु-अण्ड्रे आमाऱु; - तूय

पुनऱ्‌कङ्गै एट्रान्, ओर् पॊन्-वरैये पोल्वान्,

अनऱ्‌कङ्गै * एट्रान् अरुळ्.

(* अनऱ्‌कङ्गै = 1. अनऱ्‌कु अङ्गै; 2. अनल् कम् कै)


पाडल् ऎण् : 9

अरुळे उलगु-ऎलाम् आळ्विप्पदु, ईसन्

अरुळे पिऱप्पु-अऱुप्पदानाल्, - अरुळाले

मॆय्प्पॊरुळै नोक्कुम् विदि-उडैयेन्, ऎञ्-ञाण्ड्रुम्

ऎप्-पॊरुळुम् आवदु ऎनक्कु.


पाडल् ऎण् : 10

ऎनक्कु इनिय ऎम्मानै, ईसनै, यान् ऎण्ड्रुम्

मनक्किनिय वैप्पाग वैत्तेन्; - ऎनक्कु अवनैक्

कॊण्डेन् पिरानागक्; कॊळ्वदुमे इन्बुट्रेन्;

उण्डे ऎनक्कु अरियदु-ऒण्ड्रु?

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Padhigam background:


Siva granted her wish and at once her beautiful body transformed into that of a ghost (Sivagana)

# 1766 - పెరియ పురాణం - కారైక్కాల్ అమ్మైయార్ పురాణం - 50

ఆన అప్పొఴుదు, మండ్రుళ్ ఆడువార్ అరుళినాలే

మేల్-నెఱి ఉణర్వు కూర, వేండిట్రే పెఱువార్ మెయ్యిల్

ఊన్-అడై వనప్పై-ఎల్లాం ఉదఱి ఎఱ్పు-ఉడంబే ఆగ

వానముం నిలనుం-ఎల్లాం వణంగు పేయ్ వడివం ఆనార్.


Karaikkal ammaiyar sang the "wonderful anthadhi" exclaiming she is one of Siva's bhuthaganas

# 1768 - పెరియ పురాణం - కారైక్కాల్ అమ్మైయార్ పురాణం - 52

ఉఱ్పవిత్తు ఎఴుంద ఞానత్తు ఒరుమైయిన్ ఉమై-కోన్ తన్నై

అఱ్పుదత్ తిరువందాది అప్పొఴుదు అరుళిచ్ చెయ్వార్,

"పొఱ్పు-ఉడైచ్ చెయ్య పాద పుండరీగంగళ్ పోట్రు

నఱ్కణత్తినిల్ ఒండ్రు ఆనేన్ నాన్" ఎండ్రు నయందు పాడి,


కారైక్కాల్ అమ్మైయార్ - అఱ్పుదత్ తిరువందాది - పదిగం 11.4 - Selection-A (songs 1-10)

( వెణ్బా - meter) (anthAdhi - songs with end-to-start link between them)

పాడల్ ఎణ్ : 1

పిఱందు మొఴి-పయిండ్ర పిన్-ఎల్లాం కాదల్

సిఱందు నిన్ సేవడియే సేర్న్దేన్; - నిఱం తిగఴుం

మైఞ్-ఞాండ్ర కండత్తు వానోర్ పెరుమానే,

ఎఞ్-ఞాండ్రు తీర్ప్పదు ఇడర్?


పాడల్ ఎణ్ : 2

ఇడర్ కళైయారేనుం, ఎమక్కు ఇరంగారేనుం,

పడరుం నెఱి పణియారేనుం, - సుడర్-ఉరువిల్

ఎన్బు అఱాక్ కోలత్తు ఎరి ఆడుం ఎమ్మానార్క్కు

అన్బు అఱాదు ఎన్ నెంజు అవర్క్కు.


పాడల్ ఎణ్ : 3

అవర్క్కే ఎఴు-పిఱప్పుం ఆళ్ ఆవోం; ఎండ్రుం

అవర్క్కే నాం అన్బు ఆవదు అల్లాల్, - పవర్చ్-చడైమేల్

పాగాప్-పోఴ్ సూడుం అవర్క్కు-అల్లాల్ మట్రొరువర్క్కు

ఆగాప్-పోం ఎఞ్-ఞాండ్రుం ఆళ్.


పాడల్ ఎణ్ : 4

ఆళ్ ఆనోం అల్లల్ అఱియ ముఱైయిట్టాల్

కేళాదదు ఎన్గొలో కేళ్ఆమై * - నీళ్-ఆగం

సెమ్మైయాన్ ఆగిత్ తిరు-మిడఱు మట్రొండ్రు ఆం

ఎమ్మై ఆట్కొండ ఇఱై.

(* కేళామై - కేళ్ ఆ(గా)మై? కేళ్ ఆమై? )


పాడల్ ఎణ్ : 5

ఇఱైవనే ఎవ్వుయిరుం తోట్రువిప్పాన్; తోట్రి,

ఇఱైవనే ఈండు ఇఱక్కం సెయ్వాన్; - ఇఱైవనే,

"ఎందాయ్" ఎన ఇరంగుం ఎంగళ్-మేల్ వెం-తుయరం

వందాల్ అదు మాట్రువాన్.


పాడల్ ఎణ్ : 6

వానత్తాన్ ఎన్బారుం ఎన్గ; మట్రు ఉంబర్-కోన్

తానత్తాన్ ఎన్బారుందాం ఎన్గ; - ఞానత్తాన్,

మున్ నంజత్తాల్ ఇరుండ మొయ్-ఒళి-సేర్ కండత్తాన్,

ఎన్ నెంజత్తాన్ ఎన్బన్ యాన్.

పాడల్ ఎణ్ : 7

యానే తవం ఉడైయేన్; ఎన్ నెంజే నన్నెంజం;

యానే పిఱప్పు అఱుప్పాన్ ఎణ్ణినేన్; - యానే అక్-

కైమ్మా-ఉరి పోర్త్త కణ్ణుదలాన్, వెణ్ణీట్ర

అమ్మానుక్కు ఆళ్ ఆయినేన్.


పాడల్ ఎణ్ : 8

ఆయినేన్ ఆళ్వానుక్కు; అండ్రే పెఱఱ్కు అరియన్

ఆయినేన్; అహ్దు-అండ్రే ఆమాఱు; - తూయ

పునఱ్కంగై ఏట్రాన్, ఓర్ పొన్-వరైయే పోల్వాన్,

అనఱ్కంగై * ఏట్రాన్ అరుళ్.

(* అనఱ్కంగై = 1. అనఱ్కు అంగై; 2. అనల్ కం కై)


పాడల్ ఎణ్ : 9

అరుళే ఉలగు-ఎలాం ఆళ్విప్పదు, ఈసన్

అరుళే పిఱప్పు-అఱుప్పదానాల్, - అరుళాలే

మెయ్ప్పొరుళై నోక్కుం విది-ఉడైయేన్, ఎఞ్-ఞాండ్రుం

ఎప్-పొరుళుం ఆవదు ఎనక్కు.


పాడల్ ఎణ్ : 10

ఎనక్కు ఇనియ ఎమ్మానై, ఈసనై, యాన్ ఎండ్రుం

మనక్కినియ వైప్పాగ వైత్తేన్; - ఎనక్కు అవనైక్

కొండేన్ పిరానాగక్; కొళ్వదుమే ఇన్బుట్రేన్;

ఉండే ఎనక్కు అరియదు-ఒండ్రు?

================ ============