104) 5.60 - ஏதும் ஒன்றும் - திருமாற்பேறு - Edhum ondRum - Thirumarperu
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.60 – ஏதும் ஒன்றும் - திருமாற்பேறு - (திருக்குறுந்தொகை)
Thirunavukkarasar Thevaram - padhigam 5.60 – Edhum ondRum - Thirumarperu - (thirukkuRundhogai)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF:
https://drive.google.com/file/d/17-ppZWxduE_CxbZddWUma-1v4hUvf64B/view?usp=sharing
5.60 - Edhum ondRum - word by word meaning - English translation:
https://drive.google.com/file/d/1oUHEZzqZRcxPiOc7O55kTLD-0Yn7y7Je/view?usp=sharing
***
On
YouTube:
Tamil discussion: https://youtu.be/ONhZ7i6GMoM
English:
***
English translation (meaning) : https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS5_060.HTM
V.
Subramanian
================
This has verses in Tamil, English, Nagari, and Telugu scripts. Please print the pages you need.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.60 – திருமாற்பேறு - (திருக்குறுந்தொகை)
திருமாற்பேறு - இத்தலம் காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது. (இக்காலத்தில் திருமால்பூர் என்று வழங்கப்பெறுகின்றது). திருமால் ஈசனை வழிபட்ட தலம். (திருவீழிமிழலையில் திருமால் வழிபட்டு அருள்பெற்ற வரலாறு போன்றே இங்கும்).
Thirumarperu - This place is now known as Tirumalpur. It is about 22 km north of Kanchipuram on the way to Arakkonam.
Note: Only 8 songs are available in this padhigam. (2 songs are lost).
----------
Thirunavukkarasar visits "thirumarperu" and returns to Kanchipuram
1592 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 327
அந்நகரி லவ்வண்ண மமர்ந்துறையு நாளின்கண்
மன்னுதிரு மாற்பேறு வந்தணைந்து தமிழ்பாடிச்
சென்னிமிசை மதிபுனைவார் பதிபலவுஞ் சென்றிறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்தபெருங் காதலினால்.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.60 – திருமாற்பேறு - (திருக்குறுந்தொகை)
பாடல் எண் : 1
ஏது மொன்று மறிவில ராயினும்
ஓதி யஞ்செழுத் தும்முணர் வார்கட்குப்
பேத மின்றி யவரவ ருள்ளத்தே
மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.
பாடல் எண் : 2
அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள்
நிச்ச லுந்நினை யாய்வினை போயறக்
கச்ச மாவிட முண்டகண் டாவென
வைச்ச மாநிதி யாவர்மாற் பேறரே.
பாடல் எண் : 3
சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே.
பாடல் எண் : 4
இருந்து சொல்லுவன் கேண்மின்க ளேழைகாள்
அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினால்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்
மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே.
பாடல் எண் : 5
சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினால்
கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர்
மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே.
பாடல் எண் : 6
ஈட்டும் மாநிதி சால இழக்கினும்
வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங்
காட்டில் மாநட மாடுவாய் காவெனில்
வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே.
பாடல் எண் : 7
ஐய னேயர னேயென் றரற்றினால்
உய்ய லாமுல கத்தவர் பேணுவர்
செய்ய பாத மிரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே.
பாடல் எண் : 8
***** (This verse is lost) *****
பாடல் எண் : 9
***** (This verse is lost) *****
பாடல் எண் : 10
உந்திச் சென்று மலையை யெடுத்தவன்
சந்து தோளொடு தாளிற வூன்றினான்
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென
அந்த மில்லதோ ரின்பம் அணுகுமே.
==================== ===============
Word separated version:
Thirunavukkarasar visits "thirumarperu" and returns to Kanchipuram
1592 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 327
அந்நகரில் அவ்வண்ணம் அமர்ந்து உறையும் நாளின்-கண்
மன்னு திருமாற்பேறு வந்து-அணைந்து தமிழ் பாடிச்
சென்னிமிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால்.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.60 – திருமாற்பேறு - (திருக்குறுந்தொகை)
பாடல் எண் : 1
ஏதும்-ஒன்றும் அறிவிலர் ஆயினும்
ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்குப்
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே.
பாடல் எண் : 2
அச்சம் இல்லை, நெஞ்சே, அரன் நாமங்கள்
நிச்சலும் நினையாய், வினை போய்-அறக்;
"கச்ச மா-விடம் உண்ட கண்டா" என,
வைச்ச மா-நிதி ஆவர் மாற்பேறரே.
பாடல் எண் : 3
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்;
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்,
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே.
பாடல் எண் : 4
இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்;
அரும் தவம் தரும் அஞ்செழுத்து ஓதினால்,
பொருந்து நோய் பிணி போகத் துரப்பதோர்
மருந்தும் ஆகுவர் மன்னும் மாற்பேறரே.
பாடல் எண் : 5
சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்;
ஏற்றின்மேல் வருவான் கழல் ஏத்தினால்,
கூற்றை நீக்கிக், குறைவு அறுத்து, ஆள்வதோர்
மாற்று-இலாச் செம்பொன் ஆவர் மாற்பேறரே.
பாடல் எண் : 6
ஈட்டும் மா-நிதி சால இழக்கினும்,
வீட்டும் காலன் விரைய அழைக்கினும்,
"காட்டில் மா-நடம் இடுவாய்; கா" எனில்,
வாட்டம் தீர்க்கவும் வல்லர் மாற்பேறரே.
பாடல் எண் : 7
"ஐயனே; அரனே" என்று அரற்றினால்
உய்யலாம்; உலகத்தவர் பேணுவர்;
செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே.
பாடல் எண் : 8
***** (This verse is lost) *****
பாடல் எண் : 9
***** (This verse is lost) *****
பாடல் எண் : 10
உந்திச் சென்று மலையை எடுத்தவன்
சந்து தோளொடு தாள் இற ஊன்றினான்
மந்தி பாய்-பொழில் சூழும் மாற்பேறு என
அந்தம் இல்லதோர் இன்பம் அணுகுமே.
==================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Thirunavukkarasar visits "thirumarperu" and returns to Kanchipuram
1592 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 327
annagaril avvaṇṇam amarndu uṟaiyum nāḷin-kaṇ
mannu tirumāṟpēṟu vandu-aṇaindu tamiḻ pāḍic
cennimisai madi punaivār padi palavum seṇḍru iṟaiñjit
tunninār kāñjiyinait toḍarnda perum kādalināl.
tirunāvukkarasar tēvāram - padigam 5.60 – tirumāṟpēṟu - (tirukkuṟundogai)
pāḍal eṇ : 1
ēdum-oṇḍrum aṟivilar āyinum
ōdi añjeḻuttum uṇarvārgaṭkup
bēdam iṇḍri avaravar uḷḷattē
mādum tāmum magiḻvar māṟpēṟarē.
pāḍal eṇ : 2
accam illai, neñjē, aran nāmaṅgaḷ
niccalum ninaiyāy, vinai pōy-aṟak;
"kacca mā-viḍam uṇḍa kaṇḍā" ena,
vaicca mā-nidi āvar māṟpēṟarē.
pāḍal eṇ : 3
sāttiram pala pēsum saḻakkargāḷ;
gōttiramum kulamum koṇḍu en seyvīr?
pāttiram sivam eṇḍru paṇidirēl,
māttiraikkuḷ aruḷum māṟpēṟarē.
pāḍal eṇ : 4
irundu solluvan kēṇmingaḷ ēḻaigāḷ;
arum tavam tarum añjeḻuttu ōdināl,
porundu nōy piṇi pōgat turappadōr
marundum āguvar mannum māṟpēṟarē.
pāḍal eṇ : 5
sāṭric colluvan kēṇmin taraṇiyīr;
ēṭrinmēl varuvān kaḻal ēttināl,
kūṭrai nīkkik, kuṟaivu aṟuttu, āḷvadōr
māṭru-ilāc cembon āvar māṟpēṟarē.
pāḍal eṇ : 6
īṭṭum mā-nidi sāla iḻakkinum,
vīṭṭum kālan viraiya aḻaikkinum,
"kāṭṭil mā-naḍam iḍuvāy; kā" enil,
vāṭṭam tīrkkavum vallar māṟpēṟarē.
pāḍal eṇ : 7
"aiyanē; aranē" eṇḍru araṭrināl
uyyalām; ulagattavar pēṇuvar;
seyya pādam iraṇḍum ninaiyavē
vaiyam āḷavum vaippar māṟpēṟarē.
pāḍal eṇ : 8
***** (This verse is lost) *****
pāḍal eṇ : 9
***** (This verse is lost) *****
pāḍal eṇ : 10
undic ceṇḍru malaiyai eḍuttavan
sandu tōḷoḍu tāḷ iṟa ūṇḍrinān
mandi pāy-poḻil sūḻum māṟpēṟu ena
andam illadōr inbam aṇugumē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
Thirunavukkarasar visits "thirumarperu" and returns to Kanchipuram
1592 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 327
अन्नगरिल् अव्वण्णम् अमर्न्दु उऱैयुम् नाळिन्-कण्
मन्नु तिरुमाऱ्पेऱु वन्दु-अणैन्दु तमिऴ् पाडिच्
चॆन्निमिसै मदि पुनैवार् पदि पलवुम् सॆण्ड्रु इऱैञ्जित्
तुन्निनार् काञ्जियिनैत् तॊडर्न्द पॆरुम् कादलिनाल्.
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 5.60 – तिरुमाऱ्पेऱु - (तिरुक्कुऱुन्दॊगै)
पाडल् ऎण् : 1
एदुम्-ऒण्ड्रुम् अऱिविलर् आयिनुम्
ओदि अञ्जॆऴुत्तुम् उणर्वार्गट्कुप्
बेदम् इण्ड्रि अवरवर् उळ्ळत्ते
मादुम् तामुम् मगिऴ्वर् माऱ्पेऱरे.
पाडल् ऎण् : 2
अच्चम् इल्लै, नॆञ्जे, अरन् नामङ्गळ्
निच्चलुम् निनैयाय्, विनै पोय्-अऱक्;
"कच्च मा-विडम् उण्ड कण्डा" ऎन,
वैच्च मा-निदि आवर् माऱ्पेऱरे.
पाडल् ऎण् : 3
सात्तिरम् पल पेसुम् सऴक्कर्गाळ्;
गोत्तिरमुम् कुलमुम् कॊण्डु ऎन् सॆय्वीर्?
पात्तिरम् सिवम् ऎण्ड्रु पणिदिरेल्,
मात्तिरैक्कुळ् अरुळुम् माऱ्पेऱरे.
पाडल् ऎण् : 4
इरुन्दु सॊल्लुवन् केण्मिन्गळ् एऴैगाळ्;
अरुम् तवम् तरुम् अञ्जॆऴुत्तु ओदिनाल्,
पॊरुन्दु नोय् पिणि पोगत् तुरप्पदोर्
मरुन्दुम् आगुवर् मन्नुम् माऱ्पेऱरे.
पाडल् ऎण् : 5
साट्रिच् चॊल्लुवन् केण्मिन् तरणियीर्;
एट्रिन्मेल् वरुवान् कऴल् एत्तिनाल्,
कूट्रै नीक्किक्, कुऱैवु अऱुत्तु, आळ्वदोर्
माट्रु-इलाच् चॆम्बॊन् आवर् माऱ्पेऱरे.
पाडल् ऎण् : 6
ईट्टुम् मा-निदि साल इऴक्किनुम्,
वीट्टुम् कालन् विरैय अऴैक्किनुम्,
"काट्टिल् मा-नडम् इडुवाय्; का" ऎनिल्,
वाट्टम् तीर्क्कवुम् वल्लर् माऱ्पेऱरे.
पाडल् ऎण् : 7
"ऐयने; अरने" ऎण्ड्रु अरट्रिनाल्
उय्यलाम्; उलगत्तवर् पेणुवर्;
सॆय्य पादम् इरण्डुम् निनैयवे
वैयम् आळवुम् वैप्पर् माऱ्पेऱरे.
पाडल् ऎण् : 8
***** (This verse is lost) *****
पाडल् ऎण् : 9
***** (This verse is lost) *****
पाडल् ऎण् : 10
उन्दिच् चॆण्ड्रु मलैयै ऎडुत्तवन्
सन्दु तोळॊडु ताळ् इऱ ऊण्ड्रिनान्
मन्दि पाय्-पॊऴिल् सूऴुम् माऱ्पेऱु ऎन
अन्दम् इल्लदोर् इन्बम् अणुगुमे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Thirunavukkarasar visits "thirumarperu" and returns to Kanchipuram
1592 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 327
అన్నగరిల్ అవ్వణ్ణం అమర్న్దు ఉఱైయుం నాళిన్-కణ్
మన్ను తిరుమాఱ్పేఱు వందు-అణైందు తమిఴ్ పాడిచ్
చెన్నిమిసై మది పునైవార్ పది పలవుం సెండ్రు ఇఱైంజిత్
తున్నినార్ కాంజియినైత్ తొడర్న్ద పెరుం కాదలినాల్.
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 5.60 – తిరుమాఱ్పేఱు - (తిరుక్కుఱుందొగై)
పాడల్ ఎణ్ : 1
ఏదుం-ఒండ్రుం అఱివిలర్ ఆయినుం
ఓది అంజెఴుత్తుం ఉణర్వార్గట్కుప్
బేదం ఇండ్రి అవరవర్ ఉళ్ళత్తే
మాదుం తాముం మగిఴ్వర్ మాఱ్పేఱరే.
పాడల్ ఎణ్ : 2
అచ్చం ఇల్లై, నెంజే, అరన్ నామంగళ్
నిచ్చలుం నినైయాయ్, వినై పోయ్-అఱక్;
"కచ్చ మా-విడం ఉండ కండా" ఎన,
వైచ్చ మా-నిది ఆవర్ మాఱ్పేఱరే.
పాడల్ ఎణ్ : 3
సాత్తిరం పల పేసుం సఴక్కర్గాళ్;
గోత్తిరముం కులముం కొండు ఎన్ సెయ్వీర్?
పాత్తిరం సివం ఎండ్రు పణిదిరేల్,
మాత్తిరైక్కుళ్ అరుళుం మాఱ్పేఱరే.
పాడల్ ఎణ్ : 4
ఇరుందు సొల్లువన్ కేణ్మిన్గళ్ ఏఴైగాళ్;
అరుం తవం తరుం అంజెఴుత్తు ఓదినాల్,
పొరుందు నోయ్ పిణి పోగత్ తురప్పదోర్
మరుందుం ఆగువర్ మన్నుం మాఱ్పేఱరే.
పాడల్ ఎణ్ : 5
సాట్రిచ్ చొల్లువన్ కేణ్మిన్ తరణియీర్;
ఏట్రిన్మేల్ వరువాన్ కఴల్ ఏత్తినాల్,
కూట్రై నీక్కిక్, కుఱైవు అఱుత్తు, ఆళ్వదోర్
మాట్రు-ఇలాచ్ చెంబొన్ ఆవర్ మాఱ్పేఱరే.
పాడల్ ఎణ్ : 6
ఈట్టుం మా-నిది సాల ఇఴక్కినుం,
వీట్టుం కాలన్ విరైయ అఴైక్కినుం,
"కాట్టిల్ మా-నడం ఇడువాయ్; కా" ఎనిల్,
వాట్టం తీర్క్కవుం వల్లర్ మాఱ్పేఱరే.
పాడల్ ఎణ్ : 7
"ఐయనే; అరనే" ఎండ్రు అరట్రినాల్
ఉయ్యలాం; ఉలగత్తవర్ పేణువర్;
సెయ్య పాదం ఇరండుం నినైయవే
వైయం ఆళవుం వైప్పర్ మాఱ్పేఱరే.
పాడల్ ఎణ్ : 8
***** (This verse is lost) *****
పాడల్ ఎణ్ : 9
***** (This verse is lost) *****
పాడల్ ఎణ్ : 10
ఉందిచ్ చెండ్రు మలైయై ఎడుత్తవన్
సందు తోళొడు తాళ్ ఇఱ ఊండ్రినాన్
మంది పాయ్-పొఴిల్ సూఴుం మాఱ్పేఱు ఎన
అందం ఇల్లదోర్ ఇన్బం అణుగుమే.
================ ============