103) 6.95 - அப்பன்நீ அம்மைநீ - appan nee ammai nee
Thirunavukkarasar Thevaram - padhigam 6.95 – appan nee ammai nee
Here are the links to verses and audio of this padhigam's discussion:
PDF: https://drive.google.com/file/d/1CqGfyXe4YK6RNgeOUTaIVvouSAY_bKLq/view?usp=sharing
***
On YouTube:
Tamil discussion:
English:
***
English translation (meaning) : https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS6_095.HTM
================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
http://www.thevaaram.org/thirumurai_1/ani/aa062.htm
ஆறாம் திருமுறை - ஆசியுரை - தருமை ஆதீன 26 ஆவது குருமகா சந்நிதானம்:
95ஆம் பதிகம்: தனித் திருத்தாண்டகம் - "அப்பன் நீ, அம்மை நீ" எனத் தொடங்குவது. சிவபெருமானின் முழுமுதல் தன்மையாகிய தனித் தன்மை பேசப் பெறுதலால் இப்பெயர் பெற்றது எனலாம்.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.95 – பொது - (தனித் திருத்தாண்டகம்)
(எண்சீர் விருத்தம் - தாண்டகம் - meter)
பாடல் எண் : 1
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
.. அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
.. ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
.. துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
.. இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.
பாடல் எண் : 2
வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
.. வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
.. எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
.. அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
.. செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.
பாடல் எண் : 3
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
.. அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
.. உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
.. பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
.. காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.
பாடல் எண் : 4
நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ
.. நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
.. சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
.. நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்
.. கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.
பாடல் எண் : 5
திருக்கோயி லில்லாத திருவி லூரும்
.. திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
.. பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
.. விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும்
.. அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.
பாடல் எண் : 6
திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
.. தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
.. உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
.. அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
.. பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.
பாடல் எண் : 7
நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
.. நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
.. மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
.. பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
.. ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே.
பாடல் எண் : 8
அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
.. அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
.. எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
.. பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
.. எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.
பாடல் எண் : 9
குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
.. குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
.. நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்
.. வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
.. என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.
பாடல் எண் : 10
சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
.. தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
.. மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
.. ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
.. அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.
==================
Word separated version:
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.95 – பொது - (தனித் திருத்தாண்டகம்)
(எண்சீர் விருத்தம் - தாண்டகம் - meter)
பாடல் எண் : 1
அப்பன் நீ; அம்மை நீ; ஐயனும் நீ;
.. அன்பு உடைய மாமனும் மாமியும் நீ;
ஒப்பு உடைய மாதரும் ஒண்-பொருளும் நீ;
.. ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ;
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ;
.. துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ;
இப்பொன் நீ; இம்மணி நீ; இம்முத்தும் நீ;
.. இறைவன் நீ; ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.
பாடல் எண் : 2
வெம்ப வருகிற்பது-அன்று கூற்றம் நம்-மேல்;
.. வெய்ய வினைப்-பகையும் பைய நையும்;
எம் பரிவும் தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்;
.. எங்கு எழில் என் ஞாயிறு? எளியோம் அல்லோம்;
அம் பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி;
.. அனல்-ஆடி; ஆன்-அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள வண்ணர்; செங்குன்ற வண்ணர்;
.. செவ்வான வண்ணர்; என் சிந்தையாரே.
பாடல் எண் : 3
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே?
.. அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே?
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே?
.. உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே?
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே?
.. பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே?
காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே?
.. காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே?
பாடல் எண் : 4
நற்பதத்தார் நற்பதமே; ஞான மூர்த்தீ;
.. நலஞ்சுடரே; நால்வேதத்து அப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற
.. சொலற்கு அரிய சூழலாய்; இது உன் தன்மை;
நிற்பது ஒத்து நிலையிலா நெஞ்சம் தன்னுள்
.. நிலாவாத புலால்-உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே; யான் உன்னை விடுவேன் அல்லேன்;
.. கனக-மா மணி-நிறத்து எம் கடவுளானே.
பாடல் எண் : 5
திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும்,
.. திருவெண்ணீறு அணியாத திருவில் ஊரும்,
பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும்,
.. பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்,
விருப்போடு வெண்-சங்கம் ஊதா ஊரும்,
.. விதானமும் வெண்-கொடியும் இல்லா ஊரும்,
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும்,
.. அவையெல்லாம் ஊர் அல்ல, அடவி காடே.
(திருவிலூரும் = திரு இல் ஊரும்)
பாடல் எண் : 6
திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்,
.. தீவண்ணர் திறம் ஒரு-கால் பேசார் ஆகில்,
ஒரு-காலும் திருக்கோயில் சூழார் ஆகில்,
.. உண்பதன்-முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அரு-நோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில்,
.. அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்,
பெரு-நோய்கள் மிக நலியப், பெயர்த்தும் செத்தும்
.. பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.
பாடல் எண் : 7
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்;
.. நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்தும் ஆனாய்;
மன் ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்;
.. மறை-நான்கும் ஆனாய்; ஆறங்கம் ஆனாய்;
பொன் ஆனாய்; மணி ஆனாய்; போகம் ஆனாய்;
.. பூமிமேல் புகழ்-தக்க பொருளே, உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்,
.. ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?
பாடல் எண் : 8
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்;
.. அருள்-நோக்கில் தீர்த்த-நீர் ஆட்டிக் கொண்டாய்;
எத்தனையும் அரியை நீ; எளியை ஆனாய்;
.. எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய்;
பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன்
.. பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய்-அன்றே;
இத்தனையும் எம் பரமோ? ஐய ஐயோ!
.. எம்பெருமான் திருக்-கருணை இருந்தவாறே.
பாடல் எண் : 9
குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்;
.. குற்றமே பெரிதுடையேன்; கோலமாய
நலம் பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்;
.. நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற
விலங்கு அல்லேன்; விலங்கு அல்லாதொழிந்தேன் அல்லேன்;
.. வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்;
இலம் பொல்லேன்; இரப்பதே ஈய மாட்டேன்;
.. என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே?
பாடல் எண் : 10
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து,
.. தரணியொடு வான் ஆளத் தருவரேனும்,
மங்குவார்-அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்,
.. மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்;
அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய்,
.. ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்,
கங்கை வார்-சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்,
.. அவர்-கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.
===================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tirunāvukkarasar tēvāram - padigam 6.95 – podu - (tanit tiruttāṇḍagam)
(eṇsīr viruttam - tāṇḍagam - meter)
pāḍal eṇ : 1
appan nī; ammai nī; aiyanum nī;
.. anbu uḍaiya māmanum māmiyum nī;
oppu uḍaiya mādarum oṇ-poruḷum nī;
.. oru kulamum suṭramum ōr ūrum nī;
tuyppanavum uyppanavum tōṭruvāy nī;
.. tuṇaiyāy en neñjam tuṟappippāy nī;
ippon nī; immaṇi nī; immuttum nī;
.. iṟaivan nī; ēṟu ūrnda selvan nīyē.
pāḍal eṇ : 2
vemba varugiṟpadu-aṇḍru kūṭram nam-mēl;
.. veyya vinaip-pagaiyum paiya naiyum;
em parivum tīrndōm; iḍukkaṇ illōm;
.. eṅgu eḻil en ñāyiṟu? eḷiyōm allōm;
am pavaḷac ceñjaḍaimēl āṟu sūḍi;
.. anal-āḍi; ān-añjum āṭṭu uganda
sembavaḷa vaṇṇar; seṅguṇḍra vaṇṇar;
.. sevvāna vaṇṇar; en sindaiyārē.
pāḍal eṇ : 3
āṭṭuvittāl āroruvar āḍādārē?
.. aḍakkuvittāl āroruvar aḍaṅgādārē?
ōṭṭuvittāl āroruvar ōḍādārē?
.. uruguvittāl āroruvar urugādārē?
pāṭṭuvittāl āroruvar pāḍādārē?
.. paṇivittāl āroruvar paṇiyādārē?
kāṭṭuvittāl āroruvar kāṇādārē?
.. kāṇbār ār kaṇṇudalāy kāṭṭākkālē?
pāḍal eṇ : 4
naṟpadattār naṟpadamē; ñāna mūrttī;
.. nalañjuḍarē; nālvēdattu appāl niṇḍra
soṟpadattār soṟpadamum kaḍandu niṇḍra
.. solaṟku ariya sūḻalāy; idu un tanmai;
niṟpadu ottu nilaiyilā neñjam tannuḷ
.. nilāvāda pulāl-uḍambē pugundu niṇḍra
kaṟpagamē; yān unnai viḍuvēn allēn;
.. kanaga-mā maṇi-niṟattu em kaḍavuḷānē.
pāḍal eṇ : 5
tirukkōyil illāda tiruvil ūrum,
.. tiruveṇṇīṟu aṇiyāda tiruvil ūrum,
parukkōḍip pattimaiyāl pāḍā ūrum,
.. pāṅginoḍu pala taḷigaḷ illā ūrum,
viruppōḍu veṇ-saṅgam ūdā ūrum,
.. vidānamum veṇ-koḍiyum illā ūrum,
aruppōḍu malar paṟittu iṭṭu uṇṇā ūrum,
.. avaiyellām ūr alla, aḍavi kāḍē.
(tiruvilūrum = tiru il ūrum)
pāḍal eṇ : 6
tirunāmam añjeḻuttum seppār āgil,
.. tīvaṇṇar tiṟam oru-kāl pēsār āgil,
oru-kālum tirukkōyil sūḻār āgil,
.. uṇbadan-mun malar paṟittu iṭṭu uṇṇār āgil,
aru-nōygaḷ keḍa veṇṇīṟu aṇiyār āgil,
.. aḷi aṭrār piṟandavāṟu ēdō ennil,
peru-nōygaḷ miga naliyap, peyarttum settum
.. piṟappadaṟkē toḻilāgi iṟakkiṇḍrārē.
pāḍal eṇ : 7
nin āvār piṟar iṇḍri nīyē ānāy;
.. ninaippārgaḷ manattukkōr vittum ānāy;
man ānāy; mannavarkku ōr amudam ānāy;
.. maṟai-nāngum ānāy; āṟaṅgam ānāy;
pon ānāy; maṇi ānāy; bōgam ānāy;
.. būmimēl pugaḻ-takka poruḷē, unnai
en ānāy en ānāy ennin allāl,
.. ēḻaiyēn en solli ēttugēnē?
pāḍal eṇ : 8
attā un aḍiyēnai anbāl ārttāy;
.. aruḷ-nōkkil tīrtta-nīr āṭṭik koṇḍāy;
ettanaiyum ariyai nī; eḷiyai ānāy;
.. enai āṇḍugoṇḍu iraṅgi ēṇḍrugoṇḍāy;
pittanēn, pēdaiyēn, pēyēn, nāyēn
.. piḻaittanagaḷ attanaiyum poṟuttāy-aṇḍrē;
ittanaiyum em paramō? aiya aiyō!
.. emberumān tiruk-karuṇai irundavāṟē.
pāḍal eṇ : 9
kulam pollēn; guṇam pollēn; kuṟiyum pollēn;
.. kuṭramē periduḍaiyēn; kōlamāya
nalam pollēn; nān pollēn; ñāni allēn;
.. nallārōḍu isaindilēn; naḍuvē niṇḍra
vilaṅgu allēn; vilaṅgu allādoḻindēn allēn;
.. veṟuppanavum migap peridum pēsa vallēn;
ilam pollēn; irappadē īya māṭṭēn;
.. en seyvān tōṇḍrinēn ēḻaiyēnē?
pāḍal eṇ : 10
saṅganidi padumanidi iraṇḍum tandu,
.. taraṇiyoḍu vān āḷat taruvarēnum,
maṅguvār-avar selvam madippōm allōm,
.. mādēvarkku ēgāndar allār āgil;
aṅgamelām kuṟaindu aḻugu toḻunōyarāy,
.. ā urittut tiṇḍru uḻalum pulaiyarēnum,
gaṅgai vār-saḍaik karandārkku anbar āgil,
.. avar-kaṇḍīr nām vaṇaṅgum kaḍavuḷārē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 6.95 – पॊदु - (तनित् तिरुत्ताण्डगम्)
(ऎण्सीर् विरुत्तम् - ताण्डगम् - meter)
पाडल् ऎण् : 1
अप्पन् नी; अम्मै नी; ऐयनुम् नी;
.. अन्बु उडैय मामनुम् मामियुम् नी;
ऒप्पु उडैय मादरुम् ऒण्-पॊरुळुम् नी;
.. ऒरु कुलमुम् सुट्रमुम् ओर् ऊरुम् नी;
तुय्प्पनवुम् उय्प्पनवुम् तोट्रुवाय् नी;
.. तुणैयाय् ऎन् नॆञ्जम् तुऱप्पिप्पाय् नी;
इप्पॊन् नी; इम्मणि नी; इम्मुत्तुम् नी;
.. इऱैवन् नी; एऱु ऊर्न्द सॆल्वन् नीये.
पाडल् ऎण् : 2
वॆम्ब वरुगिऱ्पदु-अण्ड्रु कूट्रम् नम्-मेल्;
.. वॆय्य विनैप्-पगैयुम् पैय नैयुम्;
ऎम् परिवुम् तीर्न्दोम्; इडुक्कण् इल्लोम्;
.. ऎङ्गु ऎऴिल् ऎन् ञायिऱु? ऎळियोम् अल्लोम्;
अम् पवळच् चॆञ्जडैमेल् आऱु सूडि;
.. अनल्-आडि; आन्-अञ्जुम् आट्टु उगन्द
सॆम्बवळ वण्णर्; सॆङ्गुण्ड्र वण्णर्;
.. सॆव्वान वण्णर्; ऎन् सिन्दैयारे.
पाडल् ऎण् : 3
आट्टुवित्ताल् आरॊरुवर् आडादारे?
.. अडक्कुवित्ताल् आरॊरुवर् अडङ्गादारे?
ओट्टुवित्ताल् आरॊरुवर् ओडादारे?
.. उरुगुवित्ताल् आरॊरुवर् उरुगादारे?
पाट्टुवित्ताल् आरॊरुवर् पाडादारे?
.. पणिवित्ताल् आरॊरुवर् पणियादारे?
काट्टुवित्ताल् आरॊरुवर् काणादारे?
.. काण्बार् आर् कण्णुदलाय् काट्टाक्काले?
पाडल् ऎण् : 4
नऱ्पदत्तार् नऱ्पदमे; ञान मूर्त्ती;
.. नलञ्जुडरे; नाल्वेदत्तु अप्पाल् निण्ड्र
सॊऱ्पदत्तार् सॊऱ्पदमुम् कडन्दु निण्ड्र
.. सॊलऱ्कु अरिय सूऴलाय्; इदु उन् तन्मै;
निऱ्पदु ऒत्तु निलैयिला नॆञ्जम् तन्नुळ्
.. निलावाद पुलाल्-उडम्बे पुगुन्दु निण्ड्र
कऱ्पगमे; यान् उन्नै विडुवेन् अल्लेन्;
.. कनग-मा मणि-निऱत्तु ऎम् कडवुळाने.
पाडल् ऎण् : 5
तिरुक्कोयिल् इल्लाद तिरुविल् ऊरुम्,
.. तिरुवॆण्णीऱु अणियाद तिरुविल् ऊरुम्,
परुक्कोडिप् पत्तिमैयाल् पाडा ऊरुम्,
.. पाङ्गिनॊडु पल तळिगळ् इल्ला ऊरुम्,
विरुप्पोडु वॆण्-सङ्गम् ऊदा ऊरुम्,
.. विदानमुम् वॆण्-कॊडियुम् इल्ला ऊरुम्,
अरुप्पोडु मलर् पऱित्तु इट्टु उण्णा ऊरुम्,
.. अवैयॆल्लाम् ऊर् अल्ल, अडवि काडे.
(तिरुविलूरुम् = तिरु इल् ऊरुम्)
पाडल् ऎण् : 6
तिरुनामम् अञ्जॆऴुत्तुम् सॆप्पार् आगिल्,
.. तीवण्णर् तिऱम् ऒरु-काल् पेसार् आगिल्,
ऒरु-कालुम् तिरुक्कोयिल् सूऴार् आगिल्,
.. उण्बदन्-मुन् मलर् पऱित्तु इट्टु उण्णार् आगिल्,
अरु-नोय्गळ् कॆड वॆण्णीऱु अणियार् आगिल्,
.. अळि अट्रार् पिऱन्दवाऱु एदो ऎन्निल्,
पॆरु-नोय्गळ् मिग नलियप्, पॆयर्त्तुम् सॆत्तुम्
.. पिऱप्पदऱ्के तॊऴिलागि इऱक्किण्ड्रारे.
पाडल् ऎण् : 7
निन् आवार् पिऱर् इण्ड्रि नीये आनाय्;
.. निनैप्पार्गळ् मनत्तुक्कोर् वित्तुम् आनाय्;
मन् आनाय्; मन्नवर्क्कु ओर् अमुदम् आनाय्;
.. मऱै-नान्गुम् आनाय्; आऱङ्गम् आनाय्;
पॊन् आनाय्; मणि आनाय्; बोगम् आनाय्;
.. बूमिमेल् पुगऴ्-तक्क पॊरुळे, उन्नै
ऎन् आनाय् ऎन् आनाय् ऎन्निन् अल्लाल्,
.. एऴैयेन् ऎन् सॊल्लि एत्तुगेने?
पाडल् ऎण् : 8
अत्ता उन् अडियेनै अन्बाल् आर्त्ताय्;
.. अरुळ्-नोक्किल् तीर्त्त-नीर् आट्टिक् कॊण्डाय्;
ऎत्तनैयुम् अरियै नी; ऎळियै आनाय्;
.. ऎनै आण्डुगॊण्डु इरङ्गि एण्ड्रुगॊण्डाय्;
पित्तनेन्, पेदैयेन्, पेयेन्, नायेन्
.. पिऴैत्तनगळ् अत्तनैयुम् पॊऱुत्ताय्-अण्ड्रे;
इत्तनैयुम् ऎम् परमो? ऐय ऐयो!
.. ऎम्बॆरुमान् तिरुक्-करुणै इरुन्दवाऱे.
पाडल् ऎण् : 9
कुलम् पॊल्लेन्; गुणम् पॊल्लेन्; कुऱियुम् पॊल्लेन्;
.. कुट्रमे पॆरिदुडैयेन्; कोलमाय
नलम् पॊल्लेन्; नान् पॊल्लेन्; ञानि अल्लेन्;
.. नल्लारोडु इसैन्दिलेन्; नडुवे निण्ड्र
विलङ्गु अल्लेन्; विलङ्गु अल्लादॊऴिन्देन् अल्लेन्;
.. वॆऱुप्पनवुम् मिगप् पॆरिदुम् पेस वल्लेन्;
इलम् पॊल्लेन्; इरप्पदे ईय माट्टेन्;
.. ऎन् सॆय्वान् तोण्ड्रिनेन् एऴैयेने?
पाडल् ऎण् : 10
सङ्गनिदि पदुमनिदि इरण्डुम् तन्दु,
.. तरणियॊडु वान् आळत् तरुवरेनुम्,
मङ्गुवार्-अवर् सॆल्वम् मदिप्पोम् अल्लोम्,
.. मादेवर्क्कु एगान्दर् अल्लार् आगिल्;
अङ्गमॆलाम् कुऱैन्दु अऴुगु तॊऴुनोयराय्,
.. आ उरित्तुत् तिण्ड्रु उऴलुम् पुलैयरेनुम्,
गङ्गै वार्-सडैक् करन्दार्क्कु अन्बर् आगिल्,
.. अवर्-कण्डीर् नाम् वणङ्गुम् कडवुळारे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 6.95 – పొదు - (తనిత్ తిరుత్తాండగం)
(ఎణ్సీర్ విరుత్తం - తాండగం - meter)
పాడల్ ఎణ్ : 1
అప్పన్ నీ; అమ్మై నీ; ఐయనుం నీ;
.. అన్బు ఉడైయ మామనుం మామియుం నీ;
ఒప్పు ఉడైయ మాదరుం ఒణ్-పొరుళుం నీ;
.. ఒరు కులముం సుట్రముం ఓర్ ఊరుం నీ;
తుయ్ప్పనవుం ఉయ్ప్పనవుం తోట్రువాయ్ నీ;
.. తుణైయాయ్ ఎన్ నెంజం తుఱప్పిప్పాయ్ నీ;
ఇప్పొన్ నీ; ఇమ్మణి నీ; ఇమ్ముత్తుం నీ;
.. ఇఱైవన్ నీ; ఏఱు ఊర్న్ద సెల్వన్ నీయే.
పాడల్ ఎణ్ : 2
వెంబ వరుగిఱ్పదు-అండ్రు కూట్రం నం-మేల్;
.. వెయ్య వినైప్-పగైయుం పైయ నైయుం;
ఎం పరివుం తీర్న్దోం; ఇడుక్కణ్ ఇల్లోం;
.. ఎంగు ఎఴిల్ ఎన్ ఞాయిఱు? ఎళియోం అల్లోం;
అం పవళచ్ చెంజడైమేల్ ఆఱు సూడి;
.. అనల్-ఆడి; ఆన్-అంజుం ఆట్టు ఉగంద
సెంబవళ వణ్ణర్; సెంగుండ్ర వణ్ణర్;
.. సెవ్వాన వణ్ణర్; ఎన్ సిందైయారే.
పాడల్ ఎణ్ : 3
ఆట్టువిత్తాల్ ఆరొరువర్ ఆడాదారే?
.. అడక్కువిత్తాల్ ఆరొరువర్ అడంగాదారే?
ఓట్టువిత్తాల్ ఆరొరువర్ ఓడాదారే?
.. ఉరుగువిత్తాల్ ఆరొరువర్ ఉరుగాదారే?
పాట్టువిత్తాల్ ఆరొరువర్ పాడాదారే?
.. పణివిత్తాల్ ఆరొరువర్ పణియాదారే?
కాట్టువిత్తాల్ ఆరొరువర్ కాణాదారే?
.. కాణ్బార్ ఆర్ కణ్ణుదలాయ్ కాట్టాక్కాలే?
పాడల్ ఎణ్ : 4
నఱ్పదత్తార్ నఱ్పదమే; ఞాన మూర్త్తీ;
.. నలంజుడరే; నాల్వేదత్తు అప్పాల్ నిండ్ర
సొఱ్పదత్తార్ సొఱ్పదముం కడందు నిండ్ర
.. సొలఱ్కు అరియ సూఴలాయ్; ఇదు ఉన్ తన్మై;
నిఱ్పదు ఒత్తు నిలైయిలా నెంజం తన్నుళ్
.. నిలావాద పులాల్-ఉడంబే పుగుందు నిండ్ర
కఱ్పగమే; యాన్ ఉన్నై విడువేన్ అల్లేన్;
.. కనగ-మా మణి-నిఱత్తు ఎం కడవుళానే.
పాడల్ ఎణ్ : 5
తిరుక్కోయిల్ ఇల్లాద తిరువిల్ ఊరుం,
.. తిరువెణ్ణీఱు అణియాద తిరువిల్ ఊరుం,
పరుక్కోడిప్ పత్తిమైయాల్ పాడా ఊరుం,
.. పాంగినొడు పల తళిగళ్ ఇల్లా ఊరుం,
విరుప్పోడు వెణ్-సంగం ఊదా ఊరుం,
.. విదానముం వెణ్-కొడియుం ఇల్లా ఊరుం,
అరుప్పోడు మలర్ పఱిత్తు ఇట్టు ఉణ్ణా ఊరుం,
.. అవైయెల్లాం ఊర్ అల్ల, అడవి కాడే.
(తిరువిలూరుం = తిరు ఇల్ ఊరుం)
పాడల్ ఎణ్ : 6
తిరునామం అంజెఴుత్తుం సెప్పార్ ఆగిల్,
.. తీవణ్ణర్ తిఱం ఒరు-కాల్ పేసార్ ఆగిల్,
ఒరు-కాలుం తిరుక్కోయిల్ సూఴార్ ఆగిల్,
.. ఉణ్బదన్-మున్ మలర్ పఱిత్తు ఇట్టు ఉణ్ణార్ ఆగిల్,
అరు-నోయ్గళ్ కెడ వెణ్ణీఱు అణియార్ ఆగిల్,
.. అళి అట్రార్ పిఱందవాఱు ఏదో ఎన్నిల్,
పెరు-నోయ్గళ్ మిగ నలియప్, పెయర్త్తుం సెత్తుం
.. పిఱప్పదఱ్కే తొఴిలాగి ఇఱక్కిండ్రారే.
పాడల్ ఎణ్ : 7
నిన్ ఆవార్ పిఱర్ ఇండ్రి నీయే ఆనాయ్;
.. నినైప్పార్గళ్ మనత్తుక్కోర్ విత్తుం ఆనాయ్;
మన్ ఆనాయ్; మన్నవర్క్కు ఓర్ అముదం ఆనాయ్;
.. మఱై-నాన్గుం ఆనాయ్; ఆఱంగం ఆనాయ్;
పొన్ ఆనాయ్; మణి ఆనాయ్; బోగం ఆనాయ్;
.. బూమిమేల్ పుగఴ్-తక్క పొరుళే, ఉన్నై
ఎన్ ఆనాయ్ ఎన్ ఆనాయ్ ఎన్నిన్ అల్లాల్,
.. ఏఴైయేన్ ఎన్ సొల్లి ఏత్తుగేనే?
పాడల్ ఎణ్ : 8
అత్తా ఉన్ అడియేనై అన్బాల్ ఆర్త్తాయ్;
.. అరుళ్-నోక్కిల్ తీర్త్త-నీర్ ఆట్టిక్ కొండాయ్;
ఎత్తనైయుం అరియై నీ; ఎళియై ఆనాయ్;
.. ఎనై ఆండుగొండు ఇరంగి ఏండ్రుగొండాయ్;
పిత్తనేన్, పేదైయేన్, పేయేన్, నాయేన్
.. పిఴైత్తనగళ్ అత్తనైయుం పొఱుత్తాయ్-అండ్రే;
ఇత్తనైయుం ఎం పరమో? ఐయ ఐయో!
.. ఎంబెరుమాన్ తిరుక్-కరుణై ఇరుందవాఱే.
పాడల్ ఎణ్ : 9
కులం పొల్లేన్; గుణం పొల్లేన్; కుఱియుం పొల్లేన్;
.. కుట్రమే పెరిదుడైయేన్; కోలమాయ
నలం పొల్లేన్; నాన్ పొల్లేన్; ఞాని అల్లేన్;
.. నల్లారోడు ఇసైందిలేన్; నడువే నిండ్ర
విలంగు అల్లేన్; విలంగు అల్లాదొఴిందేన్ అల్లేన్;
.. వెఱుప్పనవుం మిగప్ పెరిదుం పేస వల్లేన్;
ఇలం పొల్లేన్; ఇరప్పదే ఈయ మాట్టేన్;
.. ఎన్ సెయ్వాన్ తోండ్రినేన్ ఏఴైయేనే?
పాడల్ ఎణ్ : 10
సంగనిది పదుమనిది ఇరండుం తందు,
.. తరణియొడు వాన్ ఆళత్ తరువరేనుం,
మంగువార్-అవర్ సెల్వం మదిప్పోం అల్లోం,
.. మాదేవర్క్కు ఏగాందర్ అల్లార్ ఆగిల్;
అంగమెలాం కుఱైందు అఴుగు తొఴునోయరాయ్,
.. ఆ ఉరిత్తుత్ తిండ్రు ఉఴలుం పులైయరేనుం,
గంగై వార్-సడైక్ కరందార్క్కు అన్బర్ ఆగిల్,
.. అవర్-కండీర్ నాం వణంగుం కడవుళారే.
================ ============
No comments:
Post a Comment