Wednesday, January 5, 2022

8.24 - திருவாசகம் - அடைக்கலப் பத்து - thiruvasagam - adaikkala paththu

101) 8.39 - திருவாசகம் - அடைக்கலப் பத்து - thiruvasagam -  adaikkala paththu

திருவாசகம் - அடைக்கலப் பத்து - பதிகம் 8.24
tiruvāsagam - aḍaikkalap pattu - padigam 8.24

English discussion:
Part-1:
Part-2:
Part-3:
 
V. Subramanian
===============

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


திருவாசகம் - அடைக்கலப் பத்து - பதிகம் 8.24

("கலவைப் பாட்டு" - various meters)


1.

செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த

பழுத்தமனத் தடியர்உடன் போயினர்யான் பாவியேன்

புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா

அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.


2.

வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின் பெருமையினால்

பொறுப்பவ னேஅராப் பூண்பவ னேபொங்கு கங்கைசடைச்

செறுப்பவ னேநின் திருவரு ளால்என் பிறவியைவேர்

அறுப்பவ னேஉடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.


3.

பெரும்பெரு மான்என் பிறவியை வேரறுத் துப்பெரும்பிச்சுத்

தரும்பெரு மான்சது ரப்பெரு மான்என் மனத்தினுள்ளே

வரும்பெரு மான்மல ரோன்நெடு மாலறி யாமல்நின்ற

அரும்பெரு மான்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.


4.

பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத் தில்நின் கழற்புணைகொண்

டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச்

சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய

அழிகின் றனன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.


5.

சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்

கிருள்புரி யாக்கையி லேகிடந் தெய்த்தனன் மைத்தடங்கண்

வெருள்புரி மான்அன்ன நோக்கிதன் பங்கவிண் ணோர்பெருமான்

அருள்புரி யாய்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.


6.

மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து

தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்

வாழியெப் போதுவந் தெந்நாள் வணங்குவன் வல்வினையேன்

ஆழியப் பாஉடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.


7.

மின்கணினார் நுடங்கும்இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப்

புன்கண னாய்ப் புரள்வேனைப் புரளாமற் புகுந்தருளி

என்கணிலே அமுதூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும்

அங்கணனே உடையாய் அடியேன்உன் அடைக்கலமே.


8.

மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே

கூவிடுவாய் கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன்

பாவிடை யாடுகுழல் போற் கரந்து பரந்ததுள்ளம்

ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.


9.

பிறிவறி யாஅன்பர் நின்அருட் பெய்கழல் தாளிணைக்கீழ்

மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றார்உன்னை வந்திப்பதோர்

நெறியறி யேன்நின்னை யேஅறி யேன்நின்னை யேஅறியும்

அறிவறி யேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.


10.

வழங்குகின் றாய்க்குன் அருளா ரமுதத்தை வாரிக்கொண்டு

விழுங்குகின்றேன் விக்கி னேன்வினை யேன்என் விதியின்மையால்

தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக்கொள்ளாய்

அழுங்குகின் றேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.


==================

Word separated version:


திருவாசகம் - அடைக்கலப் பத்து - பதிகம் 8.24

("கலவைப் பாட்டு" - various meters)


1.

செழுக்-கமலத் திரள் அன நின் சேவடி சேர்ந்து அமைந்த

பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான் பாவியேன்;

புழுக்கண்-உடைப் புன்-குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானம் இலா

அழுக்கு-மனத்து அடியேன், உடையாய், உன் அடைக்கலமே.


2.

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால்

பொறுப்பவனே; அராப் பூண்பவனே; பொங்கு கங்கை சடைச்

செறுப்பவனே; நின் திருவருளால் என் பிறவியை வேர்

அறுப்பவனே; உடையாய்; அடியேன் உன் அடைக்கலமே.


3.

பெரும் பெருமான்; என் பிறவியை வேரறுத்துப் பெரும் பிச்சுத்

தரும் பெருமான்; சதுரப் பெருமான்; என் மனத்தினுள்ளே

வரும் பெருமான்; மலரோன் நெடு-மால் அறியாமல் நின்ற

அரும் பெருமான்; உடையாய்; அடியேன் உன் அடைக்கலமே.


4.

பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில் நின் கழற்புணை-கொண்டு

இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்; யான் இடர்க்கடல்வாய்ச்

சுழிசென்று, மாதர்த் திரை பொரக், காமச் சுறவு எறிய

அழிகின்றனன்; உடையாய்; அடியேன் உன் அடைக்கலமே.


5.

சுருள்-புரி கூழையர் சூழலில் பட்டு, உன் திறம் மறந்து இங்கு

இருள்-புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன்; மைத்-தடங்கண்

வெருள்-புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க; விண்ணோர் பெருமான்;

அருள்-புரியாய்; உடையாய்; அடியேன் உன் அடைக்கலமே.


6.

மாழை-மைப் பாவிய கண்ணியர் வன்-மத்து இட உடைந்து

தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன்; தட-மலர்த்தாள்

வாழி; எப்போது வந்து எந்நாள் வணங்குவன் வல்வினையேன்?

ஆழியப்பா; உடையாய்; அடியேன் உன் அடைக்கலமே.


7.

மின்-கணினார் நுடங்கும் இடையார் வெகுளி-வலையில் அகப்பட்டுப்

புன்-கணனாய்ப் புரள்வேனைப் புரளாமல் புகுந்தருளி,

என்-கணிலே அமுது-ஊறித் தித்தித்து, என் பிழைக்கு இரங்கும்

அங்கணனே; உடையாய்; அடியேன் உன் அடைக்கலமே.


8.

மாவடு வகிர் அன்ன கண்ணி-பங்கா; நின் மலரடிக்கே

கூவிடுவாய், கும்பிக்கே இடுவாய், நின் குறிப்பு அறியேன்;

பாவிடை ஆடு-குழல் போல் கரந்து பரந்தது உள்ளம்;

ஆ கெடுவேன்; உடையாய்; அடியேன் உன் அடைக்கலமே.


9.

பிறிவு அறியா அன்பர் நின் அருட்-பெய்-கழல் தாளிணைக்கீழ்

மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார்; உன்னை வந்திப்பதோர்

நெறி அறியேன்; நின்னையே அறியேன்; நின்னையே அறியும்

அறிவு அறியேன்; உடையாய்; அடியேன் உன் அடைக்கலமே.


10.

வழங்குகின்றாய்க்கு உன் அருள்-ஆரமுதத்தை வாரிக்கொண்டு

விழுங்குகின்றேன்; விக்கினேன் வினையேன் என் விதியின்மையால்;

தழங்கு-அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக்கொள்ளாய்;

அழுங்குகின்றேன்; உடையாய்; அடியேன் உன் அடைக்கலமே.

===================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruvāsagam - aḍaikkalap pattu - padigam 8.24

("kalavaip pāṭṭu" - various meters)


1.

seḻuk-kamalat tiraḷ ana nin sēvaḍi sērndu amainda

paḻutta manattu aḍiyar uḍan pōyinar; yān pāviyēn;

puḻukkaṇ-uḍaip pun-kurambaip pollāk kalvi ñānam ilā

aḻukku-manattu aḍiyēn, uḍaiyāy, un aḍaikkalamē.


2.

veṟuppanavē seyyum en siṟumaiyai nin perumaiyināl

poṟuppavanē; arāp pūṇbavanē; poṅgu gaṅgai saḍaic

ceṟuppavanē; nin tiruvaruḷāl en piṟaviyai vēr

aṟuppavanē; uḍaiyāy; aḍiyēn un aḍaikkalamē.


3.

perum perumān; en piṟaviyai vēraṟuttup perum piccut

tarum perumān; sadurap perumān; en manattinuḷḷē

varum perumān; malarōn neḍu-māl aṟiyāmal niṇḍra

arum perumān; uḍaiyāy; aḍiyēn un aḍaikkalamē.


4.

poḻigiṇḍra tunbap puyal veḷḷattil nin kaḻaṟpuṇai-koṇḍu

iḻigiṇḍra anbargaḷ ēṟinar vān; yān iḍarkkaḍalvāyc

cuḻiseṇḍru, mādart tirai porak, kāmac cuṟavu eṟiya

aḻigiṇḍranan; uḍaiyāy; aḍiyēn un aḍaikkalamē.


5.

suruḷ-puri kūḻaiyar sūḻalil paṭṭu, un tiṟam maṟandu iṅgu

iruḷ-puri yākkaiyilē kiḍandu eyttanan; mait-taḍaṅgaṇ

veruḷ-puri mān anna nōkki-tan paṅga; viṇṇōr perumān;

aruḷ-puriyāy; uḍaiyāy; aḍiyēn un aḍaikkalamē.


6.

māḻai-maip pāviya kaṇṇiyar van-mattu iḍa uḍaindu

tāḻiyaip pāvu tayirbōl taḷarndēn; taḍa-malarttāḷ

vāḻi; eppōdu vandu ennāḷ vaṇaṅguvan valvinaiyēn?

āḻiyappā; uḍaiyāy; aḍiyēn un aḍaikkalamē.


7.

min-kaṇinār nuḍaṅgum iḍaiyār veguḷi-valaiyil agappaṭṭup

pun-kaṇanāyp puraḷvēnaip puraḷāmal pugundaruḷi,

en-kaṇilē amudu-ūṟit tittittu, en piḻaikku iraṅgum

aṅgaṇanē; uḍaiyāy; aḍiyēn un aḍaikkalamē.


8.

māvaḍu vagir anna kaṇṇi-paṅgā; nin malaraḍikkē

kūviḍuvāy, kumbikkē iḍuvāy, nin kuṟippu aṟiyēn;

pāviḍai āḍu-kuḻal pōl karandu parandadu uḷḷam;

ā keḍuvēn; uḍaiyāy; aḍiyēn un aḍaikkalamē.


9.

piṟivu aṟiyā anbar nin aruṭ-pey-kaḻal tāḷiṇaikkīḻ

maṟivu aṟiyāc celvam vandu peṭrār; unnai vandippadōr

neṟi aṟiyēn; ninnaiyē aṟiyēn; ninnaiyē aṟiyum

aṟivu aṟiyēn; uḍaiyāy; aḍiyēn un aḍaikkalamē.


10.

vaḻaṅgugiṇḍrāykku un aruḷ-āramudattai vārikkoṇḍu

viḻuṅgugiṇḍrēn; vikkinēn vinaiyēn en vidiyinmaiyāl;

taḻaṅgu-arum tēn anna taṇṇīr parugat tandu uyyakkoḷḷāy;

aḻuṅgugiṇḍrēn; uḍaiyāy; aḍiyēn un aḍaikkalamē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुवासगम् - अडैक्कलप् पत्तु - पदिगम् 8.24

("कलवैप् पाट्टु" - various meters)


1.

सॆऴुक्-कमलत् तिरळ् अन निन् सेवडि सेर्न्दु अमैन्द

पऴुत्त मनत्तु अडियर् उडन् पोयिनर्; यान् पावियेन्;

पुऴुक्कण्-उडैप् पुन्-कुरम्बैप् पॊल्लाक् कल्वि ञानम् इला

अऴुक्कु-मनत्तु अडियेन्, उडैयाय्, उन् अडैक्कलमे.


2.

वॆऱुप्पनवे सॆय्युम् ऎन् सिऱुमैयै निन् पॆरुमैयिनाल्

पॊऱुप्पवने; अराप् पूण्बवने; पॊङ्गु गङ्गै सडैच्

चॆऱुप्पवने; निन् तिरुवरुळाल् ऎन् पिऱवियै वेर्

अऱुप्पवने; उडैयाय्; अडियेन् उन् अडैक्कलमे.


3.

पॆरुम् पॆरुमान्; ऎन् पिऱवियै वेरऱुत्तुप् पॆरुम् पिच्चुत्

तरुम् पॆरुमान्; सदुरप् पॆरुमान्; ऎन् मनत्तिनुळ्ळे

वरुम् पॆरुमान्; मलरोन् नॆडु-माल् अऱियामल् निण्ड्र

अरुम् पॆरुमान्; उडैयाय्; अडियेन् उन् अडैक्कलमे.


4.

पॊऴिगिण्ड्र तुन्बप् पुयल् वॆळ्ळत्तिल् निन् कऴऱ्‌पुणै-कॊण्डु

इऴिगिण्ड्र अन्बर्गळ् एऱिनर् वान्; यान् इडर्क्कडल्वाय्च्

चुऴिसॆण्ड्रु, मादर्त् तिरै पॊरक्, कामच् चुऱवु ऎऱिय

अऴिगिण्ड्रनन्; उडैयाय्; अडियेन् उन् अडैक्कलमे.


5.

सुरुळ्-पुरि कूऴैयर् सूऴलिल् पट्टु, उन् तिऱम् मऱन्दु इङ्गु

इरुळ्-पुरि याक्कैयिले किडन्दु ऎय्त्तनन्; मैत्-तडङ्गण्

वॆरुळ्-पुरि मान् अन्न नोक्कि-तन् पङ्ग; विण्णोर् पॆरुमान्;

अरुळ्-पुरियाय्; उडैयाय्; अडियेन् उन् अडैक्कलमे.


6.

माऴै-मैप् पाविय कण्णियर् वन्-मत्तु इड उडैन्दु

ताऴियैप् पावु तयिर्बोल् तळर्न्देन्; तड-मलर्त्ताळ्

वाऴि; ऎप्पोदु वन्दु ऎन्नाळ् वणङ्गुवन् वल्विनैयेन्?

आऴियप्पा; उडैयाय्; अडियेन् उन् अडैक्कलमे.


7.

मिन्-कणिनार् नुडङ्गुम् इडैयार् वॆगुळि-वलैयिल् अगप्पट्टुप्

पुन्-कणनाय्प् पुरळ्वेनैप् पुरळामल् पुगुन्दरुळि,

ऎन्-कणिले अमुदु-ऊऱित् तित्तित्तु, ऎन् पिऴैक्कु इरङ्गुम्

अङ्गणने; उडैयाय्; अडियेन् उन् अडैक्कलमे.


8.

मावडु वगिर् अन्न कण्णि-पङ्गा; निन् मलरडिक्के

कूविडुवाय्, कुम्बिक्के इडुवाय्, निन् कुऱिप्पु अऱियेन्;

पाविडै आडु-कुऴल् पोल् करन्दु परन्ददु उळ्ळम्;

आ कॆडुवेन्; उडैयाय्; अडियेन् उन् अडैक्कलमे.


9.

पिऱिवु अऱिया अन्बर् निन् अरुट्-पॆय्-कऴल् ताळिणैक्कीऴ्

मऱिवु अऱियाच् चॆल्वम् वन्दु पॆट्रार्; उन्नै वन्दिप्पदोर्

नॆऱि अऱियेन्; निन्नैये अऱियेन्; निन्नैये अऱियुम्

अऱिवु अऱियेन्; उडैयाय्; अडियेन् उन् अडैक्कलमे.


10.

वऴङ्गुगिण्ड्राय्क्कु उन् अरुळ्-आरमुदत्तै वारिक्कॊण्डु

विऴुङ्गुगिण्ड्रेन्; विक्किनेन् विनैयेन् ऎन् विदियिन्मैयाल्;

तऴङ्गु-अरुम् तेन् अन्न तण्णीर् परुगत् तन्दु उय्यक्कॊळ्ळाय्;

अऴुङ्गुगिण्ड्रेन्; उडैयाय्; अडियेन् उन् अडैक्कलमे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరువాసగం - అడైక్కలప్ పత్తు - పదిగం 8.24

("కలవైప్ పాట్టు" - various meters)


1.

సెఴుక్-కమలత్ తిరళ్ అన నిన్ సేవడి సేర్న్దు అమైంద

పఴుత్త మనత్తు అడియర్ ఉడన్ పోయినర్; యాన్ పావియేన్;

పుఴుక్కణ్-ఉడైప్ పున్-కురంబైప్ పొల్లాక్ కల్వి ఞానం ఇలా

అఴుక్కు-మనత్తు అడియేన్, ఉడైయాయ్, ఉన్ అడైక్కలమే.


2.

వెఱుప్పనవే సెయ్యుం ఎన్ సిఱుమైయై నిన్ పెరుమైయినాల్

పొఱుప్పవనే; అరాప్ పూణ్బవనే; పొంగు గంగై సడైచ్

చెఱుప్పవనే; నిన్ తిరువరుళాల్ ఎన్ పిఱవియై వేర్

అఱుప్పవనే; ఉడైయాయ్; అడియేన్ ఉన్ అడైక్కలమే.


3.

పెరుం పెరుమాన్; ఎన్ పిఱవియై వేరఱుత్తుప్ పెరుం పిచ్చుత్

తరుం పెరుమాన్; సదురప్ పెరుమాన్; ఎన్ మనత్తినుళ్ళే

వరుం పెరుమాన్; మలరోన్ నెడు-మాల్ అఱియామల్ నిండ్ర

అరుం పెరుమాన్; ఉడైయాయ్; అడియేన్ ఉన్ అడైక్కలమే.


4.

పొఴిగిండ్ర తున్బప్ పుయల్ వెళ్ళత్తిల్ నిన్ కఴఱ్పుణై-కొండు

ఇఴిగిండ్ర అన్బర్గళ్ ఏఱినర్ వాన్; యాన్ ఇడర్క్కడల్వాయ్చ్

చుఴిసెండ్రు, మాదర్త్ తిరై పొరక్, కామచ్ చుఱవు ఎఱియ

అఴిగిండ్రనన్; ఉడైయాయ్; అడియేన్ ఉన్ అడైక్కలమే.


5.

సురుళ్-పురి కూఴైయర్ సూఴలిల్ పట్టు, ఉన్ తిఱం మఱందు ఇంగు

ఇరుళ్-పురి యాక్కైయిలే కిడందు ఎయ్త్తనన్; మైత్-తడంగణ్

వెరుళ్-పురి మాన్ అన్న నోక్కి-తన్ పంగ; విణ్ణోర్ పెరుమాన్;

అరుళ్-పురియాయ్; ఉడైయాయ్; అడియేన్ ఉన్ అడైక్కలమే.


6.

మాఴై-మైప్ పావియ కణ్ణియర్ వన్-మత్తు ఇడ ఉడైందు

తాఴియైప్ పావు తయిర్బోల్ తళర్న్దేన్; తడ-మలర్త్తాళ్

వాఴి; ఎప్పోదు వందు ఎన్నాళ్ వణంగువన్ వల్వినైయేన్?

ఆఴియప్పా; ఉడైయాయ్; అడియేన్ ఉన్ అడైక్కలమే.


7.

మిన్-కణినార్ నుడంగుం ఇడైయార్ వెగుళి-వలైయిల్ అగప్పట్టుప్

పున్-కణనాయ్ప్ పురళ్వేనైప్ పురళామల్ పుగుందరుళి,

ఎన్-కణిలే అముదు-ఊఱిత్ తిత్తిత్తు, ఎన్ పిఴైక్కు ఇరంగుం

అంగణనే; ఉడైయాయ్; అడియేన్ ఉన్ అడైక్కలమే.


8.

మావడు వగిర్ అన్న కణ్ణి-పంగా; నిన్ మలరడిక్కే

కూవిడువాయ్, కుంబిక్కే ఇడువాయ్, నిన్ కుఱిప్పు అఱియేన్;

పావిడై ఆడు-కుఴల్ పోల్ కరందు పరందదు ఉళ్ళం;

ఆ కెడువేన్; ఉడైయాయ్; అడియేన్ ఉన్ అడైక్కలమే.


9.

పిఱివు అఱియా అన్బర్ నిన్ అరుట్-పెయ్-కఴల్ తాళిణైక్కీఴ్

మఱివు అఱియాచ్ చెల్వం వందు పెట్రార్; ఉన్నై వందిప్పదోర్

నెఱి అఱియేన్; నిన్నైయే అఱియేన్; నిన్నైయే అఱియుం

అఱివు అఱియేన్; ఉడైయాయ్; అడియేన్ ఉన్ అడైక్కలమే.


10.

వఴంగుగిండ్రాయ్క్కు ఉన్ అరుళ్-ఆరముదత్తై వారిక్కొండు

విఴుంగుగిండ్రేన్; విక్కినేన్ వినైయేన్ ఎన్ విదియిన్మైయాల్;

తఴంగు-అరుం తేన్ అన్న తణ్ణీర్ పరుగత్ తందు ఉయ్యక్కొళ్ళాయ్;

అఴుంగుగిండ్రేన్; ఉడైయాయ్; అడియేన్ ఉన్ అడైక్కలమే.

================ ============


No comments:

Post a Comment